Wednesday, March 4, 2009

அசிங்கப்பட்டான்டா ஆட்டோகாரன்!

பெங்களூர்ல ஆட்டோகாரர்கள் சில பேர் பண்ற அலட்டல பத்தி நிறைய பேர் கேள்விப்பட்டுருப்பீங்க…எந்த இடம் சொன்னாலும், வர மாட்டேன்னு சொல்றது; அதுவும் பி.டி.எம், கோரமங்களா ன்னு சொன்னா, கேவலமான ஒரு லுக்கு விட்டுட்டு, அங்கெல்லாம் வர முடியாதுன்னு சொல்றது; ரெண்டு கிலோமீட்டர் தூரம் கூட இல்லாத இடங்களுக்கு மனசாட்சியே இல்லாம, நாப்பது, ஐம்பது ரூபா கேக்கறது, இப்படி எண்ணில் அடங்கா அலட்டல் பண்றது இந்த ஊர் ஆட்டோகாரர்களின் வழக்கம். அப்பேர்பட்ட ஆட்டோகாரர்களே ஒரு சில சமயம் நம்மகிட்ட மாட்டிகிட்டு முழிச்ச சில சம்பவங்கள் தான் இந்த பதிவுல. எல்லாரும் டார்டாய்ஸ கொழுத்தி வச்சிட்டு ரெடியா இருங்க…பதிவுக்கு போவோம்.

சில மாதங்களுக்கு முன்…ஒரு நாள்….

நான் ஆபிஸ்ல இருந்து ஆட்டோவில வந்துட்டு இருந்தேன். வழக்கம் போல எங்க வீட்டு பக்கத்துல இருக்க சிக்னல்ல வெய்டிங். பெங்களூரின் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட சிவப்பு சிக்னல் பச்சையாகி, ஆட்டோ சிக்னல் பக்கத்துல போறதுக்குள்ள, மீண்டும் சிகப்பு! அந்த சிக்னல்ல இருந்து ஒரு u turn அடிச்சு, ஒரு நிமிஷம் நடந்தா எங்க வீடே வந்துடும்…சரி, மூனு நிமிஷம் இந்த சிக்னல்ல இருக்கறதுக்கு பதிலா, நடந்தே போய்டுலாம்னு நானும் ஆட்டோவ விட்டு இறங்கிட்டேன். மீட்டர்ல 21 ரூபாய். முப்பது ரூபாய எடுத்துக் கொடுத்துட்டேன். ஆனா, ஆட்டோகாரர் பாக்கி சில்லறைய திருப்பிக் குடுக்கல.

நான்: Change?

ஆட்டோகாரர்: அதெல்லாம் கிடையாது…பாதியிலேயே இறங்கிட்டீங்க…

நான்: என்னது? வீடு பக்கத்துல இறங்காம, இங்க மெயின் ரோட்லையே இறங்கிட்டேன்…உங்களுக்கு தான் அது நல்லது.

ஆ.கா: அதெல்லாம் எனக்கு தெரியாது மா…

நான்: வீடு வரைக்கும் போனாலும், இன்னும் ஒரு ரூபா தான் அதிகமாகும். change அ குடுங்க!

ஆ.கா: என்கிட்ட change இல்ல…

உடனே நான் மறுபடியும் ஆட்டோக்குள்ள ஏறி உக்காந்துட்டேன்.

ஆ.கா: என்ன?

நான்: சரி, சரி, நான் இங்க இறங்கல…நீங்க போங்க….

ஆ.கா: எங்க?

நான்: நான் ரூட் சொல்றேன்…போங்க…

ஆ.கா: எங்க இறங்கப் போறீங்கன்னு கேட்டேன்?

நான்: மீட்டர்ல முப்பது ரூபா ஆகட்டும், அங்க இறங்கிக்கறேன்!!!

ஆ.கா: ?!?!?

நான்: -----

ஆ.கா: இறங்குமா…இந்தா change...

****
இது நேத்திக்கு நடந்தது.

நாங்கெல்லாம் கடைக்கு போய்ட்டு ஆட்டோ பிடிக்க நின்னுட்டு இருந்தோம். வழக்கம் போல எல்லாரும் நாப்பது, ஐம்பதுன்னு ஜோக் அடிச்சனால, நாங்களும் கொஞ்ச நேரம் நின்னு, ஒரு வழியா ஒரு ஆட்டோவுக்குள்ள ஏறினோம். கொஞ்ச தூரம் போனப்புறம்,

ஆ.கா: 1 and half குடுத்துடுங்க…

நாங்க: என்னது? மணி 9.30 தான ஆச்சு?

ஆ.கா: அதெல்லாம் இல்ல, மணி பத்தாச்சு!

நாங்க: மூனு பேரும் வாட்ச் கட்டியிருக்கோங்க! மணி 9.30 தான் ஆச்சு…

ஆ.கா: உங்க வாட்செல்லாம் தப்பா காட்டுது…

நாங்க (மனசுக்குள்ள) : இவன் ரொம்ப பேசுறான்!!!

மறுபடியும் அதே சிக்னல், அதே u turn. ஆட்டோ சிக்னல்ல வெய்ட்டிங்.

நான்: இங்க u turn பண்ணுங்க...

ஆ.கா: என்னது u turn ஆ?

நான்: ஆமா…

ஆ.கா சலித்துக் கொள்வதை பார்த்து, என் ஃப்ரெண்ட், “பேசாம இங்கயே இறங்கிடலாம்…தேவையில்லாம ஆ.கா ஒரு ’பா’ அடிச்சு சுத்தினா தான் மறுபடியும் மெயின் ரோடு போக முடியும்”

நான்: பரவால்லை…ரொம்ப பேசுறவங்களும், இது நல்லா வேணும்! மீட்டர்ல கரெக்ட்டா ரெண்டு கிலோமீட்டர் காட்டட்டும், அப்ப இறங்கிக்கலாம்.

ஆ.கா: இங்கயே இறங்கி நடந்துபோய்டுங்க!

நான்: மணி பத்தாச்சு! எப்படி நடந்துபோறது? பஸ் ஸ்டாப்ல இருந்து நடக்கற மாதிரி இருந்துருந்தா நாங்க பஸ்லையே போயிருப்போமே? எதுக்கு ஆட்டோவுல வரணும்? மணி வேற பத்தாச்சு!

ஆ.கா அமைதியா u turn அடிச்சு, எங்க மெயினுக்குள்ள நுழைஞ்சாரு. மீட்டர்ல ரெண்டு கிலோமீட்டர் ஆனதுமே,

நாங்க: stop மாடி, stop மாடி!!!

ஆ.கா வுக்கு சரியா 14+7 ரூபாய் குடுத்துட்டு, நாங்க நாலு தெரு தள்ளியிருக்கற எங்க வீட்டுக்கு ஜாலியா நடக்க ஆரம்பிச்சுட்டோம்.

ஃப்ரெண்ட்: பேசாம இந்த தெருவுக்குள்ளையே நுழைஞ்சிடலாம். ஆ.கா வேற ஆட்டோவ எடுக்காம நின்னு, நாம எங்க போறோம்னே பாத்துகிட்டே இருக்கான்.

நாங்க: நல்லா பாக்கட்டும்!!! அசிங்கப்பட்டான்டா ஆட்டோகாரன்!

***
இதுவும் ஒரு சில மாதங்களுக்கு முன்…

ஊர்ல இருந்து திரும்பி வந்து, கண்டோன்மெண்ட்ல இறங்கி prepaid ஆட்டோவில வரும் போது நடந்தது. ஆனா, நான் எதுவும் செய்யாமலே ஆட்டோகாரர் தன்னால அசிங்கபட்டுகிட்டார் பாவம் :)

ஆ.கா: 120 ரூபா குடுத்துடுங்க…

நான்: என்னது? 85 ரூபா தான போட்டுருக்கு?

ஆ.கா: prepaid ல எல்லாம் எப்பயுமே கம்மியா தான் போடுங்க…

நான்: நானும் நிறைய வருஷமா வந்துட்டு தாங்க இருக்கேன். இப்ப வெள்ளிகிழமை வரும் போது கூட 75 ரூபா தான் ஆச்சு…

ஆ.கா: சரி, அப்ப 110 ரூபாயாவது குடுங்க…

நான்: அதெல்லாம் முடியாது, இப்படி 110, 120 குடிக்கற மாதிரி இருந்தா, எதுக்காக இத்தன நேரம் prepaid queue ல நின்னு ஆட்டோ பிடிக்கனும்? நேராவே வந்துருப்பேனே?

ஆ.கா: 110 குடுக்கலாம்…குடுங்க…

நான்: எதுவும் பேசாதீங்க…பேசாம ஓட்டுங்க (ஏன்னா இப்ப மேல சொன்ன உரையாடல் நடந்தது கன்னடத்துல, அதுக்கு மேல என்ன பேசறதுன்னு எனக்கு தெரியல!)

நான் ஃபோன எடுத்து, என் ரூம்மேட்டுக்கு கால் பண்ணி, மெலிதான குரல்ல, “prepaid queue ல நிறைய நேரம் நின்னு இந்த auto ல வந்தா…இவரு 120 கேக்கறாரு, என் கிட்ட கரெக்ட்டா 85 change இல்ல…100 ரூபா குடுத்தா, திருப்பி குடுக்க மாட்டாரு, அதனால நான் வீட்டு பக்கத்துல வந்ததும் கால் பண்றேன், நீ change எடுத்துட்டு கீழ வா…”

எங்க வீடும் வந்திடுச்சு. நான் இறங்கும்போது,

ஆ.கா: ரயில்வே போலிஸுக்கு கால் பண்ணிட்டீங்களா?

நான்: என்னது?!?!?! இல்லையே!

அப்புறம் என்ன? என் கிட்ட இருந்த 100 ரூபாயவே நான் குடுக்க, ஒன்னுமே சொல்லாம, மீதி பதினஞ்சு ரூபாய அவரு குடுத்துட்டு திரும்பி பாக்காம ஓடிட்டாரு :D

73 comments:

mvalarpirai said...

Present madam :)

mvalarpirai said...

Bangalore எவ்வளவோ பரவாயில்லைங்க ! ஆட்டோ விசயத்திலே ..சென்னை வந்து பாருங்க ! Bangalore ஆட்டோ காரங்கள கையெடுத்து கும்பிடுவீங்க அப்புறம் !

நட்புடன் ஜமால் said...

கஷ்டம் தான்

(ஆட்டோகாரர்களுக்கு)

:)

நட்புடன் ஜமால் said...

நல்ல ஆட்டோகாரர்களும் இருக்காங்க

வேணுமுன்னா

பாஷாட்ட கேளுங்க

:)

Nimal said...

பெங்களூர் ஆட்டோகாரர்களுக்கு அனுதாபங்கள்... இப்படி எல்லாம் அசிங்கப்பட வேண்டியிருக்கே...

:)

சந்தனமுல்லை said...

:-))) திவ்யா...நல்ல ROTFL அனுபவங்கள்!

கோவி.கண்ணன் said...

சுவையான அனுபவம் !

ஆட்டோகாரனுக்கே சூடு போட்டுட்டிங்க !

Vadielan R said...

இத கேளுங்க தலைவரே போன தடவை சென்னை டூ பெங்களுர் கலாசிபாளையம் காலைல ஐந்து மணிக்கு போய் சேர்ந்தேன். பேருந்து டிக்கெட் 350 ஆனா கலாசிபாளையம் டு இந்திராநகர் போக என்கிட்ட 400 வாங்கிட்டான் ஆட்டோகாரன். ஏன்டானு கேட்டா காலைல ஆறு மணிக்கு மேலதான் நார்மல் கட்டணம் இரவுக்கு டபுள்ஸ் சொல்லி புடுங்கிட்டேன். என்ன பன்றது ஆள பாக்கிறது ஒரு மாதிரி மாவா போட்டுட்டு இருந்தான் கொஞ்சம் பயமாக இருந்த்தது கொடுத்திட்டு வந்திட்டேன். என்ன் பண்றது இப்படியும் இருக்கிறார்கள்

Smriti said...

Indha third story ya yen nee enakku innum sollave ille ?? Grrrrrrrrrrrrr.........

Anonymous said...

ம்ம்ம்ம்ம்ம்

Unknown said...

திவ்யப்ரியா,

(கடைசி வரிகளையும் படிக்கவும்)

நான் ஆட்டோக்காரன்!
நான் ஆட்டோக்காரன்!
நாலும் தெரிஞ்ச ரூட்டுக்கர்ரன்!
நியாமுள்ள ரேட்டுக்காரன்!
நல்லவங்க கூட்டுக்காரன்!
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்!
காந்தி பொறந்த நாட்டுக்காரன்!
கம்பெடுத்தா வேட்டைக்காரன்!
பெரியவங்க உறவுக்காரன்!
இரக்கமுள்ள மனசுக்காரன்!
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா!

அஜக்குயின்ன அஜக்குதான்!
குமுக்குன்ன குமுக்கதான்!

அம்மா தாய்மாரே ஆபத்தில் விடமாட்டேன்!
மீட்டருக்கு மேலயும் கேட்கமாட்டேன்!
திவ்பிரியாம்மா சாத்து சாத்துன்னு சாத்திடாங்கடா!
சாத்து சாத்துன்னு சாத்திடாங்கடா!

நீங்க கைத்தட்டினா ஆட்டோ வரும் இனிமே!
மீட்டர் காட்டினத கைகட்டி வாங்குவோம்!

அஜக்குயின்ன அஜக்குதான்!
குமுக்குன்ன குமுக்கதான்!

Raghav said...

கி கி கி..

சென்னையுடன் ஒப்பிடும்போது இங்கே பெங்களூர் எவ்வளவோ பரவாயில்ல..

பக்கத்துல இருக்குற இடங்களுக்கு வரமட்டாங்க தான்.. ஆனா பஸ்ஸ விட சில சமயம் ஆட்டோ காசு கம்மி, மூனு பேரா பக்கத்துல எங்கயாவது போகனும்னா பஸ்ஸ விட ஆட்டால 5 ரூபாய் குறைவு. :)

Raghav said...

ஆட்டோக்காரங்கள நல்லா தான் சமாளிச்சுருக்கீங்க.., எனக்கு என் அருமை நண்பர்கள் தான் Pickup, drop அதனால இந்த சிக்கல் இல்லை..

புதியவன் said...

//மீட்டர்ல முப்பது ரூபா ஆகட்டும், அங்க இறங்கிக்கறேன்!!!//

ஆட்டோகாரருக்கு ஒரு நல்ல பாடம்...

மணிகண்டன் said...

கலக்கல் அனுபவங்கள். நான் என்னோட நண்பர்களோட SK கார்டன்ல (கண்டோன்மென்ட் கிட்ட) தங்கி இருந்தேன். நானும் என்னோட நண்பர்களும் ஆபீஸ் கிளம்பி ஆட்டோ தேடிக்கிட்டு இருந்தோம்.(மூணு பேர் - ஒருத்தர் மிஷன் ரோடு போகணும், நான் ரேஸ் கோர்ஸ் ரோடு போகணும், மூணாவது நண்பர் கோரமங்களா போகணும். ). ஒரு அரைமணி நேரம் ஆட்டோ கேட்டுகிட்டே நடந்துக்கிட்டு இருந்தோம்.. எங்கயும் வர ரெடியா இல்ல ஆட்டோஸ். 1 1/2 மீட்டர், மீட்டருக்கு மேல 50 ருபாய். எதுக்கும் மசியல ஆட்டோகாரர். கடைசியா ஒரு ரெண்டு கிலோமீட்டர் நடந்து கண்டோன்மென்ட் கிட்ட வந்து சேர்ந்தோம். அப்ப ஒரு ஆட்டோகாரர் எங்க பக்கத்துல வரும் போது (ஆட்டோ ஓட்டிக்கிட்டே) எங்க போகணும்ன்னு கேட்டாரு. என்னோட நண்பன் hyderabad ன்னு சொன்னான். கொடுமை என்னனா, ஆட்டோகாரர் அதையும் புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியல. மண்டை ஆட்டிட்டு வேகமா போய்கிட்டே இருந்தாரு ! (நார்மலா வராதுன்னு சொல்லமாட்டாங்க, அவங்க பாட்டுக்கு
போய்க்கிட்டே இருப்பாங்க.)

Vijay said...

ஸ்டேஷனிலிருந்தோ, பஸ் நிறுத்தத்திலிருந்தோ தான் இந்த ஆட்டோ காரர்கள் வம்பு பண்ணுவார்கள். பெண்கள் கிட்ட கொஞ்சம் அதிகமாகவே வம்பு பண்ணுவார்கள் :-)

டிராஃபிக் மிகுதியான இடங்களுக்கு அவர்கள் வர மறுப்பது கொஞ்சம் கொடுமை. அதுவும் எம்.ஜி. ரோட்டுக்கு அந்தப் பக்கம் போவதென்றால் ஆட்டோ காரர்கள் வர மாட்டார்கள். அதெ மாதிரி தான் எம்.ஜி.ரோட்டின் அந்தப் பக்கம் உள்ள ஆட்டோகாரர்கள். ஒரு முறை என் கசின், மிஷன் ரோட்டிலிருந்து கோரமங்களா வருவதற்குள் ஆட்டோகாரன் ரொம்பவே முனகிக்கொண்டு ஆடோ ஓட்டிக் கொண்டு வந்தான் என்று சொன்னார்கள்.

ஆனால் நிஜமாகவே சென்னையை விட பெங்களூர் ஆடோக்கள் பரவாயில்லை. சென்னையில் ஒரு முறை ஆடோகாரரிடமே, நீங்கள் அடிப்பது கொள்ளை என்று சொல்லிவிட்டேன் :-)

மஞ்சள் ஜட்டி said...

ஒரு முறை சென்னையில் ஆட்டோ காரர் கே.கே.நகரில் இருந்து மாம்பலம் போக 60 ரூ கேட்ட போது., என்னையா இது..மீட்டர் காசா இல்ல ஆட்டோ விளையும் சேர்த்தா?? என்றேன்..அவர்., அதுக்கு நக்கல் பண்ணாதீங்க..பெட்ரோல் போட்டு ஒட்டுரோம்ல..என்றார்.. நான் அதற்க்கு.. நாங்க மட்டும் டு-வீலர் என்ன மூத்திரதிலேயா ஒட்டுரோம்னேன்.. அவர்..அதற்க்கு...எனக்கு அது தெரியாது..என்றார்.. நான் சொன்னேன்.. அப்பா தெரிஞ்சிக்குங்க..இப்போ மீட்டர் ஐ போடுங்கன்னேன்.. மேல அஞ்சு ரோபா குடு சார் கஷ்டபடுரவன் என்றார்...கேட்டு வாங்கினா நியாயம்...demand பண்ணா அடாவடி.. மொதல்லேயே கேக்கவேண்டியது தானே என்றேன்..

பாத்து பேசுங்க...ஆட்டோ காரங்க கிட்ட..பாதி ஆட்டோ போலீஸ் காரனுக்கு தான் சொந்தம்.. இல்லேன்னா ரவுடி ஓனருங்க..நல்ல ஆட்டோகாரங்க..100 ல ஒருத்தர் தான்..

G3 said...

Vevaramaa thaan irukkeenga :))) Pozhachikkuveenga :)

முரளிகண்ணன் said...

சுவையா சொல்லியிருக்கீங்க. இது உண்மைதான்னா நீங்க தைரியசாலிதான்

வாழவந்தான் said...

//
நான்: எதுவும் பேசாதீங்க…பேசாம ஓட்டுங்க (ஏன்னா இப்ப மேல சொன்ன உரையாடல் நடந்தது கன்னடத்துல, அதுக்கு மேல என்ன பேசறதுன்னு எனக்கு தெரியல!)
//
கன்னடா நல்ல தெரிஞ்சா 85 ரூபாய்க்கு 58 ரூபா குடுத்தாலும் குடுத்திருபீங்க.


//
அப்புறம் என்ன? என் கிட்ட இருந்த 100 ரூபாயவே நான் குடுக்க, ஒன்னுமே சொல்லாம, மீதி பதினஞ்சு ரூபாய அவரு குடுத்துட்டு திரும்பி பாக்காம ஓடிட்டாரு
//
இன்னுமா பெங்களூரு உங்கள நம்புது??

நீங்க சென்னையில ஆட்டோல போனதில்லையா?
இங்க எல்லாம் ஆட்டோ முன்னாடி எலுமிச்சை பழம் கட்டுற மாதிரி ஆட்டோ உள்ள மீட்டர் வெச்சிருப்பாங்க அவளோதான். உங்க ஊருல மீட்டர் போட்டு ஓட்டுறாங்களே சந்தோஷபடுங்க!!

வாழவந்தான் said...

பாருங்க விஜய் சாருக்கு அனுபவம் பேசுது :-)

FunScribbler said...

ரொம்ம்ம்ம்ம்பப தைரியம் தான் போங்க உங்களுக்கு!:)

இராம்/Raam said...

கொஞ்சநாளாதான் பெங்களூரூ ஞாபகம் இல்லாமே இருந்தேன்..... பத்த வைச்சிட்டியே பரட்டை... :((

Anonymous said...

சென்னையை விட பெங்களூரில் ஆட்டோ சீப் என்று சொன்னார்கள் உண்மைதான்
ஆனால் பெங்களூரில் எந்த இடத்துக்கு போக வேண்டும் என்றாலும்
வரவே மாட்டேன் என்கிறார்கள்... யாரிடம் போய் முறையிட முடியும்...?
மீட்டருக்கு மேல் தருகிறேன் என்றாலும் இரவு இல்லை பகல் இல்லை எப்போதும்
வந்துத் தொலைய மாட்டேன் என்கிறார்கள்...
நம் சென்னைக்காரர்கள் எவ்வளவோ மேல்... கையெடுத்துக் கும்பிடணும்...
என்ன... ஒரே ஒரு பிரச்சனை... எங்கு வேண்டுமானாலும் வருவார்கள்...
சொத்தை மட்டும் அவர்களுக்கு எழுதி வைக்க வேண்டும்...
அம்புடுத்தேன்....

gils said...

:(( ithu epo postineenga..remmmba latea vanten pola :) but neenga semma adavadi aasami pola..autoklaranukay water katirukeenga..30 rs matterlam twenty much :)) kalkiturkeenga..aana chennaila vanthu ithaye try panni parunga..senthamizh sollagarathila neria varthai kathupeenga

மேவி... said...

நான் ஆட்டோகரங்க கிட்ட சென்னைல பண்ணின லொள்ளு மாதிரிஎ இருக்கு இந்த பதிவு.....
college hostel days எல்லாம் என்னக்கு நியாபகம் வந்துருச்சு......


nalla eluthi irukkinga....

அதை விட ஒரு வாட்டி ஹம்பி ல நானும் என் நண்பனும் ஒரு ஆட்டோ டிரைவர் கிட்ட கன்னடம் தெரியாம வழியை சொல்லி.... அவர் வேற இடத்திற்கு கொண்டு பொய் எங்களை கொண்டு விட்டுட்டார்....

அப்புறம் நாங்க இங்கிலீஷ் - கன்னடம் ல பேசி அமௌன்ட் செட்டில் பண்ணினதை நினைச்ச .... இப்போவும் சிரிப்பா வருது.....


ஆனா ஒரு சமயத்தில் பெங்களூர் ல வழி தெரியாம மாட்டிகிட்ட போது தான்
ஒரு ஆட்டோ டிரைவர் வழி எல்லாம் சொல்லி அனுப்பினார்.... அவர் ரயில் ஸ்டேஷன் க்கு கொண்டு போய் விட்டதற்கு காசே வாங்கவில்லை

சரவணகுமரன் said...

//ஆ.கா: எங்க இறங்கப் போறீங்கன்னு கேட்டேன்?

நான்: மீட்டர்ல முப்பது ரூபா ஆகட்டும், அங்க இறங்கிக்கறேன்!!!
//

ஹலோ! இப்படி எல்லாம் விளையாடாதீங்க... எங்காச்சும் கடத்திட்டு போயிட போறான்...

Ramya Ramani said...

ஏங்க நீங்க திவ்யபிரியாவா?? இல்ல கேடிப்பிரியாவா??? ;)
Just Kidding!!

ரசித்துப்படித்தேன் !

Vidhya Chandrasekaran said...

சிரித்து மகிழ்ந்தேன்:)

Unknown said...

இந்த ஆட்டோகாரர்களை நல்லா கையாள்றீங்க; அந்த கடைசி ஃபோன் மேட்டரு சூப்பர்! நான் பெங்களூரு, சென்னை இரண்டு இடத்துலியுமே ஆட்டோல நிறைய போனதுனால, சென்னை தான் பண விஷயத்துல ரொம்ப மோசம். சென்னையில் போலிஸ் (அ) ரவுடி ஓனர் என்பது சரி தான்; மீட்டர் போடச் சொன்னால் வெசவு விழும்; ஒருவரிடம் குறைத்துக் கேட்டால், ஆட்டோ ஸ்டாண்டில் இருக்கும் யாருமே வர மாட்டார்கள்.

பெங்களூருவில் “தமிளு மாத்தாடிதறே, அஷ்டே!”. அப்படிப்பட்ட கொள்ளையர்களில் பலர் தமிழ் ஆட்டோ டிரைவர்கள் என்பது கசப்பானது:-(

anbudan vaalu said...

:)))
funny.......

நந்தா said...

தைரியமா கையாண்டிருக்கீங்க. ரசித்துப் படித்தேன்.

http://blog.nandhaonline.com

முகுந்தன் said...

//ஏங்க நீங்க திவ்யபிரியாவா?? இல்ல கேடிப்பிரியாவா??? ;)
Just Kidding!!

//

Repeat!!

முகுந்தன் said...

நான் சென்னையில் ஆட்டோகாரரிடம் ஒருமுறை எனக்கு உங்க ஆட்டோ வேண்டாம் , என்னை இறக்கி விட்டால் போதும் என்று சொல்ல,
அவர், நீ ஆட்டோவ வாங்கிடுவியா என்று எகிற, நான் அதற்கு இங்க பக்கத்துல இருக்கற இடத்துக்கு 150 ருபாய் குடுக்கலாம்னா ஆடோவையும் அதே விலைக்கு வாங்கலாம்னு சொன்னேன். பின்னர் அடங்கி விட்டார்.

ஜியா said...

//கொஞ்சநாளாதான் பெங்களூரூ ஞாபகம் இல்லாமே இருந்தேன்..... பத்த வைச்சிட்டியே பரட்டை... :((
//

Repeatye..

one and three ok... second incident enakku sariyaa puriyalaiye :((

சிம்பா said...

ஆட்டோகாரர்கள் சங்கம் ஆப்பு வைக்க தேடுவதாக ஒரு தகவல்...

ஆமாங்க திவ்யா.. ஒரு முறை hydrabadi maal ல இருந்து இரவு கிளம்பும் போது ஆடோக்காரர் இரண்டு மடங்குக்கு மேல் பணம் கேட்டார்.. நண்பன் எதுவும் பேசாமல் ஏறினான். எனக்கோ புரியவில்லை. பிறகு நாங்கள் இறங்க வேண்டிய தெருவுக்கு பக்கத்துக்கு தெருவில் இறங்க சொன்னான். ஆடோவை வைட்டிங் போட்டு ஒரு சின்ன கடைக்குள் நுழைந்தான். ஆற அமர இருவரும் காபி குடித்துவிட்டு நேராக அடுத்த பக்க கதவு வழியாக எங்க ஊட்டுக்கு escape..

போற வழியில்சொன்னான். இவங்களுக்கு t.shirt um jeans um போட்டிருந்தா நோட்டடிகிற பரம்பரைன்னு நினைப்பு..... அப்படியே போகட்டும் வாடா .... ;)

பழூர் கார்த்தி said...

பாம்பேயில் இந்த பிரச்சினையே இல்லை.. எல்லாமே மீட்டர்தான்.. ஒரு பேச்சும் இல்லை.. பெரும்பாலான ஆட்டோகாரர்கள் நியாயமாய் நடந்து கொள்கிறார்கள்.. சூடு வைப்பதில்லை..

Anonymous said...

oru thadava autola officela irubhu konja dhooram ponadhukku aprom auto kaaran idha roadla pogave pudiyaadhunnu pidivaadham pidikka naama erangi kaasu kudukaaka thirumbi paakama nadandhu vandhu vera autola ponadhu gnyabagam irukka? :)

Rajalakshmi Pakkirisamy said...

Chennai ku B'lore paravaillanga :) :)

Unknown said...

Chennai evlovo male.. Bang konjam mosam dhaan auto vishayththula... indha kodumai ellam naanum anubavichen 3 months... Bang-la auto-va vida meter vegamaa odum.. ;))))

பட்டாம்பூச்சி said...

சேம் பிளட். கலக்கலா எழுதி இருக்கீங்க :))).

MSK / Saravana said...

ரொம்ப தைரியம் உங்களுக்கு..

இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருக்கவும்..

MSK / Saravana said...

// Ramya Ramani said...
ஏங்க நீங்க திவ்யபிரியாவா?? இல்ல கேடிப்பிரியாவா??? ;) //

இதிலென்ன சந்தேகம், ரம்யா, உங்களுக்கு?

நசரேயன் said...

உண்மை. பெங்களுரு ஆட்டோகாரங்க தொல்லை தாங்க முடியாது, சரியான சாட்டை அடி

Pranav said...

Enna koduma sir ithu???
Chennai la vanthu oru 1 year thangittu ponga madam... Ella auto driversum thirunthiduvaanga,.,,

Divyapriya said...


mvalarpirai said...
//Bangalore எவ்வளவோ பரவாயில்லைங்க ! ஆட்டோ விசயத்திலே ..சென்னை வந்து பாருங்க ! Bangalore ஆட்டோ காரங்கள கையெடுத்து கும்பிடுவீங்க அப்புறம் !//

நீங்க சொல்றது உண்மை தான் :)

---------
நட்புடன் ஜமால் said...
//நல்ல ஆட்டோகாரர்களும் இருக்காங்க
வேணுமுன்னா
பாஷாட்ட கேளுங்க//

பாட்ஷா அளவுக்கு நல்ல ஆட்டோ காரங்கெல்லாம் எங்க இருக்காங்க? :)
---------
நிமல்-NiMaL said...
//பெங்களூர் ஆட்டோகாரர்களுக்கு அனுதாபங்கள்... இப்படி எல்லாம் அசிங்கப்பட வேண்டியிருக்கே...//

பெங்களூர் வந்து ஆட்டோ பிடிச்சு பாருங்க…அப்புறம் உங்க அனுதாபங்கள மாத்திக்குவீங்க…
---------
சந்தனமுல்லை

Thanks முல்லை….

Divyapriya said...


கோவி.கண்ணன்/ வடிவேலன் .ஆர்/ pukalini/ மணிகண்டன்/ கிடுக்கி/ இராம்/ aam/ Anonymous/ சரவணகுமரன்/ வித்யா/ கெக்கே பிக்குணி/ anbudan vaalu/ நந்தா/ பட்டாம்பூச்சி/ இராஜலெட்சுமி பக்கிரிசாமி/ பழூர் கார்த்தி

முதல் வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி! தொடர்ந்து படிச்சு, மறக்காம உங்க பின்னூட்டங்களையும் போடுங்க…
---------
Smriti
சொல்ல மறந்த கதை :)
---------
கே.ரவிஷங்கர்
பாட்டு சூப்பரா இருக்கு…
---------
Raghav

ஆமா ராகவ், எங்க கூப்பிட்டாலும் வரலைன்னா தான் அவங்க பெங்களூர் ஆட்டோகாரர்கள்….
---------
புதியவன் said...
//ஆட்டோகாரருக்கு ஒரு நல்ல பாடம்...//

ஆமா :)
---------
விஜய் said...
//பெண்கள் கிட்ட கொஞ்சம் அதிகமாகவே வம்பு பண்ணுவார்கள் :-)//

அப்படியா? கஷ்டம் தான்…
---------
G3 said...
//Vevaramaa thaan irukkeenga :))) Pozhachikkuveenga :)//

ஹீ ஹீ…சாதுவா இருந்த என்னை இப்படி அடாவடியா மாத்தின பெருமை இந்த ஊர் ஆட்டோ காரர்களையே சாரும…நான் ஒரு ஆட்டோகாரரிடம் பேசினத பாத்து எங்க அம்மாவே மிரண்டுட்டாங்க :)

Divyapriya said...


முரளிகண்ணன் said...
//சுவையா சொல்லியிருக்கீங்க. இது உண்மைதான்னா நீங்க தைரியசாலிதான்//

உண்மை தான்…ஆனா ரொம்ப தைரியசாலி எல்லாம் கிடையாது :)
---------
வாழவந்தான் said...

//நீங்க சென்னையில ஆட்டோல போனதில்லையா?
இங்க எல்லாம் ஆட்டோ முன்னாடி எலுமிச்சை பழம் கட்டுற மாதிரி ஆட்டோ உள்ள மீட்டர் வெச்சிருப்பாங்க அவளோதான். உங்க ஊருல மீட்டர் போட்டு ஓட்டுறாங்களே சந்தோஷபடுங்க!!//

ஒழுங்கா மீட்டர் system இருக்கற ஊர இந்த மாதிரி சில பேர் கெடுக்கறதும் தப்பு தான?

---------
Thamizhmaangani said...
//ரொம்ம்ம்ம்ம்பப தைரியம் தான் போங்க உங்களுக்கு!:)//

:-D
---------
gils said...
//30 rs matterlam twenty much :)) kalkiturkeenga..aana chennaila vanthu ithaye try panni parunga..senthamizh sollagarathila neria varthai kathupeenga//

ஹா ஹா :D அந்த தப்ப நான் பண்ண மாட்டேன் :)

---------
MayVee

நன்றி MayVee

---------
Ramya Ramani
//ஏங்க நீங்க திவ்யபிரியாவா?? இல்ல கேடிப்பிரியாவா??? ;)
Just Kidding!!
ரசித்துப்படித்தேன் !//

இதுக்கெல்லாம் நான் ஃபீல் பண்ண மாட்டேன் ரம்யா…எனக்கு இருக்கற பல பேர்ல இது இன்னொரு பேர்…அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ;)

Divyapriya said...


முகுந்தன் said...
சூப்பர் முகுந்தன், ஆட்டோகாரருக்கு நல்லாவே பல்ப் குடுத்திருக்கீங்க…அதுவும் சென்னையில!!!

---------
ஜி said...
//
//கொஞ்சநாளாதான் பெங்களூரூ ஞாபகம் இல்லாமே இருந்தேன்..... பத்த வைச்சிட்டியே பரட்டை... :((
//

Repeatye.. //

அப்ப இங்க வந்துட வேண்டியது தான ;)

//one and three ok... second incident enakku sariyaa puriyalaiye :((//

அந்த 2nd incident ல நாங்கஆட்டோ காரர தேவையில்லாம சுத்த விட்டோம் ன்னு வச்சுக்கலாம் :)

---------
சிம்பா
//ஆட்டோகாரர்கள் சங்கம் ஆப்பு வைக்க தேடுவதாக ஒரு தகவல்...//

அப்படியா? சூப்பர் :)

---------
Vishnu
அத மறக்க முடியுமா?? :) அந்த ஆட்டோகாரர் மாதிரி ஒரு லூச இது வரைக்கும் கூட நான் பாக்கல விஷ்னு :) but may be, after that incident only, I got the courage to face such things :) so kudos to that auto driver…

Divyapriya said...


ஸ்ரீமதி
//Chennai evlovo male.. //

எல்லாரும் சென்னைக்கு பெங்களூர் மேல் ன்னு சொல்லும் போது, இப்படி ஒரு மாற்று கருத்து சொன்ன செம்மன செம்மல் universal தங்கச்சி ஸ்ரீமதிக்கு எல்லாரும் ஒரு ஓ போடுங்கப்பா :)
----------
Saravana Kumar MSK
//ரொம்ப தைரியம் உங்களுக்கு..
இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருக்கவும்..//

சரிங்க தம்பி :)

----------
நசரேயன்

ஆமா நசரேயன்…வர வர அப்படி தான் இருக்கு :(
----------
Pranav
//Enna koduma sir ithu???
Chennai la vanthu oru 1 year thangittu ponga madam... Ella auto driversum thirunthiduvaanga,.,,//

அப்படியொரு risk எல்லாம் எடுக்க மாட்டேன் :) நீங்கெல்லாம் இருந்தே திருந்தாத சென்னைய நான் போயா திருத்த முடியும்? ;)

MSK / Saravana said...

//Divyapriya said...

Saravana Kumar MSK
//ரொம்ப தைரியம் உங்களுக்கு..
இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருக்கவும்..//

சரிங்க தம்பி :)//

இன்னாது.. தம்பியா..!!!!!!!!!!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

DP, நான் யாருக்கும் அண்ணனோ தம்பியோ கிடையாது. கிடையாது.. ஒரு பேச்சுக்கு கூட அப்படி சொல்லக்கூடாது.. நண்பர்களாக இருப்போம்.. ஓகே வா??

Divyapriya said...

Saravana Kumar MSK
//நான் யாருக்கும் அண்ணனோ தம்பியோ கிடையாது. கிடையாது.. ஒரு பேச்சுக்கு கூட அப்படி சொல்லக்கூடாது..//

ஏன் இப்படி? அவ்வ்வ்வ்...சரிங்க friendu :) இப்ப ஓகேவா? :))

MSK / Saravana said...

//Divyapriya said...
ஏன் இப்படி? அவ்வ்வ்வ்...சரிங்க friendu :) இப்ப ஓகேவா? :))//

இப்போ.. டபுள் ஓகே.. :)

Karthik said...

இன்னிக்கு என்ன ஆட்டோ ஸ்பெஷலா? இப்பதான் சென்னை ஆட்டோ சரியில்லை, பெங்களூர் பரவாயில்லைனு படிச்சிட்டு வர்றேன்.

எனிவே, கலக்கல் அனுபவம்.
:))

*இயற்கை ராஜி* said...

கலக்கல் அனுபவங்கள்:-)))))))))

Karthik said...

naan autokaaran autokaaran naalum therinja routukaaram nyayam ILLA ratekaaran!!!

Karthik said...

!st kalaai weightu

2nd kalaai maasu

3rd kalaai gethu

Ungala maadhiri naathukku 100 divya irunda podhum, INDIA munneridum!!

Namadhu DIVYA akka sinnam AUTO sinnam!! vaakaalipeer!!

Anonymous said...

ம்ம் எல்லோரும் அப்படி இருக்க மாட்டாங்க. ஆனா அப்படி இருக்கறவங்களுக்கு நல்ல பாடம் தான் இது.

Anonymous said...

happy womens day

வெட்டிப்பயல் said...

கலக்கல்மா...
இப்படி தான் இருக்கனும். நம்ம பரிதாபப்பட்டா கடைசியா நமக்கு ஆப்பு அடிச்சிடறாங்க. அது தான் இங்க பிரச்சனை.

Unknown said...

//Divyapriya said...

ஸ்ரீமதி
//Chennai evlovo male.. //

எல்லாரும் சென்னைக்கு பெங்களூர் மேல் ன்னு சொல்லும் போது, இப்படி ஒரு மாற்று கருத்து சொன்ன செம்மன செம்மல் universal தங்கச்சி ஸ்ரீமதிக்கு எல்லாரும் ஒரு ஓ போடுங்கப்பா :)//

கிர்ர்ர்ர்ர்ர்... ஆட்டோ விஷயத்துல சென்னை ஓகே-ன்னு சொன்னேன்... பெங்களூர்ல எல்லாம் நான் பார்த்த வரைக்கும் ஆட்டோவ விட மீட்டர் தான் வேகமா ஓடுது... கேட்டதுக்கு உங்க ஊர்ல மீட்டரே இல்ல.. நீங்க இதெல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டார் ஒரு ஆட்டோமேன்.. :))

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Divyapriya said...
This comment has been removed by the author.
gayathri said...

:))))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா! அருமை!!

Sanjai Gandhi said...

//நான்: மீட்டர்ல முப்பது ரூபா ஆகட்டும், அங்க இறங்கிக்கறேன்!!!//

ஒரு குருப்பாத் தான்யா சுத்திட்டு இருக்காங்க.. :))

3 மேட்டருமே சுவாரஸ்யமா இருந்தது.. பசங்க கூட இந்த தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்றதில்லை.. :))

Anonymous said...

அசிங்கப்பட்டுட்டாங்களா ஆட்டோக்காரங்க...! :)

இணைந்த கரங்கள்!! said...

ஆட்டோகரனையே....ஆடவைக்கும்..... ஆளு போல.........!! ( நம்ம ஊருல கேட்கறத குடுத்துப்புட்டு..... அடுத்த ஊரு நியாயவான்கல...இப்படி பண்ணலாமா?..... அப்படியே கோவைக்கு வந்து உங்க கைங்கரியத காமிக்கணும்!!)

Poornima Saravana kumar said...

பெரிய ஆளுதான் நீங்க!!!
எவ்ளோ பெரிய்ய்ய பண்னா கொடுத்திருக்கீங்க:)))

ஆட்டோக்காரர்களின் அட்டகாசம் எப்போதுதான் அடங்குமோ!!!!

*இயற்கை ராஜி* said...

ha..ha..ha..

கருணாகார்த்திகேயன் said...

ரொம்ப ரசிச்சு சிரித்தேன்

அன்புடன்
கருணாகார்த்திகேயன்

sri said...

havent lived in bangalore , but being chennaite i can relate to it clearly. Super comedy ponga - your writing style is really good

sri said...

Raghavan said

//எனக்கு என் அருமை நண்பர்கள் தான் Pickup, drop அதனால இந்த சிக்கல் இல்லை..
//

edhukellamkuda aal vachirukaanga ba