Friday, November 20, 2009

ஓடிப்போலாமா? - 3

பாகம் 1, பாகம் 2

ஜன்னல் கம்பி வழியே, மழை நின்ற பின்னும் விடாமல் தூரிக் கொண்டிருந்த மரக்கிளைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் நித்யா. மழையில் நனைந்த அந்த பசும் இலைகளை போல் தான் இருந்தது அவளது மனநிலையும். அவனுடன் பேசி பலமணி நேரங்கள் கடந்துவிட்ட பிறகும், விடாமல் அவனது நினைவுகளை தூரிக் கொண்டிருந்தது மனது.


நீண்ட நாள் கழித்து வீட்டில் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையை கழிப்பதற்காக வந்திருக்கிறாள், கூடுதல் சந்தோஷமாய் வெளிநாட்டில் படிக்கும் தம்பி வேறு விடுமுறைக்காக வந்திருக்கிறான். விடுப்பு எடுத்துக் கொண்டு அவர்களுடனே இருக்கும் அம்மா, அவர்களுக்கு பிடிக்கும் என்று எதைஎதையோ வாங்கி வந்து கொண்டிருக்கும் அப்பா, என வீட்டுச் சூழலில் அளவு கடந்த குதூகலத்தை அடைந்திருக்க வேண்டிய அவளது மனம், அவனது நினைவுச் சிறையில் கூட்டுப் பறவையாய் அடைந்து கிடந்தது.










“நித்திக்கா!” பிரகாஷின் குரல் கேட்க இந்த உலகத்துக்கு திரும்பியவள், முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு, “என்னடா…” என்றாள்.

“ஏன்க்கா ஒரு மாதிரி டல்லா இருக்க?”

“ஒன்னுமில்லயே…”“பஸ்ல வந்தது டயர்டா இருக்கா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு சொல்…” அவள் முடிப்பதற்குள் கையிலேயே பாதுகாப்பாய் வைத்திருந்த கைபேசி பாடவும், அதை எடுத்து பார்த்தவளின் முகம் உடனே மலர்ந்தது.

“ஹ்ம்ம் சொல்லு…” என்றபடி அந்த அறையை விட்டு வெளியேறி சென்றவளை வினோதமாக பார்த்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தான் பிரகாஷ்.

எதிர்முனையில் வினோத், “என்ன அதுக்குள்ள எடுத்துட்ட?”

“பக்கத்துல தான் இருந்துச்சு…அதான்…என்ன விஷயம் சொல்லு!”

“ஹே…உன்கிட்ட ஒரு ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லனும்…”

“என்ன அது அப்படி முக்கியமான விஷயம்?”

“இல்லை…இல்லை…நான் நேர்ல தான் சொல்லனும்…உன் ரியேக்ஷன நான் நேர்ல பாக்கனும்…ஆனா ஒன்னு, நான் உன்னை பாக்க வர்றது யாருக்கும் தெரியக் கூடாது…இது ஒரு ரகசியமான மேட்டர்…அதனால நீயே ஒரு நல்ல இடமா யோசிச்சு சொல்லு…”

“என்ன வினோத் இவ்ளோ பில்ட் அப் குடுக்கற? என்ன விஷயம்னு சொல்லு …அப்ப தான் நான் வருவேன்…”

“அதெல்லாம் முடியாது! நான் நாளைக்கு காலையில நம்ம குளந்தங்கரை கோவிலுக்கு வந்தர்றேன்…சரியா பத்து மணிக்கு…நீயும் வந்துடு…நாளைக்கு ஞாயத்து கிழமை…யாரும் வர மாட்டாங்க…ஓகேவா? சரி…நான் இப்ப ஃபோன வச்சுடறேன்…”

“ஹே இரு இரு…” அதற்குள் இனைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது.

***

மறுநாள் பத்து மணிக்கு முன்னதாவே கோவிலுக்கு வந்து ஆற்றங்கரை படிக்கட்டில் அமர்ந்திருந்தாள் நித்யா. என்னவாக இருக்கும் என்று பலமுறை மண்டையை உடைத்துக் கொண்டும் அவளுக்கு என்னவென்றே புரியவில்லை. அப்போது காலை நேரத்து இளவெயில் அடித்துக் கொண்டிருந்தாலும், ஆற்றிலிருந்து சிலுசிலுவென சுகமான காற்றும் அடித்துக் கொன்டிருந்தது.

அதே போல் தான் இருந்தது அவளது மனநிலையும், ஏதேதோ இனிய எண்ணங்கள் அவள் மனதில் உதித்தாலும், கூடவே அப்படியெல்லாம் இருக்கவே இருக்காது என்ற ஒரு எண்ணமும் விடாமல் வந்து அவளது சந்தோஷங்களை மறைத்தது.

சரியாக பத்து மணிக்கெல்லாம் வினோத் அங்கு வந்ததும், அவளுக்கு முன்னே தரையில் விழுந்த அவனது நிழலை வைத்து அவன் வந்திருப்பதை கண்டு கொண்டாள் நித்யா. இருந்தாலும் அவள் அவனை திரும்பிப் பார்க்கவில்லை. அவனது நிழழ், அவளின் நிழலை ஒட்டியபடி விழுந்திருந்ததை பார்த்து, அர்த்தமற்ற ஆனந்தத்தை அடைந்தது அவள் மனம். வினோத்தின் நிழலும் அசையாமல் சிறுது நேரம் அதே இடத்தில் இருந்தது, ஆனாலும் நித்யா திரும்பிப் பார்க்கவில்லை. சட்டென அவன் குனியவும், அவன் நிழல் அவளது நிழலை முத்தமிடுவதைப் போல் படர, இனம்புரியாத ஏதோ ஒரு உணர்ச்சி, அவள் அதுவரை அனுபவித்தறிந்திராத ஒரு அதீத இன்பம் அவள் உடலெங்கும் பரவ, கீழே தெரிந்த அவனது நிழலை பார்த்து வெட்கிச் சிரித்தாள். ஒரு சிறிய கல் வேகமாக வந்து அவள் தோள் மேல் விழுகவும், ’ஆஅ” என்று தோளை தேய்த்துக் கொண்டு அவனை திரும்பிப் பார்த்தாள். விரிந்த கண்களால் அவனை ஒரு வினாடி பார்த்தவள், மீண்டும் திரும்பி அவனது நிழலையே பார்க்கத் துவங்கினாள்.

அவன் கல்லால் அடித்தும் எதுவும் பேசாமல் இருந்தவளை பார்த்து, “என்ன எதாவது உடம்பு கிடம்பு சரியில்லையா? பதிலுக்கு ஒரு பாராங்கல்ல தூக்கி போடுவேன்னு நினைச்சேன்?” என்று நக்கல் சிரிப்புடன் வினவினான்.

ஆனால் அதற்கும் அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. அவளருகே அவன் வந்து அமர்ந்தவுடன், அந்த கணமே அவன் தோள் மீது சாய்ந்து கொள்ள வேண்டும் போல் ஒரு விபரீத எண்ணம் அவளுள் முளைத்தது. அவன் நிச்சயமாய் ஒப்புகொள்ள மாட்டான் என்று மூளை சொன்ன போதும், அன்றே அவனிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி விடு என்று நச்சு பண்ணியது அவள் மனது.


கண்மூடி புதைந்து விடத் தான் விரும்புகிறேன்
உன் மார்பில்...
காலம் முழுக்க சிறைபடத் தான் விரும்புகிறேன்
உன் கரங்களில்...
தலை சாய்த்து கண்ணுரங்கத் தான் விரும்புகிறேன்
உன் தோளில்...
மெய் மறந்து தொலைந்து விடத் தான் விரும்புகிறேன்
உன் நினைவுகனில்...


நித்யாவிற்குள் நிகழ்ந்த இந்த போராட்டங்களை பற்றி ஒன்றும் தெரியாமல், வழக்கம் போல் வினோத்தும் தான் சொல்ல வந்த விஷயத்தையும் சொல்லாமல், அரை மணி நேரம் அவளை சீண்டிக் கொண்டே இருந்தான். கடுப்படைந்த நித்யா, “நீ சொல்லவே தேவையில்லை…” என்று கோபித்துக் கொண்டதற்கு பிறகு, சொல்ல வந்த விஷயத்தை ஆரம்பித்தான்.


“எங்கம்மா நேத்து உங்கம்மா கிட்ட பேசிட்டு இருந்தத நான் ஒட்டு கேட்டுட்டேன்!”

அவனை முறைத்துவிட்டு, “இத தான் நீ அரை மணி நேரமா சொல்லிட்டு இருக்க! சொல்ல வந்த விஷயத்த சொல்லுடா எருமைமாடு! இல்ல மிதிச்சே கொன்னுடுவேன்!”

“என்னது எருமைமாடா? அப்படியே பிடிச்சு குளத்துக்குள்ள தள்ளி விட்டுடுவேன்!!!”அவனை பார்த்து பழிப்பு காட்டி விட்டு திரும்பி அமர்ந்தாள்.

“சரி சரி…கோவிச்சுக்காத நித்யா! இந்த விஷயம் எல்லாம் முடியற வரைக்கும் உனக்கும் ரமேஷுக்கும் சொல்ல கூடாதுன்னு தான்சொன்னாங்க…”

“ரமேஷா? எந்த ரமேஷ்?”

“என்ன நித்யா இப்படி கேட்டுட்ட? கட்டிக்க போறவனை எந்த ரமேஷுன்னு கேக்குறியே!” சொல்லிவிட்டு பலமாய் சிரித்தான் வினோத்.

சுட்டெறிப்பதைப் போல் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்ன உளர்ற? யாரந்த ரமேஷ்?”

“ஹே! என்ன சொல்ற? உனக்கு ரமேஷ தெரியாதா? எங்கண்ணன்….என் பெரியம்மா பையன்…அவனுக்கும் உனக்கும் தான் கல்யாணத்துக்கு பாத்துகிட்டு இருக்காங்க வீட்ல….இன்னும் ஜாதகம் பாக்கலையாம்…ஆனா மோஸ்ட்லி சேந்துடுமாம்…அது வரைக்கும் உன்கிட்டையும் ரமேஷ்கிட்டையும் சொல்ல வேண்டாம்னு எங்கம்மா பேசிட்டு இருந்தாங்க…”

அத்துனை நாட்களாக யாருக்கும் தெரியாமல், மனதிற்குள்ளேயே பத்திரமாய் பூட்டி வைத்து, அனுதினமும், அல்லும் பகலும் பூஜித்து வந்த தன் கண்ணாடி கோட்டை பட்டென்று உடைந்ததைப் போல் உணர்ந்தாள் நித்யா. உடைந்த கண்ணாடித் துண்டுகளணைத்தும்ஒன்றோடொன்று சேர்ந்து ஒரு பெரிய ஈட்டியாய் உருமாறி, தான் அதுவரை குடியிருந்த இடத்தையே இரக்கமின்றி குத்திக் கிழித்தன.

ஆனால் அவள் மனதில் நடந்த போராட்டங்கள் எதையும் பிரதிபலிக்காமல் சலனமற்றே கிடந்தது அவள் முகம். சிறிது நேரம் எதுவும் பேசாமல் கீழே வெறித்தபடி அமர்ந்திருந்தாள். சற்று பொறுத்துப் பார்த்த வினோத், “என்ன நித்யா? எதுவுமே சொல்ல மாட்டேங்குற?”அதற்குள் கிழிந்த அவள் மனதில் வடியத் துவங்கிய உதிரமெல்லாம், கண்ணீராய் அவளது கன்னங்களில் சரியத் துவங்க, பதறிப் போனவன், “இப்ப எதுக்கு அழுகற? ஒரு வேளை…உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையா?”

“சொல்லு நித்யா! சொன்னா தான என்ன பிரச்சனைன்னு புரியும்?”

கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைக்கக் கூட மனமின்றி அவனை ஏறெடுத்துப் பார்த்தாள். “உனக்கு நிஜமாவே புரியலையா?”

உருகும் குரலில் அவள் பேசிய விதம் என்னவென்று புரியாவிட்டாலும் நிஜமாகவே அவன் மனதை உருக்கியது. “என்னன்னு சொன்னாதானம்மா புரியும்? இப்ப எதுக்காக இப்படி அழுகற?”

“சொன்னாலும் உனக்கு புரியாது! நான் போறேன்…” வேகமாய் எழுந்து படிகளில் ஏறத் துவங்கினாள். அவள் பின்னோடு வினோத்தும் வேகமாய் எழுந்து அவளை தொடர்ந்தான், “என்ன நித்யா இது? என்னன்னு சொல்லு!” என்றபடி அவளது கையை பிடித்து நிறுத்தினான்.

மெதுவாக திரும்பி அவனை தீர்கமாகப் பார்த்தாள். பரிதவிப்பு, ஏக்கம், கோபம் என்று பல உணர்ச்சிகள் பிரித்தறிய முடியாதபடி அவள் கண்களில் தாண்டவமாடின. உடைந்த குரலில், “எனக்கு….எனக்கு உன்னைதான்டா பிடிச்சுருக்கு…” என்று திட்டவட்டமாக உரைத்தாள்.

“என்ன சொல்ற?” அதற்கு மேல் அவன் வசம் வார்த்தைகள் இல்லை. அவன் திட்டமிடாமலே அந்த செயலும் நிறைந்தேறியது, அனிச்சை செயலாய் அவனது விரல்கள், பற்றியிருந்த அவள் கரத்தை தானே விடுவித்தன.

அவனது செயலுக்கு ஆயிரம் அர்த்தங்கள் அவளே கற்பித்துக் கொண்டு, ஒரு நீண்ட சோகப் பெருமூச்சை விட்ட படி, தொடர்ந்து நடக்கலானாள். சில நொடி செய்வதறியாது அங்கேயே நின்றவன், மீண்டும் அவள் பின்னால் ஓடினான், “நித்யா! நில்லு…நித்யா…“
வேகமாய் சென்று அவளை இடைமறித்து நின்றான்… “நித்யா! எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல…இத்தன நாளா…இத்தன நாளா…இத ஏன் என்கிட்ட சொல்லல?”

“----“

“சொல்லு நித்யா…”

“ஒவ்வொரு முறை உன்கிட்ட சொல்லனும்னு நான் நினைச்சப்பெல்லாம், நீ கரெக்ட்டா உன்னோட தத்துவத்த பேச ஆரம்பிச்சுடுவ…காதலிக்கறவங்களை எல்லாம் கிண்டல் பண்ணுவ…செத்தாலும் நான் எந்த பொண்ணு பின்னாடியும் சுத்த மாட்டேன்னு சொல்லுவ…அப்புறம் எப்படி உங்கிட்ட சொல்றது? இப்ப கூட நான் சொல்லலாம்னு தான் இருந்தேன்...ஆனா...ஆனா...நீ....நான் சொன்னவுடனே தீயை தொட்ட மாதிரி பிடிச்சிருந்த என் கையை விட்டுட்ட….”

“நான் எந்த அர்த்தத்திலையும் விடல நித்யா…தானா…அது வந்து…”

“விளக்கம் எல்லாம் வேண்டாம் வினோத்…எனக்கு தெரியும்…கண்டிப்பா நீ ஒத்துக்க மாட்டேன்னு எனக்கு முன்னாடியே தெரியும்…அதனால தான் உன்கிட்ட சொல்லாமையே இருந்தேன்… என்னால சொல்லவும் முடியல, சொல்லாம இருக்கவும் முடியல...ஆனா…இப்ப…இப்ப…சொல்ல வேண்டிய நிலைமை ஆயிடுச்சு…என்னால… என்னால, உங்கண்ணனயே கல்யாணம் பண்ணிகிட்டு, காலம் பூரா உன்னையும் அடிக்கடி பாத்துகிட்டே வாழ முடியாது!”

“சாரி நித்யா…எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல….ஐம் ரியலி சாரி…நான் கல்யாணத்த பத்தியெல்லாம்….இன்னும் யோசிச்சதே இல்லை…”

“ஹ்ம்ம்….எனக்கு தெரியும்…நீ சாரி எல்லாம் எதுவும் கேக்க வேணாம்…நான் போறேன்…இனிமே உன்னோட என்னால எப்பவும் போல சகஜமா பேச முடியாது! நான் போறேன்…” அதற்கு மேல் அவளை பேச விடாமல், அவள் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரெல்லாம் ஊற்றெடுத்தது.

“ஹேய்…என்ன சொல்ற? எதுக்கு இப்படி அவசரப்பட்டு…”

“இல்லை…இது அவசரப்பட்டு எடுத்த முடிவில்லை…என்னிக்காவது ஒரு நான் இப்படி ஆகும்னு எனக்கு தெரியும்…இதத் தவிர எனக்கு வேற வழி தெரியல…இனிமே என்னால உன்னோட பேச முடியாது! இனிமே என்னை கூப்பிடாத…” மீண்டும் திரும்பி வேகமாய் நடக்கத் துவங்கினாள்.

“நித்யா!!!”

நித்யா என்ற அவன் அழைப்புக்கு ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்தவள், “ஒரே ஒரு தடவை என்னை நீ நித்தின்னு கூப்பிட மாட்டியான்னு இனிமே வருத்தப்பட வேண்டியிருக்காது…” என்று சொல்லி விரக்தியாய் சிரித்தாள். அதன் பின் திரும்பிப் பார்க்காமல் வேகமாய் அவள் சென்ற திசையையே வெறித்துப் பார்த்த படி சற்று நேரம் அமைதியாய் நின்றிருந்தான் வினோத்.

வினோத் வீட்டிற்கு சென்றதும் அவன் அம்மா மிகுந்த சந்தோஷத்துடன் அவனை வரவேற்றார்.
“டேய்! அவ கிட்ட சொல்லிட்டியா? உண்மையை சொல்லு…உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேனா இல்லையா?” சிரித்துக் கொண்டே அவர் கேட்கவும், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்,“இல்லம்மா…அது வந்து….”

“சொன்னாலும் சரி, பாதகமில்லை….ஜாதகம் அமோகமா பொருந்தியிருக்கு… அடுத்த நல்ல நாள்லையே தட்டை மாத்திக்க வேண்டியது தான்னு நித்யா அம்மா சொல்லிட்டாங்க…எதுக்கும் நித்யாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்னாங்க…நீ சொன்னியா அவகிட்ட? என்ன சொன்னா?”

“இல்ல…இல்லைம்மா…நான் சொல்லல, நான் எதுவும் சொல்லல…நீங்க தான் அவகிட்ட சொல்ல வேணாம்னு சொன்னீங்களே!”

“சரி…அவங்கம்மாவே சொல்லி சம்மதம் வாங்கட்டும்…நம்ம ரமேஷ கல்யாணம் பண்ணிக்க யாரு தான் வேண்டாம்னு சொல்ல போறாங்க…இவ்ளோ படிச்சு இந்த வயசிலையே நல்லா அதிகமா சம்பாதிக்கற பையன் நம்ம சொந்தத்துலையே அவன் மட்டும் தான்! எப்படியோ…இப்ப தான்டா எனக்கு மனசு நிறைஞ்சு இருக்கு…எங்கக்கா சாகும் போது, என் கையை பிடிச்சிகிட்டு, என் பையன் கல்யாணத்த நீ தான் நடத்தி வைக்கனும்னு அப்படி அழுதாங்க…”

அவன் அம்மா நிறுத்தாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க. அம்மாவிடம் என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று அவனுக்கு எதுவுமே புரியவில்லை. பேசிக் கொண்டிருந்த அம்மாவை கவனிக்காமல், தன் அறையை நோக்கி நடக்கத் துவங்கினான்.

“டேய்!!! நான் பேசிகிட்டே இருக்கேன்…சரி…சரி…நீ உடனடியா ரமேஷுக்கு ஃபோன் பண்ணி இந்த விஷயத்த சொல்லு…அவங்கப்பா என்னை சொல்ல சொன்னாரு…நான் சொல்றத விட நீ சொன்னா இன்னும் நல்லா இருக்கும்…என்னடா?”

வினோத் எதுவும் சொல்லாமல் அறைக்குள் செல்லவும், “என்ன பதில் சொல்லாம போற?”
“தலைவலிக்குதும்மா…நான் சாயந்தரமா பேசறேன் அவனோட…”

கதவை சாத்திவிட்டு படுக்கையில் விழுந்தான். அவன் தலையை யாரோ சம்மட்டியால் அடிப்பதை போல் விண்விண்னென்று வலித்தது












[தொடரும்]

பாகம் 4

21 comments:

சங்கர் said...

//சட்டென அவன் குனியவும், அவன் நிழல் அவளது நிழலை முத்தமிடுவதைப் போல் படர, இனம்புரியாத ஏதோ ஒரு உணர்ச்சி, அவள் அதுவரை அனுபவித்தறிந்திராத ஒரு அதீத இன்பம் அவள் உடலெங்கும் பரவ, கீழே தெரிந்த அவனது நிழலை பார்த்து வெட்கிச் சிரித்தாள்//

நிழல் நிஜமாகும்னு நம்பறேன்.

சங்கர் said...

கவிதை சூப்பருங்கோ... கடைசில வர்ற ஜீவா படமும் பிரமாதம்....

மேவி... said...

wow... sema class...

sema feeling ah irukku divya...

aduthathu enna agum....

inge poi thodarumnnu pottutingale.....

மேவி... said...

வாய்த்த கண் எடுக்காமல் படித்து முடித்தேன்....

சொல்ல வார்த்தைகள் இல்லை .....

(வழக்கம் போல் எனது கல்லுரி நாட்களை ஞாபக படுத்தி விட்டது)

ths story is somewhat close to my heart

pari@parimalapriya said...

eluthu nadai miga arumai

Tamilparks said...

தங்களுடைய கவிதைகள் மிகவும் அருமையாக உள்ளது தங்கள் விரும்பினால் தங்களின் கவிகளை நமது தமிழ்த்தோட்டத்திலும் வெளியிட ஆவலாக உள்ளோம்... http://tamilparks.50webs.com

தாரணி பிரியா said...

வழக்கம் போல லேட்டா வந்து இருக்கேன். மூணு பார்ட்டும் படிச்சுட்டு வரேன் :)

Prabhu said...

அடடா...... ஹ்ம்ம்....

Annam said...

super story

aen neenga ramanichandran mathiri novel ezhutha koodathu...nalal sales aagaum 100%

gils said...

//சட்டென அவன் குனியவும், அவன் நிழல் அவளது நிழலை முத்தமிடுவதைப் போல் படர, இனம்புரியாத ஏதோ ஒரு உணர்ச்சி, அவள் அதுவரை அனுபவித்தறிந்திராத ஒரு அதீத இன்பம் அவள் உடலெங்கும் பரவ, கீழே தெரிந்த அவனது நிழலை பார்த்து வெட்கிச் சிரித்தாள்/

lovely :)

balachandar padam paatha epect :) kalakunga divs

மணி said...

நல்ல கவிதை. நல்லா எழுதிருக்கீங்க. அந்த நிழல் மேட்டர் சூப்பர்ப்.
தொடருங்க

Rajalakshmi Pakkirisamy said...

very nice :)

Mohan R said...

Romba naal kalichu kavidhaioda kadhaiya... Sooper

Pavum nithy oops nithya romba ala vidatheenga

Mohan R said...

இவ்ளோ படிச்சு இந்த வயசிலையே நல்லா அதிகமா சம்பாதிக்கற பையன் நம்ம சொந்தத்துலையே அவன் மட்டும் தான்!

Yen ella padathulayum ipppadi patta characterku alwa-vey kidaikuthu... Rameshku nee romba nallavanu solli thiyagi aaka poreengala...

Unknown said...

nithya's feelings have been expressed superbly!!

Anonymous said...

வ‌ழ‌க்க‌ம் போல‌ அருமையா இருக்கு திவ்யா! பாவ‌ம் நித்யா

ஜியா said...

Expression,feelings are expressed in superb way.... kalakkunga...

FunScribbler said...

யக்கா, எப்படிக்கா எப்படி? வர்ணனையெல்லாம் சூப்பர்ர்ர்ர்ர்ர்! அந்த நிழல் portion fantastic!! ஜீவாவ எனக்கு பிடிக்காது. இருந்தாலும் அந்த கடைசி படம் அருமை!! நித்யா பாவம் அக்கா...அவங்களுக்கு புடிச்ச ஆளோடவே கல்யாணம் பண்ணிவச்சுடுங்க!!

mvalarpirai said...

நிழல் - அருமை புதுசு ! எப்படிங்க...:)
சரியான tube light-a இருக்கானே இந்த வினோத் பையன் :):)

Nimal said...

ஆகா.. நல்ல திருப்பம்...
கவிதையும் நல்லா இருக்கு...

Karthik said...

ஏம்ப்பா இந்த பொண்ணுங்க இப்படி இருக்காங்க? ஹ்ம்ம்.. அடுத்த பாகத்தை சீக்கிரம் போடுங்க. ஊப்ஸ், அடுத்த பாகத்த சீக்கிரம் படிக்கிறேன். :)