Wednesday, October 21, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 11

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8 , பாகம் 9, பாகம் 10

15th Aug 06:15 P.M

“ச்சிங்குச்சா…ச்சிங்குச்சா...பச்சை கலர் ச்சிங்குச்சா…”

பிரபு நிறுத்தாமல் பாடிக் கொண்டிருக்க, காமாட்சி, “டேய்…போதும்டா…நல்லா தான இருக்கு ட்ரெஸ்…அக்காவ இப்படியெல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது தெரியுமா?”
அவர்கள் வீட்டை விட்டு கிளம்பி மாடியை அடையும் வரை இப்படி பாடிப் பாடி மதுவை கிண்டல் செய்து கொண்டிருந்தான் பிரபு. மது சிரித்தவாறு எதுவுமே சொல்லாமல் வந்து கொண்டிருந்தாள். சித்தி வீட்டில் தன் முயற்சி ஓரளவுக்கு பலனளித்ததாகவே தோண்றியது அவளுக்கு. யாரும் இல்லாத போது, மீண்டும் ஒருமுறை முயற்சித்தால் கண்டிபபாக அம்மாவுடன் பேசலாம் என்று முழுமையாக நம்பியதால் சற்று குதூகலமாகவே இருந்தாள்.

மாடிக்கு சென்றதும் பிரபு அவன் நண்பர்களோடு சென்றுவிட, சித்தி பேசிக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்திற்குள் அமர்ந்திருந்தவள், அவர்கள் பேச்சிலும் கலந்து கொள்ளாமல், நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சியிலும் ஈடுபாடில்லாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அந்த பெண்ணை கவனித்தாள். தாமரை வண்ண டஸர் புடவை அவளுக்கு மிக அழகாக பொருந்தியிருந்தது. ’அட! புடவை ரொம்ப நல்லா இருக்கே…” என்று அவளது புடவையையே சிறுது நேரம் ஆராய்ந்தவள், பிறகு தான் அந்த பெண்ணையும் பார்த்தாள், சிரித்த முகத்துடன் வந்து கொண்டிருந்த அந்த பெண்ணின் அருகே ஒரு வயதான பெண்மணியும், சற்றே பின்னால் உயரமான ஓர் ஆணும் வந்து கொண்டிருந்தனர். அவனை பார்த்ததும் எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று எண்ணமிட்ட மதுவிற்கு, அவர்கள் அருகே நெருங்கி வரவும், ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தது. அத்தனை நாட்களாக அவள் மறந்து விட்டதாக நினைத்த அந்த முகம், அவளது புறகண்களுக்கு முன் தோண்றவும், இது தான் அந்த முகம் என்று அவளது அகக்கண்களுக்கும் புலப்பட்டது. “ரஞ்சித்!” ஆச்சர்யத்தில் அவளையும் அறியாமல் சிறுது சத்தமாக அவன் பெயரை உச்சரித்து விட்டாள். அவள் பேசியது சரியாக கேட்காததால் காமாட்சி, “என்ன மது?” என்று கேட்க, “ஹாங்…ஒன்னுமில்ல…சித்தி…இங்கிருந்து சரியா தெரிய மாட்டேங்குது…நான் அந்த பக்கம் போய் பாத்துட்டு இருக்கேன்…
சரியாக அவர்களுக்கு பக்கவாட்டில் நின்று கொண்டு, அவர்களையே பார்க்கத் துவங்கினாள். சிறுது நேரத்திற்கு மேல் அவளுக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை, காமாட்சியிடம் சென்று, “சித்தி! நான் போறேன்….எனக்கு போர் அடிக்குது…”

“இரும்மா…சாப்பாடு அரேஞ் பண்ணியிருக்காங்க…எல்லாம் பாத்துட்டு சாப்டிட்டு போலாம் …”
சிறுது நேரத்திற்குள்ளாக நிகழ்ச்சிகளெல்லாம் முடிந்து அவரவர் நின்றபடி பேசத் துவங்கியிருந்தனர். மதுவும் ஓர் ஓரமாக நின்று கொண்டு ரஞ்சித்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவன் மனைவி அவனை கூப்பிட, அவளருகே சென்றவனின் காதில் அவள் ஏதோ சொன்னாள். உடனே அவனும் கண்களை சிமிட்டி மிக அழகாய் சிரித்தான். இவற்றையெல்லாம் பார்த்து அவள் முகம் சுருங்கியது. ரஞ்சித் மனைவியின் முகத்தில் இருந்த சந்தோஷத்தையும், குடும்பத்தோடு ஒன்றாக அவர்கள் கூடிக் களிப்பதையும் பார்த்தவளுக்கு தன் மேல் பெருத்த பச்சாதாபம் எழுந்தது. அந்த இடத்தில் தான் இருந்திருந்தால், இதே போல் தான் தானும் சந்தோஷமாக இருந்திருப்போம் என்ற எண்ணம் அவளை வாட்டியது. “அம்மா மட்டும் இருந்திருந்தால்? இதை விட சந்தோஷமா நான் இருந்திருப்பேனே! இப்படி தனியா நின்னுட்டு இருந்திருக்க மாட்டேன்…” இவ்வாரெல்லாம் நினைக்க நினைக்க அவளுக்கு கண்களில் நீர் கட்டுப்படுத்த முடியாமல் வரத் தொடங்கியது. நேரே காமாட்சியிடம் சென்றவள், “சித்தி! எனக்கு ரொம்ப தலைவலிக்குது…சாப்பாடெல்லாம் வேண்டாம்….நான் போய் தூங்கறேன்…உள்ளிருந்து கதவை பூட்டாம தூங்கறேன்…நீங்க வந்தா தட்டாதீங்க…,” அவர் பதிலுக்கு எதிர்பார்க்காமல் விடுவிடுவென வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

வீட்டை அடைந்தவள் சிறுதி நேரம் சோர்வோடு அப்படியே அமர்ந்தாள். அம்மா என்று ஒரே ஒரு நபர் அவள் வாழ்க்கையில் இல்லாமல் போனவுடன், தன் வாழ்வே இப்படி சூன்யமாய் போய் விட்டதே என்று மனம் வருந்தியவள், ஒரு முடிவோடு ஓஜா பலகையை மீண்டும் எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். அம்மாவிடம் இந்த பலகையின் மூலம் பேச ஆரம்பித்தால், தான் இதுநாள் வரையில் இழந்த சந்தோஷங்களெல்லாம் மீண்டும் கிடைத்து விடும் என்று அவளுக்குள் பெருத்த நம்பிக்கை பிறந்தது.

அந்த பலகையை திறந்தவள், “அம்மா…ஒரு தடவை, ஒரே ஒரு தடவை உன்னோட பேசினா போதும்…அதுக்குப்புறம் செத்தா கூட சந்தோஷமா சாவேன்…ப்ளீஸ் ம்மா…என்னோட பேசும்மா” என்றபடி ப்ளேசட்டை நகர்த்தத் துவங்கினாள்.

மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்த்தவளுக்கு தோல்வியே கிடைக்க, பூட்டிய அறைக்குள், தரையில் படுத்தபடி நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தாள். எவ்வளவு மணி நேரம் அப்படி படுத்திருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. மீண்டும் மீண்டும் தன் அம்மாவின் சிரித்த முகமும், அதை போலவே மனதிலிருந்து உண்மையாய் வெளிப்பட்ட முகிலின் சிரிப்பும் அவள் கண்களுக்கு முன் தோன்றி மறைந்தது. சிரிப்பே மறந்து போயிருந்த அவளது முகத்தை கண்ணாடியில் பார்த்தாள். மெலிந்து உடைந்து விழுந்துவிடும் போன்ற தேகம், ஒட்டியிருந்த கண்ணங்கள், அதில் ஒடிங்கி கருத்துப் போயிருந்த கண்கள். அவள் முகத்தை பார்ப்பதற்கு அவளுக்கே பயமாக இருந்தது. பயம் என்று நினைக்கவும், ரதி அன்று பயமுறித்தயது நினைவுக்கு வந்தது. “எதாவது திறந்த வெளில முயற்சி பண்ணலாம்...ஆனா அதுல ஆபத்து அதிகம்...” இந்த வார்த்தைகள் அவள் மூலைக்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்கத் துவங்கியது. என்ன ஆனாலும் சரி, எதாவது திறந்த வெளியில் அன்றே முயற்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
கதவை திறந்து கொண்டு கையில் ஓஜா பலகை, மெழுகுவர்த்தி தீப்பெட்டியோடு வெளியே போனவள், என்றுமில்லாத பழக்கமாய் சித்தி ஹாலில் சோஃபாவிலேயே படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து, சத்தமெழுப்பாமல், 53642 என்ற அவர்களது கதவு எண்ணை அழுத்தி வீட்டை விட்டு மெதுவாய் யாருக்கும் தெரியாமல் வெளியேறினாள். அவளை கடைசியாக வழியனுப்புவதைப் போல், ’டங்’ என்று பதினொன்றரை மணிக்காக ஒரே ஒரு முறை அடித்து ஓய்ந்தது அந்த அறை கடிகாரம்.

மெல்ல மெல்ல படிகளில் ஏறத் துவங்கினாள். தூக்கத்தில் மிதப்பவளை போல் மிக மிக மெதுவாய், ஒவ்வொரு படியாய் அடிமேல் அடி வைத்து ஒரு வழியாக மேல் மாடியை அடைந்தாள். மாடி கதவருகே சென்றவள், ஒன்பதாவது தளத்தின் அருகே வேறு ஏதோ ஓசை கேட்க துணுக்கற்றவளாய், கீழே குனிந்து படிகளில் அங்குமிங்கும் பார்த்தாள். அதன் பின்னர் ஒரு சத்தமும் வராததால், மாடி கதவருகே சென்றாள். அப்போது தான் அவளுக்கு அந்த கதவும் எண் கொண்டு தான் திறக்க வேண்டும் என்ற நினைவே வந்தது. ’என்ன இது…இந்த நம்பர் என்னன்னு கேக்கலையே…இப்ப என்ன பண்றது?’ சிந்தித்தபடி அங்கேயே சிறுது நேரம் நின்றவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் போன முறை வந்திருந்த போது கதவிற்கெல்லாம் எண் முறை வந்திருக்கவில்லை. இரண்டு வருடமாகியும் முழுமையாக கட்டி முடிக்காத கட்டிடத்தில், அப்போது தான் புதிதாக கதவுகளில் அத்தகைய பூட்டு பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று யோசித்தவள், முயற்சித்து தான் பார்ப்போமே என்று முதலில் 12345 என்ற எண்களை அழுத்தினாள். சிகப்பு விளக்கு எரிந்தது. மீண்டும் 00000 என்ற எண்களை அழுத்தவே, பச்சை விளக்கு எறியவும், கதவை திறந்து கொண்டு நடு மாடிக்கு சென்றாள்.

மெழுகை பற்ற வைத்துவிட்டு ஓஜா பலகையில் கவனத்தை செலுத்தத் துவங்கியவள், ஐந்தே நிமிடங்களில் தனக்குள் எதேதோ மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தாள். மிகவும் கவனமாய் மெழுகை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, மிக சன்னமான குரலில் யாரோ தன் பெயரை அழைப்பதைப் போன்ற பிரம்மை ஏற்பட்டது. சற்று நேரத்திலெல்லாம் சிறுது சத்தமாகவே ’மது! மது!” என்ற குரல் கேட்க சுற்றும் முற்றும் பார்த்தாள், யாருமே அங்கு இல்லை. தன் அம்மாவின் குரல் தான் அது என்று அடையாளம் கண்டுகொண்டு அந்த பலகையிலிருந்து கையை எடுத்தவளின் கை வேகவேகமாய் பலகையெங்கும் நகரத் துவங்கியது. குரல் கேட்பது தன் பிரம்மையா நிஜமா என்று தெரியாமல் குழம்பித் தவித்தவள், மீண்டும் சத்தமாக குரல் வரவும், குரல் வந்த திசையை பார்த்தாள். மாடி திண்டுக்கு வெளியே, வேறெங்கோ திறந்து வெளியிலிருந்து வந்து கொண்டுருந்தது. உடனே மெழுகை எடுத்துக் கொண்டு ’அம்மா…அம்மா…’ என்று உரக்கக் கத்திக் கொண்டே, கதறி அழுதபடி மாடித்திண்டை நோக்கி ஓடத் துவங்கினாள்.

“மதும்மா…இங்க இருக்கேன்டா…இங்க…” கீழே பக்கவாட்டில் முழு உருவமாய் சாட்சாத் அவள் அம்மா விசாலாட்சியே நின்று கொண்டிருந்தார்!

“வாடாம்மா…அம்மாகிட்ட வா… குதிச்சு வா மதும்மா” சிகப்பு வண்ண சேலை அணிந்து கொண்டு கைகளை நீட்டி சிரித்தவாறு நின்று கொண்டிருந்தார். “அம்மா…அம்மா” என்று கத்திக் கொண்டு, அதற்கு மேல் பேச வார்த்தகளின்றி மூச்சடைத்து நின்றிருந்தாள் மது. சற்றென்று வேறேதோ சத்தம் கேட்டு ஒரு நொடி திரும்பி பார்த்தவள், இருட்டில் யாரோ தடுக்கி கீழே விழுந்து, மீண்டும் எழுந்து அவளை நோக்கி மிக வேகமாய் ஒடிவந்துகொண்டிருப்பதை பார்த்தாள். ’அய்யோ அம்மா…’ என்று மீண்டும் கீழே பார்த்தவள் எங்கு தேடியும் அவள் அம்மாவை காணவில்லை. ஒரு நொடிக்கு முன்னர் யாரும் அங்கு இருந்தற்கான அடையாளமே எதுவுமில்லாமல் இருந்தது.

“அம்மா…அம்மா…” என்று அலறத்துவங்கியவளை, “என்ன பண்றீங்க…இறங்குங்க…” என்று சொல்லி அவள் கால்களை பிடித்தான் ரஞ்சித். அவளை பலவந்தமாக மாடித்திண்டிலிருந்து இறக்க அவன் முயற்சிக்க, நிலைதடுமாறி அவள் கைகளில் இருந்த மெழுகுவர்த்தி அவன் மேல் விழுந்தது. ’ம்மா…’ என்றபடி இவளை விடுத்து கைகளில் பட்ட மெழுவர்த்தியை தட்டி விட்டான். அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட மது, “அம்மா…நான் வந்துட்டேன்ம்மா…” என்று கத்திக் கொண்டே கண்களை இறுக மூடிக் கொண்டு யோசிக்காமல் கீழே குதித்தாள்.

ஒரு நொடிக்குள் நடந்து முடிந்துவிட்ட விபரீதத்தில் தலை கிறுகிறுத்துப் போன ரஞ்சித் மாடித்திண்டின் கீழே எட்டிப் பார்த்தான். அந்த பெண் நாலாவது மாடிக்கருகே ’அம்மா’ என்று அலறிக் கொண்டு கீழே போய் கொண்டே இருந்தாள். எதிரே தூரத்தில் செக்யூரிட்டி அறையிலிருந்து அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வருவது தெரிந்தது. தான் இருக்கும் அபாய நிலையை உணர்ந்தவன், உடனே திரும்பி அதிவேகமாய் கதவை நோக்கி ஓடத் துவங்கினான். அவன் உள்ளே ஓடி வரும் போது தட்டி விட்ட அதே மரப்பலகை மீண்டும் அவன் கால்களை தடுக்கவே, நிலை தடுமாறி குப்புற விழுந்தான். வந்த கோபத்தில் அந்த பலகையை எடுத்து தூர வீசினான். அவன் வீசிய வேகத்தில், அருகருகே அமைந்திருந்த கட்டிடங்களுக்கிடையில் எங்கோ ஒரு மூலையில் சென்று விழுந்தது அந்த ஓஜா பலகை. அதனோடே அவன் அணிந்திருந்த பிரேஸ்லட்டும் பறந்து, வெளியே விழுகாமல், அவன் விதி வசத்தால், அவர்கள் மாடியிலேயே ஒரு ஓரத்தில் விழுந்தது!

**********************************************************************************
திவ்யாவிடம் பேசியதை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார் பரத். மதுவிற்கு ரஞ்சித்தை தெரியவே தெரியாது, அது மட்டிமில்லாமல் அவளுக்கு வேறு எந்த ஆணுடனும் பழக்கமில்லை என்று திவ்யா சொன்னது அவரை குழப்பியது. திவ்யா சொன்னதும், ரஞ்சித் சொன்னதும் அப்படியே ஒத்துக் போக, காமாட்சி, தனலட்சுமி, தரகர் ராமன் இவர்களெல்லாம் சொன்னது வேறு விதமாய் இருக்கிறதே, இவர்களில் யாரை நம்புவது என்று புரியாமல் குழம்பித் தவித்தார்.

வீட்டிற்கு செல்லாமல் நேரே ஷோபா அபார்ட்மெண்ட்ஸ் நோக்கி புறப்பட்டார். அங்கு யாரையும் பார்க்கும் எண்ணம் அவருக்கு இல்லை. தான் மட்டும் தனியாக ஒரு முறை அந்த மாடிக்கு மீண்டுமொரு முறை சென்று பார்க்கலாம் என்று நினைத்து அபார்ட்மெண்ட்ஸ் உள்ளே அவர் நுழையும் போது மணி பத்தாகியிருந்தது. அவரை பார்த்தது செக்யூரிட்டி என்ன ஏதென்று விசாரித்து, ’மாடிக்கு தான சார்? போலாம் சார்…வாங்க…’ என்று உடன் வந்தார். ’வேணாம்…நான் பாத்துக்கறேன்…’ என்றபடி சென்றவரிடம், ’லிஃப்ட்ல போங்க சார்…’ என்று பின்னாலிருந்த சொன்னார் அந்த செக்யூரிட்டி. லிஃப்ட் அருகே சென்ற பரத் பின்பு ஏதோ யோசித்து படிகளில் ஏறத் துவங்கினார். சிறுது வேகமாய் படிகளில் ஏறி, கையிலிருந்த கடிகாரத்தை பார்த்தவர் சரியாக மூன்று நிமிடங்களில் பத்து மாடியை கடந்து விட்டதை கவனித்துக் கொண்டார். கதவின் அருகே சென்று அதை திறக்க முயற்சித்த பரத்திற்கு, அப்போது தான் அது எண்களால் இயக்கப்படும் கதவு என்று அவருக்கு புலப்பட்டது. இத்தனை நாட்களாக தான் இதை கவனிக்காமல் இருந்து விட்டோமே என்று வியப்படைந்தார். மது இறந்து போது பலமுறை அவர் அங்கு வந்திருந்தும், செக்யூரிட்டியோ காண்ஸ்டபிள்களோ ஏற்கனவே கதவை திறந்து வைத்திருந்ததில், அந்த கதவை அவர் கவனிக்கவே இல்லை. இப்போது அந்த கதவில் பொருத்தியிருந்த இயந்திரத்தை பார்த்தவர், ’பில்டிங் சொல்யூஷன்ஸ்’ என்று அதில் பொறித்திருந்த அந்த இயந்திர தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பார்த்தவவுடன், அவருக்குள் ஏதோ பொறி தட்டியது. அன்று தான் எங்கோ அதே பெயரை அவர் பார்த்திருந்தார். ’எங்கே? எங்கே?’ என்று யோசித்தபடி கீழே லிஃப்டில் இறங்கத் துவங்கினார்.

வரும் வழியில் முதல் தளத்தருகே லிஃப்ட் நின்றது. ’காத்தோட்டமா நடந்துட்டு வந்தா, உனக்கும் கொஞ்சம் வயிரு பிரட்டரதெல்லாம் மறந்து நல்லாயிருக்கும்’ என்று யாரோ சொல்வது கேட்டது. கதவு திறந்ததும் எதிரே தனலட்சுமியும், முகிலும் நின்று கொண்டிருந்தனர். பரத்தை பார்த்ததும் அவர்கள் தயங்கி நிற்கவே, “வாங்க…உள்ள வாங்க…” என்று உற்சாகமாய் அவர்களை பார்த்து சிரித்த பரத், அப்போது தான் முகிலை கவனித்தார். அவளை பார்த்ததும் அவர் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து, முகத்தில் இறுக்கம் பரவியது. ’ஒரு வேளை ரஞ்சித் குற்றவாளியாக இல்லாமல் இருந்தால்? தேவையில்லாமல் ஒரு கற்பினி பெண்ணை கோர்ட் கேஸ் என்று அலைக்கழிக்கிறோமோ…’ என்ற பரிதாப உணர்ச்சி அவருக்குள் பரவியது.

லிஃப்ட் நின்றதும் அவர்களிவரும் எதுவும் பேசாமல் இறங்கி செல்லவே, “ஒரு நிமிஷம்…” என்று அவர்களை நிறுத்தினார். “இந்த மாடிக் கதவோட கோட் என்ன?” என்று பரத் கேட்க, முகில், “78539” என்று பதிலளித்தாள்.

முகவாயை தடவியபடி சிறுது யோசித்தவர், “நீங்களும் என்கூட மாடி வரைக்கும் வர்றீங்களா? உங்ககிட்ட கொஞ்சம் இன்ஃபர்மேஷன் வேணும்…” என்று பரத் முகிலை பார்த்து இழுக்க, அவரை இடைமறித்த தனலட்சுமி, ’அங்கெல்லாம் எதுக்கு? எதுவா இருந்தாலும் இங்கையே கேளுங்க…” என்றார்.
பரத், “பயப்படாதீங்கம்மா…ஒரு பத்து நிமிஷம்…மாடிக்கு வரலைன்னா பரவாயில்லை…இங்கயே கூட பேசலாம்….நீங்க கொஞ்சம் அப்படி நின்னீங்கன்னா…” என்று சுற்றும் முற்றும் பார்த்தவர், தனலட்சிமி தள்ளிப் போய் நிற்பதற்கு எந்த சரியான இடமும் இல்லாததால் மீண்டும் முகிலை பார்த்தார். உடனே முகில், “நான் போய்ட்டு வரேன் அத்தை…நீங்க வீட்ல இருங்க…கேஸுக்கு உதவறதுக்கு தான இன்னேரத்தில இத்தன தூரம் வந்திருக்காரு…” என்றாள்.

“அதில்லம்மா…” என்று தனலட்சுமி இழுக்க, “அம்மா! போலீஸ் காரன்னா எல்லாருமே மோசமானவன்னு நினைக்காதீங்க…எவனையோ மாட்டி விட்டாச்சு, இதோட என் வேலை முடிஞ்சுதுன்னு நான் வீட்டுக்கு போயிருக்கலாம். உங்க மகன் தான் உண்மையான குற்றவாளியா இல்ல, தப்பான இடத்தில இருந்தததால அவரு மாட்டிகிட்டாரான்னு எனக்கே சந்தேகமா இருக்கறதால தான் இங்க நின்னு உங்களோட பேசிட்டு இருக்கேன்…பத்து நிமிஷத்தில நானே கொண்டு வந்து உங்க வீட்ல விட்டுடறேன்…என்னை நம்புங்க…”

அரை மனதோடு தனலட்சுமி தலையசைக்க மீண்டும் லிஃப்டிற்குள் ஏறியவர்கள் தனலட்சுமியிடம் முதல் தளத்தில் விடைபெற்று பத்தாவது தளத்தை அடைந்தனர்.

முகில் ஏதோ யோசனையில் ஒரு எண்ணை மாற்றி அழுத்த, கீ கீ என்ற சத்தத்துடன் சிகப்பு விளக்கு எரிந்தது. மீண்டும் அவள் சரியான எண்களை அழுத்த பச்சை விளக்கெரிந்து கதவு திறந்தது.

“மதுரையில இந்த மாதிரியெல்லாம் கதவு வச்சிருக்காங்களா?” என்று வியப்புற்று பரத் வினவ, ’அது ஒன்னுமில்லை. இந்த அபார்ட்மெண்ட் பில்டர்ஸ் மகன் தான் பில்டிங் சொல்யூஷன்ஸ்னு ஒரு கம்பெனி வச்சிருக்காரு…அதனால இதுல எல்லா கதவிலையும் இத தான் வைக்கனும்னு புதுசா வீடு வாங்கும் போதே இருபதாயிரம் சேத்து வாங்கிட்டாங்க…ஆனா ரெண்டு வருஷம் கழிச்சு இப்ப தான் வச்சிருக்காங்க…”

“ஓ…அந்த கம்பெனி எங்க இருக்குன்னு தெரியுமா?”

“அது…சரியா தெரியல…அண்ணா நகர்ல தான் எங்கயோ இருக்குன்னு நினைக்கறேன்…”

அண்ணா நகர் என்று முகில் சொல்லவும், அவருக்குள் அத்தனை நேரமாக ஓடிக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்தது. ’பில்டிங் சொல்யூஷன்ஸ்’ என்று திவ்யா அணிந்திருந்த அடையாள அட்டையில் அன்று மாலை தான் அந்த பெயரை பார்த்திருந்தார் பரத்!

[தொடரும்]

23 comments:

Raghav said...

கலக்கல்ஸ் ஆஃப் திவ்யா.. 11 பகுதிகள் முடிஞ்சும் எப்புடி சஸ்பென்ஸை மெயிண்டைன் பண்றீங்களோ..

Raghav said...

திவ்யா.. உங்க கதைகளேல்லாம் ஒரு e-book ஆப் போடலாமே.. மக்கள் பதிவிறக்கம் செய்து அனுப்ப வசதியாயிருக்கும்.. கதைக்குத் தகுந்த உங்க ஓவியங்களையும் சேர்த்து தயாரிங்களேன்..

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்.. உங்க கதைகள்லயே இதுதான் டாப்பு.. வாழ்த்துகள்.

Nimal said...

சூப்பர்.

நீங்க பேசாம மெகா சீரியலுக்க கதை எழுதலாம். இன்னும் சஸ்பென்ஸ விடாம எழுதறீங்க. வாழ்த்துக்கள்.

// Raghav said...
திவ்யா.. உங்க கதைகளேல்லாம் ஒரு e-book ஆப் போடலாமே.. //

ரிப்பீட்டே...!!!

sri said...

apppa dan brown novel maari mudichu mela mudichu suspense mela suspense :)

gils said...

manasaatchiye ileenga ungaluku...11 partkaprumum suspensa?

anbudan vaalu said...

a totally unexpected connection at the end???....eagerly waiting to read the next part.....

சங்கர் said...

Marmadhesam maadhiri ore marmamaa thaan poitu irukku.. pinreenga ponga..

GHOST said...

//கலக்கல்ஸ் ஆஃப் திவ்யா.. 11 பகுதிகள் முடிஞ்சும் எப்புடி சஸ்பென்ஸை மெயிண்டைன் பண்றீங்களோ..//


ரிப்பிட்டேய்ய்

தாரணி பிரியா said...

இப்பதான் 11 பாகமும் படிச்சு முடிச்சேன். சூப்பர் திவ்யா. ராகவ் சொன்னது போல e book formatla போடுங்களேன்

Prabhu said...

டமால் டுமீல் திருப்பம்!

FunScribbler said...

gr8 akka...keep going. when is next part??

Kadhambari Swaminathan said...

Suspense! konjam kooda kuraiyave illa!! Time factor-a romba azhagaa, kuzhappam vilaivikkaadha maadhiri nallaa handle panreenga.. Choice of words and sentence framing are excellent.. Awaiting the next part..
P.S: oru cinema eduthudunga.. tamil film industrykku ippavaavadhu oru nalla story kidaikkattum!!

Badri said...

I have ran out of superlatives..idhuku mela solradhuku edhuvum illa :)

G3 said...

//gils said...

manasaatchiye ileenga ungaluku...11 partkaprumum suspensa?
//

Repeatae.. Engala ellam paatha ungalukku paavamaavae theriyaliya divya !!!

Rajalakshmi Pakkirisamy said...

//நீங்க பேசாம மெகா சீரியலுக்க கதை எழுதலாம். இன்னும் சஸ்பென்ஸ விடாம எழுதறீங்க. வாழ்த்துக்கள்.

// Raghav said...
திவ்யா.. உங்க கதைகளேல்லாம் ஒரு e-book ஆப் போடலாமே.. ////

ரிப்பீட்டே...!!!

Divyapriya said...



@Raghav

நன்றி ராகவ்...நீங்க சொல்ற ஐடியா நல்லா இருக்கு...கூடிய சீக்க்ரம் implement பண்ணிட வேண்டியது தான் :)

----------------------------

@நிமல்-NiMaL

மெகா சீரியல் கதையா? அதுக்கு ஒரு ஆள் பத்தாதே ;)

----------------------------

@Srivats

dan brown ஆ? இது ரெம்ப ஓவரா இருக்கே :P

---------------------------

@gils

//manasaatchiye ileenga ungaluku...11 partkaprumum suspensa?//

கஷ்டப்பட்டு யோசிச்சு சஸ்பென்ஸ் வச்சா, நீங்க கூட மனசாட்சியே இல்லாம மொத்த கதையையும் ஒன்னா கேக்கறீங்க :))

---------------------------

@anbudan vaalu

thanks anbudan vaalu , i guess even the climax will be an unexpected one...

----------------------------

@சங்கர்

அப்படியா சங்கர்? ஓகே சங்கர்...நன்றிங்க சங்கர் :P

Divyapriya said...



@சஹானா beautiful raga

நன்றி சஹானா...தொடர்ந்து படிங்க...

----------------------------

@தாரணி பிரியா

wow...மொத்தமா படிச்சிட்டீங்களா? சூப்பர் தாரணி, நன்றி :)

----------------------------

@pappu

:))

----------------------------

@Thamizhmaangani

thx gayathri....next part இன்னும் எழுதியே முடிக்கல :( ஆனா இந்த வாரமே போட்டுடுவேன்...

----------------------------

@Kadhambari Swaminathan

thx Kadhambari...tamil film industry மேல ஏன் கோவம்? நல்லா அழகான கதைகள் வந்துட்டு தான இருக்கு? :)

---------------------------

@Badrinarayanan

thats ok bad...u can still repeat ur superlative vocabulary, i wont mind :P

---------------------------

@G3

என்ன பண்றது g3? நம்ம பொழப்பே தொடரும்ல தான் இருக்கு :) u know wat? எனக்கெல்லாம் சுத்தமா சஸ்பென்ஸே பிடிக்காது...கதையை படிக்க ஆரம்பிக்கும் போதே முதல்ல கடைசி பேஜ படிச்சிட்டு தான் படிக்க ஆரம்பிப்பேன்....படம் பாத்தாலும் முதல்லையே கதை கேட்டுடுவேன்...ஏன்னா, என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியாது :))

sindhusubash said...

வணக்கம் திவ்யா

உங்க பதிவுல வர்ற கதைகளை விடாம படிச்சுட்டு வரேன்..ஆனா பின்னூட்டம் போட மறந்துட்டேன்.

ரொம்பவே சுவாரஸ்யமாகவும்,த்ரில்லாவும் கொண்டு போறீங்க. வாழ்த்துக்கள்.அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்த்திட்டிருக்கேன்.

ஜியா said...

Ulti!!!

pari@parimalapriya said...

super Divya..just amazing... even after 11/13 parts r over by now.. still u r maintaining d suspense. tats gr8!!
next part seekiram plz!!!!

Divyapriya said...

@sindhusubash/ஜியா/pari

Thx a lot :)

Karthik said...

நான் ரொம்ம்ம்ப லேட்.. :((

செமயா இருக்கு. :))

pari@parimalapriya said...

Divya eppo next part???