Saturday, November 1, 2008

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வருவோம்ல!

என்னைய மாட்டி விட்டது யாரு?              சரவண குமார்

என்னவாம்?                                           சினிமா கேள்விகளுக்கு பதில்  போடனுமாம்...

ஓஹ் போட்டாச்சா?                                மேல, இல்ல இல்ல, கீழ படிங்க

சரி, நான் யார மாட்டி விடப் போறேன்?    அது அப்பால…


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

அதெல்லாம் நியாபகம் இல்ல...ஒன்னு மட்டும் எங்க அம்மா  இன்னும் சொல்லி சிரிப்பாங்க...முதல் முறையா தியேட்டர் போனப்பவே, அங்கிருந்த அத்தன பேரையும்  என்னை திரும்பி பாக்க வச்சுட்டோம்ல? “ஹய்யோ!!! இவ்ளோஓஓஓ பெரிய்ய்ய வீடா? இது யாரு வீடும்மா?” ன்னு சத்தமா கேட்டா எல்லாரும் பாக்க மாட்டாங்களா என்ன?

 

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"பொய் சொல்ல போறோம்." அந்த படத்த பாக்க போறதுக்கு நான் சொன்ன பொய் எனக்கு தான் தெரியும் ;) ஐ செக்கப்புன்னு பொய் சொல்லிட்டு (ஐ, பொய்…ஹை ரைமிங்கு ;) ), ஆபிஸ்ல இருந்து அப்ஸ்காண்ட் ஆனோம்.

 

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தீபாவளி அன்னிக்கு சன் டீ.வில சந்தரமுகி…தலைவர் படத்த, எத்தன முறை, எந்த விதமான ஊடகத்துல பாத்தாலும், தலைவர் படம், தலைவர் படம் தான்னு உணர்ந்தேன்…

அதுக்காக பாபா படத்த எத்தன தடவ பாத்தேன்னு எல்லாம் கேக்க கூடாது, ஆமா!

 

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

தாக்கிய படம்ன்னா, வாழ்க்கைல இது வரைக்கும் ஒன்னே ஒன்னு தான்…”வீரம் விளைஞ்ச மண்ணு!” கூட்டமா குடும்பத்தோட குதூகலமா போறமேன்னு, அவசரத்துல என்ன படம்ன்னு பாக்காம ஒரு பத்துப்  பன்னென்டு பேரு கும்பலா தியேட்டர் உள்ள ஓடிட்டோம்.அப்புறம், அத்தன பேரும் குத்துயிரும்  குழையுயிருமா தான் வெளிய வந்தோம்.

 

நல்ல விதமா தாக்கிய படங்களோட பட்டியல் நீளம்…ஆனா ரொம்ப பாதிச்ச படம், “லஜ்ஜா”. மனிஷா கொய்ராலா சந்திக்கற பல பெண்கள் வாழ்க்கைல நடக்குற கொடுமைகளை பத்தி பேசுற படம். அதுல மாதுரி கூட இருப்பாங்க…அந்த படம் பாத்து, ஒரு நாள் முழுக்க கோவமா, சோகமா இருந்துச்சு. சாரி லஜ்ஜா, ஹிந்தி சினிமா, தமிழ் சினிமான்னு இருக்குது கேள்வி! (கேள்விய சரியா படிக்காம, அவசர அவசரமா தெரிஞ்சதை எல்லாம் எழுதற பழக்கம் இன்னும் போகல) இப்ப தான் பாத்தேன்…தமிழ்ல glycerin substitute படம்ன்னா அது அஞ்சலி…

 

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

அப்படி எல்லாம் பெருசா ஒன்னும் இல்ல, தலைவர் ஒரு அரசியல் கட்சிக்கு சார்பா அறிக்கை விட்டு, அப்புறம் அவங்க தோத்ததும், எல்லோரும் தலைவர கிண்டல் பண்ணப்ப தான் கொஞ்சூண்டு வருத்தமா இருந்துச்சு…எப்படியோ, “காய்க்கற மரத்துக்கு தானே கல்லடி படும்?” ;)  அதனால மனச தேத்திகிட்டேன்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

 

தசாவதாரம்...தொழில் நுட்பம் பல இருந்தாலும், அந்த கதையோட ப்ளாட்ட தான்  பாத்து தான் பிரமிச்சேன்.

 

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்பவாச்சும், 
வாரமலர் நடுப்பகுதி, அப்புறம் லைட்ஸ் ஆன், இத தவிர வேற எதுவும் வாசிக்கறது கிடையாது.

 

7.தமிழ்ச்சினிமா இசை?

A.R.ரஹ்மான் பாடல்கள்ல வரும் குழலோசை ரொம்ப பிடிக்கும்…

ஹாரிஸ் பாடல்கள்ல வரும் கிட்டார் ரொம்ப பிடிக்கும்…

முழுக்க முழுக்க தமிழ்ல இருக்க பாடல் வரிகள் பிடிக்கும்…

ஐஸ்கீரிம் போல் உருகும், சோனு நிகம், ஸ்ரீநிவாஸ் பிடிக்கும்… 

ஆனா பிடிச்ச விஷயங்கள யாராவது கொலை செய்வாங்களா? எனக்கு அதுவும் பிடிக்கும்…

நாள் முழுக்க ஏதோ ஒரு பாட்ட பாடி/முனு முனுத்து அத கொல்லவும் பிடிக்கும் ;)

 

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழ் தவிர னா, பெரும்பாலும் ஹிந்தி, அப்புறம் சில தெலுகு, மலையாளம், கன்னடம், இந்த படங்கள் எல்லாம் பாத்திருக்கேன்.

 

ஸ்கூல் படிக்கும் போது,ஞாயிரு மதியம் தூர்தர்ஷன்ல alphabetical order ல போடும் ரீஜனல் நேஷனல் அவார்ட் படங்கள அப்படி ஒரு ஆர்வத்தோட பாத்துருக்கேன்…காலண்டர்ல, தமிழ், கன்னட படங்கள் எப்போ வருதுன்னு குறிச்சு வச்சுகிட்டு, மறக்காம பாத்துடுவோம். அப்படி பேர் தெரியாம பாத்த நல்ல நல்ல கன்னட படங்கள் எத்தனையோ! காலேஜ் படிக்கும் போது, தமிழ் சேனல்கள் போர் அடிச்சால் உதயா டீ.வி கூட பாத்திருக்கேன்…ஆனா, இங்க வந்து இத்தன வருஷத்துல ஒரே ஒரு கன்னடப் படம் கூட பாத்ததில்லை. ஒரு வேளை, உள்ளூர் மக்களே அத அதிகம் விரும்பாதது ஒரு காரணமா, இல்ல, போஸ்ட்டர்கள பாத்ததால வந்த பயமா, தெரியல :)

 

அப்படி அதிகம் தாக்கின சில கன்னட படங்கள் இருக்கு…ஆனா பேரு தான் தெரியல.

இங்கிலீஷ் படமெல்லாம் நாம அவ்வளவா பாக்கறது இல்ல…சில பல நண்டு - சிண்டு, அப்புறம் ஜாக்கி சான் படங்கள தவிர…ஆனா, ஹாரி பாட்டர் படமெல்லாம் மனப்பாடம் தான் ;)

 

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

எங்க பாட்டியோட, ஒன்னு விட்ட தம்பியோட, சித்தப்பாவோட, ஒன்னு விட்ட மாமாவோட  பேரனுக்கு கூட, சினிமா உலகுடன் நேரடி என்ன, மறைமுக தொடர்பு கூட கிடையாது. எனக்கும் சினிமா உலகுக்கும் அவ்ளோ தூரம் தான்.

 

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

படத்த அவங்களே டி.வீ.டி ல ரிலீஸ் பண்ணா பிழைச்சுக்குவாங்க :)


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு பெரிய கஷ்ட்டமெல்லாம் இல்ல…ஒரு வருஷத்துக்கு இரண்டு, இல்ல மூணு தடவை தான் தியேட்டருக்கே போவேன்…மத்தபடி, உலக தொலைகாட்சிகளில் முதன் முறையா பாக்குறது தான்…அப்படி பாத்தே காலத்த ஓட்டலாம்…அப்புறம் அபிக்கு போட்டியா, இன்னும் சில பேரு சீரியலுக்கு வந்துடுவாங்க…அவங்களோட சேந்து அழ வேண்டியது தான்.

 

தமிழர்களுக்கு என்ன ஆகும்? படம் பாக்குற டைம்ல நம்ம ப்ளாகயெல்லாம் படிப்பாங்க ;) அப்புறம் இன்ன்ம் நிறைய ப்ளாகர்ஸ் வருவாங்க…

 

ஹப்பா, ஒரு வழியா டெஸ்டு முடிஞ்சிருச்சு…

 

சரி, நான் யார மாட்டி விடப் போறேன்?                ஹ்ம்ம், யாரு? யாரு? யாரும் இல்ல…

ஏன்,ஏன், ஏன்?                                                  ஏன்னா…நான்  ரொம்ப நல்லவ ;

62 comments:

சிம்பா said...

என்னப்பா நீங்களும் நம்பல மாதிரி ராக்கோழி சங்கத்து ஆள் தானா. எப்பவும் நாடு ராத்திரியில பதிவ ரிலீஸ் பண்றீங்க. இப்ப நான் கூட ஒரு பதிவ எழுதி, இந்த முறையாவது காலைல பப்ளிக் பண்ணலாம் நு விட்டுட்டேன்...

Anonymous said...

ஹை... தியேட்டர பாத்து வீடுன்னு நினைச்சீங்களா...???

உங்களுக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு நல்லா தெரியுது.. பை த வே.. நீ பொய் சொல்லிட்டு பொய் சொல்ல போறோம் போனது உங்க கம்பெனிக்கு இப்பவாவது தெரியுமா??

சிம்பா said...

பொய் சொன்ன மேட்டர் ரொம்ப சூப்பர்...

Badri said...

konjam mokkai yana tag..

Vijay said...

ஸ்கூல் காலேஜ் கட் அடிச்சுட்டு படத்துக்கு போறது பண்ணியிருக்கேன். ஆனால் நீங்க ஒரு படி மேலே போய் ஆஃபீசையே கட் அடிச்சுட்டு படத்துக்கு போறதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

\\”வீரம் விளைஞ்ச மண்ணு!” \\
அதுல ஒரு சூப்பர் பாட்டு ஒண்ணு உண்டே. வாடிப்பட்டி மாப்பிள்ளை எனக்கு வாக்கப் பட்டு போறவளே நாக ரத்தினமேன்னு. அந்த படம் தானே??


\\தசாவதாரம்...தொழில் நுட்பம் பல இருந்தாலும், அந்த கதையோட ப்ளாட்ட தான் பாத்து தான் பிரமிச்சேன்\\
என்ன இருந்தாலும் நம்ம தலை போல் வருமா?

யாரோ said...

//தமிழ்ச்சினிமா இசை//
இசை ராசாவை விட்டுடீங்களே

- கார்த்தி

Raghav said...

//விஜய் said...
ஸ்கூல் காலேஜ் கட் அடிச்சுட்டு படத்துக்கு போறது பண்ணியிருக்கேன். ஆனால் நீங்க ஒரு படி மேலே போய் ஆஃபீசை கட் அடிச்சுட்டு படத்துக்கு போறதெல்லாம் கொஞ்சம் ஓவர் //

எந்த உலகத்துல இருக்கீங்க விஜய்.. நாங்க ஆபீஸ கட்டடிச்சு போன படங்கள் தான் ஜாஸ்தி.. அதுவும் வெள்ளிக்கிழமை மதியம் எங்கள PVR லயோ அல்லது Fame Cinemas ல ஒரு 7 அல்லது 8 பேர் கும்பலா பாத்தீங்கன்னா.. அது நாங்க தான்..

எப்புடி போகமுடியுதுன்னு யோசிக்கிறீங்களா?.. எங்க Team leader வரும்போது எவன் எங்கள கேக்க முடியும்

Raghav said...

திவ்யப்ரியா.. நினைச்சேன் என்னடா சினிமா பதிவ காணோமேன்னு பாத்தேன்.. லேட்டா வந்துருக்கீங்க சரி.. லேட்டஸ்டா?? But நல்ல டேஸ்ட்.. (தலைவர் படங்கள சொன்னேன்)

Raghav said...

//ஒரு வேளை, உள்ளூர் மக்களே அத அதிகம் விரும்பாதது ஒரு காரணமா, இல்ல, போஸ்ட்டர்கள பாத்ததால வந்த பயமா, தெரியல :) //

அதே தான் எல்லாருக்கும்னு நினைக்கிறேன்.. காவேரி விவகாரம், ஒகேனக்கல் பிரச்சனை. அப்பல்லாம் தமிழ் சேனல் கட் பண்ணிட்டு, கன்னட சேனல் மட்டும் தான் கட்டுவாங்க.. அப்போ பாத்தா தான் உண்டு..

Raghav said...

//எங்க பாட்டியோட, ஒன்னு விட்ட தம்பியோட, சித்தப்பாவோட, ஒன்னு விட்ட மாமாவோட பேரனுக்கு கூட, சினிமா உலகுடன் நேரடி என்ன, மறைமுக தொடர்பு கூட கிடையாது.//

அதுதான் நீங்க படம் எடுக்கப் போறீங்களே :).. தயாரிப்பாளர் முதலாளி முகுந்தன் தயார்.. உங்க கதையும் ரெடி.. ஹீரோவும் ரெடி(?).. அப்புறம் என்ன ??

Raghav said...

//படத்த அவங்களே டி.வீ.டி ல ரிலீஸ் பண்ணா பிழைச்சுக்குவாங்க :)//

சூப்பர்.. அப்புடியே, விஜயகாந்த், சரத்குமார்.. கார்த்திக், வடிவேலு, முதல்வரா ஆனாங்கன்னா.. இலவச DVD Player கொடுத்தா சினிமா உலகம் இன்னும் நல்லாருக்கும் :)

Raghav said...

//தமிழர்களுக்கு என்ன ஆகும்? படம் பாக்குற டைம்ல நம்ம ப்ளாகயெல்லாம் படிப்பாங்க ;) //

இது இது.. லேட்டான பதில்னாலும் லேட்டஸ்டான பதில்.. உங்க நமுட்டு சிரிப்புலயே தெரியுது.. எந்த பிளாக் சொல்ல வர்றீங்கன்னு தெரியுது.. பிழைச்சுப்போங்க..

Raghav said...

//ஹப்பா, ஒரு வழியா டெஸ்டு முடிஞ்சிருச்சு//

மார்க்கு எவ்வளவுன்னு சொல்லிருங்க..

Raghav said...

//“ஹய்யோ!!! இவ்ளோஓஓஓ பெரிய்ய்ய வீடா? இது யாரு வீடும்மா?” ன்னு சத்தமா கேட்டா எல்லாரும் பாக்க மாட்டாங்களா என்ன?//

தியேட்டர் சத்தத்த விடவா அதிக சவுண்டு வுட்டீங்க.. ?? அப்போ நீங்க போன்ல பேசவே வேண்டாம்னு சொல்லுங்க.. காசு நிறைய மிச்சம் பிடிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்

Raghav said...

//"பொய் சொல்ல போறோம்." அந்த படத்த பாக்க போறதுக்கு நான் சொன்ன பொய் எனக்கு தான் தெரியும் ;) ஐ செக்கப்புன்னு பொய் சொல்லிட்டு (ஐ, பொய்…ஹை ரைமிங்கு ; ), //

பொய் சொல்லிட்டு பொய் சொல்ல போறோம் படத்துக்கு போனா போஜனம் கிடைக்குமா??

Raghav said...

//தீபாவளி அன்னிக்கு சன் டீ.வில சந்தரமுகி…தலைவர் படத்த, எத்தன முறை, எந்த விதமான ஊடகத்துல பாத்தாலும், தலைவர் படம், தலைவர் படம் தான்னு உணர்ந்தேன்… //

தலைவர் ரேஞ்சுக்கு, ஆக்ஸன், ஸ்டைல், பஞ்ச் டயலாக் வைச்சு.. ஒரு சூப்பர் கதை ஒண்ணு எழுத வேண்டியது தானே...

Raghav said...

//அப்புறம் இன்ன்ம் நிறைய ப்ளாகர்ஸ் வருவாங்க… //

வந்துட்டோம்ல.. உண்மையான உலக நாயகன பாக்கணுமா... இங்க பாருங்க...
http://srivaradharajan.blogspot.com/2008/10/blog-post_8878.html

தாரணி பிரியா said...

காலேஜ் கட் அடிச்சுட்டு சினிமா போறதெல்லாம் பழசு. ஆனா ஆபிஸ்க்கு கட் அடிச்சுட்டு சினிமா பாக்கற திரில்லே தனி. இங்க நாங்க அதுக்கெல்லாம் சங்கமே வெச்சு இருக்கோம். இனிமேல நீங்க எங்க சங்கத்துக்காரங்கதான். வாங்க திவ்யா.

ஆனா இப்பவும் நான் காலேஜ்க்கு கட் அடிச்சுட்டுதான் சினிமா பாக்க வேண்டியிருக்கே :)

Anonymous said...

//“ஹய்யோ!!! இவ்ளோஓஓஓ பெரிய்ய்ய வீடா? இது யாரு வீடும்மா?”// - Superapu(Nalavela intha vetula enama evlo peru kudiirukanganu kekamaponiye)
//ஐ செக்கப்புன்னு பொய் சொல்லிட்டு// - Office poyum cut adikurathu vidalaya...
//தலைவர் படம், தலைவர் படம் தான்னு உணர்ந்தேன்// - Unakum rajini(Thalaivar) than pidikuma? He is my hero...!
“காய்க்கற மரத்துக்கு தானே கல்லடி படும்?” - Pramatham thalaivarukey sona thatuvam mathuri iruku
//வாரமலர் நடுப்பகுதி, அப்புறம் லைட்ஸ் ஆன், இத தவிர வேற எதுவும் வாசிக்கறது கிடையாது.// - Hey nanum itha thavira vera paduchathilley ;-)
//தமிழ்ச்சினிமா இசை?// - Isai na ilayaraja ilayaraja na isai isai thalaivara vitutiyeah
//எங்க பாட்டியோட, ஒன்னு விட்ட தம்பியோட, சித்தப்பாவோட, ஒன்னு விட்ட மாமாவோட பேரனுக்கு கூட, சினிமா உலகுடன் நேரடி என்ன, மறைமுக தொடர்பு கூட கிடையாது// - Konjam unaku overa theriyala una keta ellarthayum soliteah ;-)
//அப்புறம் அபிக்கு போட்டியா, இன்னும் சில பேரு சீரியலுக்கு வந்துடுவாங்க…அவங்களோட சேந்து அழ வேண்டியது தான்.// - Ithu soniyeah correctu....!
//படத்த அவங்களே டி.வீ.டி ல ரிலீஸ் பண்ணா பிழைச்சுக்குவாங்க :)// - neenga basicah eppadi, apadye flowla varuma ? ;-)

முகுந்தன் said...

//தமிழர்களுக்கு என்ன ஆகும்? படம் பாக்குற டைம்ல நம்ம ப்ளாகயெல்லாம் படிப்பாங்க ;) அப்புறம் இன்ன்ம் நிறைய ப்ளாகர்ஸ் வருவாங்க…

//

நீங்க ப்ளாக் உலகின் சூப்பர் ஸ்டார் ஆயிடுவீங்க :)


//ஏன்னா…நான் ரொம்ப நல்லவ ;//


எப்பவும் தமாஷ்தான் போங்க

முகுந்தன் said...

//எங்க பாட்டியோட, ஒன்னு விட்ட தம்பியோட, சித்தப்பாவோட, ஒன்னு விட்ட மாமாவோட பேரனுக்கு கூட, சினிமா உலகுடன் நேரடி என்ன, மறைமுக தொடர்பு கூட கிடையாது.//

//அதுதான் நீங்க படம் எடுக்கப் போறீங்களே :).. தயாரிப்பாளர் முதலாளி முகுந்தன் தயார்.. உங்க கதையும் ரெடி.. ஹீரோவும் ரெடி(?).. அப்புறம் என்ன ??

//
ராகவ்,

நான் கடை வைத்தால் நீங்கள் கல்லாவில் உக்கரோனும்
அப்போதான் பணம் வரும்..படம் எடுக்க முடியும்....

Divyapriya said...


சிம்பா
ஹீ ஹீ :) பேசாம ராக்கோழி சங்கம் ஒன்னு ஆரம்பிச்சிடலாம் :0

---
மதி
நீங்க ஒன்னு, நானே ஆறு மணிக்கு தான் ஆபிஸ்ச விட்டு கிளம்பினேன..அதுக்கே இந்த சீனு ;)

---
Badrinarayanan
மொக்கையா? Thank you, thank you…அதான நமக்கு வேணும் :D


---
விஜய்
மேலே குடுத்த பின்னூட்டதை பார்க்க…ஆறு மணிக்கு ஆபிஸ்ல இருந்து கிளம்பினது ஒரு குற்றமா? அத mention பண்ண மறந்துட்டனே :(

வீரம் விளைஞ்ச மண்ணு பாட்டெல்லாம் (நல்ல வேளையா) ஞாபகம் இல்ல…
---

யாரோ
ஆமா கார்த்தி….மறந்துட்டேன் :(
ராஜா and ஜானகி combination – I jus love it…நிஜமாவே போட மறந்துட்டேன் :(
---

raghav
சும்மா பூந்து கும்மியடுச்சுடீங்க ;)
//இது இது.. லேட்டான பதில்னாலும் லேட்டஸ்டான பதில்.. உங்க நமுட்டு சிரிப்புலயே தெரியுது.. எந்த பிளாக் சொல்ல வர்றீங்கன்னு தெரியுது.. பிழைச்சுப்போங்க..//

சந்தேகமே வேண்டாம்…புதுசா வந்துருக்கற உலகநாயகன் ப்ளாக் பத்தி தான் சொல்றேன் ;)

// மார்க்கு எவ்வளவுன்னு சொல்லிருங்க..//

அத நீங்க தாங்க சொல்லனும்…

Divyapriya said...


தாரணி பிரியா
ஓ…சங்கமெல்லாம் இருக்குதா? சூப்பர் சேந்துட வேண்டியது தான் ;)

//ஆனா இப்பவும் நான் காலேஜ்க்கு கட் அடிச்சுட்டுதான் சினிமா பாக்க வேண்டியிருக்கே :)//

ஹா ஹா…என்ன கொடுமை பிரியா இது :D
---

Gowtham

நான் மட்டும் இல்ல…தமிழ்நாட்ல எல்லாருமே தலைவர் fan தான்…
---

முகுந்தன் said...

//நீங்க ப்ளாக் உலகின் சூப்பர் ஸ்டார் ஆயிடுவீங்க :)//

ஆஹா நீங்க ரொம்ப நல்லவரு முகுந்தன் :)


//ராகவ்,
நான் கடை வைத்தால் நீங்கள் கல்லாவில் உக்கரோனும்
அப்போதான் பணம் வரும்..படம் எடுக்க முடியும்....//

முதல்ல ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வாங்க…அப்புறம் படம் எடுப்போம் ;)

Unknown said...

ஹை அக்கா நல்லாருக்குகா.. உங்க பதிலெல்லாம்... :))))பொய் சொல்ல போறோம்-க்கு தான் போறோம்ன்னு சொல்லாம பொய் சொன்னது சூப்பர்....;)))))))

Raghav said...

//ஆஹா நீங்க ரொம்ப நல்லவரு முகுந்தன் :)//

என்னை அவர் கேஷியரா சேத்துகிட்டப்பவே நல்லவர்னு நான் தெரிஞ்சுகிட்டேன்.. :)

ஜியா said...

:))

Ulaga cinemaana neemga India levelaiye nippaatitteenga?? ;)))

MSK / Saravana said...

அது எப்படிங்க, எல்லா விஷயத்தையும் உங்களால ஹியூமரா நக்கல்லா சொல்ல முடியுது.. கலக்கல்.. :))

MSK / Saravana said...

//"பொய் சொல்ல போறோம்." அந்த படத்த பாக்க போறதுக்கு நான் சொன்ன பொய் எனக்கு தான் தெரியும் ;) ஐ செக்கப்புன்னு பொய் சொல்லிட்டு (ஐ, பொய்…ஹை ரைமிங்கு ;) ), ஆபிஸ்ல இருந்து அப்ஸ்காண்ட் ஆனோம்.//

ஜூப்பரப்பு.. :))

MSK / Saravana said...

//அதுக்காக பாபா படத்த எத்தன தடவ பாத்தேன்னு எல்லாம் கேக்க கூடாது, ஆமா!//

ஹி ஹி ஹி

MSK / Saravana said...

//தமிழ்ல glycerin substitute படம்ன்னா அது அஞ்சலி…//

என்ன கொடும இது..

MSK / Saravana said...

//ஏன்னா…நான் ரொம்ப நல்லவ ;//

நம்பி தொலைக்கிறேன்.. :))

Hariks said...

//“ஹய்யோ!!! இவ்ளோஓஓஓ பெரிய்ய்ய வீடா? இது யாரு வீடும்மா?” //

ந‌ல்ல‌ வேலை ஏன் இந்த‌ வீட்ல‌ ஹால் ம‌ட்டும் தான் இருக்குனு கேக்காம‌ விட்டீங்க‌ளே :D

Anonymous said...

Hello,

Baba padathukku ennanga koraichal...

Enakku rajini sir padathula pidichathey BABA thaan. Ippa thaan padichen athan IPPAVE reply pannuren...

Hint: I am a kamal fan... But i like rajini sir too.

Divyapriya said...


ஸ்ரீமதி
என்னமா பண்றது? வாழ்கைல இப்படி எல்லாம் பொய் சொல்லி கஷ்டப் பட வேண்டியதா இருக்கு :(

----
raghav
உங்கள மாதிரியே அவரும் நல்லவர்ன்னு சொல்றீங்களா ;)

---
ஜி
ஆமா ஜி...என்னோட உலக சினிமா அறிவு அம்புட்டு தான்...

---
saravana kumar msk

எல்லாரும் உங்கள மாதிரி ரொம்ப நல்ல மனசோட நான் போடற மொக்கைக்கு சிரிக்கறது தாங்க vitamin tablet...

---
sriram

காமடி பண்ணாதீங்க :))

Anonymous said...

Comedy ellam illeenga...

Thalaivaroda pidikaatha padamna athu "valli" thaan... Except that film he really rocks...

Divya said...

\\ சரி, நான் யார மாட்டி விடப் போறேன்? ஹ்ம்ம், யாரு? யாரு? யாரும் இல்ல…ஏன்,ஏன், ஏன்? ஏன்னா…நான் ரொம்ப நல்லவ ;\\


:)))

Anonymous said...

//அதுக்காக பாபா படத்த எத்தன தடவ பாத்தேன்னு எல்லாம் கேக்க கூடாது, ஆமா!//


பாபா படத்தின் இரு பெரும் சிறப்புகள்

1)ரஜினி ஐ சின்னத்தில் காட்ட பாபா முத்திரையை தவிர வேறு எதை காட்ட முடியும்

இன்னொன்று வேறு எதுவும் இல்லை.

எவ்வளவோ தலைப்புகள் இருந்தாலும் பாபா வை பற்றி எதிர்மறை கருத்து உள்ள இந்த பதிவில் பல கருத்துக்கள் இருந்தாலும் கூட மற்ற அனைத்து செய்திகளையும் வழிநடத்தும் தலைப்பு ("லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வருவோம்ல!") பாபா பட பன்ச் வசனம் தானே.

------------Srinivas---------------

Anonymous said...

Vaangapppu srinivas...

Well Said,

Namakkum Company ku aal vandhuduchula...Especially the post heading itself is the dialogue from the BABA film. Nice point...

Anonymous said...

Vanduttomla..ini kalakkal dhaan.

----------Srinivas-----------------

Divyapriya said...

divya

நீங்க எதுக்கு சிரிக்கறீங்கன்னு எனக்கு தெரியுது...இன்னும் எத்தன நாளைக்கு இந்த வனவாசம் ;)

----
sriram

அப்ப பாபா படத்த இன்னொரு தடவ பாக்கலாம்னு சொல்றீங்களா ? :)

---
srinivas

தலைப்ப பத்தி super கண்டுபிடிப்பு, எனக்கு கூட தோனவே இல்ல :)

Anonymous said...

Adhu unga viruppamunga...Naan ungala kattaaya paduthala...

But I watched BABA for 4 times. That too in theatre...

Anonymous said...

// But I watched BABA for 4 times. That too in theatre...//

wow..i watched baba only one time in theatre but, in DVD and TV channels.......
it s more than 15..
Thalaivar face kaagave paakalam
and also sakthi kodu song...

Even Kuselan la kooda thalaivar 3 hours um vandirundha nalla irundhirukkum.

-------------Srinivas-------------

Raghav said...

//Srinivas said...
wow..i watched baba only one time in theatre but, in DVD and TV channels.......
it s more than 15.. //

சீனிவாஸ் ரொம்ப்ப்ப்ப்ப நல்லவர்னு நினைக்கிறேன்.. :) ஆமா.. தலைவருக்காக பாத்தீகளா.. இல்ல தலைவிக்காக பாத்தீகளா?

Anonymous said...

தலைவியா ???

யார் அது ?

மனித கொரில்லா ..ஒ சாரி மனிஷா
கொய்ராலா வா????

அந்த முகத்தால் தான் நான் பாபா வை அதிக முரை பார்க்க இயலவில்லை.

தலைவி என்ரால் இப்பொது ஷ்ரியா மட்டும் தான்.

Raghav said...

//மனித கொரில்லா ..ஒ சாரி மனிஷா
கொய்ராலா வா????

அந்த முகத்தால் தான் நான் பாபா வை அதிக முரை பார்க்க இயலவில்லை.

தலைவி என்ரால் இப்பொது ஷ்ரியா மட்டும் தான் //

ஒஹோ.. அப்போ ஹீரோயின் நல்லாருந்துருந்தா பாபா படம் சூப்பர்ஹிட் ஆகிருக்குமா?

சிவாஜி படம் ஹிட் ஆனதற்கு காரணம் எல்லாரும் ஷ்ரேயாவ பாக்கப் போனதால் தான்னு சொல்றீங்க சரியா.. :)

Anonymous said...

//ஒஹோ.. அப்போ ஹீரோயின் நல்லாருந்துருந்தா பாபா படம் சூப்பர்ஹிட் ஆகிருக்குமா?//

என்ன??
அப்படியென்ரால் கமலஹாசன் திரைப்படம் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆகியிருக்கனுமெ????

//சிவாஜி படம் ஹிட் ஆனதற்கு காரணம் எல்லாரும் ஷ்ரேயாவ பாக்கப் போனதால் தான்னு சொல்றீங்க சரியா.. :)//

அதிரடி பாடலில் ஷ்ரேயா எப்படி இருந்த பொதிலும் தலைவர் இருந்ததால் தலைவரை அனைவரும் பார்த்து ரசித்தனர்.

தாங்கலெ சொல்லுங்கல் சிவாஜி யாருக்காக பார்த்தீர்கல் என்ரு>>>

Raghav said...

//என்ன??
அப்படியென்ரால் கமலஹாசன் திரைப்படம் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆகியிருக்கனுமெ???? //

எங்க ஊர்க்காரரை ஏன்ப்பா இழுக்குற.. அப்போ ஹீரோயின் தேர்வு செய்வதில், கமலுக்கு இருக்கும் ரசனை உங்க தலைவருக்கு இல்லைன்னு சொல்றீங்களா ?

//தாங்கலெ சொல்லுங்கல் சிவாஜி யாருக்காக பார்த்தீர்கல் என்ரு>> //

எத்தனையோ படம் பாக்குறோம்.. ஒவ்வொரு படமும் இதனால தான் பாத்தேன்னு சொல்ல முடியுமா? நான் பார்த்தது ரஜினிகாந்த் என்னும் ஸ்டைல் மன்னனுக்காக.. தாங்கள் எப்படியோ :)

Anonymous said...

// எங்க ஊர்க்காரரை ஏன்ப்பா இழுக்குற //

தாங்கல் பரம குடியா?


//ஹீரோயின் தேர்வு செய்வதில், கமலுக்கு இருக்கும் ரசனை உங்க தலைவருக்கு இல்லைன்னு சொல்றீங்களா ?//

இதில் ஒப்புக்கொல்ல என்ன இருக்கிரது???
அப்புரம் உங்க தலைவர் யாரு???

//எத்தனையோ படம் பாக்குறோம்.. ஒவ்வொரு படமும் இதனால தான் பாத்தேன்னு சொல்ல முடியுமா? நான் பார்த்தது ரஜினிகாந்த் என்னும் ஸ்டைல் மன்னனுக்காக.. தாங்கள் எப்படியோ :)//

சொல்ல முடியுமா ன்னு கேட்டுட்டு சொல்லிட்டீங்கலே...

gils said...

!!! etho konar urai nadai kanakka tag poatu thallirukeenga..!!! true or false kostinuku kuda pakkam pakkama adichi thallra aasamiya nenga :D :D micha 3rd year gummus..novel mathiri nalla poachu...nice writeup

Divyapriya said...

sriram/raghav

super ஆ இருக்கு உங்க சண்ட ;)

Divyapriya said...

gils
நீங்க சொல்றது ஓரளவுக்கு உண்மை தான்...ஆனா இத விட அதிகமா எழுதரவங்களும் இருக்காங்களே, என்ன பண்றது :)
3rd year படிசீங்களா? பாராட்டுக்கு ரொம்ப நன்றி...

Anonymous said...

sriram/raghav

super ஆ இருக்கு உங்க சண்ட ;)
-------------------------------
Nalla paarungo adhu Srinivas/Raghav sandai. Adhu naan illeengo...

Sandai podara alavukkellaam enakku thegiriyam illeengo...

Namma vazhi ahimasai thaane thaviea imsai illai...

kavidhai Piriyan said...

neenga comedya n nakkala oru padhivu podalame ...ungalauku comdey nalla varu dhu :-)ada..unmaiya dhanga....Indha padhivai padichittu nalla sirichuten .

Anonymous said...

//Namma vazhi ahimasai thaane thaviea imsai illai...//

ahimsai laye "Imsai" gara word irukku pa....

ahimsai vaadhigalukku sila kelvigal;
kosu kadicha adikka maatteenga?
erumba neenga konnadhu illa???
school la sir adicha avara thittinadhilla???

Anonymous said...

Ippadi kelvi kettaale naan escape ayiduven...

Janangale ippa sollunga naan ahimsai vaathi thane...

Cool Srinivas...Dont take it as serious...Just for fun...

If my words hurt you and raghav then sorry for both of u.

Anonymous said...

Pera maathi pottu enakkum srinikkum urunda izhuthu vittutteengale Dhivya...

Anonymous said...

Ungal vaarthaigalukku nanringa (pravin) kavithai priyan...Muyarchi panren...

Divyapriya said...


sriram

Oh அது Srinivas ஆ? Sorry இஸ்மால் mistake ;)

---
kavidhai Piriyan

என்ன நம்ம காமடிய பத்தி இப்படி சொல்லிட்டீங்க? காமடி, மொக்கைன்னு சொல்லி நானும் சில பதிவு போட்டுருக்கேங்க…படிச்சிட்டு சொல்லுங்க ;)
உங்க முதல் வருகைக்கும், பின்னூட்டதிற்கும் ரொம்ப நன்றி kavidhai Piriyan…

---
Srinivas

யோசிக்க வேண்டிய விஷயம் தான்…

--
Sriram said...
//Pera maathi pottu enakkum srinikkum urunda izhuthu vittutteengale Dhivya...//

ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவி, இதயெல்லாமா சண்டைன்னு எடுத்துகறது? அரசியல்ல இதெல்லாம் சாதாரணம், free யா விடுங்க ;)

//Ungal vaarthaigalukku nanringa (pravin) kavithai priyan...Muyarchi panren...//

என்னதிது? ஒன்னுமே புரியலையே!!!

Anonymous said...

// Cool Srinivas...Dont take it as serious...Just for fun...//

Ha ha ...i m always cool only....

To God,

aandava ..naan thalaivar pol comedy panninaa..indha Sriram naan comedy pannuvadhai serious aakki ajith pola serious ah comedy pannuvadhai pola oru image create pannitaar.

//Janangale ippa sollunga naan ahimsai vaathi thane...//

ungal vaarthai Padi:
Ahimsai vaadhi = Sriram

idhai ipadi padithaal,
A Himsai vaadhi = Sriram

Raghav said...

//If my words hurt you and raghav then sorry for both of u. //

ஸ்ரீராம்.. என்னதிது.. பிளாக்குக்கு புதுசா நீங்க..யாரும் சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க.. உங்க கும்மியை தொடருங்க.. சீனிவாஸ் மாதிரி மொக்கை போட்டா.. அவரை கொஞ்சம் உசுப்பேத்தி.. இன்னும் நிறைய மொக்கை போட வைக்கலாம்.. சரியா சீனிவாஸ்.. ?

Anonymous said...

Adhu sari Raghav,pinna bayantha thozhil panna mudiyumaa...

Poornima Saravana kumar said...

கதை நல்லா இருக்குங்க திவ்யபிரியா.. என்னோட லைப்லேயும் இந்த மாதிரி சில சமயங்களில் நடந்ததுண்டு.. தட் மீன் வரட்டு கெளரவம்..