நானும் பாட்டுக் கத்துக்கறேன் பேர்வழின்னு, ஒரு மூணு மாசம் ஒரு பாட்டு பாட்டிய டெரர் பண்ண கதைய கேளுங்க…
அலங்காரம் வரைக்கு பாடியும் கூட, இந்த பிட்சு (pitch) பிரச்சனை மட்டும் சரி ஆகல…பிட்ச ஏத்தி, இறக்கறது எப்படின்னு ரொம்ப சரியா புரிஞ்சு வச்சுகிட்ட என்னோட அபாரமான இசை ஞானம் தான் அதுக்கு காரணம்.
பிட்ச்ச சரி பண்றதுக்காக, எங்க பாட்டு பாட்டி (பா.பா) ஒரு நாளு, மறுபடியும் பேசிக்ஸ்ல இருந்து ஆரம்பிச்சாங்க…
பா. பா : ச…ரி…க…ம…
நான்: ச…ரி…க…ம…
பா. பா: இன்னும் கீழ பாடும்மா…
சரின்னு நானும் கொஞ்சம் ட்ரை பண்ணி,
நான்: ச…ரி…
பா. பா: இல்ல, இல்ல, இன்னும் கொஞ்சம் கீழ...
இன்னும் கொஞ்சம் ட்ரை பண்றேன்...ஹூம், ஹூ்ம், மறுபடியும் அதே...
பா.பா: சரி, ஸ்ருதிய ஏத்தி வெக்கறேன், அதோட சேந்து பாடு, இப்ப ஆரம்பிக்கலாம், ச…
நான்: ச…
பா.பா: இல்லமா, இன்னும் கொஞ்சம் கீழ...
நான்: மாமி! இதுக்கு மேல குனிய முடியாது, இன்னும் கீழன்னா, கீழ படுத்துட்டு தான் பாடனும்…
பா.பா: ஹாஆஆ...
அடுத்த க்ளாசுக்கு போனா "பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, இன்னும் ஒரு மாசத்துக்கு க்ளாஸ் இல்ல" ன்னு அவங்க வீட்ல சொல்லிட்டாங்க.
ரெண்டு மாசத்துக்கு அப்பால...
(ஃபோனில்) பா.பா: என்னமா, திவ்யா? க்ளாஸ் மறுபடியும் ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆறது, உன்ன காணமே...
நான்: அது வந்து…மாமி…எங்க வீட்டை வேற இடத்துக்கு மாத்திடோம். க்ளாசுக்கு வர முடியாதுன்னு நினைக்கறேன்...
ஏதோ என்னால அந்த பாட்டி உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துர கூடாதேன்னு ஒரு நல்லெண்ணம் தான் :-D
P.S: நிஜமாவே, குனிஞ்சு, குனிஞ்சு உக்காந்து பாடினா, பிட்சு கொஞ்சம் கம்மியான மாதிரி தான் இருந்துச்சு :-((
Thursday, August 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
55 comments:
இந்த பதிவுல போட்டிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையே! இந்த ஒரு வசனத்த தவிர (மாமி! இதுக்கு மேல குனிய முடியாது, இன்னும் கீழன்னா, கீழ படுத்துட்டு தான் பாடனும்…) இத நான் மனசுக்குள்ளயே நினைச்சுகிட்டது, அந்த பாட்டி கிட்ட அப்ப சொல்லல, சொல்லி இருந்த என்ன ஆகி இருக்கும்ன்னு உங்களுக்கே தெரியும்ன்னு நினைக்கறேன் :)
//அடுத்த க்ளாசுக்கு போனா "பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, இன்னும் ஒரு மாசத்துக்கு க்ளாஸ் இல்ல" ன்னு அவங்க வீட்ல சொல்லிட்டாங்க.//
avvv... antha alavukku effectaa?? :O
eppaiyaavathu ungala santhikkira maathiri vanthathunna kandippaa paada mattum solla maatten :)))
நல்லவேளை அதுக்கப்புறம் நீங்க அந்த பாட்டிக்கிட்ட பாட்டு கத்துக்க போகல.. தேவையில்லாம ஒரு கொலைக் குத்ததுக்கு ஆளாயிருப்பீங்க...
\\
ஏதோ என்னால அந்த பாட்டி உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துர கூடாதேன்னு ஒரு நல்லெண்ணம் தான் :-D \\
நீங்க இவ்வளவு நல்லவங்களா!!!
உங்க நல்லெண்ணத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை திவ்யப்ரியா:))
ஹா ஹா எல்லாருக்குமே இப்படி ஒரு அனுபவமா?? இந்த DDல போடுவாங்களே பாட்டு டான்ஸ் எல்லாம் பாத்து இந்த குழந்தை ஆடிட்டே இருந்தேனாம் ..அதுனால எங்கம்மா சரி பொண்ணுக்கு கத்துகொடுப்போமேன்னு சேர்த்தா எங்க அப்பா கமென்ட் " நம்ம வீட்ல வாத்தியாரே வேண்டாம் இவளையே கொஞசம் பாஸ்டா சரிகமப சொல்ல சொல்வோம்னு" :((
சரி அதுலேர்ந்து தப்பிச்சா எங்க அம்ம என்ன விட்டது "ஹிந்தி களாஸ்"..சுத்த வெச்சுட்டீங்களா..போடறேன் என்னோட அனுபவத்தை..
\\ Divya said...
\\
ஏதோ என்னால அந்த பாட்டி உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துர கூடாதேன்னு ஒரு நல்லெண்ணம் தான் :-D \\
நீங்க இவ்வளவு நல்லவங்களா!!!
உங்க நல்லெண்ணத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை திவ்யப்ரியா:))
\\
Exactly DP :)
ரொம்ப நக்கலுங்க உங்களுக்கு..
;)
//P.S: நிஜமாவே, குனிஞ்சு, குனிஞ்சு உக்காந்து பாடினா, பிட்சு கொஞ்சம் கம்மியான மாதிரி தான் இருந்துச்சு :-((//
எப்படீங்க..??
ஏன்??
//நீங்க இவ்வளவு நல்லவங்களா!!!
உங்க நல்லெண்ணத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை திவ்யப்ரியா:))//
திவ்யப்ரியா அநியாயத்துக்கு நல்லவங்க..
//
அடுத்த க்ளாசுக்கு போனா "பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, இன்னும் ஒரு மாசத்துக்கு க்ளாஸ் இல்ல" ன்னு அவங்க வீட்ல சொல்லிட்டாங்க.
//
நல்ல வேளை இனிமே பாட்டியே இல்லைன்னு சொல்லாம விட்டாங்களே :-)
//P.S: நிஜமாவே, குனிஞ்சு, குனிஞ்சு உக்காந்து பாடினா, பிட்சு கொஞ்சம் கம்மியான மாதிரி தான் இருந்துச்சு :-((
//
அதுக்கு பதிலா பீச் மண்ணுல தலை மட்டும் வெளிய தெரியராமாதிரி ட்ரை பண்ணுங்க ..
எனக்கு பாக்யராஜ் படம் "ஏக் காங்வ் மே ஏக் கிசான் ரகு தாத்தா" ஞாபகம் வருது :))))
You still sing well Div.. enna konjam fundas correct pannnaum.. Avlo dhaan... I seriously suspect that Pa.Pa 's ears....
//நானும் பாட்டுக் கத்துக்கறேன் பேர்வழின்னு, ஒரு மூணு மாசம் ஒரு பாட்டு பாட்டிய டெரர் பண்ண கதைய கேளுங்க…//
ம் சொல்லுங்க..
//பிட்ச ஏத்தி, இறக்கறது எப்படின்னு ரொம்ப சரியா புரிஞ்சு வச்சுகிட்ட என்னோட அபாரமான இசை ஞானம் தான் அதுக்கு காரணம்.
//
யூ மீன் கிரிக்கெட் பிட்ச்..???? அதுக்கு ஏன் இசை ஞானம் வேணும்.. ஒரு மண்வெட்டி போதுமே..
//பிட்ச்ச சரி பண்றதுக்காக, எங்க பாட்டு பாட்டி (பா.பா) ஒரு நாளு, மறுபடியும் பேசிக்ஸ்ல இருந்து ஆரம்பிச்சாங்க…
//
சரி..
//பா. பா : ச…ரி…க…ம…
நான்: ச…ரி…க…ம…
//
இதுவும் சரி..
//பா. பா: இன்னும் கீழ பாடும்மா…//
இது தப்பு.. சுருதிய இறக்கி பாடும்மான்னு தெளிவா சொல்லியிருக்கனும்.. ஸோ.. தப்பு பாட்டி மேல தான்..
//நான்: மாமி! இதுக்கு மேல குனிய முடியாது, இன்னும் கீழன்னா, கீழ படுத்துட்டு தான் பாடனும்…
பா.பா: ஹாஆஆ...//
ஹாஆஆ.. ஹார்ட்அட்டாக் னு சொல்ல வர்றீங்களா??
//நான்: அது வந்து…மாமி…எங்க வீட்டை வேற இடத்துக்கு மாத்திடோம். க்ளாசுக்கு வர முடியாதுன்னு நினைக்கறேன்...//
பாட்டி எப்போ மாமி ஆனாங்க..
//ஏதோ என்னால அந்த பாட்டி உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துர கூடாதேன்னு ஒரு நல்லெண்ணம் தான் :-D
//
கண்டிப்பா.. உங்களுக்கு பாராட்டு விழாவே வைக்கலாம்.. நீங்க பாட்டிய மட்டுமா காப்பாத்திருக்கீங்க.. பாட்டு உலகத்தையே அழிவில் இருந்து காப்பாத்தின.. சின்னக் கலைவாணி திவ்யப்ரியா வாழ்க வாழ்க..
மக்களே.. சின்னக் கலைவாணிங்கிற பட்டம் நல்லா இருந்தா சொல்லுங்க.. அதயே தி.பி, க்கு வைச்சுறலாம்..
//சரி அதுலேர்ந்து தப்பிச்சா எங்க அம்ம என்ன விட்டது "ஹிந்தி களாஸ்"..சுத்த வெச்சுட்டீங்களா..போடறேன் என்னோட அனுபவத்தை..//
தும் ஹிந்தி மாலும் ஹை??
//திவ்யப்ரியா அநியாயத்துக்கு நல்லவங்க..//
அதாவது அநியாயம் செய்றவங்களுக்கு நல்லவங்க அப்புடின்னு சொல்ல வர்றீங்களா சரவணா??
//
அதுக்கு பதிலா பீச் மண்ணுல தலை மட்டும் வெளிய தெரியராமாதிரி ட்ரை பண்ணுங்க ..//
இந்த ஐடியா.. பா.பா வுக்கு தெரியாம இருக்குறது நல்லது...
சரிகமபதநி பாட்டிக்கு சாரி கமபதநி ஆயிடுச்சு போல இருக்கு! எல்லாம் சரி, இப்பவாவது பாட்டு கத்துகிட்டீங்களா இல்லையா??
\\அலங்காரம் வரைக்கு பாடியும் கூட, இந்த பிட்சு (pitch) பிரச்சனை மட்டும் \\
அதென்ன பிட்ச். ஸ்ருதின்னு சொல்லலாம்ல.
\\இன்னும் கொஞ்சம் ட்ரை பண்றேன்...\\
நல்ல வெறும் காத்துதாங்க வருதுன்னு சொல்லலியே!!
\\பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, இன்னும் ஒரு மாசத்துக்கு க்ளாஸ் இல்ல\\
இதுல ஏதோ உள் குத்து இருக்கற மாதிரி தெரியறதே!!
பாட்டி நன்னாத்தான் இருதிருப்பாங்க. திவ்யப்ரியா வரான்னு தெரிஞ்ச உடனே,"ஐயையோ அந்தப்பொண்ணா, நேக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிடுடீம்மா"ன்னு சொல்லிவச்சிருப்பாங்க.
@Raghav
//கண்டிப்பா.. உங்களுக்கு பாராட்டு விழாவே வைக்கலாம்.. நீங்க பாட்டிய மட்டுமா காப்பாத்திருக்கீங்க.. பாட்டு உலகத்தையே அழிவில் இருந்து காப்பாத்தின.. சின்னக் கலைவாணி திவ்யப்ரியா வாழ்க வாழ்க..//
repeattuuu !!
//நானும் பாட்டுக் கத்துக்கறேன் பேர்வழின்னு, ஒரு மூணு மாசம் ஒரு பாட்டு பாட்டிய டெரர் பண்ண கதைய கேளுங்க…//
ஏன் இந்த கொலை வெறி ;)
//அடுத்த க்ளாசுக்கு போனா "பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, இன்னும் ஒரு மாசத்துக்கு க்ளாஸ் இல்ல" ன்னு அவங்க வீட்ல சொல்லிட்டாங்க.//
அவங்க தான நீங்க?
@ஜி
avvv... antha alavukku effectaa?? :O
eppaiyaavathu ungala santhikkira maathiri vanthathunna kandippaa paada mattum solla maatten :)))//
:-D neenga sonnaalum naan paada maatten ;)
@மதி
//நல்லவேளை அதுக்கப்புறம் நீங்க அந்த பாட்டிக்கிட்ட பாட்டு கத்துக்க போகல.. தேவையில்லாம ஒரு கொலைக் குத்ததுக்கு ஆளாயிருப்பீங்க...//
ஆமா….நல்ல வேளை, நான் தப்பிச்சேன் :)
@Divya
//நீங்க இவ்வளவு நல்லவங்களா!!!
உங்க நல்லெண்ணத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை திவ்யப்ரியா:))//
@Ramya Ramani
//Exactly DP :)//
ஆமா! உங்களுக்கு தெரியாதா??? யாரும் சொல்லலையா? நான் ரொம்ப நல்லவ, வேணும்ன்னா எங்க அக்காவ கேட்டுப் பாருங்க ;)
@Ramya Ramani
//சரி அதுலேர்ந்து தப்பிச்சா எங்க அம்ம என்ன விட்டது "ஹிந்தி களாஸ்"..சுத்த வெச்சுட்டீங்களா..போடறேன் என்னோட அனுபவத்தை..//
ஹா ஹா…ரம்யா! நல்லா இருக்கே, இத ஒரு ஃபாஷ் பேக் போஸ்ட்டா போட்டுடுங்க…
@Saravana Kumar MSK
//ரொம்ப நக்கலுங்க உங்களுக்கு..
;)//
நான் நடந்தத அப்டியே சொன்னேன், அவ்ளோ தான்;)
//P.S: நிஜமாவே, குனிஞ்சு, குனிஞ்சு உக்காந்து பாடினா, பிட்சு கொஞ்சம் கம்மியான மாதிரி தான் இருந்துச்சு :-((//
//எப்படீங்க..??
ஏன்??//
ஒரு தடவ படுத்துட்டு பாடி பாருங்க ;)
@முகுந்தன்
//நல்ல வேளை இனிமே பாட்டியே இல்லைன்னு சொல்லாம விட்டாங்களே :-)//
ச்சே, ச்சே…பாட்டி நல்ல பாட்டு பாட்டி ;)
//அதுக்கு பதிலா பீச் மண்ணுல தலை மட்டும் வெளிய தெரியராமாதிரி ட்ரை பண்ணுங்க ..//
அட, இது நல்லா இருக்கே…
//எனக்கு பாக்யராஜ் படம் "ஏக் காங்வ் மே ஏக் கிசான் ரகு தாத்தா" ஞாபகம் வருது :))))//
ஹா ஹா :-D நான் அந்த மாதிரி அடி எல்லாம் வாங்கினது இல்லை :)
@Smriti
//You still sing well Div.. enna konjam fundas correct pannnaum.. Avlo dhaan... I seriously suspect that Pa.Pa 's ears....//
Smriti, நீ ரொம்ப நல்லவ :’(
@Raghav
//கண்டிப்பா.. உங்களுக்கு பாராட்டு விழாவே வைக்கலாம்.. நீங்க பாட்டிய மட்டுமா காப்பாத்திருக்கீங்க.. பாட்டு உலகத்தையே அழிவில் இருந்து காப்பாத்தின.. சின்னக் கலைவாணி திவ்யப்ரியா வாழ்க வாழ்க..
மக்களே.. சின்னக் கலைவாணிங்கிற பட்டம் நல்லா இருந்தா சொல்லுங்க.. அதயே தி.பி, க்கு வைச்சுறலாம்.. //
வாங்க ராகவ், ஒரு எட்டு லைன் போஸ்ட்டுக்கு, எட்டு கமெண்ட் போட்டு என் ப்ளாக வாழ வெக்குற உங்க தாராள மனச என்னன்னு சொல்றது? இதுல பட்டம் எல்லாம் வேற குடுத்து, அவ்வ்வ்வ்…உண்மையிலே, நீங்க ரொம்ப நல்லவரு :’(
@Saravana Kumar MSK
//திவ்யப்ரியா அநியாயத்துக்கு நல்லவங்க..//
@Raghav
அதாவது அநியாயம் செய்றவங்களுக்கு நல்லவங்க அப்புடின்னு சொல்ல வர்றீங்களா சரவணா??
இல்ல ராகவ், அது அப்டி இல்ல, அநியாயம் செய்றவங்க கூட என்ன பாத்தா நல்லவங்களா ஆகிடுவாங்கன்னு சொல்றாரு, என்ன சரவணா, கரெக்ட் தான? ;)
@அது சரி
// சரிகமபதநி பாட்டிக்கு சாரி கமபதநி ஆயிடுச்சு போல இருக்கு! எல்லாம் சரி, இப்பவாவது பாட்டு கத்துகிட்டீங்களா இல்லையா??//
எங்க? அன்னிக்கு ஓடி வந்தது தான்...இசை உலகம் என்னை இழந்து விட்டது :-(
விஜய் said...
// அதென்ன பிட்ச். ஸ்ருதின்னு சொல்லலாம்ல.//
நீங்க சொன்னா சரி தாங்க ;)
//இதுல ஏதோ உள் குத்து இருக்கற மாதிரி தெரியறதே!!
பாட்டி நன்னாத்தான் இருதிருப்பாங்க. திவ்யப்ரியா வரான்னு தெரிஞ்ச உடனே,"ஐயையோ அந்தப்பொண்ணா, நேக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிடுடீம்மா"ன்னு சொல்லிவச்சிருப்பாங்க.//
ச்சே ச்சே...அப்படி எல்லாம் இருக்காது, பாட்டி நல்லவங்க :-)
விஜய், நீங்க சுபேரா பாடுவீங்களோ ? ;)
@முகுந்தன
@Raghav
//கண்டிப்பா.. உங்களுக்கு பாராட்டு விழாவே வைக்கலாம்.. நீங்க பாட்டிய மட்டுமா காப்பாத்திருக்கீங்க.. பாட்டு உலகத்தையே அழிவில் இருந்து காப்பாத்தின.. சின்னக் கலைவாணி திவ்யப்ரியா வாழ்க வாழ்க..//
repeattuuu !!
எனக்கு பட்டம் குடுக்கறதுல, உங்களுக்கெல்லாம் இருக்கற ஆர்வத்த நான் பாராட்டுறேன் :-)
@ Murugs said...
// ஏன் இந்த கொலை வெறி ;)//
வழக்கமா சொல்ற பதில் தான், இருந்தாலும் நீங்க இப்ப புதுசா வர்றனால சொல்ல வேண்டியது என் கடமை...
இது கொலை வெறி இல்லங்க...கலை வெறி ;)
\\விஜய், நீங்க சுபேரா பாடுவீங்களோ ? ;)\\
என் மனைவியிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி.
http://vettivambu.blogspot.com/2008/03/blog-post_23.html
இதைப் படித்துப் பாருங்க. அதுக்கப்புறம் தெரியும் என்னுடைய சங்கீத ரசனை
இப்படி எதுவும் தனக்கு ஆகிடகூடாதுன்னு தான், நான் பாட்டு கிளாஸ் செருறேன்னு சொன்ன மறுநாளே, எங்க பக்கத்து வீட்டு பாட்டு மாமி வீட்டையே காலி பண்ணிண்டு போய்ட்டாங்க..!! :(
//வாங்க ராகவ், ஒரு எட்டு லைன் போஸ்ட்டுக்கு, எட்டு கமெண்ட் போட்டு என் ப்ளாக வாழ வெக்குற உங்க தாராள மனச என்னன்னு சொல்றது? இதுல பட்டம் எல்லாம் வேற குடுத்து, அவ்வ்வ்வ்…உண்மையிலே, நீங்க ரொம்ப நல்லவரு :’(
//
ஆமா.. நீங்க கணக்குலயும் வீக்கோ??? ஒன்பது கமெண்ட் போட்டுருக்கேன்.. நீங்க என்னடான்னா..
(திடீர் சந்தேகம்: தி.பி, ரமணி, முகுந்தன் எல்லாரும் தீத்து வைங்க: எப்பவுமே "என்னடான்னா" தானே சொல்றோம்.. "என்னடீன்னா" அப்புடின்னு சொல்றோமா?? )
//ஒரு ஃபாஷ் பேக் போஸ்ட்டா போட்டுடுங்க…//
ஆஹா அடுத்தது ஃபிளாஷ்பேக் டாக் போஸ்ட்டா??? கிளம்பிட்டாய்யா கிளம்பிட்டாய்யா
சரி Jokes Apart.. //Smriti said...
You still sing well Div..
//
ஸ்மிரிதி சொன்னா மாதிரி, ஒரு பாட்டு பாடி பதியலாமே.. எவ்வளவோ பண்றோம்.. உங்க பாட்டைக் கேக்க மாட்டோமா..
@Raghav
// (திடீர் சந்தேகம்: தி.பி, ரமணி, முகுந்தன் எல்லாரும் தீத்து வைங்க: எப்பவுமே "என்னடான்னா" தானே சொல்றோம்.. "என்னடீன்னா" அப்புடின்னு சொல்றோமா?? )//
அடடா, என்ன ஒரு சந்தேகம்…இப்ப எனக்கு ஒரு சந்தேகம், ஏன் அடடான்னு சொல்றோம், அடடீன்னு சொல்ல மாட்ங்கறோம் ;-)
@Raghav
//ஆமா.. நீங்க கணக்குலயும் வீக்கோ??? //
ஹலோ, நாங்க கணக்குல புலி...
அதென்ன ’யும்’ - explanation please ;-)
@sri
உங்களுக்கும் என் கதை தானா :-)
@ ஜோசப் பால்ராஜ்
முதுல வருகைக்கு ரொம்ப நன்றி ஜோசப்...
// நான் சின்ன பையனா இருக்கப்ப எங்க அண்ணண்கள இதவிட படுத்தி எடுத்துருக்கேன்//
அப்ப நீங்களும் ஒரு flash back பதிவ போட்டுங்க ;-)
//ஹலோ, நாங்க கணக்குல புலி...
அதென்ன ’யும்’ - explanation please ;-)//
நீங்க தானே பாட்டுல வீக்குன்னு பதிவெல்லாம் போடுறீங்க.. ஸோ.. கணக்குல வீக்குன்னு சொல்லுறத விட.. கணக்குலயும் வீக்கான்னு கேட்டேன்..
//திடீர் சந்தேகம்: தி.பி, ரமணி, முகுந்தன் எல்லாரும் தீத்து வைங்க: எப்பவுமே "என்னடான்னா" தானே சொல்றோம்.. "என்னடீன்னா" அப்புடின்னு சொல்றோமா?? //
என்ன இப்படி கேட்டுட்டீங்க ? யாராவது என்னடீனு சொல்லி, டின்னு கட்டபட்டிருப்பார்கள் , அதனால் என்னடானே தொடர்ந்திருக்கும்.
சரி, இத தீத்து வெச்சதுக்கு ஆயிரம் பொற்காசு உண்டு தானே? :-)
//நீங்க தானே பாட்டுல வீக்குன்னு பதிவெல்லாம் போடுறீங்க..
ஸோ.. கணக்குல வீக்குன்னு சொல்லுறத விட..
கணக்குலயும் வீக்கான்னு கேட்டேன்..//
நீங்க சும்மா தான் இருந்தீங்களா? தி.பி தான் அவங்களா வந்து சிக்கினாங்களா?
அவ்வ்வ்வ்.......
//என்ன இப்படி கேட்டுட்டீங்க ? யாராவது என்னடீனு சொல்லி, டின்னு கட்டபட்டிருப்பார்கள் , அதனால் என்னடானே தொடர்ந்திருக்கும்.
சரி, இத தீத்து வெச்சதுக்கு ஆயிரம் பொற்காசு உண்டு தானே? :-)//
சூப்பர் விளக்கம் முதலாளி..
"சாருக்கு ஆயிரம் பொற்காசு பார்சல்"
//சூப்பர் விளக்கம் முதலாளி.. //
இறைவன் ஒருவனே முதலாளி , உலகில் மற்றவன் தொழிலாளி :)
@ Raghav
//நீங்க தானே பாட்டுல வீக்குன்னு பதிவெல்லாம் போடுறீங்க.. ஸோ.. கணக்குல வீக்குன்னு சொல்லுறத விட.. கணக்குலயும் வீக்கான்னு கேட்டேன்..//
ஓ..அத சொன்னீங்களா…முகுந்தன் சொன்ன மாதிரி நானா தான் வந்து சிக்கிடேனா??? அவ்வ்வ்…
@முகுந்தன்
//என்ன இப்படி கேட்டுட்டீங்க ? யாராவது என்னடீனு சொல்லி, டின்னு கட்டபட்டிருப்பார்கள் , அதனால் என்னடானே தொடர்ந்திருக்கும்.
சரி, இத தீத்து வெச்சதுக்கு ஆயிரம் பொற்காசு உண்டு தானே? :-)//
செம explaination முகுந்தன்…சென்னைக்கு வந்த பிறகு கலாய்கறதுல expect ஆன மாதிரி தெரியுதே ;-)
ஆனா, உங்க விளக்கத்துக்கு கண்டிப்பா 1000 பொற்காசு குடுக்கலாம்…என் சார்பா ராகவ் அத குடுப்பார் ;-)
//உங்க விளக்கத்துக்கு கண்டிப்பா 1000 பொற்காசு குடுக்கலாம்…என் சார்பா ராகவ் அத குடுப்பார் ;-) //
பதிவு எழுதினது நீங்க.. ஸோ பொற்காசும் நீங்க தான் கொடுக்கோணும். மீ ஒன் ஸ்மால் பையன்.. ஒரு பொற்காசு வாங்குறதுக்கே ஒரு வருஷம் உழைக்க (?) வேண்டி இருக்கு.
oh eppo than theriyuthu silanal unaga vitupakam varumpothu sila satham ketkum athu neenga thana...!
:-) ethavathu katha kalasevam panirukeengala?
Gowtham
Post a Comment