Tuesday, September 29, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 6

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5
கண்ணாடியில் பிரதிபலித்த தன் பிம்பத்தை பார்த்தபடி, தனக்குத் தானே மெலிதான ஒரு பெருமிதப் புன்னகையை உதிர்த்துக் கொண்டாள் மது.

’ரஞ்சித் நேர்ல எப்படி இருப்பாரு? அட்லீஸ்ட் ஒரு தடவையாவது நேர்ல பாத்து பேசியிருக்கலாம்…ச்சே…இன்னிக்கு இத்தனை கூட்டத்துக்கு முன்னாடி எப்படி தான் பாக்கறது?’

“மதூ!!!” அம்மாவின் பலத்த குரல் ஈட்டியாய் அவள் காதுகளை மட்டுமல்லாது, அவளது அழகிய சிந்தனைகளையும் துழைக்க, சற்றே எரிச்சலுற்றவளாய், “என்னம்மா?” என்று பதிலுக்கு இரைந்தாள்.

“தூங்கி எழுந்து அரை மணி நேரம் ஆச்சு…இன்னும் கீழ வராம என்ன பண்ணிட்டு இருக்க? சீக்கரம்…அவங்க வர்றதுக்கு இன்னும் மூனு மணி நேரம் தான் இருக்கு!!!”

“இன்னும் மூனு மணி நேரம் இருக்கு!!!” என்றபடி சாவதானமாக படிகளில் இறங்கத் துவங்கினாள். கடிகாரம் அப்போது தான் ஆறு முப்பது என்று காட்டிக் கொண்டிருந்தது. காலை ஒன்பது, ஒன்பதரை மணிக்கெல்லாம் வந்துவிடுகிறோம் என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லியிருந்ததால் அன்று மது அம்மாவிற்கு காலை எழுந்ததுமே பரபரப்பு ஒற்றிக் கொண்டது.

சமையலறைக்குள் நுழைந்தவள் அப்போதே அம்மா குளித்து முடித்து, தலையில் ஈரத்துண்டுடன் இருந்ததைக் கண்டதும் சிரிக்கத் துவங்கினாள், “அம்மா!!! என்னை தான் பொண்ணு பாக்க வராங்க…என்னமோ உன்னைப் பாக்க வர மாதிரி, இப்படி முதல்ல கிளம்பி நின்னுட்டு இருக்க?”

“அடி வாங்கப் போற…போடி…போய் முதல்ல பல்ல விளக்கிட்டு வா!!!”

“ஏம்மா…என்னை பொண்ணு பாக்க வரதுக்கே நீ இத்தன பரபரப்பா இருக்கியே…அப்பா உன்னைப் பாக்க வந்தப்ப, தரையிலையே நின்னிருக்க மாட்ட போலயிருக்கு?” நமட்டுச் சிரிப்புடன் கேட்ட மகளை முறைத்தவாறு, அவள் முதுகை பிடித்து தள்ளிக் கொண்டு அந்த அறையை விட்டு அவளை வெளியேற்றி, “முதல்ல குளிச்சிட்டு வா…அப்புறமா உங்கப்பா வந்தப்ப, நான் என்ன பண்ணேன்னு சொல்றேன்…”

ஆனால் குளிக்கப் போகாமல், கைபேசியை எடுத்துக் கொண்டு நேரே தன் அறையை அடைந்தாள் மது.மறுபக்கம் வெகு நேரமாகியும் எந்த பதிலும் இல்லாமல் போகவே, சலித்தவாறே மீண்டும் ஒரு முறை முயற்சித்தாள்.

“பன்னி!!! காலங்காத்தால எதுக்கு ஃபோன் பண்ற?” தூக்கத்தில் குளறியபடி ஒலித்தது திவ்யாவின் குரல்.

“ஒரு முக்கியமான விஷயம் திவ்ஸ்…அதான்…”

“ம்ம்ம்…”

“கேக்கிறியா? ஹலோ…”

“ம்ம்…ம்ம்…சொல்லு…”

“அது வந்து…எனக்கு ஒரு சந்தேகம்…இப்ப பொண்ணு பாக்க வராங்களே, நான் என்ன பண்ணனும்னே எனக்குத் தெரியல…”

“அதான், உங்கம்மா, சித்தி, அப்புறம் ஏகப்பட்ட சொந்தகாரங்க எல்லாம் இருக்க போறாங்களே…அப்புறம் நீ என்னத்த பண்ணப் போற? அவங்க பண்றதையெல்லாம் நல்லா உக்காந்து தின்னு!”

“அடச்சே! எப்ப பாரும் திங்கறதுலையே இரு!!! நான் அத கேக்கல…ஹ்ம்ம்…நான் பழைய காலத்துல இருக்கற மாதிரி, ரொம்ப அடக்க ஒடக்கமா நடந்துக்கனுமா? இல்லை எப்பயும் போல கேஷுவலா இருந்தா போதுமா?”

“நீ எப்பயும் போல ப்ளேடு போட்டா அவங்க தாங்குவாங்கன்னு நினைக்கற? விட்டா போதும்னு ஓடிப் போயிட மாட்டாங்க?”

“அது என்னவோ உண்மை தான்…எதாவது சொல்லு திவ்யா…நீ நல்லா ஐடியா குடுப்பன்னு உங்கிட்ட கேட்டா….”

“சரி விளக்கமா சொல்றேன்…நல்லா கவனமா கேளு! அந்த காலத்து பொண்ணுக மாதிரி வெட்கப் படனும்னு நினைச்சாலும் கண்டிப்பா உன்னால முடியாது…ஆனா அதுக்காக, நீ எப்பயும் இருக்கற மாதிரி, கால் மேல கால போட்டுகிட்டு, கெக்க பெக்கென்னு சிரிச்சீன்னு வை…அப்புறம் உங்கம்மா உன்னை செறுப்பாலையே அடிப்பாங்க…”

“அதான உன்னை கேக்கறேன்?”

“நீ ரொம்ப தலையை குனிஞ்சுகிட்டும் இருக்க வேணாம், அதுக்காக யாரையும் நிமிந்தும் பாக்க வேணாம்…நடுல பாரு…”

“என்னது?”

“இந்த டேபிள், சேர் எதையாவது பாரு, அந்த ஆங்கிள்ல பாத்தா போதும்…”

“ஆமா…நீ சொல்ற மாதிரி பாத்தா அப்புறம் மாப்ளை வயிரு தான் தெரியும்”

“கரெக்ட்! உன்னை அந்த மாதிரி தான் பாக்க சொல்றேன்…அப்படியே மாப்ளைக்கு தொப்பை இருக்கான்னு நல்லா செக் பண்ணிக்கலாம்…”

“நீயும் உன் ஐடியாவும்…மூஞ்சிய எப்ப தான் பாக்கறது?”

“அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு…உங்க சித்தப்பு, பெரியப்பு இவங்கெல்லாம் சும்மா இருக்க மாட்டாங்க…எப்படியும் அவரை ரெண்டு, மூனு கேள்வி எல்லாம் கேப்பாங்க…அப்ப நீ என்ன பண்ற…யாராவது பேசும் போது மட்டும் அவங்க முகத்தையே பாக்கற…அப்படியே மாப்ளை பேசும் போதும் அதை கவனிக்கற மாதிரி அவரு முகத்தை பாத்துக்கோ…”

“ஹை! இது நல்ல ஐடியாவா இருக்கே…தாங்க்ஸ்மா…திவ்யான்னா திவ்யா தான்!!”

“ஹே…இரு இரு…இந்த ஐடியாவ கொஞ்சம் சிக்கல் இருக்கு…கொஞ்சம் பாத்து தான் அப்ளை பண்ணனும்”

“சிக்கலா? என்னதது?”

“நீ ரொம்ப நேரமா டேபிளையே உத்து பாத்துட்டு இருந்தேன்னு வை…அங்க வச்சிருக்கு ஸ்வீட்ட பாத்து நீ ஜொள்ளு விட்டுட்டு இருக்கன்னு நினைச்சுக்குவாங்க….அதனால, பாத்து நடந்துக்கோ…”

“அடச்சே…உனக்கு இத விட்டா வேற நினைப்பே கிடையாது…சரி, எங்கம்மா வந்து கழுத்த பிடிச்சு பாத்ரூம்ல தள்றதுக்கு முன்னாடி நானே குளிக்கப் போறேன்…பை பை…”குளித்து முடித்து, உடை மாற்றி வந்த மகளை பார்த்த விசாலாட்சியின் கண்களில் ஒரு வித திருப்தி ஒலிர்ந்தது.
“ஹ்ம்ம்…ஒரு நாளைக்காவது உருப்படியா ட்ரெஸ் பண்ணியிருக்கியே…ஆமா….போன தடவை அப்பா வாங்கிட்டு வந்தாரே, அந்த புது நெக்லஸ் போட்டுக்கல?”

“போம்மா….அது பெருசா இருக்கு…எனக்கு வேண்டாம்…”

“என்னம்மா? ஒரு நாள் தானே…அத போட்டுக்கோ…”

“போம்மா…வேற வேலையில்லை…சும்மாயிரு…”

“நீ இப்படியெல்லாம் சொன்னா கேக்க மாட்ட, நானே போய் எடுத்துட்டு வரேன்” என்றபடி மாடியிலிருந்த மதுவின் அறைக்கு விரைந்தார் விசாலாட்சி.

ஒரு சில நிமிடங்களில் கையில் நகைப்பெட்டியுடன் அவர் படிகளில் இறங்கத் துவங்கும் முன்னரே, தொலைபேசி அழைக்க, மது காலர் ஐடியை பார்த்தபடி, “அப்பாம்மா…” என்றபடி ரீஸீவரை எடுக்கப்போனாள்.

“அப்பாவா? இத்தன நேரம் கழிச்சு இப்ப தான் ஃபோன் பண்றாரா?” வேகமாக படிகளின் அருகில் வந்தவர், முதல் படியை கவனிக்காமல் காலை வைக்க, “மதூஊஊஊஊஊ” என்ற அவரின் அலறலில், கையிலிடுத்த தொலைபேசியை அப்படியே எறிந்து விட்டு அம்மாவை நோக்கி ஓடினாள் மது.

நிலைதடுமாறி படிகளில் தலைகுப்புற உருண்டு கீழே வந்துகொண்டிருந்தார் விசாலாட்சி. ’அம்மாஆஆஅ…” என்று அலறியபடி அவள் முதல் படியை அடைவதற்கும், படியின் அருகிலேயே வைத்திருந்த அந்த அழகிய வெங்கல சிலையில் விசாலாட்சின் தலை மோதுவதற்கும் சரியாக இருந்தது.

ஒரு சில நொடிகளில் நடந்து முடிந்து விட்ட விபரீதத்தில் தலை கிறுகிறுக்க, கண்களில் நீர் பெருக, நடுங்கும் கரங்களுடன், குனிந்து தாயின் தலையை கைகளில் ஏந்தினாள் மது. ரத்தக் கோடுகள் படிந்த முகத்துடன், கண்களில் கண்ணீர் தேம்பியிருக்க, கண்களை படபடக்க மதுவை நோக்கி, “மது….ம்மா…உன் கல்…யா…” அதற்கு மேல் பேச முடியாமல், அவரின் குரல் கமற, கண்களின் படபடப்பு அடங்க, மெல்ல மெல்ல அவரது மூச்சும் அடங்கியது. அந்த அறையில் சுடர் விட்டுக் கொண்டிருந்த விளக்கின் ஒளி, உயிரற்ற அவரது கண்களில் பிரதிபலிப்பதை திக்பிரம்மை பிடித்ததை போல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மது.

அவளுக்கு அன்று ஏற்பட்ட அதிர்ச்சியில், உடனே அவளது அப்பா ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்து பக்கத்து வீட்டிற்கு தவகல் சொல்லி, அவர்கள் வந்ததும், பின்பு சொந்த பந்தம், அறிந்தர் தெரிந்தவர் என்று அந்த வீடு அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே நிரம்பி வழிந்ததும் எதுவுமே நினைவில் இல்லை. எத்தனை மணி நேரம், இல்லை எத்தனை நாட்கள் என்று கூட தெரியாமல், அம்மாவின் உடலை வெறித்துப் பார்த்தபடி, தன் அம்மாவின் அருகிலேயே அமர்ந்திருந்தாள் மது.

அவள் அப்பா வந்தவுடன் அவளை கட்டிக் கொண்டு அழுத போது கூட அவளுக்கு அழத் தோன்றவில்லை, ’மதும்மா....அம்மா எங்கடா? அம்மாக்கு என்னடா ஆச்சு? மதும்மா…பேசுடா…பேசுடா…” என்று அவள் நினைவறிந்து அழுதே பார்த்திறாத அவளது அப்பா குழந்தை போல தேம்பித் தேம்பி அழுததைப் பார்த்தும் மரக்கட்டையை போன்றே நின்று கொண்டிருந்தாள் மது!

************************************************************************

ரஞ்சித்தின் வீட்டில் அமர்ந்து அடுத்து என்ன செய்வதென்று ஆலோசித்துக் கொண்டிருந்தார் வக்கீல் சுமன்,
“கேஸ் நம்ம மேல ஸ்டராங்கா இருக்கு ரஞ்சித்! நீங்க தான் கோ-ஆப்ரேட் பண்ணனும்…தயவு செஞ்சு சொல்லுங்க” மீண்டும் அதே கேள்வியை அவர் கேட்கவும், கொதிப்படைந்தான் ரஞ்சித்.

“நான் தான் எந்த தப்பும் செய்யலன்னு சொல்றேன்ல? நீங்க மறுபடியும் மறுபடியும் அதையே கேக்காதீங்க சார்…காத்து வாங்கத் தான் போனேன்…”

“டேய்!!! திரும்ப திரும்ப ஒரு பொய்ய சொல்றதால அது உண்மையாயிடுமா? நீ காத்து வாங்க போனேன்னு சொல்றது பச்சைப் பொய்யின்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும்! ஒரு மாடிக்கே லிஃப்ட்ல போன ராஸ்கல்! யாரு காதுல பூ சுத்தற? இப்ப சொல்லப் போறியா இல்லையா? ஒழுங்கான காரணத்த சொல்லன்னா, நீ எனக்கு மகனே இல்லடா…” ஆவேசமாய் கத்தினார் சுப்பிரமணியம்.

ஆனால் முகில் மட்டும் எதுவும் பேசாமல் கெஞ்சும் பார்வையில் ரஞ்சித்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பார்வையை சந்திக்க முடியாதவன், “சுமன்! எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நான் சொல்லிட்டேன்…இத வச்சு முடிஞ்சா ஜாமீன் வாங்குங்க…இதுக்கு மேல என்கிட்ட ஒரு கேள்வியும் கேக்காதீங்க…” என்றபடி எழுந்து உள்ளறைக்குள் நுழைந்தான்.

“என்ன சார் இவரு? புரியாம பேசிகிட்டு இருக்காரு…” சுப்பிரமணியத்திடம் சுமன் முறையிட, அவர் கோபமாய், “எனக்கு இப்படியாப்பட்ட ஒரு பையனே பொறக்கலைன்னு நெனைச்சுக்கறேன்!!!” துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு அவரும் விடுவிடுவென மற்றொரு அறைக்குள் சென்று விட்டார்.

செய்வதறியாது தானும் எழுந்த வண்ணம் சுமன், பேய் அறைந்ததைப் போல் நின்று கொண்டிருந்த முகிலையும் தனலட்சுமியையும் பார்த்து, “அப்ப சரிங்க மேடம்…நான் மட்டும் உக்காந்து பேசி என்ன பிரயோஜம்? நானும் கிளம்பறேன்….ஜாமினுக்கு ஆக வேண்டியத பாக்கறேன்….ஆனா என்னால எதுவும் உறுதியா சொல்ல முடியாது…லெட்ஸ் ஸீ!”

மறுநாள் சுமன் எதிர்பார்த்தது போலவே ரஞ்சித்திற்கு ஜாமீன் கிடைக்கவில்லை. மது குதித்த இடத்தில் இருந்த மாடி திண்டு, மற்றும் அங்கு கிடந்த மெழுகுவர்த்தி, மதுவின் கால்கள், உடை என்று எல்லா இடத்திலும் ரஞ்சித்தின் கைரேகை இருந்ததை ஆதாரத்துடன் அரசு தரப்பு வக்கீல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, அன்றே ரஞ்சித்தை கைது செய்து விசாரிக்கும் உத்தரவை பிறப்பித்தார் நீதிபதி.

கண்ணீர் மல்க ரஞ்சித்திடம் பேசுவதற்கு அவனருகே சென்ற முகிலை சற்றும் எதிர்பார்க்காத வண்ணம், "இவனோட என்ன பேச்சு? நீ வாம்மா.." என்று தரதரவென இழுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றார் ரஞ்சித்தின் அப்பா சுப்பிரமணியம்.

மனதில் இடியிறங்கியது போல் அடுத்த என்ன செய்வதென்றே தெரியாமால் வீட்டில் அமர்ந்திருந்த அவளை பேரிடியென தாக்கியது வக்கீல் சுமனின் தொலைபேசி அழைப்பு.

"சாரி மேடம்! என்னால இதுக்கு மேல உங்க ஹஸ்பன்டை ரெப்ரஸண்ட் பண்ண முடியாது. கண்டிப்பா தோக்கத் தான் போறோம்னு தெரிஞ்சும், கொஞ்சம் கூட கோ-ஆப்ரேட் பண்ணாத ஒரு க்ளைண்டுக்காக செலவலிக்கற அளவுக்கு என்கிட்ட டைமில்லை...ஐம் ரியலி சாரி...நீங்க வேற வக்கீல் பாத்துக்கோங்க..."

அவள் பதிலை எதிர்ப்பார்க்காமலே மறுமுனை துண்டிக்கப்பட்டது. அதோடு முகில் மனதில் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்ச, நஞ்ச நம்பிக்கையும் துண்டிக்கப்பட்டது!

[தொடரும்]

16 comments:

G3 said...

நான் தான் பர்ஸ்ட்டா ?? :)))

G3 said...

ஆஹா.. இப்படி அநியாயத்துக்கு சஸ்பென்ஸ்ல கொண்டு போறீங்களே... சீக்கிரம் அடுத்த பாகத்த போடுங்க மேடம் :)

Raghav said...

மது, அவங்க அம்மா, திவ்யா மூணு பேரும் பேசிக் கொண்டது ரொம்பவே ஜாலியா இருந்துச்சு.. அந்த மூடுலயே தொடர்ந்தா பெரிய அதிர்ச்சி.. அதுக்கு மேல கதைய, கதையா மட்டும் படிச்சேன்.. அம்புட்டு தான்.

gils said...

seri twistu aana mega serial polavay poguthu :)) pona postla iruntha antha mystery missing :))

மதி said...

திடீர் ட்ராஜெடி....ஹ்ம்ம்
அடுத்த பார்ட்ட போடுங்க

kettavan said...

எங்களோட பிபி ஏருரதுல உங்களுக்கு அப்படி என்ன சந்தோசம்னு தெரியல

நல்ல முயற்சி தொடருங்க ...

Prabhu said...

அம்மா தாயே, இன்னும் எத்தன பாகம் போட போறீங்க? அதுக்கு எத்தன நாள் ஆகும்? அநியாயமா இருக்கே! காத்திருந்து காத்திருந்து கதைய மறக்கடிச்சிறாதம்மா!

anbudan vaalu said...

ver nice but an unexpected tragedy...your dialogues are too good and very realistic....
post the next part soon....

sri said...

very realistic , ponnu pakkara tips ellam kalakkal :) aduthu enna aga pogudho , en epdi thamiz pada hero maari ranjith mounam sathikarannu therla. Avan dhaan avala ponnu pakka erundhavana? adhaan avana mugil pathuttey erundhala , seriana suspense a erukkey

Nimal said...

உங்க எழுத்துல கதை நல்லா இருக்கு... அடுத்தடுத்த பாகங்களையும் சீக்கிரம் போடுங்க...!

mvalarpirai said...

As Usual DP touch! Great !

FunScribbler said...

wow... this is a very interesting story. lots of sub-stories/tips...comedy...thriller and crime..WOW...if i had the money, i wld sponsor to publish this as a book or even produce this as a movie! hahaha...damn nice akka! keep rocking akka!

Divyapriya said...


G3 said...

//நான் தான் பர்ஸ்ட்டா ?? :)))//

ஆமா அதுல என்ன சந்தேகம்? ;)

//ஆஹா.. இப்படி அநியாயத்துக்கு சஸ்பென்ஸ்ல கொண்டு போறீங்களே... சீக்கிரம் அடுத்த பாகத்த போடுங்க மேடம் :)//

இப்பெல்லாம் நான் சீக்கரம் தான போடறேன்? முன்ன மாதிரி வாரத்துக்கு ஒன்னு மட்டும் போடறதில்லையே :)

-------------------------

Raghav said...
//மது, அவங்க அம்மா, திவ்யா மூணு பேரும் பேசிக் கொண்டது ரொம்பவே ஜாலியா இருந்துச்சு.. அந்த மூடுலயே தொடர்ந்தா பெரிய அதிர்ச்சி.. அதுக்கு மேல கதைய, கதையா மட்டும் படிச்சேன்.. அம்புட்டு தான்.//

கதையில கொஞ்சம் comedy, sentiment, tragedy எல்லாமே வேணுமில்லையா? அதான் :)

-------------------------

gils said...

//seri twistu aana mega serial polavay poguthu :)) pona postla iruntha antha mystery missing :))//

mystery missing னு சொல்லிட்டீங்க :( அதனால உங்களுக்கு மெயில்ல கதை அனுப்பறதா இருந்த deal cut :P
-------------------------

மதி said...
//திடீர் ட்ராஜெடி....ஹ்ம்ம்
அடுத்த பார்ட்ட போடுங்க//

போட்டுட்டா போச்சு :)
-------------------------
kettavan said...
//எங்களோட பிபி ஏருரதுல உங்களுக்கு அப்படி என்ன சந்தோசம்னு தெரியல
நல்ல முயற்சி தொடருங்க ...//

கெட்டவனா இருந்தாலும் நல்ல நல்ல கமேண்ட்டா போடறீங்க...நன்றி :))

Divyapriya said...



pappu said...
//அம்மா தாயே, இன்னும் எத்தன பாகம் போட போறீங்க? அதுக்கு எத்தன நாள் ஆகும்? அநியாயமா இருக்கே! காத்திருந்து காத்திருந்து கதைய மறக்கடிச்சிறாதம்மா!//

இன்னும் ஆறு பாகம் இருக்கு...முன்னாடி படிச்ச கதை மறந்தா மத்த பாகம் எதுவும் அவ்ளோ நல்லா இருக்காது!
---------------
anbudan vaalu said...

//ver nice but an unexpected tragedy...your dialogues are too good and very realistic....
post the next part soon....//

thanks a lot pappu...
---------------
@ Srivats

ரொம்ப குழம்பாதீங்க...கடைசி பார்ட்ல எல்லாமே தெரிய போகுது...:))
---------------
நிமல்-NiMaL said...

//உங்க எழுத்துல கதை நல்லா இருக்கு... அடுத்தடுத்த பாகங்களையும் சீக்கிரம் போடுங்க...!//

நன்றி நிமல்...கண்டிப்பா இந்த கதையை சீக்கரம் போடறேன்...
---------------
mvalarpirai said...

//As Usual DP touch! Great !//

thanks valarpirai...
---------------
Thamizhmaangani said...

//wow... this is a very interesting story. lots of sub-stories/tips...comedy...thriller and crime..WOW...if i had the money, i wld sponsor to publish this as a book or even produce this as a movie! hahaha...damn nice akka! keep rocking akka!//

வாங்க மேடம்...இவ்ளோ நாளா ரொம்ப பிஸியா? :) thanks a lot for the comment gayathri...really feeling great after reading ur comment :))

Divyapriya said...


@Raghav

நீங்க முதல் பார்டல கேட்ட கேள்விக்கு பதில் இங்கே...

மதுரையில ஏன் கதை நடக்குதுன்னா அங்க தான கோர்ட் வசதியெல்லாம் நல்லா இருக்கு :)) இந்த பதில முதல் பார்ட்ல போட முடியல, அதான் இங்க...
அப்புறம் மதுரை ஷோபா அபார்ட்மெண்ட்ஸ் இல்லைன்னு தான் நினைக்கறேன்...அதனால தான் அந்த பேர வச்சிருக்கேன்...

Karthik said...

நான் ப்ரசென்ட் சொல்லிக்கிறேன். next part plzz..:)