Monday, October 20, 2008

3rd year - 5

பாகம் 1பாகம் 2பாகம் 3, பாகம் 4

“பாட்டி! பாட்டி! கதவ திற…”

 

கடைசி பரிட்சையை அரை மணி நேரம் முன்னதாகவே முடித்து விட்டு, லீவ் விட்ட சந்தோஷத்தில் வீட்டுக்கு வேகமாய் வந்த அனு, பாட்டி அதிக நேரம் கதவைத் திறக்காமல் இருக்கவும், வெளியே நின்று பெல் அடித்துக் கொண்டு, கத்திக் கொண்டிருந்தாள்.

 

உள்ளே இருந்து வந்து கதவை திறந்த பாட்டிய பார்த்ததும், லீவ் சந்தோஷம் எல்லாம் பறந்து போனது அனுவுக்கு.

 

நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு, நிரம்பிய வேதனையான முகத்துடன் வந்த பாட்டிய பார்த்ததும் ஒரு நிமிடம் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

 

“பாட்டி…என்ன ஆச்சு பாட்டி…”

 

“அனு….அனு….” பாட்டியால் அதுக்கு மேல பேச முடியல.

மெதுவாய் பாட்டியை நடத்திக் கொண்டு போய் சோஃபால உக்கார வைத்துவிட்டு டாக்டருக்கு ஃபோன் பண்ண போன அனுவிற்க்கு, பாட்டியின் தீனமான குரல் ஒலித்தது.

 

“அனு…தண்ணி….தண்ணி…”

 

ஓடி போய் தண்ணிர் எடுத்து வந்து, பாட்டி குடித்த பின்னர், வேக வேகமாய் டாக்டருக்கு ஃபோன் செய்தாள், “அங்கிள்…நான் அனு….”

 

“அனு, சொல்லுமா…என்ன விஷயம்?”

 

“அங்கிள், பாட்டிக்கு…”

 

அதற்க்கு மேல் டாக்டருக்கு ஒன்றுமே கேட்கவில்லை, “அனு, அனு…ஹலோ, ஹலோ…அனு…”

 

அனுவுக்கும் டாக்டர் சொன்னது எதுவுமே கேட்கவில்லை, ஃபோன் ரிசீவர் கீழே தொங்கிக் கொண்டிதுந்தது, தன் மடியில் சரிந்த கிடந்த உயிரில்லாத, அவளின் உயிரான பாட்டிய, பல நிமிடங்கள் பிரம்மை பிடித்தது போல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். தன் கண்களை ஒரு நொடி பார்த்துக் விட்டு, பின் மேலே எழுந்த பாட்டியின் ஒளியிழந்த கண்களுக்குள் எதையோ தேடுவது போல ஊடுருவி பார்த்துக் கொண்டே இருந்தாள். எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ, அவளுக்கே தெரியாது. அந்த நிமிடங்கள் பல யுகங்களாய் கடந்தன.

 

டங் டங் என்று அந்த அறையின் கடிகாரம் பன்னிரெண்டு முறை அடித்து ஓய்ந்தது.

--------------------

 

முழங்காலிட்டு அமர்ந்து, தலைய அதில் புதைத்து, வாழ்கையே பறி குடுத்தது போல் அமர்ந்திருந்த மகளை பார்த்து, சாதாரணமாக எதற்க்கும் கலங்காத ரகுநாதன் கூட உடைந்தே போய்விட்டார், அம்மா இறந்த செய்தி வந்த உடனே கிளம்பியவருக்கு, அம்மா போன துக்கத்த விட, மகள் தனியாக என்ன செய்வாளோ என்கிற கலக்கம் தான் அதிகமாக இருந்தது.

 

பாட்டி இறந்து இரண்டு நாள் கழித்து வந்து இறங்கிய அம்மா, அப்பாவை பார்த்ததுமே, அனு, ’அம்மாஆஅ’ என்று ஒடி போய் அம்மா மடியில் படுத்து அழ ஆரம்பித்து விட்டாள்.

 

அனுவை தேற்றும் நிலையிலும் அவள் அம்மா இல்லை, அவரும் அனுவுடன் சேர்ந்து ’ஓ’ என்று அழுக ஆரம்பித்து விட்டார். திருமணம் ஆன நாள் முதல், சொந்த பெண் போல் பார்த்துக் கொண்ட மாமியாரை, கடைசி காலத்துல் உடன் இருந்து கவனித்துக் கொள்ள முடியாமல் போன துக்கம் தான் அவருக்கு அதிகமா இருந்தது.

 

“அனு…ஈஸி…பாட்டி லிவ்டு ஹெர் லைஃப், கஷ்டப்படாம போய்டாங்கன்னு நினைச்சுக்கோ…” கொஞ்சம் கூட குரல் பிசிராமல், தெளிவாக பேசிய அப்பாவை ஆச்சர்யமாக பாத்தாள் அனு.

 

அப்படியே, அனு அப்பா அம்மா கிளம்ப வேண்டிய நாளும் வந்தது.

HOD சண்முகமும், ரகுநாதனும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

“ஹ்ம்ம்…சரி, சண்முகா…அனுவ பாத்துக்கோன்னு நான் சொல்ல வேண்டியதில்லை…”

 

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன்…ஆனா, அனு தான் பாட்டிய ரொம்ப மிஸ் பண்ணுவா…என்ன அனு?”

 

அனுவிடமிருந்து ஒற்றை வரியில் “ஹ்ம்ம்…” என்று பதில் வந்தது.

 

ரகுநாதன், “என்ன தான் சொல்லு, அம்மா போய்டாலும், கடைசி காலத்துல கஷ்டமே படாம டக்குன்னு போய்ட்டாங்க பாரு, ஒரு விதத்துல எனக்கு சந்தோஷம் தான் சண்முகா…”

 

அது வரை பெரிதாக எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து அனு, “எப்படிப்பா உங்கனால இப்படி பேச முடியுது? செத்தது வேற யாரும் இல்ல, உங்கம்மா…”

 

“ஹா ஹா…என்ன அனு, எனக்கு தெரியாதா? உண்மைய தான சொன்னேன். பாட்டி ரொம்ப காலம் பெட்டோட படுத்து கஷ்டப்பட்டு…அப்படி எல்லாம் எதுவும் ஆகலையே, அத தான் நல்லதுன்னு சொன்னேன்…”

 

“ஆமா…உண்மை தான், ஏன்னா பாட்டிக்கு உடம்பு சரியில்லாம போயிருந்தா, நீங்கள்ள வச்சு பாத்திருக்கனும்? இப்படி பாட்டி திடீர்ன்னு செத்தது உங்களுக்கு நல்லது தான் பா” குரலில் ஒரு வித வெறுப்போட சொன்னாள் அனு.

 

ஏதோ வேலையாய் இருந்த அனுவின் அம்மாவுக்கு அனு பேசியதை கேட்டு கோபம் பொத்துக் கொண்டு வந்தது, “அனு!!! என்ன பேசுற? உங்கப்பா கிட்ட பேசிட்டு இருக்கேன்னு ஞாபகம் இருக்கா?

 

“இருக்கு, நல்லா இருக்கு, பெத்த அம்மா செத்துடாங்களேன்னு கொஞ்சம் கூட கவலை இல்லாம, வந்ததுல இருந்து, she lived her life…what a great death…கஷ்டம் குடுக்காம போய்டாங்க, அது இதுன்னு சந்தோஷமா பேசிட்டு இருக்காரு.!!!”

 

ரகுநாதன், “இப்ப என்ன அனு சொல்ல வர?”

 

“என்ன சொல்றது? அவங்கனால உங்களுக்கு இப்ப எந்த பிரியோஜனமும் இல்ல, அதனால தான், உங்களுக்கும் கஷ்டம் குடுக்காம போய்டாங்கன்னு குதிக்கறீங்க…You just threw her off like an old useless bucket”

 

“அனு!!!”

 

மகளை பார்த்து ஒரு வார்தை கூட அதிர்ந்து பேசாத ரகுநாதன், பக்கத்து வீட்டுக்களுக்கே கேட்பது போல் கத்தவும், சண்முகம்,

 

“ரகு…பொறுமையா பேசுப்பா…”

 

“என்ன சண்முகா சொல்றா இவ? ஏன் இப்படி எல்லாம் பேசுறா? எனக்கு ஒன்னுமே புரியலப்பா…”

 

“விடு ரகு, சின்ன பொண்ணு, புரியாம பேசுறா…அத போய் பெருசா எடுத்துக்கிட்டு, சரி வாங்க, நேரம் ஆகுது, கிளம்புங்க, இப்ப காலேஜ் போனா சரியா இருக்கும்…”

 

“ஷீலா! அனுவோட திங்ஸ் எல்லாம் பேக் பண்ணியாச்சா? கிளம்புவோம்…”

 

“உங்க பொண்ணையே கேளுங்க…”

 

“ஏன்? என்ன அனு, ரெடியா இல்லையா?”

 

“நான் ஹாஸ்ட்டலுக்கு எல்லாம் வரல, இந்த வீட்ல இருந்தே காலேஜுக்கு போறேன்…”

 

“விளையாட நேரம் இல்ல அனு! இங்கிருந்து தனியா போவியா? அது மட்டும் இல்லாம, இந்த வீட்ட வச்சுகிட்டு இனிமே என்ன பண்றது? இத பாக்கறதுக்காக எல்லாம் என்னால இன்னொரு தடவை வர முடியாது, விக்கறதுக்கு பேசி வச்சிட்டேன்…”

 

“என்னது, விக்க போறீங்களா? என்னப்பா சொல்றீங்க...” கேட்கும் போதே அனுவுடைய குரல் பாதி உடைந்து அழுகையாக தான் வெளிப்பட்டது.

 

“ஆமா அனு, இனி இந்த வீடு எதுக்கு…”

 

“எதுக்கா? இது தான் பாட்டி கடைசியா இருந்த வீடு, பாட்டி இன்னும் இங்க தான் இருக்காங்க, இந்த வீட்டையா விக்க போறீங்க?”

 

“Don’t be silly anu…”

 

“silly? I am damn serious…நான் இந்த வீட்ட விட்டு எங்கயும் போக மாட்டேன்…நானும் பாட்டியும் இருந்த வீடு, இங்க இருக்குற ஒவ்வொரு செங்கல்லையும் எங்க சிரிப்பு சத்தம் கேக்கலையா உங்களுக்கு? அதோ அந்த இடத்துல தான்…பாட்டி எனக்கு சாதம் ஊட்டி விடுவாங்க, அங்க சாப்பாட்டா தான் என்னால சாப்ட முடியும்…அதோ அந்த இடத்துல தான்…நான் பாட்டி மடில படுத்துகிட்டு, கதை கேட்டுகிட்டே தூங்குவேன்…அங்க படுத்தா தான் எனக்கு தூக்கம் வரும்…அதோ அங்க தான்….”அதுற்கு மேல் பேச முடியாமல் ’ஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள்…

 

அனு அழுவதை பார்த்த அவள் அம்மா, பெருகி வங்க கண்ணீரை கூட துடைக்காமல் செய்வதறியாது அப்படியே திகைத்து நின்று கொண்டிருந்தார்.

 

ஆனா ரகுநாதன் மட்டும், “என்ன பேசுறா இவ? பைத்தியம், கியித்துயம் பிடிச்சுருச்சா இவளுக்கு…” அதற்க்கு மேல் அவரை பேச விடாமல், சண்முகம் ரகுநாதனை வெளியே தள்ளிக் கொண்டு போனார்…

 

“ஏய்…இப்ப எதுக்குப்பா உனக்கு இந்த வீட்டை விக்கனும்? பணம் ஏதாவது வேணும்ன்னா என்னை கேளு…”

 

“என்னப்பா நீயும்? பணத்தக்காக இல்லை, இந்த வீட்டை பாக்குறதுக்காக மறுபடியும் இந்த ஊருக்கு வர முடியுமா? அனுவும் ஹாஸ்டல் போக போறா, இந்த வீட்ட என்ன பண்ண சொல்ற?”

 

“அட்லீஸ்ட் அனு படிச்சு முடிக்குற வரைக்கும் இருக்கட்டுமே…”

 

ஒரு வழியாக, அழுது அடம் பிடித்த அனுவை ஆறாவது செமெஸ்டர் முதல் நாள், ஹாஸ்டலில் சேர்த்தார்கள்.

 

ஹாஸ்ட்டலில் அனுவும், அவள் அன்புத் தோழிகள் இருவரும் ஒரே அறையில் இருந்தும், தனிமையின் உச்சத்தில் அனு…

 

இன்று

மணி: இரண்டு

ஹாஸ்டலில் தன் தோழிகளோடு ஏற்பட்ட சண்டையை நினைத்தவுடன், அனு கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.

20 comments:

சிம்பா said...

திவ்யா எனக்கு தெரிஞ்சு வேற எந்த பதிவுக்கும் இவளவு அவசரமா வந்து படிச்சதில்லை.
படிச்சுட்டேன். இப்போ இரண்டு முறை... மனசு கனமா இருக்கு.. உண்மையா..

//…You just threw her off like an old useless bucket”//

//நானும் பாட்டியும் இருந்த வீடு, இங்க இருக்குற ஒவ்வொரு செங்கல்லையும் எங்க சிரிப்பு சத்தம் கேக்கலையா உங்களுக்கு?//

என்ன அருமையான வரிகள். எனக்கு ஒன்னு தெரிஞ்சாகனும். இது உண்மையா நடந்ததா..

இதுக்கு மேல இங்க என்ன எழுதிறதுன்னு தெரியல...

Raghav said...

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே முதல் ஆளாய் வந்தேன்...

Raghav said...

சே செகண்ட் ஆளா...

Raghav said...

இப்போ பதிவுக்கு வருவோம்.

அனுவின் உணர்ச்சிப் பெருக்கை நல்லா காட்டிருக்கீங்க. பாசத்தை அனுபவித்தவர்களால் தான் அனுவின் நிலையை உணர முடியும்.

Raghav said...

//பெத்த அம்மா செத்துடாங்களேன்னு கொஞ்சம் கூட கவலை இல்லாம, வந்ததுல இருந்து, she lived her life…what a great death…கஷ்டம் குடுக்காம போய்டாங்க, அது இதுன்னு சந்தோஷமா பேசிட்டு இருக்காரு.!!//

இப்பல்லாம் நிறைய இடங்கள்ல இதுதாங்க நடக்குது.

Raghav said...

என்னமோங்க, அனு என்னை ரொம்ப யோசிக்க வைச்சுட்டா.. அவளின் கேள்விகள் என்னால் மறக்க முடியாதவை.

Badri said...

Enna irundhalum Raghunathan konjam over...Amma sethadhuku konjam kooda feel pannave maatengarar...US la irundha effect o?

Anonymous said...

பாட்டி கதைய சொல்லி ரொம்ப ஃபீல் பண்ண வச்சுட்டீங்க... திருப்பங்களோட போன காதல் கதையில் ஒரு செண்டிமெண்ட் சீன்.

அனுவுக்கும் பாட்டிக்குமான உறவு நெஞ்சைப் பிழிந்தது..

தொடருங்கோ

முகுந்தன் said...

திவ்யப்ரியா,

மனம் ரொம்ப கனத்து விட்டது....

@ராகவ்
//
பாசத்தை அனுபவித்தவர்களால் தான் அனுவின்
நிலையை உணர முடியும்.//

ரொம்ப சரி......

Hariks said...

//அதோ அந்த இடத்துல தான்…பாட்டி எனக்கு சாதம் ஊட்டி விடுவாங்க, அங்க சாப்பாட்டா தான் என்னால சாப்ட முடியும்…அதோ அந்த இடத்துல தான்…நான் பாட்டி மடில படுத்துகிட்டு, கதை கேட்டுகிட்டே தூங்குவேன்…அங்க படுத்தா தான் எனக்கு தூக்கம் வரும்//

அனுவின் குழ‌ந்தை த‌ன‌த்தை ரொம்ப‌ அழ‌கா வெளி காட்டிருக்கீங்க‌.

Hariks said...

திரில்ல‌ர்ல‌ இருந்து சென்டிக்கு கொண்டு போய்ட்டீங்க‌! ரொம்ப‌ க‌ன‌மான‌ வ‌ரிக‌ள். பாச‌த்தின் உச்ச‌ரிப்பு!

தொட‌ர்ந்து எழுதுங்க‌

Unknown said...

Super akka..!! :))

Vijay said...

kaathal kathaiyaaka aarambiththu, kalluuri kalaattaavaaka maaRi, paatti pEththi paasaththai kuzaiththu, ippOthu paattiyin maraNaththaal siRithu nerutal ERpaduththi, round katti adikkaRiingka. appappa Ethaavathu paattu kittu pOttu vittiingkanna, appadiyE Ethaavathu producer kitta pEsi advance vaangkidalaam.

Disclaimer: The tamil conversion site suddenly stopped working. That's why I copy pasted the English content here. You can copy the english content onto a tamil conversion site and see the Tamil version of my comment. Hahahaha!!!!

MSK / Saravana said...

அட. எவ்ளோ அருமையா எழுதாறீங்க.. கிரேட்...

ரொம்ப புடிச்சிருக்கு நீங்க எழுதறது..

MSK / Saravana said...

மனச ரொம்ப டச் பண்ணிடுச்சி கதை..

ஜியா said...

:)))

எனக்கு என்னமோ ஓவர் சினிமாட்டிக்கா இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்.... தெரியல...

Divyapriya said...சிம்பா


ஃபீல் பண்ணி கமெண்டினதுக்கு நன்றி சிம்பா…


// எனக்கு ஒன்னு தெரிஞ்சாகனும். இது உண்மையா நடந்ததா…//


உண்மை எல்லாம் இல்ல, முழுக்க முழுக்க கற்பனை கதை தான் :)

---

Raghav said...

//சே செகண்ட் ஆளா...//


அச்சசோ :)


//என்னமோங்க, அனு என்னை ரொம்ப யோசிக்க வைச்சுட்டா.. அவளின் கேள்விகள் என்னால் மறக்க முடியாதவை.//


நன்றி ராகவ்…

---

Badrinarayanan said...

//Enna irundhalum Raghunathan konjam over...Amma sethadhuku konjam kooda feel pannave maatengarar...US la irundha effect o?//


Raghunathan is a matured person bad!!! :)


---

மதி said...

//பாட்டி கதைய சொல்லி ரொம்ப ஃபீல் பண்ண வச்சுட்டீங்க... திருப்பங்களோட போன காதல் கதையில் ஒரு செண்டிமெண்ட் சீன்.//

ஏற்கனவே சொன்ன மாதிரி, இது காதல் கதை இல்ல, பாட்டி கதைல தான், ஒரு காதல் சீன் :)

//அனுவுக்கும் பாட்டிக்குமான உறவு நெஞ்சைப் பிழிந்தது..
தொடருங்கோ//

நன்றிங்கோ

Divyapriya said...முகுந்தன் said...

//திவ்யப்ரியா,
மனம் ரொம்ப கனத்து விட்டது.... //


ரொம்ப நன்றி முகுந்தன்

---

Murugs


திரில்ல‌ர் கதை போல இருக்கா? :) நன்றி Murugs…


---

ஸ்ரீமதி


நன்றி தங்கச்சி :)

---

விஜய்

என்னவோ தெரியல, இந்த கதைக்கு ஒரு பாட்டும் தோனல…ஆனா, கதை ஒரு சின்ன பாட்டோட தான் முடியுது :)

Offline tool எதாவது download பண்ண வேண்டியது தானே ;)

---
Saravana Kumar MSK

பாராட்டுக்கு ரொம்ப நன்றி சரவணன்…

---

ஜி said...

//எனக்கு என்னமோ ஓவர் சினிமாட்டிக்கா இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்.... தெரியல...//


அச்சசோ…இனி வர பகுதி எல்லாம் இத விட கொஞ்ச டூ மச்சாவே இருக்கும்னு நினைக்கறேன் :( சரி, எப்படியோ…அடுத்த பகுதிகள படிச்சுட்டு இதே போல இருந்தா சொல்லுங்க…

அப்ப சினிமாவுக்கு கதை எழுதலாம்னு சொல்லுங்க ;)

Badri said...

@divya

Being matured is different but being stoic is entirely different think..the way Raghunathan sounds in your story does not portray as a matured man in my view...I m with anu in this case after all the person who died is his MOTHER which according to me is the most beautiful piece of Gods creation in this universe

Anonymous said...

Etha padithavudan etho ondru manathai uruthukirathu enanu thriyala......!