Sunday, January 11, 2009

அப்பாவும்/சைக்கிளும் நானும்...

அபியும் நானும் படத்துல சைக்கிள் சீன் பாக்கும் போது, எனக்குள்ளும் பல சைக்கிள் சீன் சைக்கிள் சக்கரம் சுத்தற மாதிரி ரீவைண்ட் ஆகி எல்.கே.ஜி வரைக்கும் போய் அடுத்த மொக்கைக்கும் ஒரு வழி வகுத்துருச்சு…

இனி அப்பாவும்/சைக்கிளும் நானும்…

என்னையும், அக்காவையும் சைக்கிள்ள கூட்டிட்டு போவாரு அப்பா. எனக்கு அதுல போகவே பிடிக்காது, ஏன்னா எங்கக்கா மட்டும் பின்னாடி ஜாலியா உக்காந்துட்டு வர, நான் மட்டும் முன்னாடி இருக்கற கம்பியில தான் உக்காறனும் :( இந்த சோகம் நிகழ்ந்தது எல்.கே.ஜி யில. என்னோட இந்த வருத்தத்த பரிசீலனை செஞ்சு எங்க அப்பா, அழகா குட்டியா ஒரு சீட் வாங்கி அந்த கம்பியில பொருத்தி வச்சுட்டாரு…அதுக்கப்புறம் சைக்கிள் பயணம் எல்லாம் ஒரே ஜாலி தான்…

கொஞ்சம் கால் நீளமானதுக்கப்புறம், ஆனா மூளை அவ்வளவா வளராத வயசுல சைக்கிள் முன் கம்பியில மட்டும் குழந்தைங்கள ஏத்திட்டு போகக் கூடாது! இல்லன்னா, சைக்கிள் சக்கரத்துக்குள்ள கால விட்டுகிட்டு, பின்னாளில் கனுக்கால்ல ஒரு பெரிய தளும்போட தான் அந்த குழந்தைங்க சுத்த வேண்டியது வரும்! என்ன பண்றது? இப்படி ஒரு அறிவுரைய எங்கப்பாவுக்கு அப்ப யாரும் குடுக்கல!!! இது நடந்தது ஒன்னாப்புலையா, ரெண்டாப்புலையான்னு எனக்கு சரியா ஞாபகம் இல்ல…

சரி, மூளை கொஞ்சம் வளர்ந்திருந்தாலும், அத சுத்தமா உபயோகிக்க தெரியாத குழந்தைங்களை சைக்கிள்ள பின்னாடி சீட்ல கூட ஏத்திட்டு போகக் கூடாதுன்னு எங்கப்பாவுக்கு நான் தான் சொல்லிக் குடுத்தேன் :) ஒரு நாள் சைக்கிள் பயணத்தின் போது எனக்குள்ள ஒரு விபரீத ஆசை…ஓடுற சைக்கிள்ள இருந்து ஸ்டைலா இறங்கனுங்கறது தான் அது! எங்கப்பா கிட்ட, “அப்பா! நான் இப்ப சைக்கிள்ள இருந்து இறங்க போறேன்!!!” ன்னு கூலா அனெளன்ஸ் பண்ணிட்டு, எங்கப்பா வேணாம்னு அலர்றதுக்குள்ள, கீழ குதிச்சு, கை, காலெல்லாம் வீர விழுப்புண்களை வாங்கினப்பா நான் நாலாங்கிளாஸ்…

“எம்புருஷனும் கச்சேரிக்கி போனாங்கற கதையா இருக்கு…” இப்படி ஒரு பழமொழி உண்டு எங்க ஊர்ல. இந்த மாதிரி, “திவ்யாவும் சைக்கிள் கத்துக்க போனா” ங்க கதையா, ஐஞ்சாவதுல ஆரம்பிச்சு ஏழாவது வரைக்கும் ஒவ்வொரு லீவும் சைக்கிள் கத்துக்கறேன்னு ஊர சுத்துவேன்…ஆனாலும், சைக்கிள ஒழுங்கா கத்துகிட்ட பாடில்லை, போதாக் குறைக்கு வாடகைக்கு வாங்கின சைக்கிள் எல்லாம் பஞ்சர் பண்ணதால, அந்த கடை பக்கமே போக முடியாத ஒரு அவலம் :( அப்படி இருக்கும் போது ஒரு நாள்….ஸ்கூல் முடுஞ்சு நடந்து வந்துகிட்டு இருந்தேன்…அப்ப எதிர்ல எங்கப்பா மாதிரி ஒருத்தர், கஷ்டப்பட்டு ஒரு குட்டி சைக்கிள ஓட்டிட்டு வந்துட்டு இருந்தார். பாக்கவே செம காமடியா இருந்துச்சு. யாருடா இதுன்னு பாத்தா, அப்பாவே தான்! என்னதிதுன்னு நான் திரு திருன்னு முழிக்கவும், அப்பா, “உனக்கு தான் புது சைக்கிள்!!!” ன்னு சொன்னாரு. Pink color lady bird, my first ever possession! இது நடந்தது ஏழாவதுல…

(அப்புறம் அந்த சைக்கிள வச்சிகிட்டு அடிச்ச கூத்துக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லைங்கறனால, அதெல்லாம் இதுல வேண்டாம்;) )

எல்லாத்தையும் சொல்லிட்டு எங்கப்பாவோட சைக்கிள பத்தி சொல்லன்னா எப்படி? எங்க வீட்ல ரொம்ப வருஷமா ஒரு தொன்று தொட்ட சைக்கிள் இருந்துச்சு. (நான் கீழ குதிச்சு சாகசம் பண்ண அதே சைக்கிள் தான்). நாங்கெல்லாம் எவ்வளவோ சொல்லிப் பாத்தும், எங்கப்பா அத விக்காம வச்சிருந்தார். “இது நான் வேலைக்கு போய் முதன் முதல்ல வாங்கின சைக்கிள்” ஒரு சென்டிமென்ட்ட வேற போட்டார்.



அதுவும் வீட்டுக் கொள்ளையில, ரொம்ப வருஷமா தேமேன்னு தேஞ்சு போய் நின்னுட்டு இருந்துச்சு. (அதாவது இந்த படத்துல இருக்கற சைக்கிள் மாதிரி ஆய்டுச்சுன்னு வச்சுக்கோங்களேன் :) )கடைசியா மனசு வந்து ஒரு நாள், “சரி…காயிலாங் கடையில போடற அளவுக்கு ஆயிடுச்சு. பேசாம இத வித்தர்லாம்ன்னு இருக்கேன்” எங்கப்பா இழுக்கவும், நாங்கெல்லாம் கோரஸா, “அத செய்ங்க முதல்ல” ன்னு சொல்லி, அவர விரட்டினோம். சைக்கிள் கடைல இருந்து ஒரு ஆள கூட்டிட்டு வந்து பேசி அனுப்ச்சுட்டு சோகமே உருவாகி வந்த அப்பா கிட்ட, “என்னப்பா, எடுத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டானா?” கேட்டதுக்கு, “எடுத்தக்க மாட்டேன்னு சொல்லி இருந்தா கூட பரவாயில்லைம்மா, இத எடுத்துட்டு போறதுன்னா, எனக்கு அம்பது ரூபா குடுங்க!” ன்னு கேக்குறான். ’அவ்வ்வ்வ்வ்வ்வ்’ :’(

33 comments:

காண்டீபன் said...

//சைகிளும் நானும்... //சைக்கிளும்..

//அபியும் நானும் படத்துல //
Nostalgic film.. aint it?

Memories... are always beautiful. Esp abt Childhood...

MSK / Saravana said...

Me the second.. :)

ஆயில்யன் said...

//என்னையும், அக்காவையும் சைக்கிள்ள கூட்டிட்டு போவாரு அப்பா. எனக்கு அதுல போகவே பிடிக்காது, ஏன்னா எங்கக்கா மட்டும் பின்னாடி ஜாலியா உக்காந்துட்டு வர, நான் மட்டும் முன்னாடி இருக்கற கம்பியில தான் உக்காறனும் :( //

ஆஹா அப்பன்னா நீங்க கடைக்குட்டி!

நிம்மதியா கம்பியில உக்காந்து தூங்க முடியாது :-(

நேராத்தான் வேடிக்கை பார்க்கை முடியும் :-(

எம்புட்டு கஷ்டம் நானும்பட்டிருக்கேன்!
:)

ஆயில்யன் said...

டூ சரவணா தம்பி!

பாஸ் ரெண்டு பேரும் ஒரே டைமிங்க் நான் கொஞ்சம் நிறைய வரிகள் அடிச்சுப்புட்டேன் (ஆர்வக்கோளாறு?!)

ஸோ ஆக்சுவலி மீ தான் செகண்டு :)javascript:void(0)

MSK / Saravana said...

"அப்பாவும்/சைகிளும் நானும்..."

அது "சைக்கிளும்"... இன்னும் எழுத்து பிழையா..?? கலக்கறீங்க போங்க..

MSK / Saravana said...

ரொம்ப ரொம்ப சிரிச்சேன் திவ்யப்ரியா.. :)))))

//“எடுத்தக்க மாட்டேன்னு சொல்லி இருந்தா கூட பரவாயில்லைம்மா, இத எடுத்துட்டு போறதுன்னா, எனக்கு அம்பது ரூபா குடுங்க!” ன்னு கேக்குறான்.//

ROTFL...

MSK / Saravana said...

//(அப்புறம் அந்த சைக்கிள வச்சிகிட்டு அடிச்ச கூத்துக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லைங்கறனால, அதெல்லாம் இதுல வேண்டாம்;) )//

ஏன்.. அது இன்னொரு பதிவா எழுதுவீங்களா..

MSK / Saravana said...

//“அப்பா! நான் இப்ப சைக்கிள்ள இருந்து இறங்க போறேன்!!!” ன்னு கூலா அனெளன்ஸ் பண்ணிட்டு, எங்கப்பா வேணாம்னு அலர்றதுக்குள்ள, கீழ குதிச்சு, கை, காலெல்லாம் வீர விழுப்புண்களை வாங்கினப்பா நான் நாலாங்கிளாஸ்…“எம்புருஷனும் கச்சேரிக்கி போனாங்கற கதையா இருக்கு…” இப்படி ஒரு பழமொழி உண்டு எங்க ஊர்ல. இந்த மாதிரி, “திவ்யாவும் சைக்கிள் கத்துக்க போனா” ங்க கதையா, ஐஞ்சாவதுல ஆரம்பிச்சு ஏழாவது வரைக்கும் ஒவ்வொரு லீவும் சைக்கிள் கத்துக்கறேன்னு ஊர சுத்துவேன்…ஆனாலும், சைக்கிள ஒழுங்கா கத்துகிட்ட பாடில்லை, போதாக் குறைக்கு வாடகைக்கு வாங்கின சைக்கிள் எல்லாம் பஞ்சர் பண்ணதால, அந்த கடை பக்கமே போக முடியாத ஒரு அவலம் :(//

ஹி..ஹி..ஹி..

Divya said...

Super dooper postuuuuuuuu Dp:))

Divya said...

Evergreen childhood memories elam thatti elupiteenga:))

Vijay said...

\\ஏன்னா எங்கக்கா மட்டும் பின்னாடி ஜாலியா உக்காந்துட்டு வர, நான் மட்டும் முன்னாடி இருக்கற கம்பியில தான் உக்காறனும் :( \\
ஐயையோ கம்பில ஒக்காந்து போறது கொடுமை. ஆனா, சைக்கிள்’ல கேர்ள் ஃப்ரெண்டை கம்பில தான் ஒக்காத்தி வச்சு போகணும். என்ன பண்ணறது, இப்பல்லாம் அந்த கலாசாரம் மலையேறிப் போய் விட்டது :-)

\\இல்லன்னா, சைக்கிள் சக்கரத்துக்குள்ள கால விட்டுகிட்டு, பின்னாளில் கனுக்கால்ல ஒரு பெரிய தளும்போட தான் அந்த குழந்தைங்க சுத்த வேண்டியது வரும்! \\

நான் மூணாம் கிளாஸ் படிக்கும் போது, சைக்கிள் சக்கரத்துக்குள்ள காலை விட்டா என்ன தான் ஆகுதுன்னு பார்ப்போம்னு, விட்டு, கால்ல, அடிபட்டு, நாலு நாள் பிளாஸ்திரி போட்டுண்டிருந்தேன்.

\\ஓடுற சைக்கிள்ள இருந்து ஸ்டைலா இறங்கனுங்கறது தான் அது! எங்கப்பா கிட்ட, “அப்பா! நான் இப்ப சைக்கிள்ள இருந்து இறங்க போறேன்!!!” ன்னு கூலா அனெளன்ஸ் பண்ணிட்டு, எங்கப்பா வேணாம்னு அலர்றதுக்குள்ள, கீழ குதிச்சு, கை, காலெல்லாம் வீர விழுப்புண்களை \\
நான்லாம் ஓடுற ஆட்டோலேர்ந்து தான் குதிச்சேன். என்ன ஒரு 6 இன்சுக்கு தோல் பீலாயிடுச்சு :-)

\\Pink color lady bird, my first ever possession! \\
வாவ். லேடி பேர்ட் நல்ல சைக்கிள். எங்கப்பா கிட்ட இரண்டு வருஷம் கெஞ்சி கூத்தாடி உண்ணாவிரதமிருந்து அப்புறம் தான் சைக்கிள் கிடைத்தது. அதுவும் நான் ஆசைப் பட்ட BSA Street Cat இல்லை. ஒரு அட்லஸ் கோல்ட்லைன் தான் வாங்கித் தந்தார் :-)

\\“இது நான் வேலைக்கு போய் முதன் முதல்ல வாங்கின சைக்கிள்”\\
ஆமாம், முதல் சம்பாத்தியத்தில் வாங்கினதை விற்க மனசு வருமா. நான் வாங்கின மோட்டார் சைக்கிளை விற்று விட்டு அழாத குறையாக வீட்டுக்கு வந்தேன்.

நல்லா ஸ்வாரஸ்யமா எழுதியிருக்கீங்க!! வாழ்த்துக்கள் :-)

புதியவன் said...

//வாடகைக்கு வாங்கின சைக்கிள் எல்லாம் பஞ்சர் பண்ணதால, அந்த கடை பக்கமே போக முடியாத ஒரு அவலம் //

இது உண்மையிலேயே
தன்மானப் பிரச்சனை தான்...

சைகிள் வச்சு பெரிய
சாகசமெல்லாம் நடத்தி இருக்கீங்க போல...

Anonymous said...

Pink color ladybird!!
my first possession too :)

Appa cycle-le kathuka try panni keezha vizhundhadhuku apuram kedachadhu... :)

Made me nostalgic...

Anonymous said...

Pink color ladybird!!
my first possession too :)

Appa cycle-le kathuka try panni keezha vizhundhadhuku apuram kedachadhu... :)

Made me nostalgic...

பாசகி said...

கடைசில அப்பாவயே கலாய்சிட்டீங்களே...

Nimal said...

சூப்பர் போஸ்ட்டு....!

//அப்புறம் அந்த சைக்கிள வச்சிகிட்டு அடிச்ச கூத்துக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லைங்கறனால, அதெல்லாம் இதுல வேண்டாம்;)//

அதையெல்லாம் 'நானும், எனது சைக்கிள் சாகசங்களும் - 1, 2, 3' என்று பார்ட பார்ட்டா எழுதுங்க.... :)

தமிழன்-கறுப்பி... said...

இங்கேயும் சைக்கிள் நினைவுகளா...!

முகுந்தன் said...

//நான் மட்டும் முன்னாடி இருக்கற கம்பியில தான் உக்காறனும் :( இந்த சோகம் நிகழ்ந்தது எல்.கே.ஜி யில. //

யானை மாதிரி ஞாபகம் உங்களுக்கு :)

//எங்க அப்பா, அழகா குட்டியா ஒரு சீட் வாங்கி அந்த கம்பியில பொருத்தி வச்சுட்டாரு…//

அப்பான்னா சும்மாவா ..

//ஆனா முளை அவ்வளவா வளராத வயசுல //

யாருக்குன்னு சொல்லவே இல்ல :))

////ஒரு நாள் சைக்கிள் பயணத்தின் போது எனக்குள்ள ஒரு விபரீத ஆசை…ஓடுற சைக்கிள்ள இருந்து ஸ்டைலா இறங்கனுங்கறது தான் அது! //

நல்லவேளை உங்கப்பா உங்களை பைக்ல கூட்டிட்டு போகலை ..

//“எடுத்தக்க மாட்டேன்னு சொல்லி இருந்தா கூட பரவாயில்லைம்மா, இத எடுத்துட்டு போறதுன்னா, எனக்கு அம்பது ரூபா குடுங்க!” ன்னு கேக்குறான். ’அவ்வ்வ்வ்வ்வ்வ்’ :’(
//


சான்ஸே இல்லை ,விழுந்து விழுந்து சிரிச்சேன் :))))

gils said...

hahahaha...chancela dp...ungappa evlo feel panirupaarnu nalla realise aaguthu...semma lively ending. :) kalkiteenga

priyamudanprabu said...

//
இத எடுத்துட்டு போறதுன்னா, எனக்கு அம்பது ரூபா குடுங்க!” ன்னு கேக்குறான். ’அவ்வ்வ்வ்வ்வ்வ்’
//

சிரிப்பு சிரிப்பா வருது

Raghav said...

சிரிப்பு வருது.. சிரிப்பு வருது
படிக்க படிக்க
சிரிப்பு வருது :))

Raghav said...

பொங்கல் வாழ்த்துகள்!!

ஜியா said...

:)) Kaipulla vandi maathiri ungalukkum oru cycle anubavamaa? ;)))

Anonymous said...

Child hood memories are always sweeter when u look back after a long.......! //“எடுத்தக்க மாட்டேன்னு சொல்லி இருந்தா கூட பரவாயில்லைம்மா, இத எடுத்துட்டு போறதுன்னா, எனக்கு அம்பது ரூபா குடுங்க!” ன்னு கேக்குறான்.// - finishing touch superappuuu....! hahahhahahaha :-)

Divyapriya said...

காண்டீபன்

ஆமா really nostalgic movie...

----
Saravana Kumar MSK, ஆயில்யன்

"me the second" க்கே போட்டா போட்டியா? :))

----
divya

வாங்க...நீங்களும் ஒரு flashback பதிவ போட்ருங்க...

---
விஜய்
thanks விஜய்...

---

புதியவன்
சைக்கிள் ஓட்றத தவிர மத்த சாகசமெல்லாம் நல்லாவே பண்ணியிருக்கேன் :)

---
allinthegame

wat a bingo அருண்!

---
பாசகி
கடைசியில இல்ல, முதல்ல இருந்தே அப்பாவ கலாக்கறது தான் முழு நேர தொழில் :))

----

நிமல்
நம்ம பாதி நேரம் flashback பதிவு போட்டுத்தான பொழப்ப நடத்திட்டு இருக்கோம்...போட்டா போச்சு :))

Divyapriya said...

தமிழன்-கறுப்பி

வாங்க தமிழன்...அபியும் நானும் பாத்த எஃபெக்ட் தான்...

---
முகுந்தன்

நன்றி முகுந்தன்

----

gils
ஆமா, அப்ப ஃபீல் பண்ணத விட, இத படிச்சா இன்னும் ஃபீல் பண்ணுவாருன்னு நினைக்கறேன்:))

----
பிரபு, ராகவ்

அப்ப சிரிங்க :))

---
ஜி
கைப்புள்ள மாதிரி எல்லாம் இல்ல...என் சைக்கிள்ல நானே ஓட்டுவேன் ;)

---
gowtham

thanks gowtham, for ur தத்துவம் too...
//Child hood memories are always sweeter when u look back after a long.......! // :P

Anonymous said...

அப்பாவ டேமேஜ் பண்றதுன்னு முடிவாச்சு...அப்புறம் என்ன..??

சைக்கிள் எனக்கும் ரொம்ப பிடிச்ச வாகனம்.. இன்னும் இது மாதிரி பல சம்பவங்கள எழுதுங்க.. நல்லாருக்கு.. :)

மேவி... said...

"ஓடுற சைக்கிள்ள இருந்து ஸ்டைலா இறங்கனுங்கறது தான் அது! எங்கப்பா கிட்ட, “அப்பா! நான் இப்ப சைக்கிள்ள இருந்து இறங்க போறேன்!!!” ன்னு கூலா அனெளன்ஸ் பண்ணிட்டு, எங்கப்பா வேணாம்னு அலர்றதுக்குள்ள, கீழ குதிச்சு, கை, காலெல்லாம் வீர விழுப்புண்களை"
நான் எல்லாம் வீராதி விரான்னுக்..... பைக் ல இருந்து விழுந்தேன்னுங்க..... ஒரு பக்கம் கன்னம் out. இன்னும் ஆடையாளம் இருக்கு.


"இது நான் வேலைக்கு போய் முதன் முதல்ல வாங்கின சைக்கிள்"
எங்க அப்பா வாங்கின முதல் பைக் யை, நானும் என் அண்ணனும் சேர்ந்து திடச் ல தள்ளி விட்டோம்.

Karthik said...

POLLADAVAN padathula Bikea kaatra maadiri.. neenga oru cyclea kadaiya eludetheengale.. :( 11th std la enga class la oru ponna follow panradhukku en cycle thaan udaviyaa irundichi... aana thuradistam oru maasathulaye anda ponnu schoola maathithu poita.. :( Enakku mathum ean sir ippadi la nadakudu???

தேவன் மாயம் said...

“எடுத்தக்க மாட்டேன்னு சொல்லி இருந்தா கூட பரவாயில்லைம்மா, இத எடுத்துட்டு போறதுன்னா, எனக்கு அம்பது ரூபா குடுங்க!” ன்னு கேக்குறான். ’அவ்வ்வ்வ்வ்வ்வ்’ :///

அனுபவம் நல்லா எழுதியிருக்கீங்க!!!

தேவா..

தேவன் மாயம் said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

sri said...

//போதாக் குறைக்கு வாடகைக்கு வாங்கின சைக்கிள் எல்லாம் பஞ்சர் பண்ணதால, அந்த கடை பக்கமே போக முடியாத ஒரு அவலம் :( //

neengaluma ? :) .. Cycle kathukkarennnu 2 thatha / 3 uncle and numerous road lights edichirukken.

//இத எடுத்துட்டு போறதுன்னா, எனக்கு அம்பது ரூபா குடுங்க!” ன்னு கேக்குறான். ’அவ்வ்வ்வ்வ்வ்வ்’ //

Very natural writing , romba hilarious - thoroughly enjoyed.

Unknown said...

உண்மையிலேயே சூப்பர் போஸ்ட்.. :))))) நான் சைக்கிள் கத்துகிட்ட காமெடி எல்லாம் ஞாபகம் வருது... :)) ஆனா, சொல்லமாட்டனேஏஏஏஏஏஏ... ;)))