பகுதி 1, பகுதி 2
"மா! நான் கிளம்பிட்டேன், நாளைக்கு நைட் அங்க இருப்பேன்"
"ஹ்ம்ம்...சரி , சரி"
"என்னமா? நான் ஒன்னரை வருஷம் கழிச்சு இந்தியா வரப் போறேன், குரல்ல ஒரு சொரத்தே இல்லாம பேசுறீங்க?"
"போடா! இப்ப எதுக்காக ரெண்டு வாரத்துக்காக இங்க வர? மெதுவா லீவ் கிடைக்கும் போது வர வேண்டியது தான?"
"என்னமா இப்டி சொல்றீங்க? சொந்த மாமா பொண்ணு கல்யாணத்துக்கு வரலைன்னா எப்டி?"
"ஆமா...சொந்த மாமா பொண்ணு...ஏற்கனவே அவ வேற வீட்டுக்கு போக போறான்னு நினச்சாலே என்னால தாங்க முடியல, இதுல நீ வேற கல்யாணத்துல என் கண்ணு முன்னாடி வந்து நின்னு எரிச்சல கெளப்ப போற"
"என்னமா லூசு மாதிரி பேசுறீங்க? யார் யாருக்கு யார் கூட கல்யாணம் ஆகனும்னு இருக்கோ அவங்களோட தான் ஆகும்"
"என்கிட்டயே தத்துவமா? சரி, சரி, வீட்டுக்கு வா பேசிக்கலாம், இப்ப ஃபோன வெக்கறேன்"
வித்யா கல்யாணத்துக்காக, விவேக் இந்தியா வரதுக்காக கேப்ல ஏர்போர்ட் போகும் போது தான் இப்டி அவங்க அம்மா கிட்ட பேசிட்டு இருந்தான். கூட நண்பன் தினேஷும் இருந்தான்.
"என்னடா இவ்ளோ தத்துவம் எல்லாம் பேசற?"
"ஆமா டா! அம்மா ரொம்ப கடுப்பா இருக்காங்க..."
"பேசாம அவங்க சொன்ன மாதிரி கேட்டு இருக்கலாம்ல?"
"எனக்கென்னவோ தோனல, அவ்ளோ தான், விடு..."
"ஆமா...அன்னிக்கு அந்த பொண்ணு ஒரு ரத்தக்காடேரி, அது இதுனு சொன்ன, என்னடா அது? அப்புறம் சொல்றேன்ன, சொல்லவே இல்ல?"
"அதுவா? சரி அப்ப பிளாஷ் பாக்குக்கு தான் போகணும்...எங்க வீட்லயே வித்யா மட்டும் தான் ஒரே பொண்ணு, மத்த எல்லா கசின்ஸும் பசங்க, அதுலயும் மத்த எல்லாரும் அவளுக்கு அண்ணங்க, என் தம்பியும் அவள விட சின்னவன், சோ நான் மட்டும் தான் அவளுக்கு பராபர் முறை பய்யன் டைப்ப்ஸ்..."
"ஹ்ம்ம்..."
"என் மத்த கசின்ஸ் எல்லாருமே எங்க மூணு பேத்த விட ஒரு ஏழு, எட்டு வயசு பெரியவங்க, அதனால நாங்க சின்னதா இருக்கும் போதே என்னையும் வித்யாவையும் சும்மா ஒட்டிக்கிட்டே இருப்பாங்க..."
"அடப் பாவமே! அப்பவேவாடா?"
"சும்மா, காமெடி தான்...அப்பெல்லாம் அவளுக்கு வேற என்ன அவ்வளவா பிடிக்காதா... அதனால நீ சாப்டலைன்னா இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுவோம், படிக்கலைன்னா இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுவோம் ன்னு எப்ப பாத்தாலும் அவள ஒட்டிக்கிட்டே இருப்பாங்க"
"ஹீ...ஹீ, ஹீ, அப்பறம்?"
"இத்தனையும் நடக்கும் போது நான் மட்டும் சும்மா இருப்பனா? எப்ப அவங்க வீட்டுக்கு போனாலும், 'மாமா உன் பொண்ணக் குடு' ன்னு ஒரு ரஜினி பாட்டு வருமே, அத பாடிட்டே இருப்பேன்"
"அடப் பாவி!!! அப்பயே ஆரம்பிச்சிட்டியாடா உன் வேலைய?"
"ஆமா டா, இப்ப மாதிரியே தான், பொண்ணுங்க எல்லாம் நம்மள பாத்தாலே டெர்ரர் ஆய்டுவாங்க..."
"ஹய்யோ, முடியல டா...கண்டின்யு பண்ணு"
"ஹ்ம்ம்...ஒரு ஆன்னுவல் லீவ் புல்லா அந்த பாட்ட பாடி அவள வெருப்பேத்தினேன், கடசில அவ ரொம்ப டென்ஷன் ஆகி, அழுது, அடம் புடிச்சு, எங்கம்மா, அவங்க அம்மா எல்லாம் என் கிட்ட வந்து, இனிமே அந்த பாட்ட பாட கூடாதுண்ணு சொல்ற அளவுக்கு ஒரே களேபரம் ஆய்டுச்சு"
"ஹா ஹா, அப்புறம்?"
"மறுபடியும் அடுத்த ஆன்னுவல் லீவுக்கு அவங்க வீட்டுக்கு போனேன், அப்ப நான் 5த் டூ 6த், அவ 3ர்ட் டூ 4த், அவங்க அப்பா லீவ்ல கூட ஏதோ படிக்க சொல்லீடாருன்னு ரொம்ப கடுப்பா வாசல்ல உக்காந்து வித்யா படிச்சிட்டு இருந்தா. நான் அவள பாத்தவுடனே வாய் சும்மா இருக்காம, மாமா உன் பொண்ணக் குடுன்னு பாடிட்டேன்"
"ஹ்ம்ம், அப்றம் என்னடா பண்ணா அவ?"
"வெய்யிலுக்கு ஒரு ஸ்லீவ்லெஸ் டீ-ஷர்ட் போட்டிருந்தேன்டா"
"அதை எதுக்கு டா இப்ப சொல்ற?"
"கேளு...'டேய்...' ன்னு கத்திட்டு ஓடி வந்து என் கையா புடிச்சு கடிச்சு வச்சுட்டா டா...ரத்தமே வந்துடுச்சுன்னா பாத்துக்கோ"
"ஹா...ஹா...ஹா...ஹா, அடப் பாவமே" தினேஷ் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டான்.
"இதுக்கே இப்டி சொல்றியே, இதுக்கப்பறம் என்ன ஆச்சுன்னு கேளு"
"இதுக்கும் அப்பறமா, இதுக்கு மேல என்னடா..."
"ஆமா! வித்யா கடிச்ச அப்புறம் எங்க வீட்ல எல்லாரும் கலந்து ஆலோசிச்சு, மனுஷன் கடிச்சாலும் விஷம் தான்னு முடிவு பண்ணி..."
"ஊசியா டா!!! ஓ மை காட்!!! என்னால முடியல டா, முடியல, ஹய்யோ...வயிறு வலிக்குது..."
விவேக் ரொம்ப பாவமா முகத்த வச்சுக்கிட்டு, "டேய், அதுக்காக பதினாறு ஊசி எல்லாம் இல்லடா, ஒரே ஒரு டீ-டீ மட்டும் தான் போட்டாங்க"
அதுக்கப்பறம் ரெண்டு ரெண்டு பெரும் சிரிச்ச சிரிப்ப கேட்டு, என்னன்னே புரியாம அந்த கேப் டிரைவரும் அவங்களோட சேந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு.
இந்தியா டிரிப் பத்தின கனவுகளோட விவேக் ஒரு வழியா வித்யா கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி இந்தியா வந்து சேந்தான்.அன்னைக்கு சாயந்தரமே கெளம்பி எல்லாரும் வித்யா வீட்டுக்கு போனாங்க.
விஸ்வநாதன் விவேக்க பாத்து, "வாடா மாப்ள, ஜர்னி எல்லாம் எப்டி இருந்துச்சு?"
"நல்லா இருந்துச்சு மாமா, ஆமா வித்யா எங்க?"
"மேல தான் இருக்கா, போய் பாரு"
விவேக் படி ஏறி மேல போகும் போது, அவனுக்கே தெரியாம, 'மாமா உன் பொண்ண குடு' டியூன விசில் அடிச்சிட்டே போனான். என்னவோ, அந்த வீட்டோட ராசி அப்டி போல.
மேல, வித்யா ரூம்ல தனியா ஒரே சோகமா உக்காந்துட்டு இருந்தா.
"ஹே...வித்யா..."
"விவேக்!!! எப்படா வந்த?"
"ஜஸ்ட் நவ். என்னடி இது? கல்யாணப் பொண்ணு இப்டி தனியா உக்காந்துட்டு இருக்க? உன் ஆளு வேற இன்னைக்கு தான் இந்தய வந்தாருன்னு கேள்வி பட்டேன், அவரோட வெளிய எங்கயும் போலையா?"
விவேக் இப்டி கேட்டவுடனே, வித்யா கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.
"என்ன ஆச்சு வித்யா? அதுக்குள்ள ஏதாவது சண்ட போட்டுடியா என்ன?" விவேக் சிரிசிக்கேட்டே கேட்டான்.
அதுக்கு வித்யா, "ஹ்ம்ம், பேசினா தான சண்ட போடறதுக்கு?"
"என்னடி சொல்ற?"
"கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி ரெண்டு மாசம் ஆச்சு, இது வரைக்கும் அவர் எனக்கு ரெண்டு தடவ தான் ஃபோன் பண்ணி இருக்காருன்னு சொன்னா நீ நம்புவியா?"
"என்னது? நிஜமாவா?"
"ஆமா, அது கூட சரியாவே பேசல, இன்னைக்கு அவர ரிஸீவ் பண்ண ஏர்போர்ட் போய்ருந்தோம்ல? என்ன ஒரு தடவை திரும்பி கூட பாக்கல" இத சொல்லும் போது வித்யா கண்ணெல்லாம் அப்டியே கலங்கிடுச்சு.
"அவரு ஷை டைப்பா இருப்பாரோ என்னவோ? எதுக்கு தேவை இல்லாம மனச போட்டு கொழப்பிக்கற??"
"ஹ்ம்ம்...எங்க வீட்லயும் இதையே தான் சொல்றாங்க..."
சும்மா அவள சாமாதான படுத்தருதுக்காக விவேக், "சரி, அப்ப நான் வேணா அவர் கிட்ட பேசி பாக்கவா?"
வித்யா கண்ணுல அப்ப தான் ஒரு சின்ன சந்தோஷம் தெரிஞ்சுது, "ஆமான் டா, நீ அவர் கிட்ட பேசி பாரேன், பேசிட்டு என் கிட்ட வந்து சொல்றியா?"
"சரி ஓகே, நீ சியர்ஃபுல்லா இரு, ஒகே?"
ரொம்ப நாள் கழிச்சு அத்தை, மாமா, பாட்டி, தாத்தானு எல்லாரையும் பாத்து பேசிட்டு, முதல் நாள் ஒழுங்கா தூக்கம் வேற இல்லாததுனால விவேக், வித்யாகிட்ட சொன்னதெல்லாம் சுத்தமா மறந்துட்டு ஏழு மணிக்கெல்லாம் தூங்க போய்ட்டான்.
[தொடரும்]
பகுதி 4
Tuesday, June 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
i can guess the ending!! heehee.. 'there after they lived a happy life' ;)
lets c how well u take it from here.. cute one so far ..
indha there after they lived a happy life guesses are welcome, and thats wat i need :-)
hey, where is fourth part? i already read the 3rd part.
Nithya
Post a Comment