Tuesday, October 7, 2008

3rd year - 2

பாகம் 1

கல்லூரியை நோக்கி நடந்தவாரே, சென்ற ஒரு வாரத்தில் அனுவிடம் தெரிந்த மாற்றங்கள் குறித்து, கவலையோடு சொல்லிக் கொண்டிருந்தாள் இளமதி.

கவிதா, “என்ன இளம்ஸ்? இப்ப வந்து சொல்ற? முன்னாடியே எனக்கு கால் பண்ணி சொல்லி இருக்கலாம்ல? போ…” கவிதா வேறு எக்ஸாம் ஹால் என்பதாலும், உடனே ஊருக்கு கிளம்பிவிட்டதாலும் அவளுக்கு அனுவை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை.

“என்னை என்ன பண்ண சொல்ற கவி? லாஸ்ட் எக்ஸாம் அன்னிக்கு, ஹால விட்டு வெளிய வந்ததுமே, உன்கிட்ட அவ சீக்கரமா போனத பத்தி சொல்ல ஆரம்பிச்சேன்…நீ தான் எதுவும் கேக்கல, அப்புறம் உடனே ஊருக்கு வேற ஓடிட்ட…”

“சரி விடு, இப்ப டிபார்ட்மெண்ட் போய் பாப்போம்…”

எதிரில் யார் வருவது என்று கூட பார்க்காமல் சென்று கொண்டிருந்த அவர்களை நிறுத்தினாள், அவர்களின் வகுப்புத் தோழி சுமித்ரா. வம்பு பேசுவதென்றால், கரும்பு சாப்பிடவது போல சுமித்ராவுக்கு.

“ஹேய் இளமதி…கன்கராட்ஸ்…நீ தான் க்ளாஸ் ஃபர்ஸ்டாமே…”

“தாங்ஸ்…” என்று கூறி உடனே அங்கிருந்து நகரப் பார்த்தாள். கவிதாவோ நிற்கக் கூட இல்லை.

“யேய்…இரு, இரு, நம்ம அனு பாத்தியா? இவ்ளோ நாளா க்ளாஸ் ஃபர்ஸ்டு வாங்கிட்டு, இப்ப அரியர்ஸ் விழுந்துடுச்சு…அனு போய் கப் வப்பான்னு யாருமே எதிர் பாக்கலைல்ல? எல்லாம் அந்த பாலானால தான், இப்ப என்னடான்னா, அதுவும் புட்டுகிச்சு…”

இளமதி பதறிப் போய் “என்ன சுமித்ரா சொல்ற?”
எட்ட நின்ற கவிதாவும், உடனே அவர்கள் அருகில் வந்தாள்.

“உங்களுக்கு தெரியாதா? இன்னிக்கு காலைல தான் யாரோ பேசிகிட்டாங்க…எதோ ப்ரச்சனையாம்…அவங்களே, இனிமே அவ்ளோ தான்னு முடிவு பண்ணிட்டாங்களாம்!”

கவிதாவும், இளமதியும் இதற்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் விக்கித்து நின்றார்கள். அவர்கள் எதிர் பார்த்தது தான், நடக்க வேண்டும் என்று ஆசைப் பட்ட ஒன்று தான். இருந்தாலும், அனுவின் நிலையை நினைத்துப் பார்த்தால், சிறிது கலக்கமாகத் தான் இருந்தது. இவ்வளவு பிரச்சனைக்கு நடுவில், நாமும் வேறு அவளோடு கோபித்துக் கொண்டு பேசாமல் இருந்தோமே, என்று நினைத்து, கவிதாவின் கண்களில் நீர் முட்டியது.

---

HOD சண்முகத்திற்கு சிறிதல்ல, பெரும் கலக்கமாகவே இருந்தது. விரக்தியின் உச்சியில், தன்னிலை அறியாமல் கத்திக் கொண்டு நின்ற சிறு பெண்ணிடம் கோபம் காட்டி அவளை சாந்தப் படுத்துவதா, இல்லை சமாதானமாக பேசிப் பார்ப்பதா என்று விளங்காமல் குழம்பித் தவித்தார். “எனக்கு ஹாஸ்டல் பிடிக்கல…இந்த காலேஜ் பிடிக்கல…இந்த ஊரும் பிடிக்கல…எதுவுமே பிடிக்கல…” மீண்டும் ஒரு முறை அவள் சொன்ன வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ள முயற்சித்து தோற்றுப் போனார்.

“அனு…பாட்டி போனப்புறம் உன்னை ஃபோர்ஸ் பண்ணி ஹாஸ்ட்டல்ல சேத்தது உனக்கு பிடிக்கல, புரியுது…valid reason…ஆனா, இந்த காலேஜ் உன்னை என்ன பண்ணுச்சு? இல்ல, இந்த ஊர் தான் என்ன பண்ணுச்சு?”

“யு.யெஸ் ல இல்லாத ஸ்கூலா, காலேஜா? அப்புறம் எதுக்கு என்னை கொண்டு வந்து இங்க தள்ளினாரு எங்கப்பா? சொல்லுங்க அங்கிள், சொல்லுங்க?”

“இவ்ளோ நாள் இதெல்லாம் பிடிச்சு தான இங்க இருந்த? இப்ப மட்டும் என்ன வந்துச்சு? யு. யெஸ் ல இத விட பெரிய பெரிய காலேஜ் இருக்கு, வேர்ஸிட்டீஸ் இருக்கு…ஆனா, நம்ம காலேஜ், தமிழ் நாட்லயே, one of the finest. இங்க தான், நான், உங்கப்பா, உங்கம்மா எல்லாரும் படிச்சோம்…இங்க படிப்ப மட்டும் இல்ல, வாழ்கையும் கத்துகிட்டோம்…அந்த வயசுல அவனுக்கு கிடச்ச அனுபவங்கள், படிப்பினைகள், சந்தோஷங்கள் எல்லாத்தையும் நீயும் அனுபவிக்கனும்ன்னு குழந்தைத் தனமா ஆசைப்பட்டான் உங்கப்பன்…அது கூட ஒரு நியாயமான ஆசை தானே? அதுல தப்பெதும் இருக்கறதா எனக்கு தோனல…He has given you the best!!!”

“yeah…given me the best…ஹா…அங்கயே இருந்தா எங்க பொண்ணு ரொம்ப ஊர் சுத்துவாளோன்னு பயந்துட்டு, 10th முடிச்சவுடனே, என் மேல நம்பிக்கை இல்லாம என்னை இங்க அனுப்பி வச்சுருக்காரு”

“அனு! பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கனும்னு தான் எந்த அப்பாவும் நினைப்பாங்க…அதையா தப்புன்னு சொல்ற? இதுக்கு மேல என்னால உன்ன ஹேன்டில் பண்ண முடியாது…உங்கப்பா கிட்ட இப்ப தான் பேசினேன்…கொஞ்ச நேரத்துல கூப்பிடுவான்…நீயே அவனோட பேசிக்கோ…”

அவர் சொல்லி முடிப்பதற்குள் அவரது அலைபேசி அழகாய் பாடியது.

“ரகு தான்…நீயே பேசு…”

சிறிது நேரத்திற்கு பின் அலைபேசியோடு திரும்பி வந்த அனு, “அப்பா உங்ககிட்ட பேசனும்ன்னு சொல்றாரு”

எதிர்முனையில் ரகுநாதன், “சண்முகா…என்ன பண்றதுன்னே தெரியலப்பா…கொஞ்ச நாளாவே அவ சரியா பேசலை, எனக்கு ரொம்ப பயமா இருக்கு…ஷீலா வேற அழுக ஆரம்பிச்சுட்டா…”

“என்ன ரகு இது? நான் எதுக்கு இருக்கேன்? நான் பாத்துக்கறேன்…”

“இல்ல சண்முகா…போதும், படிப்பு அது இதுன்னு தனந்தனியா அவள விட்டு வச்சிருந்தெல்லாம் போதும்…ரொம்ப டிப்ரெஸ்டா இருக்கா…எங்கம்மா போனது இவ்ளோ தூரம் பாதிச்சிருக்குன்னா, நாங்க கூட இல்லாதது தான்ப்பா காரணம்…தப்பு பண்ணிட்டேன்…”

அது மட்டுமே காரணமில்லை என்று நண்பனிடம் எப்படி சொல்வது என்று தயங்கிக் கொண்டிருந்தவரிடம் அடுத்த குண்டை தூக்கிக் போட்டார் ரகுநாதன்.
“நான் டிக்கட் பாக்கறேன்…உடனே வந்து அவள கூட்டுட்டு போறேன்…நீ கொஞ்சம் டீ.ஸி க்கு மட்டும் ஏற்பாடு பண்ணிடுப்பா…”

“என்னது டீ.ஸீ யா? என்னப்பா நீயும்? அவ தான் ஏதோ சொல்றான்னா, உனக்கென்ன பைத்தியமா?”

“இல்ல சண்முகா…என் பொண்ணு இவ்ளோ டிப்ரெஸ்டு ஆகி நாங்க பாத்ததில்லை…அவ படிப்பு முக்கியம் தான், ஆனா அத விட அவ தான் எங்களுக்கு முக்கியம்…படிப்ப எப்ப வேணா கண்டின்யு பண்ணிக்கலாம்…”

அரை மனதாக சண்முகமும் நண்பனிடம் விடை பெற்று, இனைப்பை துண்டித்தார்.
பின்பு அனுவிடம், “சரி ஓகே அனு…யோசிச்சு முடிவு பண்ணுவோம்…ஹ்ம்ம்… இப்ப மணி என்ன? பன்னன்டா? ஆண்ட்டிய லஞ்சு ரெடி பண்ண சொல்றேன்…சாப்டுட்டு ரெஸ்ட் எடு, இப்ப ஹாஸ்டலுக்கெல்லாம் போக வேண்டாம்.”

“இல்ல அங்கிள்…வந்து…எனக்கு எங்க ஃப்ளாட்டுக்கு போகனும்…”

“அங்க போய் என்ன பண்ண போற?”

“இல்ல, கிளம்பறதுக்கு முன்னாடி பாட்டியோட திங்ஸ் எல்லாம் கொஞ்சம் எடுக்கனும்…அதான்…”

“எனக்கு வேற 1.30 டூ 5.30 ஒரு மீட்டிங் இருக்கேம்மா…சரி ஒன்னு பண்ணுவோம்…நீ நம்ம வீட்ல போய் சாப்டுட்டு ரெஸ்ட் எடு, 5.30 க்கு நானே உன்னை அங்க கூட்டிட்டு போறேன்…”

“இல்ல அங்கிள்…நானே போறேன்…ஆண்ட்டி கிட்ட டின்னருக்கு வரேன்னு சொல்லிடுங்க…”

மீண்டும் மீண்டும், கிளிப்பிள்ளை போல் சொன்னதையே சொல்பவள் மேல் எரிச்சல் மூண்டது அவருக்கு, கடுமையான குரலில், “நான் தான் உன்ன கூட்டிட்டு போறேன்னு சொல்றன்ல? அப்புறம் எதுக்கு அங்க தனியா போகனும்னு பிடிவாதம் பிடிக்கற?”

“இல்லல்ல, நான் கவிதா, இளமதி யாரையாச்சும் கூட்டிட்டு போலாம்னு தான் இருக்கேன்…”

“சரி, உன் இஷ்டம்…But remember, sharp 5.30, I am expecting you here…ok?”

“ஓகே அங்கிள்…”

---

அவசர அவசரமாக, படிகளில் ஏறி அவர்களது டிபார்ட்மெண்ட் தளத்துக்கு சென்ற இளமதியும், கவிதாவும், அந்த தளம் முழுக்க தேடிப் பார்த்தும், அனுவையோ HOD யையோ கண்டு பிடிக்க முடியாமல் அனுவை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர்.

“The subscriber you are trying to reach is currently switched off”

---

மணி, 12.15

ஷோபா அபார்ட்மெண்ட்ஸ், உயர்ந்து கம்பீரமாய் நின்றிருந்த அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் அமைந்திருந்த அவர்களது ஃப்ளாடிற்குள் நுழைந்தாள் அனு.

ஐந்து வருடங்களாக, அவளும் அவள் பாட்டியும் வாழ்ந்த, இல்லை இல்லை சிரித்து, மகிழ்ந்து, ஆடி, பாடி, விளையாடி, குதூகலித்த வீடு.
ஆனால், இன்று…அதற்கு சாட்சியாய் இருந்தது அந்த வீட்டின் செங்கல்கள் மட்டுமே!

உடலை துறந்த பின்னும், அனு நெஞ்சில் அன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருந்த அவள் பாட்டி, அழகாக சிரித்துக் கொண்டிருந்தார், சுவற்று ஆனியில் தொங்கியவாறே.

அனு! ஆறு மாதங்களுக்கு முன்பு, கவலை என்றால் என்னவென்றே தெரியாமல், பட்டு சிறகை விரித்து, சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி… அப்பா, அம்மா, பாட்டியின் செல்லக்கட்டி…க்ளாஸ் டாப்பர்…எல்லோரும் பார்த்து ஏக்கப் படும் அளவிற்கு கவிதா, இளமதியின் நட்புக்கு சொந்தக்காரி.

ஆனால் இன்று, காதல் தோல்வியில் சுக்கு நூறாக உடைந்து போன இதயம்… பாட்டி இல்லாத வெறுமை… அப்பா, அம்மா உடன் இல்லாத தனிமை…அது வரை வாழ்நாளில் அனுபவப் பட்டிராத பரிட்சை தோல்வி…நண்பர்களை பிரிந்த துயரம்…” இப்படி அத்தனை கழிவிரக்கங்க எண்ணங்களும், இரக்கமே இல்லாமல் அவளை ஆட்கொள்ள, டிப்ரஷனின் உச்ச கட்டதில் அனு!

ஆனால், இது எதுவுமே அப்போது அவள் மனதில் ஓடவில்லை. அவள் மனதில் அப்போது இருந்ததெல்லாம் ஒரே ஒரு கேள்வி தான்.

“மணி இப்ப பன்னன்டே கால்...மறுபடியும் என்னை 5.30 க்கு தான் தேடுவாங்க…அதுக்குள்ள சாகனும்னா, அதுக்கு என்ன வழி?”

சாகனும்ன்னு முடிவெடுக்கற அளவுக்கு அப்படி என்ன தான் அவளுக்கு பிரச்சனை? பெருசா, ஒரு பிரச்சனையும் இல்லங்க…எல்லாருக்கும் சாதாரணமா வர பிரச்சனைக தான். ஆனா, எல்லாமே ஒரே சமயத்துல சேந்து வந்ததுல, அனு ரொம்பவே சோந்து தான் போய்ட்டா பாவம்…

[தொடரும்]

21 comments:

முகுந்தன் said...

me the first!!

முகுந்தன் said...

//வம்பு பேசுவதென்றால், கரும்பு சாப்பிடவது போல சுமித்ராவுக்கு.//

நிறைய பேருக்கு அப்படிதான் :))

Badri said...

ra(n)gu nathan,sheela...hmm...engayo kelvipatta peru kadhai maari iruke :P...

Raghav said...

சான்ஸே இல்லை திவ்யப்ரியா.. கலக்கிருக்கீங்க.

கதை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குழப்பமில்லாமல் நகருகிறது.. வசனங்கள் தெளிவா இருக்கு.

ஒரு சினிமா பாணியில் கலக்கிருக்கீங்க.. ஏதாவது திட்டம் இருக்கா? தயாரிப்பாளரா நம்ம முதலாளி முகுந்தன் இருக்காரு. கண்டிப்பா ஒத்துப்பாரு.. அதுக்கும் மீ த ஃபர்ஸ்ட் சொல்வாரு.. :)

ஹீரோ யாருன்னு சொல்லவே வேண்டாம்... எல்லாருக்கும் தெரியும்.

முகுந்தன் said...

//யு. யெஸ் ல இத விட பெரிய பெரிய காலேஜ் இருக்கு, வேர்ஸிட்டீஸ் இருக்கு…ஆனா, நம்ம காலேஜ், தமிழ் நாட்லயே, one of the finest. இங்க தான், நான், உங்கப்பா, உங்கம்மா எல்லாரும் படிச்சோம்…இங்க படிப்ப மட்டும் இல்ல, வாழ்கையும் கத்துகிட்டோம்…அந்த வயசுல அவனுக்கு கிடச்ச அனுபவங்கள், படிப்பினைகள், சந்தோஷங்கள் எல்லாத்தையும் நீயும் அனுபவிக்கனும்ன்னு குழந்தைத் தனமா ஆசைப்பட்டான் உங்கப்பன்…அது கூட ஒரு நியாயமான ஆசை தானே? அதுல தப்பெதும் இருக்கறதா எனக்கு தோனல…He has given you the best!!!”
//

Super

முகுந்தன் said...

//அவ படிப்பு முக்கியம் தான், ஆனா அத விட அவ தான் எங்களுக்கு முக்கியம்…//

கலக்கி இருக்கீங்க திவ்யப்ரியா ...

Raghav said...

//
சாகனும்ன்னு முடிவெடுக்கற அளவுக்கு அப்படி என்ன தான் அவளுக்கு பிரச்சனை? பெருசா, ஒரு பிரச்சனையும் இல்லங்க…எல்லாருக்கும் சாதாரணமா வர பிரச்சனைக தான். ஆனா, எல்லாமே ஒரே சமயத்துல சேந்து வந்ததுல, அனு ரொம்பவே சோந்து தான் போய்ட்டா பாவம்…
//

இந்த லைன் தாங்க.. என்னோட மொத்த கவனத்தையும் ஈர்த்துருச்சு..

Vijay said...

Beautiful Flow. படித்து விட்டு உரைந்து போயிட்டேன்.
ஆனா இந்த காதலில் விழுந்தா இந்த மாதிரி தான் ஆகும். காதல் இனித்தால் அது போல் வேறொன்றுமில்லை. ஆனால் காதல் இனித்த காதல் கசக்கத் தொடங்கினால், அது உண்டாக்கும் பாதிப்பு சுனாமியைவிட கோரமானது.

இந்த உண்மையை ரொம்ப அழகாக வர்ணித்திருக்கிறீர்கள்!!

அதிலும் கூட இரண்டு கதாபாத்திரங்கள் கதைக்கு பெருகேற்றுகிறார்கள்.
வாழ்த்துக்கள்!!

Badri said...

//சாகனும்ன்னு முடிவெடுக்கற அளவுக்கு அப்படி என்ன தான் அவளுக்கு பிரச்சனை? பெருசா, ஒரு பிரச்சனையும் இல்லங்க…எல்லாருக்கும் சாதாரணமா வர பிரச்சனைக தான். ஆனா, எல்லாமே ஒரே சமயத்துல சேந்து வந்ததுல, அனு ரொம்பவே சோந்து தான் போய்ட்டா பாவம்…//

I do relate this one as well...sure you would know that too:-)

Divyapriya said...

முகுந்தன்
நன்றி முகுந்தன்...உங்களுக்கும் நிறைய வம்பர்கள தெரியுமா ? ;)

---
raghav
படம் மாதிரி இருக்கா? ஹா...உச்சி குளிர்ந்து விட்டது :))
இனிமே அடுத்த பகுதில இருந்து பிளாஷ் baak தான்...

---

badrinarayanan

பத்ரி...அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் ;)

Divyapriya said...

விஜய்

ரொம்ப நன்றி விஜய்...என்ன விட்டா காதல் தோல்விய பத்தி ஒரு தீசீசே பண்ணிடுவீங்க போல இருக்கே ;)
மற்ற இரண்டு கதாபாத்திரங்களும், அணுவும் அடுத்த பகுதில நேர்ல வருவாங்க...அப்ப உங்களுக்கு இன்னும் ஒரு நல்ல பிக்சர் கிடைக்கும்...

MSK / Saravana said...

ரொம்ப நல்லா இருக்கு.. தெளிவாவும் இருக்கு.. கிரேட்..
அடுத்த பகுதி எப்போ??

MSK / Saravana said...

ஆமாம். இந்த மாதிரி கதை கருவெல்லாம் எப்படி உங்களுக்கு தோன்றுகிறது.. கலக்கலா இருக்கு..

ஜியா said...

aaha!!!

vazakkamaana kaathal kathainuthaan nenachittu irunthen.. ippadi adichu aadareenga... kalakkunga.. vaazththukkal :))

Anonymous said...

Azhaga kathai sollittu poreenga...
Vaazhthukkal...

Hariks said...

ரொம்ப‌ யாதார்த்த‌மான‌ க‌தை போக்கு. ந‌ல்லா எழுத‌றீங்க‌.
உங்க‌ளுடைய‌ எழுத்துக்க‌ள் ரொம்ப‌ யுனிக்கா இருக்கு.

Unknown said...

யக்கா கதை சூப்பர்... ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கு... எதுக்கெடுத்தாலும் சிரிச்சே பழகிட்டேன்... இதுதான் உங்க வெற்றின்னு நினைக்கிறேன்..!!

Divyapriya said...

Saravana Kumar MSK
நன்றி சரவணன்...அடுத்த பகுதி நாளைக்கு...

//ஆமாம். இந்த மாதிரி கதை கருவெல்லாம் எப்படி உங்களுக்கு தோன்றுகிறது.. கலக்கலா இருக்கு..//

அப்படியா? ;) அதெல்லாம் திடீன்னு கனவுல தான் வருது ;)

----
ஜி
//aaha!!!

vazakkamaana kaathal kathainuthaan nenachittu irunthen.. ippadi adichu aadareenga... kalakkunga.. vaazththukkal :))//

இது காதல் கதை இல்ல ஜி...சும்மா வலியின் வீரியத்தை கூட்றதுக்காக, காதல் தோல்வியும் சேத்த வேண்டியதா போய்டுச்சு ;))

---
மதி
நன்றி மதி...

---
Murugs said...
//ரொம்ப‌ யாதார்த்த‌மான‌ க‌தை போக்கு. ந‌ல்லா எழுத‌றீங்க‌.
உங்க‌ளுடைய‌ எழுத்துக்க‌ள் ரொம்ப‌ யுனிக்கா இருக்கு.//

நன்றி Murugs ...
கடைசி வரைக்கும் யதார்தமாவே போகுதான்னு படிச்சிட்டு சொல்லுங்க :))

---
ஸ்ரீமதி
//யக்கா கதை சூப்பர்... ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கு... எதுக்கெடுத்தாலும் சிரிச்சே பழகிட்டேன்... இதுதான் உங்க வெற்றின்னு நினைக்கிறேன்..!!//

அச்சச்சோ...பீல் பண்ணாத மா...கதை அடுத்த பகுதில சிரிப்பு வருதான்னு சொல்லு, கொஞ்சம் ட்ரை பண்ணி இருக்கேன் :))

a said...

hey divya!! u'r blog is too good!! ippothan padichen... :-) u rock!!!

a said...

btw, this is arunpriya

Divyapriya said...

A said...
//hey divya!! u'r blog is too good!! ippothan padichen... :-) u rock!!!//

Hey Arun!!! Thanks a lot :)) continue reading n writing too...