Friday, August 22, 2008

ஹயய்யோ ஹயய்யோ கடிச்சிருச்சு!

"ஹயய்யோ, ஹயய்யோ!!! "

"யாராவது ஓடி வாங்க, ஓடி வாங்க…ஹெல்ப்….ஹெல்ப்…அது என்ன தாக்க வருது!!!"

சைக்கிள முடிஞ்ச வரைக்கும் தம் கட்டி வேகமா ஓட்றேன், ஹூம், ஹூம…இந்த நாயும் அதோட வேகத்த இன்க்ரீஸ் பண்ணுதே….கடவுளே! இப்ப என்ன பண்றது?

வேக வேகமா போய் எதோ ஒரு தெருவுக்குள்ள நுழையறேன்…என்ன இது, இப்டி ஒரு தெருவ நம்ம ஏரியாவுல பாத்ததே இல்லயே??? ஓ மை காட்!!! இது என்ன, இந்த தெரு ஒரு டெட் எண்டா??? ஆண்டவா!!!

நாய் வேற வேகமா ஓடி வருது…எனக்கு தான் இனி டெட் எண்டு…பேசாம சைக்கிள கீழ போட்டுட்டு, அந்த சுவர ஏறி குதிச்சு ஓடிட வேண்டியது தான், வேற வழியே இல்ல…

சரி, மொதல்ல நாய் எவ்ளோ தூரம் வந்துருக்குன்னு பாப்போம்…

ஆஆஆ…அம்மாஆஆஆஅ…

பின்னாடி வந்துட்டு இருந்த நாய பாத்தேன், ஆனா முன்னாடி இருந்த கல்ல பாக்கலையே…(இத தான் நாயை கண்டால், கல்லை கானோம்ன்னு சொல்லுவாங்களோ?!?!?)

சைக்கிளோட சேந்து நானும் குப்புறடிச்சு தொபுக்கடீர்ன்னு விழுந்துடேன்.

அப்படியும் கூட, இரக்க குணமே இல்லாத அந்த நாய், பக்கத்துல வருது…பக்கதுல வந்துடுச்சு…கடிக்க போகுது…
என்னோட பலம் எல்லாத்தயும் சேத்து, ஓங்கி அது முகத்துல விட்டேன் ஒரு குத்து!!!

அம்மாஆஆஆஆஆ!!!!

அட, யாருடா இது? நாய்க்கு லேடி வாய்ஸ்ல டப்பிங் குடுக்கறது??? அது மட்டுமில்லாம அம்மான்னு வேற கத்துது! துரத்தினது, நாயா இல்ல மாடா?

இதென்ன, திடீர்ன்னு என் பக்கத்துல அம்மா, அப்பா, அக்கா எல்லாரும் நிக்குறாங்க?!?!?!

கும்பர்கர்ணன் பரம்பரைல வந்த என்னை, அரும்பாடு பட்டு, குறைஞ்சது அரை மணி நேரமாவது போராடி, எக்ஸாம் அன்னிக்கு எழுப்பி விடுற, என்னோட குல தெய்வம், என் உடன் பிறப்பு,எனதருமை அக்கா, ஏன் இப்படி கப்பல் கவுந்த மாதிரி, கன்னத்துல கைய வச்சுகிட்டு நின்னுட்டு இருக்கா?!?!?!

ஹாஆஆஆ!!! இதென்ன, அவ வாய்குள்ள, ஒரு ரத்தப் பல்லு!!!

“ஹயய்யோ, நான் ஒரு நாய் கடிக்குற மாதிரி கனவு கண்டேனா…அதான், உன்ன நாய்யின்னு நினச்சு…”

“பேசாத, இந்த ஜென்மத்துல, இனி உன்ன எழுப்பி விட்டேன்னா, என்னன்னு கேளு…”

“ஹயய்யோ, ஹயய்யோ!!!”

P.S: இது பல முறை வந்த ஒரு கனவு, இப்ப கூட வருது :-) ஆனா, என்ன ஒன்னு, இது வரைக்கும் நாய் என்ன கடிச்சதில்லை, நான் கடிக்க விட்டதில்லை ;-) ஒன்னா நாய் முகத்துல குத்திடுவேன், இல்லன்னா, ரெண்டு கையால அதோட வாய அப்படியே பிடிச்சுருவேன் :-D

43 comments:

ஜியா said...

:))))

Bengalurula thaane irukkeenga?? one yr kku munna anga ekkachakka theru naai kadi problem irunthathaam.. paathu soothu vaathamaa irunthukkonga ;)))

Naalaila irunthu Naai varaama pei vara vaazththukkal...

Raghav said...

ஹா ஹா ஹா..ஹா ஹா ஹா..ஹா ஹா ஹா

இன்னமும் சிரிச்சுகிட்டே இருக்கேன்.. உங்க உடன்பிறப்போட ரியாக்ஷன் தான் சூப்பர்.

Raghav said...

//அட, யாருடா இது? நாய்க்கு லேடி வாய்ஸ்ல டப்பிங் குடுக்கறது??? அது மட்டுமில்லாம அம்மான்னு வேற கத்துது! துரத்தினது, நாயா இல்ல மாடா?//

உங்களுக்கு உடம்பு பூரா நக்கல்னு நினைக்கிறேன்.

Raghav said...

//P.S: இது பல முறை வந்த ஒரு கனவு, இப்ப கூட வருது :-) ஆனா, என்ன ஒன்னு, இது வரைக்கும் நாய் என்ன கடிச்சதில்லை, நான் கடிக்க விட்டதில்லை ;-)//

"அடுத்த முறை கண்டிப்பாக கடிக்க வேண்டிக்கொள்ளும்" - குத்து வாங்கியும் 5 மணிக்கு எழுப்பி விடும் உடன்பிறப்பு.

MSK / Saravana said...

//Raghav said...
//அட, யாருடா இது? நாய்க்கு லேடி வாய்ஸ்ல டப்பிங் குடுக்கறது??? அது மட்டுமில்லாம அம்மான்னு வேற கத்துது! துரத்தினது, நாயா இல்ல மாடா?//

உங்களுக்கு உடம்பு பூரா நக்கல்னு நினைக்கிறேன்.//
ரிப்பீட்டேய்..

MSK / Saravana said...

//P.S: இது பல முறை வந்த ஒரு கனவு, இப்ப கூட வருது :-) ஆனா, என்ன ஒன்னு, இது வரைக்கும் நாய் என்ன கடிச்சதில்லை, நான் கடிக்க விட்டதில்லை ;-) ஒன்னா நாய் முகத்துல குத்திடுவேன், இல்லன்னா, ரெண்டு கையால அதோட வாய அப்படியே பிடிச்சுருவேன் :-D//

சரி விடுங்க.. நீங்க தைரியசாலிதான்..
;)

MSK / Saravana said...

//"ஹயய்யோ ஹயய்யோ கடிச்சிருச்சு!"//

செம நக்கல் காமெடியான கலக்கலான தலைப்பு..

மறுபடியும் ஹாரிஸ் ஜெயராஜ் கிட்ட கொடுத்து டியூன் போட்டிறலாம்..

Anonymous said...

ரெம்ப சிரிப்பா இருக்கு.... உங்க கனவை நெனச்சா...

எழுத்து நடை அருமை ..

வாழ்த்துக்களுடன்

என்றும் இனிய தோழன்
விஷ்ணு ...

விஜய் ஆனந்த் said...

:-)))))....

Ramya Ramani said...

இதெல்லாம் ஓவரு கண்ணு பொறுப்பா அக்கா எழுப்ப வந்தா பல்ல உடைச்சிட்டீங்களா??

சண்டை போடும் போது பல்லை உடைப்பேன்னு சொன்னத நிரூபிச்சிட்டீங்களா?பாவம்..

ஹிம்ம் என்னோட தங்கை கூட இப்பல்லாம் நீ இல்லாம போர அடிக்குதுன்னா என்னப்பான்னா சண்டை போட ஆள் இல்லியாம்! எங்க அப்பா வேற உங்க ரெண்டு பேரு ஆர்கியூமண்ட் கேக்காம வீடு வீடாவே இல்லைன்னு சொல்றாரு ..

என்ன கொடுமை பாருங்க :((

Ramya Ramani said...

Madam unga codela twice Tamizhmanam code irukku pola irukku solpa check madi :)

Anonymous said...

:))))))))))
சூப்பரு

Divya said...

\அட, யாருடா இது? நாய்க்கு லேடி வாய்ஸ்ல டப்பிங் குடுக்கறது??? அது மட்டுமில்லாம அம்மான்னு வேற கத்துது! துரத்தினது, நாயா இல்ல மாடா?\

ROTFL:))

'கனவு' பதிவு கலக்கல்ஸ்:))

உங்க நக்கல் விக்கலுடன் ....பதிவு படிக்க ரொம்ப இண்ட்ரெஸ்டிங்க இருந்தது திவ்யப்ரியா:))

ஆயில்யன் said...

//ஒன்னா நாய் முகத்துல குத்திடுவேன், இல்லன்னா, ரெண்டு கையால அதோட வாய அப்படியே பிடிச்சுருவேன் ///


ம்ம் எல்லாம் கொலவெறியோடத்தான் இருக்கீங்க போல :)))


//என்னோட பலம் எல்லாத்தயும் சேத்து, ஓங்கி அது முகத்துல விட்டேன் ஒரு குத்து!!!

அம்மாஆஆஆஆஆ!!!!

அட, யாருடா இது? நாய்க்கு லேடி வாய்ஸ்ல டப்பிங் குடுக்கறது??? அது மட்டுமில்லாம அம்மான்னு வேற கத்துது! துரத்தினது, நாயா இல்ல மாடா?//


பாவம் தாங்க உங்க உடன்பிறப்பு :(

முகுந்தன் said...
This comment has been removed by the author.
முகுந்தன் said...

கொஞ்சம் நம்ம பக்கத்துக்கு வாங்க

முகுந்தன் said...

//…(இத தான் நாயை கண்டால், கல்லை கானோம்ன்னு சொல்லுவாங்களோ?!?!?)//

ரொம்ப நக்கலு அம்மணி உங்களுக்கு :-)

//இது பல முறை வந்த ஒரு கனவு, இப்ப கூட வருது :-) ஆனா, என்ன ஒன்னு, இது வரைக்கும் நாய் என்ன கடிச்சதில்லை, நான் கடிக்க விட்டதில்லை ;-) ஒன்னா நாய் முகத்துல குத்திடுவேன், இல்லன்னா, ரெண்டு கையால அதோட வாய அப்படியே பிடிச்சுருவேன்//

எனக்கு அமைதிப்படை சத்யராஜ் சொல்லும் வசனம் ஞாபகம் வந்தது :-)

Anonymous said...

எனக்கென்னவோ இதுல பாவப்பட்ட ஜீவன்கள் அந்த நாய்னு தோணுது. எவ்ளோ நாள் உங்கள ஆசையா தொரத்திட்டு வந்திருக்கு. ஒரு தடவ கடிக்க விட்டா கொறஞ்சா போயிடும். இத்தினி தடவ உங்கள தொரத்தினதுல அதுக்கு எம்புட்டு மூச்சு வாங்கியிருக்கும்.... ஹ்ம்ம்...

கனவுப் பதிவு கலக்கல். அதுக்கப்பறம் எந்த விஷயத்துக்குமே உங்க அக்கா உங்க பக்கத்துல வந்திருக்க மாட்டாங்களே...

செங்கதிர் said...

பிரமாதம்.

Divyapriya said...

@ஜி
//Bengalurula thaane irukkeenga?? one yr kku munna anga ekkachakka theru naai kadi problem irunthathaam.. paathu soothu vaathamaa irunthukkonga ;)))//

ஆமா :-( அதுவும் எங்க வீடு இருந்த தெருவுல மட்டும் மொத்தம் ஏழு இருந்துச்சு…

//Naalaila irunthu Naai varaama pei vara vaazththukkal...//

பேய்யெல்லாம் என்ன பாத்து ஒடி போய்டும் :-D

Divyapriya said...

@Raghav
//இன்னமும் சிரிச்சுகிட்டே இருக்கேன்.. //

Thanks Raghav :-))

// உங்களுக்கு உடம்பு பூரா நக்கல்னு நினைக்கிறேன்.//

@M.Saravana Kumar
//ரிப்பீட்டேய்..//

ஹீ ஹீ :-D

Divyapriya said...

@ M.Saravana Kumar
//சரி விடுங்க.. நீங்க தைரியசாலிதான்..//

ஆமான்னு சொல்ல ஆசை தான் :-) ஆனா என்ன பண்றது :-(

// செம நக்கல் காமெடியான கலக்கலான தலைப்பு..
மறுபடியும் ஹாரிஸ் ஜெயராஜ் கிட்ட கொடுத்து டியூன் போட்டிறலாம்..//

ஆமா, நல்லா ஐடியா தான் :-)

Divyapriya said...

@Vishnu
//ரெம்ப சிரிப்பா இருக்கு.... உங்க கனவை நெனச்சா...
எழுத்து நடை அருமை ..//

ரொம்ப நன்றி விஷ்ணு, தொடர்ந்து படிங்க

Divyapriya said...

@விஜய் ஆனந்த்

முதல் வருகைக்கு ரொம்ப நன்றி விஜய், தொடர்ந்து படிங்க..

Divyapriya said...

@Ramya Ramani
// ஹிம்ம் என்னோட தங்கை கூட இப்பல்லாம் நீ இல்லாம போர அடிக்குதுன்னா என்னப்பான்னா சண்டை போட ஆள் இல்லியாம்! எங்க அப்பா வேற உங்க ரெண்டு பேரு ஆர்கியூமண்ட் கேக்காம வீடு வீடாவே இல்லைன்னு சொல்றாரு ..//

அது உண்மை தான் ரம்யா :-) எங்கக்காவ விட, அவளோட போடுற சண்டைய தான் அதிகமா மிஸ் பண்றேன் :-))

Divyapriya said...

@hisubash said...
//:))))))))))
சூப்பரு//

முதல் வருகைக்கு ரொம்ப நன்றி சுபாஷ், தொடர்ந்து படிங்க..

Divyapriya said...

@Divya
//'கனவு' பதிவு கலக்கல்ஸ்:))

உங்க நக்கல் விக்கலுடன் ....பதிவு படிக்க ரொம்ப இண்ட்ரெஸ்டிங்க இருந்தது திவ்யப்ரியா:))//


:))
நன்றி திவ்யா.

Divyapriya said...

@ஆயில்யன்

முதல் வருகைக்கும், விரிவான பின்னூட்டத்திற்க்கும் ரொம்ப நன்றி ஆயில்யன்.

Divyapriya said...

@முகுந்தன்

//ரொம்ப நக்கலு அம்மணி உங்களுக்கு :-)//

ஹீ ஹீ :-D

//எனக்கு அமைதிப்படை சத்யராஜ் சொல்லும் வசனம் ஞாபகம் வந்தது :-)//

:))

Divyapriya said...

@மதி said...
//கனவுப் பதிவு கலக்கல். அதுக்கப்பறம் எந்த விஷயத்துக்குமே உங்க அக்கா உங்க பக்கத்துல வந்திருக்க மாட்டாங்களே...//

அப்படியெல்லாம் இல்ல, எங்கக்கா ரொம்ப தைரியசாலி :-))

Divyapriya said...

@செங்கதிர்

முதல் வருகைக்கு மிக மிக நன்றி! தொடர்ந்து படிங்க...

வெட்டிப்பயல் said...

எனக்கு அடிக்கடி பாம்பு கொத்தற மாதிரி கனவு வரும். ஆனா உங்களை மாதிரி நான் யாரையும் இது வரைக்கும் குத்தல :)


உங்க அக்கா ரொம்ப பாவம் :)

Divyapriya said...

@வெட்டிப்பயல்
//எனக்கு அடிக்கடி பாம்பு கொத்தற மாதிரி கனவு வரும்.//

எனக்கும் அப்பப்ப பாம்பு வரும், ஆனா அத குத்தனது எல்லாம் இல்ல ;-)

Unknown said...

அச்சச்சோ பாவம் உங்க அக்கா..!! :( நானெல்லாம் இப்படி யாரையும் கையால அடிக்கவே மாட்டேன்..ஒரே உதைதான்..!! ;) அதிகம் வாங்கினது என் அண்ணா தான்..!! :))இன்னைக்குவரைக்கும் என்னை எழுப்பப் பயப்படுவான்..!! :))

Unknown said...

ம்ம்ம் அப்பறம் எனக்கு இந்த மாதிரி கனவுகளெல்லாம் வராது..!! என்ன ஏதாவது பேய் படம் பார்த்தா மட்டும் பயமா இருக்கும்..ஒரு மூனு நாள் தூங்க மாட்டேன். :( ஏவில் டெத் பார்த்து ஒரே ஜீரம் எனக்கு..!! :((

Divyapriya said...

@Sri

வாங்க sri தங்கச்சி :-)

இப்ப தான் ஜியோட லிங்க்ல இருந்து, முதன் முதலா உங்க பக்கத்துக்கு போனேன், உங்க "காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??" படிச்சுட்டு இருந்தேன், பாத்தா நீங்களும் அதே சமயத்துல இங்க...wat a bingo!!!

தொடர்ந்து நிறைய கதை எழுதுங்க...அப்டியே நம்ம பக்கத்துக்கும் வாங்க :))

Sanjai Gandhi said...

//அட, யாருடா இது? நாய்க்கு லேடி வாய்ஸ்ல டப்பிங் குடுக்கறது???//
ங்கொக்க மக்க... அடுத்தவங்க துக்கம் உங்களுக்கு கிளுகிளுப்பா? :))

பாவம்ங்க உங்க அக்கா.. அடிக்கடி இந்த கனவு வருதுனு வேற சொல்லி இருக்கிங்க.. ஹ்ம்ம்.. அவங்கள நெனைச்சி அனுதாப் படறத தவிர வேற என்ன பண்ண முடியும்.. நல்லா இருங்க மக்கா.. :))

Divyapriya said...

@SanJai

ஹீ ஹீ…நாய் துரத்தின கலவரத்திலையும் ஒரு கிளிகிளிப்பு, என்ன பண்றது? காமடி படம் பாத்து பாத்து கெட்டுப் போய்டேன் ;)

முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி sanjay…

Hariks said...

//ஒன்னா நாய் முகத்துல குத்திடுவேன், இல்லன்னா, ரெண்டு கையால அதோட வாய அப்படியே பிடிச்சுருவேன் :-D//

இந்த‌ தைரிய‌ம் நாய் தொர‌த்த‌ ஆர‌ம்பிக்கும் போதே இருக்கா இல்ல‌ நீங்க‌ விழுந்த‌த‌ற்கு பிற‌கு வ‌ரும் தைரிய‌மா?

Hariks said...

//சைக்கிள முடிஞ்ச வரைக்கும் தம் கட்டி வேகமா ஓட்றேன், ஹூம், ஹூம…இந்த நாயும் அதோட வேகத்த இன்க்ரீஸ் பண்ணுதே….கடவுளே! இப்ப என்ன பண்றது?//

என்ன‌ கூட‌ ஒரு த‌ட‌வ‌ நாய் தொர‌த்தி இருக்கு சைக்கிள் ஓட்டும் போது.
அப்ப‌ ப‌ய‌ந்து தான் ஓட‌ன‌. அதுக்க‌ப்புற‌ம் சைக்கிள‌ விட்டு கீழ‌ இர‌ங்கி திரும்பி பார்த்தா நாய் அதுவாவே போய்டும்.

Divyapriya said...

@Murugs
// என்ன‌ கூட‌ ஒரு த‌ட‌வ‌ நாய் தொர‌த்தி இருக்கு சைக்கிள் ஓட்டும் போது.
அப்ப‌ ப‌ய‌ந்து தான் ஓட‌ன‌. அதுக்க‌ப்புற‌ம் சைக்கிள‌ விட்டு கீழ‌ இர‌ங்கி திரும்பி பார்த்தா நாய் அதுவாவே போய்டும்.//

ஆமா Murugs...என்ன கூட ஒரு தடவ நிஜத்துல நாய் தொரத்தி இருக்கு, நான் திரும்பி பாத்து, முன்னாடி இருந்த முல்லுக்குள்ள சைக்கிள விட்டு கீழ விழுந்ததுல நாய் பயந்து ஓடிடுச்சு :-)

என் பக்கத்துக்கு வந்த வேகதுலையே பல போஸ்டுகள் படிச்சு, உங்க பொன்னான பின்னுட்டங்கள போட்டதுக்கு கோடான கோடி நன்றி, நன்றி, நன்றி...
என்ன பயந்துடீங்களா? சும்மா அரசியல்வாதி மாதிரி ட்ரை பண்ணேன்...:-)
சுருக்கமாதொடர்ந்து வாங்க.

ஜோசப் பால்ராஜ் said...

பாவம் உங்க அக்கா.
செம சுவாரசியமா எழுதியிருக்கீங்க. படிச்சுட்டு ரொம்ப நேரம் சிரிச்சேன்.

நான் சின்ன பையனா இருக்கப்ப எங்க அண்ணண்கள இதவிட படுத்தி எடுத்துருக்கேன். அதெல்லாம் நினைவுல வந்துச்சு.

Anonymous said...

ha ha ha ha...really good but nan ini unga vitupakamey varamatean pa.... apadiyeah vanthalum helmet oda than varuvean...;-)

Gowtham