பகுதி 1
"எத்தன தடவை சொன்னேன்! ஒடம்ப குற டீ!ஒடம்ப குற டீன்னு. இப்ப பாத்தியா?" வித்யவோட அம்மா, விஜயா வீட்ல இருந்து வர வழியெல்லாம் பொலம்பிட்டே வந்தாங்க.
"ஏய்! கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்ட? என் பொண்ண குண்டுன்னு சொன்னான்னா அவனுக்கு கண்ணு தெரியலன்னு அர்த்தம்" இது விஸ்வநாதன்.
இப்டி அப்பாவும் அம்மாவும் மாறி மாறி பேசிட்டு இருந்தாலும், இங்க நடக்கறதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கற மாதிரி ஒரு பெரிய லேஸ் பேகட்டை காலி பண்ணிட்டு இருந்தா வித்யா.
"ஏண்டி? நான் ஒருத்தி இங்க கத்திட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு கொரிசிட்டு இருக்கே? இப்ப எதுக்கு கண்டதே திண்ணுட்டு இருக்கே?"
"சும்மா, கொழந்தைய எதுக்கு திட்டற?"
"ஆமா! கொழந்தை! தூக்கி மடில வச்சிட்டு கொஞ்சுங்க...நான் அப்பயே சொன்னேன், உங்க தங்கச்சி கிட்ட ஒரு வார்த்தை கேளுங்கன்னு, இப்ப பாத்தீங்களா, என்ன ஆச்சு?"
"நல்ல வேலை நானா போய் கேக்கலே..."
"ச்சே, உங்க தங்கச்சி சொல்லும் போது ஒரு நிமிஷம் எவ்ளோ சந்தோஷப் பட்டேன் தெரியுமா? நம்ம கண்ணு முன்னாடி வளந்த பய்யன், சொந்த அத்த வீட்டுக்கு அனுப்ச்சா, பொண்ண தங்கமா பாதுக்குவாங்கன்னு ஏதேதோ கற்பனை பண்ணிட்டேன்...எல்லாம் இந்த எரும மாடால போச்சு...எதாவது ரியாக்ஷன் குடுக்குதா பாருங்க?, சும்மா எதையாவது தின்னுக்கிட்டே இரு...இதையெல்லாம் கல்யாணம் பண்ணி குடுத்து நான் யார் வாய்ல எல்லாம் விழப் போறனோ..."
"இப்ப எதுக்கு தேவை இல்லாம கத்திட்டு இருக்க? என் தங்கச்சிய அவங்க வீட்டுக்கு கல்யாணம் பண்ணி குடுத்து நாங்க பட்ட கஷ்டம் போதாதா? இதுலே என் பொண்ண வேற அவங்க வீட்டுக்கு கட்டி குடுக்கனுமா? அதுவும் விவேக் என் தங்கச்சி மாதிரி இல்லவே இல்ல, அப்டியே அவங்கப்பன மாதிரி!"
"ஆமா...உங்க தங்கச்சி மட்டும் ரொம்ப தான்..."
"என்ன அங்க முனகல்? என் பொண்ணுக்கு எப்பேர்ப்பட்ட மாப்ள பாக்கனும்னு எனக்கு தெரியும், சும்மா தங்கச்சி பய்யன், ஆட்டுக்குட்டி பய்யன்னு எதாவது சொன்ன, அவ்ளோ தான், சொல்லிட்டேன்..."
"வித்யா மா..."
"என்ன பா?"
"உன்ன வேற அங்க கூட்டிட்டு போய் ரொம்ப எம்பேரஸ் பண்ணிட்டேன், சாரி மா..."
"ச்சே, என்னப்பா நீங்க, சாரி எல்லாம் கேட்டுகிட்டு...விவேக் இப்டி சொல்லுவான்னு எனக்கு முன்னாடியே தெரியும், அத்த தான் பாவம், அவங்க முகமே ஒரு மாதிரியா ஆய்டுச்சு"
'ஆமா...என் தாங்கசிக்கு வந்ததும் சரியில்ல, வாச்சதும் சரியில்ல"
விஸ்வநாதன் தங்கச்சி விஜயாவுக்கு வாச்சது, இங்க நடந்தது எதுவுமே தெரியாம, யு.எஸ்ல உக்காந்துட்டு ஜி-டாக்ல நல்லா கடல போட்டுட்டு இருந்துச்சு...
"டேய்! யார்ரா போன்ல?" இது விவேக்கோட நண்பன் தினேஷ்.
"எங்கம்மா டா"
"அம்மாவா? இப்ப தான அரை மணி நேரம் முன்னாடி பேசிட்டு இருந்த?"
"ஆமா டா, இந்த காமெடிய கேளு, எங்கம்மா திடீர்ன்னு போன் பண்ணி, என் மாமா பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேக்குறாங்க..."
"மாமா பொண்ணா? டேய் மச்சான்...சொல்லவே இல்ல, எப்படா?"
"என்னது?"
"கல்யாணம் தான்"
"சும்மா இருடா நீ வேற, அதெல்லாம் ஒண்ணும் இல்ல"
"ஏண்டா? பொண்ணு நல்லா இருக்காதா?"
"அதெல்லாம் நல்லா தாண்டா இருப்பா"
"அப்பறம் என்னடா? எத்தன பேருக்கு இப்டி மாமா பொண்ணு கரக்ட்டா செட் ஆகும்? பேசாம ஓகே சொல்லிடுடா"
"போடா, அவ ஒரு ரத்தக்காட்டேரி!!!"
"என்னது? ரத்தக்காட்டேரியா? என்ன டா சொல்ற?"
அதுக்குள்ள விவேக்கு போன் வரவே, அவன் போன்ல கடலைய கண்டின்யு பண்ண ஆரம்பிச்சிட்டான்.
அன்னிக்கு விஜயா வீட்ல இருந்து வந்தப்பறம் விஸ்வநாதனும் வித்யா கல்யாணத்தப் பத்தி அவர் தங்கச்சி கிட்ட எதுவும் பேசல, விஜயாவும் எதுவும் வாய திறக்கல...
சொன்ன மாதிரியே விஸ்வநாதன், வித்யாவுக்கு பெரிய இடத்துல மாப்ள பாத்துட்டாரு. யு.எஸ் மாப்ள, ரெண்டு மாசத்துல கல்யாணம்னு எல்லா வேலையும் பரபரப்பா நடந்துட்டு இருந்துச்சு.
ஒரு நாள் விவேக், லேப்டாப்ல ஏதோ போடோஸ் பாத்துட்டு இருந்தான்.
தினேஷ் அத பாத்துட்டு, "என்னடா போடோஸ் இது?"
"என் கசின் வித்யா என்கேஜ்மேன்ட் போடோஸ் டா. .."
"என்கேஜ்மேன்ட்ஆ? எங்க மாப்ளையே காணோம்?"
"ஆமா டா, அவரு இங்க தான் இருக்காரு, கல்யாணத்துக்கு தான் இந்தியா போவாராம்"
"ஓஒ...நீயும் போறியாடா?"
"போகாமே? போடோஸ் பாரேன், சூப்பரா இருக்காள்ல? கல்யானம்ன உடனே இந்த பொண்ணுக எல்லாம் எதாவது பண்ணி பிகர் ஆய்ட்றாங்க...ஹ்ம்ம், ஜஸ்ட் மிஸ் டா"
"பிகரா? அடப் பாவி!!! அவளுக்கு என்கேஜ்மேன்ட் ஆய்டுச்சுடா!!!"
"அதனால என்ன? கல்யாணம் ஆகுற வரைக்கும் சைட் அடிக்கலாம், தப்பில்லை..." கண்ணடிச்சு, சிரிச்சுக்கிட்டே சொன்னான் விவேக்.
[தொடரும்]
பகுதி 3
Sunday, June 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
onnoda writing drathukku thani identity create panni trend set pandra pola.... typical aa nee pesara madiriye ezhudhirukka.. usage of words i mean..to a great extent kadhai nee solla solla kekkara effect kudukkudhu.. good going..
yeah, thats the thing which everyone tells, i write like how i speak only...vera maadhiri ezhudha enakku theriyalaye smriti :(
Post a Comment