Sunday, November 22, 2009

ஓடிப்போலாமா? - 4

பாகம் 1, பாகம் 2, பாகம் 3

“எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி! ஒரு காஃபி போகலாம் கம் வித் மீ…”

பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் கண்கள் மூடி அமர்ந்திருந்த வினோத்தின் கைபேசியில் கசிந்து கொண்டிருந்தது பாடல். ஒவ்வொரு முறை எக்ஸ்க்யூஸ் மீ என்று ஒலித்த போதும் கூடவே மற்றுமொரு குரல் ஒலிக்காதா என்று ஓயாமல் அவன் மனது கூவிக் கொண்டிருந்தது. கூடவே அவனது கண்களும் அவன் சொல்பேச்சை மீறி திறந்து திறந்து அங்குமிங்கும் எதையோ தேடிக் கொண்டிருந்தது. ’ச்சை! என்ன இது மடத்தனம்?’ என்று நினைத்தவாறு கண்களை இறுக மூடிக் கொண்டான்.

என்னவோ அன்று அவள் நினைவு அவனுக்கு அளவுக்கதிகமாய் வந்து கொண்டிருந்தது. அவனும் நித்யாவும் பேசி கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாகியிருந்தது. ஆனாலும் அலுவலக சேட் பெட்டியில அவள் இடத்தில் இருக்கிறாளா, எத்தனை மணிக்கு வருகிறாள், போகிறாள் என்று எல்லாமே அவன் தினமும் ஒரு கடமையைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான். அன்று வெள்ளிக் கிழமை. அவள் அலுவலகத்திற்கு வரவில்லை என்று சேட் வின்டோவை பார்த்து அவனே ஊகித்துக் கொண்டான்.

அன்று அம்மாவிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்த போது தான், அவன் பெரியம்மா பையன் ரமேஷே அவன் பிரச்சனைக்கு ஒரு முற்று புள்ளி வைத்தான். தான் ஒரு தெலுகு பெண்ணை விரும்புவதாகவும் அவளையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அவன் சொன்னதும், முதலில் வீட்டில் எல்லோரும் தாம் தூம் என்று குதுத்தார்கள். வினோத் வெளிப்படையாக எதுவும் காட்டிக் கொள்ளா விட்டாலும், அவனுக்
கும் உள்ளூர சந்தோஷம் தான். எப்படியோ நித்யாவை இது சமாதானப்படுத்திவிடும் என்று தான் நம்பினான்.

விடுமுறை முடிந்து அலுவலகம் சென்ற நாளில் எதுவுமே நடக்காதது போல் வழக்கம் போல் அவளிடம் பேச துவங்கியவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் எவ்வளவு சமாதானப் படுத்தியும் அவள் அவனுடன் பேசுவதாய் இல்லை. அவளது செய்கையை பொறுக்க முடியாமல், ஒரு நாள் நேரே அவள் இருக்கைக்கு சென்றான்.

“நித்யா! வா…கேஃபடீரியா போவோம்…பேசனும்…” அவளை முறைத்துக் கொண்டே சொல்லி முடித்தான்.

பெருமூச்செரிந்தபடி, “என்ன பேசனும்? இங்கயே சொல்லு!” என்றாள்.

“ஏன் இப்படி பண்ற? நீ பண்றது கரெக்ட்டான்னு ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சு பாத்தியா?”

“நான் இத பத்தி எதுவுமே யோசிக்க கூடாதுன்னு இருக்கேன்!”

“இப்ப உனக்கு என்ன பிரச்சனை? உனக்கு என்னை பிடிச்சிருக்கு…
ஆனா நான் அந்த மாதிரி எதுவும் நினைக்கல…அவ்ளோ தான?அதுக்கு போய் எதுக்கு என்னோட பேசறத நிறுத்தனும்? ஏன் இப்படி கன்வென்ஷனலா யோசிக்கற? ”

அவள் நீண்ட நேரம் பதில் எதுவும் பேசாமல் அமைதி காத்தாள். கொதிப்படைந்த வினோத், “நித்யா!! யூ ஆர் ரியலி ஹோப்லெஸ்!!!” சற்றே உரத்த குரலில் இரைந்தான். சுற்றி அமர்ந்திருந்தவர்கள் எல்லோரும் அவர்களை ஒரு நொடி பார்த்துவிட்டு மீண்டும் தத்தம் வேலையை பார்க்கத் துவங்கினர். சுற்றும் முற்றும் பார்த்த நித்யாவின் கண்கள் குளம் கட்டின.

“ப்ளீஸ் வினோத்! இங்கிருந்து போய்டு… இனிமே என்னால உன்னோட பேச முடியாது…”

அவன் அவனாகவே நடந்து கொண்ட ஒரு சில நண்பர்களில், நித்யாவும் அடக்கம். அதுவும் பெண்களில் அவளை தவிர வேறு யாரிடமும் அந்த இடைவெளியை அவன் தாண்டியதில்லை. முதன்முதலாக தன் வயதையொத்த ஒரு பெண்ணின் அன்பும், நட்பும் முழுமையாய் அவனுக்கு கிடைத்திருந்த போதும், அவள் உடனிருந்த போது அது அவனுக்கு பெரிதாய் தோண்றவில்லை. அவளிடம் பேசாமல் இருந்த ஒரு சில நாட்களிலேயே மிக நன்றாக புரிந்தது.

அவளிடம் பேச முடியாததை விட, ஒவ்வொரு முறை பார்த்தும் பார்க்காததை போல் கடந்து செல்லும் அவளது விழிகளை சந்திப்பது தான் அவனுக்கு பெரும் பாரமாய் இருந்தது. அவளது ஒவ்வொரு விடுபட்ட பார்வையும், அவளையும் மீறி அவள் பார்வையின் விளிம்பில் தொக்கி நின்ற சிறு ஏக்கமும், அவனை விடாமல் தொடர்ந்து பல ஜாலங்கள் புரிந்த அவளது நினைவுகளும்; பல வார்த்தைகள் பேசிய மெளனங்களும், அம்மெளனங்களை மொழிபெயர்ப்பதில் கழிந்த இரவுகளும், பலமணி நேரம் அவளிடம் கதை பேசிய இரவின் கனவுகளும் அவனை ஏதோ செய்தது.

பார்த்தும் பார்க்காததை போல்
கடந்து செல்லும் அந்நியர்களாகிப் போனோம்,
ஒவ்வொரு முறை உன்னை கடக்கும் போதும்
கலங்கி விடும் என் மனது
தெளிந்த நீரோடையாய் பிரதிபலிக்கிறது
உன் சிரித்த முகத்தை!

சட்டென நிகழ்காலத்துக்கு வந்தவனை, ’இன்னிக்கு ஏன் அவ வரலை…எதாவது உடம்பு கிடம்பு சரியில்லாம போயிருக்குமோ?’ என்ற எண்ணம் வேறு தொல்லை படுத்தியது. ஒவ்வொரு முறை அவளை பற்றி நினைக்கும் போதும், “இனிமே என்னால உன்னோட பேச முடியாது… “ என்று கடைசியாக அவள் சொன்னது தான் நினைவுக்கு வந்தது.

எதேதோ நினைவுகளில் தொலைந்தவன், கையிலிருந்த கைபேசியை பார்த்து லேசாக புன்னகைத்தான். அது கூட கடந்த ஒரு மாதமாய் சோபை இழந்ததை போலவே அவனுக்கு தோன்றியது. அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியாய் அம்மாவை அழைத்தான். ஆனால் தொலைபேசி அடித்துக் கொண்டே இருந்தும், யாரும் எடுக்கவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, அவன் தங்கியிருந்த பீ.ஜியை அடைந்தான். உடனே அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.

சலிப்புடன் காதருகில் வைத்து, “இன்னேரத்துல எங்கம்மா போய்டீங்க?” என்றான்.

“இப்ப தான்ப்பா வீட்டுக்குள்ளையே நுழையறேன்…பாத்தா நீ கூப்பிட்டிருக்க…சொல்லு…என்ன விஷயம்?”

“சும்மா தான் கூப்பிட்டேன்….ஆமா எங்க போய்ட்டு வர்றீங்க?”

“நம்ம நித்யா வீட்டுக்கு தான்… அவளை பொண்ணு பாக்கறதுக்காக வந்திருந்தாங்க…. சாயந்தரமே போய்ட்டோம்….அவங்க கிளம்பி போனப்புறம் நாங்கெல்லாம் பேசிட்டு மெதுவா கிளம்பி வறோம்…நம்ம சொந்தம் இல்ல, இருந்தாலும் நல்லா தான் பேசிறாங்க…மாப்ளை அமெரிக்கால வேலை செய்யறாரு, ஆறு மாசம் கழிச்சு தான் லீவ் கிடைக்குமாம்…”

ஏனோ அம்மா சொல்லிக் கொண்டிருந்த விவரங்களை கேட்பதற்கு அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. காரணமே இல்லாமல் கோபம் வந்தது. 'எல்லாத்தையும் மறந்துட்டு கல்யாணம் பண்ண தயாராய்ட்டா…ஆனா என்னோட மட்டும் பேச முடியாது…கல்யாண விஷயத்த கூட சொல்லல!' அவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அம்மாவின் குரல் பலமுறை பலமாக ஒலித்தது…

“வினோத்து…ஹலோ…ஹலோ…”

“ஹாங்…சொல்லுங்க…சொல்லுங்கம்மா…”

“சரியாவே கேக்கல…ஆமா…இந்த வாரம் வர்றதுக்கும் டிக்கெட் புக் பண்ணிட்டல்ல?”“ஹ்ம்ம்…பண்ணிட்டேன்ம்மா…வந்தர்றேன்…ஓகே ஃபோன வெச்சர்றேன்...”

ஒரு சில நாட்களுக்கு முன்பு, “என்னவாயிருந்தாலும் இவன் கிட்ட சொல்லிருவியா? ஒரு விஷயத்தை கூட விடறதில்லை போல?” என்று அலுவலக நண்பன் ஒருவன் வேடிக்கையாய் கேட்க, நித்யா, “ஆமா…நான் தும்மினா கூட இவன்கிட்ட சொல்லிடுவேன்…” என்று சொல்லி சிரித்தது ஏனோ நினைவுக்கு வந்தது."இந்த பொண்ணுங்களே இப்படி தான்!” பலமுறை எத்தனையோ பெண்களை கிண்டல் செய்வதற்காக அவனே நண்பர்களிடம் இப்படி சொல்லியிருக்கிறான். ஆனால் இம்முறை தான் அதன் முழுமையான அர்த்தம் அவனுக்கு புரிந்தது. முதன் முதலாக அவளைப் பற்றின செய்தியை வேறொருவர் மூலம் அறிவது வித்யாசமாக இருந்தது வினோத்திற்க்கு. அந்த நொடி தான், அவள் தன் வாழ்விலிருந்து முழுவதுமாய் விலகிப் போய் கொண்டே இருக்கிறாள் என்ற உண்மை அவனுக்கு மெதுவாக உறைக்க ஆரம்பித்தது. பீ.ஜியில் நுழைந்தவன், முன் அறையில் தொலைக்காட்சிப் பெட்டி யாருமில்லாமல் கத்திக் கொண்டிருந்ததை கவனித்தும், அதை அணைக்கும் எண்ணம் வராமல் அவனது அறைக்குள் நுழைந்தான். கதவை அடைக்கும் முன்பு ஒலித்த அந்த பாடல் வரிகள் அவன் செவியை கடந்து இதயக் கோட்டையை லேசாய் தட்டியது.

'உயிர் தோழன் என்பாயா? வழிப்போக்கன் என்பாயா?

விடை என்ன சொல்வாய் அன்பே?'

அந்த வரிகள் அவனுக்குள் ஏற்படுத்திய தாக்கம் கோபமாய் மாற, விரைந்து சென்று தொலைக்காட்சி பெட்டியை படக்கென அணைத்தான். தொலைக்காட்சிப் பெட்டியில் தேய்ந்த அந்த வரிகள் மாறாக அவன் மனதிற்குள் ஒலிக்கத் துவங்கியது. அவன் படுக்க சென்ற பிறகும், விளக்கணைத்த இருட்டறையில், மனதிற்குள் ஓயாமல் ஒலித்த அந்த பாடல் வரிகளை அணைக்கும் பொத்தானை நீண்ட நேரமாய் தேடிச் சலித்தவனுக்கு உதவியாய், சூரியன் உதித்தும் கூட, அவனுள் அந்த பாட்டு மட்டும் ஓயவில்லை.

கண்னெரிச்சலோடு மறுநாள் அலுவலகத்திற்கு கிளம்புவதற்காக படுக்கையை விட்டு எழுந்தவன், 'சரி…அவ என்ன பன்னா நமக்கென்ன? அவ கல்யாணம் பன்னட்டும், ஏதோ பன்னட்டும்…நம்ம வேலையை பாப்போம்…' என்று திட்டவட்டமாய் முடிவெடுத்தான். அதன் பிறகு அவளை பற்றின எந்த செய்தியும் அவனுக்குள் எந்த வித மாற்றத்தையும் கொடுக்காது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான், காலை குளிக்கும் திரவதிற்கு பதிலாக ஷேம்ப்பூ தேய்த்து குளிக்கும் வரை!

[தொடரும்]

பாகம் 5

22 comments:

G3 said...

me the firstae :D

G3 said...

//ஒவ்வொரு முறை உன்னை கடக்கும் போதும்
கலங்கி விடும் என் மனது
தெளிந்த நீரோடையாய் பிரதிபலிக்கிறது
உன் சிரித்த முகத்தை!//

Avvvvv.. Eppadinga ippadi ellam !!! Chancae illa.. sema toppu :D

G3 said...

:)) 5 paagam dhaannu solli irundheenga.. chamaththa adutha parta seekiram potrunga Plzzzzzzzzzzzzzzz

G3 said...

//'உயிர் தோழன் என்பாயா? வழிப்போக்கன் என்பாயா?

விடை என்ன சொல்வாய் அன்பே?'//

Situationkku sema apt :D

//ஒரு காஃபி போகலாம் கம் வித் மீ…”//

oru coffee kudikka dhaanae ?? Illa naan dhaan thappa kettutaenaa !!

G3 said...

//அதன் பிறகு அவளை பற்றின எந்த செய்தியும் அவனுக்குள் எந்த வித மாற்றத்தையும் கொடுக்காது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான், காலை குளிக்கும் திரவதிற்கு பதிலாக ஷேம்ப்பூ தேய்த்து குளிக்கும் வரை!//

Hmm.. paavampa pulla.. seekirama theliya veinga madam :D

மேவி... said...

வாவ் ..... இந்த பாகத்தில் ரொம்ப பீலிங்க்ஸ் ஒப் இந்தியாவாக இருக்கு....

இருந்தாலும் vinoth character க்கு justice பண்ணவில்லை என்று நினைக்கிறேன்

Raghav said...

ம்.. முதல் பாகம் படிச்சுட்டு ஊருக்குப் போயிட்டேன்.. இப்போ தான் மீதி மூணு பாகமும் படிச்சேன்.. நித்யாவின் உணர்வுகளை அருமையா சொல்லிருக்கீங்க.. ரசித்துப் படித்தேன்.

சோகம் விரைவில் சுகமாகும்னு காத்திருக்கிறேன்.

Mohan R said...

விடுபட்ட பார்வை

romba alagu

ஆனாலும் அலுவலக சேட் பெட்டியில அவள் இடத்தில் இருக்கிறாளா, எத்தனை மணிக்கு வருகிறாள், போகிறாள் என்று எல்லாமே அவன் தினமும் ஒரு கடமையைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான்

Idhu eppadi ungalukku theriyum... Ellarum ippadi thaana

முதன் முதலாக அவளைப் பற்றின செய்தியை வேறொருவர் மூலம் அறிவது வித்யாசமாக இருந்தது வினோத்திற்க்கு.

Unamaiya sollunga Story eluthunadhu neengala illa ethavadhu oru payyana....

gils said...

//ஒவ்வொரு முறை உன்னை கடக்கும் போதும்
கலங்கி விடும் என் மனது
தெளிந்த நீரோடையாய் பிரதிபலிக்கிறது
உன் சிரித்த முகத்தை//

:)) loveed it :) oiii unmaya solunga..ithu unga storythaana :) atatgaaasama pogthu kathai

Unknown said...

"இந்த பொண்ணுங்களே இப்படி தான்!” பலமுறை எத்தனையோ பெண்களை கிண்டல் செய்வதற்காக அவனே நண்பர்களிடம் இப்படி சொல்லியிருக்கிறான். ஆனால் இம்முறை தான் அதன் முழுமையான அர்த்தம் அவனுக்கு புரிந்தது.

-- good one.. eppdi thaan unaku ithu laam theriutho.. :) ..kalakal writer aayitta po..congrats

anbucr said...

As usaual Excellent

ஜியா said...

this part is little dull.. but last time maathiri thaan.. moththama vaasicha nalla irukkum... :))

சங்கர் said...

//ஒவ்வொரு முறை உன்னை கடக்கும் போதும்
கலங்கி விடும் என் மனது
தெளிந்த நீரோடையாய் பிரதிபலிக்கிறது
உன் சிரித்த முகத்தை!//

nice one... Situationku etha maathiri song selection super..

Pasanga mentalities pathi nalla therinji vachirukkeengale... Epdi idhellam..;)

a said...

hey divya..
good one! Looking forward to the next part :)

Unknown said...

//அவளிடம் பேச முடியாததை விட, ஒவ்வொரு முறை பார்த்தும் பார்க்காததை போல் கடந்து செல்லும் அவளது விழிகளை சந்திப்பது தான் அவனுக்கு பெரும் பாரமாய் இருந்தது. அவளது ஒவ்வொரு விடுபட்ட பார்வையும், அவளையும் மீறி அவள் பார்வையின் விளிம்பில் தொக்கி நின்ற சிறு ஏக்கமும், அவனை விடாமல் தொடர்ந்து பல ஜாலங்கள் புரிந்த அவளது நினைவுகளும்; பல வார்த்தைகள் பேசிய மெளனங்களும், அம்மெளனங்களை மொழிபெயர்ப்பதில் கழிந்த இரவுகளும், பலமணி நேரம் அவளிடம் கதை பேசிய இரவின் கனவுகளும் அவனை ஏதோ செய்தது.//

Fantastic... Howling :))))))) ரொம்ப அழகான வரிகள் அக்கா... திரும்ப திரும்ப படிச்சேன்.. புரியாம இல்ல... அவ்ளோ நல்லா இருந்தது. Keep rocking :))))

FunScribbler said...

அக்கா அனுபவச்சு எழுதுறாங்கய்ய்யாயா!! அவ்வ்வ்வ்வ்வ்வ்....சூப்பர்ர்! கவிதை அருமை! ரொம்ப விறுவிறுப்பா போகுது! அது ஏங்க ஆவூன்னா அமெரிக்கா மாப்பிள்ள வந்துடுறாரு! ஹாஹா...சும்மா சும்மா...நக்கல்ஸ்!

உங்கள் ராட் மாதவ் said...

நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி...
மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழுவினரால், தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு முதல் பரிசாக ரூபாய். 2,000/- (இந்திய ரூபாய் இரண்டாயிரம்) வழங்கப்படும்
மேலதிக விபரங்களுக்கு
http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

Divyapriya said...


G3

அவ்வ்வ்வ்...ரொம்ப ஃபீல் பண்ணி கமெண்டினதுக்கு thanks g3 :))

--------------------
டம்பி மேவீ

vinod character க்கு justice அடுத்த பகுதியில போட்டாச்சு யுவர் ஆனர் ;)

---------------------
Raghav

நன்றி ராகவ்...

---------------------
இவன் said...
//Unamaiya sollunga Story eluthunadhu neengala illa ethavadhu oru payyana....//

நானே ஒரு பையன் தான்...ஹா ஹா :D

---------------------
gils said...

//:)) loveed it :) oiii unmaya solunga..ithu unga storythaana :) atatgaaasama pogthu kathai//

என்னோட கதை தான் :)) இப்படி சொன்னா எப்படி இருக்கும்? :P

----------------------
ejaz said...

// good one.. eppdi thaan unaku ithu laam theriutho.. :) ..kalakal writer aayitta po..congrats//

எல்லாம் உங்ககிட்ட கத்துகிட்டது தான் :))

Divyapriya said...


anbucr said...
//As usaual Excellent//

thanks a lot...

--------------------
ஜியா

thanks ஜி...next part ல சரி ஆய்டும் :))

--------------------

சங்கர்
//Pasanga mentalities pathi nalla therinji vachirukkeengale... Epdi idhellam..;)//

எல்லாம் உங்ககிட்ட ஒட்டு கேட்டது தான் :)

--------------------

A

thanks a lot A...

--------------------
ஸ்ரீமதி

ரொம்ப நன்றி தங்கச்சி :))
--------------------

Thamizhmaangani said...
//அது ஏங்க ஆவூன்னா அமெரிக்கா மாப்பிள்ள வந்துடுறாரு! //

bulb வாங்க தான்...வேற எதுக்கு? :D

Nimal said...

நல்லாருக்கு...

தெலுகு பொண்ணு, அமெரிக்கா மாப்பிளை, விறுவிறுப்பா தான் இருக்கு...

கதைய அவசரமா முடிக்கும் எண்ணமொ...!

Karthik said...

அடுத்த பார்ட்ட இப்போவே படிச்சிடணும் போலிருக்கு. :)

//தொலைக்காட்சிப் பெட்டியில் தேய்ந்த அந்த வரிகள் மாறாக அவன் மனதிற்குள் ஒலிக்கத் துவங்கியது

வெரி நைஸ்.. :)

Karthik said...

//Divyapriya said...

Thamizhmaangani said...
//அது ஏங்க ஆவூன்னா அமெரிக்கா மாப்பிள்ள வந்துடுறாரு! //

bulb வாங்க தான்...வேற எதுக்கு? :D//

Ha ha.. ROFL...:))