Wednesday, November 18, 2009

ஓடிப்போலாமா? - 2

பாகம் 1

பேய்தனமாக மழை பொழிந்து கொண்டிருந்த ஒரு இரவு வேளை. பேருந்து நிறுத்தத்தில் எதிர் எதிர் புறமாக திரும்பி நின்றபடி இருவர்.

சற்று நேர அமைதிக்கு பின் வினோத், “நீ தான லேட்டா கிளம்பலாம்னு சொன்னெ? இப்ப என் மேல கோவிச்சுகிட்டா நான் என்ன செய்வேன்?”

“நான் எட்டரை மணிக்கு கிளம்பலாம்னு தான் சொன்னேன்…நீ தான் லேட் பண்ணிட்ட…இப்ப எப்படி வீட்டுக்கு போறது? மணி இப்பவே பத்தாச்சு….இந்த மழை இப்போதைக்கு முடியறா மாதிரி தெரியல!” நித்யாகோபமாய் கத்த, வினோத் அவளை அமைதிப் படுத்தும் எண்ணத்துடன் அவளருகில் வந்தான்.

“இப்ப பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல….வா…இப்படி உக்காரலாம்…”

இருவரும் அங்கிருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்தனர்.

“ஏன் பஸ் ஸ்டேன்ட்ல இருந்து இத்தன தூரம் தள்ளி வீடெடுத்திருக்கீங்க?”


“மறுபடியும் ஆரம்பிக்காத…” நித்யாவின் குரலில் கடுகடுப்பு அதிகரிக்க, வினோத், “சரி…வேற எதாவது பேசுவோம்…ரொம்ப நாளா இதை கேக்கனும்னு நினைச்சேன்…மறந்தே போய்ட்டேன்…எனக்கு முதல்ல ஆபிஸ்ல உன்னை பாத்ததும் சுத்தமா அடையாளமே தெரியல…அதெப்படி உனக்கு மட்டும் என்னை உடனே அடையாளம் தெரிஞ்சிடுச்சு?”

அதுவா? நான் அதுக்கு முன்னாடியே ஒரு ரெண்டு நாளா உன்னை பாத்துகிட்டு தான் இருந்தேன்…எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சுட்டு இருந்தேன்…அப்புறம் அன்னிக்கு உன்னோட பேசினப்புறம் தான் ஸ்ட்ரைக் ஆச்சு…கண்டிப்பா நீயா தான் இருப்பன்னு…” என்று சொல்லி ஒரு வித நக்கலுடன் சிரித்தாள்.

“அதென்ன பேசின உடனே தெரிஞ்சுது? எப்படி?”

“உன்னை தவிர வேற யாரு இவ்ளோ நக்கலா, திமிரா பேசுவாங்க? அத வச்சு தான் நீயா தான் இருக்கனும்னு முடிவு பண்ணேன்…”

“என் காரெக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே!! இவ்ளோ நாளா நாம பேசிட்டு இருக்கோம்ல? என்னிகாவது உன்கிட்ட நான் அந்த மாதிரி ரூடா பேசியிருக்கேனா? என்னவோ அன்னிக்கு ஏதோ ஒரு கடுப்பு, அப்புறம் உன்னை பாத்தவுடனே ஏதோ நக்கல் பண்ணனும்னு தோணுச்சு…அவ்ளோ தான்…”

“ஹ்ம்ம்…நாம பாத்து அதுக்குள்ள ஆறு மாசம் ஓடிடுச்சு? டைம் போனதே தெரியல இல்ல வினு?”

“எத்தன தடவை சொல்லியிருக்கேன்? என்னை அப்படி கூப்பிடாதன்னு? வினோத்னு கூப்பிடு, முடியலன்னா வினோத்குமார்னு கூப்பிடு!”

“ஏன்? பேசாம வினோத்குமார் நடராஜன் ன்னு கூப்பிடறேனே! என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னை நித்தின்னு தான் கூப்பிடறாங்க…ஆனா நீ மட்டும் மாத்திக்கவே மாட்டேங்குற…நீ ஏன்டா இப்படி இருக்க?”

“யேய்…வாடா போடான்ன…அப்புறம் அன்னிக்கு மாதிரி புடிச்சு தள்ளி விட்டுடுவேன்…”

“ராமா!!! இவனோட தாங்க முடியலையே!!!!”

“யாரந்த ராமா? உன் டீம்மேட் ஒருத்தன் இருக்கானே! அவனா?”


நித்யா அவனை முறைத்துவிட்டு அமைதியானாள். மீண்டும் அவளை சமாதானப் படுத்தும் பணியில் அவனும் தீவிரமாக இறங்கினான். இப்படி அவன் அவளை சீண்டுவதும், அவள் கோவப்படுவதும், பதிலுக்கு அவள் அவனை சீண்டிப் பார்ப்பதும், அதுவே அவர்களுக்கு வாடிக்கை ஆகியிருந்தது.

ஏதேதோ சுவாரஸியமாக பேசிக் கொண்டிருந்தவர்கள், மழை நின்றதையும் மணி பதினொன்று முப்பதை கடந்ததையும் கவனிக்கவே இல்லை, நித்யாவின் கைபேசி சிணுங்கும் வரை. அழைத்தது அவள் தோழி.

நித்தி! எங்கிருக்க?” பதட்டத்துடன் அவள் தோழி வினவ, அப்போது தான் மணியை பார்த்த நித்யா அதிர்ந்தாள், என்ன சொல்வதென்று தெரியாமல், “அது வந்து…இங்க தான் வீட்டுக்கு பக்கத்துல நடந்து வந்துட்டு இருக்கோம்…” என்று இழுத்தாள்.

“இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருக்க? மழை நின்னு ஒரு மணி நேரம் ஆச்சு…நானும் நீ வருவ வருவன்னு பாத்து அப்படியே தூங்கிப் போய்ட்டேன்…எந்திருச்சு பாத்தா மணி பதினொன்னேமுக்கால்! உன்னையும் கானோம்…ஒரு நிமிஷம் பயந்தே போய்ட்டேன்…”

“அதான் வினோத் கூட இருக்கான்ல? நான் இன்னும் பத்து நிமிஷத்துல வந்தர்றேன்…”

கைபேசி இணைப்பை துண்டித்துவிட்டு வினோத்தை பார்த்தாள், அவனும் எழுந்து கிளம்புவதற்கு தயாராக இருந்தான். இவ்வளவு நேரம் மணி பார்க்காமல் பேசியிருந்திருக்கிறோமே என்று நித்யாவிற்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது. எதுவும் பேசாமல் இருவரும் அவளது வீடு நோக்கி நடக்கத் துவங்கினர்.

“என்ன நித்யா? எதுவும் பேச மாட்டேங்குற?”

“இல்ல…ரொம்ப நேரம் பேசிட்டோம்ல? இவ்ளோ லேட் ஆச்சுன்னு தெரியவே இல்லை…

“அதனால என்ன? உன் ஃப்ரெண்டு எதாவது சொன்னாளா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை…ஆமா…உங்க பீ.ஜியில நீ லேட்டா போனா எதுவும் சொல்ல மாட்டாங்களா?” என்று நித்யா அப்பாவியாய் கேட்க, வினோத் விழுந்து விழுந்து சிரித்தான்.

“இதென்ன பொண்ணுங்க பீ.ஜின்னு நினைச்சியா? லேட்டா போன திட்றதுக்கு?”

“எதுக்கு இப்படி பொண்ணுக மாதிரி பீ.ஜியில போய் தங்கியிருக்க? தேவையா உனக்கு இதெல்லாம்?

“அப்புறம்? வேற என்ன பண்ண சொல்ற? என் ரூம்மேட்ஸ் ரெண்டு பேருமே வாக்கப் பட்டு போய்ட்டானுங்க…நான் மட்டும் தனியா சமைச்சு சாப்ட்டு…அதெல்லாம் ரொம்ப வேலை…”

“வேற எதாவது ஃப்ரெண்ட்ஸ் கூட தங்கலாம்ல?”

“அப்புறம் அவங்களும் கல்யாணம் பண்ணி போய்ட்டா? மறுபடியும் வேற ஆள் தேடனும்…”

“அதுக்கு பேசாம நீயே கல்யாணம் பண்ணிகிட்டா இந்த பிரச்சனை இல்லைல்ல?”

“எதுக்கு? என் பொன்டாட்டிக்கும் சேத்து நான் சமைச்சு போடவா?” என்று சொல்லிவிட்டு பலமாய் சிரித்தான் வினோத்.

“உன்கிட்ட பேச முடியாது…என்னவோ பண்ணு!!!சரி…. சப்போஸ் உனக்கு ஒரு பொண்ண பிடிச்சிருந்துச்சுன்னா என்ன செய்வ?”

“என்ன செய்வேன்? பிடிச்சிருக்குன்னா பிடிச்சிருக்கு….அவ்ளோ தான்… அதுக்காக அசிங்கமா போய் அவகிட்டஉன்னை பிடிச்சிருக்கு அப்டீன்னெல்லாம் சொல்ல மாட்டேன்...

"பிடிச்சிருக்குன்னு சொல்றதுல என்ன அசிங்கம்? அது எவ்ளோ அழகான விஷயம் தெரியுமா?" ஒரு கணம்நடப்பதை விடுத்து அவன் முகத்தையே பார்த்தாள்.

ஆனால் அவன் அதையெல்லாம் கண்டுகொண்டதாய் தெரியவில்லை, "உலகத்துலையே பேத்தலானவிஷயம்ன்னா அது ஒரு பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்றது தான்... எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, நீஇல்லாம எனக்கு லைஃபே இல்லை. ஒவ்வொரு நிமிஷமும் உன்னை பாத்துகிட்ட இருக்கனும் போலஇருக்கு...இந்த மாதிரி வசனமெல்லாம் சத்தியமா என்னால பேச முடியாது.

"ஹ்ம்ம் சரி...நீயா போய் சொல்ல மாட்டே...ஆனா...ஒரு வேளை…ஒரு பொண்ணே வந்து உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணுதுன்னு வை…அப்ப என்ன பண்ணுவ?”

“அந்த மாதிரி எதுவும் நடக்கற மாதிரி தெரியல…”

“நடந்துருச்சுன்னு வை…என்ன பண்ணுவ? சொல்லு…”

“அதெல்லாம் நடக்கும் போது பாத்துக்கலாம்…”

பிறகு ஏதோ கேட்க நினைத்து எதுவும் கேட்காமல் நித்யா நடையை தொடர்ந்தாள். ஆனால் வினோத் அவளை விடுவதாய் இல்லை, “இப்ப எதுக்கு இதெல்லாம் கேக்குற நீ?”

“இல்லை…இப்ப பாரு…உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கல்யாணம் பண்ணி போய்ட்டாங்க…உனக்கு தனியா இருக்கற மாதிரி தோணலையா? அதுக்காகவாவது நீ ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது?”

“நான் எங்க தனியா இருக்கேன்? அதான், நீ இருக்கியே?”

நானும்…ஒரு வேளை…நானும்வேற யாரையாவது கல்யாணம் பண்ணி போய்ட்டா?” முகத்தில் ஆர்வம் பொங்க அவன் முகத்தையே உற்று நோக்கினாள்.

“அவங்க ரெண்டு பேரும் போகப் போறாங்கன்னு தெரிஞ்சதும், என்னடா பண்ணப் போறோம்னு தான் நினைச்சேன்…ஆனா, கரெக்ட்டான நேரத்துல நீ வரலை? அதே மாதிரி தான்…நீ போனாலும் வேற யாராவது வருவாங்க…அப்புறம் எனக்கு நீ யாருன்னு கூட மறந்து போய்டலாம்… என்று சொல்லி அவன் சிரிக்கவும், நித்யா கண்களில் லேசாக நீர் துளிர்விட்டது. அதை அவன் பார்க்காதவாறு மறைத்தவள், “தட் வாஸ் நாட்ஃபன்னி!” என்று கோபமாக உறைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

“ஹே நான் சும்மா விளையாட்டுக்கு…” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவனுக்கு, கதவை படார் என்று அவள் திறந்து சாத்திய சத்தம் தான் பதிலாக கிடைத்தது.

அவளை பார்த்ததும் அவளை நன்றாக திட்டவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்த அவளது தோழி, அவள் முகத்தை பார்த்ததும் அந்த எண்ணத்தை கைவிட்டாள்.

“என்ன நித்தி? ஒரு மாதிரியா இருக்க?”

“ஒன்னுமில்லை…லேசா தலைவலிக்குது…சாரிடா…இவ்ளோ லேட் பண்ணிட்டேன்…நீ போய் தூங்கு…நானும் சேஞ்ச் பண்ணிட்டு தூங்கறேன்…”

படுக்கையில் விழுந்து கண்களை மூடினாள். ’அப்புறம் எனக்கு நீ யாருன்னு கூட மறந்து போய்டலாம்…’ அவன் மீண்டும் அவளுக்கெதிரில் வந்து பேசுவதை போன்ற பிரம்மை தோன்ற, அவள் கண்களில் நீர் வழிந்தோடியது.

’ஒரு வேளை நானே உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணா என்ன செய்வ? ’அவள் கேட்காமல் விட்ட ந்த கேள்வியைஅவனிடம் கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பான்?

ஹ்ம்ம்…அதுக்கும் அவன் எதாவது நக்கல் தான் அடிச்சிருப்பான்…’ஹய்யோ…நாளைக்கே ஊரை காலி பண்ணிட்டு ஓடியிருப்பேன்னு சொன்னாலும் சொல்லியிருப்பான்….’ என்ற எண்ணம் அவள் சோகத்தையும் மறந்து அவளை லேசாக புன்னகைக்க வைத்தது.

அவள் வாழ்விலேயே அதிகமாக சிரித்த நாட்கள் அந்த ஆறு மாதங்கள் தான் என்று தோன்றியது. என்ன தான் வானம் விரும்பினாலும், வானவில் நிரந்தரமாக வானத்திலேயா தங்கிவிடப் போகிறது? சட்டென சொல்லாமல் கொல்லாமல் மறைந்துவிடத் தானே செய்கிறது? அதே போல் தான், என்றேனும் நிச்சயமாய் அவனை பிரிய நேரிடும், இதை பற்றி எண்ணுவதில் பயனில்லை, மெல்ல மெல்ல அவனிடம் பேசாமல் விலகியிருப்பதே தனக்கு நல்லது என்று முடிவெடுத்தாள். ஆனால் அவள் எடுத்த முடிவு, சமீப காலமாய் அவன் குரலுக்கு அடிமையாகிப் போயிருந்த அவளது கைபேசிக்கு பிடிக்கவில்லை போலும், உடனே செல்லச் சிணுங்கலாய் சிணுங்கியது.அழைத்தது அவன் தான்! மனதில் அதுவரை அடித்துக் கொண்டிருந்த புயற்காற்று, சட்டென தென்றலாய் மாற, அவள் அந்த நொடியின் முற்பகுதியில் எடுத்த முடிவை, அந்த நொடியின் பிற்பகுதியிலேயே கைவிட்டு, கைபேசியை காதருகில் வைத்து, அவளறியாமலே முகத்தில் அரும்பிய புன்னகையுடன், “ஹ்ம்ம்…” என்று மட்டும் சொன்னாள்.

படிக்காமல் செல்லும் நாட்களில் அதிகமாய் விடைத்தாளை நிரப்பும் மாணவர்களைப் போல், காலையிலிருந்து பேசி ஓய்ந்து, பேசுவதற்கு விஷயமே இல்லாத அந்த இரவு வேளையில், அவர்களது மூச்சுக் காற்றை சுமந்துவந்த ஒலிஅலைகளை சுவாசித்தபடி, கூடுதலாக ஒரு மணி நேரம் பேசிவிட்டு உறங்கச் சென்றனர்.

[தொடரும்]

பாகம் 3

26 comments:

Thamizhmaangani said...

சூப்பர்!! :) ரொம்ப விறுவிறுப்பா போகுது. ஆனா ஒரே ஒரு வருத்தம். ஜீவா, அப்பரம் அந்த ஹீரோயின் பெயர் என்ன...அவங்கள இந்த கதைக்கு ஹீரோ, ஹீரோயினா போட்டது தான் என்னால ஜீரணிக்க முடியல.:) ஹிஹி

சங்கர் said...

kalakkitteenga divya, Ennae oru peelingsu..

//அவள் எடுத்த முடிவு, சமீப காலமாய் அவன் குரலுக்கு அடிமையாகிப் போயிருந்த அவளது கைபேசிக்கு பிடிக்கவில்லை போலும், உடனே செல்லச் சிணுங்கலாய் சிணுங்கியது. அழைத்தது அவன் தான்! மனதில் அதுவரை அடித்துக் கொண்டிருந்த புயற்காற்று, சட்டென தென்றலாய் மாற, அவள் அந்த நொடியின் முற்பகுதியில் எடுத்த முடிவை, அந்த நொடியின் பிற்பகுதியிலேயே கைவிட்டு, கைபேசியை காதருகில் வைத்து, அவளறியாமலே முகத்தில் அரும்பிய புன்னகையுடன், “ஹ்ம்ம்…” என்று மட்டும் சொன்னாள்//

Wowww.. wonderful narration...

ஆயில்யன் said...

//Thamizhmaangani said...

சூப்பர்!! :) ரொம்ப விறுவிறுப்பா போகுது. ஆனா ஒரே ஒரு வருத்தம். ஜீவா, அப்பரம் அந்த ஹீரோயின் பெயர் என்ன...அவங்கள இந்த கதைக்கு ஹீரோ, ஹீரோயினா போட்டது தான் என்னால ஜீரணிக்க முடியல.:) ஹிஹி///


நானும் இப்படித்தான் ஃபீல் பண்றேன்!

Rajalakshmi Pakkirisamy said...

//அந்த நொடியின் முற்பகுதியில் எடுத்த முடிவை, அந்த நொடியின் பிற்பகுதியிலேயே கைவிட்டு//

Good:)


Nice Story :)

சிவக்குமரன் said...

அலைன்மென்ட் படிக்கிறதுக்கு சிரமமா இருக்கு. கொஞ்சம் கவனம் செலுத்துங்களேன்.

gils said...

//அவங்கள இந்த கதைக்கு ஹீரோ, ஹீரோயினா போட்டது தான் என்னால ஜீரணிக்க முடியல.:/

athey athey...
enaku Ram matiri ungalku vinotha :D

Divyapriya said...

Thamizhmaangani/ஆயில்யன்/ gils

ஏன் என்னை தவிர யாருக்குமே அவங்கள பிடிக்கல?
sridevi அழகா தான இருக்காங்க? ஜீவா கூட ஒரு நல்ல actor தான்...

Anonymous said...

wow supera pokuthu.

Unknown said...

அருமை அக்கா.. சீக்கிரம் அடுத்த பார்ட் போடவும்.. இல்லேன்னா போராட்டம் வெடிக்கும்.. ;))))))))

//sridevi அழகா தான இருக்காங்க?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... :))) ட்ரூலி ஸ்பீக்கிங்க் எனக்கும் அவங்கள பிடிக்கல.... வினோத் பத்தி நினைச்சாலே எனக்கென்னமோ ப்ரித்விராஜ் ஞாபகம் தான் வருது... அந்த பொண்ணும் கூட மாத்தலாம்... ஆனா நீங்க விரும்பினா... கட்டாயம் இல்ல அக்கா. :)))

Unknown said...

மீ த பத்து... :))))

"உழவன்" "Uzhavan" said...

சூப்பர்

மணி said...

சென்ற பாகத்தின் முடிவை இழுக்காமல் நச்சென 6 மாதங்களை கடந்த உங்களின் திரைக்கதை நச் ரகம். ரெம்ப நல்ல பயலா இருக்கானே. பொண்ணையும் அழ வச்சுட்டீங்க. பார்ப்போம் அடுத்து என்ன நடக்குதுனு.

கொஞ்சம் ஸ்ரீதேவியை மாத்துனா நல்லா இருக்கும்.....

ஆயில்யன் said...

///Divyapriya said...

Thamizhmaangani/ஆயில்யன்/ gils

ஏன் என்னை தவிர யாருக்குமே அவங்கள பிடிக்கல? ///


ஏன்னா ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நீங்க ரைட்டர்

நாங்க ரீடர் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

ஆயில்யன் said...
This comment has been removed by the author.
ஆயில்யன் said...

//ஸ்ரீமதி said...

அருமை அக்கா.. சீக்கிரம் அடுத்த பார்ட் போடவும்.. இல்லேன்னா போராட்டம் வெடிக்கும்.. ;))))))))//

அம்மிணிக்கு சொந்த ஊரு சிவகாசியோ???

Prabhu said...

///Divyapriya said...

Thamizhmaangani/ஆயில்யன்/ gils

ஏன் என்னை தவிர யாருக்குமே அவங்கள பிடிக்கல? ///


அட, எனக்கு புடிச்சிருக்கு. நீங்க அழுகாதீங்க. :)
ஏய், அவங்களே ஃபீல் பண்ணி இதப் போட்டிருக்காங்க, ஏம்பா இப்படி கஷ்டப் படுத்துறீங்க. பாவம் :)

Mohan R said...

மனதில் அதுவரை அடித்துக் கொண்டிருந்த புயற்காற்று, சட்டென தென்றலாய் மாற, அவள் அந்த நொடியின் முற்பகுதியில் எடுத்த முடிவை, அந்த நொடியின் பிற்பகுதியிலேயே கைவிட்டு,

Nice

மேவி... said...

வாவ் ... சில பல வருடங்கள் முன்னாடி நானும் ஒரு பெண்ணும் காலேஜ் கேட் ல இருந்து HOSTEL ரோடு வரைக்கும் பேசிட்டு வந்தோம் ... அந்த ஞாபகம் வந்துருச்சு

கதை நடை சூப்பர்

அடுத்த பகுதி எப்போ ???

ramesh said...

avanga antha oru mani neram enna pesinaanga???


konjam sollu pa enakkum useful ah irukkum.. :)


pidichurukku na avanga kitta poi pidichurukku nu solrathu asingam illaiya.. romba thanks:) inimel enakku pudicha ponnukitta ellam pudichirukku nu solla poraen.. :)

G3 said...

//படிக்காமல் செல்லும் நாட்களில் அதிகமாய் விடைத்தாளை நிரப்பும் மாணவர்களைப் போல், //

Avvvvvvv.. Eppadima ippudi ellam !!!! :)))))))))))

G3 said...

ஆயில்யன் said...

//Thamizhmaangani said...

சூப்பர்!! :) ரொம்ப விறுவிறுப்பா போகுது. ஆனா ஒரே ஒரு வருத்தம். ஜீவா, அப்பரம் அந்த ஹீரோயின் பெயர் என்ன...அவங்கள இந்த கதைக்கு ஹீரோ, ஹீரோயினா போட்டது தான் என்னால ஜீரணிக்க முடியல.:) ஹிஹி///


நானும் இப்படித்தான் ஃபீல் பண்றேன்!//

Repeataeeeeeeeeeeeeeee

Divyapriya said...

@g3
sridevi, jeeva ரசிக சங்கதிலிருந்து உங்களுக்கு கன்னாபின்னான்னு கண்டனங்கள் வந்த வண்ணம் இருக்கு :))

mvalarpirai said...

last para is awesome ! great !

pari@parimalapriya said...

/*படிக்காமல் செல்லும் நாட்களில் அதிகமாய் விடைத்தாளை நிரப்பும் மாணவர்களைப் போல*/

superb narration..nithya's a vibrant n energetic character.so i feel sridevi- a doll like quiet face doesnt suit. may b Jo/Asin ??

Nimal said...

அருமையா போகுது கதை... narrationல கலக்கிறீங்க... எள்ளல் நிறைந்த உரையாடல் வசனங்களும் சூப்பர்.

Karthik said...

குட்டியூண்டு பொண்ண வெச்சிருக்கற எங்க மாமாவ என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

கதை செமையா போகுது.. நீங்க வெகேஷன் முடிஞ்சு வரதுக்குள்ள நான் இந்த சீரீஸ முடிச்சிடுவேன்னு நினைக்கிறேன்.