Saturday, August 16, 2008

எத்தனை விதங்களில் மனிதர்கள்!

வாரா வாரம் ரெண்டு நாள் லீவ் வருது. இந்த ஆகஸ்ட் 15 சேத்து , ஒரே ஒரு நாள் தான அதிகம்? அதுக்கு போய், லாங் வீகெண்ட், லாங் வீகெண்ட்ன்னு குதியாட்டம் போட்டுக்கிட்டு, பைய்ய தூக்கின கும்பல்ல, நானும் அடக்கம்.

எட்டு மணிக்கு, கொட்ற மழைல, வீட்ட விட்டு கிளம்பி, ஒன்பது மணிக்கு ஆட்டோ கிடைச்சு, 10.30 மணி வரைக்கும் மினர்வா சர்க்கிள் பக்கத்துல வாழ்க்கைய வெறுத்து, பெங்களூரு ட்ராஃபிக்க சபிச்சு, மெஜஸ்டிக் போய் சேரும் போது மணி 10.45.

இப்படி சாகசம் புரிஞ்ச ஆட்டோ காரர பாராட்டி, 300 ரூபாயா குடுத்துட்டு (அழுதுட்டு?!?!?), தல தெறிக்க ஓடி வந்து பாத்தா, 10.45 மணிக்கு வர வேண்டிய பஸ், சரியா அதுகாலை மூணு மணிக்கெல்லாம் வந்துடுச்சு!

இப்படி கெம்ப்பே கௌடா பஸ் ஸ்டாப்ல போட்ட நைட் அவுட்ல, நான் பாத்தா ஆச்சர்யமான மனிதர்கள்/நிகழ்வுகள்..., அப்பறம் அழகான மனிதர்கள்/நிகழ்வுகள்...இதெல்லாம் ஒரு பதிவா இங்கே...

முதல்ல ஆச்சர்யமான மனிதர்கள்/நிகழ்வுகள்

1. சுத்தியும் ஒரே சேறு, சகதி...பஸ்களின் ஹார்ன் சத்தம், புகை, நெடி...நள்ளிரவு தாண்டியும் பஸ் வராத கடுப்பு...பேக கீழ கூட வெக்க முடியாம கைல தூக்கிட்டே நிக்க வேண்டிய நிலைமை...இதெல்லாம் போதாதுன்னு, நச, நசன்னு விடாம தூறிட்டு இருந்த மழை! இப்படி அத்தைனையும் ஒரே சமயத்தில தாக்குனா என்னங்க வரும்? சத்தியமா எரிச்சல் வரும்..ஆனா காதல் வருமா? சில பேத்துக்கு வந்துச்சே!!! ஒரே குடைக்கு கீழ, அங்க இருந்த எல்லோருக்கும் இலவச காட்சிகள காட்டிட்டு இருந்த சில ஜோடிகள்! ஆச்சர்யமான மனிதர்கள் லிஸ்ட்ல இவங்க தான் jodi no.1.

2. அதிகாலை ரெண்டு மணிக்கு கூட, ஊருக்கே கேக்குற மாதிரி பீட்டர் விட்டுகிட்டு இருந்த சில அல்ட்ரா மாடர்ன் பொண்ணுங்க!

3. சரியா 12 மணிக்கு, பிளாஸ்டிக் தேசிய கொடிய வித்துட்டு இருந்த ஒரு வியாபாரி! (யாருமே அத வாங்கலைங்கறதும், அதுக்கு அப்புறம் நடந்த டீ வியாபாரம் செம சூடு பிடிச்சதுங்கறதும் வேற விஷயம்!!!)

4. ஆனா இவங்களயெல்லாம் தூக்கி சாப்ட, ஆச்சர்யமான மனிதர்கள்னா அது இவங்க தான்... இந்த உலகத்துல நடக்குறது எனக்கு எதுவுமே தெரியாதுங்கர மாதிரி, பெட்ல ஹாயா படுத்துட்டு பேசுற எஃபெட்ல முகத்த வச்சுக்கிட்டு, ராத்ரி ஒன்னு, ரெண்டு மணிக்கு கூட வறு, வறுன்னு, வறுத்துட்டு இருந்த, நம்ம கடலை மன்னர்கள்/மன்னிகள்! இவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஜூரி அவார்ட்!

இவங்கள பாக்கும் போது எனக்கு ஒரு புதுக்குறள் தோனுச்சு...

போடுக கடலை போடுக போட்டபின்
பில்லுகட்டுக அதற்குத் தக.


5. Last, but not the least…அடிச்ச காத்துல இத்து போன ஒரு குடையோட, சார்ஜ் இல்லாம செத்து போன ஒரு ஃபோனோட, அங்கேயே நிக்கவும் முடியாம, பெங்களூர் விட்டுக்கு திரும்பி போகவும் நாதி இல்லாம, தனந்தனியா ரெண்டு மணிக்கு பஸ் ஸ்டாப்ல நின்னுகிட்டு இருந்தாலும், சுத்தி நடக்கறதெல்லாம் பாத்துகிட்டு, எதையெல்லாம் நாளைக்கு ப்ளாக்ல போடலாம்னு தீவிரமா யோசிச்சிட்டு இருந்த ஒரு விந்தையான பொண்ணு!!!சரி, இப்ப அழகான சில மனிதர்கள், சில நிகழ்வுகள்...

1. ரயில் சிநேகிதம் மாதிரி, ஆங்காங்கே நிகழ்ந்த சில பஸ் ஸ்டாப் சிநேகிதங்கள், பல உரையாடல் and stuff, அழகு...

2. 12 மணிவரைக்கும் இந்தியாவுக்கு இன்னும் சுகந்திரமே கிடைக்கலைங்குற மாதிரி சோகமா முகத்தோட திரிஞ்ச ரெண்டு பரிச்சயமில்லாத பசங்க, அதுக்கப்புறம் 2.30 மணி வரைக்கும் அவங்களுக்குள்ள சிரிக்க சிரிக்க ஏதோ பேசிக்கிட்டது, அழகு...

3. தனியா நின்னுட்டு இருந்த எனக்கு பேச்சுதுணைக்கு கிடச்ச, சசி, சந்துரு என்ற கலகலப்பான கசின்ஸ், அழகு...

4. பஸ்ல என் பக்கத்து சீட்ல, ஒடஞ்ச விழற மாதிரி ஒல்லியா, அத விட மெல்லிய, அழகான குரலோட, என் நெருங்கிய தோழி போல என்னோட பேசிட்டு வந்த அன்பான பெண் சரண்யா, அழகு…

5. அந்த சசியுடன் வந்த சந்துரு ஆகட்டும், தத்தம் மனைவிகளுடன் வந்த கணவன்மார்கள் ஆகட்டும், இல்ல, சில நண்பர் கூட்டங்கள்ள இருந்த பசங்க ஆகட்டும், அவங்களோட வந்திருந்த பெண்கள, குடையோட பத்திரமா நிக்க வச்சுட்டு, 5, 6 முறை, சலிக்காம, பஸ் வந்துடுச்சா, வந்துடுச்சான்னு விசாரிச்சுட்டு வந்துட்டே இருந்தாங்க...
தன் சொந்தமோ, தோழியோ, தெரிந்த பெண்ணோ, தன்னோட வந்த ஒரு பெண்ணின் பாதுகாப்புக்கும், சௌகரியதிர்க்கும் தான் பொறுப்புங்கற responsibility and feeling, இந்த பசங்களுக்கு எப்போ, எப்டி வருது? ஆனாலும் இவங்களோட பொறுப்பு உணர்ச்சி தாங்க முடியலப்பா...சரி, என்ன தான் இருந்தாலும், உண்மைய ஒத்துக்கிட்டு தான ஆகணும்? இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு...

46 comments:

MSK / Saravana said...

//அடிச்ச காத்துல இத்து போன ஒரு குடையோட, சார்ஜ் இல்லாம செத்து போன ஒரு ஃபோனோட, அங்கேயே நிக்கவும் முடியாம, பெங்களூர் விட்டுக்கு திரும்பி போகவும் நாதி இல்லாம, தனந்தனியா ரெண்டு மணிக்கு பஸ் ஸ்டாப்ல நின்னுகிட்டு இருந்தாலும், சுத்தி நடக்கறதெல்லாம் பாத்துகிட்டு, எதையெல்லாம் நாளைக்கு ப்ளாக்ல போடலாம்னு தீவிரமா யோசிச்சிட்டு இருந்த ஒரு விந்தையான பொண்ணு!!! //

:)
;)

MSK / Saravana said...

//தன் சொந்தமோ, தோழியோ, தெரிந்த பெண்ணோ, தன்னோட வந்த ஒரு பெண்ணின் பாதுகாப்புக்கும், சௌகரியதிர்க்கும் தான் பொறுப்புங்கற responsibility and feeling, இந்த பசங்களுக்கு எப்போ, எப்டி வருது? ஆனாலும் இவங்களோட பொறுப்பு உணர்ச்சி தாங்க முடியலப்பா...சரி, என்ன தான் இருந்தாலும், உண்மைய ஒத்துக்கிட்டு தான ஆகணும்? இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு...//

ஆஆஆஆஆ.. நாயகன் கமல் மாதிரி பீல் பண்ண வச்சிட்டீங்களே..

நீங்களாவது எங்க இனத்தையே சரியா புரிஞ்சிவச்சிருக்கீங்களே..
பல பேர் பசங்கள தப்பா நினைக்கிறாங்க..

Raghav said...

நல்லா இருக்குப்பா.. மழைக்குள் பதிவா ?

//அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு... //

இது சூப்பரோ சூப்பர். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான்..

Raghav said...

//தன் சொந்தமோ, தோழியோ, தெரிந்த பெண்ணோ, தன்னோட வந்த ஒரு பெண்ணின் பாதுகாப்புக்கும், சௌகரியதிர்க்கும் தான் பொறுப்புங்கற responsibility and feeling, இந்த பசங்களுக்கு எப்போ, எப்டி வருது? //

அந்தப் பெண், அவனை நண்பனாகவோ, காதலனாகவோ, கணவனாகவோ ஏற்றுக் கொண்ட வினாடியில் இருந்து.. அவளை அவன் கையில் ஏந்தத் தொடங்கி விடுகிறான்

Raghav said...

//4. பஸ்ல என் பக்கத்து சீட்ல, ஒடஞ்ச விழற மாதிரி ஒல்லியா, அத விட மெல்லிய, அழகான குரலோட, என் நெருங்கிய தோழி போல என்னோட பேசிட்டு வந்த அன்பான பெண் சரண்யா, அழகு…//

கிருஷ்ணா கஃபே அட்ரஸ் குடுக்க வேண்டியது தானே..

Ramya Ramani said...

ஆஹா ஒரே வாரத்துல நான் படிக்கும் மற்றுமொரு சுவாரஸ்யமான பயணக்கட்டுரை :)

\\இப்படி சாகசம் புரிஞ்ச ஆட்டோ காரர பாராட்டி, 300 ரூபாயா குடுத்துட்டு (அழுதுட்டு?!?!?)\\

Tooo Much :((


\\எதையெல்லாம் நாளைக்கு ப்ளாக்ல போடலாம்னு தீவிரமா யோசிச்சிட்டு இருந்த ஒரு விந்தையான பொண்ணு!!! \\

:)) ஹா ஹா

\\இவங்கள பாக்கும் போது எனக்கு ஒரு புதுக்குறள் தோனுச்சு...

போடுக கடலை போடுக போட்டபின்
பில்லுகட்டுக அதற்குத் தக.
\\

கல்வெட்டுல பொறிச்சு வைங்க "நமக்கு பின்னால வர சந்ததிகள்..பயனடைவாங்க" :P

\\உண்மைய ஒத்துக்கிட்டு தான ஆகணும்? இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு...
\\

அடட அடடா அடடா.. என்ன என்ன ஒரு பாராட்டு..இனிமே உங்கள ஜி "பெண்ணியவாதி"ன்னு சொல்லமாட்டாரு

Vijay said...

\\அதிகாலை ரெண்டு மணிக்கு கூட, ஊருக்கே கேக்குற மாதிரி பீட்டர் விட்டுகிட்டு இருந்த சில அல்ட்ரா மாடர்ன் பொண்ணுங்க!\\
அந்த கும்பல்ல திவ்யப்ரியாவும் உண்டுதானே :)

\\ராத்ரி ஒன்னு, ரெண்டு மணிக்கு கூட வறு, வறுன்னு, வறுத்துட்டு இருந்த, நம்ம கடலை மன்னர்கள்/மன்னிகள்! இவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஜூரி அவார்ட்\\
:-)

\\போடுக கடலை போடுக போட்டபின்
பில்லுகட்டுக அதற்குத் தக.\\
கலக்கறீங்க :)

\\சரி, என்ன தான் இருந்தாலும், உண்மைய ஒத்துக்கிட்டு தான ஆகணும்? இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு...\\
அப்படி போடுங்க அருவாள. சும்மாவா இப்படி தொடர்ந்து மழை பெய்யுது. இப்படி பொண்ணுங்கள்லாம், பசங்களை பாராட்ட ஆரம்பிச்சுட்டா பூவுலகத்தில் பஞ்சமே வராது.

விடாது மழை பெய்தாலும் ஊர் போயே தீருவேன் என்று மன உறுதியுடன் விடிய விடிய மெஜஸ்டிக்கில் நின்று ஊர் போன திவ்யப்ரியாக்கு எல்லாரும் ஒரு பெரிய ஓ போடுங்க!

Badri said...
This comment has been removed by the author.
Badri said...

good one..adadhu peidha mazhaiyil vidadhu yosithu oru blog...guess everyone will have to plan better when the next long wknd comes...this happens everytime in Bangalore :-)

I ran the last two kms from vadapalani to koyambedu bus stand to catch my bus...konjam late a poirundhalum andha conductor en ticket a 500 rs ku vithurupan...

Anonymous said...

விதவிதமான மனிதர்கள்... அவர்களை கவனிக்கும் இதமான மனிதர்கள்.. :)

ஆனாலும் அன்னிக்கு பெய்த அடாத மழையிலேயும் இவ்ளோ கவனிச்சிருக்கீங்க...அழகாக. நல்லாவேளை என்னை புலம்பவிடாம என் பேருந்து 11 மணிக்கெல்லாம் வந்துடுச்சு. என் நண்பன் தான் பாவம் 4 மணிக்கு தான் வண்டி வந்துச்சாம்.

கடைசியா ஆண்குலத்தை சரியா புரிஞ்சிக்கிட்டதுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்.. :)

முகுந்தன் said...

////அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு... //

அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லாரும் அழகு..


//விடாது மழை பெய்தாலும் ஊர் போயே தீருவேன் என்று மன உறுதியுடன் விடிய விடிய மெஜஸ்டிக்கில் நின்று ஊர் போன திவ்யப்ரியாக்கு எல்லாரும் ஒரு பெரிய ஓ போடுங்க!!//

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

Divya said...

பயணக்கட்டுரை படிக்க ரொம்ப சுவாரஸியமாக இருந்தது திவ்யப்ரியா:))


\இவங்கள பாக்கும் போது எனக்கு ஒரு புதுக்குறள் தோனுச்சு...

போடுக கடலை போடுக போட்டபின்
பில்லுகட்டுக அதற்குத் தக.\\


ROTFL:))

கலக்கல் 'குறள்'!!!

Divya said...

\\சுத்தி நடக்கறதெல்லாம் பாத்துகிட்டு, எதையெல்லாம் நாளைக்கு ப்ளாக்ல போடலாம்னு தீவிரமா யோசிச்சிட்டு இருந்த ஒரு விந்தையான பொண்ணு!!!\\

மறுநாள் கோயம்புத்தூரில் நடு ராத்திரி முழிச்சிருந்து பயண அனுபவம் பதிவு எழுதின சமத்து பொண்ணு!!!

Smriti said...

ivaloda bus stand ku kooda auto la pona one of the victims naan. aana bus stand board paathppram divya va kaanavillai... adeeng potta oru ottam... apprama call varudhu sethukitte irukkara mobile lendhu..."smriti... bus aa kaanum... ippo naan enna seiyya nnu"... kooda irukkaravangala bus pathi vijaarikkaraa madiri kettu friend pidichu indha blog post podarthukku naanum oru indirect contributor...
Aana iva bus stand la erangurathukku munnaala andha 9 mani lendhu 10.45 mani varikkum auto la travel pannina "andha divya" oda sagaptham aa innoru post aa dhaan podanum [:D]

Anyway Div... you rock as always :)

Divyapriya said...

@Raghav
நல்லா சொன்னிங்க ராகவ், அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லாரும் அழகோ அழகு தான் :-)

// அந்தப் பெண், அவனை நண்பனாகவோ, காதலனாகவோ, கணவனாகவோ ஏற்றுக் கொண்ட வினாடியில் இருந்து.. அவளை அவன் கையில் ஏந்தத் தொடங்கி விடுகிறான்//

புல்லரிக்குது பா :-))

// கிருஷ்ணா கஃபே அட்ரஸ் குடுக்க வேண்டியது தானே..//

பின்ன குடுக்காம? இன்னிக்கு வந்த உடனே ஒரு mail அனுப்சாச்சு நிஜ சரண்யாவுக்கு ;-)

Divyapriya said...

@Ramya Ramani

Thanks ramya…நீங்க சொன்ன மாதிரி, எல்லாருக்கும் புரிஞ்சா சரி :-))

Divyapriya said...

@விஜய்
// விடாது மழை பெய்தாலும் ஊர் போயே தீருவேன் என்று மன உறுதியுடன் விடிய விடிய மெஜஸ்டிக்கில் நின்று ஊர் போன திவ்யப்ரியாக்கு எல்லாரும் ஒரு பெரிய ஓ போடுங்க!//

ஊருக்கு போக வேண்டாம்ன்னு தோனின ஒரே லீவ், இது தான்…என்ன பண்றது, நடு ராத்ரில வேற வழி இல்ல :-((

Divyapriya said...

@மதி
//நல்லாவேளை என்னை புலம்பவிடாம என் பேருந்து 11 மணிக்கெல்லாம் வந்துடுச்சு//

கடவுளே, நாங்க மட்டும் என்ன பாவம் பண்ணோம் ??? :-((

Divyapriya said...

@முகுந்தன்

//ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ//

:-D

Divyapriya said...

@Divya

Thank you so much divya.
//மறுநாள் கோயம்புத்தூரில் நடு ராத்திரி முழிச்சிருந்து பயண அனுபவம் பதிவு எழுதின சமத்து பொண்ணு!!!//

:-))

Divyapriya said...

@Smriti
//Aana iva bus stand la erangurathukku munnaala andha 9 mani lendhu 10.45 mani varikkum auto la travel pannina "andha divya" oda sagaptham aa innoru post aa dhaan podanum [:D]//

I really felt stupid for getting tensed up man!!!
U know, I m really sick :-((

But anyways, bus பிடிக்கறதுன்னு வந்துட்டா, கூட இருக்கறவங்கள disown பண்ணிட்டு ஒலிம்பிக்ஸ் ரேஞ்சுக்கு ஓடுற என் ரெக்கார்ட நான் அன்னிக்கும் தக்க வச்சுகிட்டேன் :-)) so, kudos to me :-D

Divyapriya said...

@Badri

Bad!!! welcome, welcome...Thanks for your golden comments...but still, for so many days, since you dimikki kuduthufied from commenting in my blog, I m gonna punish you now...

இதுனால சகல விதமான மக்களுக்கும் அறிவிக்கறது இன்னான்னா, ’என் செல்ல பேரு சிக்கு’ போஸ்டல (http://siragughal.blogspot.com/2008/05/blog-post_21.html) வர சிக்கு நம்ம தலைவர் பத்ரி தான்...ஹா ஹா ஹா (p.s veerappaa styla யோசிச்சுக்கோங்க :-D )

Raghav said...

//பின்ன குடுக்காம? இன்னிக்கு வந்த உடனே ஒரு mail அனுப்சாச்சு நிஜ சரண்யாவுக்கு ;-)//

ஒரே குழப்பமா இருக்கே ? டேய் ராகவா ஏதாவது புரியுதா உனக்கு? ..

Anonymous said...

//கடவுளே, நாங்க மட்டும் என்ன பாவம் பண்ணோம் ??? :-((//

என்னைக் கேட்டா...! உங்களுக்கே தெரிஞ்சிருக்கணுமே..!

ஜியா said...

:)) Ithukkuththaan enna maathiri Majestic pakkathulaiye thangi irukkanum.. just 10 mins thaan.. late aanaalum vootukku poi oru thookaththa potuttu vanthuralaam ;)))

//இனிமே உங்கள ஜி "பெண்ணியவாதி"ன்னு சொல்லமாட்டாரு//

//நீங்க சொன்ன மாதிரி, எல்லாருக்கும் புரிஞ்சா சரி :-))//

இதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆனர்...

Raghav said...

//இதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆனர்...//

யாரை கண்டிக்கிறீங்கன்னு தெரியுது.. அந்த "யுவர் ஆனர்" யார்னு ஏன் யாருமே சொல்ல மாட்டேங்கிறீங்க??
இருந்தாலும் மென்மையா கண்டிக்கக் கூடாதா :)

Unknown said...

Ore varthai la sollanum na manirathnam padam patha mathiri oru feel. I really liked the last sentence இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு...
Its really really true.
Amarkkalam pannita po :)

gils said...

//இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு.../////

avvvvv....ipdi oray linela oru tonne icea vachiteenga :) nice writeup..first time here..thru ramya's posts..

Divyapriya said...

@Raghav
//ஒரே குழப்பமா இருக்கே ? டேய் ராகவா ஏதாவது புரியுதா உனக்கு? ..//

என்னோட பஸ்ல வந்த பொண்ணு சரண்யாவுக்கு என் ப்ளாக் linka mail பண்ணிடேன்னு சொன்னேன்…இப்ப புரிஞ்சுதா ? :-)

Divyapriya said...

@மதி
//என்னைக் கேட்டா...! உங்களுக்கே தெரிஞ்சிருக்கணுமே..!//


:-(

ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுது...ஊர்ல கொட்ட வேண்டுய குப்பைய இங்க வந்து கொட்றதே ஒரு பாவம் தான் :-)

Divyapriya said...

@ஜி
// இதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆனர்...//
@Raghav
//யாரை கண்டிக்கிறீங்கன்னு தெரியுது..//

யாரை கண்டிக்கிறீங்கன்னு எனக்கு தெரியலயே, யாரு அந்த யுவர் ஆனர்? நானா இல்ல ரம்யாவா? ;-)

Divyapriya said...

@Jammu
// எல்லா ஆண்களும், அழகோ, அழகு...
Its really really true.//

This is quite expected out of you Jammu :-)

Divyapriya said...

@gils

Thanks so much gils, தொடர்ந்த படிங்க...
அப்புறம் சொல்ல மறந்துட்டனே, போட்ட ஐஸ்ல எனக்கே ஜலதோஷம் பிடிச்சுருச்சு :-(

Anonymous said...

//:-(

ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுது...ஊர்ல கொட்ட வேண்டுய குப்பைய இங்க வந்து கொட்றதே ஒரு பாவம் தான் :-)//

உங்கள சொல்றீங்களா..இல்லை என்னை திட்டுறீங்களா???

மே. இசக்கிமுத்து said...

அன்புள்ளம் கொண்ட அனைவரும், அக்கறை குணமும் என்றும் அழகு தான்!! வித விதமான மனிதர்களில் அழகை விதவிதமாக ரசிக்கலாம்!!!

Divyapriya said...

@மதி


//உங்கள சொல்றீங்களா..இல்லை என்னை திட்டுறீங்களா???//

நான் பொதுவா சொன்னேன் :-))

@இசக்கிமுத்து

முதல் வருகைக்கு ரொம்ப நன்றி இசக்கிமுத்து...தொடர்ந்து படிங்க.

manikandan said...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க திவ்யா !

Divyapriya said...

@அவனும் அவளும்

முதல் வருகைக்கு ரொம்ப நன்றி...தொடர்ந்து படிங்க.

Unknown said...

//இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு...//

உண்மைதான் அக்கா. வீட்ல சண்டை போட்டுகிட்டாலும் வெளில போய்ட்டா ரொம்ப பொறுப்பா பார்த்துக்கிற அண்ணன்...டூருக்குப் போனா "ஏய் நம்ம காலேஜ் பொண்ணுகிட்ட வம்பிழுக்கராங்கடா..வாங்கடானு" இதுவரைக்கும் காலேஜ் பக்கமே அவங்கள பார்த்திருக்க மாட்டோம் ஆனா நமக்கு ஒன்னுங்கரப்ப கூப்பிடாமலே ஓடிவர தோழர்கள்... அக்காக்கிட்ட உட்கார்ந்துக்கொனு அம்மா சொன்னதுக்காகவே அழகா பக்கத்துல உட்கார்ந்து பேசிகிட்டும் அப்படியே நம்மமேலையே தூங்கிவழிஞ்சிக்கிட்டும் வர குட்டி குழந்தைங்க...தனக்கு எவ்ளோ அனுபவம் இருந்தாலும் நாம சொல்ற பொய் கலந்த உண்மைக்கதைகல ரசிச்சுக் கேட்கற தாத்தாக்கள்..ஊர் பேர் தெரியாத இடங்களுக்கு போகும் போது பொறுப்பா வழிக்காட்றவங்கன்னு... இந்த அழகான ஆண்களின் பட்டியல் நீண்டுக் கிட்டேதான் போகுது..!! :))

G3 said...

உங்க ப்ளாக்குக்கு முதல் வருகை.. அப்படி பதிவு டைட்டில் மட்டும் ஸ்க்ரோல் பண்ணி பாக்கலாம்னு வந்தேன். இரண்டாவது தலைப்புலயே பதிவ படிக்க வெச்சிட்டீங்க :) [முதல் பதிவ நான் படிக்கலைங்கறத நீங்க கண்டுபிடிக்கல இல்ல ;)]

பதிவ ரொம்ப ரசிச்சு படிச்சேன். அதை ரசிச்சு எழுதி இருக்கற உங்க ரசனையையும் ரசித்தேன் :)

Divyapriya said...

@G3
வாங்க G3…பதிவ ரசிச்சு படிச்சதுக்கு ரொம்ப நன்றி,

// முதல் பதிவ நான் படிக்கலைங்கறத நீங்க கண்டுபிடிக்கல இல்ல//

ஏன், ஏன், ஏன்? கண்டிப்பா படிங்க :)

Anonymous said...

Romba azhaga irukku unga observations about the world around you. Keep it up!

--Padmashree

Anonymous said...

//போடுக கடலை போடுக போட்டபின்
பில்லுகட்டுக அதற்குத் தக.//-nice timing kural....!
//அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு...// - finishing touch superb(this is always real and men always like that specially after marriage)
Gowtham

கைப்புள்ள said...

//தன் சொந்தமோ, தோழியோ, தெரிந்த பெண்ணோ, தன்னோட வந்த ஒரு பெண்ணின் பாதுகாப்புக்கும், சௌகரியதிர்க்கும் தான் பொறுப்புங்கற responsibility and feeling, இந்த பசங்களுக்கு எப்போ, எப்டி வருது? //

ஹி...ஹி...அதெல்லாம் ப்ளட்லேயே வந்துருங்க :)

//ஆனாலும் இவங்களோட பொறுப்பு உணர்ச்சி தாங்க முடியலப்பா...சரி, என்ன தான் இருந்தாலும், உண்மைய ஒத்துக்கிட்டு தான ஆகணும்? இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு... //

அப்போ மீ டூ பியூட்டிஃபுல் பாய் :)

Divyapriya said...

கைப்புள்ள

Beautiful boyaa? எல்லாரும் அப்படி தான்னு சொல்லிக்கறாங்க ;)

kavidhai Piriyan said...

Divya...
Soga kadhaiye sugama kadhai mathinadhukku oru salute!!! superrappu !!!!
Ella aangalum marakamal solli yadhaiye //அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு... //Nanum solgiren ..aanaum ...idai accept pannikollum yella Pengalum perazhau dhan :-)