Friday, October 30, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 13

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8 , பாகம் 9, பாகம் 10, பாகம் 11, பாகம் 12

“நான் அன்னிக்கே சொன்னேன்…தற்கொலை தான்னு…கேட்டீங்களா?” பரத்து தம்பி! நான் சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே? நீங்க உண்மையிலையே புத்திசாலி தான்..அதை நான் ஒத்துக்கறேன்…ஆனா உங்க புத்திசாலித் தனத்தை ரொம்ப உபயோகிச்சீங்கன்னா இப்படி தான் எல்லாருக்கும் நேர விரயம் ஆகும்…”

யெஸ். ஐ யின் பேச்சிற்கு பதிலேதும் பேசாமல் அவரை விருட்டென திரும்பி முறைத்தார் பரத்.உடனே ஸ்டேஷனை விட்டு வெளியேறியவர், கோபத்தையெல்லாம் தன் இருசக்கர வாகனத்தில் மேல் காட்ட, அது சீறிக் கொண்டு பாய்ந்தது. நேரே பில்டிங் சொல்யூஷன்ஸ் சென்றவர் ரமேஷை அழைத்தார், “நான் கேட்ட டேட்டா எடுத்து வச்சிடீங்களா?”

“அப்பவே ரெடி சார்…பிரின்ட் அவுட்டே எடுத்து வச்சுட்டேன்…”

“ஓ…குட் குட்…கொஞ்சம் வெளிய கொண்டு வந்துருங்க…ரிப்ஷன்ல வெயிட் பண்றேன்…”

ரமேஷ் வந்தவுடன் அவன் குடுத்த ப்ரிண்ட் அவுட்டை ஆராய்ந்தவர் முகத்தில் அன்றைய முதல் வெற்றிப் புன்னகை. ஏனென்றால் அவர் கையிலிருந்தது ஒன்பதாவது மாடி கதவு மற்றும் மது வீட்டு கதவின் தகவல்கள்!

நேரே தரகர் ராமன் வீட்டிற்கு சென்றார் பரத். எந்த கவலையும் இல்லாமல் தொலைகாட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார் ராமன். மஃடியில் பரத் திடீரென்று வீட்டிற்குள் பிரவேசிக்கவும், திடுக்கிட்ட ராமன், “யார் சார் நீங்க?” என்று அதட்டலாக வினவினார்.

தன் ஐ.டி கார்டை வெளியே எடுத்த பரத், “பரத்! இன்ஸ்பெக்ட்டர் ஆஃப் போலீஸ்! அதுக்குள்ள மறந்துட்டீங்க போல?” என்று மிடுக்காக கேட்க, ஒரு நொடி ஆடிப்போனார் ராமன்.

பரத்தின் முகம் சட்டென்று நினைவுக்கு வர, “சார்….சாரி சார்…அது வந்து…போலீஸ் ட்ரெஸ் போடலையா…அதான்…வாங்க…உக்காருங்க…” என்று குழைந்தார்.

“உக்காரதுக்கு வரலை…மதுவந்த்தி கேஸ்ல உங்க மேல சந்தேகம் இருக்கு…நடங்க ஸ்டேஷனுக்கு…” என்று அதிகாரத் தொனியில் பரத் சொல்லவும், வெலவெலத்துப் போன ராமன், “என்னது? என்ன சொல்றீங்க? என் மேல சந்தேகமா? என்ன சார் உளர்றீங்க? நானே அந்த பொண்ண ஃபோட்டோவில மட்டும் தான் பாத்திருக்கேன்…எந்த அடிப்படையில என் மேல சந்தேகப் படறீங்க?”

“ஓ? அடிப்படையெல்லாம் உங்ககிட்ட விளக்கனுமா? பொண்ணுக்கு சொந்தக்காரங்க உங்க மேல சந்தேகம் இருக்கறதா சொல்லியிருக்காங்க…அந்த அடிப்படையில தான்…”

“சொந்தக்காரங்களா? அந்த பொண்ணுக்கு தான் அம்மாவும் இல்லை, அப்பாவும் ஆஸ்பத்திரியில கிடக்கறாரே?”

“அவங்க சித்தி தான் கம்ப்ளெய்ன்ட் குடுத்திருக்காங்க…உங்க மேல சந்தேகம் இருக்கறதா…”

அதிர்ச்சியில் ராமனின் முகம் இருண்டது, கோபம் தலைக்கேற, “என்னது? காமாட்சியா? அந்த பொம்பளையா? அவளுக்கு என்ன துணிச்சல்?” என்று கத்தத் துவங்கினார். உடனே பரத், “நீங்களா வர்றீங்களா? இல்லை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகவா?”

“சார்…நான் எந்த தப்பும் பண்ணல சார்…அந்த காமாட்சி தான் பணம் குடுத்து என்னை சாட்சி சொல்ல சொல்லுச்சு சார்…ஆனாலும் நான் சொன்னது பொயில்ல சார்…உண்மை தான்…எனக்கு அதுக்கு மேல எதுவுமே தெரியாது சார்… என் கொழந்தைங்க மேல சத்தியமா…”

அடுத்த வெற்றிப் புன்னகையோடு ராமனை அழைத்துக் கொண்டு காமாட்சி வீட்டை நோக்கி விரைந்தார் பரத்.

-------

15th Aug 12:00 A.M

மதுவின் அறையிலிருந்து “அம்மாஆஆ” என்று அலறல் சத்தம் கேட்டு மது இருந்த அறையில் எட்டிப் பார்த்த காமாட்சி, ஏதோ ஒரு பலகையை வைத்துக் கொண்டு மது திரும்பி அமர்ந்திருப்பதை பார்த்தார். மது பலகையை பார்த்து அம்மா, அம்மா என்று அழுவதை பார்த்த காமாட்சிக்கு ஒரு நிமிடத்திலேயே அவள் செய்து கொண்டிருப்பது புரிந்தது. மதுவை அன்று பார்த்ததுமே, சில மாதங்களாக அவர் மனதில் புகைந்து கொண்டிருந்த வன்மம் அதிகமாக, அது முதல் மதுவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனமாக கண்கானிக்கத் துவங்கினார் காமாட்சி.

15th Aug 11:30 P.M

மது ஓஜா பலகை, மெழுகு வர்த்தி சகிதம் வீட்டை விட்டு வெளியேறியதை பார்த்ததும், சோஃபாவில் படுத்துக் கொண்டிருந்த காமாட்சியின் உள்ளத்தில் உடனே அந்த திட்டம் உருவானது. உடனே அறைக்குள் சென்று தன் அக்காவின் புடவையை எடுத்து தான் கட்டியிருந்த புடவை மேலே கட்டிக் கொண்டார். மாமாவிடம் நல்லவிதமாக பேசி, விசாலாட்சியின் புடவைகளை வாங்கிக் கொண்டு வந்தது எவ்வளவு நல்லதாய் போயிற்று என்றி எண்ணிக் கொண்டு, கன்னாடியில் தன் உருவத்தை பார்தார். அக்கா போன்றே பெரிதாக பொட்டு ஒன்றை வைத்துக் கொண்டதும், இரு புடவை கட்டியதால் சற்றே குண்டாக, தான் அக்காவை போலவே இருப்பதாக காமாட்சிக்கு தோன்றவே, அவருடைய முகத்தில் ஒரு குரூர புன்னகை அரும்பியது.

மது மொட்டை மாடிக்கு தான் போயிருப்பாள் என்று திட்டவட்டமாக தெரிந்ததால், காமாட்சி ஒன்பதாவது மாடி வழியே சென்று அங்கிருந்த கதவின் வழியாக, ஒன்பதாவது மாடிக்கருகில் இருந்த அந்த சிறு பால்கனியை சிரமப்பட்டு அடைந்தார்.ஒருவர் மட்டுமே நிற்கும் அளவிற்கு இருந்த அந்த இடத்தில் சிரமத்துடன் நின்றுகொண்டு, மது என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று அவரால் பார்க்க முடியாவிட்டாலும், இருட்டின் நிசப்தத்தில் அவருக்கு மது அழும் குரல் லேசாக கேட்டது. உடனே இது தான் சமயம் என்று மது மது என்று உரக்கக் கத்தினார் காமாட்சி. தன் சத்தம் கேட்டு அலறியடித்து சத்தமிட்டு அழுது கொண்டே மது ஓடி வரும் சத்தம் கேட்கவும், “மதும்மா…இங்க இருக்கேன்டா…இங்க…” என்று அவரும் கத்தினார். அவள் வந்து குனிந்து தன்னை பார்த்ததும், சிரிக்கும் போது தான் அக்கா மாதிரியே இருப்பதாக பல பேர் சொல்லிக் கேட்ட விஷயத்தை அப்போது சரியாக உபயோகித்துக் கொண்ட காமாட்சி பெரிதாய் புன்னகைத்து கைகளை நீட்டியவாறு, “வாடாம்மா…அம்மாகிட்ட வா… குதிச்சு வா மதும்மா” என்றார்!

அதே நேரத்தில் யாரோ தடுக்கி விழும் சத்தம் கேட்கவும், ஆபத்தை உணர்ந்த காமாட்சி மது திரும்பிப் பார்த்த கணத்தில் உடனே பக்கவாட்டில் ஓடி மறைந்தார். சற்றும் தாமதிக்காமல் ஒரே மூச்சில் தடதடவென விரைந்து ஓடி இரண்டாம் தளத்திலிருந்த தன் வீட்டை அடைந்தார் காமாட்சி. விட்டை அடைந்து ஒருசில நொடிகளிலேயே ஏதோ சத்தம் கேட்க, ஜன்னல் வழியே பார்த்த காமாட்சி, செக்யூரிட்டி தடதடவென ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து அப்படியே வெலவெலத்துப் போனார். மது கீழே குதித்தே விட்டாள் என்று காமாட்சிக்கு ஊர்ஜிதம் ஆனது. உடனே சென்று இரண்டாவது புடவையை கழட்டிவிட்டு, எதுவுமே தெரியாதது போல் தூங்குவதைப் போல் பாசாங்கு செய்யத் துவங்கினார். மது யாரென்று செக்யூரிட்டிக்கு தெரியாததால், காலை ஐந்து மணிக்கு வேலைக்கார பெண் ராணி வந்து அடையாளம் காட்டி, காமாட்சியை எழுப்ப போலீஸ் வந்த போது மணி ஐந்து பத்து. அதற்குள்ளாக எப்படியெல்லாம் அழுது நடிப்பது, மது அப்பாவிடம் எப்படி பேசுவது என்று மனதிற்குள்ளேயே திட்டம் தீட்டி முடித்திருந்தார் காமாட்சி என்ற அந்த பணப்பேய்!

***********************************************************************************

தற்கொலைக்கு தூண்டியதற்காக காமாட்சியையும், காசு பெற்று சாட்சி சொல்லி கேஸை திசை திருப்பியதற்காக ராமனையும் கைதி செய்வதற்காக ஆவங்கள் தயாரித்துக் கொண்டிருந்த பரத்திடம் வந்த யெஸ்.ஐ, “பரத் தம்பி! உண்மையிலையே பெரிய ஆள் தான் நீங்க…இப்ப சொல்றேன்....எக்ஸ்பீரியன்ஸ விட படிப்பும் புத்திசாலித் தனமும் தான் முக்கியம்”

சிரித்துக் கொண்டே பரத், “இல்லை சார்…அனுபவமும் சேந்தா தான் ஜெயிக்க முடியும்…இப்ப பாருங்க…தேவையில்லாம அந்த ரஞ்சித்த சந்தேகப்பட்டு எத்தனை பேருக்கு சிரமம்?”

“ச்சே…அதனால தான உண்மை என்னன்னு தெரிஞ்சுது? என்னோட இத்தன வருஷ சர்வீஸ்ல பாத்தத வச்சு சொல்றேன்…உன்னை மாதிரி ஒருத்தன பாத்ததில்லை…நீ தான்யா போலீஸ்காரன்….”

பெரிதாய் சிரித்துக் கொண்டே பரத் தன் போலீஸ் தொப்பியை கழற்றி யெஸ்.ஐ யின் முன் நீட்டி, “தாங்க் யூ சார்!” என்றார்.

யெஸ்.ஐ, “ஆமாம்…அந்த காமாட்சி எதுக்காக சொந்த அக்கா பொண்ணுகிட்ட இப்படி பண்ணுச்சு?”

“எல்லாம் சொத்துக்கு ஆசைப்பட்டு தான்…வேறென்ன? பொண்ண எதாவது பண்ணிட்டா, சொத்து பூரா அவ பையனுக்கு வரும்னு ஆசை…மது அப்பா கிட்ட தான் இந்தம்மா புருஷன் வேலை செய்யறாராம்…அங்க ஏதோ பிரச்சனை, இவ புருஷன வேலையை விட்டு நிறுத்திட்டாராம் மது அப்பா…அந்த கோவம் வேற…என்னவோ ப்ளான் பண்ண போய் கடைசியில இப்படி ஆகி போச்சு…”

***********************************************************************************

முகமெல்லாம் புன்னகையாக நின்று கொண்டிருந்த லீலாவதியிடம் சென்றார் சோமநாதன்,

“என்ன மேடம்? முகத்துல இப்படி ஒரு சந்தோஷம்?”

“ஆமா ஸார்! எனக்கு சந்தோஷம் தான்…ரொம்ப ரொம்ப சந்தோஷம்…இந்த பொண்ணு இப்படி கர்பினியா கோர்ட் கேஸுன்னு அலைஞ்சிட்டு இருந்தத பாத்து, எனக்கே கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு…அதிலும், அர்த்த ராத்திரியில காத்து வாங்கறதுக்கு ஒன்பது மாடி படி ஏறி போனேன்னு திரும்ப திரும்ப, சொல்ற பொறுப்பில்லாத ஒரு புருஷனுக்காக…ஏன் தான் ஆண்டவன் இந்த பெண் ஜென்மத்த படச்சானோன்னு வேதனையா இருந்துச்சு…எப்படியோ, போராடி ஜெயிச்சிட்டா…நான் கேஸ் ஜெயிச்சுருந்தா எனக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ, அத விட இப்ப ரெட்டிப்பு சந்தோஷம், ஏன்னா…ஜெயிச்சது எங்க இனமாச்சே…”

“உங்க இனமா? என்னமா சொல்றீங்க?”

“எங்க இனம் ஸார்…பெண் இனம்!!! அவன் அந்த நேரத்துல எதுக்கு போனானோ, என்னவோ தெரியல, ஆனா இனிமேலாவது இந்த பொண்ணுக்கு உண்மையா இருந்தா சரி தான்…” உண்மையான அக்கறையுடன் லீலாவதி சொல்லவும், சோமநாதன் முகத்தில் லேசான சோகம் பரவியது. இத்தனை நாட்களாக முகிலுடன் பழகியதில், அவளிடம் அவருக்கு ஏதோ ஒரு பாசம் ஏற்பட்டிருந்தது. கடைசியில் ரஞ்சித் என்ன தான் முரண்டு பிடித்தாலும், முகிலின் முகத்துக்காகவும், அவளின் நிலையை நினைத்தும் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டார். அப்படிப்பட்ட பெண்ணிற்கு அவள் கணவன் துரோகம் செய்யக் கூடாது ஆண்டவனே என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டு தனது அறையை அடைந்தார்.

ஃபார்மாலிடீஸ் எல்லாம் முடித்து விட்டு, ரஞ்சித்தும், முகிலும் சோமநாதனின் அறைக்கு வந்தனர். அவர்களை எதிர் பார்த்துக் கொண்டிருந்த சோமநாதன், “வாங்க…உக்காருங்க…” என்று வரவேற்றார்.

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல ஸார்… ரொம்ப ரொம்ப நன்றி…” குரல் தழு தழுக்க ரஞ்சித் சொல்லவும்,

“நன்றி எல்லாம் உங்க வைஃபுக்கு சொல்லுங்க…”

கண்கள் பனிக்க ரஞ்சித் அவன் மனைவியை பார்த்தான். இந்த பிறவியில் மட்டுமல்ல, எத்தனை பிறவி எடுத்தாலும், நீயே எனக்கு மனைவியாக வர வேண்டும் என்று உணர்த்தியது அவன் பார்வை.

அங்கு நிலவிய அமைதியை கலைக்க விரும்பி, சோமநாதன், லேசாக தொண்டைய செறுமினார், ’என்ன’ என்பது போல் இருவரும் பார்க்க,

“ரஞ்சித்! இப்பவாவது சொல்லுங்க…அன்னிக்கு நைட்டு மாடிக்கு எதுக்கு போனீங்க?”

“ப்ளீஸ் ஸார், இப்பதான் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுச்சே, அத மட்டும் என்கிட்ட கேக்காதீங்க…ப்ளீஸ்…”

பொங்கி வந்த ஆத்திரத்தை அவர் கொட்டும் முன்பு, அவரது அலைபேசி அலறியது.

“எக்ஸ்யூஸ்மீ…” என்றபடி அலைபேசியோடு வெளியே சென்றார்.

சற்று நேரம் மெளனமாய் இருந்த முகில், “ரஞ்சி…என்கிட்ட மட்டுமாவது சொல்லுங்க ரஞ்சி…ப்ளீஸ்…”

“முகில்…என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கில்ல? அப்புறம் அது எதுக்கு? விடும்மா…”

“உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லன்னா, என் மேலையே எனக்கு நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்…இருந்தாலும், காரணம் இல்லாம நீங்க எதையும் மறைக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்…சொல்லுங்க ரஞ்சி…என் விஷயமா தான ஏதோ…”

ரஞ்சித் எதுவும் பேசாமல் அமைதி காக்கவும், முகில் நடுங்கும் குரலில், “அந்த மஹேஷ் விஷயம் தான?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா…” அவசர அவசரமாக ரஞ்சித் மறுத்த விதமே, முகிலுக்கு சந்தேகத்தை கிளப்ப,

“இல்லை…உங்க முகமே சொல்லுது…அவன் தான் ஏதோ பண்ணியிருக்கான்….சொல்லுங்க ரஞ்சி…எங்கிட்ட மட்டுமாவது சொல்லுங்க…ப்ளீஸ்…”

“ஆமா முகில்…அவனே தான்…நான் கைதாகறதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, அந்த மஹேஷ் எனக்கு ஃபோன் பண்ணி, இருபதாயிரம் பணம் வேணும், குடுக்கலன்னா, நீ அவனுக்கு எழுதின லெட்டர்ஸ், காலேஜ்ல நீங்க ரெண்டு பேரும் எடுத்துகிட்ட ஃபோட்டோஸ், அப்புறம்…அப்புறம் அந்த ஹாஸ்பிட்டல் ரிப்போர்ட் இதெல்லாத்தையும் எங்க அம்மா, அப்பாவுக்கும், உன் அம்மா அப்பாவுக்கும் அனுப்சிடுவேன்னு மிரட்டினான்…உங்கிட்ட சொன்னா, நீ வருத்தபடுவேன்னு தான் உங்கிட்ட சொல்லாமலே, நானும் பணத்த குடுத்து தொலச்சிடேன்…ஆனா, உன் விஷயம் எல்லாமே எனக்கு தெரியும்ங்கறது அவனுக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு மட்டும் தான் எனக்கு புரியல...”

“மொதல்ல அவன் எனக்கு தாங்க ஃபோன் பண்ணான்…உங்க கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிடுவேன்னு என்ன ப்ளாக் மெயில் பண்ணான்…”

ரஞ்சித் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள். “இத ஏன் முகில் நீ என்கிட்ட சொல்லல?”

“நீங்க கோவத்துல அவன ஏதாவது பண்ண போய் பிரச்சனை ஆய்டுமோன்னு பயந்துட்டு தான் நான் உங்ககிட்ட சொல்லல, நான் அவன்ட்ட, என் வீட்டுக்காரருக்கு எல்லா விஷயமும் ஏற்கனவே தெரிஞ்சு தான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டாரு, அவர் என்ன முழுசா நம்பறார்…அதனால, நீ என்னை மிரட்டி எந்த பிரியோஜனமும் இல்லைன்னு சொல்லி கட் பண்ணிட்டேன்…அதுக்கு அப்புறம் அவனும் ஃபோன் பண்ணாததால, நானும் பேசாம இருந்துட்டேன்…அப்போ நீங்க அவன பாக்கத்தான் மாடிக்கு போனீங்களா?

“ஆமா முகில்…ஒன்பாதாம் தேதி ஃபோன் பண்ணி, அவன் துபாய்க்கு போறதாகவும், ரெண்டு லட்சம் குடுத்தா அவன்ட்ட இருக்கற எல்லாத்தையும் குடுத்துட்டு, இனி நம்ம வாழ்கைல குறிக்கிட மாட்டேன்னும் சொன்னான்… நானும் பணத்த எடுத்து ரெடியா வச்சிருந்தேன்…பதினஞ்சாம் தேதி நைட்டு, தீடீர்ன்னு ஃபோன் பண்ணி, அன்னிக்கே பணம் வேணும்ன்னு சொல்லவும், நான் தான் அவன அந்த பின்னாடி சந்து வழியா உள்ள வந்து மாடி ரூமுக்கு வர சொன்னேன்…அவன் போனப்புறம் ஏதோ சத்தம் கேட்குதேன்னு கதைவ திறந்துட்டு போய் பாத்தப்ப தான், அந்த பொண்ணு, மதில் மேல ஏறி நின்னுட்டு இருந்தா…ஆனா, நான் போறதுக்குள்ள அவ…”

“ரஞ்சி! நீங்க அவன பாக்கத் தான் போனீங்கன்னு போலிஸ் கேக்கும் போதே சொல்லி இருந்தா, இத்தன நாள் இவ்ளோ கஷ்டம் வந்திருக்குமா?”

“எப்படி முகில் சொல்லுவேன்? என் பொன்டாட்டியோட பழைய காதலன் மிரட்டினான், அவனுக்கு பணம் குடுக்கறதுக்காக தான் போனேன்னு சொல்ல சொல்றியா? உங்க வீட்ல உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்காங்க? உங்க வீட்டை விடு, எங்க விட்ல? என் பொண்ணு, என் பொண்ணுன்னு எப்படி கொண்டாடுறாங்க? நான் மட்டும் அத சொல்லி இருந்தா உன் நிலைமை என்ன? அந்த மஹேஷே வந்து சாட்சி சொல்லியிருந்தாலும், இத்தன நாளா அவன் ஏன் வரலை, அவன் யாரு, என்ன, உங்களுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்னு போலீஸ்ல தோண்டி எடுத்துற மாட்டாங்க? அறியாத வயசுல, வழி தவறி போயிருந்தாலும், நீ பத்தர மாத்து தங்கம் தான்…என் பொண்டாட்டிய பத்தி யாரும் தப்பா பேசுறத என்னால பாத்துட்டு இருக்க முடியாது…அதுக்கு பதிலா, ஏழு வருஷமோ, பத்து வருஷமோ ஜெயில்ல இருக்கறது மேல்…”

“ரஞ்சி…” அதற்கு மேல் பேச முடியாமல் அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது.

ரஞ்சித் அதை துடைத்த வாறே, “இனிமே நீ அழவே கூடாது…அன்னிக்கு காலைல நான் நியூஸ் பேப்பர் படிச்சிட்டு இருந்தேன்ல? அப்ப தான் பாத்தேன், அந்த மஹேஷ் அன்னிக்கு ராத்திரி ஏதோ பெரிய ஆக்ஸிடண்ட்ல மாட்டிகிட்டான்…ஜெயில்ல என்னை பாக்க வந்திருந்தான்….செத்து பொழச்சிருக்கான்…என்னால தான் உங்களுக்கு இப்படி ஆச்சுன்னு ரொம்ப வருத்தமா பேசினான்…”

“நிஜமாவா?”

“ஆமா…அவனும் மனுஷன் தான? அவனுக்கு ஏதோ தேவை…நம்மள உபயோகிச்சுகிட்டான்…நம்ம போறாத நேரம், எனக்கு இப்படி ஆகவும், இதுக்கு நான் தான் காரணம்னு ரொம்ப வருத்தப் பட்டான்...அந்த பணத்தை கூட திருப்பி குடுத்தர்றேன்னு சொன்னான்னா பாத்துக்கோயேன்? நான் தான், அதை வச்சு நீ துபாய் போற வேலையை பாரு, இனிமே எங்க வாழ்க்கையில குறுக்கிடாதன்னு புத்தி சொல்லி அனுப்பிட்டேன்…அவனும் இன்னேரம் துபாய்ல இருப்பான்னு தான் நினைக்குறேன்…அதனால இனி வருத்தப்படறதுக்கு எதுவுமே இல்லை முகில்….எல்லாத்தையும் கெட்ட கனவா நினச்சு மறந்துடுவோம்…இன்னும் கொஞ்ச நாள் உன்ன மாதிரி அழகா ஒரு குட்டி பாப்பா நம்ம வீட்டுக்கு வந்துடும்…”

விரக்தியுடன் சிரித்தாள் முகில், “ஹ்ம்ம்…ரெண்டு தடவை குழந்தை உண்டாகி… ஆனா ரெண்டு தடவையும் நிம்மதியே இல்லை… எல்லாம் என் ராசி! அந்த குழந்தையை யாருக்கும் தெரியாம கருவிலையே கொன்ன பாவம் தான் இப்படி வாட்டுது…ஆனா ஒரு பாவமும் அறியாத உங்கள போய்…” அதற்கு மேல் பேச முடியாமல் ’ஓ’ வென்று அழுதாள்.

“முகில்! இந்த ராசி, பாவம், பரிகாரம்னு பேசுறத மொதல்ல நிறுத்து! நல்ல மனசிருந்தா எல்லாமே நல்லதா தான் நடக்கும்.”

எதுவுமே பேசாமல் அவள் சிறுது நேரம் அமைதி காக்கவும், “என்னம்மா?’ என்று மெதுவாக அவள் தலை வருடினான். அப்படியே அவனை பார்த்து புன்னகைத்தவாறு கண்களை துடைத்துக் கொண்டவள், அவன் தோளில் இருந்து தலையை எடுக்க மனமின்றி அப்படியே கண்களை மூடினாள். இப்படி அவன் மார்பில் தலை சாய்ந்து கொண்டு, இன்னும் ஆயிரம் ஆயிரம் கதைகள் பேச அவர்களுக்கு எவ்வளவோ காலம் இன்னும் மீதம் இருக்கிறதே!

இவர்களையே பார்த்துக் கொண்டிருந்ததில், வெளியே அலைபேசியோடு சென்ற சோமநாதனை மறந்து விட்டால் எப்படி? அவர்கள் பேசியது அனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டு, கண்கள் பனித்து, வாயில் அருகிலேயே தான் நின்று கொண்டிருந்தார் அவர்!

அப்போது அந்த வழியாக சென்ற லீலாவதி, “என்ன ஸார்? இங்க நின்னுட்டு இருக்கீங்க? லஞ்சுக்கு போகலையா?” என்று கேட்கவும்,

கண்களில் பெருமை மிளிர சோமநாதன், “ஜெயித்தது உங்க இனம் மட்டும் இல்ல மேடம், எங்க இனமும் தான்!!!” என்றார்.

*********[முற்றும்]********

57 comments:

Divyapriya said...

இவ்வளவு பெரிய கதையை தொடர்ந்து படிச்சிட்டு வந்த எல்லோருக்கும் ரொம்ப நன்றி! போன பகுதிகள் மாதிரி இல்லாம, இந்த பகுதியில attendance is mandatory :) அதனால உங்க பின்னூட்டங்களை மறக்காம இந்த பகுதியில எழுதிட்டு போங்க...

சங்கர் said...

கதைய கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் குறையாம நகர்த்திட்டு போன விதம் மிக அருமை!!
வாழ்த்துகள் திவ்யபிரியா!!

Nimal said...

முதல்ல attendance போட்டாச்சு... :)

Nimal said...

இனி...

கடைசி பாகத்திலையும் கடைசிவரையும் புது புது திருப்பம் வச்சிருக்கிறீங்க.

நீங்க எழுதின அத்தன கதைகளிலேயே இது ஒரு வித்தியாசமான கதை, சிறப்பானதும் கூட...!

புத்தகமா போடுற ஐடியா இருக்கா.. :)
may be an e-book...!

மேலும் பல வித்தியாசமான கதைகள் படைக்க வாழ்த்துகள்...

Nimal said...

//முதல்ல attendance போட்டாச்சு... :)//

ஓ... நான் 2வதா..!

gils said...

soooooooooooooooooooooooooopppppppppppeeeeeeeeerrrrrrrrrrrrrrrrrrrrrrr :)) kalakitinga divs....

சகா said...

very nice...

Venkatesh said...

திவ்யா,
மிகவும் அழகாக எழுதி இருக்கீங்க. உங்களுக்கு உள்ள இப்படி ஒரு நல்ல கதை ஆசிரியர் இருப்பது எங்களுக்கு தெரியாம போச்சே!!!

நான் பல பதிவுகள் படிக்க ஆரம்பிச்சதுக்கு உங்க ஷோபா அப்பார்ட்மென்ட்ஸ் தான் தொடக்கம்.

இது மாதிரி நல்ல கதைகள் பல எழுத எனது வாழ்த்துக்கள்.

- அன்பு நண்பன் வெங்கடேஷ்.

sri said...

Romba nalla erundhuchu!! romba thiruppama azhaga mudichiteenga, ellam vidhatheylum sariya mudivu dhaan. Attagasam! Book avey podalam.

sri said...

flowers , gifts and many more things to u

23-C said...

nice narration...athuvum court scene, investigation nu techinical a piniteenga!

next kathaiku waiting!

GHOST said...

கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் குறையாம நகர்த்திட்டு போன விதம் மிக அருமை
வாழ்த்துகள்

GHOST said...

அடுத்த கதை எப்போது

Karthik said...

கலக்கல்ஸ்!!! :))))

Karthik said...

பரத்துக்கும் திவ்யாவுக்கும் லவ்ஸ்னு ஒரு சீக்வல் போடுங்களேன். :))))

Mohan R said...

The best part ever... What a couple... GR8 Divya...
அறியாத வயசுல, வழி தவறி போயிருந்தாலும், நீ பத்தர மாத்து தங்கம் தான்…என் பொண்டாட்டிய பத்தி யாரும் தப்பா பேசுறத என்னால பாத்துட்டு இருக்க முடியாது…அதுக்கு பதிலா, ஏழு வருஷமோ, பத்து வருஷமோ ஜெயில்ல இருக்கறது மேல்…

Ranjith character is awesome...

கதிரவன் said...

அருமையான கதை சொல்லும் நடை, திவ்யா !!

இனிமே, எங்கயாவது மின்பூட்டை பாத்தா,இந்த கதைதான் எனக்கு ஞாபகத்துக்கு வரும்

ஆனாலும், ரஞ்சித்தை ரொம்பஅஅ.. நல்லவனா காட்டுவீங்கன்னு எதிர்பார்க்கல. ராஜேஷ்குமார் கதைகள் மாதிரி கடைசிப்பக்கத்துல சில கிளைக்கதைகள் வச்சிருக்கீங்க :-)

வாழ்த்துக்கள் !!
..அடுத்த கதை எப்போ ?

Raghav said...

கண்களில் கண்ணீருடன் முடித்தேன்..

இராகவ்.

G3 said...

Pinniteenga Divya !! Hats off to U !!!!!

Ethana twistu !!!! Including last episode.. Irundhaalum oru edathulayum viruviruppu korayaama.. ethirpaarpa ethittae poi adhae top gearlayae conclude panni irukkeenga :D

//கண்களில் பெருமை மிளிர சோமநாதன், “ஜெயித்தது உங்க இனம் மட்டும் இல்ல மேடம், எங்க இனமும் தான்!!!” என்றார்.//

Finishing touch rommmmmmmmmmmmmba pudichirukku :))))

Ivlo superaana kadhai padikkaradha irundha suspense tensionla embuttu BP erinaalum ok dhaan :)) adutha thodara aarambinga ;) padikka naan ready :D

சிம்பா said...

இப்படியே போய்க்கிருந்தா என்ன அர்த்தம். இதுக்கு ஒரு முடிவே இல்லையா.. முழுசா படிக்க காத்திருந்தா வருஷம் ஆகிடுமாட்ட தெரியுது...

ப்ரியாஆஆஆஅ... ;)

சிம்பா said...

வலைபூ பக்கம் வந்த உடனே கமெண்ட் போட்டுட்டேன். அட முற்றும் போட்டசுனு அதுக்கு அப்புறமா தன பாத்தேன்.

இனி முதல்ல இருந்து படிக்கலாம் :)

Rajalakshmi Pakkirisamy said...

Super mam :)

anbucr said...

Xcellent ..... Verenna Solla

பூங்கோதை said...

நீங்க இந்த கதை ஆரம்பிச்சதில இருந்து, office வந்தவுடனே, mail check பண்றதுக்கு முன்னாடி, பார்க்கிறது,உங்க update இருக்கான்னுதான். ரொம்பவே அருமையா கொண்டு போய், ரொம்ப ரொம்ப அருமையா முடிச்சு, கலக்கிட்டீங்க போங்க. அப்படியே ஒரு ரமணி சந்திரனும், ராஜேஷ்குமாரும் சேர்ந்து வந்து எழுதினா மாதிரி இருந்துச்சு. Hats off!! and Thanks for a wonderful experience.

//பரத்துக்கும் திவ்யாவுக்கும் லவ்ஸ்னு ஒரு சீக்வல் போடுங்களேன். :))))
//
ஆமாங்க... போடுங்க, நாங்க பரத் யாருன்னுலாம் கேக்க மாட்டோம். :-)

Unknown said...

super super super

Unknown said...

oru yedathulaiyum suspense kuraiyalai. beautiful narration and very lovely ending

Jawahar R said...

DP.. kalakkitta... super a irundhuchu... eppa da suspense break aagum nu irundhuchu... ippo dhaan konjam relax a irukku...

continue ur good work... superb!!

badri said...

Excelllllllllllleeeeeeeeeeeeeentttttttt stuff...i m really proud of you...:-)

sooperb story writing...i donno what else to say :-)

--Badri

Anonymous said...

the story was really good.the twist was nice.i have read all u r stories.good job.i used to visit daily to u r blog to read u r contribution.

pari@parimalapriya said...

Superb Divya... gr8 work... a different intelligent story.
எழுத்து நடை மிக அருமை! வாழ்த்துக்கள்...

Prabhu said...

இன்னைக்கு எதேச்சயா எடுத்தவுடன் கடைசிக்கு வந்து பார்த்ததில் முற்றும்னு போட்டிருந்தத பாத்ததும் ஆச்சரியம்தான். கதை நல்லா இருந்தது. இந்த மாதிரி கதைல பிரச்சனையே முடிவு எப்பன்னு இருக்கும். முடிஞ்சா முடிஞ்சிடுச்சேன்னு இருக்கும்.

Ramya Ramani said...

Nice Story Me enjoyed reading it :) Parts serthu serthu padichittene :))

Kadhambari Swaminathan said...

பின்னிட்டீங்க! கதை முடிவு ரொம்ப அருமையா இருந்துது..Superb characterisation, excellent rendition, good handling of the time factor, nice plot overall.. Hats off.. சீக்கிரம் புத்தகமாப் போடுங்க!

//பரத்துக்கும் திவ்யாவுக்கும் லவ்ஸ்னு ஒரு சீக்வல் போடுங்களேன். :))))//

@karthik : எப்படிப்பா உன்னால மட்டும் இப்படி யோசிக்க முடியுது?! ஆனா ஐடியா நல்லாத்தான் இருக்கு..

sindhusubash said...

சூப்பர்ப்! ஒரு வாரமா சிஸ்டம் பிரச்சனையா இருந்ததால எதுவுமே படிக்கமுடியலை..கதையை முடிச்சிருப்பீங்களேனு கவலையா இருந்தது..ஆனா கொஞ்சம் லக் இருக்கதான் செய்யுது.

ரொம்பவே சஸ்பென்ஸா கொண்டு போனீங்க..இனியும் நிறைய எதிர்பார்ப்புகளுடன்....

Unknown said...

Good work... Nice write up... all the best for your future works..

Divyapriya said...


@சங்கர்

நன்றிங்க :)

------------------------
@நிமல்

கண்டிப்பா E-Book ஆ போட்டுடலாம்...உங்க பாராட்டுக்கு நன்றி

------------------------
@gils

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி :)

------------------------
@சகா

நன்றி சகா...

-------------------------
@venkatesh

Thanks a lot venkatesh...continue reading...

Divyapriya said...


@Srivats

thanks for your flowers and gifts srivats ;)

-----------------------
@23-C

Thanks 23C...அடுத்த கதை உடனே போட்டுட வேண்டியது தான்...

------------------------
@சஹானா

நன்றி சஹானா...

------------------------
@karthik

idea நல்லா தான்ப்பா இருக்கு...பரத் and திவ்யாவுக்கு இந்த கதையிலையே ஒரு கிளைக் கதை வைக்கலாம்னு தான் நினைச்சேன்...அப்படி செஞ்சிருந்தா வானவில் வீதி கார்த்திக் கமெண்ட் எப்படி இருந்திருக்கும்னு பாப்போமா?

//கதை நல்லா இருக்கு...ஆனா கடைசியில கொஞ்சம் சினிமாட்டிக்கா போய்டுச்சு// :))))
------------------------
@இவன்

மிக்க நன்றி இவன்...

------------------------
@கதிரவன்

நன்றி கதிரவன்...அடுத்த கதை சீக்கிரத்திலேயே....

-------------------------
@ராகவ்

கதையில இவ்வளவு தூரம் மூழ்கி போய் படிச்சதுக்கு ரொம்ப நன்றி ராகவ்....

-------------------------
G3

e-mail லையும் orkut லையும், comment லையும் விடாம பாராட்டினதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி G3

Divyapriya said...


@சிம்பா

மெதுவா படிங்க :)

---------------------------
@Rajalakshmi Pakkirisamy

thanks a lot rajalakshmi....
---------------------------
@anbucr

thx anbucr...
---------------------------
@பூங்கோதை

mail க்கு முன்னாடி கதை update பாத்தீங்களா? :)) thanks a lot பூங்கோதை...

---------------------------
@C
Thanks thanks thanks :)
-------------------------
@nithya

நன்றிங்க்கா :)) இனிமே எல்லா கதையையும் ஒழுங்கா படி :)

-------------------------
@Jawahar R

இப்ப தான் relax ஆச்சா? :)) funny...
Thanks a lot jawahar...

-------------------------
@badri

i m also so proud of u :) u r the only one whos reading all my stories right from my first story :))


Divyapriya said...


@Anonymous

thanks a lot anony...keep reading

---------------
@pari

Thanks a lot pari...keep reading...

---------------

@pappu

நன்றி pappu...இப்பயும் பிரச்சனையா? :) கவலையை விடுங்க...அடுத்த கதையை சீக்கிரமா தொடங்கிடுவோம் :)
---------------
@Ramya Ramani

Thanks a lot madam...busy schedule லையும் கதையை விடாம படிச்சிட்டீங்க...i m so happy :)

---------------
@Kadhambari Swaminathan

Thanks so much Kadhambari....

---------------
@sindhusubash

Thanks sindhusubash...கண்டிப்பா எதிர்பார்ப்புகள் படி அடுத்த கதைகளும் இருக்கும் :)
---------------
@Naanthaanga

Thanks a lot...keep reading

Sheela Ramanujam said...

hey Divya, very nice story and way of narration captured the attention till end :-) do you have idea to write books?

ஜியா said...

Ulti DP... Intha last few weeks, I read only your blog... since I don't want to miss this wonderful story.. sema kalakkals... athuvum 13 parts laam ennaala sathiyama ezutha mudiyaathu.. appadiye ezuthunaalum imbuttu twist suspenselaam vachi chancye illa.. Keep rocking...

spelling mistakes mattum konjam sari pannidunga.. I know its all because of hurry... ippa onnum theriyaathu.. appuram konja naalula miga periya ezuthalar aagiduveenga.. appo unga pazaiya kathaigala bookaa podalaamnu ethavathu university la eduthu paakum pothu spelling mistakes konjam uruthum... :))

Karthik said...

//அப்படி செஞ்சிருந்தா வானவில் வீதி கார்த்திக் கமெண்ட் எப்படி இருந்திருக்கும்னு பாப்போமா?

//கதை நல்லா இருக்கு...ஆனா கடைசியில கொஞ்சம் சினிமாட்டிக்கா போய்டுச்சு// :))))//

ஆவ்வ்.. என்னமா புரிஞ்சு வெச்சிருக்காங்கபா.. அந்த எக்ஸ்ட்ரா டாட்ஸ் கூட.. :)))

சினிமாட்டிக்கா இருந்தாக்கூட நாங்க ரசிப்போம்.. அடுத்த கதைல பாட்டெல்லாம் (சரி, கவிதை) இருக்கில்ல? :)

Divyapriya said...


@Sheela
Thanks a lot sheela....I m searching for publishers, u r interested? ;)

---------------------------

@ஜியா

ஜி! வர வர கமெண்ட்ல அநியாயத்துக்கு புல்லரிக்க வைக்கறீங்க :)) நன்றி ஹே...

Divyapriya said...


@karthik

//ஆவ்வ்.. என்னமா புரிஞ்சு வெச்சிருக்காங்கபா.. அந்த எக்ஸ்ட்ரா டாட்ஸ் கூட.. :)))//

ஹீ ஹீ :))

அடுத்த கதையில பாட்டெல்லாம் (அதான்ப்பா கவிஜ) உண்டு...அடுத்த கதையை எப்ப போடலாம்னு சொல்லுங்க...போட்டுடலாம் :)

Karthik Lollu said...

apdiye anda shoba poto vum pothu irukkalam enna maadhiri youthgaga :D

Karthik Lollu said...

eppa puthagam poda poreenga?? Naa vena publisher aaguren.. Nalla kaasu paakalam!!

mvalarpirai said...

நல்ல கதை ! இரண்டு இனத்தையும் ஜெயிக்க வைத்த உங்க புத்திசாலித்தனத்துக்கு ஒரு தலைவணக்கம் ! தொடர்ந்து எழுதுங்க தி.பி !

Anonymous said...

sikaram next write podunga,daily visiting u r blog.

Unknown said...

Very nice. Enjoyed every episode...

Malathi said...

hey divya.. nice story.. kept the suspense till the end!! made me doubt atleast 4 or 5 characters in the story!! well done!!! oru chinna varutham thaan.. climax was a little cinematic!! doubt if it would happen in reality... anyways good effort and way to go ma'm!!

Santhappanசாந்தப்பன் said...

நல்ல கதை. ராஜேஷ்குமார் நாவல் மாதிரி, இரண்டு டிராக்குல கதை சொல்லி, கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் குறையாமல் நகர்த்திருக்கிறீர்கள். முடிவு கொஞ்சம் ரமணி சந்திரனை ஞாபகப் படுத்தினாலும், காதல், சென்டிமென்ட், திரில் என்று ஒரு கே.ஸ். ரவிகுமார் படம் போல் இருந்தது.
வாழ்த்துக்கள்!

Thiyagarajan viswalingam said...

enakku enna sollurathunnu theriyalla. irunthalum solluren romba romba nalla irunthuchuchu unga story divya .Nengal idupol neraya story eluthi ennai madhiri niraya rasigargalai santhosa paduthanum . plese write more stories like this

Endrum Anbudan

Thiyagarajan viswalingam

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

dhivya,

Rajesh kumar novel mathri konjam kuda thrill koraiamma last varaikum super:) kalakaringa... really nice couple..
Muhil than great nu nenaichitu irundappo at last ranjith is the perfect match nu purinjadhu..

Anonymous said...

Coach is a superior American designer of luxury goodies, clear from handbags coach handbags to jewelry and sunglasses to shoes. The coach gives one of the most popular and brilliant designer handbags and accessories on the market name. They are distributed through Coach 400 stores and more than 1200 joint U.S. retail. As a result of strong marketplace competition, [url=http://www.discountoncoach.com]coach online store[/url] website, as well as retail merchants are promoting and offering Coach handbags outlet coupons for reduced prices. These coupons are emailed to customers or it can be exploited by visiting the discount coupons offered by the company websites. You can easily find websites offering a Coach Outlet Coupon through the popular search engines. What you need to do is simply type the words "Coach Discounted Coupons" and you will get a list of sites from where you can avail promotional or discounted coupons for the purpose of buying purses and handbags of you desired brand. Some other search terms which can help you to find out a Coach Outlet Coupon include "coach shoes discount", "coach coupon codes", "coach promo codes", "coach discount handbags", "coach promotional codes", "coach purses discount", "coach bags discount", and "coach bag coupons".

To shop for fashionable [url=http://www.discountoncoach.com/coach/leather-bags]Coach Leather Bags[/url], visit [url=http://www.discountoncoach.com/coach/handbags]Coach Handbags[/url] Online Store. We give you best in the world and that too at very high discounted rate.

Anonymous said...

hi

i am trying to insert a [url=http://www.getapoll.com/]pol[/url]l intro this forum and i can't add the code from the page to this forum.
Is there a tutorial so i can add a poll?
i wan't to make a financial poll to know which services are better to apply payday loans or [url=http://www.usainstantpayday.com/]bad credit loans[/url]

thanks
Addilmorala

VIJI said...

Romba nalla irunthuchu pa:-)