நண்பர்களோட பிறந்தநாள், திருமண நாளுக்கெல்லாம் எதாவது வித்யாசமா பரிசு குடுக்கனும்ங்கற ஆசை நம்மில் பல பேருக்கு உண்டு. நம்ம செலவு பண்ற காசுல/நேரத்தில, அவங்களுக்கு பிடிச்ச மாதிரி, அதே சமயம் உபயோகமா, நம்ம மனசுக்கும் திருப்தி அளிக்கக் கூடியதா இருக்கனும் அந்த பரிசு. உபயோகமா வாங்கிக் குடுக்கறேன்னு சில பேர் புத்தகங்கள், வாட்ச், எலக்ட்ரானிக் சாதனங்கள் இப்படி வாங்கிக் குடுப்போம். கல்யாணம்ன்னா கேக்கவே வேணாம், ஊர்ல இருக்கறவங்க அத்தனை பேத்தையும் சேத்துகிட்டு, எதாவது பெரிய பொருளா வாங்கிட்டு போவோம், இல்ல பெரிய தொகையை காசோலையா குடுப்போம். இந்த பரிசுப் பொருட்கள் எல்லாத்திலையுமே ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்னிக்காவது ஒரு நாள் இல்ல ஒரு நாள் அழிஞ்சு போய்டுங்கற ஒற்றுமை தான் அது! காலாகாலத்துக்கும் அழியாம, உங்க நண்பர் பெயர் சொல்லிட்டு, உங்க நண்பருக்கு மட்டும் பயனுள்ளதா இல்லாம, உங்களுக்கு, உங்க குடும்பத்துக்கு, உங்க ஊருக்கு, நாட்டுக்கு, ஏன் இந்த உலகத்துக்கே பயனுள்ளதா இருக்கற மாதிரி ஒரு பரிசு பொருள் இருந்தா, அப்படிப்பட்ட ஒரு பரிசை குடுக்கறவங்களுக்கும், அதை வாங்கிக்கறவங்களுக்கும் அதை விட பெரிய சந்தோஷம் இருக்கா என்ன? சரி, ரொம்ப சுத்தி வளச்சிட்டேன்னு நினைக்கறேன்…இப்படி ஒரு பரிச பத்தி உங்கள்ள பல பேருக்கு முன்னமே தெரிஞ்சிருக்கலாம். ஆனா எனக்கு சமீபமா தான் தெரிய வந்துச்சு. இத பாத்தவுடனே, எனக்குள்ள எழுந்த சந்தோஷத்துக்கும், ஆச்சர்யத்துக்கும் அளவே இல்லை. கீழ இருக்கற படத்தை பாருங்க, இது தான் காலத்துக்கும் அழியாத அந்த பரிசு.
இந்த பதிவ படிக்கறவங்க யாராது ஒருத்தர் இப்படி ஒரு பரிச குடுத்தா கூட, நம்ம நாட்டுக்கு இன்னும் ஆயிரம் மரங்கள் கிடைக்கும்…அப்படியே ஆயிரம் ஆயிரம் மரங்கள் நம்ம நாடெங்கும் பெருகி, வளங்கள் கொழிக்கட்டும்!
நன்றி: www.plant-trees.org
20 comments:
amanga.....intha madiri oru event yai ooty la sila varushangAL MUNPU NAdathi katti irukkanga
சென்னையில் ....... ஒரு திட்டம் இருக்கு ... ஒவ்வொரு குழந்தை பிறக்கும் பொழுதும் அந்த குடும்பத்தை சேர்ந்தவங்க ஒரு மரதை நட வேண்டும் என்று ....... ana no space for tht
soooper ideanga
ரைட்டு உங்க கல்யாணத்துக்கு ஒரு ஆலமரத்த பரிசுப் பொருளாக் கொடுத்திடுறேன்.
hmmmm
long time no blogging ??
தமிழ் புத்தாண்டு, பொங்கல், உழவர் தின வாழ்த்துகள் D.P.
நல்ல திட்டம் தான், நடைமுறையில் (தொடர்ச்சியாக) சாத்தியப்படுமாயின் சிறப்பாக இருக்கும்...!
//MAHA said...
ரைட்டு உங்க கல்யாணத்துக்கு ஒரு ஆலமரத்த பரிசுப் பொருளாக் கொடுத்திடுறேன்.//
ரிப்பீட்டு... ;-)
ம்.. கொஞ்சம் நினைச்சுப் பார்த்தேன், கல்யாணத்துக்கு வர்றவங்க எல்லாருக்கும் தேங்காய் வைச்சு தர்றதுக்கு பதிலா, இப்புடி ஒரு மரக்கன்று கொடுத்தா எப்புடி இருக்கும்னு..
இனிய பொங்கல் வாழ்த்துகள்.
ஆஹா! நல்ல திட்டமா இருக்கே
நல்ல அன்பு.
mm..very nice idea..:-)
ரொம்ப நல்ல திட்டம்...உங்களின் பகிர்வுக்கு நன்றி...தை திருநாள் வாழ்த்துக்கள்...
hmm.. nalla gift!
April 4 ungaluku gift undu.. :)
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
enna alaye kanom
வாழ்த்துகள்!
good idea.
next post podungo ples!
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
Hi Divya Priya
I am Xavier Prakash, Film Director. We are doing a Tamil film here.
we need some supports in dialoque version for our story.
I red your Surya Gandhi, its wonderful.
pls contact me at this mail id or in 98410 54540
அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News
Post a Comment