Wednesday, June 18, 2008

மாமா உன் பொண்ண குடு...பார்ட் 4

பகுதி 1, பகுதி 2, பகுதி 3

"டேய் அண்ணா! எழுந்திரி...உனக்கு ஃபோன்..." கைல மொபைலோட விவேக் தம்பி விக்ரம் அவன எழுப்பினான்.

"போடா...எனக்கு தூக்கம் வருது, நான் அப்புறம் பேசறேன்"

"வித்யா டா, உன்கிட்ட ஏதோ கேக்கானுமாம்"

"வித்யாவா? குடு...ஹலோ"

"விவேக்..."

"சொல்லு வித்யா"

"அவர் கிட்ட பேசினியா?"

"யாரு? ஓ...சாரி வித்யா, மறந்தே போயிட்டேன், சாரி..."

"ஓ...பேசலையா? சரி விடு" இருந்தாலும் அவ குரல்ல இருந்த ஏமாற்றம் அவனுக்கு தெரிஞ்சுது, உடனே அவனும்
"ஏய்...இன்னைக்கு வேனா பேசி பாக்கட்டுமா?"

"வேணாம் போ! நாளைக்கு கல்யாணம்...இன்னைக்கு பேசி என்ன ஆகப் போகுது?"

"சரி, அப்புறம் வரேன் வீட்டுக்கு, பாக்கலாம், பை"

"ஒகே, பை"

விவேக் ஃபோன வச்சவுடனே, "டேய் விக்கி! கெளம்புடா, அப்டியே வித்யா மாமனார் வீடு வரைக்கு போயிட்டு வந்துடலாம்"

"இப்ப எதுக்குடா? அதான் எல்லாத்தையும் சாய்ந்தரம் மண்டபத்துல பாக்க போறமே?"

"சும்மா வாடா, போய் வித்யா மாப்ளைய ஒரு இன்டர்வியு எடுத்துட்டு வருவோம்"

அவங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி, நேத்து தான் யு.எஸ்ல இருந்து வந்திருக்கனால சும்மா மாப்ளைய பாக்க வரோம்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் கெளம்பி போனாங்க.
மாப்ள வீட்டுக்கு போயிட்டு, ஒரு ஆட்டோ புடிச்சு இப்ப நேரா வித்யா வீட்டுக்கு போயிட்டு இருந்தாங்க விவேக்கும், விக்ரமும்.

விவேக் ஒண்ணுமே பேசாம அமைதியா வந்தான். கொஞ்ச நேரம் கழிச்சு விக்ரம், "டேய் அண்ணா! என்னடா ஒண்ணுமே பேச மாடிங்கற?"

"கொஞ்ச நேரம் அமைதியா வாடா"

மறுபடியும் கொஞ்ச நேரம் கழிச்சு விக்ரம், "என்னக்கென்னவோ அந்த மாப்ளைய புடிக்கல டா" ன்னு சொன்னான்.

"ஏண்டா விக்கி அப்டி சொல்ற?"

"பின்ன என்னடா? அவர பாத்தா நாளைக்கு கல்யாணம் ஆகப் போறவரு மாதிரியா இருக்காரு? அவரு மட்டும் இல்ல, அவங்க வீட்ல எல்லாரும் அப்டி தான் இருக்காங்க, ஒரு சந்தோஷமாவே இல்ல"

"ஆமாடா, நானும் அத பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்"

"பேசாம மாமா கிட்ட சொல்லுடுவோமா?"

"என்னன்னுடா சொல்றது? என்ன பிரச்சனன்னே தெரியாம? அதுவும் நம்ம சொன்னா என்ன சொல்லுவாங்க? சின்ன பசங்க, உங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிடுவாங்க"
விவேக் அவன் தம்பி கிட்ட இப்டி சொல்லிட்டாலும், அவனுக்குள்ள யார் கிட்டயாவது சொல்லி, என்னன்னு பாக்க சொல்லனும்னு ஒரு எண்ணம் ஓடாம இல்ல.

ஆட்டோ வித்யா வீட்டு முன்னாடி நிக்கரறதுக்கும், அவங்க வீட்ல இருந்து எல்லாரும் வெளிய வர்றதுக்கும் சரியா இருந்துச்சு. எல்லாரும் மண்டபத்துக்கு போக ரெடியா கிளம்பி நின்னுட்டு இருந்தாங்க.

வித்யா ஃபுல் கல்யாணப் பொண்ணு மேக் அப்ல இருந்தா, அவள அப்டி பாத்தவுடனே விவேக்கு மனசுல இருந்த குழப்பெல்லாம் போய்டுச்சு, கல்யாணம் நல்ல படியா நடக்கும், இப்போதைக்கு யார் கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்னு முடிவு பண்ணிட்டான்.

விவேக்கோட அப்பா, "ரெண்டு பேரும் கிளம்பி எங்கடா போனீங்க? இங்க வந்து இருப்பீங்கன்னு நினச்சா, இங்கயும் காணோம்? சரி, சரி, கிளம்புங்க, இப்பயே மண்டபத்துக்கு போறோம், மத்யான சாப்பாடு அங்க தான்"

மண்டபத்துக்கு போனப்புறம் விவேக், வித்யாவ சமாதானப் படுத்தறதுக்காக,
"ஏய் லூசு! நான் போய் அவர பாத்தேன்...கல்யாணத்தப் பத்தி அவரு ரொம்ப எக்சைட்டடா இருக்காரு, நீ தான் தேவை இல்லாம எதெதையோ யோசிச்சிட்டு இருக்க"

"நிஜமா சொல்ற?" ன்னு வித்யா கேக்கவும்

"அமான்டீ, இப்பயாவது கொஞ்சம் சிரியேன்" ன்னு சொல்லி அவள சாமாதானப் படுத்தினான்.

ஒரு நாலு மணி போல வித்யவோட பெரியப்பா பசங்க ரெண்டு பேர் விவேக்கிட்ட வந்து, "டேய் விவேக்! நாங்க இப்ப மாப்ள வீட்டுக்கு அவருக்கு சூட் குடுக்க போகணும், நீயும் எங்களோட வரியாடா"
"இல்ல ணா...நீங்க போயிட்டு வாங்க"

அதுக்குள்ள வித்யவோட பெரியப்பா வந்து, "டேய்! மூணு பேரா எதுக்கு போறீங்க? நீங்க ரெண்டு பேர் போங்க போதும்...இப்பயே எதுக்கு கிளம்பி நிக்கறீங்க? 5.30 மணிக்கு அப்புறம் தான் நல்ல நேரம், அப்ப போனா போதும்" ன்னு சொன்னாரு.

"சரி பா..அப்ப இன்னும் ஒன்னரை மணி நேரம் இருக்கா? ஒகே....வாடா விவேக், இப்டி உக்காரலாம், உன் அமெரிக்கா கதைய சொல்லு"

விவேக்கு டக்குன்னு ஏதோ தோணவும், "அண்ணா! ஒன்னு பண்றீங்களா? இப்பயே மாப்ள வீட்டுக்கு போயிட்டு வரீங்களா?"

"எதுக்குடா? அதான் 5.30 மணிக்கு தான் நல்ல நேரம் ன்னு அப்பா சொன்னாரே, அது மட்டும் இல்லாம 5.30 மணிக்கு அப்புறம் தான் நாங்க வருவோம்ன்னு ஃபோன் பண்ணி சொல்லி இருப்பாங்க"

"அதனால தான் நானும் சொல்றேன், திடீர்னு போய் அவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் குடுங்க"

"இதுல என்னடா சர்ப்ரைஸ்? சின்ன புள்ள தனமா?"

"அண்ணா...பிளீஸ் ணா...சொல்றத கேளுங்க, இப்ப போங்கண்ணா"

வித்யோட இன்னொரு அண்ணனும், "டேய்! வாடா இப்பயே போயிட்டு வந்துடலாம், பெரிய நல்ல நேரம்... போயிட்டு வந்தா ஒரு வேலையாவது முடியும்" ன்னு சொல்லவே,
"சரி, அப்ப நாங்க கிளம்பறோம், யாராவது கேட்டா, வெளிய வேலையா போயிட்டு அப்டியே அங்க போறோம்னு சொல்லிடு, என்ன?"

விவேக் ஏன் அப்டி சொன்னான்னு அவனுக்கு தெரியல, திடீர்னு போனா, இவங்களுக்காவது அங்க உள்ள உண்மையான நிலவரம் புரியுதான்னு பாப்போம்னு மட்டும் தான் அவன் நினைச்சான்.
போன அண்ணனுக உடனே திரும்பி வந்துட்டாங்க. கொஞ்ச நேரம் அவங்களுக்குள்ளையே ஏதோ பேசிட்டு இருந்தாங்க. அப்புறம் மெதுவா, பெரியவங்க எல்லாத்தையும் கூப்ட்டு விஷயத்த சொன்னாங்க.

"சித்தப்பா! அந்த பய்யனுக்கு ஏற்கனவே ஒரு பொண்ணோட நிச்சயம் ஆகி கல்யாணம் வரைக்கு போய் இருக்காமே?"

வித்யாவோட அப்பா, "ஆமா! அவங்க அப்பா சொன்னாரே...அது நடந்து ரெண்டு வருஷம் ஆச்சேடா...அந்த பொண்ணுக்கு கூட ஏதோ ஆக்சிடென்ட் ஆய்டுச்சுன்னு சொன்னாரு, அதனால என்ன இப்போ?"

"அதில்லை சித்தப்பா, ரெண்டு வருஷம் ஆய்டுச்சு தான்...ஆனா அந்த பய்யன் இன்னும் அத விட்டு வெளிய வந்த மாதிரியே தெரியலையே"

"என்னடா சொல்றீங்க?"

"ஆமா சித்தப்பா...நாங்க அவங்க வீட்டுக்கு போயிருந்த போது அந்த பய்யன் எப்டி கத்திட்டு இருந்தான் தெரியுமா? 'நான் நாலு வருஷமா லவ் பண்ண பொண்ணு அவ, என்னால அவள எப்டி மறக்க முடியும்? உங்க வற்புறுத்தலுக்கு தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன், இப்ப வந்து ஏண்டா நீ சந்தோஷமாவே இல்லன்னு கேட்டா, என்னால எதுவும் பண்ண முடியாது...இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க, எனக்கு கல்யாணம் ஆனாலும் நான் தான் அவள ஹாஸ்பிட்டலுக்கு போய் பாத்துக்குவேன்' அப்டீங்கறான்"

இத கேட்டுடுட்டு விஸ்வனதனுக்கு பி.பி எகிருடுச்சு. "அப்டியா சொன்னான் அவன்? இத கேட்டுட்டு அவங்க அம்மா அப்பா சும்மாவா இருந்தாங்க?"

"எப்டி சித்தப்பா சும்மா இருப்பாங்க? அவங்க அம்மா பயங்கரமா அழுதுட்டு, 'ஏண்டா இப்டி பேசுற? நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரப் போற பொண்ணு வந்து கேட்டா நான் என்னடா பதில் சொல்லுவேன்' ன்னு கேட்டாங்க, அதுக்கு அவன், 'அது அவளோட தலை எழுத்து, என்னால எதுவும் பண்ணா முடியாது' அப்டீன்னுட்டான்"

விஸ்வநாதன் தல கால் புரியாம வெறி வந்த மாதிரி கத்த ஆரம்பிச்சுட்டாரு, "என்ன நினச்சுட்டு இருக்கான் அவன்? என் பொண்ணோட தலை எழுத்தாமா? சும்மா விட மாட்டேன் அவன"
விஸ்வனாதனோட பெரிய அண்ணா, "விசு! அமைதியா இரு...நாம அவங்கள கூப்ட்டு என்னன்னு கேப்போம், பொறுமையா இரு, சுசீலா! நீ எதுக்கு இப்ப இப்டி அழுதுட்டு இருக்கே?" ன்னு வித்யா அம்மா அப்பாவ சாமாதானப் படுத்தரதுக்குள்ள,
கல்யாண மாப்ளயோட அப்பாவே அங்க வந்துட்டாரு.

கொஞ்ச நேரம் யாருமே எதுவுமே பேசாம அமைதியா இருந்தாங்க. அப்புறம் அவராவே, "உங்க பசங்க சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கறேன், தப்பு எங்களது தான், அவன வற்புறுத்தி தான் நாங்க சம்மதிக்க வச்சோம்...கல்யாணம் நிச்சயம் ஆனா பய்யன் சரி ஆய்டுவான்னு நினைச்சோம்...இப்ப என்ன பண்றதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க"

எல்லா பெரியவங்களும் பேசி, பொலம்பி, அழுது தீத்து, ஒருத்தருக்கொருத்தர் சமாதானப் படுத்தி, கடசியா ஒரு முடிவுக்கு வந்தவங்களா, விஸ்வனாதனோட பெரிய அண்ணா, மாப்ள அப்பா கிட்ட போய், "ஏதோ...இப்பயாவது சொன்னீங்களே, ரொம்ப நன்றிங்க. வீ வில் கால் ஆஃப் தி வெட்டிங்" அப்டீன்னாரு.

அதுக்கப்புறம் அவரு விவேக் கிட்ட போய், "விவேக்! நம்ம குடும்ப கெளரவமே இப்ப உன் கைல தான்பா இருக்கு" ன்னு சொல்லவும், விவேக் ஒரு நிமுஷம் என்ன சொல்றதுன்னு தெரியாம, ஒரு ஓரமா, ஷாக்காகி நின்னுட்டு இருந்த வித்யாவ பாத்தான்.

[அடுத்த பாகத்தில் முடியும்]

பகுதி 5

9 comments:

Shiva.G said...

விவேக்! நம்ம குடும்ப கெளரவமே இப்ப உன் கைல தான்பா இருக்கு...!! appdiyee shivaji solra maariye irukku po..

mamaa un ponnu kudu dhaana.. ini..

sari.. finishing touch eppdi panrannu paapom ;)

Lateral Manoj said...

ச்சே. இந்த பொண்ணு கிட்டயும் ஏதோ ஒரு திறமை ஒளிஞ்சி இருக்கு பாரேன் :)

Lateral Manoj said...

எப்பவும் எழுத்தாளர்கள் அந்தந்த எபிசோட் முடிவுல ஏதாவது ஒரு ட்விஸ்ட் வைப்பாங்க. அந்த திறமை உன் கிட்ட இருக்கு DP :)

Lateral Manoj said...

ஒரு சின்ன suggestion : வசனம் தவிர மத்த இடத்துல செந்தமிழ் பயன்படுத்துனா இன்னும் எழுத்து நடை நல்ல இருக்கும். may பே, இது உன்னோட ஸ்டைல் ஆ இருக்கலாம்

Divyapriya said...

sendhathamila irundhaa sila per padikka kashtamaa irukkungaraanga...ipdi irundhaa oru std illaama irukku, enna panradhunnu theriyala...
naalaikku paarunga, i guess u all will like it...

Anonymous said...

kadhai padikka romba nalla irukku. interesting a poittu irukku.. yaaro erkanave sonna madhiri, திறமை ஒளிஞ்சி இருக்கு!

Smriti said...

Awesome div... semmayaa poitrikku... i still feel sentamizh vida oru mix aa nee adicha dhan kadhai nee narrate pandra feel kudukkudhu.. only then can we get into the story with the feel u penned it... Waiting for tomorrow... :-w

Shiva.G said...
This comment has been removed by the author.
Shiva.G said...

idhukku 7 comment laa konjaa too muchu.. iththoda 8 vera.. unkaatula inniku semma mazha po ;)
mnn .. nsaaai..