Thursday, August 28, 2008

ச ரி க ம ப த நி சொல்லி தாரேன்…

நானும் பாட்டுக் கத்துக்கறேன் பேர்வழின்னு, ஒரு மூணு மாசம் ஒரு பாட்டு பாட்டிய டெரர் பண்ண கதைய கேளுங்க…


அலங்காரம் வரைக்கு பாடியும் கூட, இந்த பிட்சு (pitch) பிரச்சனை மட்டும் சரி ஆகல…பிட்ச ஏத்தி, இறக்கறது எப்படின்னு ரொம்ப சரியா புரிஞ்சு வச்சுகிட்ட என்னோட அபாரமான இசை ஞானம் தான் அதுக்கு காரணம்.


பிட்ச்ச சரி பண்றதுக்காக, எங்க பாட்டு பாட்டி (பா.பா) ஒரு நாளு, மறுபடியும் பேசிக்ஸ்ல இருந்து ஆரம்பிச்சாங்க…


பா. பா : ச…ரி…க…ம…


நான்: ச…ரி…க…ம…


பா. பா: இன்னும் கீழ பாடும்மா…


சரின்னு நானும் கொஞ்சம் ட்ரை பண்ணி,


நான்: ச…ரி…


பா. பா: இல்ல, இல்ல, இன்னும் கொஞ்சம் கீழ...


இன்னும் கொஞ்சம் ட்ரை பண்றேன்...ஹூம், ஹூ்ம், மறுபடியும் அதே...


பா.பா: சரி, ஸ்ருதிய ஏத்தி வெக்கறேன், அதோட சேந்து பாடு, இப்ப ஆரம்பிக்கலாம், ச…


நான்: ச…


பா.பா: இல்லமா, இன்னும் கொஞ்சம் கீழ...


நான்: மாமி! இதுக்கு மேல குனிய முடியாது, இன்னும் கீழன்னா, கீழ படுத்துட்டு தான் பாடனும்…


பா.பா: ஹாஆஆ...


அடுத்த க்ளாசுக்கு போனா "பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, இன்னும் ஒரு மாசத்துக்கு க்ளாஸ் இல்ல" ன்னு அவங்க வீட்ல சொல்லிட்டாங்க.


ரெண்டு மாசத்துக்கு அப்பால...


(ஃபோனில்) பா.பா: என்னமா, திவ்யா? க்ளாஸ் மறுபடியும் ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆறது, உன்ன காணமே...


நான்: அது வந்து…மாமி…எங்க வீட்டை வேற இடத்துக்கு மாத்திடோம். க்ளாசுக்கு வர முடியாதுன்னு நினைக்கறேன்...


ஏதோ என்னால அந்த பாட்டி உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துர கூடாதேன்னு ஒரு நல்லெண்ணம் தான் :-D


P.S: நிஜமாவே, குனிஞ்சு, குனிஞ்சு உக்காந்து பாடினா, பிட்சு கொஞ்சம் கம்மியான மாதிரி தான் இருந்துச்சு :-((

Friday, August 22, 2008

ஹயய்யோ ஹயய்யோ கடிச்சிருச்சு!

"ஹயய்யோ, ஹயய்யோ!!! "

"யாராவது ஓடி வாங்க, ஓடி வாங்க…ஹெல்ப்….ஹெல்ப்…அது என்ன தாக்க வருது!!!"

சைக்கிள முடிஞ்ச வரைக்கும் தம் கட்டி வேகமா ஓட்றேன், ஹூம், ஹூம…இந்த நாயும் அதோட வேகத்த இன்க்ரீஸ் பண்ணுதே….கடவுளே! இப்ப என்ன பண்றது?

வேக வேகமா போய் எதோ ஒரு தெருவுக்குள்ள நுழையறேன்…என்ன இது, இப்டி ஒரு தெருவ நம்ம ஏரியாவுல பாத்ததே இல்லயே??? ஓ மை காட்!!! இது என்ன, இந்த தெரு ஒரு டெட் எண்டா??? ஆண்டவா!!!

நாய் வேற வேகமா ஓடி வருது…எனக்கு தான் இனி டெட் எண்டு…பேசாம சைக்கிள கீழ போட்டுட்டு, அந்த சுவர ஏறி குதிச்சு ஓடிட வேண்டியது தான், வேற வழியே இல்ல…

சரி, மொதல்ல நாய் எவ்ளோ தூரம் வந்துருக்குன்னு பாப்போம்…

ஆஆஆ…அம்மாஆஆஆஅ…

பின்னாடி வந்துட்டு இருந்த நாய பாத்தேன், ஆனா முன்னாடி இருந்த கல்ல பாக்கலையே…(இத தான் நாயை கண்டால், கல்லை கானோம்ன்னு சொல்லுவாங்களோ?!?!?)

சைக்கிளோட சேந்து நானும் குப்புறடிச்சு தொபுக்கடீர்ன்னு விழுந்துடேன்.

அப்படியும் கூட, இரக்க குணமே இல்லாத அந்த நாய், பக்கத்துல வருது…பக்கதுல வந்துடுச்சு…கடிக்க போகுது…
என்னோட பலம் எல்லாத்தயும் சேத்து, ஓங்கி அது முகத்துல விட்டேன் ஒரு குத்து!!!

அம்மாஆஆஆஆஆ!!!!

அட, யாருடா இது? நாய்க்கு லேடி வாய்ஸ்ல டப்பிங் குடுக்கறது??? அது மட்டுமில்லாம அம்மான்னு வேற கத்துது! துரத்தினது, நாயா இல்ல மாடா?

இதென்ன, திடீர்ன்னு என் பக்கத்துல அம்மா, அப்பா, அக்கா எல்லாரும் நிக்குறாங்க?!?!?!

கும்பர்கர்ணன் பரம்பரைல வந்த என்னை, அரும்பாடு பட்டு, குறைஞ்சது அரை மணி நேரமாவது போராடி, எக்ஸாம் அன்னிக்கு எழுப்பி விடுற, என்னோட குல தெய்வம், என் உடன் பிறப்பு,எனதருமை அக்கா, ஏன் இப்படி கப்பல் கவுந்த மாதிரி, கன்னத்துல கைய வச்சுகிட்டு நின்னுட்டு இருக்கா?!?!?!

ஹாஆஆஆ!!! இதென்ன, அவ வாய்குள்ள, ஒரு ரத்தப் பல்லு!!!

“ஹயய்யோ, நான் ஒரு நாய் கடிக்குற மாதிரி கனவு கண்டேனா…அதான், உன்ன நாய்யின்னு நினச்சு…”

“பேசாத, இந்த ஜென்மத்துல, இனி உன்ன எழுப்பி விட்டேன்னா, என்னன்னு கேளு…”

“ஹயய்யோ, ஹயய்யோ!!!”

P.S: இது பல முறை வந்த ஒரு கனவு, இப்ப கூட வருது :-) ஆனா, என்ன ஒன்னு, இது வரைக்கும் நாய் என்ன கடிச்சதில்லை, நான் கடிக்க விட்டதில்லை ;-) ஒன்னா நாய் முகத்துல குத்திடுவேன், இல்லன்னா, ரெண்டு கையால அதோட வாய அப்படியே பிடிச்சுருவேன் :-D

Saturday, August 16, 2008

எத்தனை விதங்களில் மனிதர்கள்!

வாரா வாரம் ரெண்டு நாள் லீவ் வருது. இந்த ஆகஸ்ட் 15 சேத்து , ஒரே ஒரு நாள் தான அதிகம்? அதுக்கு போய், லாங் வீகெண்ட், லாங் வீகெண்ட்ன்னு குதியாட்டம் போட்டுக்கிட்டு, பைய்ய தூக்கின கும்பல்ல, நானும் அடக்கம்.

எட்டு மணிக்கு, கொட்ற மழைல, வீட்ட விட்டு கிளம்பி, ஒன்பது மணிக்கு ஆட்டோ கிடைச்சு, 10.30 மணி வரைக்கும் மினர்வா சர்க்கிள் பக்கத்துல வாழ்க்கைய வெறுத்து, பெங்களூரு ட்ராஃபிக்க சபிச்சு, மெஜஸ்டிக் போய் சேரும் போது மணி 10.45.

இப்படி சாகசம் புரிஞ்ச ஆட்டோ காரர பாராட்டி, 300 ரூபாயா குடுத்துட்டு (அழுதுட்டு?!?!?), தல தெறிக்க ஓடி வந்து பாத்தா, 10.45 மணிக்கு வர வேண்டிய பஸ், சரியா அதுகாலை மூணு மணிக்கெல்லாம் வந்துடுச்சு!

இப்படி கெம்ப்பே கௌடா பஸ் ஸ்டாப்ல போட்ட நைட் அவுட்ல, நான் பாத்தா ஆச்சர்யமான மனிதர்கள்/நிகழ்வுகள்..., அப்பறம் அழகான மனிதர்கள்/நிகழ்வுகள்...இதெல்லாம் ஒரு பதிவா இங்கே...

முதல்ல ஆச்சர்யமான மனிதர்கள்/நிகழ்வுகள்

1. சுத்தியும் ஒரே சேறு, சகதி...பஸ்களின் ஹார்ன் சத்தம், புகை, நெடி...நள்ளிரவு தாண்டியும் பஸ் வராத கடுப்பு...பேக கீழ கூட வெக்க முடியாம கைல தூக்கிட்டே நிக்க வேண்டிய நிலைமை...இதெல்லாம் போதாதுன்னு, நச, நசன்னு விடாம தூறிட்டு இருந்த மழை! இப்படி அத்தைனையும் ஒரே சமயத்தில தாக்குனா என்னங்க வரும்? சத்தியமா எரிச்சல் வரும்..ஆனா காதல் வருமா? சில பேத்துக்கு வந்துச்சே!!! ஒரே குடைக்கு கீழ, அங்க இருந்த எல்லோருக்கும் இலவச காட்சிகள காட்டிட்டு இருந்த சில ஜோடிகள்! ஆச்சர்யமான மனிதர்கள் லிஸ்ட்ல இவங்க தான் jodi no.1.

2. அதிகாலை ரெண்டு மணிக்கு கூட, ஊருக்கே கேக்குற மாதிரி பீட்டர் விட்டுகிட்டு இருந்த சில அல்ட்ரா மாடர்ன் பொண்ணுங்க!

3. சரியா 12 மணிக்கு, பிளாஸ்டிக் தேசிய கொடிய வித்துட்டு இருந்த ஒரு வியாபாரி! (யாருமே அத வாங்கலைங்கறதும், அதுக்கு அப்புறம் நடந்த டீ வியாபாரம் செம சூடு பிடிச்சதுங்கறதும் வேற விஷயம்!!!)

4. ஆனா இவங்களயெல்லாம் தூக்கி சாப்ட, ஆச்சர்யமான மனிதர்கள்னா அது இவங்க தான்... இந்த உலகத்துல நடக்குறது எனக்கு எதுவுமே தெரியாதுங்கர மாதிரி, பெட்ல ஹாயா படுத்துட்டு பேசுற எஃபெட்ல முகத்த வச்சுக்கிட்டு, ராத்ரி ஒன்னு, ரெண்டு மணிக்கு கூட வறு, வறுன்னு, வறுத்துட்டு இருந்த, நம்ம கடலை மன்னர்கள்/மன்னிகள்! இவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஜூரி அவார்ட்!

இவங்கள பாக்கும் போது எனக்கு ஒரு புதுக்குறள் தோனுச்சு...

போடுக கடலை போடுக போட்டபின்
பில்லுகட்டுக அதற்குத் தக.


5. Last, but not the least…அடிச்ச காத்துல இத்து போன ஒரு குடையோட, சார்ஜ் இல்லாம செத்து போன ஒரு ஃபோனோட, அங்கேயே நிக்கவும் முடியாம, பெங்களூர் விட்டுக்கு திரும்பி போகவும் நாதி இல்லாம, தனந்தனியா ரெண்டு மணிக்கு பஸ் ஸ்டாப்ல நின்னுகிட்டு இருந்தாலும், சுத்தி நடக்கறதெல்லாம் பாத்துகிட்டு, எதையெல்லாம் நாளைக்கு ப்ளாக்ல போடலாம்னு தீவிரமா யோசிச்சிட்டு இருந்த ஒரு விந்தையான பொண்ணு!!!



சரி, இப்ப அழகான சில மனிதர்கள், சில நிகழ்வுகள்...

1. ரயில் சிநேகிதம் மாதிரி, ஆங்காங்கே நிகழ்ந்த சில பஸ் ஸ்டாப் சிநேகிதங்கள், பல உரையாடல் and stuff, அழகு...

2. 12 மணிவரைக்கும் இந்தியாவுக்கு இன்னும் சுகந்திரமே கிடைக்கலைங்குற மாதிரி சோகமா முகத்தோட திரிஞ்ச ரெண்டு பரிச்சயமில்லாத பசங்க, அதுக்கப்புறம் 2.30 மணி வரைக்கும் அவங்களுக்குள்ள சிரிக்க சிரிக்க ஏதோ பேசிக்கிட்டது, அழகு...

3. தனியா நின்னுட்டு இருந்த எனக்கு பேச்சுதுணைக்கு கிடச்ச, சசி, சந்துரு என்ற கலகலப்பான கசின்ஸ், அழகு...

4. பஸ்ல என் பக்கத்து சீட்ல, ஒடஞ்ச விழற மாதிரி ஒல்லியா, அத விட மெல்லிய, அழகான குரலோட, என் நெருங்கிய தோழி போல என்னோட பேசிட்டு வந்த அன்பான பெண் சரண்யா, அழகு…

5. அந்த சசியுடன் வந்த சந்துரு ஆகட்டும், தத்தம் மனைவிகளுடன் வந்த கணவன்மார்கள் ஆகட்டும், இல்ல, சில நண்பர் கூட்டங்கள்ள இருந்த பசங்க ஆகட்டும், அவங்களோட வந்திருந்த பெண்கள, குடையோட பத்திரமா நிக்க வச்சுட்டு, 5, 6 முறை, சலிக்காம, பஸ் வந்துடுச்சா, வந்துடுச்சான்னு விசாரிச்சுட்டு வந்துட்டே இருந்தாங்க...
தன் சொந்தமோ, தோழியோ, தெரிந்த பெண்ணோ, தன்னோட வந்த ஒரு பெண்ணின் பாதுகாப்புக்கும், சௌகரியதிர்க்கும் தான் பொறுப்புங்கற responsibility and feeling, இந்த பசங்களுக்கு எப்போ, எப்டி வருது? ஆனாலும் இவங்களோட பொறுப்பு உணர்ச்சி தாங்க முடியலப்பா...சரி, என்ன தான் இருந்தாலும், உண்மைய ஒத்துக்கிட்டு தான ஆகணும்? இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு...

Monday, August 11, 2008

A for Apple

A
http://arusuvai.com/
ஹ்ம்ம்…படித்தாலே நாக்கு ஊரும் :)


B
http://www.blogger.com
http://www.britannica.com/

C
http://www.cooltoad.com/
பழைய பாட்டு download செய்ய…

http://profile.iiita.ac.in/pkmallick_03/
crack the interview site

http://www.craftsinindia.com/glass-paintings/
glass painting patters பார்க்க

D
http://www.dhingana.com/
தமிழ், ஹிந்தி, மற்றும் பாப் பாடல்கள் கேட்க…


http://www.dinamalar.com/piraidhalgal/piraithalmain.asp
வார இதழ்களை ஒரு முன்னோட்டம் பார்க்க…

E
http://erail.in/
இது irctc க்கு alternative…

http://en-us.www.mozilla.com/en-US/firefox/customize/
firefox ல் சேர்ந்திருக்கும் புதிய add-on களை பார்க்க…

F
http://coming-bak-to-life.blogspot.com/
freeze - one of the world's best photographer :)) my friend shiva's blog space…


G
http://www.google.com/transliterate/indic/Tamil

I
http://www.india-crafts.com/
இதுவும் painting patterns பார்க்க…

L
http://lyricwiki.org/

www.the-leaky-cauldron.org/
ஹரி பாட்டர் பற்றின புதிய செய்திகள், படங்கள் பார்க்க…


M
http://musicmazaa.com/
நிறைய, நிறைய தமிழ் பாடல்கள், ரீமிக்ஸ் பாடல்கள் கேட்க…

N
http://nilacharal.com/
கதை, கவிதைகள்


O
http://www.orkut.com/
நண்பர்களோடு வம்படிக்க மட்டும் :))


P
http://www.healthizen.com/

A personal health calculator...

http://prabhukrish.net/
நான் படித்த முதல் ப்ளாக்…நானும் எழுத ஆரம்பித்த்தற்க்கு பெரிய inspiration...

Q
http://www.quillpad.com/tamil/
"sorry this service is not available" என்று கூகில் கைவிடும் போது, உபயோகிக்க…

R
http://reader.google.com/

http://redbus.in/
பஸ் tickets பார்க்க…

W
http://www.warnerbros.com/
மீண்டும்... ஹரி பாட்டர் பற்றின புதிய செய்திகள், படங்கள் பார்க்க…

Y
http://www.youtube.com/

I tag 3 of my precious blog friends here

திவ்யாவின் மனசுக்குள் மத்தாப்பு...
Raghav
முகுந்தன்

Friday, August 8, 2008

கிருஷ்ணா கஃபே - 5

விக்னேஷ் பார்த்த காட்சியை முதலில் அவனால் நம்ப முடியவில்லை.அந்த இருட்டு அறையில் திடீரென்று ஒரு மெழுகுவர்த்தி எரிய, அந்த ஒளிச்சுடரில் அழகு தேவதையாய் நின்று கொண்டிருந்தாள் சரண்யா. பளபளத்த அவள் முகத்தின் ஒளி, அந்த மெழுகுவர்த்தியின் ஒளியோடு போட்டி போட்டுக் கொண்டிருந்தது.


"ஹேய்…சரண்!!! என்ன இது…?"


"ஹேப்பி பர்த்டே!!!" என்றபடி புன்னகைத்தாள் சரண்யா.


"ஹ்ம்ம்…என்ன இதுல்லாம்? இவ்ளோ பில்ட் அப்…ஒரு நிமிஷம் ஒன்னுமே புரியல…"


சரண்யா அழகாக சிரித்து, "பின்ன? கல்யாணத்தன்னிக்கு உங்க பர்த்டே வருது…இந்த மாதிரி யாருக்காவது அமையுமா? அதான், என்னால முடிஞ்ச ஒரு சின்ன சர்ப்ரைஸ்…சரி, சரி..கண்ண மூடுங்க…"


"கண்ண மூடவா??? என்ன பண்ண போற?" கண்களில் குறும்போடு விக்னேஷ் கேட்க,


"மொதல்ல கண்ண மூடுங்க, சொல்றேன்…"


விக்னேஷ் கண்களை மூடியது போல் பாவனை செய்து கொண்டு, அரை கண்களில் பார்க்கவும்,


"திருடா! கண்ண மூட சொன்னா…ஒரே ஒரு நிமிஷம்...ப்ளீஸ்…" கொஞ்சும் தொனியில் சரண்யா கேட்க,


"சரி…ஒகே…ஓகே" என்று கண்களை மூடினான் விக்னேஷ்.

அவன் கண்களை மூடியதும், சரண்யா ஒரு ப்ரேஸ்லட்டை அவன் கைகளுக்குள் நுழைத்தாள்.


கண்களை திறந்து விக்னேஷ் ஒன்றுமே சொல்லாமல் அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்க, சரண்யா, ’என்ன’ என்பது போல் அவனை பார்த்தாள்.


"அவ்ளோ தானா? வேற ஒன்னும் இல்லயா?"


"அவ்ளோதானான்னா? வேற என்ன வேணும், ஹான்…"


விக்னேஷ் முகத்தை ரொம்ப பாவமாக வைத்துக் கொண்டு, "ஐ லவ் யு சொல்ல மாட்டியா?"


சரண்யா சிரித்துக் கொண்டே, "எப்ப பாத்தாலும் இது தானா…"


"சரி பழைய கதையெல்லாம் விடு…கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இப்ப ரெண்டு மாசம் ஆச்சு…இந்த ரெண்டு மாசத்தில, ஒரே ஒரு தடவ… ஏன், ஒரு நிமிஷம் கூட உனக்கு என் மேல காதல் வரலியா?"


சரண்யாவிற்க்குள் திடீரென்று ஒரு Bhoom…ஏதோ ஒரு வார்த்தை தொண்டை வரை வந்து அடைத்துக் கொண்டது. அவன் கண்களை சந்திக்க முடியாமல் தலையை தாழ்த்திக் கொண்டாள். அவள் உதடுகளில் ஒரு நாணப் புன்னகை பூத்தது.


எதேச்சையான உன் ஸ்பரிசம்…

வித்யாசம் இல்லாத உன் பார்வை…

கபடமில்லாத உன் சிரிப்பு…

இப்படி உன் சாதாரண அசைவுகள் கூட

இப்போதெல்லாம், என்னுள் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்துதடா!!!

இதற்கு என்ன பெயர் வேண்டுமோ நீயே வைத்துக்கொள்…

அதை விடுத்து, என்னிடமே ஏன் கேட்கிறாய்?

என் முகத்தை பார்த்தால் தெரியவில்லையா? இல்லை,

என் கண்களின் மொழி தான் புரியவில்லையா?


திருமணம் முடிந்த பிறகு, அவன் பள்ளி கல்லூரி நாட்களில் நண்பர்களோடு சுற்றிய ஒவ்வொரு இடமாய் ரசித்து ரசித்து சரண்யாவிற்க்கு காட்டிக் கொண்டிருந்தான் விக்னேஷ்.


"போர் அடிக்குது விக்னேஷ்! இந்த பெருந்துறையவே எத்தன தடவ தான் பாக்கறது?"


"சரி…உனக்கு எங்க போகனும்ன்னு சொல்லு…போலாம்…"


"பெங்களூர் போலாம்…"


"பெங்களூரா? எப்டியும் லீவ் முடிஞ்சப்புறம் அங்க தான போக போறோம்? அதுக்குள்ள என்ன?"


"இல்ல…அங்க போய், முதல்ல ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும்…"


"எங்க???"


"கிருஷ்ணா கஃபே…"


"என்னது கிருஷ்ணா கஃபேயா? அடிப்பாவி! உனக்கு சமைக்க தெரியாதா? நான் கூட, இனிமே பொன்டாட்டி கையால சாப்டலாம்...கிருஷ்ணா கஃபே பக்கமே தல வச்சு படுக்க வேணாம்ல நினச்சேன்…"


"கிருஷ்ணா கஃபே போறோம்…ஆனா சாப்டறதுக்கு இல்ல…"


"அப்றம்"


"பேசறதுக்கு…"


"என்ன சொல்ற? "


"நாம முதல்ல அங்க போறோம்…நீங்க என்கிட்ட, ’இப்பவாவது என்ன லவ் பண்றேன்னு சொல்லு சரண்யா’ ன்னு கேக்கனும்".


"என்னது? என்ன பாத்தா கிண்டலா இருக்கா உனக்கு? மறுபடியும் அரேஞ்சுடு மேரேஜ் அது, இதுன்னு சொல்லி என்ன டென்ஷன் பண்ணாத!"


குறும்பு சிரிப்போடு சரண்யா, "இல்ல…ஹ்ம்ம் ஹ்ம்ம்…ஆமா.."


"என்ன இல்ல, ஆமா?"


"அரேஞ்சுடு மேரேஜ் இல்ல…இப்ப என்கிட்ட கேட்டீங்கன்னா ஆமான்னு சொல்லுவேன்…"


ஒன்றுமே புரியாமல், திரு திரு வென்று முழித்தான் விக்னேஷ்.
"அகல்யா கல்யாணத்தன்னிக்கு நைட்டு யோசிச்சு பாத்தப்ப தான் எனக்கே தெரிஞ்சுது…எனக்கே தெரியாம நானும் உங்கள விரும்பறேன்னு…அதான்,அன்னிக்கே எங்கம்மா கிட்ட நடந்ததெல்லாம் சொல்லிடேன்…ஏனோ, நானும் உங்கள லவ் பண்றேன்னு அம்மாகிட்ட சொல்றதுக்கு மட்டும் தைரியம் வர்ல...ஹாஸ்ப்பிட்டலுக்கு போலாம்ன்னு அம்மாவே சொல்லவும், சரி, அங்க வந்து உங்களையும், உங்க ஃபேமலியையும் அம்மா பாத்தப்புறம் சொல்லாம்ன்னு இருந்தேன்...அதுக்குள்ள ரெண்டு பேர் வீட்லையும் கல்யாணமே அரேஞ் பண்ணிட்டாங்க..."


விக்னேஷ் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்…"இவ்ளோ பெரிய ஆளா நீ? கல்யாணம் ஃபிக்ஸ் ஆனப்புறம் நான் எத்தன தடவ கேட்டேன்? சொன்னியா நீ?"


"அப்ப சொன்னா ஒரு சஸ்பென்ஸ் இருக்காதே…அதான் சொல்லல…"


"கல்யாணத்துக்கு முதல் நாள் கூட எப்டி கெஞ்சினேன்…அப்பயாச்சும் சொல்லி இருக்கலாம்ல..."


"அப்ப சொல்லலாம்ன்னு தான் நினச்சேன்…ஆனா…." அன்று தான் வெட்கப்பட்டு வழிந்ததை கூட புரிந்து கொள்ளாத மாங்க மடைய கணவனை நினைத்து தனக்கு தானே சிரித்துக் கொண்டாள் சரண்யா.


"என்ன சிரிப்பு?"


"இல்ல…என் மனசுல என்ன இருக்குன்னு நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரியனுமா…? இப்ப கூட பெங்களூர் போய் தான் சொல்லாம்ன்னு நினச்சேன்…ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு தடவ கூட ’ஐ லவ் யு’ சொல்லு, சொல்லுன்னு நீங்க கேக்கவே இல்லையா…அதான் பாவப்பட்டு இப்பயே சொல்லிடேன்..."


"எங்க சொன்ன? இன்னும் சொல்லவே இல்லயே…"


"என்னது?"


"அதான்…ஐ லவ் யு ன்னு"


"ஹ்ம்ம்…எங்க சொல்றது? நீங்க மட்டும் என்னவாம்? எத்தன தடவ கேட்டாலும், நான் அழகா இருக்கனால தான் லவ் பண்றேன்னு சொல்றீங்க…" செல்ல சினுங்களுடன் சரண்யா கேட்க,


"இப்பயும் அதே தான் சொல்றேன்…வேற என்ன சொல்றது?"


அவனை பொய் கோபத்துடன் முறைத்த சரண்யா, "இல்ல…நீங்க சும்மா சொல்றீங்க...எனக்கு தெரியும்…"


"இல்லம்மா…பொய் எல்லாம் இல்ல…உண்மைதான்" சற்றே தலையை சாய்த்து அவளை பார்த்து சிரித்தான்.


"என்ன?"


என்னை பார்த்ததும் மலரும் உன் விழிகள்!

கோபத்தில் அழகாய் சுருங்கும் உன் நெற்றி!

என் சீண்டல்களால் வெட்கிச் சிவக்கும் உன் கன்னம்!

நான் விரும்புவதை மட்டுமே பேசும் உன் உதடுகள்!

நான் பேசுவதை கேட்கத் துடிக்கும் உன் காது!

என்னை நேசிப்பதற்காகவே சுவாசிக்கும் உன் நாசி!

அன்பால் நிறைந்து பூத்திருக்கும் உன் இதயம்!

இப்படி உன்னில் என்னை தொலைத்த காரணங்கள் பல இருக்க…

உன் அழகில் நான் தொலைந்தேனா…இல்லை,

என் அன்பால் நீ அழகாய் மலர்ந்தாயா என்று தெரியாமல் நான் குழம்பித் தவிக்க…

’என் அழகை தான் காதலிக்கிறாயா?’ என்று நீ கேட்டால்,

’ஆம்’ என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது…

என் அன்புக் காதலியே…


சரண்யா வெட்கி புன்னகைத்தாள்!


***சுபம்***

Saturday, August 2, 2008

கிருஷ்ணா கஃபே - 4

விக்னேஷிற்கு அடிபட்டு ஒரு சில நொடிகளிலேயே சாலையில் கூட்டம் சேர்ந்து விட்டது. எல்லாருமாக சேர்ந்து விக்னேஷை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்தனர். 'காலில் சிறு எலும்பு முறிவு தான், மத்தபடி பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல' ன்னு டாக்டர் சொன்னப்புறம் தான் சரண்யாவுக்கு மூச்சே வந்தது.


இரவு மிகவும் தாமதமாகி விடவே, விக்னேஷை வார்டில் போய் பார்க்கும் முன்னரே கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டாள் சரண்யா.


அன்றிரவு சரண்யாவுக்கு தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தாள். விக்னேஷை சந்தித்தது, அவனோடு பேசியது, பழிகியது என்று எல்லாமே அவள் கண் முன்னாள் விரிந்தது.


பெங்களூருக்கு வந்த புதிதில் அவன் காட்டிய பாசம்... நண்பர்களோடு ஒளட்டிங் சென்ற போது தண்ணீருக்கும், தனிமைக்கும் பயந்த அவளுக்கு துணையிருந்து அவன் காட்டிய அக்கறை...சரியாக பார்க்காமல் அவள் ரோட்டை கடக்க முற்ப்பட்ட போது அவன் காட்டிய கோபம்...அப்போது அவள் கைய்யை பற்றி இழுத்து ரோட்டை கடக்க செய்து அவன் எடுத்துக் கொண்ட உரிமை...அம்மாவிடமே சென்று அவன் காதிலை சொன்ன துணிச்சல்...இப்படி பற்பல சம்பவங்கள் நினைவுக்கு வந்து அவளை வாட்டி எடுத்தது.


ஒரு முடிவுக்கு வந்தவளாய் அவள் அம்மாவிடம் சென்று நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் சொன்னாள்.


"அவன் சொன்னது இருக்கட்டும், நீ என்ன நினைக்குற?" என்று நேரடியாக கேட்டார் சரண்யாவின் அம்மா சாந்தி.


சரண்யாவுக்கு தொண்டையை அடைத்தது…அன்று முதன் முறையாக அம்மாவின் கண்களை பார்த்து பேச முடியவில்லை அவளால்.


"நான் ஒன்னும்…. அப்படி எல்லாம் நினக்க்கலாம்மா…. "என்று ஒரு வழியாக மென்று முழுங்கி சொன்னாள்.


"சரி, ஆனது ஆகட்டும்...என்ன தான் இருந்தாலும், நீ அவன ஹாஸ்பிட்டல்ல பாக்காமயே வந்தது தப்பு...நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் போய் ஒரு தடவ அவன பாத்துட்டு வந்துடுவோம்…"


மறுநாள் இருவரும் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போது...


"போய் பாத்துட்டு உடனே வந்துடலாம்...நீ வீணா மனச போட்டு குழப்பிகாத, ஒரு ஃபார்மாளிட்டிகாகவாது, நாம அவன போய் பாக்கணும்... " என்று ஒரு டீச்சருக்கே உரிய கண்டிப்புடன் சொன்னார் ஷாந்தி.


சரண்யாவையும், அவள் அம்மாவையும் பார்த்ததும், விக்னேஷிற்கும் அவன் அம்மாவிற்கும், சரண்யா அவள் அம்மாவிடம் அனைத்தையும் சொல்லி இருப்பாள் என்று தெளிவாக புரிந்தது.


விக்னேஷால் அவர்கள் முகம் பார்த்தே பேச முடியவில்லை. அதிலும் அவனுக்கு சாந்தியிடம் பேசவே தயக்கமாக இருந்தது, "ச்சே...கிளாஸ்ல நாம தான் மேமோட ஃபேவரைட் ஸ்டூடண்ட், இன்னிக்கு இப்டி பண்ணிட்டமே" என்று தன்னை தானே நொந்து கொண்டான்.


சரண்யாவிற்கும் விக்னேஷை பார்க்க பார்க்க என்னவோ செய்தது. வயிற்று வலி வந்தது போல தான் இருந்தது அவளுக்கு அப்போது...அவளுக்கு அந்த இடத்தை விட்டு எப்போது நகர்வோம் என்றிருந்தது.


நலம் விசாரிப்பு முடிந்தவுடன், "சரி...அப்ப நாங்க கிளம்பறோம்...பைய்யன நல்லா பாத்துக்கோங்க..." என்று கூறி விட்டு ஷாந்தி சரண்யாவுடன் கிளம்பி விட்டார்.


அவர்கள் இருவரும் லிஃப்ட்டுகாக காத்திருக்கும் போது, மாலதி அங்கு வேக வேகமாக வந்தார்.
"வந்து...விக்னேஷ் ஏதோ மனசில இருந்தத பட்டுன்னு சொல்லிட்டான்...நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுகாதீங்க...நான் தான் கொஞ்சம் அவசர பட்டுட்டேன்...அவனுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு…"


உடனே அவரை இடைமறித்து ஷாந்தி, "ச்சே...ச்சே...என்னங்க? நீங்க போய் மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு...? என்ன தான் இருந்தாலும் விக்னேஷ் என்னோட ஸ்டூடண்ட்...அவன பத்தி எனக்கு நல்லா தெரியும், நான் எதுவும் தப்பா எடுத்துக்கல...நீங்க இதையெல்லாம் மறந்துட்டு பைய்யன நல்லா பாத்துக்கோங்க...அப்ப...நாங்க வரோம்..."


ஒரு சில நாட்களுக்கு பிறகு…


பெங்களூர் கிருஷ்ணா கஃபே…


"ப்ளீஸ் சரண்…இப்பவாவது என்ன லவ் பண்றன்னு சொல்லுமா, ப்ளீஸ்…" சரண்யாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் விக்னேஷ்.


"எத்தன தடவ விக்னேஷ் சொல்றது? எங்க அப்பா, அம்மா சொன்னதால தான் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன். என்ன பொறுத்த வரைக்கும் இது ஃபுல் அன்ட் ஃபுல் அரேஞ்சுடு மேரேஜ் தான்…அப்புறம் எப்படி உடனே உங்கள லவ் பண்றேன்னு சொல்றது? அதுக்கெல்லாம் கொஞ்சம் நாள் ஆகும்… எனக்கா தோனனும்..."


விக்னேஷிற்க்கு சிறிது ஏமாற்றமே என்றாலும், எப்பொழுதும் போல அதை அவன் முகத்தில் காட்டிக்கொள்ளவே இல்லை.
கதையில் வருவது போல, இரண்டு பேர் வீட்டிலும் அவர்களாகவே முன் வந்து கல்யாணப் பேச்சை ஆரம்பித்து, கல்யாணத்தையும் நிச்சயம் செய்து விட, அவனுக்கு தலை கால் புரியவில்லை. ஆனால், ’சரண்யா இப்டி சொல்றாளே!’ என்று சொஞ்சம் வருத்தப்பட்டான். ’சரி கல்யாணத்துக்கு அப்புறம் சரி ஆய்டுவா...’ என்று தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.


அவன் யோசனையில் சென்று விட்டதை பார்த்த சரண்யா, "ஹலோ…எங்க இருக்கீங்க???"


"ஒன்னும் இல்ல…ச்சும்மா தான்...எதோ யோசிச்சிட்டு இருந்தேன்..."

"சரி…நீங்க ஏன் என்ன லவ் பண்ணீங்கன்னு இப்பவாவது உண்மைய சொல்லுங்க..."

"ஆரம்பிச்சிட்டியா…எத்தன தடவ கேட்டாலும், அதே தான்…"


"என்ன அதே தான், ஒழுங்கா இப்ப சொல்ல போறீங்களா இல்லயா?"


"வேற என்ன? நீ அழகா இருக்கனால தான்…"

"விளையாடாதீங்க விக்னேஷ்…"


"உண்மைய தான் சொல்றேன்…" முகத்தை ரொம்ப சீரியசாக வைத்துக் கொண்டு விக்னேஷ் சொல்லவும்,


"ச்சே…எத்தன தடவ கேட்டாலும் இதயே சொல்லுங்க…" கோபமாக அவனை பார்த்து முறைத்தாள் சரண்யா.


இப்படியாக அவர்கள் திருமண நாளும் வந்த்து…விடிந்தால் திருமணம். மண்டபத்தில் எல்லோரும் தூங்கிய பிறகு, விக்னேஷின் நன்பன் பாலாஜி அவனிடன் வந்து,


"டேய்! உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்…என்னோட கொஞ்சம் வாயேன்…"

"என்னடா விஷயம்? இங்கயே சொல்லு…"

"இல்ல டா…ரொம்ப முக்கியமான விஷயம்….சொந்தகாரங்க யாராவது கேட்டுட்டா…என்னோட வா, சொல்றேன்…"

காலியாய் இருந்த ஒரு ரூம் கதைவருகில் சென்று பாலாஜி ஒரு நிமிடம் தயங்கி நிற்கவும், விக்னேஷ் அந்த ரூம் கதைவை திறந்து கொண்டு நுழைந்தான்...

அப்போது, எதிர்பாரா விதமாக அந்த அறையின் கதவு படார் என்று சாத்திக் கொண்டது, இல்லை யாரோ கதவு பின்னால் இருந்து சாத்தியதை போல கூட இருந்த்து…

இன்னும் ஆறு மணி நேரத்தில் மணமகனாய் மணப்பந்தலில் அமர வேண்டிய விக்னேஷ்...கதவு, ஜன்னல் எல்லாம் அடைக்கப் பட்டு, சிறு துவாரம் கூட இல்லாமல் கும்மிருட்டாக இருந்த அந்த அறையில், ஒன்றுமே புரியாமல், அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.