Sunday, July 27, 2008

கிருஷ்ணா கஃபே - 3

அகல்யா கல்யாணம்….

விக்னேஷ் அவன் அம்மாவோடு வந்திருந்தான்…சரண்யா, அவள் பள்ளி தோழிகள் புடை சூழ வந்திருந்தாள்.

வெகு நாள் கழித்து, ரம்யாவும் சரண்யாவும் ஒன்றாக இருந்தார்கள். அதிலும், விக்னேஷ் வேறு அங்கு இருக்கவே, குறும்புக்காரியான ரம்யாவுக்கும் இன்னும் கொண்டாட்டமாக ஆகி விட்டது…

இவர்களை பார்த்து ஒரு சின்ன ஹாய் மட்டும் சொல்லி விட்டு, கல்யாணத்தையே அவன் தலையில் தாங்கி நடத்துவது போல, எதோ செய்து கொண்டிருந்தான் விக்னேஷ்.

ரம்யா சரண்யாவிடம், "அங்க பாருடி, உன் ஆள…எப்டி வேல பண்ற மாதிரி சீன போடறாரு பாரு"

"ச்சும்மா இரு ரம்மி…எப்ப பாத்தாலும் ஓட்டிகிட்டே இருக்காத…"

"நான் என்ன சும்மாவா ஓட்றேன்? கிருஷ்ணா கஃபேல தினமும் நடக்கற கதைய தான சொல்றேன்…"

"போ ரம்மி! இன்னிக்கு விக்னேஷ் வேற கொஞ்சம் டென்ஷனா இருக்க மாதிரி இருக்கு…என்னன்னே தெரியல…அவரு இன்னிக்கு எங்கிட்ட சரியா முகம் குடுத்தே பேசல…"

"எங்க முகத்த குடுக்கறது?பாரு…கல்யாணத்துக்கு கூட ரெண்டு நாள் தாடியோட வந்துருக்கார்…ஹ்ம்ம்..,எல்லாம் இந்த தேவதைய பாக்காத சோகம் தான் போல…"

"போடி! உனக்கு வேற வேலையே இல்ல…"

"நாங்க எத்தன பேத்த பாத்திருக்கோம்? இப்ப இப்டி தான்டி சொல்லுவ…கொஞ்ச நாள் கழிச்சு, நீயே வந்து…... ""
திடீர்ன்னு ரம்யாவுக்கு ஏதோ தோன, ""ஹே...விக்னேஷ் பைக் என்ன சொல்லு…"""

"அதை எதுக்கு இப்ப கேக்குறே?"

"சொல்லு ன்னா"

"CBZ"

"ஓஓ...."

"என்ன ஓஒ?"

தன் குறும்புக் குரலில் ரம்யா,

சந்திப்போமா...இருவரும் சந்திப்போமா...
கிருஷ்ணா ஃகபேயில் சந்திப்போமா...

சந்திப்போமா...இருவரும் சந்திப்போமா...
ஆபிஸ் கேஃபடிரியாவில் சந்திப்போமா...

அந்த சி.பீ.ஸீ யில் போகின்றான் தாடி வைத்த பய்யன் அவன்...
ஐய்ந்தே முக்கால் அடி உயரம், அழகிய உருவம்...
பைனாப்பிள் போலே இருப்பானே...


ன்னு பாட போற"

அவளை முறைத்துக் கொண்டிருந்த சரண்யா, "என்னது??? பைனாப்பிளா??? அந்த பாட்ல ஆப்பிள்ன்னு தான வரும்?!?!?"

"எங்களுக்கும் அது தெரியும்ல...…நீ தான எப்ப பாத்தாலும் விக்னேஷ் ரொம்ப ஷார்ப், ரொம்ப ஷார்ப்ன்னு சொல்லிடே இருப்ப? அதான் முள்லோட இருக்குற பைனாப்பிள சொன்னேன்…ஹீ ஹீ…."

"கஷ்ட காலம், நான் ஒரு நாளும் அப்டி எல்லாம் பாட மாட்டேன்…விக்னேஷ் எனக்கு ஃபிரண்டு, ஃபிரண்டு, ஃபிரண்டு மட்டும் தான்…" என்று அந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள் சரண்யா.

"இன்று சொல்லிவிடலாமா, இன்று சொல்லிவிடலாமா என்று தவித்துக் கொண்டிருந்தான் விக்னேஷ். ’சரண்யா...I love you’, இல்ல இல்ல, ’சரண்...I think...I am in love with you...’ ச்சே, என்னத்த I think, கேவலமா இருக்கு...சரி இப்டி சொல்ல்லாம், ’சரண்யா...I want to spend the rest of my life with you’, ஹய்யோ, என்னடா விக்னேஷ் ஆச்சு உனக்கு? எப்ப பாரும் பேசுற தமிழ விட்டுட்டு, ஃபுல்லா இங்லிஷ்லயே ideas தோனுதே...வேற மாதிரி ஏதாவது சொல்லலாமா?? ஹ்ம்ம்...ஒன்னுமே தோன மாடேங்கறதே...சரண்யா...என் செல்ல ராட்ச்ஸி!!! எப்படீ எனக்குள்ள புகுந்த? ஹய்யோ...கொல்றியே!!! இப்படி பல மாதிரியாக அவனுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான்.

அவளின் புதிய தோற்றம் வேறு அவனை சஞ்சல படுத்துயது. எத்தனையோ முறை, சல்வாரிலும், ஜீன்ஸிலும் பார்த்து பழகிய பெண் தான். இருந்தாலும், இன்று அவளை முதன்முறை புடவையில் பார்க்கும் போது, ஏதோ ஒரு சொல்ல முடியாத மாற்றம் அவனுள். ஏனோ, அவனால் அன்று அவள் முகம் பார்த்தே பேச முடியவில்லை. அவன் மனதிற்க்குள், அவன் அனுமதி இல்லாமலே நுழைந்த ஒரு புதிய உறவால், திடீர் கவிஞன் ஆனான் விக்னேஷ்...

திருடிய உனக்கும் தெரியவில்லை…
திருட்டுக் குடுத்த எனக்கும் தெரியவில்லை…
காணாமல் போன என் இதயத்தை தானடி சொல்கிறேன்…

உன்னை திருடி என்று கூட பார்க்காமல்,
காலம் முழுதும் என் கைகளில்
வைத்துத் தாங்க தவம் கிடக்கிறேன்…
அருள் புரிவாயா, என் கள்ளச்சாமியே?


பொறுத்து பொறுத்து பார்த்த சரண்யா, அவளாகவே வந்து, "ஹலோ Sir! என்ன பார்த்தும் பாக்காதது மாதிரி போறீங்க? என்னையெல்லாம் உங்க அம்மாகிட்ட Introduce பண்ண மாட்டீங்களா?"

சரண்யாவே இப்படி வந்து கேட்கவும், விக்னேஷ், அவளிடம், "ஒரு நிமிஷம்" என்று சொல்லி விட்டு அவன் அம்மாவிடம் சென்றான்.

"அம்மா, அங்க yellow கலர் புடவை கட்டிட்டு இருக்காளே…அவ தான் உங்க மருமக சரண்யா!!!"

யோசிக்காமல், பட்டென்று சொல்லி விட்டான் விக்னேஷ். எப்படி தான் சரண்யாவிடம் சொல்வது, அதை விட அம்மாவிடம் எப்படி ஆரம்பிப்பது என்று பல மாதிரி யோசித்துக் கொண்டிருந்த விக்னேஷ், ’சரி…பாலாஜி, கல்யாண வேலையெல்லாம் முடிச்சுட்டு ஃபிரீ ஆகட்டும்…அவன் கிட்ட ஐடியா கேட்டுட்டு சொல்லிக்கலாம்’ என்று முடிவு செய்து வைத்திருந்தான். ஆனால், அதையெல்லாம் மறந்து விட்டு, அம்மாவிடம் உண்மையை போட்டு உடைத்து விட்டான்.

விக்னேஷின் அம்மா மாலதி, இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை, ’பையன் ஏதோ விளையாடுறான்னு நினைச்சமே, இப்ப நிஜமாவே ஒரு பொண்ண காட்றானே…’ என்று நினைத்தார்.

"என்னடா சொல்ற? வீட்ல ஏதோ விளையாட்டுக்கு சொல்றேன்னு நினச்சேன், இப்ப என்னடான்னா நிஜமாவே ஒரு பொண்ண காட்டுற, என்ன விளையாடுறியா? கல்யாணம்னா சும்மாவா? "

"எனக்கு பிடிச்சிருக்கும்மா...என் சந்தோஷத்த விட, நீங்களும் அப்பாவும் இந்த ஜாதி, ஜாதகம் எல்லாத்தையும் பெருசா நினைக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்...அதுக்கு மேல உங்க இஷ்டம்" தெளிவாக சொன்னான் விக்னேஷ்.

"இருந்தாலும், பொண்ணோட குடும்பம்...அவங்க அப்பா...அம்மா...இதெல்லாம் பாக்க வேண்டாமா? உங்கப்பா வேற என்ன சொல்லப் போறாரோ?”

"சரண்யா எங்க இங்கிலிஷ் மேம் பொண்ணு தான், அப்பாவ நான் பாத்துக்கறேன், உங்களுக்கு முதல்ல பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க..."

மிக அழகாக சிரித்து பேசிக் கொண்டிருந்த சரண்யாவை பார்த்ததும் ரொம்பவே பிடித்து விட்டது மாலதிக்கு.

"டேய்...எனக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு டா, இங்க கூட்டிட்டு வாயேன், நான் கொஞ்சம் பேசுறேன்..."

சரண்யாவை அம்மாவிடம் அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கும் போதே, பாலாஜி எதற்கோ கூப்பிட விக்னேஷ் ரிஸப்பஷன் வரை சென்றான்.

அதற்குள் "உங்கப்பா என்னம்மா பண்றார், கூட பிறந்தவங்க எத்தன பேர்" என்று சரண்யாவுடன் மிக வாஞ்சையாக பேச ஆரம்பித்தார் மாலதி.

பிறகு மாலதி, "வீட்ல சொல்லிட்டியாம்மா?"

"என்னது ஆண்ட்டி?

"உங்க கல்யாணத்த பத்தி தான்...எங்க வீட்ல எந்த பிரச்சனையும் இல்ல, எங்க விக்னேஷுக்கு பிடிச்சிருந்தா போதும், எங்களுக்கு முழு சம்மதம்...எனக்கும் உன்ன ரொம்ப புடிச்சிருக்கு..."

மாலதி பேசி முடுக்கவும், விக்னேஷ் அங்க வரவும் சரியா இருந்துச்சு...

"என்ன விக்னேஷ் இதெல்லாம்? I didn’t expect this from you" சரண்யா கோபமாய் கேட்க, அம்மா குழப்பமாய் முழிக்க, விக்னேஷுக்கு என நடந்திருக்கும் என்று ஒரு நொடியில் தெரிந்து விட்டது...'ஐயோ...அம்மா...ஆர்வக் கோளாறுல சொதப்பிட்டீங்களே!!!'
விக்னேஷ் வாயை திறப்பதற்கு முன், முழித்துக் கொண்டிருந்த மாலதியிடம் சரண்யா, "எனக்கு இத பத்தி எதுவும் தெரியாது ஆண்ட்டி...என்ன தப்பா நினைக்காதீங்க" என்று சொல்லி விட்டு வாசலை நோக்கி வேக வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டாள்.

என்ன செய்வதென்றே தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்த விக்னேஷிடம் அவன் அம்மா, "என்னடா இதெல்லாம்? அந்த பொண்ணு கிட்டயே இன்னும் சொல்லலையா? அதுக்குள்ள ஏன்டா என்கிட்ட வந்து, மருமக அது இதுன்னு சொன்ன?"

"ஐயோ...அம்மா...நான் அவகிட்ட சொல்லலாம்னு தான் இருந்தேன்...நீங்க அதுக்குள்ள...தோ, வரேன்..." என்றபடி வேக வேகமாக அவனும் சரண்யாவை பிடிக்க ஓடினான்.

"சரண்யா!!! நில்லு...நான் சொல்றத கொஞ்சம் கேழு...ப்ளீஸ்"

"ப்ளீஸ் விக்னேஷ்...எனக்கு எதுவும் கேக்க வேண்டாம்...இப்டி கத்தி சீன் க்ரியேட் பண்ணாதீங்க!" இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்த சரண்யா, மண்டபத்தின் கேட் வரை சென்று விட்டாள்.

"சரண்யா...ப்ளீஸ்மா..புரிஞ்சிக்கோ...நான் உன்கிட்ட சொல்லனும்னு தான் கொஞ்ச நாளா நினச்சுகிட்டு இருந்தேன்...நான் சொல்றது கொஞ்சம் கேழு"

எதிரே வேகமாக வந்த காரை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை.

சரண்யா ஒரு அடி முன்னால் எடுத்து வைக்க, அவள் பின் வேகமாய் வந்து கொண்டிருந்த விக்னேஷ், "அம்மா!!" என்று அலறியபடி கீழே சரிந்தான்.

Thursday, July 24, 2008

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் - Part 3

அன்று: 1994 - 2000

சிட்டுவேஷன்: பள்ளி ஆண்டு விடுமுறை
நேரம்: அப்பாவும் அம்மாவும் வண்டியில் அலுவலகம் கிளம்பும் நேரம் - நாங்கள் செய்யும் லூட்டியை பொறுத்து, ஒன்பது மணி முதல், ஒன்பதரை மணிக்குள், ஒரு நேரம்.
இடம்: வீடு…

நான், அக்கா: அம்மா!!! டாடா...டாடா…

அம்மா: டாடா...டாடா…

நான், அக்கா: அப்பா! டாடா...டாடா…

அப்பா: ஹ்ம்ம்…ஹ்ம்ம்…இன்னும் சின்ன குழந்தைங்க மாதிரி டாடா சொல்லிகிட்டு…வரோம்…

அப்பா வண்டி பின்னாடி தெருவை தாண்டி போறதுக்குள்ள, நானும்,அக்காவும் தட தடன்னு ஒடி போய், வீட்டிற்க்கு பின்னால், காம்ப்பெளன்டு சுவர் ஓரமா, ஒரு ஸ்டூல் போட்டு ஏறி நின்னுக்கிட்டு, மறுபடியும்…

நான், அக்கா: அம்மா!!! டாடா...டாடா…

அம்மா: டாடா...டாடா…

அப்பா: உங்கம்மா என்ன ஃபாரினுக்கா போறா? போங்க உள்ள!!!

இன்று: 2005 - 2008

சிட்டுவேஷன்: வீட்டில இருந்து கிளம்பி, பெங்களூர் வரும் மற்றும் ஒரு ஞாயிற்றுக் கிழமை...
நேரம்: கண்யாகுமரி எக்ஸ்ப்ரஸ் டிரைவரின் இஷ்டப் படி...கோவை மக்களின் கஷ்டப் படி...இரவு பதிரோரு மணி முதல், அதிகாலை இரண்டு மணிக்குள், ஒரு நேரம்...
இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன்

அப்பா: டாடா...டாடா…

நான்: பை…பை…மனதிற்குள் (ஹீ ஹீ….என்ன கொடுமை ரகுபதி sir இது!!!)

Tuesday, July 22, 2008

கிருஷ்ணா கஃபே - 2

"சரண்யா! உன்ன பெங்களூர் பிராஜக்ட்டுக்கு அசைன் பண்ணி இருக்கோம், You should be ready to fly to bangalore in a short while"


திடீரென்று அவள் மானேஜர் இப்படி வந்து சொல்லவும், சரண்யாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒன்னரை வருடமாக பழகிய இடம் சென்னை….அதிலும் பள்ளியில் இருந்து, இன்று வரை அவள் தோழி ரம்யாவை பிரிந்து இருந்ததே இல்லை.


வேறு வழியின்றி, அரை மனதுடன் பெங்களூர் வந்து சேர்ந்தாள் சரண்யா.
போதா குறைக்கு லோக்கல் ஆன்சைட் என்று வேறு ஒரு கம்பனியில் போட்டு விட்டார்கள். புது ஊர், புது கம்பனி என்று எதுவுமே அவளுக்கு பிடிக்கவில்லை.


அவள் டீமோடு தான் தினமும் மதியம் சாப்பிட சென்றாள்…இரவிலும் பி.ஜி யில் ஒரு கூட்டமே இருந்தது…என்றாலும், அவள் மனதிற்க்குள் எதோ ஒரு இனம் புரியாத தனிமை. இவ்வளவு பேர் இருந்தும் தனக்கான நட்பாய் யாரையுமே தோனவில்லை அவளுக்கு…சரி இங்கு வந்து ஒரு வாரம் தானே ஆகிறது...போக, போக எல்லாம் சரி ஆகிவிடும் என்று தன்னை தானே சாமாதானப் படுத்திக் கொண்டாள்.


அப்போது தான் ஒரு நாள் எதிர்பாரா விதமாக அலுவலகத்தில் விக்னேஷை பார்த்தாள் சரண்யா. அவனை அங்கு பார்த்தவுடன், அவள் மனதிற்குள் ஒரு இன்ப அதிர்ச்சி. எப்போதோ தொலைத்த ஒரு பொருள் எதிர்பாரா விதமாக கிடைத்ததை போல் உணர்ந்தாள்.


அவளை பார்த்தவுடம், முகம் மலர்ந்து விக்னேஷ்,"ஹேய்!!! What a surprise!!! நீ எங்க இங்க?"


"என்ன லோக்கல் ஆன்சைட் இங்க போட்டுடாங்க, ஆமா நீங்க எப்டி இங்க?"


"நான் இந்த கம்பனிக்கு மாறி நாலு மாசம் ஆகுது..., அப்புறம் பெங்களூர் வாசம் எப்டி இருக்கு?"


"அதே ஏன் கேக்குறீங்க? இங்க யாருமே இல்ல, ரொம்ப போர் அடிக்குது, ஹாஸ்ட்டல்ல சாப்பாடும் சரி இல்ல"... ஒரே சோகமாக சரண்யா சொல்லவும்,


"Don’t worry...இங்க பக்கத்துல தான் கிருஷ்ண கஃபே இருக்கு, I’ll accompany you for dinner tonight"


இப்டியாக ஆபிஸிலும், கிருஷ்ணா கஃபேயிலும் பார்த்து, பேசி, பழகி ஒரு சில நாட்களிலேயே அவர்களின் நட்புப் பாலம் இறுகியது!


கிருஷ்ண கஃபே...ஒரு சனிக்கிழமை மதியம்....விக்னேஷும், சரண்யாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.


நடுவில் சரண்யா, "ATM வேற போகணும், பர்ஸ் காலி" என்றாள்.


இதை கேட்டு விக்னேஷுக்கு புரை ஏறியது, "யே! என்ன குண்ட தூக்கி போடுற? என்கிட்டயும் 50 ரூபா தான் இருக்கு!!!"


"என்ன சொல்றீங்க? என்கிட்டே மொத்தமே 20 ரூபா தான் இருக்கு!!!


"யேய் லூசு? நீ தான் எப்பயுமே எங்க கம்பனில reimbursement இருக்குன்னு சொல்லி, பே பண்ணுவே? அந்த தைரியத்துல நானும் வந்துட்டேன்...இங்க கார்டும் அக்ஸப்ட் பண்ண மாட்டாங்க. பணம் இல்லைன்னு மொதல்லையே தெரியாதா? என்ன விளையாடறயா?"


"Hello Sir.!! எனக்கென்ன தெரியும்? ஒரு பய்யன் 100 ரூபா கூட இல்லாமயா வெளிய வருவீங்க?"


"ஹய்யயோ...இப்ப என்ன பண்றது?"


"ஒன்னும் பண்ண முடியாது, ரெண்டு பேறும் கிருஷ்ண கஃபே இட்லி ரகசியத்த இன்னிக்கு தெரிஞ்சுக்கலாம்..."


விக்னேஷ் தலையில் அடித்துக் கொண்டே, "கஷ்டம்...உன்னோட எல்லாம் சாப்ட வந்தேன் பாரு, என்ன சொல்லணும்..." என்றபடி அவன் நண்பனுக்கு ஃபோன் செய்தான்.


சாப்பிட்டு முடித்தவுடன் சரண்யாவின் பீ.ஜி யை நோக்கி இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.


"ச்சே...உன்னால இன்னிக்கு என் மானமே போச்சு! என் ரூம் மேட் வேற எதுவுமே பேசாம பணத்தைக் குடுத்துட்டு, நக்கலா ஒரு லுக்கு விட்டுட்டு போய்ட்டான்...ரூம்ல போய் என்ன ஓட்டித் தள்ளப் போறான்.."


இது எதுவுமே கேட்காதது போல் சரண்யா எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள், "வாவ்…அங்க பாருங்களேன்…அந்த டெட்டி எவ்ளோ அழகா இருக்கு!!!" ஒரு கடையில் இருந்த டெட்டி பியர் பொம்மையை பார்த்து வியந்து போய் சொன்னாள் சரண்யா.


"கஷ்ட காலம்…இந்த பொண்ணுகளுகெல்லாம் ஏன் இப்டி ஒரு weird ஆன டேஸ்ட்? இல்ல, நான் தெரியாம தான் கேக்கறேன்…உனக்கென்ன மனசுல இன்னும் குழந்தைன்னு நினப்பா?"


"See…taste always differs, உங்களுக்கு ஒன்னு பிடிக்கலன்னா அது ரொம்ப மட்டமானதாயிடுமா?"


"சரி…ஓகே…ஓகே…கூல்…கூல், நாளைக்கு பாப்போம்…"


இந்த சம்பவம் (cashless lunch ) நடந்து, கிட்டதட்ட ஒரு மாதம் இருக்கும். அன்று சரண்யாவின் பிறந்த நாள்.


இரவு, 12 மணிக்கு யாரோ ரூம் கதவை தட்டினார்கள். திறந்தால் ஹௌஸ் கீப்பீங் பெண் கைய்யில் ஒரு கவர், மற்றும் போக்கேவுடன் நின்றிருந்தார்.
"Happy Birthday!!!" என்று சொல்லி விட்டு அவர் செல்லவும்,


"யாரு இவ்ளோ பெரிய கவர் அனுப்ச்சிருக்காங்க…" சரண்யா யோசித்தவாறே திருப்பி திருப்பி பார்க்க, எதிலுமே பெயர் எழுதி இருக்கவில்லை.


கவரை பிரித்துக் கொண்டிருக்கும் போதே, ஃபோன் அடித்தது. அவள் தோழி ரம்யா தான்.


"சரண்…Happy B'day, Many many more happy returns of the day"


ரம்யாவின் குரலில் இருந்த உற்சாகம் அவளுக்கும் ஒட்டிக் கொண்டது…"Thanks ரம்மி…எப்பயும் போல நீ தான் இன்னிக்கும் முதல்ல விஷ் பண்ண…"


"ஹ்ம்ம்…அப்புறம்? வேற யாரு பண்ணுவா? ம்ம்…சொல்லு, wats the plan for tommorow?"


கவரை பிரித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்த சரண்யா, அதனுள் இருந்த பரிசை பார்த்ததும் திக்கு முக்காடி போனாள். அன்று அவள் கடையில் பார்த்து வியந்த அதே டெட்டி. விக்னேஷை போலவே அழகாய் சிரித்துக் கொண்டிருந்தது.


"ரம்மி…யாரோ கால் வெய்ட்டிங்ல இருக்காங்க…அப்புறம் கூப்டட்டா?"
"ஒகே…யு கேரி ஆன்…பை பை"


ரம்யா ஃபோனை வைத்ததும், சரண்யா உடனே விக்னேஷிற்க்கு ஃபோன் செய்தாள்.


அவன், "என்ன மேடம்? B'day அதுவுமா நீங்களே எனக்கு கால் பண்ணீட்டீங்க….ஹ்ம்ம்…great…anyways, happy b'day" என்றான்.


"விக்னேஷ்! Thank you so much for the gift, நான் except பண்ணவே இல்ல…such a thoughtful gift…thank you sooooo much"


"ஹேய்….போதும், போதும், thanks எல்லாம் கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோ…"
"ஆமா…இத எப்ப வாங்கினீங்க?"


"அன்னிக்கே வாங்கிட்டேன்…ஆனா இத எங்க ரூம்ல மறச்சு வைக்கறதுக்குள்ள படாத பாடு பட்டுட்டேன்"


பிறகு ஃபோனை வைக்கவே மனமின்றி இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.


பாலாஜியின் தங்கை அகல்யா திருமணம் பற்றி பேசுவதற்காக விக்னேஷ், சரண்யாவுக்கு ஃபோன் செய்தான். எடுத்தவுன் சரண்யா ஒரே சோகமாக பேச, விக்னேஷ் அவன் சொல்ல வந்ததயே மறந்து விட்டு, "என்ன சரண்யா? டல்லா பேசுற? என்ன ஆச்சு…"


"புஜ்ஜி மேல காஃபி கொட்டிடுத்து, அதான் அத குளிக்க வச்சு, காய வச்சிருக்கேன்…மறுபடியும் அது பழைய மாதிரி ஆகுமான்னு தெரியல…"

"அந்த பொம்மைய எதோ ஆசப்பட்டியேன்னு வாங்கி குடுத்தா…இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியல? அதுல காஃபி கொட்டிச்சுன்னு ஒரு சோகம்…இதுல அதுக்கு புஜ்ஜின்னு ஒரு பேரு வேற…வேணாம்…நான் எதாவது சொல்லிட போறேன்….ஆமா"

"உங்களுக்கு என்ன தெரியும்? அது எவ்ளோ அழகா இருந்துச்சு…தண்ணி பட்டப்புறம் இப்ப பாக்க எப்டி இருக்கு தெரியுமா?"


"ஏன்? உன்ன மாதிரி இருக்கா???" என்று சொல்லி விட்டு சிரித்த விக்னேஷ், "ஹேய்…நீ பண்ண அலப்பரைல நான் சொல்ல வந்ததே மறந்துட்டேன்…அகல்யாக்கு கல்யாணம், தெரியுமா?"

"ஹ்ம்ம்ம்…நேத்து தான் அவ ஃபோன் பண்ணி சொன்னா…பத்திரிக்கை கூட அனுப்பறேன்னா…"

"ஓஹ்…நீயும் வரல்ல?"

"ஹ்ம்ம்ம்…தெரியல...எங்களுக்குள்ள ஸ்கூலுக்கு அப்புறம் அவ்ளவா டச்சே இல்ல, அதுவும் மத்த ஸ்கூல் ஃபெரண்ஸ் யாரும் வராங்களான்னு தெரியல…"


"ஹேய்…கம் ஆன்…இதுல என்ன இருக்கு? அதான் உன் ஃபெரண்ட் ரம்யா இருக்காளே, ரெண்டு பேரும் சேந்து வாங்க…வீக்கெண்டு, அதுவும் நம்ம ஊர்லயே நடக்குது…ரிசெப்ஷன் மட்டும் தான? ரெண்டு பேரும் வாங்க…"


விக்னேஷ் இப்படி வற்புறுத்திச் சொல்லவும், சரண்யா, "சரி, அப்ப நான் ரம்யாகிட்ட கேட்டுட்டு சொல்றேன்…"


அகல்யா திருமண நாளும் நெருங்கி வந்தது. ஒரு நாள் முன்னதாகவே விக்னேஷ் கிளம்பி சென்று விட்டான். வெள்ளி இரவு சரண்யா தனியாக ரெயில்வே ஸ்டேஷன் சென்று ட்ரெய்ன் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தாள்.


பெங்களூரில் இருந்து ஈரோட்டிக்கு ட்ரைய்ன் பயனம்…இது வரை ஒரு முறை கூட தனித்து பயனித்ததில்லை அவள். எப்போதுமே விக்னேஷ் அவளுடன் இருந்திருக்கிறான். நான்கு மணிக்கெல்லாம் ட்ரையின் ஈரொடை சென்று அடைந்து விடும் என்பதால், விக்னேஷ்ற்க்கு ட்ரைனில் பயனிப்பதே பிடிக்காது...இருந்தாலும் சரண்யாவிற்காக, பஸ்சில் செல்லாமல் அவளுடன் வருவான்.


இந்த ஆறு மாதங்களாக, அதுவரை பழகிய நண்பர்கள் யாருமே இல்லாத ஒரு ஊரில், தனித்து இருந்த ஒரு உணர்வே அவளுக்கு வரவில்லை. இப்போது விக்னேஷ் இங்கு இல்லாததை நினைத்தால், யாருமே இல்லாதது போல் தோன்றியது அவளுக்கு. 'ச்சே...இப்டி ஒரு நண்பன் கிடைக்க தான் கடவுள் நம்மள பெங்களூர் அனுப்சு வச்சிருக்கார்’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள். சென்னை ரெயில்வேய் ஸ்டேஷனில் அவளை பார்த்தவுடன், "Excuse me, எனக்கு கண்ணு தெரியாது, கொஞ்சம் வழி விடறீங்களா?" என்று அவன் கேட்டது நினைவுக்கு வந்து, அவள் உதடுகளில் ஒரு சிறு புன்னகை ஒட்டிக் கொண்டது.


ரெயில்வேய் ஸ்டேஷனில், வேக வேகமாக சரண்யாவை கடந்து செல்லும் பல தரப்பட்ட மக்கள்....அழும் குழந்தைகள்…தகவல் ஒலிபெருக்கியின் அலறல்...பக்கத்து பிளாட் ஃபார்மில் எதோ ஒரு ட்ரைய்ன் கிளம்பும் சத்தம்...இத்தனை இரைச்சலுக்கு மத்தியில் தனக்கென ஒரு உலகை ஷ்ரிஷ்ட்டித்துக் கொண்டு அதில் மூழ்கி போய்யிருந்தாள் சரண்யா. அந்த உலகத்தில் அவளுடன் இருந்த அந்த இன்னொருவன் யார் என்று சொல்லவும் வேண்டுமா என்ன?


விக்னேஷ் இல்லாத அந்த ஒரு பயனத்தையும், பெரும்பாலும் அவன் நினைவுகளுடனேயே பயனித்து முடித்தாள் சரண்யா.


ஊரில் விக்னேஷோ சரண்யாவை பார்க்காத அந்த ஒரு நாளில் பல விதமாக யோசித்துக் கொண்டிருந்தான். வெகு நாட்களாக அவனுக்குள் மருகிக் கொண்டிருந்த ஒரு உணர்வு, அவனையே ஆட்கொள்வது போல உணர்ந்தான். மிகுந்த சந்தோஷமா? இல்லை, சொல்ல முடியாத துக்கமா? இல்லை, இரண்டுமே கலந்த ஒரு உணர்வா? எதுவாக இருந்தாலும், அந்த உணர்வை...அந்த சுகமான வலியை...ஒதுக்கித் தள்ளவும் முடியவில்லை...ரசித்து அனுபவிக்கவும் முடியவில்லை.


விக்னேஷிற்கு முதல் best friend அவன் அம்மா தான், அப்படி இருக்கும் போது, இப்படி மந்திரித்து விட்ட கோழி மாதிரி அவன் இருந்தால் அவன் அம்மா கண்டு பிடிக்க மாட்டார்களா என்ன?


மகனை இப்படி பார்த்தே பழக்கப் பட்டிறாத மாலதி, அவனிடமே, "என்னப்பா? ஒரு மாதிரியா இருக்க?" என்று கேட்டு விட்டார்.


"அதெல்லாம் ஒன்னும் இல்லமா" என்று சொல்லி அப்போதைக்கு மழுப்பி விட்டான்.


அகல்யா திருமணத்திற்க்கு கிளம்புவதற்க்கு முன், சாதாரணமாக கேட்பது போல் விக்னேஷ் அவன் அம்மாவிடம், "ஏன்மா! நீங்க Love marriage பத்தி என்ன நினக்கறீங்க?" என்று சாது போல கேட்டான்.


விக்னேஷின் அம்மா அதற்க்கு, "ஏன்டா திடீர்ன்னு இப்டி கேக்குற?"
"இல்ல..ச்சும்மா தான்…இப்ப…நானே ஒரு பொண்ண லவ் பண்றேன்னு வச்சுக்கோங்க…நீங்க என்ன சொல்லுவீங்க?"


"போடா! கிறுக்குப் பயலே…இப்ப எதுக்குடா உனக்கு கல்யாணத்த பத்தி யோசனை? இன்னும் ரெண்டு வருஷத்துல நானே உனக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வக்கறேன்…"


"இல்ல மா…அது வந்து, நான்…ஒரு பொண்ண…" என்று விக்னேஷ் இழுப்பதற்குள், அவன் அப்பா கிருஷ்ணன் அங்கு வந்து, "கல்யாணத்துக்கு கிளம்பாம அம்மாவும், பய்யனும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? உங்கள டிராப் பண்ணிட்டு நான் வேற ஒரு கல்யாணம் அட்டெண்ட் பண்ணனும், சீக்ரம்…" என்று சொல்ல, எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் விக்னேஷ்.

[தொடரும்]

Tuesday, July 15, 2008

கிருஷ்ணா கஃபே - 1

"யேய்ய்ய்ய்ய்ய்ய்!!! Can't you see a bike coming?" விக்னேஷ் அந்த இரண்டு பெண்களை பார்த்து கத்தினான்.

"You've come in the wrong side, and how dare you shout at us???" என்று சரண்யாவும் பதிலுக்கு கத்தினாள்.

"டேய்…நடு ரோட்ல என்னடா சண்ட? வாடா போலாம்.." இது விக்னேஷின் நன்பன் பாலாஜி.

"ச்சே…கண்னே தெரியாத குருடங்களா இருப்பாங்க போல…" சற்று இரைந்தே சொல்லி விட்டான் விக்னேஷ்.

"நாங்க ஒன்னும் குருடங்க இல்ல…நீ தான் சோடா புட்டி…" என்றவாரே ஸ்கூட்டியை வேகமாக கிளப்பிக் கொண்டு பறந்து விட்டாள் சரண்யா.

"யேய்ய்ய்ய்" என்று கைய்யை உயர்தித் கத்தியவனை, "டேய், விடு டா…நாம செஞ்சதும் தப்பு தான" என்று சாமாதானப் படுத்தினான் பாலாஜி.

"ஆனாலும் அந்த பொண்ணுக்கு ரொம்ப திமிர்டா…பாக்கறதுக்கு பாப்பா மாதிரி இருந்துட்டு என்ன பேச்சு பேசுறா பாரு…"

பாலாஜி ஒன்றும் சொல்லாமல் யோசித்துக் கொண்டே இருக்கவும், விக்னேஷ் "என்னடா ஒன்னும் சொல்ல மாட்டிங்குற?"

"அந்த பொண்ண எங்கயோ பாத்த மாதிரி இருக்குடா…எங்கன்னு தான் தெரியல…"

"ஆமா…அவ பெரிய ஐஷ்வர்யா ராய்…நியாபகம் வச்சுக்க…வாடா போலாம்…"

விக்னேஷ் சொன்னாலும், சொல்லாட்டியும் சரண்யா அழகு தான். ஒரு முறை பார்தாலே, மறு முறை பார்க்கத் தூண்டும் கொள்ளை அழகு. என்றாலும் தான் அழகு என்ற எண்ணமே துளி கூட அவள் கண்களில் தெரியாதது தான் அவளது ப்ளஸ் பாயின்ட்டே!
இப்படி துரு துரு வென்று, கண்களில் குறும்பு தெறிக்க, குழந்தைதனமான முகத்துடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்தும் கூட ரசிக்காமல் இருக்கும் அளவிற்க்கு, விக்னேஷ் ஒன்றும் தாடி, மீசை வைக்காத முனிவர் அல்ல.ஆனால் அன்று கோபம் அவன் கண்களை மறைத்திருந்தது. விக்னேஷ்...பார்ப்பதற்க்கு ரொம்ப வாட்ட சாட்டமாக இல்லாவிட்டாலும், அவனை பார்த்தவுடன், யாரையும் முதலில் ஈர்ப்பது, அவனுடைய கூர்மையான பார்வை தான். இவன் எதையும் சாதிக்க பிறந்தவன் என்று அவன் கண்களை பார்தாலே தெரிந்துவிடும். மனதில் பட்டதை யோசிக்காமல் பேசி விடுவதே அவனின் நல்ல குணம், ஏன் கெட்ட குணம் என்று கூட சொல்லலாம்.

விக்னேஷ், பாலாஜி இருவருமே பள்ளித் தோழர்கள். பள்ளியில் இருந்து, இப்போது சென்னை வேலை வரை, இருவரும் ஒன்றாகவே தான் இருக்கிறார்கள்.

விக்னேஷ் சரண்யாவை திட்டியது போலவே, சரண்யவும் வாய் மூடாமல் விக்னேஷை அர்ச்சித்துக் கொண்டே வந்தாள்.

சரண்யாவின் தோழி ரம்யா, "யேய்…போதும்…அவன பத்தியே எத்தன நேரம் பேசிட்டு இருப்ப?"

சரண்யா ஒன்றுமே சொல்லாமல் இருக்கவும், ரம்யா, "அதுவும்...நீ சோடா புட்டின்னு சொன்னதும், அவன் முகத்த பாக்கனுமே…" என்று சிரிக்க ஆரம்பித்தாள்.

உடனே சரண்யாவின் முகம் மாறியது, "ரொம்ப ஒவரா பேசிட்டனோ?"

"யேய் போதும், யாரோ ஒருத்தன், விடு அவன..."

"இல்ல ரம்மி…அவன எங்கயோ பாத்த மாதிரி இருக்கு, எங்கன்னு தான் தெரியல…"

"ஹ்ம்ம்ம்…போன வாரம் ஜோடி நம்பர் ஒன்ல வந்தானே…பாக்கல" என்று ரம்யா நக்கலடிக்கவும்,
"ஹேய்…போடி…" அதற்க்கு பிறகு, விக்னேஷை பற்றின பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் சரண்யா.

இந்த சண்டை நடந்து இரண்டே வாரங்கள் கழித்து மீண்டும் இரு நன்பர்களும் சரண்யாவை ரெயில்வே ஸ்டேஷனில் பார்த்தனர். முதலில் விக்னேஷ் தான் சேரன் எக்ஸ்பரஸ் கதவருகே சாய்ந்து நின்றிருந்த சரண்யாவை பார்த்தான்.

விக்னேஷ், "பாஜி…அங்க பாரேன்…அந்த ஸ்கூட்டி பெப் அங்க நிக்குது…" என்றான்.

அதற்க்கு பாலாஜி, "என்னது? பிளாட்ஃபார்ம்ல ஸ்கூட்டி பெப்பா? அதெல்லாம் கூட இங்க பார்க் பண்ண விடுவாங்களா?" என்று அப்பாவியாக கேட்க,
விக்னேஷ், "டேய்…மொக்கைய போடதடா…அன்னிக்கு அடையார் பக்கத்துல பாத்தோமே, அந்த ஸ்கூட்டி பெப் பொண்ணு, நம்ம கோச் தான் போல, ஒரு வழி பண்றேன் இன்னிக்கு அவள"

"ச்சும்மா இருடா…அப்பறம் இன்னிக்கும் வாங்கி கட்டிக்க போற…"

பாலாஜி இப்படி சொல்லவும், விக்னேஷிற்க்கு நன்றாக ஏத்தி விட்டது போல ஆகிவிட்டது. ஃபோன் மணி அடிக்கவும் பாலாஜி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

விக்னேஷ் சரண்யா நின்றிருந்த கதவருகே சென்று, "Excuse me…எனக்கு கண்ணு தெரியாது…கொஞ்சம் வழி விட்றீங்களா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

சத்தம் கேட்டு திரும்பிய சரண்யாவிற்க்கு நக்கல் சிரிப்புடன் நின்றிருந்த விக்னேஷை பார்த்ததும், ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை, பின்பு தான், அன்று அவள் ஹாஸ்டல் பக்கத்தில் நடந்த சம்பவம் நினைவுக்கு வர, சிரிப்பு வந்த்து. ஏனோ அவன் மேல் அன்று அவளுக்கு கோபம் வரவில்லை, ’ச்சே..ஆனாலும் அன்னிக்கு நாம சோட புட்டின்னு சொல்லி இருக்க கூடாது" என்று மனதிற்க்குள் நினைத்துக் கொண்டாள்.

சரண்யா ஒன்றுமே பேசாமல் அவள் கம்பார்ட்மெண்டில் வந்து உற்காந்தாள். விக்னேஷும் அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்தான். ஆனால், சரண்யா அவனை பார்காதது போல, ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து படிக்க ஆரம்பித்தாள். என்றாலும் மனம் புத்தகத்தில் ஒட்டவில்லை, இவன எங்கயோ பாத்திருக்கோமே என்று மறுபடியும் யோசித்துக் கொண்டிருந்தாள்.

பின்பு அவனை பார்த்து, "அன்னிக்கு கொஞ்சம் அஃபன்ஸிவா பேசிட்டேன்…ஐ ம் சாரி…" என்று ஒரு வழியாக சொல்லி முடித்தாள்.

சரண்யா அவனை தெரியாதது போல காட்டிக் கொண்டதால், ரொம்ப திமிர் பிடித்த பெண் போல என்று நினைத்துக் கொண்டவனுக்கு, அவளாகவே வந்து சாரி கேட்கவும், அதற்க்கு மேல் பொருக்கவில்லை."ச்சே..ச்சே…நீங்க எதுக்கு சாரி எல்லாம் கேட்டுகிட்டு, நான் தான் அன்னிக்கு ராங் சைட்ல வந்து உங்க வண்டி மேல மோதிட்டேன்…ஐ ம் சாரி…" என்றான்.

"தட்ஸ் ஓகே…ஆமா...நீங்க கோயம்புத்தூரா?"

"இல்ல, இல்ல, நான் பெருந்துரை போகனும்…ஈரோட்ல இறங்கி, அங்கிருந்து அப்புறம் பஸ்…"

"ஓ…நீங்களும் பெருந்துரையா???" பெருந்துரை என்றவுடன் தான், சரண்யாவிற்க்குள் பொரி தட்டியது.

"ஆமா…நீங்க Infant Jesus ஸ்கூல் தான?" என்று கேட்டாள்.

""ஹேய்…ஆமா...உங்களுக்கு எப்படி?"

"உங்க பேரு விக்னேஷ் தான?"

""ஹேய்…ஆமா!!!"

"நானும் அதே ஸ்கூல் தான், அன்னிக்கே உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினச்சிட்டு இருந்தேன்…இப்ப தான் நியாபகம் வந்த்து,,,நீங்க தான ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்கினீங்க?"

விக்னேஷ் சிரித்துக் கொண்டே, "அப்பா…பயங்கரமா நியாபகம் வச்சிருக்கீங்க? என் ஃபிரெண்டு பாலாஜி கூட, அன்னிக்கு உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்குன்னு சொல்லிட்டு இருந்தான்…"

"பாலாஜி…ஹான்…அவர் தங்கச்சி கூட என் கிலாஸ் மேட் தான், அகல்யா…இப்ப தான் நியாபகம் வர்ரது…"

"ஓஹ்…அகல்யா கிலாஸ் மேட்டா நீ?" வசதியாக ஒருமைக்கு மாறினான் விக்னேஷ்.

அதற்க்கு பிறகு இருவரும் சேர்ந்து ஸ்கூல் கதை, வேலை…என்று அரைட்டயை ஆரம்பித்தார்கள்.
ஃபோன் பேசி முடித்து விட்டு கம்பார்ட்மெண்டில் நுழைந்த பாலாஜிக்கு ஒன்றுமே புரியவில்லை, "இவள ஒரு வழி பண்ண போறேன்னு சொல்லிட்டு வந்தான், இங்க என்னடான்னா, முப்பத்து ரெண்டு பல்லையும் காட்டிட்டு இருக்கானே?"

பாலாஜியை பார்த்த்தும் விக்னேஷ், "டேய்…இது சரண்யா…நம்ம அகல்யாவோட கிளாஸ் மேட் டா…இங்க தான் சென்னைல வேல பண்ணிட்டு இருக்கா.." என்று அறிமுக படுத்தினான்.

பாலாஜி, "ஓஹ்ஹ்…சரண்யா…எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினச்சுட்டே இருந்தேன்…எப்டி இருக்கீங்க? ஷாந்தி மேம் எப்டி இருக்காங்க?"

அவன் ஸ்கூல் டீச்சரை பத்தி அவளிடன் ஏன் விசாரிக்கிறான் என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்த விக்னேஷிடம், பாலாஜி, "டேய்…நம்ம ஷாந்தி மேம் பொண்ணு டா…மறந்துட்டியா?"

விக்னேஷ் சரண்யாவிடம், "ஓஹ்!!!நீ சொல்லவே இல்லயே…மேம் எப்டி இருக்காங்க?"

"ஹ்ம்ம்…நல்லா இருக்காங்க…அகல்யா எப்டி இருக்கா?"

"ஹ்ம்ம்…நல்லா இருக்கா…"

சிறிது நேரம் பேசிவிட்டு, மூவரும் தூங்க சென்று விட்டனர், மருநாள் காலை நான்கு மணிக்கெல்லாம் ட்ரெய்ன் ஈரோடு சென்றடைந்தது. "ஓகே…பாக்கலாம்…பை.." என்று கிளம்பிய சரண்யாவிடம், விக்னேஷ் "ஏய்…இரு, எப்டி போக போற? தனியாவா போற?"

"இல்ல, எங்கப்பா வெய்ட் பண்றாரு…"

"சரி, ஓகே…அப்ப பாக்கலாம், பை, பை" என்றபடி விக்னேஷும், பாலாஜியும் சென்று விட்டனர்.

அவர்கள் போன பிறகு தான் சரண்யா, "ச்சே, இத்தன நேரம் ஊர் கதை, உலக கதை எல்லாம் பேசிட்டு ஒரு மெயில் ஐ.டி, ஃபோன் நம்பர் கூட வாங்க மறந்துட்டனே…" என்று நொந்து கொண்டாள்.

பல நாட்கள் சென்றது, அவர்கள் பார்த்துக் கொள்ளவே இல்லை…அப்போது தான், அவர்கள் பள்ளியில் பழைய மாணவர்களுக்கான get-together மின்னஞ்சல் வந்த்து. அதை பார்த்து விட்டு, சரண்யாவுன் தோழி ரம்யா. "சரண்…அந்த கெட் டுகெதர் மெய்ல பாத்தியா?"

"இல்லயே, ஏன்?"

"அடுத்த வீக்கெண்ட், நம்ம ஸ்கூல் கெட்டுகதெர் இருக்கு, நாமளும் போகலாம் சரண்…"

"போ ரம்மி…ஒரே போர்…அவ்ளோ தூரம் போய் மறுபடியும் உன் முகத்த தான் பாக்கனும், நான் வரல…"

"ஹேய்…இல்ல, இந்த தடவ பெரிய கெட்டுகதர் அரேஞ் பண்ணி இருக்காங்க…எப்பயும் மாதிரி இல்ல…"

"போ!பெரிய இந்த கெட்டுகெதர்...நான்லாம் வரலை, நான் ரொம்ப பிஸி…"

"ச்சே…வேஸ்ட்டு சரண் நீ…நான் கூட இந்த தடவ கெட்டுகதர்க்கு போய் சீனியர்ஸ், ஜூனியர்ஸ் எல்லாரையும் ரொம்ப நாளைக்கபுறம் பாக்கலாம்னு நினச்சேன்…"

"என்னது சீனியர்ஸ் எல்லாருமா? எப்டி டீ? நம்ம கிலாஸ் மட்டும் இல்லயா?"

"அதான் சொன்னேனே, இந்த தடவ பெருசா அரேஞ் பண்ணி இருக்காங்க…லாஸ்ட் டென் ஸெட்ல இருந்து எல்லாருக்கும் ஒரே சமயத்துல இன்வைட் அனிப்பி இருக்காங்க…"

"நிஜமாவா…ஹேய்…அப்ப நம்மலும் போகலாம் ரம்மி…ப்ளீஸ்"

"அடிப் பாவி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சீன போட்ட??? இப்ப இப்டி பல்டி அடிக்குற???ஹ்ம்ம்… Something fishy…"

ஸ்கூல் கெட்டுகதெர்…கழுத்து வலிக்க தேடியும் சரண்யாவால், விக்னேஷை பார்க்க முடியவில்லை. பின்பு, "ச்சே…நாம எதுக்காக அவன தேடனும்" என்று தன்னை தானே சாமாதானப் படுத்திக் கொண்டாள்.

கெட்டுகதெர் முடிந்து சென்னைக்கு திரும்பிய சரண்யாவிற்க்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

[தொடரும்]

Friday, July 11, 2008

A special day

Today is a special day made of special hours, special minutes and special seconds specially framed for my sweet heart, cutie Prasanna.

Prasanna! It’s been three years now since I know you
But little did I know your voice is magical
Only when I spoke to you after so long, I could figure it out:-)

A remembrance to her on her b’day

The ‘missing you’ verses I wrote when she was on a 5 day long vacation

November 2006

Never in my life, have I felt this way on a Saturday
Yes! I wished it could‘ve been a weekday
I wanted to kill the weekend, Kill my solitude
Like a whining child I kept crying when you will be back
And why I should wake up to face a world so void
And it was then I knew just what to do
I’d fall asleep again and then
I’d think of the wonderful times we have had together
Really miss you dear Prasannu

Tuesday, July 8, 2008

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் - Part 2

சீன் 1: அன்று - 1990
அப்பா: சொல்லு,பென்சில வச்சு எழுதிட்டு இருந்த...அப்புறம் பாக்ஸ்ல போட்ட...நடுல எப்டி கானம போச்சு?

நான்: ?!?!? (ஜோதிகா பாக்கற மாதிரி ஒரு கீழ இருந்து ஒரு பார்வை பாத்துட்டு, திறு திறு ன்னு முழிச்சிட்டு நிக்கறத தவிர வேற ஒன்னும் பண்ணல)

அப்பா: 2nd ஸ்டேண்டர்ட் வந்துட்ட, இன்னும் L.K.G கொழந்த மாதிரி பென்சில தொலச்சிட்டு இருக்க…

நான்: ?!?!?! (அதே திறு திறு தான்)

அப்பா: இது தான் கடசி தடவை, இனிமே பென்சில தொலைச்ச….பென்சில ஒரு நூல்ல கட்டி, உன் shirt button ல கட்டி தொங்க விட்டுருவேன்…ஆமா!!!

சீன் 2: அன்று
அப்பா: Lunch bag எங்க?????
நான்: ?!?!?!

சீன் 3: அன்று
அப்பா: geometry box எங்க?????
நான்: ?!?!?!

சீன் infinity: அன்று
அப்பா: Calculator எங்க?????
நான்: ?!?!?!

****************************************************

சீன் 1: இன்று
நான்: தம்பி ஏன் தாத்தா ஒரு மாதிரியா இருக்கான்?

தாத்தா: பாக்ஸ தொலச்சிட்டு, உங்க சித்தப்பா கிட்ட திட்டு வாங்கிட்டு உக்காந்திருக்கான்...

நான்: எங்கப்பா கூட இப்டி தான் தாத்தா, சின்ன வயசுல நான் பென்சில தொலச்சா, உன் shirt button ல கட்டி தொங்க விட்டுருவேன்னு பயமுருத்துவாரு…

தாத்தா: ஹா ஹா ஹா ஹா ஹா….(தாத்தா பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு)

நான்: என்ன தாத்தா ஆச்சு?

தாத்தா: நான் அதயே தான் உங்கப்பாவுக்கு செஞ்சேன்…9th ஸ்டேண்டர்ட் படிக்கும் போது, pen அ நூல்ல கட்டி, shirt button ல தொங்கவிட்டும் கூட அந்த pen அ தொலச்சுட்டு வந்துட்டாரு உங்க அப்பா…

நான்: ?!?!? [அடச்சே…இது இவ்ளோ லேட்டா தெரிய வருதே :-( ]

Tuesday, July 1, 2008

'ட்டு' கட்டி ஒரு கதை...

நட்டு சிட்டு இவங்க ரெண்டு பெரும் ஒரே செட்டு. சேட்டு கடைல வேல பாத்துட்டு இருந்தான் நட்டு, எட்டு ஊரையும் வெட்டியா சுத்தி வந்துட்டு இருந்தான் சிட்டு. ஒருநாள் இவங்க ரெண்டு பெரும் வெளையாடிட்டு இருந்தாங்க கிரிக்கட்டு. அப்பன்னு பாத்து அவங்க பால் ஓடிடுச்சு அவங்கள விட்டு. ஆனாலும் ரெண்டு பேரும் ஓடி ஓடி ரன் எடுத்துட்டு இருந்தாங்க பால விட்டு. அப்ப அந்த வழியா போன பொண்ணு பொட்டு பாத்தா அந்த பால தொட்டு. பொட்ட பாத்தவுடனே,ரெண்டு பேருமே அவள அடிச்சாங்க சைட்டு. அதனால நம்ம நட்டு, சிட்டு செட்டுக்கு வந்தது வேட்டு. வெட்டு, குத்து நடக்காத குறை தான்...ஆனா பொட்டுக்கு புடிச்சது என்னமோ நட்ட தான். அதனால நட்டும் சிட்டும் பிரிஞ்சு, நட்டும் பொட்டும் சேந்துட்டாங்க. "நட்டு! சட்டு புட்டுன்னு பொட்டு கழுத்துல தாலிய கட்டு...இல்லன்னா தட்டுவேன் தட்டு" ன்னு நட்டோட அப்பா கிட்டு சொன்னதால அவங்க கல்யாணம் ஆச்சு. இதனால மனசு கெட்டு போன சிட்டு, தற்கொல பண்ணிக்க போனான் பயத்த விட்டு. அப்ப அந்த வழியா போன சாமியார் பட்டு, "ஏன்டா சாகுற?" ன்னு சிட்டு தலைல லொட்டுன்னு வச்சாரு ஒரு கொட்டு. சிட்டு அவன் கதைய சொல்லவும், "ஏன்டா? அந்த நட்டுக்கு ஒரு பொட்டு கிடச்சா, உனக்கு ஒரு மொட்டு கிடக்காதாடா?" ன்னு சொன்னாரு. சாமியார் பட்டு சொன்னத கேட்டு, சிட்டு மனசுல ஒரு சொட்டு நம்பிக்க வந்துச்சு. சாமியார் பட்டு சொன்ன மாதிரியே ஒரு மொட்ட பாத்தான் சிட்டு, உடனே சிட்டும் மொட்டும் போனாங்க ஒரு டேட்டு. அப்பறம் சிட்டும் மொட்டும் கல்யாணம் கட்டி சந்தோஷமா வாழ்ந்தாங்க. சிட்டுக்கும் மொட்டுக்கும் பொறந்த கொழந்த பேரு லட்டு. அதே மாதிரி, நட்டுக்கும் பொட்டுக்கும் பொறந்த கொழந்த புட்டு. கடசில சிட்டு, மொட்டு, லட்டு...அப்பறம் நட்டு, பொட்டு, புட்டு எல்லாரும் சந்தோஷமா வாழ்தாங்க.

அப்புறம் கடசியா ஒன்னு. ..

இத படிச்சவங்க ஒரு மட்டு....இப்ப ஒடஞ்சுதா உங்க குட்டு? ஹய்யோ, என்ன வெட்டீராதீங்க வெட்டு...இது சும்மா ஒரு விட்டு...இதுக்கு நீங்க எல்லாரும் போடணும் ஒட்டு/கமெண்டு...