இந்த பதிவ படிக்கறவங்க யாராது ஒருத்தர் இப்படி ஒரு பரிச குடுத்தா கூட, நம்ம நாட்டுக்கு இன்னும் ஆயிரம் மரங்கள் கிடைக்கும்…அப்படியே ஆயிரம் ஆயிரம் மரங்கள் நம்ம நாடெங்கும் பெருகி, வளங்கள் கொழிக்கட்டும்!
நன்றி: www.plant-trees.org
எனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட! அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது!!!
இந்த பதிவ படிக்கறவங்க யாராது ஒருத்தர் இப்படி ஒரு பரிச குடுத்தா கூட, நம்ம நாட்டுக்கு இன்னும் ஆயிரம் மரங்கள் கிடைக்கும்…அப்படியே ஆயிரம் ஆயிரம் மரங்கள் நம்ம நாடெங்கும் பெருகி, வளங்கள் கொழிக்கட்டும்!
நன்றி: www.plant-trees.org
“ஏன்ப்பா ஒரு மாதிரியா இருக்க? எதுக்கு இங்க தனியா உக்காந்திருக்க? நித்யா பிரகாஷ் எல்லாம் அங்க குளத்தங்கரை பக்கத்துல உக்காந்திருக்காங்க பாரு…அவங்களோட போய் பேசிட்டு இரு…”
“ச்ச்…நான் இங்கயே உக்கார்றேன்..”
“இங்க அடுப்பு புகையெல்லாம் வரும்…போடான்னு சொன்னா கேளு…”
மேலும் பேச்சு வளர்க்க அவனுக்கு இஷ்டமில்லாததால், ’சரி’ என்றபடி எழுந்தான். திருப்த்தி புன்னகையோடு திரும்பிய அவனது அம்மாவை நிறுத்தினான், “அம்மா…நித்யா…நித்யா கல்யாணம் என்னமா ஆச்சு?”
“அதான் அன்னிக்கே அவங்க சரின்னு சொல்லிட்டாங்கன்னு சொன்னேனே…இன்னும் தேதி எதுவும் குறிக்கல…அனேகமா இன்னும் ரெண்டு வாரத்துல நிச்சயதார்த்தம் இருக்கும்…”
தலையை தொங்க போட்டுக் கொண்டு யோசித்தபடியே மெதுவாக அந்த குளத்தை நோக்கி நடக்கத் துவங்கினான்.
குளத்துக்கு அருகே இருந்த ஒரு மரத்தின் கீழே அமர்ந்து கொண்டு நித்யா தரையில் எதோ கோலம் போல் கிறுக்கிக் கொண்டிருந்தாள். கோலம் வரைந்து பல வருடங்கள் ஆனதாலோ என்னவோ, கோலம் முடிந்த பின்னரும் பல புள்ளிகள் விடுபட்டே கிடந்தன. அதை பார்த்து அவளுக்குளேயே விரக்தியாய் சிரித்துக் கொண்டாள்.
உன்னை போலவே என்னை பார்த்து கண்கள் சிமிட்டி சிரிக்கின்றன,
விடுபட்ட புள்ளிகளணைத்தும்!
“நித்யா! இந்தா காஃபி” பிரகாஷின் குரல் அவள் சிந்தனையை கலைக்க மீண்டும் இந்த உலகத்திற்கு வந்தாள்.
“ஏன் இங்க வந்து தனியா உக்காந்துருக்கீங்கன்னு அம்மா கேக்குறாங்க…வா நித்தி போலாம்…”
“கொஞ்ச நேரம் கழிச்சு போலாம்…இந்த காஃபி முடியட்டும்…”
“என்ன நித்தி ஆச்சு?” கவலை தோய்ந்த முகத்துடன் பிரகாஷ் கேட்க, அந்த கோலத்தை அழித்தவாறே, “என்ன ஆச்சுன்னா? ஒன்னுமில்லையே…”
“இல்ல…நீ ஒரு மாதிரி டல்லா இருக்க…எனக்காக நீ ஒன்னும் அவசரப்பட்டு இந்த கல்யாணத்துக்கு ஒத்தக்கலையே?”
“எதுக்குடா இத்தனவாட்டி கேக்குற? எத்தன தடவை சொல்றது?”
“அதித்தி அம்மா, கல்யாணம் பண்ணாம அவள படிக்க யூ.யெஸ் அனுப்ப மாட்டேன்னு சொன்னதும், எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல…அக்காவுக்கே கல்யாணம் ஆகாம நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கறதுன்னு கேட்டா, அப்ப அதித்தி இங்கயே இருக்கட்டும்…அவ ஒன்னும் படிக்க போக வேண்டாம்னு ஒரே பிடிவாதம்…”
“ஹ்ம்ம்…”
“ஆனா இவ்ளோ சீக்கரம் உனக்கு நல்ல மாப்ளையா கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை…அதுவும் நீயும் உடனே ஒத்துகிட்ட…தாங்க்ஸ் அ லாட் நித்தி…”
“டே…எதுக்குடா இப்ப இதெல்லாம் பேசிகிட்டு? நான் எப்படி இருந்தாலும் கல்யாணம் பண்ண தான போறேன்? என்னவோ உனக்காக தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட மாதிரி பேசற?”
“அதில்லை…நீ இப்ப இருக்கற நிலைமையில கண்டிப்பா உனக்கு கொஞ்சம் டைம் வேணும்…எனக்காக தான உடனே நீ கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட?”
“வினோத்த பத்தி சொல்றியா? அதெல்லாம் இல்லடா…நடக்காதுன்னு தெரிஞ்சதும் நான் எப்பயோ அவன மறந்துட்டேன்…நடக்காதத நினைச்சு வருத்தப் படறத விட நடக்கப் போறத நினைச்சு சந்தோஷப் பட வேண்டியது தான்….இப்ப பாரு….இவரு வினோத்த விட அதிகம் படிச்சிருக்காரு, அவனை விட நல்ல நிலைமையில இருக்காரு…பாக்கறதுக்கும் அவன விட ஹான்சம்மா இருக்காரு…என்ன தான் வினோத் நல்ல பையனா இருந்தாலும், கொஞ்சம் பொறுப்பு பத்தாது…ஆனா இந்த மாப்ளை அப்படியில்லை. ரொம்ப பொறுப்பானவரு…அதுவும் யூ.யெஸ் ல வேற இருக்கறதால, உன்னையும் அடிக்கடி வந்து பாத்துக்கலாம்…”
பிரகாஷ் எதுவுமே பேசாமல் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான், பேசிக் கொண்டேயிருந்தவள் அவன் முகத்தை பார்த்ததும் நிறுத்தினாள், “என்னடா?”
“உன் குரல்லலையே தெரியுது…நீயே உன்னை சமாதானப் படுத்திக்க ட்ரை பண்றேன்னு…என்ன எழுதியிருக்கேன்னு பாரு…”
அப்போது தான் அவளையும் அறியாமல் அவர்கள் அமர்ந்திருந்த வெம்மணலில் “வினோத” என்று எழுதியிருந்ததை கவனித்தாள். அதற்கு மேல் எதுவும் பேசத் தோண்றாமல் சிறிது நேரம் அமைதியாயிருந்தாள். அவன் பெயரில் ’த’கரத்திற்கு மேல் வைக்காமல் விட்டிருந்த மேற்புள்ளியை நிரப்ப அவளுக்கு ஏனோ தோண்றவில்லை.
பிரகாஷும் அவளை தொந்தரவு செய்யாமல் அமைதி காத்தான், மெளனத்தின் கணத்தில் கணத்த அந்த ஒரு சில நொடிகளுக்கு பின்னர், விரக்தியாய் சிரித்தவள், “ஆனா இந்த மாப்ளைகிட்ட ஒரே ஒரு குறை மட்டும் தான்…”
’என்ன’ என்பது போல் பிரகாஷ் பார்க்க, தலையை குனிந்தபடி, “அவரு வினோத் இல்லை...அது ஒன்னு தான்…” அவள் கண்களிலிருந்து சிந்திய அந்த ஒரு சொட்டு கண்ணீர் நேராய் அந்த வெம்மணலில் பரவியிருந்த அவன் பெயரின் மேல் விழுந்தது. தானாக”த்’ உறுவானதை பார்த்தவள், உடனே மொத்த பெயரையும் வேகவேகமாய் அடையாளம் தெரியாமல் அழித்தாள், இதயத்திலிருப்பதை அழிப்பதாக எண்ணிக் கொண்டு!
அதற்கு மேல் பொறுக்கமுடியாதவனாய், “நித்தி! இப்ப கூட ஒன்னும் லேட் இல்லை…ஒரே ஒரு தடவை…ரொம்ப காஷுவலா…நான் வேணா வினோத் கிட்ட பேசி பாக்கட்டுமா?”
“வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்! உனக்கு எத்தன தடவை சொல்றது?”
“ஏன் இப்படி சொல்ற? ப்ளீஸ்…நான் பேசிப் பாக்கறேன்…”
“அதுக்கப்புறம் நான் உன்கூட பேச மாட்டேன்!”
அவள் குரலில் இருந்த கண்டிப்புக்கு கட்டுபட்டு பிரகாஷ் அதற்கு மேல் பேசாமல் அமைதியானான், ’அக்கா கிட்ட நம்ம விஷயத்த சொன்னது பெரிய தப்பு…அதுக்காக தான் இவ இப்படி அவசரப்பட்டு வேற கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா…” என்று வருந்தினான்.
அவன் மனநிலையை மாற்ற வேண்டி, நித்யா, “சரி டாப்பிக் ச்சேஞ்ச்….ஒரு நிமிஷம் உன்னோட வாலட் குடேன்…”
“எதுக்கு?”
“குளத்துக்குள்ள சில்லறை போடறதுக்கு….குடுடா!”
அவனது பர்ஸை வாங்கியவள், அதனுள்ளிருந்த அந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியே எடுத்தாள்.,
“ஹ்ம்ம்…இன்னிக்கு நல்ல நாளா இருக்கு…கோவில் விஷேஷம் வேற…சோ…”
“சோ?”
“இன்னிக்கே அம்மாகிட்ட உன் விஷயத்த சொல்றோம்….”என்றபடி புகைப்படத்துடன் எழுந்தாள்.
பதறிப்போன பிரகாஷ், “நித்தி! விளையாடாத...இன்னிக்கெல்லாம் வேண்டாம்…அவங்க ஒரு நல்ல மூட்ல இருக்கும் போது பாத்து சொல்லனும்…அந்த ஃபோட்டவ முதல்ல குடு…”
“முடியாது…நான் இன்னிக்கே சொல்ல தான் போறேன்…” வேகமாய் நடக்கத் துவங்கினாள்.
அவள் பின்னோடே ஓடியவன், “குடு…விளையாடாத….” என்று புகைப்படத்தை பிடுங்க முயற்சித்தான். உடனே அவள் அங்கிருந்து வேகமாய் ஓடத் துவங்க, பிரகாஷும் அவளை பிடிப்பதற்காக பின்தொடர்ந்தான்.
அன்று நித்யாவை நீண்ட நாட்களுக்கு பின் பார்த்ததை போல் இருந்தது வினோத்திற்கு. அவளை பார்க்கும் போது வரும் கோபம், அவள் சில அடிகள் நகர்ந்தவுடனே மாயமாய் தான் மறைந்துவிடுகிறது.
உன்னை பார்க்காத நாளிலெல்லாம், நாள் நாளாக இல்லை
உன்னை பார்க்கும் நாளிலெல்லாம், நான் நானாக இல்லை
“எப்படி இவ்ளோ சீக்கரம் வேற கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா…அப்ப இனிமே அவளோட எப்பவுமே பேச முடியாதா? நான் ஏன் இப்படி இருக்கேன்? எப்ப பாத்தாலும் அவளையே நினைச்சுகிட்டு…” என்று யோசித்தபடி மிகவும் சோகமாக அந்த ஓடைக்கு பக்கத்தில் தன் நிழலை பார்த்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தான் வினோத்.
மாம்பழ மஞ்சள் நிறத்தில், மெரூன் பார்டருடன் கூடிய பட்டுப் புடவை, அவளது உயரத்தை விட நீளமாய் தரையில் புரள, பின்னாமல் விட்டிருந்த கூந்தல் காற்றில் அலைபாய, கையில் எதையோ பிடித்து ஆட்டியபடி, சத்தமாக சிரித்துக் கொண்டு அந்த ஓடையருகே வேகமாக ஓடி வந்தாள் நித்யா.
“அத குடு நித்தி! ப்ளீஸ் நித்தி!!!” அவள் பின்னோடு ஓடி வந்து கொண்டிருந்தான் அவளுடைய தம்பி பிரகாஷ்.
அவனை திரும்பி பார்த்து சிரித்துவிட்டு, “குடுக்க முடியாது போடா…” என்று இறைந்தபடி ஓடி வந்தவள், அங்கு தரையை பார்த்துக் கொண்டிருந்த வினோத் மீது மோதினாள். நிலை தடுமாறி விழப்போன இருவருமே சுதாரித்து நின்றனர். முகத்தில் இருந்த சிரிப்பு மறைய, “சாரி” என்றபடி அந்த
இடத்தை விட்டு நகர போனவளின் கையை கெட்டியாக பற்றி நிறுத்தினான்.
சோகமான குரலில், “இப்படியா கண்ணு மண்ணு தெரியாம ஓடி வருவாங்க?”
“பாக்கலை” கையை விடுவித்துக் கொண்டு போக முயன்றாள்.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவனது பிடியை இறுக்கினான்.
“விடு வினோத்!”
“முடியாது!” என்றவனை ’ஏன்’ என்பதைப் போல் ஆச்சர்யமாக பார்த்தாள். மீண்டும், கெஞ்சும் தொனியில், “ப்ளீஸ்…விடு வினோத்…”
“மாட்டேன்…விடு டான்னு சொல்லு…அப்ப தான் விடுவேன்…”
“என்னது?”
“விடு டா எருமைமாடுன்னு சொல்லு….விட்டர்றேன்…”
ஆச்சர்யத்தில் மலர்ந்த கண்களால் அவன் கண்களை சந்தித்தவள், அந்த பார்வையின் அர்த்தம் புரிய,
குறும்பு புன்னகையுடன், “சொல்ல முடியாது! என்ன பண்ணுவ?”
“என்ன பண்ணுவனா?” என்றபடி அவளது கையை விடுத்து இடையை வளைத்துப் பிடித்தான்.
“ஹய்யோ!! என்ன பண்ற??? விட்றா…எல்லாரும் பாக்குறாங்க…”
“முடியாது…”
“வினு! ப்ளீஸ்!”
வினு என்ற வார்த்தையை கேட்டதும் யோசிக்காமல் உடனே செயல்பட்டான் வினோத். நடப்பதை உணர்ந்து, நித்யா சுதாரிக்கும் முன்பு, அதுவரை செய்வதறியாது அங்கேயே நின்று கொண்டிருந்த பிரகாஷ் அங்கிருந்து அகலும் முன்பு, அவளை பிடித்து அவன் புறமாக இழுத்து, இருவரின் மூச்சுக் காற்றும் பட்டுத் தெறிக்கும் இடைவெளியில் அவளை நிறுத்தி, அவள் முகத்தை உற்று நோக்கினான். அதற்கு மேல், அவ்வளவு அருகே அவனை பார்க்கும் சக்தியற்று மெல்ல கண்களை மூடினாள். குனிந்து அவள் கன்னத்தில் அத்துமீறி படர்ந்திருந்த கூந்தல் கற்றையை அகற்றியவன், அவளது கன்னங்களை மென்மையாய் வருடினான். அந்த கணத்தின் பரவசத்தை அணுவணுவாய் ரசித்தபடி, அதிலிருந்து மீள மனமின்றி நித்யாவும் அப்படியே
நின்றிருந்தாள். அது ஒரு நொடியா, இல்லை பல மணிநேரங்களா? அவர்களுக்குத் தெரியவில்லை, தெரிந்து கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அவர்களிவரின் நிலையை பார்த்து, அங்கிருந்த பெரியவர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்று அவர்களை நோக்கி வேக வேகமாக வர, அதை பார்த்த வினோத், அவள் முகத்தை கைகளில் ஏந்தி, திடுக்கிட்டு விழித்த அவளது கருவிழிகளை ரசித்துபடி, “நித்தி! நாம ஓடிப்போலாமா?” என்றான்!
[முற்றும்]
Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ணு தேடினா வழக்கம் போல பல்பு தான் மாப்ளை!!! ஹா ஹா ஹா :D
கொசுறு 1:
“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு…நீ இல்லாம எனக்கு லைஃபே இல்லை…ஒவ்வொரு நிமிஷமும் உன்னை பாத்துகிட்டே இருக்கனும் போல இருக்கு…” உருகும் குரலில் வினோத் இப்படி சொன்னதும், நித்யா மெல்ல புன்னகைத்தாள். நடுநடுவே ஏதோ ஒரு இனிய பாடல் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. ’என்ன பாட்டு இது? இது கனவா இல்ல நிஜமா’ என்று அவள் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போதே கைபேசி மீண்டுமொரு முறை அலறி, அதே இனிய பாடல் ஒலித்தது. ’ச்சே…கனவா!’ என்றவாறு கைபேசியை எடுத்து, ’ஹ்ம்ம் சொல்லு…” என்றாள்.
“இத்தன நேரம் ஃபோன எடுக்காம என்ன பண்ணிட்டு இருந்த?” வினோத்தின் குரல் தெளிவாய் கேட்க, இந்த உலகத்திற்கு வந்தவள், சிரித்தபடி, “இல்லை…ஒரு கனவு” கனவில் அவன் பேசியதை எல்லாம் அவள் சொல்லவும், வினோத், “இதெல்லாம் ஓவரா இல்ல? சத்தியமா என்னால இப்படி வசனமெல்லாம் பேச முடியாது! ஏதோ, பாக்க பாவமே இருக்கேன்னு வாழ்க்கை குடுத்தா, ரொம்ப தான் நினைப்பு உனக்கு…”
“எது? நீ வாழ்க்கை குடுத்தியா? நேர்ல வாடா…உனக்கு இருக்கு!”
“யேய்! வாடா போடான்ன கொன்னுடுவேன்!”
கொசுறு 2:
அவர்கள் வீட்டை விட்டு ஓடுவதற்கான சந்தர்ப்பமே கொடுக்காமல், அவர்களின் பெற்றோரே சந்தோஷத்துடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய, அவர்களது திருமண நாளும் வந்தது.
முகூர்த்தத்திற்கு இருபது நிமிடங்கள் முன்பு…
“என்ன பையன் ரெடியா இல்லையா? சீக்கரம் வர சொல்லுங்க…முகூர்த்தத்துக்கு லேட் ஆகுது..”என்று யாரோ ஒரு பெருசு கத்துவதை காதில் போட்டுக் கொள்ளாமல், ஏதோ தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தான் வினோத்.
யாசர், “டே பாப்பா! காதுல விழுகல? என்ன பண்ணிட்டு இருக்க? ரெடி தான? உங்க மாமா கூப்பிடறார் பாரு…எந்திரி!”
“ஒரே குழப்பமா இருக்குடா…”
“எப்பயுமே அடுத்தவன் கல்யாணத்துல தான்டா ஃபுல் கட்டு கட்டனும்…அவங்கவங்க கல்யாணத்துல கொஞ்சம் அடக்கி தான் வாசிக்கனும்…நேத்து நைட்டு அந்த கட்டு கட்டின. அப்புறம் வயிறு குழப்பாம என்ன செய்யும்?”
“அடச்சே…அதில்லடா…இந்த கல்யாணம்…இது கண்டிப்பா பண்ணிக்கனுமா? அவ்ளோ தானா என் வாழ்க்கையே? இன்னும் இருபது நிமிஷத்துல முடிய போகுதா? பேசாம இன்னும் கொஞ்ச நாள் பேச்சுலரா இருந்திருக்கலாமோ?” பாவமாய் அவன் கேட்க, யாசர், “இதே தான்டா எனக்கும் தோணுச்சு…அதுவும் கரெக்ட்டா கல்யாணத்துக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி…இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணியிருக்கலாமோ? இன்னும் நல்ல ஃபிகரா கிடைச்சிருக்குமோன்னு…ஆனா என்ன பண்றது? ரெண்டு நிமிஷத்துல ஒன்னும் பண்ண முடியாது…ஆனா நீ கொஞ்சம் உஷார்டா…இருபது நிமிஷம் முன்னாடியே தோணிருச்சு…” என்று சொல்லி நகைத்தான்.
“இப்ப இருபது நிமிஷத்துல மட்டும் என்ன பண்ண முடியும்? சரி வா…போவோம்…” என்று பலிக்கு செல்லும் ஆடாக மணமேடைக்கு சென்றான் வினோத்!!!
[இதோட நிஜமாவே முற்றும்] :)
சட்டென நிகழ்காலத்துக்கு வந்தவனை, ’இன்னிக்கு ஏன் அவ வரலை…எதாவது உடம்பு கிடம்பு சரியில்லாம போயிருக்குமோ?’ என்ற எண்ணம் வேறு தொல்லை படுத்தியது. ஒவ்வொரு முறை அவளை பற்றி நினைக்கும் போதும், “இனிமே என்னால உன்னோட பேச முடியாது… “ என்று கடைசியாக அவள் சொன்னது தான் நினைவுக்கு வந்தது.
எதேதோ நினைவுகளில் தொலைந்தவன், கையிலிருந்த கைபேசியை பார்த்து லேசாக புன்னகைத்தான். அது கூட கடந்த ஒரு மாதமாய் சோபை இழந்ததை போலவே அவனுக்கு தோன்றியது. அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியாய் அம்மாவை அழைத்தான். ஆனால் தொலைபேசி அடித்துக் கொண்டே இருந்தும், யாரும் எடுக்கவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, அவன் தங்கியிருந்த பீ.ஜியை அடைந்தான். உடனே அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.
சலிப்புடன் காதருகில் வைத்து, “இன்னேரத்துல எங்கம்மா போய்டீங்க?” என்றான்.
“இப்ப தான்ப்பா வீட்டுக்குள்ளையே நுழையறேன்…பாத்தா நீ கூப்பிட்டிருக்க…சொல்லு…என்ன விஷயம்?”
“சும்மா தான் கூப்பிட்டேன்….ஆமா எங்க போய்ட்டு வர்றீங்க?”
“நம்ம நித்யா வீட்டுக்கு தான்… அவளை பொண்ணு பாக்கறதுக்காக வந்திருந்தாங்க…. சாயந்தரமே போய்ட்டோம்….அவங்க கிளம்பி போனப்புறம் நாங்கெல்லாம் பேசிட்டு மெதுவா கிளம்பி வறோம்…நம்ம சொந்தம் இல்ல, இருந்தாலும் நல்லா தான் பேசிறாங்க…மாப்ளை அமெரிக்கால வேலை செய்யறாரு, ஆறு மாசம் கழிச்சு தான் லீவ் கிடைக்குமாம்…”
ஏனோ அம்மா சொல்லிக் கொண்டிருந்த விவரங்களை கேட்பதற்கு அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. காரணமே இல்லாமல் கோபம் வந்தது. 'எல்லாத்தையும் மறந்துட்டு கல்யாணம் பண்ண தயாராய்ட்டா…ஆனா என்னோட மட்டும் பேச முடியாது…கல்யாண விஷயத்த கூட சொல்லல!' அவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அம்மாவின் குரல் பலமுறை பலமாக ஒலித்தது…
“வினோத்து…ஹலோ…ஹலோ…”
“ஹாங்…சொல்லுங்க…சொல்லுங்கம்மா…”
“சரியாவே கேக்கல…ஆமா…இந்த வாரம் வர்றதுக்கும் டிக்கெட் புக் பண்ணிட்டல்ல?”“ஹ்ம்ம்…பண்ணிட்டேன்ம்மா…வந்தர்றேன்…ஓகே ஃபோன வெச்சர்றேன்...”
ஒரு சில நாட்களுக்கு முன்பு, “என்னவாயிருந்தாலும் இவன் கிட்ட சொல்லிருவியா? ஒரு விஷயத்தை கூட விடறதில்லை போல?” என்று அலுவலக நண்பன் ஒருவன் வேடிக்கையாய் கேட்க, நித்யா, “ஆமா…நான் தும்மினா கூட இவன்கிட்ட சொல்லிடுவேன்…” என்று சொல்லி சிரித்தது ஏனோ நினைவுக்கு வந்தது.
"இந்த பொண்ணுங்களே இப்படி தான்!” பலமுறை எத்தனையோ பெண்களை கிண்டல் செய்வதற்காக அவனே நண்பர்களிடம் இப்படி சொல்லியிருக்கிறான். ஆனால் இம்முறை தான் அதன் முழுமையான அர்த்தம் அவனுக்கு புரிந்தது. முதன் முதலாக அவளைப் பற்றின செய்தியை வேறொருவர் மூலம் அறிவது வித்யாசமாக இருந்தது வினோத்திற்க்கு. அந்த நொடி தான், அவள் தன் வாழ்விலிருந்து முழுவதுமாய் விலகிப் போய் கொண்டே இருக்கிறாள் என்ற உண்மை அவனுக்கு மெதுவாக உறைக்க ஆரம்பித்தது. பீ.ஜியில் நுழைந்தவன், முன் அறையில் தொலைக்காட்சிப் பெட்டி யாருமில்லாமல் கத்திக் கொண்டிருந்ததை கவனித்தும், அதை அணைக்கும் எண்ணம் வராமல் அவனது அறைக்குள் நுழைந்தான். கதவை அடைக்கும் முன்பு ஒலித்த அந்த பாடல் வரிகள் அவன் செவியை கடந்து இதயக் கோட்டையை லேசாய் தட்டியது.
'உயிர் தோழன் என்பாயா? வழிப்போக்கன் என்பாயா?
விடை என்ன சொல்வாய் அன்பே?'
அந்த வரிகள் அவனுக்குள் ஏற்படுத்திய தாக்கம் கோபமாய் மாற, விரைந்து சென்று தொலைக்காட்சி பெட்டியை படக்கென அணைத்தான். தொலைக்காட்சிப் பெட்டியில் தேய்ந்த அந்த வரிகள் மாறாக அவன் மனதிற்குள் ஒலிக்கத் துவங்கியது. அவன் படுக்க சென்ற பிறகும், விளக்கணைத்த இருட்டறையில், மனதிற்குள் ஓயாமல் ஒலித்த அந்த பாடல் வரிகளை அணைக்கும் பொத்தானை நீண்ட நேரமாய் தேடிச் சலித்தவனுக்கு உதவியாய், சூரியன் உதித்தும் கூட, அவனுள் அந்த பாட்டு மட்டும் ஓயவில்லை.
கண்னெரிச்சலோடு மறுநாள் அலுவலகத்திற்கு கிளம்புவதற்காக படுக்கையை விட்டு எழுந்தவன், 'சரி…அவ என்ன பன்னா நமக்கென்ன? அவ கல்யாணம் பன்னட்டும், ஏதோ பன்னட்டும்…நம்ம வேலையை பாப்போம்…' என்று திட்டவட்டமாய் முடிவெடுத்தான். அதன் பிறகு அவளை பற்றின எந்த செய்தியும் அவனுக்குள் எந்த வித மாற்றத்தையும் கொடுக்காது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான், காலை குளிக்கும் திரவதிற்கு பதிலாக ஷேம்ப்பூ தேய்த்து குளிக்கும் வரை!
[தொடரும்]
ஜன்னல் கம்பி வழியே, மழை நின்ற பின்னும் விடாமல் தூரிக் கொண்டிருந்த மரக்கிளைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் நித்யா. மழையில் நனைந்த அந்த பசும் இலைகளை போல் தான் இருந்தது அவளது மனநிலையும். அவனுடன் பேசி பலமணி நேரங்கள் கடந்துவிட்ட பிறகும், விடாமல் அவனது நினைவுகளை தூரிக் கொண்டிருந்தது மனது.
நீண்ட நாள் கழித்து வீட்டில் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையை கழிப்பதற்காக வந்திருக்கிறாள், கூடுதல் சந்தோஷமாய் வெளிநாட்டில் படிக்கும் தம்பி வேறு விடுமுறைக்காக வந்திருக்கிறான். விடுப்பு எடுத்துக் கொண்டு அவர்களுடனே இருக்கும் அம்மா, அவர்களுக்கு பிடிக்கும் என்று எதைஎதையோ வாங்கி வந்து கொண்டிருக்கும் அப்பா, என வீட்டுச் சூழலில் அளவு கடந்த குதூகலத்தை அடைந்திருக்க வேண்டிய அவளது மனம், அவனது நினைவுச் சிறையில் கூட்டுப் பறவையாய் அடைந்து கிடந்தது.
“நித்திக்கா!” பிரகாஷின் குரல் கேட்க இந்த உலகத்துக்கு திரும்பியவள், முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு, “என்னடா…” என்றாள்.
“ஏன்க்கா ஒரு மாதிரி டல்லா இருக்க?”
“ஒன்னுமில்லயே…”“பஸ்ல வந்தது டயர்டா இருக்கா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு சொல்…” அவள் முடிப்பதற்குள் கையிலேயே பாதுகாப்பாய் வைத்திருந்த கைபேசி பாடவும், அதை எடுத்து பார்த்தவளின் முகம் உடனே மலர்ந்தது.
“ஹ்ம்ம் சொல்லு…” என்றபடி அந்த அறையை விட்டு வெளியேறி சென்றவளை வினோதமாக பார்த்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தான் பிரகாஷ்.
எதிர்முனையில் வினோத், “என்ன அதுக்குள்ள எடுத்துட்ட?”
“பக்கத்துல தான் இருந்துச்சு…அதான்…என்ன விஷயம் சொல்லு!”
“ஹே…உன்கிட்ட ஒரு ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லனும்…”
“என்ன அது அப்படி முக்கியமான விஷயம்?”
“இல்லை…இல்லை…நான் நேர்ல தான் சொல்லனும்…உன் ரியேக்ஷன நான் நேர்ல பாக்கனும்…ஆனா ஒன்னு, நான் உன்னை பாக்க வர்றது யாருக்கும் தெரியக் கூடாது…இது ஒரு ரகசியமான மேட்டர்…அதனால நீயே ஒரு நல்ல இடமா யோசிச்சு சொல்லு…”
“என்ன வினோத் இவ்ளோ பில்ட் அப் குடுக்கற? என்ன விஷயம்னு சொல்லு …அப்ப தான் நான் வருவேன்…”
“அதெல்லாம் முடியாது! நான் நாளைக்கு காலையில நம்ம குளந்தங்கரை கோவிலுக்கு வந்தர்றேன்…சரியா பத்து மணிக்கு…நீயும் வந்துடு…நாளைக்கு ஞாயத்து கிழமை…யாரும் வர மாட்டாங்க…ஓகேவா? சரி…நான் இப்ப ஃபோன வச்சுடறேன்…”
“ஹே இரு இரு…” அதற்குள் இனைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது.
***
மறுநாள் பத்து மணிக்கு முன்னதாவே கோவிலுக்கு வந்து ஆற்றங்கரை படிக்கட்டில் அமர்ந்திருந்தாள் நித்யா. என்னவாக இருக்கும் என்று பலமுறை மண்டையை உடைத்துக் கொண்டும் அவளுக்கு என்னவென்றே புரியவில்லை. அப்போது காலை நேரத்து இளவெயில் அடித்துக் கொண்டிருந்தாலும், ஆற்றிலிருந்து சிலுசிலுவென சுகமான காற்றும் அடித்துக் கொன்டிருந்தது.
அதே போல் தான் இருந்தது அவளது மனநிலையும், ஏதேதோ இனிய எண்ணங்கள் அவள் மனதில் உதித்தாலும், கூடவே அப்படியெல்லாம் இருக்கவே இருக்காது என்ற ஒரு எண்ணமும் விடாமல் வந்து அவளது சந்தோஷங்களை மறைத்தது.
சரியாக பத்து மணிக்கெல்லாம் வினோத் அங்கு வந்ததும், அவளுக்கு முன்னே தரையில் விழுந்த அவனது நிழலை வைத்து அவன் வந்திருப்பதை கண்டு கொண்டாள் நித்யா. இருந்தாலும் அவள் அவனை திரும்பிப் பார்க்கவில்லை. அவனது நிழழ், அவளின் நிழலை ஒட்டியபடி விழுந்திருந்ததை பார்த்து, அர்த்தமற்ற ஆனந்தத்தை அடைந்தது அவள் மனம். வினோத்தின் நிழலும் அசையாமல் சிறுது நேரம் அதே இடத்தில் இருந்தது, ஆனாலும் நித்யா திரும்பிப் பார்க்கவில்லை. சட்டென அவன் குனியவும், அவன் நிழல் அவளது நிழலை முத்தமிடுவதைப் போல் படர, இனம்புரியாத ஏதோ ஒரு உணர்ச்சி, அவள் அதுவரை அனுபவித்தறிந்திராத ஒரு அதீத இன்பம் அவள் உடலெங்கும் பரவ, கீழே தெரிந்த அவனது நிழலை பார்த்து வெட்கிச் சிரித்தாள். ஒரு சிறிய கல் வேகமாக வந்து அவள் தோள் மேல் விழுகவும், ’ஆஅ” என்று தோளை தேய்த்துக் கொண்டு அவனை திரும்பிப் பார்த்தாள். விரிந்த கண்களால் அவனை ஒரு வினாடி பார்த்தவள், மீண்டும் திரும்பி அவனது நிழலையே பார்க்கத் துவங்கினாள்.
[தொடரும்]