Thursday, November 12, 2009
My mommy is a sport :))
Wednesday, May 27, 2009
Book Tag
வழக்கம் போல கில்ஸ் நம்மள tag பண்ணிட்டாரு…
One book that changed my life:
அப்படி எல்லாம் ஒரு புக்கும் இல்லை…ஆனா, ரொம்ப தாக்கத்த ஏற்படுத்தின, இல்லை அதிகமா discuss பண்ணின books ன்னா, பொன்னியின் செல்வன், harry potter. மணிக்கணக்கா, இடம் பொருள் ஏவல் மறந்து harry potter பத்தி நானும் ஒரு சில நண்பர்களும் discuss பண்ணுவோம்…
The book you have read more than once:
Mostly எல்லா புக்குகளுமே பிடிச்சு போய்ட்டா, கணக்கே இல்லாம படிக்கறது வழக்கம்…பொன்னியின் செல்வன் ஒரு மூணு இல்ல நாலு தடவை. மத்த கல்கி புக்ஸ் எல்லாம் ரெண்டு தடவை, Harry potter ஒரு மூணு தடவை.
kane and abel/ the prodigal daughter – ரெண்டு தடவை, அதிலையும் இந்த ரெண்டு புக்லையும், வேற வேற point of view ல வர similar part of the story ய, எத்தனையோ தடவை படிச்சிருக்கேன்.
அப்புறம் நான் எழுதின கதை எல்லாம், (அத publish பண்ணிட்டு இருக்கும் போது) – ஒரு பத்து தடவையாவது படிச்சிருவேன்…
One book you would want on dessert island:
harry potter இருந்தா போதும்…எப்படியும் ஏழாவது புக் முடிச்சிட்டு, முதல் புக் மறுபடியும் உடனே ஆரம்பிச்சா கூட thrilling ஆ தான் இருக்கும்…
One book that made you laugh:
எல்லா பதிலையுமே harry potter ன்னு போட வேண்டியதா இருக்கு…நான் என்ன பண்றது? :)
One book that made me cry:
Not one book, so many books...
1. கில்ஸ் மாதிரியே நானும் அழுதது சிவகாமியின் சபதம் கடைசியில தான்…அந்த புக்ல கடைசி பக்கம் வேற ஓரத்துல கொஞ்சம் கிழிஞ்சிருந்தது…அப்படியும் அத படிக்கும் போது, கண்ணுல நிக்காம தண்ணி வந்துட்டே இருந்தது….ஆனா அந்த சிவகாமி மட்டும் கையில கிடைச்சிருந்தா, அப்பவே அவள நாலு அறை விடலாம் போல கோவமா இருந்துச்சு :)
2. அப்புறம் harry potter, last part ல, snape சாகும் போது harry கிட்ட, “look in to my eyes” ன்னு சொல்லுவாரு…அத மறுபடியும், மறுபடியும் படிச்சு படிச்சு அழுதேன்…
3. நா.பார்த்தசாரதி எழுதின பாண்டிமாதேவின்னு ஒரு புக் – படிச்சு முடிச்சுட்டு, ஹய்யோ இத 300 ரூபாய் குடுத்து வாங்கிடமேன்னு அழுதேன் :) என்ன பண்றது, கதைக்காக வேங்கி நாட்டு சரித்தரத்த மாத்த முடியாதே!
One book you wish you had written:
பாலங்கள் – சிவசங்கரி எழுதினது…1980s ல எழுதியிருப்பாங்கன்னு நினைக்கறேன்…1901 ல இருந்து 2000 வரைக்கும் பல தலைமுறை (பிராமண) பெண்களோட கதை, பிறப்பிலிருந்து இறப்பு வரை நடக்கற எல்லா சடங்கு, சம்பிரதாயங்களும் ஒவ்வொரு காலகட்டதிலையும் எப்படி நடந்துச்சுன்னு அப்படியே தத்ரூபமா எழுதியிருப்பாங்க..பக்கத்துல இருந்து பாக்குற ஒரு effect இருக்கும்…மேலோட்டமா பாத்தா, சும்மா life history மாதிரி, கதையே பெருசா இல்லாத மாதிரி இருக்கும்….ஆனா, அதுக்கு அவங்க எவ்ளோ research பண்ணியிருப்பாங்கன்னு நினைச்சா ரொம்பவே ஆச்சர்யமா இருக்கும்….
One book that you wish had never been written:
college books.. specific ah numerical methods, telecommunication books.
One book you are currently reading:
Time to kill – john grisham
One book you have been meaning to read:
சுஜாதா புக்ஸ் தான் அடுத்து படிக்கலாம்னு இருக்கேன்…
One book you’ll recommend
இந்த question நானா சேத்தது…
நா. பார்த்தசாரதி எழுதின குறிஞ்சி மலர்…link இதோ…
இந்த புக் பத்தி சொல்லனும்ன்னா, கொஞ்சம் இல்லை, ரொம்பவே மொக்கையா இருக்கும்…மெதுவா போகும், நடுவில பயங்கரமா போர் அடிக்கும்…ஆனா, நிறைய நல்ல நல்ல கருத்துக்கள சொல்ற சமுதாய நாவல். 1980s ல மதுரை ல நடக்கற கதை…ஒரு தடவைக்கு மேல படிக்கறது கொஞ்சம் கஷ்டம் தான்…ஆனா, கண்டிப்பா ஒரு தடவையாவது படிக்க வேண்டிய புத்தகம்…
யாரை மாட்டி விடலாம்? Blog template லயே நிறைய புக்கெல்லாம் அடுக்கி வச்சிருக்காரு, அவரை விட்டுட்டு வேற யார tag பண்றது?
அப்புறம், g3 – இது ஏன்னா நான் g3 ய இது வரைக்கும் tag பண்ணதேயில்லை…அதான் :)
Wednesday, May 6, 2009
சுயபுராணம்!
முதல்ல என்னை பத்தி…
1. எப்ப பாரும் தேவையில்லாம கெக்க பெக்கன்னு சிரிக்கறது, ஓயாம பேசுறது, நல்லா ரத்தம் வர அளவுக்கு மொக்கை போடுறது, பாரபட்சமில்லாம பல பல்புகள வாரி வழங்கறது/வாங்கிக்கறது – இப்படிபட்ட விஷயங்கள் நிறஞ்சது தான் என் அன்றாட வாழ்க்கை.
2. அப்துல் கலாம் சொல்றதுக்கு முன்னாடி இருந்தே, பல நேரம் (போர் அடிக்கறப்பெல்லாம்) கனவுகள்ல மிதக்கறது என் வழக்கம். இப்படி பகல் கனவுல தோணுறது தான் என்னோட பெரும்பாலான கதைகள். சூர்யகாந்தி கதை, ஸ்கூல் படிக்கும் போது தோணின கதை தான், அப்பெல்லாம் நான் இப்படி கதை எல்லாம் எழுதுவேன்னு நினைச்சது கூட கிடையாது.
3. கதை எழுதற மாதிரியே, எனக்கு கதை படிக்கவும் ரொம்ப பிடிக்கும்…ஒன்னாவது, ரெண்டாவதுல படிக்க ஆரம்பிச்சு, இன்னும் கதை மட்டும் (பெரும்பாலும்) தான் படிச்சிகிட்டு இருக்கேன், வளரவே இல்லை :)
4. எனக்கு இந்த childish pranks எல்லாம் கொஞ்சம் இல்லை, ரொம்பவே பிடிக்கும்…உதாரணத்துக்கு, வீட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம நுழைஞ்சி, உள்ள இருக்குறவங்க பயப்பட மாட்டாங்கன்னு தெரிஞ்சும், அவங்க பின்னாடி போய் நின்னு ’ப்பே’ ன்னு சத்தமா கத்துறது, சும்மா நடந்து போகும் போது, உக்காந்திருக்கவங்க காதுக்குள்ள, “கூ…க்க்கூ….” ன்னு காட்டு கத்தல் கத்துறது…இப்படி பல…
5. அப்புறம் நான் ஒரளவுக்கு ராக்கோழி, காலையில எந்திரிக்கறதுன்னா ரொம்ப கஷ்டம், ஆனா நைட்டு எத்தனை நேரம் வேணா முழிச்சிருப்பேன்.
6. கில்ஸ் சொல்லியிருந்தாரு, அவரால ரெண்டு நேர் கோடுகள வரைய முடியாதாம், அத படிச்சவுடனே எனக்கு இது தான் நினைவுக்கு வந்தது, என்னால சரியா ஒரு நேர் கோட்டுல நடக்க முடியாது :) பசங்க மாதிரி நடக்கறேன், ரெளடி மாதிரி நடக்கறேன், இப்படி பல பாராட்டுகள் கிடைக்கும் என் அன்ன சாரி வாத்து நடைக்கு…
7. பொதுவா எல்லா வேலையும் வேக வேகமா செய்வேன்…பதறிய காரியம் சிதறிப் போகும்னு சொல்லுவாங்களே, அதுக்கு நல்ல உதாரணமா என்னை சொல்லலாம். வேகமா நடந்து இல்லைன்னா ஓடி, வழுக்கி விழுகறது, எதுலையாவது இடிச்சுக்கறது, இப்படி பல…ஆனா, என்னவோ தெரியல, இப்ப கொஞ்ச நாளாவே, எல்லா விஷயத்திலையும் ஒரு நிதானம் (இல்ல மந்தமா?) ஏதோ ஒன்னு…வயசு ஆயிடுச்சுன்னு நினைக்கறேன் :)
நாமகரணங்கள் (Self damage!)
8. எனக்கு நானே வச்சிகிட்டா, இந்த பேரெல்லாம் வச்சுக்குவேன்
வாயாடி/ஓட்டை வாய்/ அவசர குடுக்கி/ fm radio
9. என் நண்பர்கள் மற்றும் குடும்பம் எனக்கு சூட்டிய செல்ல பெயர்கள்
Water bottle/ தினதந்தி/ ராவல்பிண்டி express/ பத்மனாபா/ மொக்கைராணி
10. திவ்யபிரியா aka பத்து
no. 10 மாதிரி படிச்சிடாதீங்க…bathu, இது தான் pronunciation – இது தான் என் வீட்டு பேர், திவ்யபிரியா காட்டு பேர் தான் ;)
நான் பிறக்கும் போது, எங்க அக்காவுக்கு ரெண்டு வயசு, அவ எங்கயோ கேட்டுட்டு வந்து, என்னை பத்துன்னு கூப்பிட இந்த பேரே நிலைச்சு போய்டுச்சு…நான் பாய் கட் அடிச்சிருந்த போது, அதை மாத்தி, நண்பர்கள் எல்லாம் எனக்கு பத்மனாபான்னு பேரு வச்சுட்டாங்க :(
பிசிராந்தையார் வகை நட்பு வட்டங்கள்
11. ப்ளாகர் நண்பர்கள்
தனிமையை கொல்றதுக்காக கதை எழுத ஆரம்பிச்சு, அப்புறம் ப்ளாக் தொடங்கி, கதை எல்லாம் அதுல போட ஆரம்பிச்சு, மெதுவா நிறைய முகம் தெரியாத நண்பர்கள இந்த ரெண்டு வருஷத்துல சம்பாதிச்சாச்சு. இப்பெல்லாம் ஆர்குட்லையும், ஜி-மெயில்லையும் ப்ளாக் நண்பர்களோட தான் பெரும்பாலான உரையாடல்கள் நடக்குது, அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம பின்னூட்ட கும்மிகள்…நினைச்சு பாத்தா ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. ஆனா இதுவும் ரொம்ப நல்லா தான் இருக்கு :)
12. ஹீரோ சார்
எனக்கு ஒரு friend, U.S ல இருக்கறதால, நாங்க அதிகமா ஃபோன்லையோ, நேர்லையோ பாத்து பேசுக்கறதில்லை, பெரும்பாலும் மெயில்லையும், எப்பவாவது chat லையும் தான்…ஆனா, எத்தன நாள் கழிச்சு, random ஆ எந்த விஷயத்தை பத்தி பேசினாலும் continuity மட்டும் miss ஆகவே ஆகாது…
என் சந்தோஷங்கள பகிர்ந்துக்குற நல்ல இதயம்,
என் புலம்பல்கள பொறுமையா கேக்குற பாவப்பட்ட காதுகள்,
நான் என்ன ஜோக் அடிச்சாலும், ‘மொக்கைய போடாதீங்க சார்’ ன்னு உடனே வர்ற நக்கல் கமெண்ட், என் நீண்டகால stress buster…
இதெல்லாம் தான் ஷிவா…
ஷிவா! என் புலம்பல்களுக்கெல்லாம், காரணமே சரியா தெரியாட்டி கூட, எனக்கு எத்தனையோ solutions குடுத்திருக்க! And u know wat? Most of ur solutions did workout for me da…thanks நண்பா!
அதென்ன ஹீரோ சார் ன்னு யாரும் யோசிக்கறீங்களா? நண்பனோட அருமை பெருமையெல்லாம் சொல்லிட்டு, இத சொல்லாட்டா எப்படி? இந்த கதையோட ஹிரோ இவர் தான்….shiva sir, I know u won’t mind…ஏன்னா, நீங்க ரொம்ப நல்லவர் சார் ;)
சரி, 12 ஆச்சு…இதுக்கு மேல முடியாது…நம்ம கதைலையே கவிதை போட்டு மொக்கை போடறோம், இது போடாட்டா எப்படி? எண்ணிப் பாத்துக்கோங்க…இதுல 13 வரி இருக்கு….
கனவுகளில் சஞ்சரிக்கப் பிடிக்கும்,
அன்றே கோபங்களை மறக்கப் பிடிக்கும்,
என்றும் சந்தோஷத்தில் திளைக்கப் பிடிக்கும்…
சிரிப்பொலிகள் நிரம்பிய பகல்களும்,
பேச்சொலிகள் நிரம்பிய இரவுகளும்,
நித்திரையில் சயனிக்கும் மதிய வேளைகளும்,
தனிமை தோய்ந்த மாலை பொழுதுகளும் பிடிக்கும்…
சின்ன சின்ன செல்ல சண்டைகளும்,
சிறுபிள்ளைத் தனமான குறும்புகளும்,
சினுங்கள்களும், சீண்டல்களும் பிடிக்கும்…
கவிதைகள் சூடிய கதைகள் பிடிக்கும்,
கதைகள் நிறைந்த கனவுகள் பிடிக்கும்,
கனவுகள் முளைக்கும் தூக்கம் பிடிக்கும்…
இதோட போதும், இதுக்கும் மேல போனா, படிக்கறவங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் :-)
சரி, யாரை மாட்டி விடறது? வேற யாரு, நம்ம வானிலை அறிக்கை வாசிப்பாளர் தான்…’தல’ ஜியா. (ஜி! உங்க பதிவுல பின்னூட்டத்துக்கு reply பண்ணலைன்னா, tag பண்ணிருவேன்னு தான் சொன்னேன், ஆனா reply பண்ணீங்கன்னா, tag பண்ண மாட்டேன்னு சொல்லவே இல்லையே ;))
Wednesday, March 4, 2009
அசிங்கப்பட்டான்டா ஆட்டோகாரன்!
சில மாதங்களுக்கு முன்…ஒரு நாள்….
நான் ஆபிஸ்ல இருந்து ஆட்டோவில வந்துட்டு இருந்தேன். வழக்கம் போல எங்க வீட்டு பக்கத்துல இருக்க சிக்னல்ல வெய்டிங். பெங்களூரின் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட சிவப்பு சிக்னல் பச்சையாகி, ஆட்டோ சிக்னல் பக்கத்துல போறதுக்குள்ள, மீண்டும் சிகப்பு! அந்த சிக்னல்ல இருந்து ஒரு u turn அடிச்சு, ஒரு நிமிஷம் நடந்தா எங்க வீடே வந்துடும்…சரி, மூனு நிமிஷம் இந்த சிக்னல்ல இருக்கறதுக்கு பதிலா, நடந்தே போய்டுலாம்னு நானும் ஆட்டோவ விட்டு இறங்கிட்டேன். மீட்டர்ல 21 ரூபாய். முப்பது ரூபாய எடுத்துக் கொடுத்துட்டேன். ஆனா, ஆட்டோகாரர் பாக்கி சில்லறைய திருப்பிக் குடுக்கல.
நான்: Change?
ஆட்டோகாரர்: அதெல்லாம் கிடையாது…பாதியிலேயே இறங்கிட்டீங்க…
நான்: என்னது? வீடு பக்கத்துல இறங்காம, இங்க மெயின் ரோட்லையே இறங்கிட்டேன்…உங்களுக்கு தான் அது நல்லது.
ஆ.கா: அதெல்லாம் எனக்கு தெரியாது மா…
நான்: வீடு வரைக்கும் போனாலும், இன்னும் ஒரு ரூபா தான் அதிகமாகும். change அ குடுங்க!
ஆ.கா: என்கிட்ட change இல்ல…
உடனே நான் மறுபடியும் ஆட்டோக்குள்ள ஏறி உக்காந்துட்டேன்.
ஆ.கா: என்ன?
நான்: சரி, சரி, நான் இங்க இறங்கல…நீங்க போங்க….
ஆ.கா: எங்க?
நான்: நான் ரூட் சொல்றேன்…போங்க…
ஆ.கா: எங்க இறங்கப் போறீங்கன்னு கேட்டேன்?
நான்: மீட்டர்ல முப்பது ரூபா ஆகட்டும், அங்க இறங்கிக்கறேன்!!!
ஆ.கா: ?!?!?
நான்: -----
ஆ.கா: இறங்குமா…இந்தா change...
****
இது நேத்திக்கு நடந்தது.
நாங்கெல்லாம் கடைக்கு போய்ட்டு ஆட்டோ பிடிக்க நின்னுட்டு இருந்தோம். வழக்கம் போல எல்லாரும் நாப்பது, ஐம்பதுன்னு ஜோக் அடிச்சனால, நாங்களும் கொஞ்ச நேரம் நின்னு, ஒரு வழியா ஒரு ஆட்டோவுக்குள்ள ஏறினோம். கொஞ்ச தூரம் போனப்புறம்,
ஆ.கா: 1 and half குடுத்துடுங்க…
நாங்க: என்னது? மணி 9.30 தான ஆச்சு?
ஆ.கா: அதெல்லாம் இல்ல, மணி பத்தாச்சு!
நாங்க: மூனு பேரும் வாட்ச் கட்டியிருக்கோங்க! மணி 9.30 தான் ஆச்சு…
ஆ.கா: உங்க வாட்செல்லாம் தப்பா காட்டுது…
நாங்க (மனசுக்குள்ள) : இவன் ரொம்ப பேசுறான்!!!
மறுபடியும் அதே சிக்னல், அதே u turn. ஆட்டோ சிக்னல்ல வெய்ட்டிங்.
நான்: இங்க u turn பண்ணுங்க...
ஆ.கா: என்னது u turn ஆ?
நான்: ஆமா…
ஆ.கா சலித்துக் கொள்வதை பார்த்து, என் ஃப்ரெண்ட், “பேசாம இங்கயே இறங்கிடலாம்…தேவையில்லாம ஆ.கா ஒரு ’பா’ அடிச்சு சுத்தினா தான் மறுபடியும் மெயின் ரோடு போக முடியும்”
நான்: பரவால்லை…ரொம்ப பேசுறவங்களும், இது நல்லா வேணும்! மீட்டர்ல கரெக்ட்டா ரெண்டு கிலோமீட்டர் காட்டட்டும், அப்ப இறங்கிக்கலாம்.
ஆ.கா: இங்கயே இறங்கி நடந்துபோய்டுங்க!
நான்: மணி பத்தாச்சு! எப்படி நடந்துபோறது? பஸ் ஸ்டாப்ல இருந்து நடக்கற மாதிரி இருந்துருந்தா நாங்க பஸ்லையே போயிருப்போமே? எதுக்கு ஆட்டோவுல வரணும்? மணி வேற பத்தாச்சு!
ஆ.கா அமைதியா u turn அடிச்சு, எங்க மெயினுக்குள்ள நுழைஞ்சாரு. மீட்டர்ல ரெண்டு கிலோமீட்டர் ஆனதுமே,
நாங்க: stop மாடி, stop மாடி!!!
ஆ.கா வுக்கு சரியா 14+7 ரூபாய் குடுத்துட்டு, நாங்க நாலு தெரு தள்ளியிருக்கற எங்க வீட்டுக்கு ஜாலியா நடக்க ஆரம்பிச்சுட்டோம்.
ஃப்ரெண்ட்: பேசாம இந்த தெருவுக்குள்ளையே நுழைஞ்சிடலாம். ஆ.கா வேற ஆட்டோவ எடுக்காம நின்னு, நாம எங்க போறோம்னே பாத்துகிட்டே இருக்கான்.
நாங்க: நல்லா பாக்கட்டும்!!! அசிங்கப்பட்டான்டா ஆட்டோகாரன்!
***
இதுவும் ஒரு சில மாதங்களுக்கு முன்…
ஊர்ல இருந்து திரும்பி வந்து, கண்டோன்மெண்ட்ல இறங்கி prepaid ஆட்டோவில வரும் போது நடந்தது. ஆனா, நான் எதுவும் செய்யாமலே ஆட்டோகாரர் தன்னால அசிங்கபட்டுகிட்டார் பாவம் :)
ஆ.கா: 120 ரூபா குடுத்துடுங்க…
நான்: என்னது? 85 ரூபா தான போட்டுருக்கு?
ஆ.கா: prepaid ல எல்லாம் எப்பயுமே கம்மியா தான் போடுங்க…
நான்: நானும் நிறைய வருஷமா வந்துட்டு தாங்க இருக்கேன். இப்ப வெள்ளிகிழமை வரும் போது கூட 75 ரூபா தான் ஆச்சு…
ஆ.கா: சரி, அப்ப 110 ரூபாயாவது குடுங்க…
நான்: அதெல்லாம் முடியாது, இப்படி 110, 120 குடிக்கற மாதிரி இருந்தா, எதுக்காக இத்தன நேரம் prepaid queue ல நின்னு ஆட்டோ பிடிக்கனும்? நேராவே வந்துருப்பேனே?
ஆ.கா: 110 குடுக்கலாம்…குடுங்க…
நான்: எதுவும் பேசாதீங்க…பேசாம ஓட்டுங்க (ஏன்னா இப்ப மேல சொன்ன உரையாடல் நடந்தது கன்னடத்துல, அதுக்கு மேல என்ன பேசறதுன்னு எனக்கு தெரியல!)
நான் ஃபோன எடுத்து, என் ரூம்மேட்டுக்கு கால் பண்ணி, மெலிதான குரல்ல, “prepaid queue ல நிறைய நேரம் நின்னு இந்த auto ல வந்தா…இவரு 120 கேக்கறாரு, என் கிட்ட கரெக்ட்டா 85 change இல்ல…100 ரூபா குடுத்தா, திருப்பி குடுக்க மாட்டாரு, அதனால நான் வீட்டு பக்கத்துல வந்ததும் கால் பண்றேன், நீ change எடுத்துட்டு கீழ வா…”
எங்க வீடும் வந்திடுச்சு. நான் இறங்கும்போது,
ஆ.கா: ரயில்வே போலிஸுக்கு கால் பண்ணிட்டீங்களா?
நான்: என்னது?!?!?! இல்லையே!
அப்புறம் என்ன? என் கிட்ட இருந்த 100 ரூபாயவே நான் குடுக்க, ஒன்னுமே சொல்லாம, மீதி பதினஞ்சு ரூபாய அவரு குடுத்துட்டு திரும்பி பாக்காம ஓடிட்டாரு :D
Tuesday, January 20, 2009
சும்மா கொஞ்சம் மொக்கை
அதோ அந்த ஏணி மீது ஏற வேண்டும்…!!!
ஒரு நாள் நான் கோவையில இருந்து பெங்களூர் வரதுக்காக, ரயில்ல ஏறினேன். வழக்கம் போல அன்னிக்கும் அப்பர் பர்த் தான். நிறைய மக்கள் இங்கிட்டும், அங்கிட்டும் அலஞ்சிகிட்டு இருந்ததால, சரி, எல்லாரும் அவங்க அவங்க இடத்துல போய் உக்காரட்டும், அப்புறமா நம்ம மேல ஏறிக்கலாம்னு நானும் நின்னுட்டு இருந்தேன்.
அப்ப தான் அதே பர்த்துல உக்காந்திருந்த நம்ம தலைவரு என்கிட்ட, “எச்சூஸ்மீ…” ன்னாரு.
நான் ’என்ன?’ ங்கற மாதிரி ஒரு லுக் மட்டும்…
எதோ திருவிழாவுல காணாம போன குழந்தை கணக்கா என்னை பாத்துட்டு “you know tamil?” ன்னாரு.
நான்,”ஹ்ம்ம்…Yeah…” (மனசுக்குள்ள: கோயம்பத்தூர்ல வந்து என்ன கேள்வி இது!!! why this peter?)
உடனே முகத்துல பல்பு எறிய, நம்ம தலைவரு, “அதோ, அந்த லேடர் மேல கால வச்சு…அப்புறமா அப்பர் பர்த்துக்கு ஏறனும்!!!”
அதிர்ச்சி, சிரிப்பு, நக்கல் விக்கல் எல்லாம் என்னை ஒரே நேரத்துல தாக்க, “yeah…” ன்னு மட்டும் சொல்லிட்டு அமைதியாட்டேன் :( (ஆனா மனசுக்குள்ள: அவனா நீ? எத்தன வருஷமா ட்ரெயின்ல வந்து போய்ட்டு இருக்கோம்? என்னை பாத்தா எப்படி தெரியுது? இவ்ளோ நேரமா உன் தலை மேல கால் வைச்சு ஏறதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னா நினச்ச? :-D)
******
ஆர்யபட்டா!!!
வழக்கம் போல தூங்கி வழிந்து கொண்டிருந்த மற்றுமொரு மதிய வேளையில், என்னோட டீம்மேட் என்கிட்ட, “திவ்யா! இந்த ஆர்யபட்டா எங்க இருக்கு?” ன்னு கேட்டா.
நானும் ஒரு நிமிஷம், இவ எதுக்கு திடீர்ன்னு இப்படி ஒரு கேள்விய கேக்குறான்னு யோசிச்சாலும், நம்ம அறிவுக்கு வந்த சவால சந்திச்சே தீருவோம்ன்னு ஒரு சபதத்தோட, “ஆர்யபட்டா ஒரு ஸாட்டிலைட், அதனால அது எங்க இருக்கும்? ஸ்பேஸ்ல தான் இருக்கும்!!!” ன்னு அந்த தூக்கத்திலையும் தெளிவா சொன்னேன்.
நான், "அவ்வ்வ்வ்வ்" :((
Sunday, January 11, 2009
அப்பாவும்/சைக்கிளும் நானும்...
அபியும் நானும் படத்துல சைக்கிள் சீன் பாக்கும் போது, எனக்குள்ளும் பல சைக்கிள் சீன் சைக்கிள் சக்கரம் சுத்தற மாதிரி ரீவைண்ட் ஆகி எல்.கே.ஜி வரைக்கும் போய் அடுத்த மொக்கைக்கும் ஒரு வழி வகுத்துருச்சு…
இனி அப்பாவும்/சைக்கிளும் நானும்…
என்னையும், அக்காவையும் சைக்கிள்ள கூட்டிட்டு போவாரு அப்பா. எனக்கு அதுல போகவே பிடிக்காது, ஏன்னா எங்கக்கா மட்டும் பின்னாடி ஜாலியா உக்காந்துட்டு வர, நான் மட்டும் முன்னாடி இருக்கற கம்பியில தான் உக்காறனும் :( இந்த சோகம் நிகழ்ந்தது எல்.கே.ஜி யில. என்னோட இந்த வருத்தத்த பரிசீலனை செஞ்சு எங்க அப்பா, அழகா குட்டியா ஒரு சீட் வாங்கி அந்த கம்பியில பொருத்தி வச்சுட்டாரு…அதுக்கப்புறம் சைக்கிள் பயணம் எல்லாம் ஒரே ஜாலி தான்…
கொஞ்சம் கால் நீளமானதுக்கப்புறம், ஆனா மூளை அவ்வளவா வளராத வயசுல சைக்கிள் முன் கம்பியில மட்டும் குழந்தைங்கள ஏத்திட்டு போகக் கூடாது! இல்லன்னா, சைக்கிள் சக்கரத்துக்குள்ள கால விட்டுகிட்டு, பின்னாளில் கனுக்கால்ல ஒரு பெரிய தளும்போட தான் அந்த குழந்தைங்க சுத்த வேண்டியது வரும்! என்ன பண்றது? இப்படி ஒரு அறிவுரைய எங்கப்பாவுக்கு அப்ப யாரும் குடுக்கல!!! இது நடந்தது ஒன்னாப்புலையா, ரெண்டாப்புலையான்னு எனக்கு சரியா ஞாபகம் இல்ல…
சரி, மூளை கொஞ்சம் வளர்ந்திருந்தாலும், அத சுத்தமா உபயோகிக்க தெரியாத குழந்தைங்களை சைக்கிள்ள பின்னாடி சீட்ல கூட ஏத்திட்டு போகக் கூடாதுன்னு எங்கப்பாவுக்கு நான் தான் சொல்லிக் குடுத்தேன் :) ஒரு நாள் சைக்கிள் பயணத்தின் போது எனக்குள்ள ஒரு விபரீத ஆசை…ஓடுற சைக்கிள்ள இருந்து ஸ்டைலா இறங்கனுங்கறது தான் அது! எங்கப்பா கிட்ட, “அப்பா! நான் இப்ப சைக்கிள்ள இருந்து இறங்க போறேன்!!!” ன்னு கூலா அனெளன்ஸ் பண்ணிட்டு, எங்கப்பா வேணாம்னு அலர்றதுக்குள்ள, கீழ குதிச்சு, கை, காலெல்லாம் வீர விழுப்புண்களை வாங்கினப்பா நான் நாலாங்கிளாஸ்…
“எம்புருஷனும் கச்சேரிக்கி போனாங்கற கதையா இருக்கு…” இப்படி ஒரு பழமொழி உண்டு எங்க ஊர்ல. இந்த மாதிரி, “திவ்யாவும் சைக்கிள் கத்துக்க போனா” ங்க கதையா, ஐஞ்சாவதுல ஆரம்பிச்சு ஏழாவது வரைக்கும் ஒவ்வொரு லீவும் சைக்கிள் கத்துக்கறேன்னு ஊர சுத்துவேன்…ஆனாலும், சைக்கிள ஒழுங்கா கத்துகிட்ட பாடில்லை, போதாக் குறைக்கு வாடகைக்கு வாங்கின சைக்கிள் எல்லாம் பஞ்சர் பண்ணதால, அந்த கடை பக்கமே போக முடியாத ஒரு அவலம் :( அப்படி இருக்கும் போது ஒரு நாள்….ஸ்கூல் முடுஞ்சு நடந்து வந்துகிட்டு இருந்தேன்…அப்ப எதிர்ல எங்கப்பா மாதிரி ஒருத்தர், கஷ்டப்பட்டு ஒரு குட்டி சைக்கிள ஓட்டிட்டு வந்துட்டு இருந்தார். பாக்கவே செம காமடியா இருந்துச்சு. யாருடா இதுன்னு பாத்தா, அப்பாவே தான்! என்னதிதுன்னு நான் திரு திருன்னு முழிக்கவும், அப்பா, “உனக்கு தான் புது சைக்கிள்!!!” ன்னு சொன்னாரு. Pink color lady bird, my first ever possession! இது நடந்தது ஏழாவதுல…
(அப்புறம் அந்த சைக்கிள வச்சிகிட்டு அடிச்ச கூத்துக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லைங்கறனால, அதெல்லாம் இதுல வேண்டாம்;) )
எல்லாத்தையும் சொல்லிட்டு எங்கப்பாவோட சைக்கிள பத்தி சொல்லன்னா எப்படி? எங்க வீட்ல ரொம்ப வருஷமா ஒரு தொன்று தொட்ட சைக்கிள் இருந்துச்சு. (நான் கீழ குதிச்சு சாகசம் பண்ண அதே சைக்கிள் தான்). நாங்கெல்லாம் எவ்வளவோ சொல்லிப் பாத்தும், எங்கப்பா அத விக்காம வச்சிருந்தார். “இது நான் வேலைக்கு போய் முதன் முதல்ல வாங்கின சைக்கிள்” ஒரு சென்டிமென்ட்ட வேற போட்டார்.
அதுவும் வீட்டுக் கொள்ளையில, ரொம்ப வருஷமா தேமேன்னு தேஞ்சு போய் நின்னுட்டு இருந்துச்சு. (அதாவது இந்த படத்துல இருக்கற சைக்கிள் மாதிரி ஆய்டுச்சுன்னு வச்சுக்கோங்களேன் :) )கடைசியா மனசு வந்து ஒரு நாள், “சரி…காயிலாங் கடையில போடற அளவுக்கு ஆயிடுச்சு. பேசாம இத வித்தர்லாம்ன்னு இருக்கேன்” எங்கப்பா இழுக்கவும், நாங்கெல்லாம் கோரஸா, “அத செய்ங்க முதல்ல” ன்னு சொல்லி, அவர விரட்டினோம். சைக்கிள் கடைல இருந்து ஒரு ஆள கூட்டிட்டு வந்து பேசி அனுப்ச்சுட்டு சோகமே உருவாகி வந்த அப்பா கிட்ட, “என்னப்பா, எடுத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டானா?” கேட்டதுக்கு, “எடுத்தக்க மாட்டேன்னு சொல்லி இருந்தா கூட பரவாயில்லைம்மா, இத எடுத்துட்டு போறதுன்னா, எனக்கு அம்பது ரூபா குடுங்க!” ன்னு கேக்குறான். ’அவ்வ்வ்வ்வ்வ்வ்’ :’(
Saturday, December 13, 2008
உனக்கும் எனக்கும் இடையே ஒரு பூலோகம்!
ஷ்ஷ்ஷ்…இது துயில் கொள்ளும் நேரம்…
நான் துயில்கையில், நீ விழித்திருப்பதால் தானோ
தினமும் என் கனவுகளில் உலவுகிறாய்?
நீ துயில்கையில், உன்னோடு பேச முடியாமல்
சூரியனை சபித்தபடி பொழுதை கழிக்கிறேன்…
இங்கே மணி நான்கு!
பேருந்துப் படிக்கட்டுப் பயணம்,
நாசி துளைக்கும் சிற்றுண்டி மனம்,
அம்மாவின் சிரித்த முகம்,
சோம்பல் ததும்பும் விடுமுறை நாட்கள்,
ஞாயிறு தூர்தர்ஷன் தமிழ் படம்,
இப்படி எத்தனையோ நினைவுகள் பதிந்த
மாலை நான்கு மணி…
இன்று கேப்பச்சீனோ கோப்பையுடன் தனிமையில் கழிகிறது,
அங்கே இப்பொழுது நடுநிசி என்ற நினைப்போடு…
Saturday, December 6, 2008
Slip of fingers!
“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டம்…” என்று ஆரம்பித்து, 18 முறை தெளிவாக, ’வேண்டம்’ ’வேண்டம்’ என்று வெற்றி கரமாக மூன்றாம் வகுப்பில் எழுதியதில் தொடங்கி, சமீபத்தில், “பிரிவின் வழியை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்” என்று பின்னூட்டம் போட்டது முதல், என் ’slip of flngers’ பட்டியல் ஏராளம்.
மேலே சொன்ன இரண்டு சம்பவங்களுக்கும் இடை பட்ட காலத்தில் நடந்த, இப்போது நினைத்தாலும், கிச்சு கிச்சு மூட்டக் கூடிய, சில ’slip of fingers’ இங்கே…
“மதிப்பிற்குறிய ஐயா!
என் மதிவண்டியை காணவில்லை…”
என்று காம்போஷிஷன் புத்தகத்தில், எழுதிய கடிதம் முழுக்க மிதிவண்டிக்கு பதில் மதிவண்டியை தேடியது…
“சங்க காலத்தில், மன்னர்கள், புலவர்களை வெகுவாக மிதித்தனர்…” என்று எழுதி சங்க காலத்துப் புலவர்களை டேமேஜ் செய்தது…
“சிவபெறுமான்”, “சிவபெறுமான்” என்று பரிட்சை பேப்பரில், கட்டுரை முழுக்க எழுதி, பின் தமிழ் மிஸ்ஸிடம் அசிங்கப்பட்டு, “சிவபெருமான்” என்று இருபது முறை imposition எழுதி புண்ணியம் தேடிக் கொண்டது…
இதெல்லாம் கூட பரவாயில்லை, என் தோழி ஒருத்தி பரிட்சை பேப்பரில், “நளன் சோலைக்குள் புகுந்தான்” என்பதற்கு பதில், “நளன் சேலைக்குள் புகுந்தான்” என்று எழுதியதை நினைத்தால் தான்…:-D
சரி, “Slip of fingers” பத்தி சொல்லிட்டு, ’Slip of tongue’ பத்தி சொல்லாட்டா எப்படி?
ஒரு நாள்…இங்கிலிஷ் க்ளாஸ்ல, அடியேன் தான் டிக்டேட்டர் (நான் தான் நோட்ஸ் டிக்டேட் பண்ணிட்டு இருந்தேன்னு சொல்ல வந்தேன் ;-) )
அப்ப Japanese என்று ஒரு வார்த்தை வந்தது, அப்போ இங்கிலிஷ் மிஸ், “Divya! Better spell Japanese once” அப்படீன்னாங்க.
சரின்னு நானும் உடனே ரொம்ப ஸ்டைலா சொன்னேன், “Japanese…ஜே…ஏ…பே…ஏ”
“பி. ஏ” ங்கறது என் வாயில எப்படி “பே. ஏ’ ன்னு வந்துச்சுன்னு எனக்கு இன்னும் விளங்கல…அதுக்கப்புறம், க்ளாஸே ஒரு பத்து நிமிஷம் ஓயாம சிரிச்சதையும், குறைஞ்சது ஒரு வருஷமாவது அத சொல்லி, சொல்லியே என்னை எல்லாரும் ஓட்டி எடுத்தையும், நான் சொல்லத் தேவையில்லைன்னு நினைக்குறேன் :-)
Wednesday, November 12, 2008
அன்புள்ள பாலு…
ஒரே பொண்ணு கல்யாணத்தையும் முடிச்சாச்சு…பையன், அவனும் நல்ல வேலைல கை நிறையா சம்பாதிக்கிறான்…பல வருஷமா கஷ்டப்பட்டு தேடி, ஒரு நல்ல வரனா பாத்து, கல்யாணமும் பண்ணியாச்சு…அது ஆச்சு ஆறு மாசம்…
ஒரு கட்டத்துக்கு மேல, நாம வாழ்றதே குழந்தைங்களுக்காகதாங்கற மாதிரி தோணுதில்ல? பையனும் வெளியூர்ல இருக்கான், பொண்ண கட்டி குடுத்தாச்சு…ரொம்ப வெறுமையா இருக்கு...யோசிச்சு பாத்தா, இவங்கெல்லாம் வாழ்கைல பாதிக்கு மேல வந்தவங்க தான? அதுக்கு முன்னாடி இருந்த என்னோட வாழ்கை, என்னோட வட்டம், என்னோட நண்பர்கள், என்னோட சந்தோஷம் இதெல்லாம் எங்க? இப்ப அதெல்லாம் இல்லைன்னு சொல்லமுடியாது, அதுக்காக முழுமையா இருக்குன்னும் சொல்லிற முடியாதே!!!
இதோ…இன்னும் ஒரு வருஷத்துல பணி நிரந்தர ஓய்வும் வந்துடும்…அதுக்கப்புறம் என்ன? அக்கடான்னு நியூஸ் பேப்பர் உண்டு, புத்தகங்கள் உண்டுன்னு உக்காற வேண்டியது தான்…
புத்தகம்ன்னு சொன்ன உடனே ஞாபகம் வருது…என் நண்பன் பாலு, எப்பயும் எதாவது புத்தகத்த படிச்சிட்டு வந்து அதை பத்தி மணிக்கனக்கா பேசுவான்…அதெல்லாம் அப்பங்க…அது ஒரு காலம், வேற ஊர்ல வேலை கிடச்சு, ஒன்னா தங்கி, சமைச்சு சாப்பிட்டு, ராத்திரி மொட்டை மாடில கதை பேசிகிட்டு...முப்பது வருஷம் இருக்குமா? ஆமா இருக்கும்...அதுக்கப்புறம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பாதைல...ஆனா, பாலு மட்டும் அப்டியே மாறாம தான் இருந்தான்.
பாலுவ பத்தி சொல்லனும்னா எத்தனையோ இருக்கு...
இந்தியன் வங்கில மேலாளரா இருந்தாலும், வங்கி ப்யூனுக்கு இருக்குற ஆடம்பரம் கூட இல்லாத அவன் எளிமையை சொல்றதா? இல்ல,
கடைல இருந்து பொட்டலம் மடிச்சு வர நூல கூட சேத்து கட்டி வச்சு, பெரிய நூல்கண்டு செஞ்சு வச்ச அவன் சிக்கனத்தை சொல்றதா? இல்ல,
அந்த நூல்கண்ட மறுபடியும் அந்த கடைக்காரருக்கே கொடுத்த அவன் தாராள மனச சொல்றதா? இல்ல,
மூணு வருஷத்துக்கு ஒரு தடவ, அவனே பணி இடமாற்றம் கேட்டு, ஊர் ஊரா போய், எல்லா ஊரையும், எல்லா மனிதர்களையும், தன் சொந்தமா நேசிச்ச குணத்த சொல்றதா? இல்ல,
முப்பது வருஷமா, வருஷம் தவறாம, ஒவ்வொரு பொங்கலுக்கும், புது வருஷத்துக்கும், அவன் எண்ணத்திலும், வண்ணத்திலும் உருவாக்கி, அன்பும், தனித்துவமும் நிரம்பி வழியும் வாழ்த்து அட்டைகள் அனுப்புவானே, அத பத்தி சொல்றதா?
பாலு எனக்கு எழுதின கடிதங்களயே ஒரு புஸ்தகமா போடலாம்…அப்டி ஒரு ரசிகன்...அவன், பார்த்த, ரசிச்ச, அனுபவிச்ச ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்னு விடாம எழுதி அனுப்புவான்…
அந்தந்த ஊர் காரங்க கூட, அவ்ளோ அழகா அந்த ஊற பத்தி வர்ணிப்பாங்கன்னு சொல்ல முடியாது...அவன எனக்கு வால்பாறை பாலுவா தெரியும், தென்காசி பாலுவா தெரியும், காரைக்குடி பாலுவா தெரியும், சென்னை பாலுவா தெரியும், ஏன்? டெல்லி பாலுவா கூட தெரியும்...இப்ப கொஞ்ச நாளா அவன் மதுரை பாலு...வயசு ஆயிடுச்சு, பொண்ணுங்க படிப்பு வேற, ஸ்கூல் மாதிரி காலேஜ் எல்லாம் மாத்த முடியாது...அதான், போதும்டா ஊர் சுத்தினதுன்னு மதுரைலையே இருந்துட்டான்.
'அன்புள்ள ரகு' ன்னு ஆரம்பிச்சு இந்த முப்பது வருஷமா அவன் எனக்கு எழுதின கடிதங்கள், அனுப்பின வாழ்த்து அட்டைகள் ஏராளம்...இன்னும் எல்லாமே பத்திரமா வச்சிருக்கேன்...
இந்த அவசர உலகத்துல யாரு கடுதாசி எல்லாம் போடுறா? நான், அவன் அனுப்பின பாதி லெட்டருக்கு தான் பதில் எழுதுவேன். மத்தபடி எப்பயாச்சும், ஃபோன்ல நலம் விசாரிக்கறதோட சரி.
இப்படி பல வருஷமா விடாம தொடர்ந்த எங்க நட்பு மேல கொஞ்சம் பெருமை தாங்க எனக்கு…அந்த ஒரே ஒரு சம்பவத்த தவிர…அதை நினச்சா எனக்கே என் மேல கோவம் கோவமா தான் வருது…சரி, நானும் மனுஷன் தானே?
அப்படி என்ன தான் நடந்துச்சுன்னு பாக்றீங்களா? இதோ…
"பாலு! எப்படி இருக்க?"
"சொல்லு ரகு...நான் நல்லா இருக்கேன்...வீட்ல எல்லாரும் சௌக்கியமா?
என்ன திடீர்ன்னு ஃபோன்?"
"என் பொண்ணு கல்யாணம் முடிவு ஆய்டுச்சு...மாப்ளை யு.எஸ். ல வேலையா இருக்கார்...இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்…"
"ரொம்ப சந்தோஷம் பா, நீயும் ரொம்ப நாளா தேடினதுக்கு, இப்ப நல்ல வரனா அமைஞ்சிருக்கு...சந்தோஷம்…"
"நான் அடுத்த மாசம் மதுரை பக்கம் வருவேன்...அப்ப நேர்ல வந்து பத்திரிக்கை வெக்கறேன்…"
"ஹ்ம்ம்...கண்டிப்பா…"
கல்யாண வேலை எல்லாம் ஆரம்பிச்சு கொஞ்ச நாளைக்குள்ள, பேரிடியா வந்துச்சு, திடீர்ன்னு சம்பந்திக்கு உடல்நிலை மோசமான செய்தி. ஆண்டவன் மேல பாரத்த போட்டுட்டு, கல்யாண வேலைய ஆரம்பிச்சேன். இருந்தாலும் கடைசி நேரத்து பரபரப்பு, பதட்டம் இப்படி பல காரணங்களால என்னால மதுரைக்கு போக முடியல...பாலுவுக்கு ஃபோன் பண்ணி நிலைமைய சொல்லவும், பாலுவே, 'என்ன ரகு, இதுக்கெல்லாம் கவலை பட்டுகிட்டு, நீ பத்திரிக்கைய தபால்ல அனுப்பி விடு...அது போதும்.’ ன்னு சொல்லவும், சரி தான்னு தபால்லையே பத்திரிக்கைய அனுப்பி வச்சேன்...
நல்லா சிறப்பா கல்யாணமும் முடிஞ்சுது. ஒரு சில பேர் தவிர கல்யணத்துக்கு அழைப்பு குடுத்த அத்தன பேரும் வந்து கலந்துகிட்டு, வாழ்த்திட்டு போனாங்க.
ஆயிரம் பேத்துக்கு மேல கல்யாணதுக்கு வந்திருந்தாங்க. ஆனா பாலு மட்டும் வரவே இல்ல…அத பத்தி, எனக்கு கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஆதங்கம் தாங்க. வரேன்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல வரல! ஆயிரம் வேலை இருக்கட்டுமே, கல்யாணம் முடிஞ்சப்புறம் ஒரு ஃபோன் பண்ணி பேசக் கூடாது? இந்த ஒரு வருத்தம் தான் எனக்கு.
என் மனைவி என்னடான்னா, “நீங்க நேர்ல போய் கூப்பிடலைன்னு கோபம், அதான் அவர் வரலை” ங்கறா.
ச்சே, ச்சே…பாலு அப்படி பட்டவன் இல்ல. ஏதோ முக்கியமான வேலை இருந்திருக்கும்…இல்லன்னா வராமா இருந்திருக்க மாட்டான்…அட, என்ன தான் வேலை இருக்கட்டுமே, ஒரு ஃபோன் பண்ணி பேசி இருக்கலாமே…சரி, அவனா ஃபோன் பண்ணி பேசுற வரைக்கும், நானா அவனுக்கு பேசப் போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். நான் பண்ணது எவ்ளோ பெரிய தப்புன்னு பின்னாடி தான் புரிஞ்சுது.
கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துக்கு அப்புறம் பாலுகிட்ட இருந்து ஒரு கடிதம்.
அன்புள்ள ரகு,
நலம், நலமறிய அவா. மகள் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். பெண்ணிற்க்கும், மாப்பிளைக்கும் என் வாழ்த்துக்களை சொல்லி விடு. தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக, என்னால் திருமணத்திற்கு வர முடியவில்லை. சரியாக, கல்யாணச் சமயத்தில், அம்மா தவறி விட்டார்கள். இவ்வளவு தாமதமாக சொல்வதற்க்கு மன்னிக்கவும். உடனே உன்னிடம் சொல்லி, உன் சந்தோஷத்தை குறைக்க விரும்பவில்லை. அதற்க்காகத் தான் இந்த இரண்டு மாத இடைவேளை. அம்மாவின் கடைசி நாட்களை பற்றி
அதுக்கு மேல என்னால படிக்க முடியலைங்க.
ச்சே, பெரிய தப்பு பண்ணிட்டனே…பாலுவ பத்தி தெரிஞ்சிருந்தும் கூட இப்படி நினைச்சுட்டேனே…நானாவது ஒரு ஃபோன் பண்ணி இருக்க கூடாது? மனைவி எதோ சொன்னா, அத அப்படியே கேட்கனுமா? எனக்கு எங்க போச்சு புத்தி…இல்ல, மனைவி சொன்னதெல்லாம் ஒரு காரணம் இல்ல… எல்லாம் இந்த வேண்டாத வரட்டு கெளரவம் தான், நான் ஏன் இறங்கி வரனும்ங்கற பிடிவாதம் தான்… சரி, ஆனது ஆய்டுச்சு, இப்ப புலம்பி என்ன பண்றது? வயசானா புத்தி மழுங்கிடும்ன்னு சொல்லுவாங்களே, அப்படி ஆய்டுச்சோ?
சரிங்க, பேசிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியல, நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துருச்சு. நான் எங்க போய்ட்டு இருக்கேன்னா கேக்குறீங்க? பாலு பொண்ணு கல்யாணத்துக்கு தான்…பொண்ணு கல்யாணம் அவசரமா முடிவாயிடுச்சுன்னு சொல்லி, ரெண்டு வாரத்துகு முன்னாடி தான் பத்திரிக்கை அனுப்பினான். நிறைய முஹூர்த்தம் இருக்கறதால நேரடி ரயில்ல சீட்டு கிடைக்கல…அதான், காலைல நேரமே கிளம்பி, ரயில் பஸ்ஸுன்னு மாறி, மாறி, சுத்தியடுச்சுட்டு போய்ட்டு இருக்கேன். ’இந்த வயசான காலத்துல, எதுக்கு இப்படி கஷ்டப்படறீங்க?’ ன்னு என் மனைவி கூட கேட்டாங்க… பாலுவுக்காக இத கூட செய்ய மாட்டேனா என்ன? என்ன நான் சொல்றது? கரெக்ட்டு தான? சரி, அப்ப பாப்போமா?
Saturday, November 1, 2008
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வருவோம்ல!
என்னைய மாட்டி விட்டது யாரு? சரவண குமார்
என்னவாம்? சினிமா கேள்விகளுக்கு பதில் போடனுமாம்...
ஓஹ் போட்டாச்சா? மேல, இல்ல இல்ல, கீழ படிங்க
சரி, நான் யார மாட்டி விடப் போறேன்? அது அப்பால…
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
அதெல்லாம் நியாபகம் இல்ல...ஒன்னு மட்டும் எங்க அம்மா இன்னும் சொல்லி சிரிப்பாங்க...முதல் முறையா தியேட்டர் போனப்பவே, அங்கிருந்த அத்தன பேரையும் என்னை திரும்பி பாக்க வச்சுட்டோம்ல? “ஹய்யோ!!! இவ்ளோஓஓஓ பெரிய்ய்ய வீடா? இது யாரு வீடும்மா?” ன்னு சத்தமா கேட்டா எல்லாரும் பாக்க மாட்டாங்களா என்ன?
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
"பொய் சொல்ல போறோம்." அந்த படத்த பாக்க போறதுக்கு நான் சொன்ன பொய் எனக்கு தான் தெரியும் ;) ஐ செக்கப்புன்னு பொய் சொல்லிட்டு (ஐ, பொய்…ஹை ரைமிங்கு ;) ), ஆபிஸ்ல இருந்து அப்ஸ்காண்ட் ஆனோம்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தீபாவளி அன்னிக்கு சன் டீ.வில சந்தரமுகி…தலைவர் படத்த, எத்தன முறை, எந்த விதமான ஊடகத்துல பாத்தாலும், தலைவர் படம், தலைவர் படம் தான்னு உணர்ந்தேன்…
அதுக்காக பாபா படத்த எத்தன தடவ பாத்தேன்னு எல்லாம் கேக்க கூடாது, ஆமா!
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
தாக்கிய படம்ன்னா, வாழ்க்கைல இது வரைக்கும் ஒன்னே ஒன்னு தான்…”வீரம் விளைஞ்ச மண்ணு!” கூட்டமா குடும்பத்தோட குதூகலமா போறமேன்னு, அவசரத்துல என்ன படம்ன்னு பாக்காம ஒரு பத்துப் பன்னென்டு பேரு கும்பலா தியேட்டர் உள்ள ஓடிட்டோம்.அப்புறம், அத்தன பேரும் குத்துயிரும் குழையுயிருமா தான் வெளிய வந்தோம்.
நல்ல விதமா தாக்கிய படங்களோட பட்டியல் நீளம்…ஆனா ரொம்ப பாதிச்ச படம், “லஜ்ஜா”. மனிஷா கொய்ராலா சந்திக்கற பல பெண்கள் வாழ்க்கைல நடக்குற கொடுமைகளை பத்தி பேசுற படம். அதுல மாதுரி கூட இருப்பாங்க…அந்த படம் பாத்து, ஒரு நாள் முழுக்க கோவமா, சோகமா இருந்துச்சு.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அப்படி எல்லாம் பெருசா ஒன்னும் இல்ல, தலைவர் ஒரு அரசியல் கட்சிக்கு சார்பா அறிக்கை விட்டு, அப்புறம் அவங்க தோத்ததும், எல்லோரும் தலைவர கிண்டல் பண்ணப்ப தான் கொஞ்சூண்டு வருத்தமா இருந்துச்சு…எப்படியோ, “காய்க்கற மரத்துக்கு தானே கல்லடி படும்?” ;) அதனால மனச தேத்திகிட்டேன்.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
தசாவதாரம்...தொழில் நுட்பம் பல இருந்தாலும், அந்த கதையோட ப்ளாட்ட தான் பாத்து தான் பிரமிச்சேன்.
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
எப்பவாச்சும், வாரமலர் நடுப்பகுதி, அப்புறம் லைட்ஸ் ஆன், இத தவிர வேற எதுவும் வாசிக்கறது கிடையாது.
7.தமிழ்ச்சினிமா இசை?
A.R.ரஹ்மான் பாடல்கள்ல வரும் குழலோசை ரொம்ப பிடிக்கும்…
ஹாரிஸ் பாடல்கள்ல வரும் கிட்டார் ரொம்ப பிடிக்கும்…
முழுக்க முழுக்க தமிழ்ல இருக்க பாடல் வரிகள் பிடிக்கும்…
ஐஸ்கீரிம் போல் உருகும், சோனு நிகம், ஸ்ரீநிவாஸ் பிடிக்கும்…
ஆனா பிடிச்ச விஷயங்கள யாராவது கொலை செய்வாங்களா? எனக்கு அதுவும் பிடிக்கும்…
நாள் முழுக்க ஏதோ ஒரு பாட்ட பாடி/முனு முனுத்து அத கொல்லவும் பிடிக்கும் ;)
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தமிழ் தவிர னா, பெரும்பாலும் ஹிந்தி, அப்புறம் சில தெலுகு, மலையாளம், கன்னடம், இந்த படங்கள் எல்லாம் பாத்திருக்கேன்.
ஸ்கூல் படிக்கும் போது,ஞாயிரு மதியம் தூர்தர்ஷன்ல alphabetical order ல போடும் ரீஜனல் நேஷனல் அவார்ட் படங்கள அப்படி ஒரு ஆர்வத்தோட பாத்துருக்கேன்…காலண்டர்ல, தமிழ், கன்னட படங்கள் எப்போ வருதுன்னு குறிச்சு வச்சுகிட்டு, மறக்காம பாத்துடுவோம். அப்படி பேர் தெரியாம பாத்த நல்ல நல்ல கன்னட படங்கள் எத்தனையோ! காலேஜ் படிக்கும் போது, தமிழ் சேனல்கள் போர் அடிச்சால் உதயா டீ.வி கூட பாத்திருக்கேன்…ஆனா, இங்க வந்து இத்தன வருஷத்துல ஒரே ஒரு கன்னடப் படம் கூட பாத்ததில்லை. ஒரு வேளை, உள்ளூர் மக்களே அத அதிகம் விரும்பாதது ஒரு காரணமா, இல்ல, போஸ்ட்டர்கள பாத்ததால வந்த பயமா, தெரியல :)
அப்படி அதிகம் தாக்கின சில கன்னட படங்கள் இருக்கு…ஆனா பேரு தான் தெரியல.
இங்கிலீஷ் படமெல்லாம் நாம அவ்வளவா பாக்கறது இல்ல…சில பல நண்டு - சிண்டு, அப்புறம் ஜாக்கி சான் படங்கள தவிர…ஆனா, ஹாரி பாட்டர் படமெல்லாம் மனப்பாடம் தான் ;)
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
எங்க பாட்டியோட, ஒன்னு விட்ட தம்பியோட, சித்தப்பாவோட, ஒன்னு விட்ட மாமாவோட பேரனுக்கு கூட, சினிமா உலகுடன் நேரடி என்ன, மறைமுக தொடர்பு கூட கிடையாது. எனக்கும் சினிமா உலகுக்கும் அவ்ளோ தூரம் தான்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
படத்த அவங்களே டி.வீ.டி ல ரிலீஸ் பண்ணா பிழைச்சுக்குவாங்க :)
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
எனக்கு பெரிய கஷ்ட்டமெல்லாம் இல்ல…ஒரு வருஷத்துக்கு இரண்டு, இல்ல மூணு தடவை தான் தியேட்டருக்கே போவேன்…மத்தபடி, உலக தொலைகாட்சிகளில் முதன் முறையா பாக்குறது தான்…அப்படி பாத்தே காலத்த ஓட்டலாம்…அப்புறம் அபிக்கு போட்டியா, இன்னும் சில பேரு சீரியலுக்கு வந்துடுவாங்க…அவங்களோட சேந்து அழ வேண்டியது தான்.
தமிழர்களுக்கு என்ன ஆகும்? படம் பாக்குற டைம்ல நம்ம ப்ளாகயெல்லாம் படிப்பாங்க ;) அப்புறம் இன்ன்ம் நிறைய ப்ளாகர்ஸ் வருவாங்க…
ஹப்பா, ஒரு வழியா டெஸ்டு முடிஞ்சிருச்சு…
சரி, நான் யார மாட்டி விடப் போறேன்? ஹ்ம்ம், யாரு? யாரு? யாரும் இல்ல…
ஏன்,ஏன், ஏன்? ஏன்னா…நான் ரொம்ப நல்லவ ;
Sunday, October 12, 2008
நீ இல்லாத வீடு...
நீ இல்லாத அந்த மழை நாளில்...
மழை பொழியும் வேளையில்...
வீட்டை சுற்றி சுற்றி நான் ஓடி விளையாடுவதும்,
என்னை நீ அதிகப் படியாய் கடிந்து கொள்வதும்...
நீர் சேமிக்கிறேன் என்று சாக்கிட்டு, மழையில் நான் அலைவதும்,
பின்னோடு ஒரு குடையோடு, நிழலாய் நீ என்னை தொடர்வதும்...
பார்! இன்று கூட மழை பெய்கிறது!
எப்போதும் போல் வீட்டை சுற்றி வந்து நனைந்தாலும்,
கண்டிக்க யாரும் இல்லை தான்...
என்னவோ! மழைச்சாரல் பட்டுத் தெறிக்கும் அழகை,
எட்டிப் பார்க்கக் கூட தோன்றவில்லை...
காகிதத்தில் கப்பல் செய்வதை விடுத்து
எதையோ கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...
*******
அன்னியலோகம்
பிறந்து வளர்ந்த வீடு கூட அன்னியமாகிப் போனது
நீ இல்லாத நாட்களில்...
*******
படையெடுப்பு
நீ ஊரில் இல்லை என்று யாரோ இந்த எறும்புகளுக்கு தந்தியடிதிருக்கிறார்கள்!
பின்னே? எப்படி மறுநாளே நம் வீட்டிற்க்குள் படை எடுக்கும்?
****
தூக்கம் தொலைத்த இரவு...
தூக்கத்தின் ஆழத்தில்,
தொட்டில் துறந்தது முதல், பிறந்த பழக்கமாய்,
உன் மேல் கை போட யத்தனிக்கையில்,
தொம்மென்று வெற்றுப் படுக்கை மேல் விழுந்த கை,
மனதின் அடியில், பெருவலி ஒன்றை கிளப்பியது...
அன்று, நடுநிசியிலேயே விடிந்தது என் இரவு...
Tuesday, September 9, 2008
Gone are the golden days…the school days - 3
Gone are the golden days…the school days - 1 : My first whistling experience
Gone are the golden days…the school days - 2 : A Beautiful Chapel
It was not just another day….That day was really something special…A much awaited day!
After the morning assembly, all the students of 11B rushed back to the class, chattering and giggling…God!!! Only 5 more minutes left…
And there was Meenaakshi Sundaram, fondly called as Meenu, our class teacher, all set to start yet another long session on Physics.
We started explaining him the importance of that special day…but no, he was not ready to spare even 3 mins.
And all of us chanted in chorus "sirrrrrrrrrrrrrrr! Only 2 more minutes sir….pleaseeeeeeeeeeee"
After so many arguments and counter arguments, finally he gave up and said
"You guys are real crackpots…do whatever you want!!!" he too was giggling.
At last, we were almost there…much awaited for so many days…all of us started the countdown in chorus...
9 (wondering why the count down didn’t start from 10? Wait…Wait…"
8
7
6
5
4
3
2
1
"Happy birthday to you…happy birthday to you…happy birthday dear Vivek…"
Wondering what’s so funny in a birthday???
All this happened when the clock showed 9.09 on 9/9/1999
Loads of fun it was...I swear :-D
Btw, did u notice today is 9th Sep :-)
Thursday, August 28, 2008
ச ரி க ம ப த நி சொல்லி தாரேன்…
அலங்காரம் வரைக்கு பாடியும் கூட, இந்த பிட்சு (pitch) பிரச்சனை மட்டும் சரி ஆகல…பிட்ச ஏத்தி, இறக்கறது எப்படின்னு ரொம்ப சரியா புரிஞ்சு வச்சுகிட்ட என்னோட அபாரமான இசை ஞானம் தான் அதுக்கு காரணம்.
பிட்ச்ச சரி பண்றதுக்காக, எங்க பாட்டு பாட்டி (பா.பா) ஒரு நாளு, மறுபடியும் பேசிக்ஸ்ல இருந்து ஆரம்பிச்சாங்க…
பா. பா : ச…ரி…க…ம…
நான்: ச…ரி…க…ம…
பா. பா: இன்னும் கீழ பாடும்மா…
சரின்னு நானும் கொஞ்சம் ட்ரை பண்ணி,
நான்: ச…ரி…
பா. பா: இல்ல, இல்ல, இன்னும் கொஞ்சம் கீழ...
இன்னும் கொஞ்சம் ட்ரை பண்றேன்...ஹூம், ஹூ்ம், மறுபடியும் அதே...
பா.பா: சரி, ஸ்ருதிய ஏத்தி வெக்கறேன், அதோட சேந்து பாடு, இப்ப ஆரம்பிக்கலாம், ச…
நான்: ச…
பா.பா: இல்லமா, இன்னும் கொஞ்சம் கீழ...
நான்: மாமி! இதுக்கு மேல குனிய முடியாது, இன்னும் கீழன்னா, கீழ படுத்துட்டு தான் பாடனும்…
பா.பா: ஹாஆஆ...
அடுத்த க்ளாசுக்கு போனா "பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, இன்னும் ஒரு மாசத்துக்கு க்ளாஸ் இல்ல" ன்னு அவங்க வீட்ல சொல்லிட்டாங்க.
ரெண்டு மாசத்துக்கு அப்பால...
(ஃபோனில்) பா.பா: என்னமா, திவ்யா? க்ளாஸ் மறுபடியும் ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆறது, உன்ன காணமே...
நான்: அது வந்து…மாமி…எங்க வீட்டை வேற இடத்துக்கு மாத்திடோம். க்ளாசுக்கு வர முடியாதுன்னு நினைக்கறேன்...
ஏதோ என்னால அந்த பாட்டி உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துர கூடாதேன்னு ஒரு நல்லெண்ணம் தான் :-D
P.S: நிஜமாவே, குனிஞ்சு, குனிஞ்சு உக்காந்து பாடினா, பிட்சு கொஞ்சம் கம்மியான மாதிரி தான் இருந்துச்சு :-((
Friday, August 22, 2008
ஹயய்யோ ஹயய்யோ கடிச்சிருச்சு!
"யாராவது ஓடி வாங்க, ஓடி வாங்க…ஹெல்ப்….ஹெல்ப்…அது என்ன தாக்க வருது!!!"
சைக்கிள முடிஞ்ச வரைக்கும் தம் கட்டி வேகமா ஓட்றேன், ஹூம், ஹூம…இந்த நாயும் அதோட வேகத்த இன்க்ரீஸ் பண்ணுதே….கடவுளே! இப்ப என்ன பண்றது?
வேக வேகமா போய் எதோ ஒரு தெருவுக்குள்ள நுழையறேன்…என்ன இது, இப்டி ஒரு தெருவ நம்ம ஏரியாவுல பாத்ததே இல்லயே??? ஓ மை காட்!!! இது என்ன, இந்த தெரு ஒரு டெட் எண்டா??? ஆண்டவா!!!
நாய் வேற வேகமா ஓடி வருது…எனக்கு தான் இனி டெட் எண்டு…பேசாம சைக்கிள கீழ போட்டுட்டு, அந்த சுவர ஏறி குதிச்சு ஓடிட வேண்டியது தான், வேற வழியே இல்ல…
சரி, மொதல்ல நாய் எவ்ளோ தூரம் வந்துருக்குன்னு பாப்போம்…
ஆஆஆ…அம்மாஆஆஆஅ…
பின்னாடி வந்துட்டு இருந்த நாய பாத்தேன், ஆனா முன்னாடி இருந்த கல்ல பாக்கலையே…(இத தான் நாயை கண்டால், கல்லை கானோம்ன்னு சொல்லுவாங்களோ?!?!?)
சைக்கிளோட சேந்து நானும் குப்புறடிச்சு தொபுக்கடீர்ன்னு விழுந்துடேன்.
அப்படியும் கூட, இரக்க குணமே இல்லாத அந்த நாய், பக்கத்துல வருது…பக்கதுல வந்துடுச்சு…கடிக்க போகுது…
என்னோட பலம் எல்லாத்தயும் சேத்து, ஓங்கி அது முகத்துல விட்டேன் ஒரு குத்து!!!
அம்மாஆஆஆஆஆ!!!!
அட, யாருடா இது? நாய்க்கு லேடி வாய்ஸ்ல டப்பிங் குடுக்கறது??? அது மட்டுமில்லாம அம்மான்னு வேற கத்துது! துரத்தினது, நாயா இல்ல மாடா?
இதென்ன, திடீர்ன்னு என் பக்கத்துல அம்மா, அப்பா, அக்கா எல்லாரும் நிக்குறாங்க?!?!?!
கும்பர்கர்ணன் பரம்பரைல வந்த என்னை, அரும்பாடு பட்டு, குறைஞ்சது அரை மணி நேரமாவது போராடி, எக்ஸாம் அன்னிக்கு எழுப்பி விடுற, என்னோட குல தெய்வம், என் உடன் பிறப்பு,எனதருமை அக்கா, ஏன் இப்படி கப்பல் கவுந்த மாதிரி, கன்னத்துல கைய வச்சுகிட்டு நின்னுட்டு இருக்கா?!?!?!
ஹாஆஆஆ!!! இதென்ன, அவ வாய்குள்ள, ஒரு ரத்தப் பல்லு!!!
“ஹயய்யோ, நான் ஒரு நாய் கடிக்குற மாதிரி கனவு கண்டேனா…அதான், உன்ன நாய்யின்னு நினச்சு…”
“பேசாத, இந்த ஜென்மத்துல, இனி உன்ன எழுப்பி விட்டேன்னா, என்னன்னு கேளு…”
“ஹயய்யோ, ஹயய்யோ!!!”
P.S: இது பல முறை வந்த ஒரு கனவு, இப்ப கூட வருது :-) ஆனா, என்ன ஒன்னு, இது வரைக்கும் நாய் என்ன கடிச்சதில்லை, நான் கடிக்க விட்டதில்லை ;-) ஒன்னா நாய் முகத்துல குத்திடுவேன், இல்லன்னா, ரெண்டு கையால அதோட வாய அப்படியே பிடிச்சுருவேன் :-D
Saturday, August 16, 2008
எத்தனை விதங்களில் மனிதர்கள்!
எட்டு மணிக்கு, கொட்ற மழைல, வீட்ட விட்டு கிளம்பி, ஒன்பது மணிக்கு ஆட்டோ கிடைச்சு, 10.30 மணி வரைக்கும் மினர்வா சர்க்கிள் பக்கத்துல வாழ்க்கைய வெறுத்து, பெங்களூரு ட்ராஃபிக்க சபிச்சு, மெஜஸ்டிக் போய் சேரும் போது மணி 10.45.
இப்படி சாகசம் புரிஞ்ச ஆட்டோ காரர பாராட்டி, 300 ரூபாயா குடுத்துட்டு (அழுதுட்டு?!?!?), தல தெறிக்க ஓடி வந்து பாத்தா, 10.45 மணிக்கு வர வேண்டிய பஸ், சரியா அதுகாலை மூணு மணிக்கெல்லாம் வந்துடுச்சு!
இப்படி கெம்ப்பே கௌடா பஸ் ஸ்டாப்ல போட்ட நைட் அவுட்ல, நான் பாத்தா ஆச்சர்யமான மனிதர்கள்/நிகழ்வுகள்..., அப்பறம் அழகான மனிதர்கள்/நிகழ்வுகள்...இதெல்லாம் ஒரு பதிவா இங்கே...
முதல்ல ஆச்சர்யமான மனிதர்கள்/நிகழ்வுகள்
1. சுத்தியும் ஒரே சேறு, சகதி...பஸ்களின் ஹார்ன் சத்தம், புகை, நெடி...நள்ளிரவு தாண்டியும் பஸ் வராத கடுப்பு...பேக கீழ கூட வெக்க முடியாம கைல தூக்கிட்டே நிக்க வேண்டிய நிலைமை...இதெல்லாம் போதாதுன்னு, நச, நசன்னு விடாம தூறிட்டு இருந்த மழை! இப்படி அத்தைனையும் ஒரே சமயத்தில தாக்குனா என்னங்க வரும்? சத்தியமா எரிச்சல் வரும்..ஆனா காதல் வருமா? சில பேத்துக்கு வந்துச்சே!!! ஒரே குடைக்கு கீழ, அங்க இருந்த எல்லோருக்கும் இலவச காட்சிகள காட்டிட்டு இருந்த சில ஜோடிகள்! ஆச்சர்யமான மனிதர்கள் லிஸ்ட்ல இவங்க தான் jodi no.1.
2. அதிகாலை ரெண்டு மணிக்கு கூட, ஊருக்கே கேக்குற மாதிரி பீட்டர் விட்டுகிட்டு இருந்த சில அல்ட்ரா மாடர்ன் பொண்ணுங்க!
3. சரியா 12 மணிக்கு, பிளாஸ்டிக் தேசிய கொடிய வித்துட்டு இருந்த ஒரு வியாபாரி! (யாருமே அத வாங்கலைங்கறதும், அதுக்கு அப்புறம் நடந்த டீ வியாபாரம் செம சூடு பிடிச்சதுங்கறதும் வேற விஷயம்!!!)
4. ஆனா இவங்களயெல்லாம் தூக்கி சாப்ட, ஆச்சர்யமான மனிதர்கள்னா அது இவங்க தான்... இந்த உலகத்துல நடக்குறது எனக்கு எதுவுமே தெரியாதுங்கர மாதிரி, பெட்ல ஹாயா படுத்துட்டு பேசுற எஃபெட்ல முகத்த வச்சுக்கிட்டு, ராத்ரி ஒன்னு, ரெண்டு மணிக்கு கூட வறு, வறுன்னு, வறுத்துட்டு இருந்த, நம்ம கடலை மன்னர்கள்/மன்னிகள்! இவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஜூரி அவார்ட்!
இவங்கள பாக்கும் போது எனக்கு ஒரு புதுக்குறள் தோனுச்சு...
போடுக கடலை போடுக போட்டபின்
பில்லுகட்டுக அதற்குத் தக.
5. Last, but not the least…அடிச்ச காத்துல இத்து போன ஒரு குடையோட, சார்ஜ் இல்லாம செத்து போன ஒரு ஃபோனோட, அங்கேயே நிக்கவும் முடியாம, பெங்களூர் விட்டுக்கு திரும்பி போகவும் நாதி இல்லாம, தனந்தனியா ரெண்டு மணிக்கு பஸ் ஸ்டாப்ல நின்னுகிட்டு இருந்தாலும், சுத்தி நடக்கறதெல்லாம் பாத்துகிட்டு, எதையெல்லாம் நாளைக்கு ப்ளாக்ல போடலாம்னு தீவிரமா யோசிச்சிட்டு இருந்த ஒரு விந்தையான பொண்ணு!!!
சரி, இப்ப அழகான சில மனிதர்கள், சில நிகழ்வுகள்...
1. ரயில் சிநேகிதம் மாதிரி, ஆங்காங்கே நிகழ்ந்த சில பஸ் ஸ்டாப் சிநேகிதங்கள், பல உரையாடல் and stuff, அழகு...
2. 12 மணிவரைக்கும் இந்தியாவுக்கு இன்னும் சுகந்திரமே கிடைக்கலைங்குற மாதிரி சோகமா முகத்தோட திரிஞ்ச ரெண்டு பரிச்சயமில்லாத பசங்க, அதுக்கப்புறம் 2.30 மணி வரைக்கும் அவங்களுக்குள்ள சிரிக்க சிரிக்க ஏதோ பேசிக்கிட்டது, அழகு...
3. தனியா நின்னுட்டு இருந்த எனக்கு பேச்சுதுணைக்கு கிடச்ச, சசி, சந்துரு என்ற கலகலப்பான கசின்ஸ், அழகு...
4. பஸ்ல என் பக்கத்து சீட்ல, ஒடஞ்ச விழற மாதிரி ஒல்லியா, அத விட மெல்லிய, அழகான குரலோட, என் நெருங்கிய தோழி போல என்னோட பேசிட்டு வந்த அன்பான பெண் சரண்யா, அழகு…
5. அந்த சசியுடன் வந்த சந்துரு ஆகட்டும், தத்தம் மனைவிகளுடன் வந்த கணவன்மார்கள் ஆகட்டும், இல்ல, சில நண்பர் கூட்டங்கள்ள இருந்த பசங்க ஆகட்டும், அவங்களோட வந்திருந்த பெண்கள, குடையோட பத்திரமா நிக்க வச்சுட்டு, 5, 6 முறை, சலிக்காம, பஸ் வந்துடுச்சா, வந்துடுச்சான்னு விசாரிச்சுட்டு வந்துட்டே இருந்தாங்க...
தன் சொந்தமோ, தோழியோ, தெரிந்த பெண்ணோ, தன்னோட வந்த ஒரு பெண்ணின் பாதுகாப்புக்கும், சௌகரியதிர்க்கும் தான் பொறுப்புங்கற responsibility and feeling, இந்த பசங்களுக்கு எப்போ, எப்டி வருது? ஆனாலும் இவங்களோட பொறுப்பு உணர்ச்சி தாங்க முடியலப்பா...சரி, என்ன தான் இருந்தாலும், உண்மைய ஒத்துக்கிட்டு தான ஆகணும்? இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு...
Friday, July 11, 2008
A special day
Today is a special day made of special hours, special minutes and special seconds specially framed for my sweet heart, cutie Prasanna.
Prasanna! It’s been three years now since I know you
But little did I know your voice is magical
Only when I spoke to you after so long, I could figure it out:-)
A remembrance to her on her b’day
The ‘missing you’ verses I wrote when she was on a 5 day long vacation
November 2006
Never in my life, have I felt this way on a Saturday
Yes! I wished it could‘ve been a weekday
I wanted to kill the weekend, Kill my solitude
Like a whining child I kept crying when you will be back
And why I should wake up to face a world so void
And it was then I knew just what to do
I’d fall asleep again and then
I’d think of the wonderful times we have had together
Really miss you dear Prasannu
Friday, May 23, 2008
Pullarikkudhu paa...
Very surprising that it was not much talked of when it got released (or may be I didn’t know)
Some grass itching dialogues from the movie…
When there s a little clash between the hero n heroine, the heroine tells this
சின்ன சின்ன பார்வைகளால உண்டாகற காதல்
சின்ன சின்ன வார்த்தைகளால சிதைஞ்சிற கூடாது....
After marriage, Gopika leaves pritivi for some noble reason and pritivi really doesn’t know why she ditched him. One day, she finds him on the road n gets down from her car to meet him, then pritivi tells
நான் உன் மேல வச்சுருக்க காதல் உண்மை,
என் மேல கொஞ்சாமாவது மதிப்பு இருந்தா
வழில பாக்கும் போது கூட என் முன்னாடி வராத!!!
And finally in the climax, when gopika tries to explain why she actually left him, pritivi just refuses to listen and tells
சேந்து வாழ்ந்தாலும், பிரிஞ்சு அழுதாலும்
காதல் காதல் தான்...
These are the few things which i cud remember, infact the movie s full of such good dialogues...
Thursday, April 3, 2008
என்றென்றும்...

Friday, March 7, 2008
Women's day dinner...
I remember one saying, "time is the best healer, but a bad beautician" i wish the later should work in reverse for us...Whenever i bump on any of my friends, no matter after how long, i wish to see them as young, as lively and as charming as ever...So now i wish some of the finest ladies i've met on earth a very happy women's day in advance!!!
Monday, February 18, 2008
Gone are the golden days - The SCHOOL DAYS CONT...
A new year at Stanes, a beautiful school with chapel(s), trees, flowers, ambient class rooms, Gym, tempting play area for kids...This incident happened after two months in the new school. It was a free period as everyone in the school was busy with sports day activities. It so happened that me and my friend (who was also new to the school) were free. We stood in the corridor next to our class room and started watching our class mates practice in hot sun. It was only then we noticed a beautiful building on one side of the ground. It was a beautiful stone building, gray in color, covered with trees, built in a elegant, classic, yet stylish way. We concluded that it must be a chapel and started wondering how we missed that place for so long!!! No way, we couldn't wait any more, two ‘Alices in the wonderland’ started immediately to explore. We reached the grounds, took a turn and started heading towards our new invention. We went very near to that building and luckily noticed the writing over there. Oh My Gosh!!! We just hurried back in the same way feeling happy that no one noticed us. We realized we were wrong only when our class mates enquired what we were doing near the CK. Wondering what a CK is??? Nothing much, short form of Convenience Kings, the boyz loo!!!

