Tuesday, November 24, 2009

ஓடிப்போலாமா? - 5

பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4

முன்குறிப்பு

முதல் பாகத்தில் இருக்குற நீல நிற பத்திகளுக்கும், இந்த பாகத்தில் இருக்குற நீல நிற பத்திகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கான்னு பாருங்க ;)

--------------------------------

குலதெய்வ கோவில் திருவிழாவிற்காக, ஞாயிற்று கிழமை குடும்பத்தோடு கோவிலுக்கு போன வினோத்திற்கு அதிர்ச்சியாய், நித்யாவும் அங்கு வந்திருந்தாள். வழக்கம் போல் முகத்தை திருப்பிக் கொள்ளாமல், அவனை பார்த்து புன்னகைத்து, பேருக்கு ஏதோ விசாரித்துவிட்டு சென்றாள். ஆனால் வினோத்தால் இத்தகைய செய்கைகளை ஜீரணிக்க முடியவில்லை…”எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி நல்லாத் தாண்டி நடிக்கறீங்க…” என்று மனதிற்குள் ஒட்டு மொத்த பெண்குலத்தையே வசை பாடினான். அமைதியாய், தனியாய் ஓரிடத்தில் வந்து அமர்ந்தவனிடம் வந்தார் அவனது அம்மா.

“ஏன்ப்பா ஒரு மாதிரியா இருக்க? எதுக்கு இங்க தனியா உக்காந்திருக்க? நித்யா பிரகாஷ் எல்லாம் அங்க குளத்தங்கரை பக்கத்துல உக்காந்திருக்காங்க பாரு…அவங்களோட போய் பேசிட்டு இரு…”

“ச்ச்…நான் இங்கயே உக்கார்றேன்..”
“இங்க அடுப்பு புகையெல்லாம் வரும்…போடான்னு சொன்னா கேளு…”

மேலும் பேச்சு வளர்க்க அவனுக்கு இஷ்டமில்லாததால், ’சரி’ என்றபடி எழுந்தான். திருப்த்தி புன்னகையோடு திரும்பிய அவனது அம்மாவை நிறுத்தினான், “அம்மா…நித்யா…நித்யா கல்யாணம் என்னமா ஆச்சு?”

“அதான் அன்னிக்கே அவங்க சரின்னு சொல்லிட்டாங்கன்னு சொன்னேனே…இன்னும் தேதி எதுவும் குறிக்கல…அனேகமா இன்னும் ரெண்டு வாரத்துல நிச்சயதார்த்தம் இருக்கும்…”

தலையை தொங்க போட்டுக் கொண்டு யோசித்தபடியே மெதுவாக அந்த குளத்தை நோக்கி நடக்கத் துவங்கினான்.

குளத்துக்கு அருகே இருந்த ஒரு மரத்தின் கீழே அமர்ந்து கொண்டு நித்யா தரையில் எதோ கோலம் போல் கிறுக்கிக் கொண்டிருந்தாள். கோலம் வரைந்து பல வருடங்கள் ஆனதாலோ என்னவோ, கோலம் முடிந்த பின்னரும் பல புள்ளிகள் விடுபட்டே கிடந்தன. அதை பார்த்து அவளுக்குளேயே விரக்தியாய் சிரித்துக் கொண்டாள்.

முற்றுப் பெறாத கோலமாய் நம் உறவு!

உன்னை போலவே என்னை பார்த்து கண்கள் சிமிட்டி சிரிக்கின்றன,

விடுபட்ட புள்ளிகளணைத்தும்!

“நித்யா! இந்தா காஃபி” பிரகாஷின் குரல் அவள் சிந்தனையை கலைக்க மீண்டும் இந்த உலகத்திற்கு வந்தாள்.

“ஏன் இங்க வந்து தனியா உக்காந்துருக்கீங்கன்னு அம்மா கேக்குறாங்க…வா நித்தி போலாம்…”

“கொஞ்ச நேரம் கழிச்சு போலாம்…இந்த காஃபி முடியட்டும்…”

“என்ன நித்தி ஆச்சு?” கவலை தோய்ந்த முகத்துடன் பிரகாஷ் கேட்க, அந்த கோலத்தை அழித்தவாறே, “என்ன ஆச்சுன்னா? ஒன்னுமில்லையே…”

“இல்ல…நீ ஒரு மாதிரி டல்லா இருக்க…எனக்காக நீ ஒன்னும் அவசரப்பட்டு இந்த கல்யாணத்துக்கு ஒத்தக்கலையே?”

“எதுக்குடா இத்தனவாட்டி கேக்குற? எத்தன தடவை சொல்றது?”

“அதித்தி அம்மா, கல்யாணம் பண்ணாம அவள படிக்க யூ.யெஸ் அனுப்ப மாட்டேன்னு சொன்னதும், எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல…அக்காவுக்கே கல்யாணம் ஆகாம நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கறதுன்னு கேட்டா, அப்ப அதித்தி இங்கயே இருக்கட்டும்…அவ ஒன்னும் படிக்க போக வேண்டாம்னு ஒரே பிடிவாதம்…”

“ஹ்ம்ம்…”

“ஆனா இவ்ளோ சீக்கரம் உனக்கு நல்ல மாப்ளையா கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை…அதுவும் நீயும் உடனே ஒத்துகிட்ட…தாங்க்ஸ் அ லாட் நித்தி…”

“டே…எதுக்குடா இப்ப இதெல்லாம் பேசிகிட்டு? நான் எப்படி இருந்தாலும் கல்யாணம் பண்ண தான போறேன்? என்னவோ உனக்காக தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட மாதிரி பேசற?”

“அதில்லை…நீ இப்ப இருக்கற நிலைமையில கண்டிப்பா உனக்கு கொஞ்சம் டைம் வேணும்…எனக்காக தான உடனே நீ கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட?”

“வினோத்த பத்தி சொல்றியா? அதெல்லாம் இல்லடா…நடக்காதுன்னு தெரிஞ்சதும் நான் எப்பயோ அவன மறந்துட்டேன்…நடக்காதத நினைச்சு வருத்தப் படறத விட நடக்கப் போறத நினைச்சு சந்தோஷப் பட வேண்டியது தான்….இப்ப பாரு….இவரு வினோத்த விட அதிகம் படிச்சிருக்காரு, அவனை விட நல்ல நிலைமையில இருக்காரு…பாக்கறதுக்கும் அவன விட ஹான்சம்மா இருக்காரு…என்ன தான் வினோத் நல்ல பையனா இருந்தாலும், கொஞ்சம் பொறுப்பு பத்தாது…ஆனா இந்த மாப்ளை அப்படியில்லை. ரொம்ப பொறுப்பானவரு…அதுவும் யூ.யெஸ் ல வேற இருக்கறதால, உன்னையும் அடிக்கடி வந்து பாத்துக்கலாம்…”

பிரகாஷ் எதுவுமே பேசாமல் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான், பேசிக் கொண்டேயிருந்தவள் அவன் முகத்தை பார்த்ததும் நிறுத்தினாள், “என்னடா?”

“உன் குரல்லலையே தெரியுது…நீயே உன்னை சமாதானப் படுத்திக்க ட்ரை பண்றேன்னு…என்ன எழுதியிருக்கேன்னு பாரு…”

அப்போது தான் அவளையும் அறியாமல் அவர்கள் அமர்ந்திருந்த வெம்மணலில் “வினோத” என்று எழுதியிருந்ததை கவனித்தாள். அதற்கு மேல் எதுவும் பேசத் தோண்றாமல் சிறிது நேரம் அமைதியாயிருந்தாள். அவன் பெயரில் ’த’கரத்திற்கு மேல் வைக்காமல் விட்டிருந்த மேற்புள்ளியை நிரப்ப அவளுக்கு ஏனோ தோண்றவில்லை.

பிரகாஷும் அவளை தொந்தரவு செய்யாமல் அமைதி காத்தான், மெளனத்தின் கணத்தில் கணத்த அந்த ஒரு சில நொடிகளுக்கு பின்னர், விரக்தியாய் சிரித்தவள், “ஆனா இந்த மாப்ளைகிட்ட ஒரே ஒரு குறை மட்டும் தான்…”

’என்ன’ என்பது போல் பிரகாஷ் பார்க்க, தலையை குனிந்தபடி, “அவரு வினோத் இல்லை...அது ஒன்னு தான்…” அவள் கண்களிலிருந்து சிந்திய அந்த ஒரு சொட்டு கண்ணீர் நேராய் அந்த வெம்மணலில் பரவியிருந்த அவன் பெயரின் மேல் விழுந்தது. தானாக”த்’ உறுவானதை பார்த்தவள், உடனே மொத்த பெயரையும் வேகவேகமாய் அடையாளம் தெரியாமல் அழித்தாள், இதயத்திலிருப்பதை அழிப்பதாக எண்ணிக் கொண்டு!

அதற்கு மேல் பொறுக்கமுடியாதவனாய், “நித்தி! இப்ப கூட ஒன்னும் லேட் இல்லை…ஒரே ஒரு தடவை…ரொம்ப காஷுவலா…நான் வேணா வினோத் கிட்ட பேசி பாக்கட்டுமா?”

“வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்! உனக்கு எத்தன தடவை சொல்றது?”

“ஏன் இப்படி சொல்ற? ப்ளீஸ்…நான் பேசிப் பாக்கறேன்…”

“அதுக்கப்புறம் நான் உன்கூட பேச மாட்டேன்!”

அவள் குரலில் இருந்த கண்டிப்புக்கு கட்டுபட்டு பிரகாஷ் அதற்கு மேல் பேசாமல் அமைதியானான், ’அக்கா கிட்ட நம்ம விஷயத்த சொன்னது பெரிய தப்பு…அதுக்காக தான் இவ இப்படி அவசரப்பட்டு வேற கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா…” என்று வருந்தினான்.

அவன் மனநிலையை மாற்ற வேண்டி, நித்யா, “சரி டாப்பிக் ச்சேஞ்ச்….ஒரு நிமிஷம் உன்னோட வாலட் குடேன்…”

“எதுக்கு?”

“குளத்துக்குள்ள சில்லறை போடறதுக்கு….குடுடா!”

அவனது பர்ஸை வாங்கியவள், அதனுள்ளிருந்த அந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியே எடுத்தாள்.,

“ஹ்ம்ம்…இன்னிக்கு நல்ல நாளா இருக்கு…கோவில் விஷேஷம் வேற…சோ…”

“சோ?”

“இன்னிக்கே அம்மாகிட்ட உன் விஷயத்த சொல்றோம்….”என்றபடி புகைப்படத்துடன் எழுந்தாள்.

பதறிப்போன பிரகாஷ், “நித்தி! விளையாடாத...இன்னிக்கெல்லாம் வேண்டாம்…அவங்க ஒரு நல்ல மூட்ல இருக்கும் போது பாத்து சொல்லனும்…அந்த ஃபோட்டவ முதல்ல குடு…”

“முடியாது…நான் இன்னிக்கே சொல்ல தான் போறேன்…” வேகமாய் நடக்கத் துவங்கினாள்.

அவள் பின்னோடே ஓடியவன், “குடு…விளையாடாத….” என்று புகைப்படத்தை பிடுங்க முயற்சித்தான். உடனே அவள் அங்கிருந்து வேகமாய் ஓடத் துவங்க, பிரகாஷும் அவளை பிடிப்பதற்காக பின்தொடர்ந்தான்.

அன்று நித்யாவை நீண்ட நாட்களுக்கு பின் பார்த்ததை போல் இருந்தது வினோத்திற்கு. அவளை பார்க்கும் போது வரும் கோபம், அவள் சில அடிகள் நகர்ந்தவுடனே மாயமாய் தான் மறைந்துவிடுகிறது.

உன்னை பார்க்காத நாளிலெல்லாம், நாள் நாளாக இல்லை

உன்னை பார்க்கும் நாளிலெல்லாம், நான் நானாக இல்லை

எப்படி இவ்ளோ சீக்கரம் வேற கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா…அப்ப இனிமே அவளோட எப்பவுமே பேச முடியாதா? நான் ஏன் இப்படி இருக்கேன்? எப்ப பாத்தாலும் அவளையே நினைச்சுகிட்டு…” என்று யோசித்தபடி மிகவும் சோகமாக அந்த ஓடைக்கு பக்கத்தில் தன் நிழலை பார்த்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தான் வினோத்.

மாம்பழ மஞ்சள் நிறத்தில், மெரூன் பார்டருடன் கூடிய பட்டுப் புடவை, அவளது உயரத்தை விட நீளமாய் தரையில் புரள, பின்னாமல் விட்டிருந்த கூந்தல் காற்றில் அலைபாய, கையில் எதையோ பிடித்து ஆட்டியபடி, சத்தமாக சிரித்துக் கொண்டு அந்த ஓடையருகே வேகமாக ஓடி வந்தாள் நித்யா.

“அத குடு நித்தி! ப்ளீஸ் நித்தி!!!” அவள் பின்னோடு ஓடி வந்து கொண்டிருந்தான் அவளுடைய தம்பி பிரகாஷ்.

அவனை திரும்பி பார்த்து சிரித்துவிட்டு, “குடுக்க முடியாது போடா…” என்று இறைந்தபடி ஓடி வந்தவள், அங்கு தரையை பார்த்துக் கொண்டிருந்த வினோத் மீது மோதினாள். நிலை தடுமாறி விழப்போன இருவருமே சுதாரித்து நின்றனர். முகத்தில் இருந்த சிரிப்பு மறைய, “சாரி” என்றபடி அந்த

இடத்தை விட்டு நகர போனவளின் கையை கெட்டியாக பற்றி நிறுத்தினான்.

சோகமான குரலில், “இப்படியா கண்ணு மண்ணு தெரியாம ஓடி வருவாங்க?”

“பாக்கலை” கையை விடுவித்துக் கொண்டு போக முயன்றாள்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவனது பிடியை இறுக்கினான்.

“விடு வினோத்!”

“முடியாது!” என்றவனை ’ஏன்’ என்பதைப் போல் ஆச்சர்யமாக பார்த்தாள். மீண்டும், கெஞ்சும் தொனியில், “ப்ளீஸ்…விடு வினோத்…”

“மாட்டேன்…விடு டான்னு சொல்லு…அப்ப தான் விடுவேன்…”

“என்னது?”

“விடு டா எருமைமாடுன்னு சொல்லு….விட்டர்றேன்…”

ஆச்சர்யத்தில் மலர்ந்த கண்களால் அவன் கண்களை சந்தித்தவள், அந்த பார்வையின் அர்த்தம் புரிய,

குறும்பு புன்னகையுடன், “சொல்ல முடியாது! என்ன பண்ணுவ?”

“என்ன பண்ணுவனா?” என்றபடி அவளது கையை விடுத்து இடையை வளைத்துப் பிடித்தான்.

“ஹய்யோ!! என்ன பண்ற??? விட்றா…எல்லாரும் பாக்குறாங்க…”

“முடியாது…”

“வினு! ப்ளீஸ்!”

வினு என்ற வார்த்தையை கேட்டதும் யோசிக்காமல் உடனே செயல்பட்டான் வினோத். நடப்பதை உணர்ந்து, நித்யா சுதாரிக்கும் முன்பு, அதுவரை செய்வதறியாது அங்கேயே நின்று கொண்டிருந்த பிரகாஷ் அங்கிருந்து அகலும் முன்பு, அவளை பிடித்து அவன் புறமாக இழுத்து, இருவரின் மூச்சுக் காற்றும் பட்டுத் தெறிக்கும் இடைவெளியில் அவளை நிறுத்தி, அவள் முகத்தை உற்று நோக்கினான். அதற்கு மேல், அவ்வளவு அருகே அவனை பார்க்கும் சக்தியற்று மெல்ல கண்களை மூடினாள். குனிந்து அவள் கன்னத்தில் அத்துமீறி படர்ந்திருந்த கூந்தல் கற்றையை அகற்றியவன், அவளது கன்னங்களை மென்மையாய் வருடினான். அந்த கணத்தின் பரவசத்தை அணுவணுவாய் ரசித்தபடி, அதிலிருந்து மீள மனமின்றி நித்யாவும் அப்படியே

நின்றிருந்தாள். அது ஒரு நொடியா, இல்லை பல மணிநேரங்களா? அவர்களுக்குத் தெரியவில்லை, தெரிந்து கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அவர்களிவரின் நிலையை பார்த்து, அங்கிருந்த பெரியவர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்று அவர்களை நோக்கி வேக வேகமாக வர, அதை பார்த்த வினோத், அவள் முகத்தை கைகளில் ஏந்தி, திடுக்கிட்டு விழித்த அவளது கருவிழிகளை ரசித்துபடி, “நித்தி! நாம ஓடிப்போலாமா?” என்றான்!

[முற்றும்]

Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ணு தேடினா வழக்கம் போல பல்பு தான் மாப்ளை!!! ஹா ஹா ஹா :D

கொசுறு 1:

“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு…நீ இல்லாம எனக்கு லைஃபே இல்லை…ஒவ்வொரு நிமிஷமும் உன்னை பாத்துகிட்டே இருக்கனும் போல இருக்கு…” உருகும் குரலில் வினோத் இப்படி சொன்னதும், நித்யா மெல்ல புன்னகைத்தாள். நடுநடுவே ஏதோ ஒரு இனிய பாடல் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. ’என்ன பாட்டு இது? இது கனவா இல்ல நிஜமா’ என்று அவள் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போதே கைபேசி மீண்டுமொரு முறை அலறி, அதே இனிய பாடல் ஒலித்தது. ’ச்சே…கனவா!’ என்றவாறு கைபேசியை எடுத்து, ’ஹ்ம்ம் சொல்லு…” என்றாள்.

“இத்தன நேரம் ஃபோன எடுக்காம என்ன பண்ணிட்டு இருந்த?” வினோத்தின் குரல் தெளிவாய் கேட்க, இந்த உலகத்திற்கு வந்தவள், சிரித்தபடி, “இல்லை…ஒரு கனவு” கனவில் அவன் பேசியதை எல்லாம் அவள் சொல்லவும், வினோத், “இதெல்லாம் ஓவரா இல்ல? சத்தியமா என்னால இப்படி வசனமெல்லாம் பேச முடியாது! ஏதோ, பாக்க பாவமே இருக்கேன்னு வாழ்க்கை குடுத்தா, ரொம்ப தான் நினைப்பு உனக்கு…”

“எது? நீ வாழ்க்கை குடுத்தியா? நேர்ல வாடா…உனக்கு இருக்கு!”

“யேய்! வாடா போடான்ன கொன்னுடுவேன்!”

கொசுறு 2:

அவர்கள் வீட்டை விட்டு ஓடுவதற்கான சந்தர்ப்பமே கொடுக்காமல், அவர்களின் பெற்றோரே சந்தோஷத்துடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய, அவர்களது திருமண நாளும் வந்தது.

முகூர்த்தத்திற்கு இருபது நிமிடங்கள் முன்பு…

“என்ன பையன் ரெடியா இல்லையா? சீக்கரம் வர சொல்லுங்க…முகூர்த்தத்துக்கு லேட் ஆகுது..”என்று யாரோ ஒரு பெருசு கத்துவதை காதில் போட்டுக் கொள்ளாமல், ஏதோ தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தான் வினோத்.

யாசர், “டே பாப்பா! காதுல விழுகல? என்ன பண்ணிட்டு இருக்க? ரெடி தான? உங்க மாமா கூப்பிடறார் பாரு…எந்திரி!”

“ஒரே குழப்பமா இருக்குடா…”

“எப்பயுமே அடுத்தவன் கல்யாணத்துல தான்டா ஃபுல் கட்டு கட்டனும்…அவங்கவங்க கல்யாணத்துல கொஞ்சம் அடக்கி தான் வாசிக்கனும்…நேத்து நைட்டு அந்த கட்டு கட்டின. அப்புறம் வயிறு குழப்பாம என்ன செய்யும்?”

“அடச்சே…அதில்லடா…இந்த கல்யாணம்…இது கண்டிப்பா பண்ணிக்கனுமா? அவ்ளோ தானா என் வாழ்க்கையே? இன்னும் இருபது நிமிஷத்துல முடிய போகுதா? பேசாம இன்னும் கொஞ்ச நாள் பேச்சுலரா இருந்திருக்கலாமோ?” பாவமாய் அவன் கேட்க, யாசர், “இதே தான்டா எனக்கும் தோணுச்சு…அதுவும் கரெக்ட்டா கல்யாணத்துக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி…இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணியிருக்கலாமோ? இன்னும் நல்ல ஃபிகரா கிடைச்சிருக்குமோன்னு…ஆனா என்ன பண்றது? ரெண்டு நிமிஷத்துல ஒன்னும் பண்ண முடியாது…ஆனா நீ கொஞ்சம் உஷார்டா…இருபது நிமிஷம் முன்னாடியே தோணிருச்சு…” என்று சொல்லி நகைத்தான்.

“இப்ப இருபது நிமிஷத்துல மட்டும் என்ன பண்ண முடியும்? சரி வா…போவோம்…” என்று பலிக்கு செல்லும் ஆடாக மணமேடைக்கு சென்றான் வினோத்!!!

[இதோட நிஜமாவே முற்றும்] :)

52 comments:

சங்கர் said...

//அவள் கண்களிலிருந்து சிந்திய அந்த ஒரு சொட்டு கண்ணீர் நேராய் அந்த வெம்மணலில் பரவியிருந்த அவன் பெயரின் மேல் விழுந்தது. தானாக”த்’ உறுவானதை பார்த்தவள், உடனே மொத்த பெயரையும் வேகவேகமாய் அடையாளம் தெரியாமல் அழித்தாள், இதயத்திலிருப்பதை அழிப்பதாக எண்ணிக்
கொண்டு!//

This is toooooo much... :) (Super singer la Srivas sir solraa maadhiri thaan)


Semma romantic ending.. Excellent.. Kalakkiteenga Divya..

Raghav said...

அச்சோ திவ்யா... சூப்பர் போங்க.. வர்ணிக்க வார்த்தையே இல்லை

Raghav said...

அருமையான முடிவு.. அதிலும் பழைய நிகழ்வை கோர்த்த விதம் அருமையோ அருமை.. படித்து அந்த ஆனந்தம் எனக்குள்ளும் பரவுகிறது..

Raghav said...

//உன்னை பார்க்காத நாளிலெல்லாம், நாள் நாளாக இல்லை
உன்னை பார்க்கும் நாளிலெல்லாம், நான் நானாக இல்லை //

ம்.. ஏதோ ஒரு பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது..

Raghav said...

/அவள் கண்களிலிருந்து சிந்திய அந்த ஒரு சொட்டு கண்ணீர் நேராய் அந்த வெம்மணலில் பரவியிருந்த அவன் பெயரின் மேல் விழுந்தது. தானாக”த்’ உறுவானதை பார்த்தவள், //

இந்தக் கதையிலயே அனைவருக்கும் பிடிக்கும் வரிகளாக இது அமையும்..

Raghav said...

//நித்தி! நாம ஓடிப்போலாமா?” என்றான்//

அய்யோ.. அய்யோ..

Raghav said...

//“இப்ப இருபது நிமிஷத்துல மட்டும் என்ன பண்ண முடியும்? சரி வா…போவோம்…” என்று பலிக்கு செல்லும் ஆடாக மணமேடைக்கு சென்றான் வினோத்!!//

சே வாழ்க்கைத் தத்துவத்தை வினோத் கல்யாணத்துக்கு முன்னாலேயே புடிஞ்சுகிட்டான். :)

Rajalakshmi Pakkirisamy said...

Good one,,

மேவி... said...

வாய்ப்புகளே இல்லை அருமை ..... செமையா இருக்கு. திவ்யப்ரியா டச் தெரியுது இருந்தாலும் எதாவது THRILLER EFFECT வைத்து இருக்க்கலாம்மோ என்று தோன்றுகிறது.......

"Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ணு தேடினா வழக்கம் போல பல்பு தான் மாப்ளை!!! ஹா ஹா ஹா :"

இதில எதோ உள்ள அர்த்தம் இருக்கிறது போல் தெரியுது...... நான் +1 படிக்கும் நாளிருந்து ஒரு பெண்ணை தேடி பார்க்கிறேன்... அனா அந்த அதிர்ஷ்டம் இன்னும் அடிக்கல....

“இப்ப இருபது நிமிஷத்துல மட்டும் என்ன பண்ண முடியும்"

இந்த மாதிரி எக்ஸாம் ஹால் முன்னாடி நின்னு நான் நிறைய பீல் பண்ணி இருக்கேன்

pari@parimalapriya said...

superb story Divya.. the way u brought together the flash back incident with the climax is super.. idhu dhaan D.P's spl touch!!

gils said...

//அவள் கண்களிலிருந்து சிந்திய அந்த ஒரு சொட்டு கண்ணீர் நேராய் அந்த வெம்மணலில் பரவியிருந்த அவன் பெயரின் மேல் விழுந்தது. தானாக”த்’ உறுவானதை பார்த்தவள், உடனே மொத்த பெயரையும் வேகவேகமாய் அடையாளம் தெரியாமல் அழித்தாள், இதயத்திலிருப்பதை அழிப்பதாக எண்ணிக்
கொண்டு!//

!!!! i am removing my post...itha padichaprum inmay naan katha ezhuthrathey vitrulaamnu iruken...avvvvvvvvvvv...

Prabhu said...

Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ணு தேடினா வழக்கம் போல பல்பு தான் மாப்ளை!!! ஹா ஹா ஹா :D///

ங்கொக்கமக்கா! தெறிச்சு போய்டேன். நல்ல மாரலுங்கோ!


செல்ஃபோன், கேர்ள்ப்ரண்டு- ரெண்டுக்கு ஒரே ஒத்துமை. - கொஞ்சம் வெயிட் பண்ணிருந்தா இன்னும் பெட்டர் மாடல் கெடச்சிருக்குமோ?- இதத் தான அங்க யூஸ் பண்ணிருக்கீங்க?

Mohan R said...

முற்றுப் பெறாத கோலமாய் நம் உறவு!

உன்னை போலவே என்னை பார்த்து கண்கள் சிமிட்டி சிரிக்கின்றன,

விடுபட்ட புள்ளிகளணைத்தும்!

உன்னை பார்க்காத நாளிலெல்லாம், நாள் நாளாக இல்லைஉன்னை பார்க்கும் நாளிலெல்லாம், நான் நானாக இல்லை

Very nice

Mohan R said...

இதே தான்டா எனக்கும் தோணுச்சு…அதுவும் கரெக்ட்டா கல்யாணத்துக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி…இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணியிருக்கலாமோ? இன்னும் நல்ல ஃபிகரா கிடைச்சிருக்குமோன்னு…ஆனா என்ன பண்றது? ரெண்டு நிமிஷத்துல ஒன்னும் பண்ண முடியாது…ஆனா நீ கொஞ்சம் உஷார்டா…இருபது நிமிஷம் முன்னாடியே தோணிருச்சு…” என்று சொல்லி நகைத்தான்.

:D:D:D:D:D:D:D

Kosuru rendum sooper

Mohan R said...

Climax scenela avalo closela hero heroineyuum vechapa yennamo expect pannunen... Hmmm verum odipolamanu U certificate akiteengale ;)

Anonymous said...

nice story still disappointed a lot bec of more expectation from u r last one.expected a different one.

FunScribbler said...

haha... that tear drop forming as a dot for the letter 'tha' was simply superb! romba think panni superrraa ezhuthi irukeenga! i loved it:) gr8 gr8... nice story.

பூங்கோதை said...

அட்டகாசமான climax.
படு super Moral.

அதெப்படி அம்புட்டு உருகுனவுங்க, இவ்வளவு சீக்கிரமா அமெரிக்கா மாப்பிள்ளை பின்னாடி போவாங்கன்ற தொய்வு இல்லாம், அதுக்கும் தம்பி கதை மூலமா ஒரு விளக்கம் கொடுத்து அருமையா முடிச்சிருக்கீங்க.

Nimal said...

கதை முற்றுமா...!

உங்க கதை எல்லாமே பகுதி பகுதியா வாசிச்சி ஒரு மாற்றமா எல்லா பகுதியும் ஒண்ணா வாசிக்க இந்த கதைய இதுவரை வாசிக்கவில்லை.

வாசித்த பின்... I'll be back with my comments... =)

Nimal said...

Correct பாகம் 1 link.

Nimal said...

ஒரே மூச்சில 5 பாகமும் வாசிச்சு முடிச்சாச்சு.

கதை சூப்பர், உங்க எழுத்தும் வரவர இன்னும் நல்லா இருக்கு.

கதை முடிவு, அதைவிட கொசுறு இன்னும் சூப்பர்...!


தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துகள்...!

Anonymous said...

திவ்யா, எல்லாத்தை ஒரே தடவைல படிச்சேன். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. சூப்பர்.

Divyapriya said...


சங்கர்

//This is toooooo much... :) (Super singer la Srivas sir solraa maadhiri thaan)//

Thank you so much sir.. உங்க encouragement and comments இல்லைன்னா, இத்தன தூரம் வந்திருக்க முடியாது. எனக்கு இப்படியொரு platform ஏற்படுத்திக் குடுத்த விஜய் டீவிக்கு oops blogspot க்கு தான் நன்றி சொல்லனும் :))))

//Semma romantic ending.. Excellent.. Kalakkiteenga Divya..//

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தாங்க சங்க்...கர் ;)
-------------------------
Raghav
//அச்சோ திவ்யா... சூப்பர் போங்க.. வர்ணிக்க வார்த்தையே இல்லை//

ராகவ்! நன்றி சொல்ல வார்த்தையே இல்லை...அப்படி சொல்ல மாட்டேன் :) ரொம்ப ரொம்ப நன்றி...

//இந்தக் கதையிலயே அனைவருக்கும் பிடிக்கும் வரிகளாக இது அமையும்..//

நான் கூட கொஞ்சம் too much மொக்கையாயிடுமோன்னு நினைச்சேன்...நீங்க சொன்னாலும் சொன்னீங்க, நிறைய பேருக்கு இது தான் பிடிச்சிருக்கு போல....நன்றி ராகவ்...

-------------------------
Rajalakshmi Pakkirisamy
//Good one,,//

Thanks rajalakshmi…

-------------------------
டம்பி மேவீ
//வாய்ப்புகளே இல்லை அருமை ..... //

Chancel less ஓட தமிழாக்கமா? இப்ப தான் முதல்முறையா இந்த உபயோகத்த பாக்குறேன்...வாய்ப்பே இல்லை போங்க :P

//செமையா இருக்கு. திவ்யப்ரியா டச் தெரியுது இருந்தாலும் எதாவது THRILLER EFFECT வைத்து இருக்க்கலாம்மோ என்று தோன்றுகிறது.......//

காதல் கதையில எதுக்குங்க த்ரில்லர்? பாவம் பிழைச்சு போகட்டும் பசங்கன்னு விட்டுட்டேன் :))

-------------------------
pari@parimalapriya
//superb story Divya.. the way u brought together the flash back incident with the climax is super.. idhu dhaan D.P's spl touch!!//

special touch ஆ? ஹா ஹா :D thanks a lot :)

Divyapriya said...


gils

//!!!! i am removing my post...itha padichaprum inmay naan katha ezhuthrathey vitrulaamnu iruken...avvvvvvvvvvv...//

உங்க போஸ்ட் இன்னும் அப்படியே தான இருக்கு? :P
Thanks gils :) g3 க்கு என்ன ஆச்சு? இன்னும் attendance அ கானோம்?

-------------------------------
pappu

//ங்கொக்கமக்கா! தெறிச்சு போய்டேன். நல்ல மாரலுங்கோ!//

ஹீ ஹீ...எல்லாம் நம்ம தமிழ் சினிமாவ பாத்து கத்துகிட்டது தான் ;)


//செல்ஃபோன், கேர்ள்ப்ரண்டு- ரெண்டுக்கு ஒரே ஒத்துமை. - கொஞ்சம் வெயிட் பண்ணிருந்தா இன்னும் பெட்டர் மாடல் கெடச்சிருக்குமோ?- இதத் தான அங்க யூஸ் பண்ணிருக்கீங்க?//

இவ்ளோ எல்லாம் நான் யோசிக்கலை...ஃப்ரெண்ட்ஸ் கொஞ்ச பேரு பேசிட்டு இருந்தத அப்படியே காப்பி அடிச்சிட்டேன் :P

-------------------------------
இவன்

நன்றி இவன்...நம்ம கதையெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் படிக்கறது...ஹீ ஹீ :P
--------------------------------------
Anonymous
Thanks anony. Will try to come up with a different one next time…

-------------------------------
Thamizhmaangani
//haha... that tear drop forming as a dot for the letter 'tha' was simply superb! romba think panni superrraa ezhuthi irukeenga! i loved it:) gr8 gr8... nice story.//

Thanks gayathri…அந்த சீன் வேற எதோ ஒரு கதைக்காக தோனினது :)

Divyapriya said...


பூங்கோதை
//அட்டகாசமான climax.
படு super Moral.//

நன்றி பூங்கோதை...

//அதெப்படி அம்புட்டு உருகுனவுங்க, இவ்வளவு சீக்கிரமா அமெரிக்கா மாப்பிள்ளை பின்னாடி போவாங்கன்ற தொய்வு இல்லாம், அதுக்கும் தம்பி கதை மூலமா ஒரு விளக்கம் கொடுத்து அருமையா முடிச்சிருக்கீங்க.//

ஹா ஹா...அதெல்லாம் யோசிக்காம விடுவோமா? இல்லைன்னா லாஜிக் ஓட்டை விழுந்திடுமே :P

------------------------------
நிமல்-NiMaL

// ஒரே மூச்சில 5 பாகமும் வாசிச்சு முடிச்சாச்சு.
கதை சூப்பர், உங்க எழுத்தும் வரவர இன்னும் நல்லா இருக்கு.
கதை முடிவு, அதைவிட கொசுறு இன்னும் சூப்பர்...!
தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துகள்...!
.//

ஒரே மூச்சில் வாசித்து ஒவ்வொரு பகுதிக்கா பின்னூட்டமிட்டதுக்கு ரொம்ப நன்றி நிமல்....

---------------------------------

சின்ன அம்மிணி
//திவ்யா, எல்லாத்தை ஒரே தடவைல படிச்சேன். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. சூப்பர்//

ரொம்ப நன்றி சின்ன அம்மிணி...தொடர்ந்து படிங்க....

a said...

good ending divya. the way you brought in the first part was too good! Keep rocking!!

இனியவன் said...

ஓடிப்போலாமா? ---தொடர்கதை அருமையாக கோர்க்கப்பட்ட பூச்சரம் போல சூப்பர் போங்க.. வர்ணிக்க வார்த்தையே இல்லை...
என்னை கவர்ந்தது ...
///உன்னை பார்க்காத நாளிலெல்லாம், நாள் நாளாக இல்லை
உன்னை பார்க்கும் நாளிலெல்லாம், நான் நானாக இல்லை////

இனியவன் said...

இந்த பெண்களை புரிந்துகொள்ள முடிவதில்லை
ஒரு கணம்
///“வினோத்த பத்தி சொல்றியா? அதெல்லாம் இல்லடா…நடக்காதுன்னு தெரிஞ்சதும் நான் எப்பயோ அவன மறந்துட்டேன்…நடக்காதத நினைச்சு வருத்தப் படறத விட நடக்கப் போறத நினைச்சு சந்தோஷப் பட வேண்டியது தான்….இப்ப பாரு….இவரு வினோத்த விட அதிகம் படிச்சிருக்காரு, அவனை விட நல்ல நிலைமையில இருக்காரு…பாக்கறதுக்கும் அவன விட ஹான்சம்மா இருக்காரு…என்ன தான் வினோத் நல்ல பையனா இருந்தாலும், கொஞ்சம் பொறுப்பு பத்தாது…ஆனா இந்த மாப்ளை அப்படியில்லை. ரொம்ப பொறுப்பானவரு…அதுவும் யூ.யெஸ் ல வேற இருக்கறதால, உன்னையும் அடிக்கடி வந்து பாத்துக்கலாம்…”///
மறு கணம்
//அவள் கண்களிலிருந்து சிந்திய அந்த ஒரு சொட்டு கண்ணீர் நேராய் அந்த வெம்மணலில் பரவியிருந்த அவன் பெயரின் மேல் விழுந்தது. தானாக”த்’ உறுவானதை பார்த்தவள், உடனே மொத்த பெயரையும் வேகவேகமாய் அடையாளம் தெரியாமல் அழித்தாள், இதயத்திலிருப்பதை அழிப்பதாக எண்ணிக் கொண்டு////

இனியவன் said...

கொஞ்சம் வருத்தம் உங்கள் moral of the story யில்///Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ணு தேடினா வழக்கம் போல பல்பு தான் மாப்ளை!!! ///
///“ஆனா இந்த மாப்ளைகிட்ட ஒரே ஒரு குறை மட்டும் தான்…”
’என்ன’ என்பது போல் பிரகாஷ் பார்க்க, தலையை குனிந்தபடி, “அவரு வினோத் இல்லை...அது ஒன்னு தான்///
இப்படி இருக்கும் பெண்ணை மணந்து பல்பு வாங்கறத விட அதுக்கு முன்னாடியே பல்பு வாங்குனது நல்லதில்லையா????

இனியவன் said...

கடைசி வரைக்கும் இந்த வினோத் இப்படி யோசிக்கறதும்
///“எப்படி இவ்ளோ சீக்கரம் வேற கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா…அப்ப இனிமே அவளோட எப்பவுமே பேச முடியாதா? நான் ஏன் இப்படி இருக்கேன்? எப்ப பாத்தாலும் அவளையே நினைச்சுகிட்டு…” என்று யோசித்தபடி மிகவும் சோகமாக அந்த ஓடைக்கு பக்கத்தில் தன் நிழலை பார்த்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தான் வினோத்.////
அந்த கொசுறு 2
///“அடச்சே…அதில்லடா…இந்த கல்யாணம்…இது கண்டிப்பா பண்ணிக்கனுமா? அவ்ளோ தானா என் வாழ்க்கையே? இன்னும் இருபது நிமிஷத்துல முடிய போகுதா? பேசாம இன்னும் கொஞ்ச நாள் பேச்சுலரா இருந்திருக்கலாமோ?” பாவமாய் அவன் கேட்க,////
நித்யாவோட (ஆச்சர்யத்தில் மலர்ந்த கண்களால் அவன் கண்களை சந்தித்தவள், அந்த பார்வையின் அர்த்தம் புரிய) புரிந்துகொள்ளல் தவறா என தோன்றுகிறது....

Unknown said...

அக்கா ரொம்ப சூப்பர்.. :))) எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. :)))

//[இதோட நிஜமாவே முற்றும்] :)//

இல்ல. இதுக்கு முன்னாலையே முடிஞ்சிடிச்சி... ;)))

Anonymous said...

அருமையோ அருமை. கிளைமேக்ஸ் ரொம்ப‌ ந‌ல்லா இருந்த‌து. அடுத்து என்ன‌ ஆகும்னு ஆவ‌லோட‌ ப‌டிச்சேன். ந‌ல்ல‌ முடிவு. மொத்த‌த்துல‌ தூள்.

Santhappanசாந்தப்பன் said...

மோதல் தொடங்கிய அதே இடம், அதே சூழ்நிலை, அதெ வர்ணனையில் காதலையும் கொண்டு வந்து முடித்திருக்கிறீர்கள். அருமை!

Santhappanசாந்தப்பன் said...

Moral of the story படிச்சால் எங்களுக்கு எல்லாம் பல்புன்னு சொல்ரீங்க!

Pradeep said...

ஒரு நல்ல தமிழ் படம் பார்த்த எஃபெக்ட்....
கலக்கிடீங்க....

one small request: dont use any actor pics in next story.

Alpine Path said...

Nice one! Innoru kosuru pottu triple effect tharuveenganu nenaichen :P

Vijay said...

ரொம்ப லேட்டா இந்தக் கதையைப் படிக்கறேன். அது ஏன்னா, நீங்க ஒவ்வொரு பாகத்திலும் வைக்கிற சஸ்பென்ஸ் தாங்க முடியாது.

மீண்டும் கனகச்சிதமான பாத்திரப் படைப்பு. கதையை விட எனக்கு உங்கள் பாத்திரப் படைப்புதான் ரொம்பப் பிடிக்கும்.

\\Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ணு தேடினா வழக்கம் போல பல்பு தான் மாப்ளை!!! ஹா ஹா \\
அப்படியெல்லாம் இல்லீங்க. இது படத்துல தமிழ் படத்துல தான் நடக்கும். சில வருடங்கள் முன்பு அமெரிக்கா போயிருந்த போது இது நிஜமாகவே நாண் பார்த்தது. பே ஏரியாவில் சமீபத்தில் திருமணமான நிறைய தம்பதிகளைப் பார்க்கலாம். பையன் படு கேவலமாக இருப்பான். ஆனால் மனைவி மிக அழகாக இருப்பான். அப்போது என் நண்பனோடு பேசிக் கொண்டது தான் ஞாபகம் வருகிறது.

“மாப்ளே,நாட்ல இருக்கும் அழகான ஃபிகருங்கள்’லாம் இப்படி டாலச் தேசத்துக்கு வந்துடுதுங்க. மிச்சம் மீதி தான் நம்மள மாதிரி ஆளுங்களுக்குக் கிடைக்கும்” :)

Vijay said...

\\முன்குறிப்பு
முதல் பாகத்தில் இருக்குற நீல நிற பத்திகளுக்கும், இந்த பாகத்தில் இருக்குற நீல நிற பத்திகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கான்னு பாருங்க ;)
--------------------------------\\
இதென்ன பெரிய கம்ப சூத்திரமா. மென்பொருள் பொறியாளர்’னா சும்மாவா. இதுக்கு பேரு தான் லைன் ரீ-யூஸிங்கா? :)

Karthik said...

yay! i made it!!!

//Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ணு தேடினா வழக்கம் போல பல்பு தான் மாப்ளை!!! ஹா ஹா ஹா :D

படிச்சிட்டு இருக்கும்போதே இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சிடணும்ங்கிறீங்க.. :)))

Karthik said...

அப்புறம் இன்னொன்னு சொல்லணும்னு நினைச்சிட்டு இருந்தேன். உங்களுக்கு பசங்க சைக்காலஜி நல்லாவே தெரியுது. முதல் பாகத்திலே கலக்கலா இருந்துச்சு. இதிலும் அப்படிதான். எப்படி? ;)))

ரொம்ப நல்ல கதை.. என் ஜாய்ட் அ லாட்! :)

Unknown said...

as someone said, that 20 min concept is good.. :P

Ando-Karthik said...

Good... Climax- Flashback connection is Divya's touch..

அவள் கண்களிலிருந்து சிந்திய அந்த ஒரு சொட்டு கண்ணீர் நேராய் அந்த வெம்மணலில் பரவியிருந்த அவன் பெயரின் மேல் விழுந்தது. தானாக”த்’ உறுவானதை பார்த்தவள், உடனே மொத்த பெயரையும் வேகவேகமாய் அடையாளம் தெரியாமல் அழித்தாள், இதயத்திலிருப்பதை அழிப்பதாக எண்ணிக்கொண்டு


Ada Ada Ada.. Inge naama AR Rahman music la oru mini song podroom :D

Ando-Karthik said...

Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ணு தேடினா வழக்கம் போல பல்பு தான் மாப்ளை!!! ஹா ஹா

Naan London figura ushaar pannalam irukken... Any suggestions? :D


~~~~~~~LOLLU KARTHIK~~~~~~

Guna said...

Too Good..Romba nalla irunthathu

Ando-Karthik said...

Karthigeyan yaarunu yosikaadenga.. LOLLU thambi thaan :D

pari@parimalapriya said...

DP eppo adutha post? adutha varusham dhana?
wishing u in advance a very happy new year.. unga blog melum valara valthukal

anand said...

kadantha sila naatkala unga posts ethuvum padikka mudiyala..sema busy ah irunthaen..pressure, frustration nu enna konnu eduthiruchu...intha kathai padicchathukku appuram etho tholanchathu ellam thirumba kidaicha oru santhosam...thank you very much..unnoda ovvoru variyum kavithai..vaalthukkal

மதி said...

இப்போ தான் ஐந்து பாகங்களும் படிச்சேன்.. உங்களோட வழக்கமான குறுகுறுப்பான காதல் கதைக்கு நடுவில் மிகவும் பிடித்தது Moral of the Story தான்.. ஹிஹி.. வாழ்த்துகள்.

Anonymous said...

திவ்ய‌ பிரியா அடுத்த‌ க‌தை எப்போ?

Anonymous said...

திவ்ய‌ பிரியா அடுத்த‌ க‌தை எப்போ?

Unknown said...

dhivya,

romba nalla irukku:) superb ending

லோகு said...

Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ணு தேடினா வழக்கம் போல பல்பு தான் மாப்ளை!!! ஹா ஹா ஹா :DThis one, really a great knock...,