Thursday, September 4, 2008

சிக்கன் பாக்ஸ் - 1

பகுதி 1

நிரு…என்னை விட என்னை அதிகமாகவே புரிந்து கொண்ட என் தேவதை! என் மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து தனியாட்சி புரியும் சர்வாதிகாரி. என் ஆழ்மனதில் பொதிந்து கிடக்கும் பற்பல அழகிய நினைவுகளில் நிறைந்து பூத்திருக்கும் இளவரசி.


அவளுக்கும் என்னை பிடிக்கும், மணிக்கனக்கில் என்னோடு பேசப் பிடிக்கும், யாருமற்ற சாலையில் என் கரம் கோர்த்து நடக்க பிடிக்கும், என் சின்ன சின்ன குறும்புகள் பிடிக்கும், என் செல்ல சண்டைகள் பிடிக்கும், என் சிரிப்பு, என் சீண்டல், என் கோபம், என் அழுகை, என் பார்வை, என் மெளனம்…எல்லாமே, எல்லாமே பிடிக்கும்…ஏன், என் காதலை கூட அவளால் வெறுக்க முடியவில்லையே…மறுக்க மட்டுமே முடிந்தது!


அன்று ஹோலி, வண்ணம் பூச வந்து என் எண்ணத்தோடு அவள் விளையாடிய திருநாள்.


“ஹோலி ஹை…”


“ஹே…நோ, நோ, நிரு…வேணாம், வெள்ள சட்டை, வீணா போய்டும்” நான் சொல்ல சொல்ல கேட்காமல், என் முதுகு, என் கன்னம், என்று எல்லா இடத்திலும் தன் கைவரிசையை காட்டினாள்.


ஹய்யோ என்று சலித்துக் கொண்டு சட்டையை பார்த்தால், அதே பளீர் நிறத்தில்…


“நல்லா ஏமாந்தியா?” வண்ணங்கள் ஏதுமற்ற தன் கைகளை இரு புறமும் ஆட்டி,ஆட்டி, முகத்தை கோனித்து பழிப்பு காட்டி, சிரித்த படியே ஓடினாள், என் தேவதை! ஒரு நொடி, அவள் முதுகுக்கு பின்னால், சிறகுகள் இருப்பது போலவே தோன்றியது. உற்றுப் பார்த்தேன், வெள்ளை துகிலென, இரு புறமும், விறிந்து பறந்த அவள் வெள்ளை துப்பட்டா!


அன்று அவள் என் மேல் வண்ணம் பூசா விட்டாலும் கூட, என் வாழ்வில் பல வண்ணங்கள் பூசி சென்றவள்! என் மனதை சிறகடித்து பறக்கச் செய்தவள். என் உணர்ச்சிகளை உயிர்ப்பித்து, உடல், உயிர் இரண்டும் ஒரே தருணத்தில் சிலிர்க்க செய்தவள், காதல் என்ற பரவசத்தை, அந்த அழகான அனுபவத்தை நான் உணரச் செய்தவள், என் நிரு…


“ப்ரவீன், என்னடா பண்ணிட்டு இருக்க?”


நான் கேக்கவும், “சாரி டா…ஏதோ கண்ணுல பட்டுதேன்னு எடுத்து படிக்க ஆரம்பிச்சிட்டேன்…உன் டைரி…சாரி டா…” என்றான் என் அறை நண்பன் ப்ரவீன், பள்ளியில் என்னோடு படித்து, பின் மீண்டும் அமெரிக்காவில் பார்த்து, எங்கள் நட்பை புதுப்பித்தவன்.


“ஹ்ம்ம்…படிச்சுட்ட, அப்புறம் எதுக்கு சாரி?”


“ஆமா, நிரு, நிரு ன்னு எழுதி இருக்கியே…யாரு இது?”


“நிரு… நிரஞ்சனா...”


“உன் ஃப்ரெண்டு நிரஞ்சனாவா!!!?


“ஹ்ம்ம்…ஆமா…”


“என்னது?? ஆமாவா? என்னால நம்பவே முடியல…இப்ப நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறது, சாட் பண்ணிகிறது இதெல்லாம் பாத்தா, உங்களுக்குள்ள ஒரு பெர்ஸண்ட் கூட லவ் இருக்கற மாதிரி தெரியலயேடா…”


“ஆமா…உண்மை தான்”


“அப்புறம் எப்டி இது…இதெல்லாம் அவளுக்கு தெரியாதோ?”


“இல்ல, இல்ல, அவளுக்கும் தெரியும்…”


“என்னது தெரியுமா? அப்புறம் எப்டிடா? இவ்ளோ கேஷுவலா? ஓ!! இப்ப நீ இதெல்லாத்தையும் மறந்துட்டியா?”


“இல்ல, எதயும் மறக்கல…இப்பயும் அவள லவ் பண்றேன்…ஆனா, அவ ஒத்துக்கனும்ங்கற எதிர்பார்ப்பு எதுவும் இல்லாம லவ் பண்றேன்…”


“சத்தியமா புரியல…”


“I am not her cup of tea –ன்னு எனக்கு தெரியும், எதுவும் நடக்க போறதில்லைன்னும் எனக்கு தெரியும்…திடீர்ன்னு அவ மாற மாட்டாளாங்கற நப்பாசை எல்லாம் எனக்கு துளி கூட இல்ல…ஆனா, அதுக்காக என் மனச மாத்திக்க மாட்டேன்…”


“மனச மாத்திக்காம? தமிழ் ஹீரோ முரளி மாதிரி இருக்க போறியா?”


“ச்சே…ச்சே…அப்டி எல்லாம் இல்ல, லவ் இஸ் அ சிக்கன் பாக்ஸ் டா…ஒரு தடவ வந்துட்டா, மறுபடியும் வரது ரொம்ப கஷ்டம்…அதே சமயத்துல, அது வந்த தளும்பு மறையறதுக்கும் கொஞ்ச நாள் எடுக்கும்”


“உனக்கு இப்பவும் அவள பிடிக்கும்ன்னு அவளுக்கு தெரியுமா?


“ஹ்ம்ம்…தெரியுமே…”


“எப்டி இவ்ளோ நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கு முடியுது உங்களால? உனக்கு ஒரு சின்ன உறுத்தலோ, இல்ல அவளுக்கு உன் மேல ஒரு சின்ன பயமோ, சந்தேகமோ…துளி கூட இல்லையா?”


“ஹூம்…ஹூம்...இல்ல, அது தான் என் நிரு… ”

ப்ரவீன் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாம இருந்தான், ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் பழைய நினைவுகள்…மனசுக்குள்ள குட்டி, குட்டியா பூ பூத்த மாதிரி உணர்ந்தேன்! அதனால தான் மலரும் நினைவுகள்ன்னு சொல்றாங்களோ? காலம்ங்கற மாமழை, நினைவுகள்ங்கற சின்ன, சின்ன சாரல காணாம செய்துடுதே! தேக்கி வைத்த நினைவுகள, வெளியே கொட்ட கொட்ட தான், எத்தனை ஆழமாக ஊற்றெடுக்குது? இன்னிக்கு எல்லாத்தையும் யார் கிட்டயாவது அருவியா கொட்டனும் போல தோணுது…

டிஸ்கி:
“எப்ப, ஏன் அவனுக்கு காதல் வந்துச்சு? அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு? “ இப்படி பல கேள்விகளுக்கு விடை எதுவும் சொல்லாமலே, ஒரு கோர்வையும் இல்லாமல், ஒரு நண்பனின் ஒரு பக்க கதையை (his one side of the story), அவன் உணர்வுகளை, அவனுக்குள் இருக்கும் அழகான நினைவுகளை, அவன் வாயால் கேட்கும் ஒரு ஃபீல் ஏற்படுத்தும் ஒரு சின்ன முயற்சி தான் இந்த கதை.
[தொடரும்]

54 comments:

Raghav said...

Me the firstaaaaaa??

Divyapriya said...

@Raghav
//Me the firstaaaaaa??//


ஆமா :-)
சீக்கரம் கதைய படிச்சுட்டு கமெண்ட்டுங்க ;-)

Raghav said...

கதை ஆரம்பமே அசத்தல். சின்னக் கலைவாணி ஆச்சே. இப்போ உங்க கதைய பிரிச்சு மேய்வோமா..

Raghav said...

//நிரு…என்னை விட என்னை அதிகமாகவே புரிந்து கொண்ட என் தேவதை। என் மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து தனியாட்சி புரியும் சர்வாதிகாரி. என் ஆழ்மனதில் பொதிந்து கிடக்கும் பற்பல அழகிய நினைவுகளில் நிறைந்து பூத்திருக்கும் இளவரசி.//

இதயே மடக்கி மடக்கி எழுதினா கவிதைன்னு சொல்லலாம்ல..

Raghav said...

//வண்ணம் பூச வந்து என் எண்ணத்தோடு //

சூப்பர்...

//அந்த அழகான அனுபவத்தை நான் உணரச் செய்தவள், என் நிரு…
//

அந்த அழகான அனுபவத்தை நாங்களும் உணரும்படி உங்கள் எழுத்து உள்ளது..

Raghav said...

//“ச்சே…ச்சே…அப்டி எல்லாம் இல்ல, லவ் இஸ் அ சிக்கன் பாக்ஸ் டா…ஒரு தடவ வந்துட்டா, மறுபடியும் வரது ரொம்ப கஷ்டம்…அதே சமயத்துல, அது வந்த தலும்பு மறையறதுக்கும் கொஞ்ச நாள் எடுக்கும்//

ஓஹோ காதல் ஒரு வியாதின்னு சொல்லுவாங்களே, நானும் என்ன வியாதின்னு சில சமயம் யோசிச்சுருக்கேன். இப்போ தான் தெரியுது அது சிக்கன் ஃபாக்ஸ்னு.

Raghav said...

வரிக்கு வரி பாராட்டலாம் "சி.க.தி.பி", யாராவது சீக்கிரம் கும்மிய ஆரம்பிச்சு வைங்கப்பா..

Ramya Ramani said...

\\என் மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து தனியாட்சி புரியும் சர்வாதிகாரி. \\


\\என் மனதை சிறகடித்து பறக்கச் செய்தவள். என் உணர்ச்சிகளை உயிர்ப்பித்து, உடல், உயிர் இரண்டும் ஒரே தருணத்தில் சிலிர்க்க செய்தவள், காதல் என்ற பரவசத்தை, அந்த அழகான அனுபவத்தை நான் உணரச் செய்தவள், என் நிரு…\\

அட நல்ல கவிதையா வார்த்தையெல்லாம் போட்டு கலக்கறே திவ்யா..

அருமையான துவக்கம் தொடர்ந்து படிக்க ஆவலா இருக்கு மேடம் :)
Rock On :))

ஜியா said...

Oru one mnth kku blog la irunthu break eduththuttu, yaarukkum comment podaama, blog padikkama irukalaamnu nenachittu irunthen... But... chanceless start... ennaala comment podaama irukka mudiyala...

//லவ் இஸ் அ சிக்கன் பாக்ஸ் டா…ஒரு தடவ வந்துட்டா, மறுபடியும் வரது ரொம்ப கஷ்டம்…அதே சமயத்துல, அது வந்த தலும்பு மறையறதுக்கும் கொஞ்ச நாள் எடுக்கும்//

ukkaanthu yosipeengalo???

ஜியா said...

பெண்ணாக இருந்துட்டு ஆண்பார்வையில் நீங்கள் கதை எழுதுறது ரொம்ப வித்தியாசமா, அழகா இருக்குது.. ஐ லைக் இட்.. கண்டினிவ் மாடி... :))

Divya said...

வாவ்......திவ்யா கலக்கல் ஆரம்பம்!!

வார்த்தைகள் எல்லாம் சும்மா சூப்பர்ப் ஆ இருக்கு:))

ஒரு ஆணின் பார்வையிலிருந்து கதை ஆரம்பித்திருப்பது.....அல்டிமேட்!!

வாழ்த்துக்கள் திவ்யப்ரியா!!

Divya said...

\அவளுக்கும் என்னை பிடிக்கும், மணிக்கனக்கில் என்னோடு பேசப் பிடிக்கும், யாருமற்ற சாலையில் என் கரம் கோர்த்து நடக்க பிடிக்கும், என் சின்ன சின்ன குறும்புகள் பிடிக்கும், என் செல்ல சண்டைகள் பிடிக்கும், என் சிரிப்பு, என் சீண்டல், என் கோபம், என் அழுகை, என் பார்வை, என் மெளனம்…எல்லாமே, எல்லாமே பிடிக்கும்…ஏன், என் காதலை கூட அவளால் வெறுக்க முடியவில்லையே…மறுக்க மட்டுமே முடிந்தது।\\


ஆஹா.........கவிதை கவிதை:))

உங்க எழுத்தில் ஒரு வித்தியாசமான தேர்ச்சியை உணர முடியுது, பாராட்டுக்கள்!!!

Vijay said...

It is literally amazing. உங்கள் எழுத்துக்கள் உண்மையிலேயே ரொம்ப முதிற்சி அடைஞ்சிருக்கு. வாழ்த்துக்கள்.

\\லவ் இஸ் அ சிக்கன் பாக்ஸ் டா…ஒரு தடவ வந்துட்டா, மறுபடியும் வரது ரொம்ப கஷ்டம்…அதே சமயத்துல, அது வந்த தலும்பு மறையறதுக்கும் கொஞ்ச நாள் எடுக்கும்”\\
இந்த வரிகள் அருமையிலும் அருமை. பாராட்ட வார்த்தைகளே இல்லை

\\காலம்ங்கற மாமழை, நினைவுகள்ங்கற சின்ன, சின்ன சாரல காணாம செய்துடுதே! தேக்கி வைத்த நினைவுகள, வெளியே கொட்ட கொட்ட தான், எத்தனை ஆழமாக ஊற்றெடுக்குது? \\
ச் ச் ச் Simply Superb!!
அதெப்படி திவ்யான்னு பெயர் உள்ளவங்களுக்கெல்லாம் இப்படி உணர்ச்சிப் பெருக்கெடுத்து எழுதறது ஆண்டவன் படிக்கும் போதே கொடுத்த in-built feature'ஆ

Vijay said...

ரம்யா விடுத்த அழைப்பை ஏற்று திண்ணை பற்றி உங்க மலரும் நினைவுகள் எழுதிருப்பீங்கன்னு நினைச்சேன். இப்படி ரம்யாவை கால வாரிட்டீங்களே.

MSK / Saravana said...

//என் தேவதை। ஒரு நொடி, அவள் முதுகுக்கு பின்னால், சிறகுகள் இருப்பது போலவே தோன்றியது. //

அட.. விடுங்க.. பிளாக் எழுதறத விட்டுறேன்.. இனிமேல் நான் எதையும் எழுதல..

என்னம்மா எழுதறீங்க நீங்க??

Shiva.G said...

wow.. bayangarama yeludhara DP .. eppdi idhellaa?? nice choice of words.. n good flow..
summa pattaya kelappura po..

;)

MSK / Saravana said...

//இன்னிக்கு எல்லாத்தையும் யார் கிட்டயாவது அருவியா கொட்டனும் போல தோணுது…//

சரி..சரி.. இன்னைக்கே எல்லா பகுதியையும் எழுதிறீங்க..
சும்மா வெயிட் பண்ண வச்சி எல்லாம் எழுத கூடாது..

நாளைக்கு "இந்திய நேர" காலையில வருவேன்.. எல்லா பகுதியையும் போஸ்ட் பண்ணி வச்சிருங்க..
:)

MSK / Saravana said...

//அவளுக்கும் என்னை பிடிக்கும், மணிக்கனக்கில் என்னோடு பேசப் பிடிக்கும், யாருமற்ற சாலையில் என் கரம் கோர்த்து நடக்க பிடிக்கும், என் சின்ன சின்ன குறும்புகள் பிடிக்கும், என் செல்ல சண்டைகள் பிடிக்கும், என் சிரிப்பு, என் சீண்டல், என் கோபம், என் அழுகை, என் பார்வை, என் மெளனம்…எல்லாமே, எல்லாமே பிடிக்கும்…ஏன், என் காதலை கூட அவளால் வெறுக்க முடியவில்லையே…மறுக்க மட்டுமே முடிந்தது।//

இதையெல்லாம் படிக்கறப்போ நம்ம வாழ்கையில இந்த மாதிரி எதுவுமே நடக்கலயேன்னு ஒரே பீலிங்க்ஸா இருக்கு..

MSK / Saravana said...

//என் தேவதை। ஒரு நொடி, அவள் முதுகுக்கு பின்னால், சிறகுகள் இருப்பது போலவே தோன்றியது.//

:)))))))))))))))))))))))))

Raghav said...

//இதையெல்லாம் படிக்கறப்போ நம்ம வாழ்கையில இந்த மாதிரி எதுவுமே நடக்கலயேன்னு ஒரே பீலிங்க்ஸா இருக்கு..//

(இம்சைஅரசன் ஸ்டைலில்) "என் இனமடா நீ" (ஸாரி பார் த "டா", Just for fun..)

ஆயில்யன் said...

// சிறகுகள் இருப்பது போலவே தோன்றியது. உற்றுப் பார்த்தேன், வெள்ளை துகிலென, இரு புறமும், விறிந்து பறந்த அவள் வெள்ளை துப்பட்டா!


அன்று அவள் என் மேல் வண்ணம் பூசா விட்டாலும் கூட, என் வாழ்வில் பல வண்ணங்கள் பூசி சென்றவள்।//

கலக்கல் :)))

ஆயில்யன் said...

//சிக்கன் பாக்ஸ் டா…ஒரு தடவ வந்துட்டா, மறுபடியும் வரது ரொம்ப கஷ்டம்…அதே சமயத்துல, அது வந்த தலும்பு மறையறதுக்கும் கொஞ்ச நாள் எடுக்கும்”//


இனி வரும் சந்தர்ப்பங்களில் தலும்பு வேண்டாம்! தளும்பு இதுதான் சரி!

வெட்டிப்பயல் said...

Excellent...

வெட்டிப்பயல் said...

நான் முதல்ல சிக்கன் பாக்ஸ்னு பார்த்தவுடனே டிஃபன் பாக்ஸ் மாதிரி சாப்பாடு டப்பில சிக்கன் இருக்கும்னு நினைச்சிட்டேன்.

என்னடா இந்த பொண்ணு ஒரே சாப்படற ஐட்டத்தை வெச்சே கதை எழுதுதேனு தப்பா நினைச்சிட்டேன்... சாரிம்மா...


கதை அருமையா ஆரம்பிச்சிருக்க.

//
“நல்லா ஏமாந்தியா?” வண்ணங்கள் ஏதுமற்ற தன் கைகளை இரு புறமும் ஆட்டி,ஆட்டி, முகத்தை கோனித்து பழிப்பு காட்டி, சிரித்த படியே ஓடினாள், என் தேவதை। ஒரு நொடி, அவள் முதுகுக்கு பின்னால், சிறகுகள் இருப்பது போலவே தோன்றியது. உற்றுப் பார்த்தேன், வெள்ளை துகிலென, இரு புறமும், விறிந்து பறந்த அவள் வெள்ளை துப்பட்டா!//

இது ரொம்ப பிடிச்சிருந்துச்சு :)

முகுந்தன் said...

எப்படி இப்படி எல்லாம் ? என்னமோ போங்க ....
கலக்கறீங்க....

முகுந்தன் said...

//கதை ஆரம்பமே அசத்தல். சின்னக் கலைவாணி ஆச்சே.//

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒருவழி பண்ணிடுவீங்க போல இருக்கு ?
ஆனா அந்த பட்டம் நல்லாதேன் இருக்கு :-)

Raghav said...

//இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒருவழி பண்ணிடுவீங்க போல இருக்கு ?
ஆனா அந்த பட்டம் நல்லாதேன் இருக்கு :-)
//

தாங்ஸ் முதலாளி !! (அவரோட பொட்டிக்கடைக்கு நாந்தான் கேஷியர் ஹி ஹி அதான்)

Hariks said...

/ஏன், என் காதலை கூட அவளால் வெறுக்க முடியவில்லையே…மறுக்க மட்டுமே முடிந்தது।//

அருமையான‌ வ‌ரிக‌ள் :)

Hariks said...

//“I am not her cup of tea –ன்னு எனக்கு தெரியும், எதுவும் நடக்க போறதில்லைன்னும் எனக்கு தெரியும்…திடீர்ன்னு அவ மாற மாட்டாளாங்கற நப்பாசை எல்லாம் எனக்கு துளி கூட இல்ல…ஆனா, அதுக்காக என் மனச மாத்திக்க மாட்டேன்…”//

முடிய‌ல‌ என்னால‌ ;)

Hariks said...

//“ச்சே…ச்சே…அப்டி எல்லாம் இல்ல, லவ் இஸ் அ சிக்கன் பாக்ஸ் டா…ஒரு தடவ வந்துட்டா, மறுபடியும் வரது ரொம்ப கஷ்டம்…அதே சமயத்துல, அது வந்த தலும்பு மறையறதுக்கும் கொஞ்ச நாள் எடுக்கும்”//

என்ன‌ ஒரு அனால‌ஜி ;)

க‌ல‌க்க‌றீங்க‌! வாழ்த்துக்க‌ள்!

Unknown said...

அக்கா ஃபஸ்ட் பார்டே கலக்கிட்டீங்க..!! :))

//ப்ரவீன் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாம இருந்தான், ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் பழைய நினைவுகள்…மனசுக்குள்ள குட்டி, குட்டியா பூ பூத்த மாதிரி உணர்ந்தேன்। அதனால தான் மலரும் நினைவுகள்ன்னு சொல்றாங்களோ?//

அடடடடா என்ன ஒரு கண்டுபிடிப்பு சூப்பர் அக்கா..!! :))

//காலம்ங்கற மாமழை, நினைவுகள்ங்கற சின்ன, சின்ன சாரல காணாம செய்துடுதே! தேக்கி வைத்த நினைவுகள, வெளியே கொட்ட கொட்ட தான், எத்தனை ஆழமாக ஊற்றெடுக்குது? இன்னிக்கு எல்லாத்தையும் யார் கிட்டயாவது அருவியா கொட்டனும் போல தோணுது…//

கொட்டிடுங்க...நாங்க தான் இருக்கோம்ல படிக்க...!! :))

Unknown said...

//லவ் இஸ் அ சிக்கன் பாக்ஸ் டா…ஒரு தடவ வந்துட்டா, மறுபடியும் வரது ரொம்ப கஷ்டம்…அதே சமயத்துல, அது வந்த தலும்பு மறையறதுக்கும் கொஞ்ச நாள் எடுக்கும்//

Vikraman effect irukku :)
தலும்பு spelling mistake. sirappu zhagaram should come.

Divyapriya said...

@ Ramya Ramani
// அட நல்ல கவிதையா வார்த்தையெல்லாம் போட்டு கலக்கறே திவ்யா..

அருமையான துவக்கம் தொடர்ந்து படிக்க ஆவலா இருக்கு மேடம் :)
Rock On :))//

Thanks ரம்யா…இந்த முறை ரொம்ப நாள் வெய்ட் பண்ண வேண்டாம் ரம்யா, சீக்கரமா போட்டு முடிச்சர்லாம்ன்னு இருக்கேன் :-)

Divyapriya said...

@ஜி
// Oru one mnth kku blog la irunthu break eduththuttu, yaarukkum comment podaama, blog padikkama irukalaamnu nenachittu irunthen... But... chancelessstart... ennaala comment podaama irukka mudiyala...//

ஏன்? ஏன் இப்படி ஒரு விபரீத முடுவு? அப்படியெல்லாம் உங்க ப்ளாகுக்கு லீவ் விட்டுடாதீங்க தல...உங்களோட சமீபத்திய ரெண்டு பதிவ படிச்ச எஃபெக்ட்ல தான் இந்த கதைய கொஞ்சம் நல்ல தமிழ்ல எழுத ஆசைப்பட்டு, எழுதி இருக்கேன்...

// பெண்ணாக இருந்துட்டு ஆண்பார்வையில் நீங்கள் கதை எழுதுறது ரொம்ப வித்தியாசமா, அழகா இருக்குது.. ஐ லைக் இட்.. கண்டினிவ் மாடி... :))//

கதையை முடிச்ச பிறகு எனக்கும் அதே தான் தோணுச்சு…ஒரு ஆண் பேசுற மாதிரியே கதை சொன்ன விதம் கன்வின்சிங்கா இருந்தா, ரொம்ப சந்தோஷம் தான் :-)

Divyapriya said...

@விஜய்
உச்சு கொட்டி பாராட்டினதற்க்கு ரொம்ப நன்றி விஜய் :-)

// அதெப்படி திவ்யான்னு பெயர் உள்ளவங்களுக்கெல்லாம் இப்படி உணர்ச்சிப் பெருக்கெடுத்து எழுதறது ஆண்டவன் படிக்கும் போதே கொடுத்த in-built feature'ஆ//

ஹீ ஹீ…:-D

// ரம்யா விடுத்த அழைப்பை ஏற்று திண்ணை பற்றி உங்க மலரும் நினைவுகள் எழுதிருப்பீங்கன்னு நினைச்சேன். இப்படி ரம்யாவை கால வாரிட்டீங்களே.//

அதுக்கு ஒரு காரணம் இருக்கு விஜய்…திண்ணை போஸ்ட், என்ன பொறுத்த வரைக்கும் ஒரு முக்கியாமான போஸ்ட், அதனால அத என்னோட 50வது பதிவா போடலாம்ன்னு தான் இத முதல்ல போட்டேன்.
ரம்யா காலை எல்லாம் நான் வார மாட்டேன்…ஏன்னா, ரம்யா என்னோட best buddy…என்ன ரம்யா, correct தானே?

Divyapriya said...

@ Saravana Kumar MSK said...
// அட.. விடுங்க.. பிளாக் எழுதறத விட்டுறேன்.. இனிமேல் நான் எதையும் எழுதல..
என்னம்மா எழுதறீங்க நீங்க??//

அட, கவிதை ஆசிரியரே இப்படி சொன்னா எப்படி?
உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி சரவணன்.

// சரி..சரி.. இன்னைக்கே எல்லா பகுதியையும் எழுதிறீங்க..
சும்மா வெயிட் பண்ண வச்சி எல்லாம் எழுத கூடாது.. //

மத்த கதைகள் மாதிரி ரொம்ப நாள் தாமதம் இருக்காது, முடிந்த வரையில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் போடலாம்ன்னு இருக்கேன்…மொத்தமே நாலு பகுதி தான், so, சீக்கரமே முடிஞ்சிரும் :-)

// இதையெல்லாம் படிக்கறப்போ நம்ம வாழ்கையில இந்த மாதிரி எதுவுமே நடக்கலயேன்னு ஒரே பீலிங்க்ஸா இருக்கு..//

என்ன கொடுமை சரவணா இது? வாழ்கைல ஒரு love failure நடக்கலைன்னு வருத்தப் படுற முதல் ஆள் நீங்களா தான் இருப்பீங்க போல இருக்கு ;-) ரெண்டாவது ஆள் வேற யாரும் இல்ல, ராகவ் தான்னு நினைக்குறேன் :)

Divyapriya said...

@ ஆயில்யன்
ரொம்ப நன்றி ஆயில்யன்…உங்க பாரட்டிற்க்கும், spell correction னுக்கும், உண்மையில் தளும்புக்கு சரியான spelling தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்…நல்ல வேளையா சொன்னீங்க :-)

Divyapriya said...

@வெட்டிப்பயல்
ரொம்ப நன்றி ண்ணா…

சிக்கன் box ன்னு நினைச்சுடீங்களா?:-D

// என்னடா இந்த பொண்ணு ஒரே சாப்படற ஐட்டத்தை வெச்சே கதை எழுதுதேனு தப்பா நினைச்சிட்டேன்... சாரிம்மா...//

இல்ல, இல்ல, என்னை பத்தி கரெக்ட்டா தான் நினைச்சுருக்கீங்க…I am perfectly capable of doing that…ஹீ ஹீ :-D
’கோழி குழம்பு’ - இந்த title கூட நல்லா தான் இருக்கு…

Divyapriya said...

@Shiva.G

;-)

Divyapriya said...

@முகுந்தன்
//எப்படி இப்படி எல்லாம் ? என்னமோ போங்க ....
கலக்கறீங்க....//

தானா வர்ரது தான், இப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்…பல நண்பர்களிடம் நான் கேட்டு, பார்த்து மகிழ்ந்த பல நிகழ்வுகள் + கொஞ்சம் கற்பனை கலந்து தான் எழுதி இருக்கேன்.

// இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒருவழி பண்ணிடுவீங்க போல இருக்கு ?
ஆனா அந்த பட்டம் நல்லாதேன் இருக்கு :-)//

அது என்னவோ உண்மை தான்…ஆனா இந்த பட்டம் நல்லா தான் இருக்கு ;-)

Divyapriya said...

@Raghav
என்னையும் மதிச்சு பட்டமெல்லாம் குடுத்துடீங்க…நன்றி முதலாளி (உங்க பெட்டி கடைக்கு என்னை கேஷியரா போட்டுங்க ;-) )

Divyapriya said...

@Murugs
ரசிச்சு பாராட்டியதற்க்கு ரொம்ப நன்றி Murugs…தொடர்ந்து படிங்க…

Divyapriya said...

@Sri
//அக்கா ஃபஸ்ட் பார்டே கலக்கிட்டீங்க..!! :)) //

டாங்க்ஸ் தங்கச்சி :-)


\\//ப்ரவீன் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாம இருந்தான், ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் பழைய நினைவுகள்…மனசுக்குள்ள குட்டி, குட்டியா பூ பூத்த மாதிரி உணர்ந்தேன்। அதனால தான் மலரும் நினைவுகள்ன்னு சொல்றாங்களோ?//

அடடடடா என்ன ஒரு கண்டுபிடிப்பு சூப்பர் அக்கா..!! :))//

எனக்கு இந்த பகுதிலயே ரொம்ப பிடிச்ச வரிகள் இது தான், உங்களுக்கும் இந்த வரிகள் பிடிச்சதுல ரொம்ப சந்தோஷம் Sri:-)
// கொட்டிடுங்க...நாங்க தான் இருக்கோம்ல படிக்க...!! :))//

அந்த தைரியத்துல தான் வண்டி ஓடுது :-))

Divyapriya said...

@vishnu

விக்கரமன் எஃபெக்டா? :)) நன்றிங்க…

//தலும்பு spelling mistake. sirappu zhagaram should come.//

மாத்திடேன்…தொடர்ந்து இந்த spell correction ஆதரவ குடுங்க :-)

Divyapriya said...

எல்லா comments பாத்து, நிஜமா நான் கொஞ்சம் பயந்துடேன்...கொஞ்சம் அதிக எதிர்பார்ப்ப முதல் பாகத்துல கிளப்பிட்டமோன்னு...முதல் பாகம் முடிவுல, ஒரு டிஸ்கி போடலாம்ன்னு நினைச்சு, மறந்துட்டேன்.
இது தான் அந்த டிஸ்கி

"எப்ப, ஏன் அவனுக்கு காதல் வந்துச்சு? அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு?" இப்படி பல கேள்விகளுக்கு விடை எதுவும் சொல்லாமலே, ஒரு கோர்வையும் இல்லாமல், ஒரு நண்பனின் ஒரு பக்க கதையை (his one side of the story), அவன் உணர்வுகளை, அவனுக்குள் இருக்கும் அழகான நினைவுகளை, அவன் வாயால் கேட்கும் ஒரு ஃபீல் ஏற்படுத்தும் ஒரு சின்ன முயற்சி தான் இந்த கதை.

MSK / Saravana said...

//என்ன கொடுமை சரவணா இது? வாழ்கைல ஒரு love failure நடக்கலைன்னு வருத்தப் படுற முதல் ஆள் நீங்களா தான் இருப்பீங்க போல இருக்கு ;-) //

ஒரு காதல் தோல்விக்கு முதலில் ஒரு அழகான காதல் இருக்க வேண்டுமல்லவா..
அந்த ஒரு அழகான காதலுக்கு தான் இத்தனை எதிர்பார்ப்புகள்..
:)))

Ramya Ramani said...

\\அதுக்கு ஒரு காரணம் இருக்கு விஜய்…திண்ணை போஸ்ட், என்ன பொறுத்த வரைக்கும் ஒரு முக்கியாமான போஸ்ட், அதனால அத என்னோட 50வது பதிவா போடலாம்ன்னு தான் இத முதல்ல போட்டேன்.
ரம்யா காலை எல்லாம் நான் வார மாட்டேன்…ஏன்னா, ரம்யா என்னோட best buddy…என்ன ரம்யா, correct தானே?
\\

அட அட ரொம்ப நன்றி மேடம் :))

Divya said...

ஹாய் திவ்யப்ரியா,

என் பின்னூட்டம் மீது என்ன கோபம்,கண்டுக்காம விட்டுட்டீங்க:((

Smriti said...

Sweetooo.... Pullarichings man !!!! Awesome words!!!
Idhoda phrases ellam appo appo narrate panni ketirukken ana ellam serthu ipdi pottu ippidi pull arikka vachu maadu menje sordhu pochu [:P]

Divyapriya said...

//Saravana Kumar MSK said...
//என்ன கொடுமை சரவணா இது? வாழ்கைல ஒரு love failure நடக்கலைன்னு வருத்தப் படுற முதல் ஆள் நீங்களா தான் இருப்பீங்க போல இருக்கு ;-) //

ஒரு காதல் தோல்விக்கு முதலில் ஒரு அழகான காதல் இருக்க வேண்டுமல்லவா..
அந்த ஒரு அழகான காதலுக்கு தான் இத்தனை எதிர்பார்ப்புகள்..
:)))//

தெரியுது…உங்க கவிதைகள பாத்தாலே தெரியுது…;-)
-----------------

// Ramya Ramani said...
\\அதுக்கு ஒரு காரணம் இருக்கு விஜய்…திண்ணை போஸ்ட், என்ன பொறுத்த வரைக்கும் ஒரு முக்கியாமான போஸ்ட், அதனால அத என்னோட 50வது பதிவா போடலாம்ன்னு தான் இத முதல்ல போட்டேன்.
ரம்யா காலை எல்லாம் நான் வார மாட்டேன்…ஏன்னா, ரம்யா என்னோட best buddy…என்ன ரம்யா, correct தானே?
\\

அட அட ரொம்ப நன்றி மேடம் :))//

My pleasure ramya ji ;-)

Divyapriya said...

// Divya said...
ஹாய் திவ்யப்ரியா,

என் பின்னூட்டம் மீது என்ன கோபம்,கண்டுக்காம விட்டுட்டீங்க:((//


Sorry divya. இது தான் நான் போட நினைச்சது…
@Divya

// வார்த்தைகள் எல்லாம் சும்மா சூப்பர்ப் ஆ இருக்கு:))

ஒரு ஆணின் பார்வையிலிருந்து கதை ஆரம்பித்திருப்பது.....அல்டிமேட்!!//

Thank you so much Divya…First person point of view ல இருந்து கதை சொல்றது எவ்ளோ சுலபம் + அழகுன்னு எனக்கு இந்த கதைய ஆரம்பிச்ச அப்புறம் தான் தெரிஞ்சுச்சு. எழுத்தில் தெரியும் சின்ன தேர்ச்சிக்கும் அது தான் காரணம்ன்னு நினைக்குறேன்.

Divyapriya said...

// Smriti said...
Sweetooo.... Pullarichings man !!!! Awesome words!!!
Idhoda phrases ellam appo appo narrate panni ketirukken ana ellam serthu ipdi pottu ippidi pull arikka vachu maadu menje sordhu pochu [:P]//

Thanks smitu…;-)

gayathri said...

\அவளுக்கும் என்னை பிடிக்கும், மணிக்கனக்கில் என்னோடு பேசப் பிடிக்கும், யாருமற்ற சாலையில் என் கரம் கோர்த்து நடக்க பிடிக்கும், என் சின்ன சின்ன குறும்புகள் பிடிக்கும், என் செல்ல சண்டைகள் பிடிக்கும், என் சிரிப்பு, என் சீண்டல், என் கோபம், என் அழுகை, என் பார்வை, என் மெளனம்…எல்லாமே, எல்லாமே பிடிக்கும்…


rompa nalla iruku intha line. sekarama kathai mudinga. pdikka interestinga iruku.

Divyapriya said...

@gayathri

ரசிச்சு பாராட்டியதற்க்கு ரொம்ப நன்றி காயத்ரி...தொடர்ந்து படிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்க.. கதை சனி கிழமை முடிஞ்சுடும்...