Showing posts with label சீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான். Show all posts
Showing posts with label சீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான். Show all posts

Saturday, November 14, 2009

விடாது [தொடரும்] - 2

அ.பொ.தி.பி அவர்களே! கதையை ஏற்கனவே முழுசா எழுதி வச்சிட்டு, வாரத்துக்கு ஒரு முறை தான் பதிவு போடறீங்க, இது உங்களுக்கு ஓவரா இல்ல?

என் சின்ன மூளையை கசக்கி, பிழிஞ்சு, காயப்போட்டு, கஷ்டப்பட்டு யோசிச்சு சஸ்பென்ஸ் வைக்கறேன்ல? அதுக்காக தான் :))

சரி இப்ப அடுத்து என்ன கதை வரப் போகுது?

அடுத்த கதை பேரு "ஓடிப்போலாமா" இதுல, மலரே மெளனமா கதையில வர பாப்பா @ வினோத் காரெக்டர் தான் ஹீரோ. ஹீரோயின் நித்யா. ஹீரோயின் பேர் என்ன வைக்கலாம்னு ரொம்ப யோசிச்சேன், ஒன்னும் கிடைக்கல, அதான் எங்கக்கா பேரையே வச்சுட்டேன் :P sorry நித்யா :))

ஹ்ம்ம்...கேக்கறனே தப்பா நினைச்சுக்காதீங்க....இதுவும் தொடர்கதை தானா?

ஆமாங்க ஆமாம்...

ஏன் எப்ப பாரும் தொடர்கதை எழுதி கொல்றீங்க? அழகா ஒரு சிறுகதை எழுதக் கூடாதா?

என்ன பண்றது? எனக்கு வர்றத தான நான் எழுத முடியும்? இந்த கதையையே சின்னதா மூணு (?!?!) பகுதியில எழுதலாம்னு ஆரம்பிச்சேன்...ஆனா கொஞ்சம் பெருசா ஐஞ்சு பகுதி ஆகிடுச்சு :(

என்னவோ, எங்களுக்கெல்லாம் தொடர்கதை படிக்க டைமில்லை...எதுக்காக இந்த கதையை படிக்கனும்? இதுல என்ன speciality?

ஒன்னும் இல்லை...வழக்கம் போல இதுவும் காதல் கதை தான். இது நான் எழுதியிருக்கறது தான் ஒரே speciality :P

சரி சரி, மொக்கையை போடாம நிஜமான speciality என்னன்னு சொல்லுங்க...

வழக்கம் போல இல்லாம, இந்த கதையை தினமும்/alternate days ல போடலாம்னு இருக்கேன். அது தான் நிஜமான speciality :) அதனால ஒட்டுமொத்தமா கூட நீங்க வாரயிறுதியில படிக்கலாம். அப்புறம் இன்னொரு speciality கூட இருக்கே...

என்னதது?

இது என்னோட பத்தாவது தொடர் கதை!!!

ஓஓஓஓ...சூப்பர்...வெற்றிகரமாக பத்து தொடர்கதை எழுதி முடித்து விட்டதால், இன்று முதல் நீ, ’பத்து தொடர் கதை கண்ட பத்து!!!’ என்று அன்போடு அழைக்கப்படுவாய்!

நன்றி, நன்றி!!!

அப்புறம் கதைக்கு எதாவது trailer?

அதுக்கு தான இந்த பதிவ போட்டதே! :P அது இல்லாமலா?

ஓடிப்போலாமா?

வினோத் இப்படி…

"உலகத்துலையே பேத்தலான விஷயம்ன்னா அது ஒரு பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்றது தான்... எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, நீ இல்லாம எனக்கு லைஃபே இல்லை. ஒவ்வொரு நிமிஷமும் உன்னை பாத்துகிட்ட இருக்கனும் போல இருக்கு...இந்த மாதிரி வசனமெல்லாம் சத்தியமா என்னால பேச முடியாது.”

ஆனா நித்யா? அவ எப்படி?

"அவள் வாழ்விலேயே அதிகமாக சிரித்த நாட்கள் அந்த ஆறு மாதங்கள் தான் என்று தோன்றியது. என்ன தான் வானம் விரும்பினாலும், வானவில் நிரந்தரமாக வானத்திலேயா தங்கிவிடப் போகிறது? சட்டென சொல்லாமல் கொள்ளாமல் மறைந்துவிடத் தானே செய்கிறது? அதே போல் தான், என்றேனும் நிச்சயமாய் அவனை பிரிய நேரிடும், இதை பற்றி எண்ணுவதில் பயனில்லை, மெல்ல மெல்ல அவனிடம் பேசாமல் விலகியிருப்பதே தனக்கு நல்லது என்று முடிவெடுத்தாள். ஆனால் அவள் எடுத்த முடிவு, சமீப காலமாய் அவன் குரலுக்கு அடிமையாகிப் போயிருந்த அவளது கைபேசிக்கு பிடிக்கவில்லை போலும், உடனே செல்லச் சிணுங்கலாய் சிணுங்கியது. அழைத்தது அவன் தான்! மனதில் அதுவரை அடித்துக் கொண்டிருந்த புயற்காற்று, சட்டென தென்றலாய் மாற, அவள் அந்த நொடியின் முற்பகுதியில் எடுத்த முடிவை, அந்த நொடியின் பிற்பகுதியிலேயே கைவிட்டு, கைபேசியை காதருகில் வைத்து, அவளறியாமலே முகத்தில் அரும்பிய புன்னகையுடன், “ஹ்ம்ம்…” என்று மட்டும் சொன்னாள்."

trailer போதும்னு நினைக்கறேன்...மீதி ப்ளாக்திரையில் காண்க...

சரி, trailer எல்லாம் நல்லா தான் இருக்கு...கதையை எப்ப போடபோறீங்க? அத சொல்லுங்க...

அவங்கெல்லாம் என்ன சொல்றாங்கன்னு நீங்களே பாத்துகோங்க...அவங்க ஓகே சொன்னப்புறம் தான் கதையை போட போறேன்....

யாரு அந்த ’அவங்க’?

அட நீங்க தாங்க...போய் மொத்தல்ல பின்னூட்டம் போடுங்க!

P.S: இது தடை செய்யப்பட்ட பின்னூட்டம்

உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முதல் நீ, "அலப்பறை செய்யும் அல்பை" என்று அன்போடு அழைக்கப்படுவாய்!

Thursday, October 1, 2009

விடாது [தொடரும்]


என் இனிய தமிழ் ப்ளாக் வாசகர்களே!
பாசத்துக்குறிய உங்கள் திவ்யபிரியா எழுதுவது :)))


நான் ஒரு பேட்ஸ்மேனா இருந்திருந்தா, இன்னேரம் பேட் மட்டைய மேல தூக்கிப் பிடிச்சு வானத்த பாத்திருப்பேன்...ஆனா ஒரு (ப்ளாக்) போஸ்ட்மேனா இருக்கறதால், இந்த பதிவ போடறேன்...Yes, some how i've managed to reach 100 posts!!! ஆமாங்க...ஒரு வழியா நானும் 100 பதிவு போட்டுட்டேன்! :))


ஒரு வேஸ்ட்மேனா இருந்த நான் இப்ப (ப்ளாக்) போஸ்ட்மேனா ஆகி செஞ்சுரி அடிச்சிருக்கேன்னா அதுக்கு காரணம் முழுக்க முழுக்க முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத என் நண்பர்களான நீங்க தான், நீங்க மட்டும் தாங்க! (இதை பெப்ஸி உமா ஸ்டைலில் படிக்கவும்னு நான் சொல்லவே இல்லை :o )


இப்ப ஒன்பதாவது தொடர்கதை போய்ட்டு இருக்கு, இதோட போதும், ஆட்டத்த
முடிச்சுக்கலாம்னு என் அம்பயர் மனசு சொல்லுச்சு...சரி, i'll quit blogging after this shoba apts அப்டீன்னு நானும் எனக்கு தெரிஞ்ச ஒரு சில பேர்கிட்ட சொல்லி வச்சுருந்தேன். அப்பாடி, இனிமே இந்த [தொடரும்] இம்சைகள் தொடராதுன்னு அவங்களும் நிம்மதி பெருமூச்சு விட்டாங்க...ஆனா, இது என்னவோ என்னை பிடிச்ச வியாதி மாதிரி விடவே மாட்டேங்குது! ஆஃபிஸ்ல இருந்து கிளம்பும் போது கூட, பை பைக்கு பதிலா ’தொடரும்’ சொல்லிடுவேன் போல இருக்கு :( ஷோபா அபார்ட்மெண்ட்ஸே இன்னும் எழுதி முடிச்ச பாடில்லை, அதுக்குள்ள அடுத்த கதை எழுதி அதை முடிச்சிட்டேன் :( நானே நினைச்சாலும் நிறுத்த முடியல, அதனால் இனிமேலும் இம்சைகள் ’விடாது [தொடரும்]’ ;) ஏன்னா என் ப்ளாக்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாத ஒரே வார்த்தை...தொடரும்...அவ்வ்வ்வ்!!!


P.S: முதல்ல கதை போட ஆரம்பிச்சப்ப, ஒரு பாகம் முடிஞ்சு தொடரும் கூட போட மறந்த அறிவாளி தான நீ ன்னு பழம் பெரும் பின்னூட்டக்காரர்கள் சொல்வது எனக்கு காதுலையே விழல :D

இப்படிக்கு,
திக்கி திணறி நூறாவது பதிவை அடைந்தாலும்
சீனுக்கு பஞ்சமில்லாது பதிவு போடும்,
உங்கள் அ.பொ.தி.பி :P (அ.பொ ன்னா ’அருமை பொருந்திய’ :P....தி.பி யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்! )