Sunday, October 12, 2008

நீ இல்லாத வீடு...

நீ இல்லாத அந்த மழை நாளில்...

மழை பொழியும் வேளையில்...
வீட்டை சுற்றி சுற்றி நான் ஓடி விளையாடுவதும்,
என்னை நீ அதிகப் படியாய் கடிந்து கொள்வதும்...

நீர் சேமிக்கிறேன் என்று சாக்கிட்டு, மழையில் நான் அலைவதும்,
பின்னோடு ஒரு குடையோடு, நிழலாய் நீ என்னை தொடர்வதும்...

பார்! இன்று கூட மழை பெய்கிறது!
எப்போதும் போல் வீட்டை சுற்றி வந்து நனைந்தாலும்,
கண்டிக்க யாரும் இல்லை தான்...

என்னவோ! மழைச்சாரல் பட்டுத் தெறிக்கும் அழகை,
எட்டிப் பார்க்கக் கூட தோன்றவில்லை...

காகிதத்தில் கப்பல் செய்வதை விடுத்து
எதையோ கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...

*******
அன்னியலோகம்

பிறந்து வளர்ந்த வீடு கூட அன்னியமாகிப் போனது
நீ இல்லாத நாட்களில்...

*******
படையெடுப்பு

நீ ஊரில் இல்லை என்று யாரோ இந்த எறும்புகளுக்கு தந்தியடிதிருக்கிறார்கள்!
பின்னே? எப்படி மறுநாளே நம் வீட்டிற்க்குள் படை எடுக்கும்?

****
தூக்கம் தொலைத்த இரவு...

தூக்கத்தின் ஆழத்தில்,
தொட்டில் துறந்தது முதல், பிறந்த பழக்கமாய்,
உன் மேல் கை போட யத்தனிக்கையில்,
தொம்மென்று வெற்றுப் படுக்கை மேல் விழுந்த கை,
மனதின் அடியில், பெருவலி ஒன்றை கிளப்பியது...
அன்று, நடுநிசியிலேயே விடிந்தது என் இரவு...

34 comments:

Anonymous said...

ஆனாலும் அம்மா ஊருக்குப் போனது உங்கள இவ்வளவு பாதிச்சிடுச்சா...?

நீ இல்லாத வீடு... அழகான கவி வரிசை...

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் திவ்யா

Smriti said...

sweety!!!! Ivlo missing mom uh ???

Badri said...

only two words for this

'Simply fantastic'

MSK / Saravana said...

ஹே.. அழகா இருக்கு இந்த பதிவு.

//தூக்கத்தின் ஆழத்தில்,
தொட்டில் துறந்தது முதல், பிறந்த பழக்கமாய்,
உன் மேல் கை போட யத்தனிக்கையில்,
தொம்மென்று வெற்றுப் படுக்கை மேல் விழுந்த கை,
மனதின் அடியில், பெருவலி ஒன்றை கிளப்பியது...
அன்று, நடுநிசியிலேயே விடிந்தது என் இரவு...//

மனசை தொட்டது.. :)

MSK / Saravana said...

அம்மா ஊருக்கு போய்ட்டாங்களா??

MSK / Saravana said...

//நீர் சேமிக்கிறேன் என்று சாக்கிட்டு, மழையில் நான் அலைவதும்,
பின்னோடு ஒரு குடையோடு, நிழலாய் நீ என்னை தொடர்வதும்...//

நினைத்து பார்க்கிறேன் என் சிறு வயதின் நினைவுகளை.. அழகான தருணங்கள்..

Vijay said...

கதை கவிதை கட்டுறைன்னு சகலகலாவல்லியா இருக்கீங்க. இது யாருக்கு அர்ப்பணம்? உங்க அம்மாவுக்கா இல்லை, அக்காவுக்கா? பிரிவின் பரிதப்பை அருமையாக வெளிப்படுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

//என்னவோ! மழைச்சாரல் பட்டுத் தெறிக்கும் அழகை,
எட்டிப் பார்க்கக் கூட தோன்றவில்லை...//

நல்லா இருக்கு :)

ஆயில்யன் said...

//உன் மேல் கை போட யத்தனிக்கையில்,
தொம்மென்று வெற்றுப் படுக்கை மேல் விழுந்த கை,
மனதின் அடியில், பெருவலி ஒன்றை கிளப்பியது...
அன்று, நடுநிசியிலேயே விடிந்தது என் இரவு...//


:(((((

ஆயில்யன் said...

//ஊரில் இல்லை என்று யாரோ இந்த எறும்புகளுக்கு தந்தியடிதிருக்கிறார்கள்!
பின்னே? எப்படி மறுநாளே நம் வீட்டிற்க்குள் படை எடுக்கும்?
//

:)))

ஜியா said...

கடைசி கவிதை செம பின்னல்.... அருமையா வந்திருக்குது...

அக்கா கூட பேசிட்டு இருக்கேன்னு சொல்லும்போதே நெனச்சேன்... இது மாதிரி ஒரு கவித வர போகுதுன்னு :)) கூடிய விரைவில் உங்க அக்கா இந்தியா வந்து உங்கள பாக்க வாழ்த்துக்கள்...

Unknown said...

ரொம்ப அழகா இருக்கு அக்கா கவிதை..!! :)))

Hariks said...

அக்காவுக்கு க‌விதையா? நான் அம்மான்ல‌ நினைச்சேன்.

ப‌டையெடுப்பு சூப்ப‌ரா இருக்கு. எங்க‌ வீட்ல‌ கூட‌ எறும்பு தொல்லை ப‌ண்ணுது. எங்க‌ அம்மா காம்ப்லெக்ஸா ஒரு வ‌ழி சொன்னாங்க‌. நீங்க‌ கொஞ்ச‌ம் ஈசியா இருந்தா சொல்லுங்க‌!

வாழ்த்துக்க‌ள்!

Raghav said...

கவிதைன்னு சொல்லலாமா ?? இதை முதல்ல தூக்குப்பா..

பொதுவா கவிதைகள் படிக்க மாட்டேன், சாதாரண நிகழ்வை ரொம்பவே அதிகப்படுத்தி சொல்வது போல் இருக்கும்... எளிமையான கவிதைகள் என்றால் மட்டுமே பிடிக்கும்..

ரொம்ப பிடிச்சுருக்குன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.

Divyapriya said...

மதி said...
//ஆனாலும் அம்மா ஊருக்குப் போனது உங்கள இவ்வளவு பாதிச்சிடுச்சா...?

நீ இல்லாத வீடு... அழகான கவி வரிசை...

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் திவ்யா
//
நன்றி மதி...பாதிப்பு எல்லாம் இல்ல, சும்மா தோன்னத தான் எழுதி இருக்கேன் :))

---

Smriti said...
//sweety!!!! Ivlo missing mom uh ???//

நோ நோ :))

---

Badrinarayanan said...
//only two words for this
'Simply fantastic'//

---

Saravana Kumar MSK said...
//ஹே.. அழகா இருக்கு இந்த பதிவு.

மனசை தொட்டது.. :) //

நன்றி சரவணன் :))

//அம்மா ஊருக்கு போய்ட்டாங்களா??//

ஆமா :((

//நீர் சேமிக்கிறேன் என்று சாக்கிட்டு, மழையில் நான் அலைவதும்,
பின்னோடு ஒரு குடையோடு, நிழலாய் நீ என்னை தொடர்வதும்...//

நினைத்து பார்க்கிறேன் என் சிறு வயதின் நினைவுகளை.. அழகான தருணங்கள்..

உங்க வீட்லயும் இதே கூத்து தானா :-))

Divyapriya said...

விஜய் said...
//கதை கவிதை கட்டுறைன்னு சகலகலாவல்லியா இருக்கீங்க. இது யாருக்கு அர்ப்பணம்? உங்க அம்மாவுக்கா இல்லை, அக்காவுக்கா? பிரிவின் பரிதப்பை அருமையாக வெளிப்படுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.//

அம்மா தான் விஜய்...சககலவல்லியா ;-) பாராட்டுக்கு ரொம்ப நன்னி :))

---
ஆயில்யன்

வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி aayilyan

---

ஜி said...
//கடைசி கவிதை செம பின்னல்.... அருமையா வந்திருக்குது...

அக்கா கூட பேசிட்டு இருக்கேன்னு சொல்லும்போதே நெனச்சேன்... இது மாதிரி ஒரு கவித வர போகுதுன்னு :)) கூடிய விரைவில் உங்க அக்கா இந்தியா வந்து உங்கள பாக்க வாழ்த்துக்கள்...
//

நன்றி ஜி...அக்கா கவிதை இல்ல, அம்மா தான் :)) பேசிகிட்டு இருந்தது ரெண்டு பேரோடையும் தான் ;) ஆனால், கவிதை எழுதினது, நிஜமாவே மழை வந்த அந்த மாலை பொழுதில் தான் :))

Divyapriya said...

ஸ்ரீமதி said...
//ரொம்ப அழகா இருக்கு அக்கா கவிதை..!! :)))//

ரொம்ப நன்றி தங்கச்சி...

---

Murugs said...
//அக்காவுக்கு க‌விதையா? நான் அம்மான்ல‌ நினைச்சேன்.

ப‌டையெடுப்பு சூப்ப‌ரா இருக்கு. எங்க‌ வீட்ல‌ கூட‌ எறும்பு தொல்லை ப‌ண்ணுது. எங்க‌ அம்மா காம்ப்லெக்ஸா ஒரு வ‌ழி சொன்னாங்க‌. நீங்க‌ கொஞ்ச‌ம் ஈசியா இருந்தா சொல்லுங்க‌!
வாழ்த்துக்க‌ள்!//

அம்மா தாங்க :)) எறும்புக்கு வழி எல்லாம் அமாகளுக்கு தான் தெரியும்னு நினைக்கறேன் ;)

---

Raghav said...
//கவிதைன்னு சொல்லலாமா ?? இதை முதல்ல தூக்குப்பா..

பொதுவா கவிதைகள் படிக்க மாட்டேன், சாதாரண நிகழ்வை ரொம்பவே அதிகப்படுத்தி சொல்வது போல் இருக்கும்... எளிமையான கவிதைகள் என்றால் மட்டுமே பிடிக்கும்.. //

எளிமையான வார்த்தைகளின் கோர்வையாய், உரைநடை போல் இருக்கராதலா தான் ராகவ், கவிதைன்னு சொல்லலாமான்னு லேபில் வச்சிருக்கேன் :)) இனி, நீங்க தான் சொல்லணும், கவிதைன்னு சொல்லலாமான்னு :))

//ரொம்ப பிடிச்சுருக்குன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.//

ரொம்ப நன்றின்னு மட்டும் சொல்லிகறேன்

Divyapriya said...

sorry bad...
i wanted to type in english n left it blank...

this is wat i wanted to tell

only three words...
thankyou so much :))

three more words
ellaam unga aasirvaadham ;)

Badri said...

Pozhachu po :-)

தாரணி பிரியா said...

எதுக்கு திவ்யா சந்தேகமெல்லாம் கவிதைன்னு தைரியமாவே சொல்லுங்க‌

தாரணி பிரியா said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா said...

எதுக்கு திவ்யா சந்தேகமெல்லாம் கவிதைன்னு தைரியமாவே சொல்லுங்க‌

Divyapriya said...

Badrinarayanan said...
//Pozhachu po :-)//

nanri thalaivare ;)

----

தாரணி பிரியா

thanks so much tharani :)) inime pottudalaam ;)

சிம்பா said...

//தொட்டில் துறந்தது முதல், பிறந்த பழக்கமாய்,
உன் மேல் கை போட யத்தனிக்கையில்,
தொம்மென்று வெற்றுப் படுக்கை மேல் விழுந்த கை//

அனுபவிச்சு எழுதிஇருக்கீங்க. நல்ல இருக்கு..

Punarvasu said...

divs kalakkitta :) missing mom very badly eh? very touching !!

priyamudanprabu said...

அன்று, நடுநிசியிலேயே விடிந்தது என் இரவு...
//////////

அழகான வரிகள்

Divyapriya said...

சிம்பா

ஆமா சிம்பா, உண்மை தான்...ரொம்ப நன்றி...

---

punarvasu

ஆமா ஐஸ் :(

---

பிரபு

நன்றி பிரபு

Anonymous said...

enna solla superb superb nu potu potu bore adikuthu :-)
Entha kavithai ellam amma aka padichangala....?

முகுந்தன் said...

திவ்யப்ரியா,

பாராட்ட வார்த்தைகள் இல்லை.....

//தூக்கத்தின் ஆழத்தில்,
தொட்டில் துறந்தது முதல், பிறந்த பழக்கமாய்,
உன் மேல் கை போட யத்தனிக்கையில்,
தொம்மென்று வெற்றுப் படுக்கை மேல் விழுந்த கை,
மனதின் அடியில், பெருவலி ஒன்றை கிளப்பியது...
அன்று, நடுநிசியிலேயே விடிந்தது என் இரவு...//

அனுபவித்திருக்கிறேன்....
எனக்கு கேஷவ் ஞாபகம் வந்துவிட்டது:((

Divyapriya said...

Gowtham

கமெண்ட்ஸ் போட்டு தாக்கினதுக்கு ரொம்ப நன்றி கௌதம் J

---

முகுந்தன் said...
//திவ்யப்ரியா,

பாராட்ட வார்த்தைகள் இல்லை.....

அனுபவித்திருக்கிறேன்....
எனக்கு கேஷவ் ஞாபகம் வந்துவிட்டது:((//

ஆமா முகுந்தன்...ரொம்ப கஷ்டமான அனுபவம் தான் :((

அன்புடன் அருணா said...

//என்னவோ! மழைச்சாரல் பட்டுத் தெறிக்கும் அழகை,
எட்டிப் பார்க்கக் கூட தோன்றவில்லை//

அடடா...அப்பிடின்னா ரொம்பக் கஷ்டம்தான்.
அன்புடன் அருணா

Divyapriya said...

Aruna

உங்க முதல் வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி அருணா...

Venkata Ramanan S said...

அருமை!!!! :)

தேவன் மாயம் said...

அவரவர் அம்மாதான்
குழந்தைகளுக்கு அழகு!
உலகின் மிகச்சிறந்த கவிதை
அம்மா!
தேவா.