Thursday, October 1, 2009

விடாது [தொடரும்]


என் இனிய தமிழ் ப்ளாக் வாசகர்களே!
பாசத்துக்குறிய உங்கள் திவ்யபிரியா எழுதுவது :)))


நான் ஒரு பேட்ஸ்மேனா இருந்திருந்தா, இன்னேரம் பேட் மட்டைய மேல தூக்கிப் பிடிச்சு வானத்த பாத்திருப்பேன்...ஆனா ஒரு (ப்ளாக்) போஸ்ட்மேனா இருக்கறதால், இந்த பதிவ போடறேன்...Yes, some how i've managed to reach 100 posts!!! ஆமாங்க...ஒரு வழியா நானும் 100 பதிவு போட்டுட்டேன்! :))


ஒரு வேஸ்ட்மேனா இருந்த நான் இப்ப (ப்ளாக்) போஸ்ட்மேனா ஆகி செஞ்சுரி அடிச்சிருக்கேன்னா அதுக்கு காரணம் முழுக்க முழுக்க முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத என் நண்பர்களான நீங்க தான், நீங்க மட்டும் தாங்க! (இதை பெப்ஸி உமா ஸ்டைலில் படிக்கவும்னு நான் சொல்லவே இல்லை :o )


இப்ப ஒன்பதாவது தொடர்கதை போய்ட்டு இருக்கு, இதோட போதும், ஆட்டத்த
முடிச்சுக்கலாம்னு என் அம்பயர் மனசு சொல்லுச்சு...சரி, i'll quit blogging after this shoba apts அப்டீன்னு நானும் எனக்கு தெரிஞ்ச ஒரு சில பேர்கிட்ட சொல்லி வச்சுருந்தேன். அப்பாடி, இனிமே இந்த [தொடரும்] இம்சைகள் தொடராதுன்னு அவங்களும் நிம்மதி பெருமூச்சு விட்டாங்க...ஆனா, இது என்னவோ என்னை பிடிச்ச வியாதி மாதிரி விடவே மாட்டேங்குது! ஆஃபிஸ்ல இருந்து கிளம்பும் போது கூட, பை பைக்கு பதிலா ’தொடரும்’ சொல்லிடுவேன் போல இருக்கு :( ஷோபா அபார்ட்மெண்ட்ஸே இன்னும் எழுதி முடிச்ச பாடில்லை, அதுக்குள்ள அடுத்த கதை எழுதி அதை முடிச்சிட்டேன் :( நானே நினைச்சாலும் நிறுத்த முடியல, அதனால் இனிமேலும் இம்சைகள் ’விடாது [தொடரும்]’ ;) ஏன்னா என் ப்ளாக்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாத ஒரே வார்த்தை...தொடரும்...அவ்வ்வ்வ்!!!


P.S: முதல்ல கதை போட ஆரம்பிச்சப்ப, ஒரு பாகம் முடிஞ்சு தொடரும் கூட போட மறந்த அறிவாளி தான நீ ன்னு பழம் பெரும் பின்னூட்டக்காரர்கள் சொல்வது எனக்கு காதுலையே விழல :D

இப்படிக்கு,
திக்கி திணறி நூறாவது பதிவை அடைந்தாலும்
சீனுக்கு பஞ்சமில்லாது பதிவு போடும்,
உங்கள் அ.பொ.தி.பி :P (அ.பொ ன்னா ’அருமை பொருந்திய’ :P....தி.பி யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்! )

37 comments:

நாமக்கல் சிபி said...

Vaazthukkal!

G3 said...

Century adichadhukku vaazhthukkal :)))

Prabhu said...

கொடும தான்! அடுத்த க்தை எழுதிட்டீங்கனா பேசாம இருக்க வேண்டியதான. ஏங்க அதை சொல்லி இன்னும் இந்த தொடர படிக்கறவங்கள டென்ஷனாக்குறீங்க!

100 - நாட் அவுட்!

சரிதா said...

வாழ்த்துகள் :-))

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள்!!!

ஆயில்யன் said...

100க்கு வாழ்த்துக்கள் பாஸ் :))

ஆயில்யன் said...

//.தி.பி யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்! )//

திவ்யபிரியா

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்...!

சி.கு
ஆயில்யன் :)))))

மேவி... said...

congrats....

(nanga ellam ungalukku senior.... 200 th post kitta poittu irukken)

மேவி... said...

வர வர என்னை வேலை பார்க்க சொல்லுராங்க ..... எனக்கும் பயமா தான் இருக்கு . எங்கே நான் திருந்தி விடுவேனோ என்று .......

gils said...

100 adicha mathirye oru post..vaazhthukkal..irunthalum unga pechu kaa thaan

gils said...

//சி.கு
ஆயில்யன் :))))//

LOL

chi.ku.tha
gils

Raghav said...

செஞ்சுரி போட்ட மஞ்சரி !!
வாழ்க நீ பல்லாண்டு !! :)

Raghav said...

ஏனுங்க தி.பி, கதை எழுதுறதை நிப்பாட்டிட்டு அரசியல்ல குதிக்கப் போறீங்களா ?

FunScribbler said...

முதலில் என் வாழ்த்துகள்!
அடுத்த கதை ரெடியா?? கூல் கூல்...சுட சுட போட்டுடுங்க...படிக்க நாங்கள் தயார்!

அப்பரம், ப்ளாக் எழுதுறத நிறுத்துறேன்னு சொல்லாதீங்க. நீங்க தொடர்ந்து எழுதனும். உங்கள் கலைசேவை இந்த நாட்டுக்கு தேவை!
நீங்களே நினைச்சாகூட ப்ளாக் எழுதுறத நிறுத்த முடியாது....அது ஒரு தவம்/வரம். ஹாஹா....எனக்கு தேவர் மகன் படத்துல வர சிவாஜி டயலாக் தான் ஞாபகத்துக்கு வரது. கமல் சொல்வார் சிவாஜிகிட்ட்,உங்களையும் சேத்து அழைச்சுகிட்டு போவேன்னு. அதுக்கு சிவாஜி,

"இந்த கட்டை இங்கேயே இருந்து எரிஞ்சு சம்பாலா இந்த மண்ணுக்கு உரமா போகுமே தவிர, வெளியே வராது!"

ஹாஹா.... ப்ளாக் எழுதும் பலருக்கும் இதே முடிவு தான். நம்மால் இதைவிட்டு வெளியே போக இயலாது.ஹிஹி

mvalarpirai said...

வாழ்த்துகள் அ.பொ.தி.பி !

அவன் அவன் பத்து பதிவை எழிதி முடிக்கவே அங்க இங்க கடன் வாங்கி, Mail-அ வந்ததை எல்லாம் சேர்த்தே முடியல ! நீங்க 100 பதிவை நல்ல சுவை உணர்வோடு ( எங்க வீட்டுகாரரும் கச்சேரிக்கு போறாரு என்றல்லாமல் ) நல்ல கவிதைகளோடு எழுதி இருக்கீங்கனா ரொம்ப பெரியவிசயம் ! பாராட்டுகள் !

keep it up ! Congrats and Cheers mate !

Smriti said...

Hmm.. good scene div ... lol.. Continue the good job...

Ippadikku..
Endrendrum DP oda encourager

Jerry Eshananda said...

பல நூறாயிரம் படைக்க ,மதுரையிலிருந்து வாழ்த்தும் எளியவன்.

sri said...

lol Very Hilarious! Century pottadhukku neraya vazthukkal :)

hope to see many posts of the postman , oops postwomen :)

wishes!

//கொடும தான்! அடுத்த க்தை எழுதிட்டீங்கனா பேசாம இருக்க வேண்டியதான. ஏங்க அதை சொல்லி இன்னும் இந்த தொடர படிக்கறவங்கள டென்ஷனாக்குறீங்க//

LOL

//எழுதனும். உங்கள் கலைசேவை இந்த நாட்டுக்கு தேவை!
நீங்களே நினைச்சாகூட ப்ளாக் எழுதுறத நிறுத்த முடியாது....அது ஒரு தவம்/வரம்.//

ROFTL

சங்கர் said...

உங்கள் சேவை எழுத்துலகிற்கு தேவை!!!

100க்கு வாழ்த்துகள்!!!

நாகை சிவா said...

வாழ்த்துக்கள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தலைப்பைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தது உண்மை!

வாழ்த்துகள்!

Karthik said...

வாவ், வாழ்த்துக்கள்! :)

காதில் வழியும் ரத்தத்துடன்..

கார்த்திக்.

G3 said...

//gils said...

//சி.கு
ஆயில்யன் :))))//

LOL

chi.ku.tha
gils
//

Chinna kuzhandhaikku Thathaa
Gils

:))) Idha dhaanae solla vandheenga gils :P

gils said...

g3 paati..athu chinnakuzhandhaioda thambiiii

Mohan R said...

vazthukal

G3 said...

@Gils,

Ennoda paatiya en inga koopidareenga :P

gils said...

g3 kizhavi..ungala thaaan paati sonen..okva :) velngaidicha :D

Divyapriya said...


@gils/g3

என்ன இது சி.பு தனமா சண்டை போட்டுகிட்டு...இந்த நாட்டாமையோட தீர்ப்ப கேளுங்க...நீங்க ரெண்டு பேருமே தாத்தா பாட்டி தான் :)

சிம்பா said...

தலைக்கு மேல ஒளிவட்டம் தெரியரப்புல இருக்கு... வாழ்த்துக்கள்... ஆனா எனக்கு ஒரு சந்தேகம்... நீங்க கதை எழுதுறது போக மீதி நேரத்துக்கு தான் வேலைக்கு போறீங்களா??

எப்படியோ ராடான் மீடியாவுக்கு ஒரு மஹா தொடர் எழுத்தாளர் உருவாகின்ற மாதிரி இருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும் ......

Unknown said...
This comment has been removed by the author.
Rajalakshmi Pakkirisamy said...

வாழ்த்துகள் :)

Unknown said...

hey unna nenacha perumaiya irukku. Keep going. all the bestt!

Vijay said...

வாவ்!! வாழ்த்துக்கள் :-)

நூறு பதிவு கண்ட தி.பி. சீக்கிரமே ஆயிரம் பதிவுகள் எழுதி முடிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் சேவை தமிழ் பிளாகுலகுக்கு மிகவும் தேவை :-)

ஆளவந்தான் said...

100 வது பதிவுல.. என்னோட வருகை பதிவு :)

மதி said...

வாழ்த்துகள்

Divyapriya said...


நாமக்கல் சிபி/G3/புனிதா||Punitha/ வெட்டிப்பயல்

நன்றி...தொடர்ந்து படிங்க :)

------------------
@pappu

எல்லாம் ஒரு சுயவிளம்பரம் தான் :P

------------------
@ஆயில்யன்

நன்றி சி.கு ஆயில்யன் :))

------------------
@டம்பி மேவீ

Thank you senior sir ;)

------------------
@gils

சி.கு.தாத்தா ;) கா எல்லாம் மறந்துடுங்க...இப்ப அடுத்த பார்ட் போட்டாச்சு...
------------------

@Raghav
thanks raghav, அப்படியே நான் அரசியல்ல குதிச்சாலும் உங்கள கொள்கை பரப்பு செயலாளரா போட்டுடறேன்...ஓகேவா? ;)

முகுந்தன் said...

திவ்யப்ரியா ,
கலக்குறீங்க ..
ரொம்ப நாள் ஆச்சு சரி உங்கள் பதிவை படிக்கலாம்னு வந்தேன் ...
எட்டு பாகம் கதை எழுதி இருக்கீங்க , நான் அதை படிப்பதற்குள்
நீங்க ஆயிரம் போஸ்ட் போட்டுடுவீங்க போல இருக்கு.
ஜெட் வேகம் போங்க
வாழ்த்துக்கள் :)