Monday, November 16, 2009

ஓடிப்போலாமா? - 1

"விழிமூடி யோசித்தால் அங்கேயும் வருவாய் முன்னே முன்னே…”

அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் தான். ஆனால் இப்போதெல்லாம் அதை கேட்க கேட்க எரிச்சல் வர ஆரம்பித்திருந்தது வினோத்திற்கு. அவனது அறை நண்பன் சுரேன் வீட்டிற்கு வந்ததும் வராததுமாய், அவனது கைபேசி இப்படி பாடத்துவங்கியதும் தான் வினோத்தின் எரிச்சலுக்கு காரணம்.

’ச்சே, ஏதோ ஃப்ரெண்டுன்னு லவ்வுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணா, இப்ப இப்படி கடலை போட்டு நம்மள போர் அடிக்கறானே!’ என்று சலித்துக் கொண்டான்.

சுவரை பார்த்து சிரித்தபடி தனக்கே கேட்காத வண்ணம் கைபேசியில் பேசி சிரித்துக் கொண்டிருந்த சுரேனை பார்த்து, ’ஹ்ம்ம் திருத்தவே முடியாது’ என்று தலையிலடித்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான் வினோத். தட்டில் உணவை எடுத்துக் கொண்டு வினோத்தின் அருகே வந்தமர்ந்தான் யாசர்.

“யே! அப்புறம் சொல்லவே மறந்துட்டனே! இப்ப தான் அம்மா ஃபோன் பண்ணாங்க…அந்த பொண்ணு மோஸ்ட்லி ஓகேவாயிடும் போல இருக்கு…”

அதிர்ச்சியுற்றவனாய் வினோத், “என்னடா சொல்ற?”

“என்னடா சொல்றேன்னா? இத்தன நேரம் என்ன ஜெர்மன்லையா சொல்லிட்டு இருந்தேன்? பொண்ணு நிச்சயம் ஆயிடுச்சுன்னு சொல்றேன்”

“அடக்கொடுமையே!”

உற்ற நண்பனிடம் கல்யாணம் நிச்சயமாகப் போகும் செய்தியை சொல்லும் போது இப்படி ஒரு பதிலை சத்தியமாக யாசர் எதிர்பார்க்கவில்லை.

“ஹே…என்ன ஆச்சு உனக்கு? நானும் பாத்துகிட்டே இருக்கேன்…நான் போன வாரம் அந்த பொண்ண பாக்க போனதிலிருந்து பேயறஞ்ச மாதிரியே இருக்க…”

“சாரி டா…சாரி…பாரு அவனை… விடிஞ்சிருச்சா, இல்லை ராத்திரியான்னு கூட தெரியாம எப்ப பாரும் ஃபோன்லையே பேசிட்டு இருக்கான்…அவனும் இன்னும் நாலு மாசத்துல கல்யாணம் பண்ணி போய்டுவான்…நீயும் இப்படி வந்து குண்ட தூக்கி போட்டா நான் எங்கடா போவேன்?

இருபத்தி ஐஞ்சு வயசு தான ஆச்சு! அதுக்குள்ள ஏண்டா இப்படி அடிச்சு பிடிச்சு கல்யாணம் பண்றீங்க?”

“கவலைபடாதடா பாப்பா…உன்னை ஒரு பீ.ஜி யில சேத்து விட்டர்றோம்”

“பீ.ஜியா? என் நிலைமை இப்படி ஆகிடுச்சே ஆஞ்னேயா…பேசாம இப்படி பண்ணா எப்படி?”
“எப்படி?”

“நான் உன் வீட்டுக்கே பேயிங் கெஸ்டா வந்துடறேனே!”

“டேய்!!! உன்னையெல்லாம் வாட்ச்மேனா கூட சேத்திக்க மாட்டான்டா எவனும்! எதுக்கு இந்த தலைவலி? பேசாம வீட்ல பொண்ணு பாக்க சொல்ல வேண்டியது தான?”

“உனக்கு தெரியாதா? எத்தன தடவை சொல்றது? என்னவோ நான் காமடி பண்றேன்னு நினைச்சுட்டீங்களா? இன்னொரு தடவை சொல்றேன், நல்லா கேட்டுக்கோ, ’எனக்கு இந்த, கல்யாணக் கான்செப்டே பிடிக்கல…”

“எத்தன நாளைக்கு தான் இதையே சொல்லிட்டு இருப்ப? சொல்ற பேச்சை கேளு…பேசாம ஒரு நல்ல பொண்ணா பாத்து…”

“போதும், போரடிக்காத மண்டி! கல்யாணம் பண்ணி என்னத்தடா பண்ணப் போறீங்க? சும்மா…கல்யாணம்…அப்புறம் காதுகுத்து, அப்புறம் மறுமடியும் நாம பெத்ததுகளுக்கு கல்யாணம்…இவ்ளோ தானாடா வாழ்க்கை? எனக்கு இதெல்லாம் ஒத்து வராது…”

“சரி…ஒத்து வராதுன்னா காதுகுத்தெல்லாம் வைக்காத, பசங்களும் அவங்களாவே பாத்து கல்யாணம் பண்ணிகட்டும்…”

“யே! நான் இவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன்…நீ விளையாடுறியா?”


“அதென்னவோ தெரியலடா பாப்பா…நீ காமடி பண்றத விட சீரியஸா பேசும் போது தான் ரொம்ப காமடியா இருக்கு” என்றபடி பலமாக சிரித்தான் யாசர். “சரி…கல்யாணம் வேணாங்குற…அப்புறம் எதுக்குடா எப்ப பாத்தாலும் அந்த பொண்ணுகிட்ட இன்ட்ரோ குடு, இந்த பொண்ணுகிட்ட குடுன்னு எங்க உயிர வாங்குற?”

“கல்யாணத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? கடலை பட்டறையில் கல்யாணத்துக்கு என்ன வேலை?”

“என்னவோ பெருசா இவன் கடலை போட்ட மாதிரி ரொம்ப தான் பில்டப் குடுத்துட்டு இருக்கான்?” பேசி முடித்து விட்டு அப்போது தான் முன் அறைக்குள் நுழைந்த சுரேனும் வினோத்தை ஓட்டும் முக்கிய பணியில் கலந்து கொண்டான்.

வினோத், “வாடா வா…என்ன ஒரு கை கொறையுதேன்னு பாத்தேன்…உங்க அளவுக்கு எங்களுக்கு டேலன்ட் இல்லைன்னு ஒத்துக்கறேன்…”

சுரேன், “கோச்சுக்காதடா பாப்பா…ஆமா….நீ சின்ன வயசுல கூட எந்த பொண்ணுகிட்டையும் பேசினதில்லையா என்ன?”

சின்ன வயது என்றவுடன் வினோத்தின் முகம் கடுகடுப்பாக மாறியது,
“சின்ன வயசுல நான் எப்படி இருந்தேன் தெரியுமா? எல்லாம் ஒரு பொண்ணு…இல்லையில்ல ராட்சஸினால தான், பொண்ணுங்கன்னாலே வெறுத்து அவ்வளவா யாரோடையும் பேசுறது இல்லை…”“சரி கரண்ட் வேற இல்ல…நீ கண்டின்யூ பண்ணு பாப்பா…”

“நான் சின்ன வயசுல பயங்கர ரோமியோவா இருந்தேன்!”

“எது??? நீயா????” ஒரு சேர ஒலித்தது இருவரின் குரலும்.

“கேளுங்கடா…நாங்கெல்லாம் ஐஞ்சாவது படிச்சிட்டு இருக்கும் போதே வெய்ட்டு காட்டுவோம்ல? எங்கப்பா தங்கச்சியோட அதாவது என் அத்தை, அந்த மாமாவோட அண்ணன் பொண்ணு ஒருத்தி இருந்தா…”

“எதுவும் புரியல…முதல்ல அந்த பொண்ணு உனக்கு என்ன ஆகனும்னு சொல்லு…”

“அதான் சொன்னேனெ…எங்க அத்தையோட…”

“டேய்!!!”

“சரி சரி…சுருக்கமா சொல்லனும்னா எனக்கு மாமா பொண்ணு முறை…ஆனா கொஞ்சம் சுத்தி வளைச்சு! போதுமா? அந்த பொண்ணும் அப்ப ஐஞ்சாவது தான் படிச்சிட்டு இருந்தா. அவ அப்பயே படுபயங்கரமா படிப்பா, அதனால அவளோட கம்பேர் பண்ணி வீட்ல எனக்கு ஒரே திட்டு…அவளை பாத்தாலே எனக்கு எரிச்சல் எரிச்சலா வரும்…அதனால அவள எப்ப பாத்தாலும், நாம ஓடிப்போயிரலாமான்னு கேட்டுகிட்டே இருப்பேன்…”

“எரிச்சலா வந்தா எப்படிடா இப்படி போய் கேப்ப?”

“அப்படி நான் கேட்டா, அவளுக்கு பிடிக்காதில்லை? எதாவது கத்த ஆரம்பிச்சுடுவா, இல்லைன்னா அழுதுகிட்டே போய் எங்க அத்தைகிட்ட போட்டு தருவா…நான் இருக்கற பக்கமே வர மாட்டா…”

என் தொல்லை தாங்க முடியாம எங்க வீட்ல ஆறாவதிலிருந்து ஹாஸ்டல்ல சேத்திட்டாங்களா…அதனால ரொம்ப வருஷம் அவள நான் பாக்கவே இல்லை. ஒரு தடவை ஆனுவல் லீவப்ப எங்க குலதெய்வ கோவில்ல எனக்கு காதுகுத்து. அப்ப தான் அவள மறுபடியும் பாத்தேன். ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறியிருந்தா, பட்டு பாவடையெல்லாம் போட்டுகிட்டு அங்கயும் இங்கயும் ஓடிகிட்டு இருந்தா. எங்க பாட்டிகலெல்லாம், ரொம்ப அழகா இருக்கா, கண்ணே பட்டுடும், அவளுக்கு சுத்தி போடனும்னு வேற பேசிகிட்டாங்க…இதெல்லாம் பாத்து எனக்கென்னவோ அவ மேல ஒரே பொறாமையாயிடுச்சு.

“என்னது பொறாமையா?”

“என்னவோ அந்த வயசுல அப்படி தோணுச்சு…அதுவும் டென்த் ஸ்டேன்டர்ட்ல நான் பாதி மீசை மொளைச்சும் மொளைக்காமையும் பாக்கவே கேவலமா இருந்தேன்!”

“எது டென்த் ஸ்டேன்டர்ட்ல தான் உனக்கு காது குத்தினாங்களா? ஹா ஹா…எப்படிடா உங்க மாமா உன் வெய்ட்ட தாங்கினாரு?”

“டேய்! டிஸ்டர்ப் பண்ணாம கதைய கேளுங்கடா!” வினோத் சொல்ல சொல்ல, அவன் மனக்கண்களுக்கு முன் அந்த காட்சி விரிந்தது.

அந்த குலதெய்வ கோவில், சிறிய கோவில் தான், ஆனால் அதன் பக்கத்தில் ஒரு சிறிய குளம் இருக்கும்…’இவ்ளோ பெரிய பையன் ஆனதுக்கப்புறம், வேணாம்னு சொல்லியும் கேக்காம காது குத்திட்டாங்களே’
என்று யோசித்தபடி மிகவும் சோகமாக அந்த ஓடைக்கு பக்கத்தில் தன் நிழலை பார்த்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தான் வினோத்.

மாம்பழ மஞ்சள் நிறத்தில், மெரூன் பார்டருடன் கூடிய பட்டுப் பாவாடை, அவளது உயரத்தை விட நீளமாய் தரையில் புரள, பின்னாமல் விட்டிருந்த கூந்தல் காற்றில் அலைபாய, கையில் எதையோ பிடித்து ஆட்டியபடி, சத்தமாக சிரித்துக் கொண்டு, அந்த ஓடையருகே வேகமாக ஓடி வந்தாள் நித்யா.

“அத குடு நித்தி! ப்ளீஸ் நித்தி!!!” அவள் பின்னோடு ஓடி வந்து கொண்டிருந்தான் அவளுடைய தம்பி பிரகாஷ்.

அவனை திரும்பி பார்த்து சிரித்துவிட்டு, “குடுக்க முடியாது போடா…” என்று இறைந்தபடி ஓடி வந்தவள், அங்கு தரையை பார்த்துக் கொண்டிருந்த வினோத் மீது மோதினாள். நிலை தடுமாறி விழப்போன இருவருமே சுதாரித்து நின்றனர். சிரித்துக் கொண்டே, “சாரி” என்றபடி அந்த இடத்தை விட்டு நகர போனவளின் கையை கெட்டியாக பற்றி நிறுத்தினான்.

கோபனான குரலில், “யேய்…இப்படியா கண்ணு மண்ணு தெரியாம ஓடி வருவாங்க?”

“அதான் சாரி சொன்னேனே!”

“சாரி சொல்லிட்டா எல்லாம் சரியா போச்சா?” என்றபடி அவனது பிடியை இறுக்கினான்.

“யேய்…கையை விட்றா…”

“என்னது டாவா? மரியாதையா பேசு…வாடா போடான்ன, அப்புறம் அவ்ளோ தான்!”

“என்னடா பண்ணுவ? அப்படி தான் சொல்லுவேன்…விட்றா கையை…”

கோபம் தலைக்கேறி, “என்ன பண்ணுவனா?” என்றவாறு அவளது கையை பிடித்து முறுக்கினான்.
“ஹய்யோ வலிக்குதே….அம்மாஆஆஆஅ….. விட்றா எருமமாடு! பிசாசு!”

எருமைமாடு என்ற வார்த்தையை கேட்டதும் யோசிக்காமல் உடனே செயல்பட்டான் வினோத். நடப்பதை உணர்ந்து, நித்யா சுதாரிக்கும் முன்பு, பிரகாஷ் அங்கு ஓடி வருவதற்குள், அவளை பிடித்து அவனுக்கு எதிர்புறமாக இழுத்து, அருகில் இருந்த ஓடையில் தள்ளினான். அம்மாஆ என்று அலறியவாறு விழுந்த அவளின் குரலை கேட்டு பெரியவர்கள் எல்லோரும் அங்கு ஒடி வந்தனர்.

----
“டேய்! ஏன்டா அப்படி பண்ண?”

“என்னவோ கோவம்…பண்ணிட்டேன்…ஆனா அதுக்கப்புறம் எங்கம்மா என்னை தொரத்தி தொரத்தி அடிச்சாங்க…அந்த நாள மட்டும் மறக்கவே முடியாது…எல்லாம் அந்த ராட்சஸியால வந்துச்சு…”

“பண்ற வேலையெல்லாம் நீ பண்ணிட்டு, அவளை ராட்சஸின்னு சொல்றியா? அதுக்கப்புறம் அந்த பொண்ணுகிட்ட பேசினியா இல்லையா?”

“அவங்கப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபர் வந்து அவங்க வேற ஊருக்கு போய்ட்டாங்க…அதுப்புறம் நான் அவள பாக்கவே இல்லை…ஆனா அதுக்கப்புறம் வேற எந்த பொண்ணுகிட்டையுமே நான் அதிகமா என்ன, சுத்தமாவே பேசல. என்னவோ, பொண்ணுகனாலே பசங்ககிட்டெல்லாம் பேசக் கூடாதுன்னு நினைப்பாங்க…நம்ம எதுக்கு போய் வீணா அவங்கள டிஸ்டர்ப் பண்ணனுமேங்கற நினைப்பு தான் காலேஜ் படிக்கும் போது இருந்துச்சு….ஆனா வேலைக்கு வந்து இத்தன நாளாச்சு, சகஜமா எல்லாரோடையும் பேசினாலும், ஒருத்தவங்க கூடயும் அதிகம் பேசனும்னு தோணினதில்லை…ஆனா இதுல ஒரு பெரிய தியரி இருக்குடா….”

அதற்குள் சுரேனும், யாசரும் ’கொர் கொர்’ என்று சத்தம் எழுப்பிப் கொண்டு தூங்குவதைப் போல் நடிக்கவும், ’போங்கடா…’ என்றபடி அந்த இடத்தை விட்டு அகன்றான் வினோத்.

யாசரும் வினோத்தும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்ததால், மாலை பெரும்பாலும் இருவரும் ஒரே பேருந்தில் வீட்டிற்கு திரும்புவார்கள். ஒருவருக்கு வேலை சீக்கிரம் முடிந்து விட்டாலும், மற்றவருக்காக காத்திருந்து ஒன்றாக தான் செல்வார்கள். அன்றும் வழக்கம் போல் ’போலாமா’ என்று யாசருக்கு பிங் செய்தான்.

யாசர், ’இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்குடா….எட்டரை பஸ்ல போலாம்’ என்று பதிலனுப்பினான்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக வினோத், “நான் கிளம்பறேன்டா…ஒரு மாதிரியா இருக்கு” என்று சொல்லிவிட்டு ஏழரை மணி பஸ்ஸை பிடிக்க வேக வேகமாக ஓடினான், திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்து பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் யாசர் தொலைபேசியை எடுத்து பேச ஆரம்பித்திருந்ததால் வினோத்திற்கு காத்திருந்தால் மட்டும் என்ன பிரயோஜனம் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

வசதியாக ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, கண்கள் மூடியபடி கைபேசியில் பாடல் கேட்கத் துவங்கினான்.

“எக்ஸ்கூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி…” திடீரென்று பாடலுக்கு சம்பந்தமே இல்லாத மற்றொரு குரல் எக்ஸ்க்யூஸ்மி என்று ஒலித்தது. கண்களை விழித்துப் பார்த்தவனுகெதிரில் இரு பெண்கள் நின்றிருந்தனர்.

“நாங்க இங்க உக்காந்திருந்தோம்…புக் வச்சுட்டு போயிருக்கமே…”

அப்போது தான் அங்கிருந்த புத்தகத்தை கவனித்தவன், அந்த இரு பெண்களில் அவனருகே நின்றிருந்தவளை தினாவெட்டாக பார்த்து, “சோ?” என்றான்.

“நீங்க வேற எதாவது சீட்டுக்கு போனா நல்லா இருக்கும்…”

“ஏன்? நீங்க போலாமே?”

“இல்ல…நாங்க ரெண்டு பேரும் சேந்து உக்காரனும்…மத்த எல்லா இடத்திலையும் ஒவ்வொரு சீட் தான் இருக்கு…”

“அப்ப ஒன்னு பண்ணுங்க….ஒருத்தர் மடியில ஒருத்தர் உக்காந்துக்கோங்க…சேந்து உக்காரலாம்…”

அவன் பேசி முடிப்பதற்குள் அவனருகே நின்றிருந்தவள், அவனை கேவலமான ஒரு பார்வை பார்த்துவிட்டு ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் அவளுடைய தோழி அவளை பிடித்து இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

சாதாரணமாக தெரியாத யாரிடமும் இப்படி மரியாதை இல்லாமல் வம்பு பண்ணும் ரகம் இல்லை வினோத். வழக்கமான வினோத்தாக இருந்திருந்தால், அவர்கள் கேட்டதுமே அந்த இடத்தை அவர்களுக்கு கொடுத்திருப்பான். ஆனால் அன்று ஏனோ அந்த பெண்ணைப் பார்த்ததும் அவளை வம்புக்கு இழுக்க வேண்டும் போல தோண்றியது அவனுக்கு. அவர்கள் சென்ற பிறகு, ’நாம் ஏன் இப்படி நடந்து கொண்டோம்’ என்று நினைத்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையை கலைத்தது, “நீங்க வினோத் தான?”என்ற அதே குரல்.

திகைத்துப் போய் நிமிர்ந்தவனின் பார்வையில் முதலில் பட்டது அந்த பெண் அணிந்திருந்த அடையாள அட்டை. ’நித்யா’ என்ற கொட்டை எழுத்துகளை படித்து நிமிர்ந்தவனை பார்த்து அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் நித்யா!



[தொடரும்]

32 comments:

சங்கர் said...

Nalla aarambam.. All the best..

//அவளை பாத்தாலே எனக்கு எரிச்சல் எரிச்சலா வரும்…அதனாலஅவள எப்ப பாத்தாலும், நாம ஓடிப்போயிரலாமான்னு கேட்டுகிட்டே இருப்பேன்//

Epdi ungalaala mattum ipdi ellam yosikka mudiyudhu...


//மாம்பழ மஞ்சள் நிறத்தில், மெரூன் பார்டருடன் கூடிய பட்டுப் பாவாடை, அவளதுஉயரத்தை விட நீளமாய் தரையில் புரள, பின்னாமல் விட்டிருந்த கூந்தல் காற்றில்அலைபாய, கையில் எதையோ பிடித்து ஆட்டியபடி, சத்தமாக சிரித்துக் கொண்டு//

Ada ada ada...

ஜியா said...

weightu!! athukkulla aduthathaa?? kalakkunga

mvalarpirai said...

ஆரம்பிச்சாட்டங்கப்பா ! தி.பி பசங்களோட சைக்காலஜி உங்களுக்கு எப்படி தெரியுது? உங்களுக்கு நண்பர்கள் அதிகமா input கொடுப்பாங்களா?

ஜியா said...

thodarum sema weightaa poguthu..

paapa - padupaavi...
yassar kku marraige fix aayidichaa?? naan congrats sonnathaa sollidunga ;))

Raghav said...

ஹை.. கதை இன்னிக்கு ஆரம்பமாகும்னு நினைச்சு வந்தேன்.. ஆரம்பிச்சாச்சு..

நல்ல ஆரம்பம்.. சொன்ன சொல்படி ரெண்டு நாளுக்கு ஒரு பகுதி போடுவீங்க தானே..

பலர் மாதிரி, பேச்சிலர் ரூம் பத்தி ரொம்ப விவரிக்காம கதைக்குள்ள நேரடியா போனது நல்லாருக்கு.,.

gils said...

kaathukuthal scene..chaancela..LOL :D nice beginning..enakenamo..inoru dozen postku ipovay ready pannikanumnu thonuthu!!

ஆயில்யன் said...

//“கல்யாணத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? கடலை பட்டறையில் கல்யாணத்துக்கு என்ன வேலை?” /

//நம்ம எதுக்கு போய் வீணா அவங்கள டிஸ்டர்ப் பண்ணனுமேங்கற நினைப்பு தான் காலேஜ் படிக்கும் போது இருந்துச்சு//

குட் அப்ரோச் இந்த கேரக்டர் எனக்கு நொம்ப்ப புச்சிருக்கு :))

ஆயில்யன் said...

//மாம்பழ மஞ்சள் நிறத்தில், மெரூன் பார்டருடன் கூடிய பட்டுப் பாவாடை, //

கண் முன் விரிகிறது கல்ர் - நல்லாத்தான் இருக்கு!

ஆயில்யன் said...

//திகைத்துப் போய் நிமிர்ந்தவனின் பார்வையில் முதலில் பட்டது அந்த பெண் அணிந்திருந்த அடையாள அட்டை. ’நித்யா’ என்ற கொட்டை எழுத்துகளை படித்து நிமிர்ந்தவனை பார்த்து அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் நித்யா!//

ரைட்டு ஸ்டார்டாயிடுச்சு! காளியாத்தா மாரியாத்தா எல்லாம் நல்லபடியா முடியணும் :)

கதிரவன் said...

:-) நல்ல ஆரம்பம்

Unknown said...

bachelors thinking abt the place to stay when room mates getting married..good one..:)

Mohan R said...

Yenunga AMericala pagal poludhu aachey Officela odi polama odittu irukka....

Nadakkatum nadakkattum :)

Nalla irukku...

FunScribbler said...

//inoru dozen postku ipovay ready pannikanumnu thonuthu!!//

ரீப்பீட்டு!

Anonymous said...

க‌தை ஓட்ட‌ம் அருமையா இருக்கு திவ்ய‌பிரியா. க‌ல‌க்க‌றிங்க‌.

ramesh said...

Hey Loose

Erichal vantha Odipolaamnu ketta muthal aal nee thaan..
10 std la kaathu kuthuraangala???

these two r very unusual cases..

nee trailor la kudutha build up paarthu romba expect panninae.. chinna vayasula sandai podurathu appruram transfer aagarathu ellam usual stories la varathaachae..

Innum konjam moolaiya kasakki irunthina innum nalla vanthirukkum.. unkitta irunthu innum niraiya expect panraen :)

மேவி... said...

வாவ் ..... சூப்பர் NARRATION . அருமையா இருக்கு. பசங்களோட பேச்சு உங்களுக்கு எப்புடி தெரியும்?????

கதை நல்ல அழகா இருக்கு.

மேவி... said...

ethavathu suspense vaicha nalla irukkume

Prabhu said...

ஓடிப் போயிரலாமா டெக்னிக் நானும் பல காலமா யூஸ் பண்ணி பாக்குறேன். ஆனா, எல்லாம் சிரிக்கிறாங்க. நம்மள காமெட் பீஸூ மாதிரியே பாக்குறாய்ங்க... ஹ்ம்ம்...


அந்த நித்யாவ நம்ம பையன் லவ் பண்ண போறானா?அப்புறம் கதை என்னன்னு இப்பயே ஒரு அவுட்லைன் தோணுது. ஆனால் காதல் கதைலாம் கதைய விட அப்ரோச் தான் முக்கியம்! பாக்கலாம்.....

மணி said...

தலைப்பே வித்தியாசமாக இருக்கே.
கதையும் சுவாரஸ்யமாக போகுது.

Divyapriya said...


சங்கர் said...
//Epdi ungalaala mattum ipdi ellam yosikka mudiyudhu...//

எப்படி உங்களால இப்படியெல்லாம் (ரொம்ப மரியாதையா) கமெண்ட் பண்ண முடியுது? ;)

------------------------
@ஜியா
//weightu!! athukkulla aduthathaa?? kalakkunga//

ஷோபா அபார். முன்னாடியே இதை முடிச்சாச்சு :) posting மட்டும் தான் இப்ப :)
------------------------
mvalarpirai

அவங்களா எதுவும் சொல்லாட்டியும், அவங்க பேசுறத ஒட்டு கேட்டுடுவேன் :))
------------------------
Raghav
நன்ரி Raghav...நீங்க சொல்லிட்டீங்கல்ல? போட்டுட வேண்டியது தான் :))
------------------------
gils/Thamizhmaangani

chance யே இல்ல...கதையை எப்பயோ முடிச்சாச்சு...கண்டிப்பா 5 பாகம் தான் :)

Divyapriya said...


ஆயில்யன்

நன்றி ஆயில்ஸ்...உங்க கமெண்ட்ட வச்சு climax ல ஒரு slight modification பண்ணிட்டேன் :))

-----------------------
கதிரவன்

நன்றி கதிரவன்...
-----------------------
ejaz

ஆனா உனக்கு அந்த பிரச்சனை வராதுன்னு நினைக்கறேன் :) u will be the early bird, haa haa :D
-----------------------
இவன்

ராத்திரி தான் post பண்ணேன்...ஏனோ reader ல update ஆகல...அதான் republishing :)
-----------------------
MAHA

நன்றி MAHA

Divyapriya said...


ramesh

kaathu kuthu in 10th std is not an unusual case, i got this idea from my cousin's kaadhu kuthu only. he is in first year now n his kaathu kuthu happened 2 months back :))

n abt the story, u see it'll be a different one after this part...the turning point in the story is due to a மொக்க charater called ramesh...hee hee :)
ஒரு character ருக்காவது உன் பேர வைக்கனும்ங்கற உன் ஆசையை ரெண்டு தடவை நிறைவேத்திட்டேன் :))

---------------------------
டம்பி மேவீ

நன்றி மேவீ...நித்யா பாத்து சிரிக்கறது தாங்க சஸ்பென்ஸ் :P

---------------------------
pappu

நீங்களும் இந்த technique use பண்றீங்களா? ஹா ஹா :)
---------------------------
மணி said...
//தலைப்பே வித்தியாசமாக இருக்கே.
கதையும் சுவாரஸ்யமாக போகுது.//

ஹப்பா..நீங்களாவது தலைப்ப பத்தி சொன்னீங்களே...நன்றி :))

மேவி... said...

" டம்பி மேவீ

நன்றி மேவீ...நித்யா பாத்து சிரிக்கறது தாங்க சஸ்பென்ஸ் :p "

சொல்லவே இல்லை...... இருந்தாலும் ஓகே ...

அப்ப அடுத்த பி.டி.சாமி, ராஜேஷ்குமார், BILL GATES நீங்க தான்னு சொல்லுங்க

Unknown said...

good start.

Unknown said...

Had the privilege to read the second part before it was posted..thanks for that thangachi...Also first one to comment on part-2 of the story :) interesting and waiting to see how you are going to take it forward.

G3 said...

Aaha.. aarambamae kalaasala irukkae :D

Aama suspense edhum illama mudichirukkeengalae ;) Edhaavadhu nalla moodla irundhappo indha kadhaya ezhudhineengalo :P

G3 said...

// nithya said...

Had the privilege to read the second part before it was posted..//

Selladhu selladhu :(( Ozhunga seekiram postidunga illati motha partayum mail pannidunga ;))))

Divyapriya said...


டம்பி மேவீ

:)))

------------------
nithya

thanks :)) i m privileged to have ur comment here :)) இது எப்படி இருக்கு? ;)

------------------
g3

thanks g3...n 2nd part also done :)

Tamilparks said...

if you wish we are ready to publish your story in our tamilparks

http://tamilparks.50webs.com

Nimal said...

பாகம் 1 சூப்பர், நல்ல தொடக்கம்.

(கதாபாத்திரங்களை பாதிக்கு பின்னாலதான் சரியா புரிஞ்சுக்க முடியுது.)

Karthik said...

jaari late.. leave il irunthen.. inimel than porumaiya padikkanum.. padichittu solren.. :)

Karthik said...

கலக்கல் ஆரம்பம். ஆனா என்னாஆஆஆ நீளம். நீலக்கலர்ல க்ளைமேக்ஸ் ஆரம்பிச்சது நல்லா இருந்துச்சு. :))