"ஹேய் கவி!!!என்ன ஆச்சு? காந்தி செத்த நியூச இப்ப தான் கேட்ட மாதிரி முகத்த வச்சிருக்க?" நக்கல் சிரிப்போடு அனு கவிதாவை பார்த்து கேட்டாள். லேப் முடிந்து வந்த அனுவும் இளமதியும், வேறு ஒரு லேபில் இருந்து வந்த கவிதாவை அப்போது தான் பார்த்தனர்.
கவிதா, "இங்க வேண்டாம்...வாங்க, ஒரு முக்கியமான விஷயம்..."
அவர்கள் இருவரையும் காரிடாரின் கடைசி வரை இழுத்துக் கொண்டு போன கவிதா, கவலை தோய்ந்த முகத்தோடு "இளம்ஸ்...நீ சொன்னது சரியா தான் போய்டுச்சு..."
இளமதி, "என்ன கவிதா? என்ன விஷயம்ன்னு சொல்லு மொதல்ல..."
கவிதா, "அனு! இன்னிக்கு எங்க லேப்ல பசங்க பேசிட்டு இருந்தத கேட்டேன்... பாலா உன்ன அவனோட ஆளுன்னு சொல்லிட்டு திரியரானாம்...ஹாஸ்ட்டல் முழுக்க இப்ப இது தான் ஓடிட்டு இருக்கு போல இருக்கு...லீவ்லயே ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாமேன்னு என்கிட்டயே கேக்கறாங்க!!!"
எப்போதும் பால் போல வெண்மையாய் இருக்கும் அனுவின் முகம் ஒரு நொடியில் ரத்தக் சிவப்பானது...
"என்னது??? அப்படியா சொன்னான்?" அனு துரிதமாக நடக்க ஆரம்பிக்கவும்,
இளமதி, "அனு! எங்க போற?"
அனு,"இப்பயே போய் அவன என்னன்னு கேக்கறேன்...How dare he is!!!"
கவிதா, "ஆமா அனு! எவ்ளோ கொழுப்பு இருக்கணும் அவனுக்கு!!! வா, நேரா HOD கிட்ட போய் சொல்லுவோம்..."
இளமதி, "உங்க ரெண்டு பேத்துக்கும் என்ன பைத்தியமா? சின்ன விஷயத்தப் போய்..."
அனு, "வாட்??? சின்ன விஷயமா? எப்டி இளம்ஸ் உன்னால..."
இளமதி, "பாரு அனு...கோவபடாம கொஞ்சம் பொறுமையா யோசி...சும்மா ஏதாவது கிண்டலுக்கு ஓட்டி இருந்துருப்பாங்க... இதுக்கெல்லாமா ரியாக்ட் பண்ணுவாங்க? Just ignore it…அவ்ளோ தான்..."
அனு,"நீ தான் இளம்ஸ் லூசு மாதிரி பேசற...ஓட்டறது வேற...அதுக்காக இப்படியா ஹாஸ்ட்டல் ஃபுல்லா ஆளு அது இதுன்னு பேசுவாங்க? அவன என்னன்னு கேக்காம விடறதில்ல...ஒரு கை பாத்துக்கறேன் அவன..."
பேசிக்கொண்டே அனு, இறுதி ஆண்டு வகுப்பறைக்குள் நுழைந்தாள். அப்பொழுது தான் காலை இடைவேளை முடியும் நேரமென்பதால், எல்லோரும் மீண்டும் வகுப்பறைக்குள் வந்து கொண்டும், அங்குமிங்கும் நின்று பேசிக் கொண்டும் இருந்தார்கள்.
நம் ஹீரோ பாலா, கால்களை அகல பரப்பி, வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டு, பெஞ்சில் தாளம் போட்டுக் கொண்டிருந்தான்.
அவனருகில் சென்று அவனை முறைத்துக் கொண்டு நின்ற அனுவை பார்த்ததும் அவன் கைகள் தாளம் போடுவைதை தானாக நிறுத்தி விட்டு, கண்கள் அனுவை கேள்விக்குறியோடும், ஆச்சர்யத்தோடும் நோக்கின.
மிரட்டும் தொனியில் அனு, "என்ன பாலா!! என்னை உன் ஆளுன்னு உன் பிரெண்ட்ஸ் கிட்ட சொன்னியா?"
உடனே பதறிப் போய் எழுந்து நின்ற பாலா "இல்ல அனு...அது வந்து..." என்று இழுக்கவும், அனு பிடிவாதமான குரலில், "சொல்லு! சொன்னியா, இல்லையா?"
பாலா, “இல்ல….அது…சும்மா எல்லாரும் ஓட்டினாங்களா…அதான்…”
அனு,”அதுக்கு? நீயும் கூட சேந்து சொல்லிக்குவியா? என்ன சொல்லி வச்சிருக்க? மரியாதையா சொல்லு!”
கண்களில் ஒரு சின்ன சிமிட்டலோடு பாலா, "ஆமா!!! சொன்னேன்...இப்ப இல்லன்னாலும், கூடிய சீக்கரத்துல அதுவே உண்மையாக கூட ஆக..." அவன் பேசி முடிக்கும் முன்பே, அந்த அறையே ஸ்தம்பிக்கும் வண்ணம் பளார் என்ற சத்தம் கேட்டது.
கைகளை கன்னத்தில் வைத்துக் கொண்டு, நடந்ததை நம்ப முடியாமால் உறைந்து போய் நின்றிருந்த பாலாவையும், ஓடிக் கொண்டிருந்த காட்சியை ’பாஸ்’ பட்டன் சொடுக்கி நிறுத்தியது போல் அப்படியே நின்று விட்ட மற்ற மாணவர்களையும், திரும்பி கூட பார்க்காமால், அனு அந்த அறையின் வாயிலை நோக்கி காற்றை மிஞ்சும் வேகத்தில் புயல் போல் நடக்க ஆரம்பிக்கவும் தான், சுயநினைவுக்கு வந்தவர்களாய், இளமதியும், கவிதாவும் அவள் பின்னால் தலை தெறிக்க ஓடினார்கள்.
அதிகம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத இளமதி முகத்தில் கூட அன்று எள்ளும், கொள்ளும் வெடித்தது. என்ன விதமான உணர்ச்சி என்றே பிரித்துப் பார்க்க முடியாத ஒரு குழப்பம் கவிதாவின் முகத்தில்.
ஆனால் அனுவோ, அம்மன் படத்தில் கடைசியில் வரும் அம்மன் முகம் போல், கோபம் தணிந்து சாந்த சொரூபியா காட்சியளித்துக் கொண்டிருந்தாள்.
இளமதி, "Seriously anu!!! You are an emotional idiot!!!"
அதை சட்டை செய்யாமல் அனு தொடர்ந்து நடக்கவும், இளமதி, "அனு! என்ன தான் இருந்தாலும், நீ அவன அடிச்சது தப்பு...அப்படியே அவன் செஞ்சது தப்பா இருந்தாலும், அவன தனியா கூப்ட்டு சொல்லி இருக்கலாமே? அத விட்டுட்டு, இப்படியா? மொத்த க்ளாஸ் முன்னாடி? ச்சே..."
அனு, "என்ன தைரியம் இருந்தா என்கிட்டயே வந்து,”ஆமா, சொன்னேன் இப்ப என்ன’ன்னு அவ்ளோ தெனாவெட்டா பேசுவான்? என்ன யாருன்னு நினைச்சான்?"
அனு பொருமித் தள்ளவும், கவிதா, "ப்ளீஸ் அனு! காம் டௌன்... க்ளாசுக்கு லேட் ஆச்சு..வாங்க"
---
காலையில் இருந்து உர்ரென்று இருந்த இளமதியையும், எதையும் சட்டை செய்யாதது போல் நடந்து கொண்ட அனுவையும் வைத்துக் கொண்டு கவிதாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைசி பீரியடும் வந்துவிட்டது. ஆனால் அவர்கள் இருவருமே சமாதானம் ஆவது போல் எந்த வித அறிகுறியும் தெரியவில்லை.
அவள் ஏதாவது பேசினாலும், அதற்குறிய பதிலை மட்டும் அளித்து விட்டு மெளன நிலைக்கு போனாள் இளமதி. ’அட ச்சே…அடி வாங்கினது என்னவோ, அவன்…இவள அடிச்ச மாதிரி இவ்ளோ பிகு பண்றாளே’ என்று இளமதிக்கு கேட்காத வண்ணம் அனுவிடம் நகைச்சுவையாக சொல்லி பார்த்தாள், ஆனால் அனுவோ, “ஹய்யோ…very funny!” என்று நக்கலாக பதிலளித்து விட்டு அந்த பக்கம் திரும்பி கொண்டாள். ’என்னடா இது, ஒரே பெஞ்சில ஆயுத எழுத்து மாதிரி உக்காந்திருக்கமே’ என்று நொந்து கொண்டவளுக்கு அப்போது தான் ஒரு உத்தி தோன்றியது. வயிற்றை பிடித்து கொண்டு ஒரு விதமாக முகத்தை மாற்றி, “ஹய்யோ…அம்மா…ரொம்ப பசிக்குதே…இந்த க்ளாஸ் முடிய வேற இன்னும் அரை மணி நேரம் இருக்கு…”
உடனே நோட்ஸ் எடுப்பதை நிறுத்து விட்டு இளமதி, “அச்சச்சோ…ரொம்ப பசிக்குதா கவி? க்ளாஸ் முடிஞ்ச உடனே கான்டீன்னுக்கு போவோம்…”
’ஹ்ம்ம் சரி’ என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன கவிதாவின் கையில், குனிந்து கொண்டு தன் பையில் எதையோ நோண்டிக் கொண்டிருந்த அனு, ஒரு டைரி மில்க் மிட்டாயை தினித்தாள்.
வகுப்பு முடிந்ததும், மூவரும் கான்ட்டீனை நோக்கி எதுவுமே பேசாமல் புறப்பட்டனர்.
கவுன்டர் அருகே சென்ற உடன் இளமதி, “என்ன கவி சாப்டற?” என்று தனது பையை திறந்து கொண்டே கேட்கவும்,
கவிதா ஒரு வித குறும்பு சிரிப்புடன், “இல்ல, இல்ல…நீ பேக மூடு, இன்னுக்கு அனு தான் ட்ரீட்…”
அதுவரை அமைதியாக இருந்த அனு, “என்னது? நானா? எதுக்கு?” என்று வினவ,
கவிதா, “என்ன அனு? தெரியாத மாதிரி கேக்குற? இன்னிக்கு எவ்ளோ பெரிய காரியம் பண்ணி இருக்க? ஜான்ஸி ராணி மாதிரி ஃபைனல் இயர் க்ளாஸ் ரூம்குள்ள மார்ச் பண்ணி போய் ஒரு பையன அறைஞ்சுட்டு வந்துருக்க…இதுக்கு ட்ரீட் குடுக்கல்லன்னா எப்படி?”
ஹா ஹா ஹா என்று சத்தமாக சிரித்துக் கொண்டு அனு, “கவி!!!! நீ தாம்மா என் பெஸ்டு ஃபரெண்டு” என்றவாறு அவளை தோளோடு கட்டிக் கொண்டாள்.
இதை சிறுதும் எதிர்பார்க்காத இளமதி, “அட ச்சே…உங்க ரெண்டு பேத்தையும் திருத்தவே முடியாது” என்று தலையில் அடித்துக் கொண்டாலும், அவர்களுடன் சேர்ந்து அவளும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவர்களின் சிரிப்பொலி கான்டீன் முழுதும் அழகாக ரீங்காரமிட்டது.
---
அனு வீட்டிற்குள் நுழைந்ததும், அவள் பாட்டி பல்லவியை ஆரம்பித்து விட்டார்.
அனு, “உனக்கெப்படி பாட்டி தெரியும்? அதுக்குள்ள அந்த இளமதி ஃபோன் பண்ணி வத்தி வச்சுடாளா?”
உடனே பாட்டி, “ஆமா…அந்த பொண்ணு ஃபோன் பண்ணி சொல்லன்னா, நீ சொல்லி இருக்க மாட்டியாக்கும்? ஏன் அனு இப்படி பண்ண?”
அனு, “எனக்கு பசிக்குதுஉஉஉ”
“ஏம்மா? ஒரு பையன அவன் க்ளாஸ்ல அத்தன பேர் முன்னாடி வச்சு அடிக்கலாமா? தப்பில்லையா?”
“போ பாட்டி! உன்ன மாதிரி கோவப் படாம எல்லாம் என்னால இருக்க முடியாது…ஓவரா பேசினான், So I taught him a lesson…that’s it!!!”
“என்ன அனு குட்டி இப்படி பேசுற?”
ஏதேதோ பேசி, ஒரு வழியாய் பாட்டியை சமாதானப் படுத்தினாள் அனு. தினமும் சாப்பிட்டு முடித்ததும், டீ.வியை போட்டுக் கொண்டு, ஆனால் அதை பார்க்காமல், அரட்டை அடித்துக் கொண்டிருப்பது தான், பாட்டி பேத்தியின் வேலை. அன்றிரவும் வழக்கம் போல், பாட்டி மடியில் படுத்துக் கொண்டு டீ.வி பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.
“ஏன் அனுகுட்டி… அந்த பையன் வீடு இங்க தான இருக்கு?”
“ஆமா! அதுக்கென்ன இப்ப?”
“அவங்க அப்பா, அம்மா கிட்ட சொல்லி இருந்தா, அவங்க கண்டிக்க போறாங்க…நீ போய் ஏம்மா அவனோட வம்பு வளத்துட்டு வந்துட்ட? நாளைக்கு அவன் உன்ன எதாவது பண்ணிட்டான்னா…”
“ஹய்யோ பாட்டி! நிறுத்து…நீ இருக்கும் போது என்னை யாரு என்ன பண்ண முடியும்? சரி, அதெல்லாம் விடு…இப்ப நீ உன் கதையை சொல்லு…தாத்தா ஒன்னு சொல்லுவாரே, அத சொல்லு…”
“அட போ!!! எத்தன தடவ தான் கேப்ப?” என்று பாட்டி அலுத்துக் கொள்ளவும், சிரித்த படி அனு, “ஹா ஹா…சும்மா வெக்கப் படாம சொல்லு பாட்டி!!!”
நினைவின் அழகிய சுழல்களில் விரும்பி போய் சிக்கி கொள்வது மனித இயல்பு தானே? அந்த சுருங்கிய முகத்திலும் லேசான வெட்கம் குடியேற, அதரத்தில் புன்னகை மலர, கண்களில் இரு நட்சதிரங்கள் மின்ன, பாட்டி அவர் கதையை ஆரம்பித்தார். “கல்யானம் ஆன புதுசு…உங்க தாத்தா வேலை செய்ற ஆஃபீஸுக்கு என்னை கூட்டிடு போயிருந்தாரு, அப்ப அங்க இருந்த எல்லாரும், உங்க மனைவியை அறிமுகப் படுத்தலையேன்னு கேக்கவும், ஒரு நிமிஷம் கூட யோசிக்காம உங்க தாத்தா,
இவங்க தான்
“என் அன்பு மனைவி
என் ஆருயிர் தோழி
என் ஆசை கண்மணி
என் அருமை காதலி”
ன்னு சொன்னாரு…
பாட்டி சொல்லி முடிக்கவும், எப்போதும் போல அனுவும், “copy cat…copy cat…இருவர் படத்துல வர மாதிரி இருக்கு…” என்று கத்தவும், பாட்டு, “போடி! அப்பெல்லாம் அந்த படம் வரவே இல்ல” என்று வழக்கம் போல் மறைந்த தன் கணவருக்காக வக்காலத்து வாங்கினார்.
அப்படியே சிரித்துக் கொண்டும், கதை பேசிக் கொண்டும் அன்று பாட்டி மடியிலேயே தூங்கி போனாள் அனு.
இப்படியே ஆடி, பாடி ஒரு வழியாக ஐந்தாவது செமஸ்டர் தேர்வும் வந்தது.
மறுநாள் கடைசி பரிட்சை, அனு படித்துவிட்டு தூங்க போகும் போது மணி ஒன்று.
படுக்கையறைக்குள் தட தடவென நுழைந்த அனுவை திடுக்கிட செய்தது அந்த நேரத்தில் பாட்டியின் தெளிவான குரல், “ஏன் அனுகுட்டி…இப்படி ஓடி வர?”
“பாட்டி! நீ இன்னும் தூங்கலையா? மணி ஒன்னாச்சு, தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க?”
“தூக்கம் வரல தங்கம்…ஆமா, ஏன் இப்படி தல தெறிக்க ஓடி வர?”
“லைட் ஆஃப் பண்ணிட்டேனா…அதான், பயந்துட்டு வேகமா வந்தேன்…”
“அடப் புள்ள, இங்க லைட்ட போட்டுட்டு, அப்புறம் ஹால்ல லைட்டு ஆஃப் பண்ணிட்டு இங்க வர வேண்டியது தான?
“இங்க லைட்ட போட்டா நீ எந்துருச்சிடுவியே…அதான்”
“ஹய்யோ…என் ராசாத்தி!!! வா, வந்து படு வா…”
அப்போது அனுவுக்கு தெரிந்திருக்கவில்லை, அன்று தான் பாட்டியுடன் படுத்து உறங்கும் கடைசி இரவு என்று அனுவுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
மறுநாள் காலை, அந்த வீடு வழக்கத்துக்கு மாறாக விடிந்தது. பாட்டி தூங்கிக் கொண்டிருக்க, அனு அவசர அவசரமாய் கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.
அனு கிளம்பும் அரவம் கேட்கவும், வேக வேகமாக ஓடி வந்த பாட்டி, “அனு! சாப்டாமயே கிளம்பிட்டயா? இரும்மா…ஐஞ்சே நிமிஷத்துல எதாவது செஞ்சு குடுக்கறேன்…”
“பாட்டி…நான் நூடில்ஸ் செஞ்சு சாப்ட்டுட்டேன்…உனக்கும் இருக்கு, நீயும் சாப்பிட்டு ரெஸ்ட் எடு…நான் கிளம்பறேன்…வந்து கதவ பூட்டிக்கோ”
கதவருகே வந்து நின்ற பாட்டி அனுவை ஒரு நொடி இமைக்காமல் பார்த்து விட்டு, “அனு! All the best” என்றார்.
பரிட்சையை சீக்கரமே முடுத்து விட்டு, விடுமுறை சந்தோஷத்துடன் வீட்டுக்கு துள்ளி குதித்தபடி ஓடி வந்தாள் அனு. அதன் பிறகு, ஒரு சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்த விட்ட சம்பவங்கள் நீண்ட நாட்கள் அவள் நினைவை விட்டு அகல மறுத்தது. பாட்டி இறந்ததை விட, அவர் இறந்த விதம் தான் அவளை மிகவும் உலுக்கி விட்டது.
[தொடரும்]
20 comments:
padam top gear la poitruku...interval scene vandhachu nenaikaren...hoping that the second half of story is equally riveting ...
பர பர முன் நிகழ்வுகள். அந்த வேகத்தை அப்படியே கடைசீ வரை கொண்டு போயிருக்கீங்க. சரியான அளவு dialogue. கான்டீன் மேட்டர் வரும்போது கூட அங்க நடந்த நிகழ்வ மட்டும் சொன்னீங்க. அழகு.
அதற்க்கு பின் வருபவை அடுத்த பகுதிக்கான அருமையான அடித்தளம்.
இழுக்காம சொல்லனும்னா ரொம்ப நல்லா இருக்குங்க...
சீக்கிரமா அடுத்த பதிவ போடுங்க.
//பாட்டி இறந்ததை விட, அவர் இறந்த விதம் தான் அவளை மிகவும் உலுக்கி விட்டது.//
ஏன்.?? பாட்டிக்கு என்னாச்சி??
// சிம்பா said...
பர பர முன் நிகழ்வுகள். அந்த வேகத்தை அப்படியே கடைசீ வரை கொண்டு போயிருக்கீங்க. சரியான அளவு dialogue. கான்டீன் மேட்டர் வரும்போது கூட அங்க நடந்த நிகழ்வ மட்டும் சொன்னீங்க. அழகு.
அதற்க்கு பின் வருபவை அடுத்த பகுதிக்கான அருமையான அடித்தளம்.
இழுக்காம சொல்லனும்னா ரொம்ப நல்லா இருக்குங்க...
சீக்கிரமா அடுத்த பதிவ போடுங்க.//
ரிப்பீட்டு.........
ரிப்பீட்டு.........
ரிப்பீட்டு.........
ரிப்பீட்டு.........
ரிப்பீட்டு.........
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. வந்து பாருங்க..
:))
//
“என் அன்பு மனைவி
என் ஆருயிர் தோழி
என் ஆசை கண்மணி
என் அருமை காதலி” //
எனக்கு மிகப் பிடித்தமான வரிகள்..
காதல் கதை இப்போ திரில்லர் மாதிரி இவ்வளவு வேகமா போய்ட்டிருக்கு.
ரொம்ப சூப்பரா இருக்கு கதை களம்.
அடுத்த பகுதியை சீக்கிரமாவே போட்டுடுங்க
இப்படியா ஒரு பையன பப்ளிக்கா அடிக்கறது.. ஆனாலும் அனு பண்றது ஓவருங்க.. :)
ஹ்ம்ம்.. அப்புறம் என்ன நடந்துச்சு.. பாட்டிக்கு என்னாச்சு?
இந்த கதையை படமா எடுத்தா பாலா கேரக்டருக்கு சூப்பர் ஹீரோ ஒருத்தர ரெக்கமண்ட் பண்ணலாம்னு இருக்கேன்...
சீக்கிரமா அடுத்த பாகத்தை எழுதுங்க..
பாகத்துக்கு பாகத்துக்கு வேகம்'னு குங்குமம் மாதிரி விளம்பரம் செய்யலாம் போலிருக்கு. அவ்வளவு விருவிருப்பு. காதல் கதைக்குள் பாட்டி பேத்தி பாசம். சூப்பரோ சூப்பர்.
அருமையாக கதையை நகர்த்திட்டு போறீங்க திவ்யப்ரியா, பாராட்டுக்கள்:))
[அனைத்து பகுதியும் ஒன்றாக இந்த வீக்கெண்ட் தான் படிக்க நேரம் கிடைத்தது, Sorry for my late attendence Divyapriya:(]
Keep writing & keep rocking my thosth:)))
badrinarayanan
டாப் கியர் யா? தாங்க்ஸ் ;)
---
சிம்பா
நன்றி சிம்பா...சிகரமே அடுத்த பகுதி...உங்க தொடர் வருகைக்கு, நன்றி...
---
saravana kumar msk said...
//ஏன்.?? பாட்டிக்கு என்னாச்சி??//
பாட்டிக்கு வயசு ஆய்டுச்சு :) சும்மா கதைக்கு ஒரு ஹைப்பு தான் ;)
---
raghav
நன்றி ராகவ்
---
முருக்ஸ்
சீக்கரமே அடுத்த பகுதி...
மதி said...
//இப்படியா ஒரு பையன பப்ளிக்கா அடிக்கறது.. ஆனாலும் அனு பண்றது ஓவருங்க.. :)//
பாவம் சின்ன பொண்ணு அனு...பெரிய மனசு பண்ணி, மன்னிச்சு விட்டுடுங்க...
//இந்த கதையை படமா எடுத்தா பாலா கேரக்டருக்கு சூப்பர் ஹீரோ ஒருத்தர ரெக்கமண்ட் பண்ணலாம்னு இருக்கேன்...//
அந்த ஹீரோ பேர சொல்லாம விட்டதுக்கு கோடி நன்றிகள் ;)
---
விஜய்
பாகத்துக்கு பாகத்துக்கு சூப்பர் பின்னூட்டம் போடறதுக்கு நன்றி விஜய்...
// காதல் கதைக்குள் பாட்டி பேத்தி பாசம். சூப்பரோ சூப்பர்.//
இல்ல, பாட்டி கதைக்குள்ள தான் காதல் வந்துடுச்சு :)
---
divya
ஞாபகம் வச்சு படிச்சு, கமெண்டினதுக்கு நன்றி திவ்யா...பொறுமையா படிங்க..:)
திவ்யப்ரியா ,
அசத்தல் போங்க... எதவாது producer கிடச்சா பாருங்க... படம் பிச்சிட்டு போகும்.
அக்கா முன்னமே படிச்சிட்டேன்..!! Very nice..!! :)) பட் பாட்டி, மரணம் அப்படிங்கறதெல்லாம் எனக்கு கொஞ்சம் கவலையான விஷயம்.. சோ பின்னூட்டம் போட இவ்ளோ நேரம் ஆச்சு... :)
really superb when ur next release.....?
Gowtham
:(((
//என் அன்பு மனைவி
என் ஆருயிர் தோழி
என் ஆசை கண்மணி
என் அருமை காதலி//
vaasicha udane enakkum Iruvar thaan nyabagam vanthathu :))
//அந்த அறையே ஸ்தம்பிக்கும் வண்ணம் பளார் என்ற சத்தம் கேட்டது.//
மறுபடியும் பெண்ணிய கொள்கைகளை கையில் ஏந்திய தி.பியை கன்னா பின்னாவாக கண்டமேனிக்கு கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்... கண்டிக்கிறேன்... கண்டிக்கிறேன்... ;)))
முகுந்தன்
படமா? ஹீ, ஹீ அப்ப நீங்க தான்
producer...ok?
---
ஸ்ரீமதி
ஐயோ...அவ்ளோ சோகமா?
;)
---
gowtham
Thanks gowtham
---
ஜி
ஹா ஹா :) செம பெண்ணிய கொள்கைகளா இருக்கா? எல்லாம் உங்க ஊக்கம் தான் ;)
//படமா? ஹீ, ஹீ அப்ப நீங்க தான்
producer...ok?
//
நீங்க சும்மா தான் இருந்தீங்களா? நானா தான் சிக்கினேனா ...
அவ்வ்வ்வ்வ் :))
Post a Comment