Thursday, August 28, 2008
ச ரி க ம ப த நி சொல்லி தாரேன்…
அலங்காரம் வரைக்கு பாடியும் கூட, இந்த பிட்சு (pitch) பிரச்சனை மட்டும் சரி ஆகல…பிட்ச ஏத்தி, இறக்கறது எப்படின்னு ரொம்ப சரியா புரிஞ்சு வச்சுகிட்ட என்னோட அபாரமான இசை ஞானம் தான் அதுக்கு காரணம்.
பிட்ச்ச சரி பண்றதுக்காக, எங்க பாட்டு பாட்டி (பா.பா) ஒரு நாளு, மறுபடியும் பேசிக்ஸ்ல இருந்து ஆரம்பிச்சாங்க…
பா. பா : ச…ரி…க…ம…
நான்: ச…ரி…க…ம…
பா. பா: இன்னும் கீழ பாடும்மா…
சரின்னு நானும் கொஞ்சம் ட்ரை பண்ணி,
நான்: ச…ரி…
பா. பா: இல்ல, இல்ல, இன்னும் கொஞ்சம் கீழ...
இன்னும் கொஞ்சம் ட்ரை பண்றேன்...ஹூம், ஹூ்ம், மறுபடியும் அதே...
பா.பா: சரி, ஸ்ருதிய ஏத்தி வெக்கறேன், அதோட சேந்து பாடு, இப்ப ஆரம்பிக்கலாம், ச…
நான்: ச…
பா.பா: இல்லமா, இன்னும் கொஞ்சம் கீழ...
நான்: மாமி! இதுக்கு மேல குனிய முடியாது, இன்னும் கீழன்னா, கீழ படுத்துட்டு தான் பாடனும்…
பா.பா: ஹாஆஆ...
அடுத்த க்ளாசுக்கு போனா "பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, இன்னும் ஒரு மாசத்துக்கு க்ளாஸ் இல்ல" ன்னு அவங்க வீட்ல சொல்லிட்டாங்க.
ரெண்டு மாசத்துக்கு அப்பால...
(ஃபோனில்) பா.பா: என்னமா, திவ்யா? க்ளாஸ் மறுபடியும் ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆறது, உன்ன காணமே...
நான்: அது வந்து…மாமி…எங்க வீட்டை வேற இடத்துக்கு மாத்திடோம். க்ளாசுக்கு வர முடியாதுன்னு நினைக்கறேன்...
ஏதோ என்னால அந்த பாட்டி உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துர கூடாதேன்னு ஒரு நல்லெண்ணம் தான் :-D
P.S: நிஜமாவே, குனிஞ்சு, குனிஞ்சு உக்காந்து பாடினா, பிட்சு கொஞ்சம் கம்மியான மாதிரி தான் இருந்துச்சு :-((
Friday, August 22, 2008
ஹயய்யோ ஹயய்யோ கடிச்சிருச்சு!
"யாராவது ஓடி வாங்க, ஓடி வாங்க…ஹெல்ப்….ஹெல்ப்…அது என்ன தாக்க வருது!!!"
சைக்கிள முடிஞ்ச வரைக்கும் தம் கட்டி வேகமா ஓட்றேன், ஹூம், ஹூம…இந்த நாயும் அதோட வேகத்த இன்க்ரீஸ் பண்ணுதே….கடவுளே! இப்ப என்ன பண்றது?
வேக வேகமா போய் எதோ ஒரு தெருவுக்குள்ள நுழையறேன்…என்ன இது, இப்டி ஒரு தெருவ நம்ம ஏரியாவுல பாத்ததே இல்லயே??? ஓ மை காட்!!! இது என்ன, இந்த தெரு ஒரு டெட் எண்டா??? ஆண்டவா!!!
நாய் வேற வேகமா ஓடி வருது…எனக்கு தான் இனி டெட் எண்டு…பேசாம சைக்கிள கீழ போட்டுட்டு, அந்த சுவர ஏறி குதிச்சு ஓடிட வேண்டியது தான், வேற வழியே இல்ல…
சரி, மொதல்ல நாய் எவ்ளோ தூரம் வந்துருக்குன்னு பாப்போம்…
ஆஆஆ…அம்மாஆஆஆஅ…
பின்னாடி வந்துட்டு இருந்த நாய பாத்தேன், ஆனா முன்னாடி இருந்த கல்ல பாக்கலையே…(இத தான் நாயை கண்டால், கல்லை கானோம்ன்னு சொல்லுவாங்களோ?!?!?)
சைக்கிளோட சேந்து நானும் குப்புறடிச்சு தொபுக்கடீர்ன்னு விழுந்துடேன்.
அப்படியும் கூட, இரக்க குணமே இல்லாத அந்த நாய், பக்கத்துல வருது…பக்கதுல வந்துடுச்சு…கடிக்க போகுது…
என்னோட பலம் எல்லாத்தயும் சேத்து, ஓங்கி அது முகத்துல விட்டேன் ஒரு குத்து!!!
அம்மாஆஆஆஆஆ!!!!
அட, யாருடா இது? நாய்க்கு லேடி வாய்ஸ்ல டப்பிங் குடுக்கறது??? அது மட்டுமில்லாம அம்மான்னு வேற கத்துது! துரத்தினது, நாயா இல்ல மாடா?
இதென்ன, திடீர்ன்னு என் பக்கத்துல அம்மா, அப்பா, அக்கா எல்லாரும் நிக்குறாங்க?!?!?!
கும்பர்கர்ணன் பரம்பரைல வந்த என்னை, அரும்பாடு பட்டு, குறைஞ்சது அரை மணி நேரமாவது போராடி, எக்ஸாம் அன்னிக்கு எழுப்பி விடுற, என்னோட குல தெய்வம், என் உடன் பிறப்பு,எனதருமை அக்கா, ஏன் இப்படி கப்பல் கவுந்த மாதிரி, கன்னத்துல கைய வச்சுகிட்டு நின்னுட்டு இருக்கா?!?!?!
ஹாஆஆஆ!!! இதென்ன, அவ வாய்குள்ள, ஒரு ரத்தப் பல்லு!!!
“ஹயய்யோ, நான் ஒரு நாய் கடிக்குற மாதிரி கனவு கண்டேனா…அதான், உன்ன நாய்யின்னு நினச்சு…”
“பேசாத, இந்த ஜென்மத்துல, இனி உன்ன எழுப்பி விட்டேன்னா, என்னன்னு கேளு…”
“ஹயய்யோ, ஹயய்யோ!!!”
P.S: இது பல முறை வந்த ஒரு கனவு, இப்ப கூட வருது :-) ஆனா, என்ன ஒன்னு, இது வரைக்கும் நாய் என்ன கடிச்சதில்லை, நான் கடிக்க விட்டதில்லை ;-) ஒன்னா நாய் முகத்துல குத்திடுவேன், இல்லன்னா, ரெண்டு கையால அதோட வாய அப்படியே பிடிச்சுருவேன் :-D
Saturday, August 16, 2008
எத்தனை விதங்களில் மனிதர்கள்!
எட்டு மணிக்கு, கொட்ற மழைல, வீட்ட விட்டு கிளம்பி, ஒன்பது மணிக்கு ஆட்டோ கிடைச்சு, 10.30 மணி வரைக்கும் மினர்வா சர்க்கிள் பக்கத்துல வாழ்க்கைய வெறுத்து, பெங்களூரு ட்ராஃபிக்க சபிச்சு, மெஜஸ்டிக் போய் சேரும் போது மணி 10.45.
இப்படி சாகசம் புரிஞ்ச ஆட்டோ காரர பாராட்டி, 300 ரூபாயா குடுத்துட்டு (அழுதுட்டு?!?!?), தல தெறிக்க ஓடி வந்து பாத்தா, 10.45 மணிக்கு வர வேண்டிய பஸ், சரியா அதுகாலை மூணு மணிக்கெல்லாம் வந்துடுச்சு!
இப்படி கெம்ப்பே கௌடா பஸ் ஸ்டாப்ல போட்ட நைட் அவுட்ல, நான் பாத்தா ஆச்சர்யமான மனிதர்கள்/நிகழ்வுகள்..., அப்பறம் அழகான மனிதர்கள்/நிகழ்வுகள்...இதெல்லாம் ஒரு பதிவா இங்கே...
முதல்ல ஆச்சர்யமான மனிதர்கள்/நிகழ்வுகள்
1. சுத்தியும் ஒரே சேறு, சகதி...பஸ்களின் ஹார்ன் சத்தம், புகை, நெடி...நள்ளிரவு தாண்டியும் பஸ் வராத கடுப்பு...பேக கீழ கூட வெக்க முடியாம கைல தூக்கிட்டே நிக்க வேண்டிய நிலைமை...இதெல்லாம் போதாதுன்னு, நச, நசன்னு விடாம தூறிட்டு இருந்த மழை! இப்படி அத்தைனையும் ஒரே சமயத்தில தாக்குனா என்னங்க வரும்? சத்தியமா எரிச்சல் வரும்..ஆனா காதல் வருமா? சில பேத்துக்கு வந்துச்சே!!! ஒரே குடைக்கு கீழ, அங்க இருந்த எல்லோருக்கும் இலவச காட்சிகள காட்டிட்டு இருந்த சில ஜோடிகள்! ஆச்சர்யமான மனிதர்கள் லிஸ்ட்ல இவங்க தான் jodi no.1.
2. அதிகாலை ரெண்டு மணிக்கு கூட, ஊருக்கே கேக்குற மாதிரி பீட்டர் விட்டுகிட்டு இருந்த சில அல்ட்ரா மாடர்ன் பொண்ணுங்க!
3. சரியா 12 மணிக்கு, பிளாஸ்டிக் தேசிய கொடிய வித்துட்டு இருந்த ஒரு வியாபாரி! (யாருமே அத வாங்கலைங்கறதும், அதுக்கு அப்புறம் நடந்த டீ வியாபாரம் செம சூடு பிடிச்சதுங்கறதும் வேற விஷயம்!!!)
4. ஆனா இவங்களயெல்லாம் தூக்கி சாப்ட, ஆச்சர்யமான மனிதர்கள்னா அது இவங்க தான்... இந்த உலகத்துல நடக்குறது எனக்கு எதுவுமே தெரியாதுங்கர மாதிரி, பெட்ல ஹாயா படுத்துட்டு பேசுற எஃபெட்ல முகத்த வச்சுக்கிட்டு, ராத்ரி ஒன்னு, ரெண்டு மணிக்கு கூட வறு, வறுன்னு, வறுத்துட்டு இருந்த, நம்ம கடலை மன்னர்கள்/மன்னிகள்! இவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஜூரி அவார்ட்!
இவங்கள பாக்கும் போது எனக்கு ஒரு புதுக்குறள் தோனுச்சு...
போடுக கடலை போடுக போட்டபின்
பில்லுகட்டுக அதற்குத் தக.
5. Last, but not the least…அடிச்ச காத்துல இத்து போன ஒரு குடையோட, சார்ஜ் இல்லாம செத்து போன ஒரு ஃபோனோட, அங்கேயே நிக்கவும் முடியாம, பெங்களூர் விட்டுக்கு திரும்பி போகவும் நாதி இல்லாம, தனந்தனியா ரெண்டு மணிக்கு பஸ் ஸ்டாப்ல நின்னுகிட்டு இருந்தாலும், சுத்தி நடக்கறதெல்லாம் பாத்துகிட்டு, எதையெல்லாம் நாளைக்கு ப்ளாக்ல போடலாம்னு தீவிரமா யோசிச்சிட்டு இருந்த ஒரு விந்தையான பொண்ணு!!!
சரி, இப்ப அழகான சில மனிதர்கள், சில நிகழ்வுகள்...
1. ரயில் சிநேகிதம் மாதிரி, ஆங்காங்கே நிகழ்ந்த சில பஸ் ஸ்டாப் சிநேகிதங்கள், பல உரையாடல் and stuff, அழகு...
2. 12 மணிவரைக்கும் இந்தியாவுக்கு இன்னும் சுகந்திரமே கிடைக்கலைங்குற மாதிரி சோகமா முகத்தோட திரிஞ்ச ரெண்டு பரிச்சயமில்லாத பசங்க, அதுக்கப்புறம் 2.30 மணி வரைக்கும் அவங்களுக்குள்ள சிரிக்க சிரிக்க ஏதோ பேசிக்கிட்டது, அழகு...
3. தனியா நின்னுட்டு இருந்த எனக்கு பேச்சுதுணைக்கு கிடச்ச, சசி, சந்துரு என்ற கலகலப்பான கசின்ஸ், அழகு...
4. பஸ்ல என் பக்கத்து சீட்ல, ஒடஞ்ச விழற மாதிரி ஒல்லியா, அத விட மெல்லிய, அழகான குரலோட, என் நெருங்கிய தோழி போல என்னோட பேசிட்டு வந்த அன்பான பெண் சரண்யா, அழகு…
5. அந்த சசியுடன் வந்த சந்துரு ஆகட்டும், தத்தம் மனைவிகளுடன் வந்த கணவன்மார்கள் ஆகட்டும், இல்ல, சில நண்பர் கூட்டங்கள்ள இருந்த பசங்க ஆகட்டும், அவங்களோட வந்திருந்த பெண்கள, குடையோட பத்திரமா நிக்க வச்சுட்டு, 5, 6 முறை, சலிக்காம, பஸ் வந்துடுச்சா, வந்துடுச்சான்னு விசாரிச்சுட்டு வந்துட்டே இருந்தாங்க...
தன் சொந்தமோ, தோழியோ, தெரிந்த பெண்ணோ, தன்னோட வந்த ஒரு பெண்ணின் பாதுகாப்புக்கும், சௌகரியதிர்க்கும் தான் பொறுப்புங்கற responsibility and feeling, இந்த பசங்களுக்கு எப்போ, எப்டி வருது? ஆனாலும் இவங்களோட பொறுப்பு உணர்ச்சி தாங்க முடியலப்பா...சரி, என்ன தான் இருந்தாலும், உண்மைய ஒத்துக்கிட்டு தான ஆகணும்? இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு...
Monday, August 11, 2008
A for Apple
A
http://arusuvai.com/
ஹ்ம்ம்…படித்தாலே நாக்கு ஊரும் :)
B
http://www.blogger.com
http://www.britannica.com/
C
http://www.cooltoad.com/
பழைய பாட்டு download செய்ய…
http://profile.iiita.ac.in/pkmallick_03/
crack the interview site
http://www.craftsinindia.com/glass-paintings/
glass painting patters பார்க்க
D
http://www.dhingana.com/
தமிழ், ஹிந்தி, மற்றும் பாப் பாடல்கள் கேட்க…
http://www.dinamalar.com/piraidhalgal/piraithalmain.asp
வார இதழ்களை ஒரு முன்னோட்டம் பார்க்க…
E
http://erail.in/
இது irctc க்கு alternative…
http://en-us.www.mozilla.com/en-US/firefox/customize/
firefox ல் சேர்ந்திருக்கும் புதிய add-on களை பார்க்க…
F
http://coming-bak-to-life.blogspot.com/
freeze - one of the world's best photographer :)) my friend shiva's blog space…
G
http://www.google.com/transliterate/indic/Tamil
I
http://www.india-crafts.com/
இதுவும் painting patterns பார்க்க…
L
http://lyricwiki.org/
www.the-leaky-cauldron.org/
ஹரி பாட்டர் பற்றின புதிய செய்திகள், படங்கள் பார்க்க…
M
http://musicmazaa.com/
நிறைய, நிறைய தமிழ் பாடல்கள், ரீமிக்ஸ் பாடல்கள் கேட்க…
N
http://nilacharal.com/
கதை, கவிதைகள்
O
http://www.orkut.com/
நண்பர்களோடு வம்படிக்க மட்டும் :))
P
http://www.healthizen.com/
A personal health calculator...
http://prabhukrish.net/
நான் படித்த முதல் ப்ளாக்…நானும் எழுத ஆரம்பித்த்தற்க்கு பெரிய inspiration...
Q
http://www.quillpad.com/tamil/
"sorry this service is not available" என்று கூகில் கைவிடும் போது, உபயோகிக்க…
R
http://reader.google.com/
http://redbus.in/
பஸ் tickets பார்க்க…
W
http://www.warnerbros.com/
மீண்டும்... ஹரி பாட்டர் பற்றின புதிய செய்திகள், படங்கள் பார்க்க…
Y
http://www.youtube.com/
I tag 3 of my precious blog friends here