Tuesday, July 8, 2008

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் - Part 2

சீன் 1: அன்று - 1990
அப்பா: சொல்லு,பென்சில வச்சு எழுதிட்டு இருந்த...அப்புறம் பாக்ஸ்ல போட்ட...நடுல எப்டி கானம போச்சு?

நான்: ?!?!? (ஜோதிகா பாக்கற மாதிரி ஒரு கீழ இருந்து ஒரு பார்வை பாத்துட்டு, திறு திறு ன்னு முழிச்சிட்டு நிக்கறத தவிர வேற ஒன்னும் பண்ணல)

அப்பா: 2nd ஸ்டேண்டர்ட் வந்துட்ட, இன்னும் L.K.G கொழந்த மாதிரி பென்சில தொலச்சிட்டு இருக்க…

நான்: ?!?!?! (அதே திறு திறு தான்)

அப்பா: இது தான் கடசி தடவை, இனிமே பென்சில தொலைச்ச….பென்சில ஒரு நூல்ல கட்டி, உன் shirt button ல கட்டி தொங்க விட்டுருவேன்…ஆமா!!!

சீன் 2: அன்று
அப்பா: Lunch bag எங்க?????
நான்: ?!?!?!

சீன் 3: அன்று
அப்பா: geometry box எங்க?????
நான்: ?!?!?!

சீன் infinity: அன்று
அப்பா: Calculator எங்க?????
நான்: ?!?!?!

****************************************************

சீன் 1: இன்று
நான்: தம்பி ஏன் தாத்தா ஒரு மாதிரியா இருக்கான்?

தாத்தா: பாக்ஸ தொலச்சிட்டு, உங்க சித்தப்பா கிட்ட திட்டு வாங்கிட்டு உக்காந்திருக்கான்...

நான்: எங்கப்பா கூட இப்டி தான் தாத்தா, சின்ன வயசுல நான் பென்சில தொலச்சா, உன் shirt button ல கட்டி தொங்க விட்டுருவேன்னு பயமுருத்துவாரு…

தாத்தா: ஹா ஹா ஹா ஹா ஹா….(தாத்தா பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு)

நான்: என்ன தாத்தா ஆச்சு?

தாத்தா: நான் அதயே தான் உங்கப்பாவுக்கு செஞ்சேன்…9th ஸ்டேண்டர்ட் படிக்கும் போது, pen அ நூல்ல கட்டி, shirt button ல தொங்கவிட்டும் கூட அந்த pen அ தொலச்சுட்டு வந்துட்டாரு உங்க அப்பா…

நான்: ?!?!? [அடச்சே…இது இவ்ளோ லேட்டா தெரிய வருதே :-( ]

18 comments:

Smriti said...

Pottu Thaakku contd aa ??
PLease Convey my hearty condolences to Mr.Raghupathy. Vida matten nu kizhi kizhi nu kizhikkara ....

Anonymous said...

"Enna Koduma (Ragupathy) sir..."
Eippadee oru ponna unaguluku?
unga manatha Blog poo2 vangaralay....

Ramya Ramani said...

ஹா ஹா ஹா... இதெல்லாம் ஸ்கூல் படிச்ச(???) காலத்துல சகஜம் தானே...:))

Ramya Ramani said...

Thanks for blogrolling :))

Raghav said...

திவ்யமான பதிவுகள் திவ்யபிரியா, தற்போது தான் கவனிக்கிறேன், அனைத்து பதிவுகளையும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன். "மார்கழி திங்கள்" பதிவுகள் அருமை.

Shiva.G said...

10years later -2020
kutti DP : ammaaa.. nethu, home work sollikuduthiye pencil enga vecha?? sollikuduthuttu box la potta.. approm enga odippochu??
DP : ?!?!?!
kutti DP : amma.. lunch box la lunch pottiyaa?? suththam.. innikum velila poi saapadren.
DP : ?!?!?!
kutti DP : ammaa.. ennoda school idhilla maa, innum 10 miles approm. Olunga naane schoolukku poikkurennu sonnen.. kekkariyaa nee..
DP : ?!?!?!
kutti DP: ammaaa.. paal kanukku poda ennoda calc eduthiye enga vechu tholachaa??
DP : ?!?!?!
kutti DP : i want to meet thaathaa.. wer is Mr. Raghupathi.. enna ponna valathu vechurukaar.. appaa.. eppdi paa idha kalyaanam pannitta??
DP : ?!?!?!

moral : no matter wat yr it is.. i guess u ll always be like "?!?!?!"

ps: total damage ku mannikavum nu eludhalaamnu paathen .. but.. mnnn .. i am not even sorry abt it ;)

haahaahaaaaa :D

Shiva.G said...

btw.. forgot to comment on ur post
- nice work :)

Divya said...

ஸ்கூல் டேய்ஸ் ஞாபகப்படுத்திட்டீங்க திவ்யாப்ரியா:))

திவ்யா...தாத்தா கூட பேசின டயலாக்ஸ்க்கு நடுவில ஒரு லைன் இடைவெளி விட்டா...படிக்க ஈஸியா இருக்கும்;

Vijay said...

உங்களுடைய பதிப்புக்கு ஒரு continuity :)
அப்பா: இவ்வளவு விலை கொடுத்து மொபைல் ஃபோன் வாங்காதேன்னு சொன்னேனே கேட்டியா. பாரு வாங்கி ரெண்டே மாசத்துல தொலைச்சிட்டு வந்து நிக்கறியே.

நான்: மரியாதை முழி (அதான் திரு திரு வென்று)

அப்பா: என்னது லேப் டாப்பக் காணோமா?

நான்: ...

Smriti said...

Shiva.. your comments were just simply awesome ! Sirippa Nirutha muduile :)) ROTFL :))
Im jus waiting for the day to watch kuttiDP react like this ... hee hee....

Divyapriya said...

//Ramya Ramani said...

Thanks for blogrolling :))//

My pleasure :-)

----------------------------

// Raghavan said...

திவ்யமான பதிவுகள் திவ்யபிரியா, தற்போது தான் கவனிக்கிறேன், அனைத்து பதிவுகளையும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன். "மார்கழி திங்கள்" பதிவுகள் அருமை.//

thank you so much...மீண்டும் வாங்க...மார்கழி திங்கள் போடரதுக்காக தான் முக்கியாமா blog ஆரம்பிச்சதே...30 நாட்களும் போடலாம்னு தான் ஆசப்பட்டேன்...ஆனா கற்பனை குதிரை அதுக்கு மேல ஒடல :-))

Divyapriya said...

//Smriti said...
Pottu Thaakku contd aa ??
PLease Convey my hearty condolences to Mr.Raghupathy. Vida matten nu kizhi kizhi nu kizhikkara ....

Senthilkumaran said...
"Enna Koduma (Ragupathy) sir..."
Eippadee oru ponna unaguluku?
unga manatha Blog poo2 vangaralay....//

எங்கப்பா கிட்ட permission வாங்கிட்டு தான் போட்ருக்கேன்…அவரு இதுக்கெல்லாம் feel பண்ண மாட்டாரு :-)) infact என்கிட்ட royalty கூட கேட்டாரு :-)
------------------------------
//Ramya Ramani said...
ஹா ஹா ஹா... இதெல்லாம் ஸ்கூல் படிச்ச(???) காலத்துல சகஜம் தானே...:))//

"ஸ்கூல் படிச்ச(???) " - ஹா ஹா ஹா…இது வாஸ்தவமான பேச்சு…
---------------------------------

"//Divya said...
ஸ்கூல் டேய்ஸ் ஞாபகப்படுத்திட்டீங்க திவ்யாப்ரியா:))

திவ்யா...தாத்தா கூட பேசின டயலாக்ஸ்க்கு நடுவில ஒரு லைன் இடைவெளி விட்டா...படிக்க ஈஸியா இருக்கும்;//"

thanks திவ்யா…
changes done :-)

---------------------------------
//விஜய் said...
உங்களுடைய பதிப்புக்கு ஒரு continuity :)//

விஜய், இது ரெண்டும் தான் இன்னும் நடக்கல…நடந்துச்சு…உங்கள தேடி வந்து அடிக்கறேன் :-))
------------------------------
//Shiva.G said...
10years later -2020//

இத நீ என்கிட்ட தனியா சொல்லி இருக்கலாம் ஷிவா…இத நானே கொஞ்சம் modify பண்ணி ஒரு postaa போட்ருப்பேன் :-) (இதுக்கெல்லாம் நாங்க அசர மாட்டோம்ல ;-) )
but I shld say its really ROTFL comment…hmm, enga class pasanga kaathu unkittayum adikkudhu :-(

Shiva.G said...

@Smriti
ThankQ ThnakQ.. Adhennamo therilla, damage pannanumna mattum moola summa gummmnu vela siyudhu..
btw.. Hiii .. nice to meet u here.. ve heard lots (not exactly, summa ella solluvaangale.. adhumaari) abt u frm DP.. keep in touch (shiva.vijay@gmail.com) .. kooda sendhu kuzhi parikkaradhula kedakkara inbame thani .. hope u ll join me in kuli parichufying.. ;)

Raghav said...

திரும்ப வந்துட்டோம்ல.
//30 நாட்களும் போடலாம்னு தான் ஆசப்பட்டேன்...ஆனா கற்பனை குதிரை அதுக்கு மேல ஒடல :-))
//

விரிந்த சிறகுகள் உள்ள நீங்களே இப்புடி சொன்னா எப்புடி?. மார்கழி திங்கள், மா.உ.பொ.கொ அனைத்தும் அட்டகாசம். எல்லாத்தையும் படிச்சாச்சு.
நல்ல எழுத்து நடை, வளம், குறும்பு அனைத்தும் உள்ளது.

அழகிய வாழ்த்துகள் திவ்யபிரியா !!

Anonymous said...

ஆஹா..
என்ன இது..? இதெல்லாம் தலைமுறை தலைமுறையா இடைவெளியே இல்லாம வர்ற பழக்கங்கள்... பென்சில் தொலைக்கறது... பேனா தொலைக்கறது.

ஆனாலும் உங்க தாத்தா உங்க அப்பாவை பத்தி இப்போ போட்டு குடுத்திருக்க வேணாம்..

கலக்கல்ஸ்..

Smriti said...

@Shiva..
DP blog konjam multipurpose aa poitrikku nu nenaikakren... Blog comments moolama ipdi oru intro. adhuvum kumbal pottu kooda sendhu avalukku kuzhi parikkardhukku avaloda blog comments laye planning.... hee hee...

Div ippidiyum comments count increase pannikkalaam :P
And Div.. nee oruthar oruthar comments kum thani thaniyaa reply pannirundha na nee asa patta madiri innum comments count jaasthi aagirukkum :P So consider this idea :P

Divyapriya said...

//@Shiva.G said - hope u ll join me in kuli parichufying//

Yen indha kolaveri ;-) ???

------------------------

//@Raghavan said - நல்ல எழுத்து நடை, வளம், குறும்பு அனைத்தும் உள்ளது.
அழகிய வாழ்த்துகள் திவ்யபிரியா !! //

வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி ராகவன்...தொடர்ந்து வாங்க...

--------------------------
//@மதி said - ஆனாலும் உங்க தாத்தா உங்க அப்பாவை பத்தி இப்போ போட்டு குடுத்திருக்க வேணாம்..//

எங்க தாத்தா பண்ணத copy அடிச்சா இப்டி தான் :-))
------------------------
//@smitri...na nee asa patta madiri innum comments count jaasthi aagirukkum //

நான் ஆசை படரது எல்லாம், எல்லோரும் என் bloga படிக்கனும்ன்னு தான்...comments மூலமா தான் அத தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு...என்ன பண்ண?

------------------------

ஜி said...

//சீன் 3: அன்று
அப்பா: geometry box எங்க?????
நான்: ?!?!?!

சீன் infinity: அன்று
அப்பா: Calculator எங்க?????
நான்: ?!?!?!
//

second standardlaiye neenga calculatorlaam use panna aarambitchiteengala... romba arivaalithaan ;))