"ஹேய்!!! ரிஸல்ட் வந்துடுச்சு… ரிஸல்ட் வந்துடுச்சு…" யாரோ உச்சஸ்தாதியில் கத்தவும், ஹாஸ்டல் முழுதும் பற்றிக் கொண்டது பரபரப்புத் தீ!
’தட தட தட’ ஹாஸ்ட்டலே அதிரும் அளவிற்க்கு சத்தம். விரித்து விட்ட கூந்தலோடு ஓடிக் கொண்டிருந்தாள் கவிதா.
"கவி! மெதுவா... இப்ப என்ன அவசரம்?" அதட்டும் குரலில், ஆனால் அமைதியின் திருவுருவாய் இளமதி.
"இல்ல இளம்ஸ், அப்புறம் சிஸ்டமே கிடைக்..."
அவர்களை கடந்து சென்ற அனுவை அப்போது தான் பார்த்தாள்...மேலே எதுவும் பேசாமல் அமைதியாய் அந்த இடத்தை விட்டு வேகமாய் நகர்ந்தாள் கவிதா.
இளமதி சற்றே தயங்கி நின்று, "அனு...செம் ரிஸல்ட்ஸ் வந்தடுச்சு...வா போய் பாக்கலாம்"
அவர்களை பார்த்தது போல் எந்த வித முகமாற்றமும் காட்டாமல், இளமதி பேசியது காதில் விழாதது போல், ஏதோ கனவில் நடப்பது மாதிரி மாடிப் படிகளில் ஏறலானாள் அனு.
முகம் கடுகடுக்க கவிதா, "உனக்கு அறிவே இல்லையா இளம்ஸ்? இப்ப எதுக்கு அவ கிட்ட போய் பேசி இப்படி வாங்கிக் கட்டிக்கற? அவ நம்மல மதிச்சாளா பாரு?"
இளமதி, "இல்ல கவி...உனக்குத் தெரியாது...அனு ஒரு வாரமாவே ரொம்ப ஒரு மாதிரயா இருந்தா..."
"அவ எப்படி இருந்தா உனக்கென்ன? “
“கவி…அவ நம்ம ஃபெரண்டு்!!!”
“ஹ்ம்ம் பெரிய ஃபெரண்டு…”
“சரி, சரி மறுபடியும் ஆரம்பிக்காத, வா போலாம்…”
எப்போதும் போல, இளமதியும் கவிதாவும் எதிர்பார்த்த மதிப்பெண்களே வாங்கியிருந்தாங்க.
நிம்மதி பெருமூச்சுடன் அந்த வின்டோவை மூடப் போன கவிதாவை, தடுத்தாள் இளமதி.“ஹே கவி…ஒரு நிமிஷம்…க்லோஸ் பண்ணிடாத…இரு அனுவோட மார்க் என்னன்னு பாப்போம்…”
அவளை முறைத்து விட்டு, அந்த வின்டோவை க்லோஸ் செய்ய போனவளின் கையை பிடித்து நிறுத்தி, மெளஸை பிடிங்கினாள் இளமதி.
அனுவின் ரோல் நம்பரை அடித்ததும், திரையில் தெரிந்த அனுவின் மதிப்பெண்களை பார்த்துக் கொண்டே வந்தர்வர்களுக்கு, கடைசியில் இருந்த மதிப்பெண்னை பார்த்ததும், ஒரு நிமிடம் அவர்கள் கண்களையே சந்தேகப்பட்டனர்.
எல்லா பாடங்களிலும் ஓரளவு நல்ல மதிபெண்களே இருந்த போதும், கடைசி பரிட்சையில் மட்டும், F என்று இருந்தது.
கவிதாவின் முகத்தில் ஆச்சர்யம், கூடவே அதிர்ச்சியும். ஆனால் இளமதியின் முகத்திலோ எப்போதும் இருக்கும் அமைதி, அதில் கொஞ்சம் வருத்தமும் தோய்ந்திருந்தது.
கவிதா, “என்ன இளம்ஸ்? F ன்னு காட்டுது…அனு நம்பர் தான்…ஏதோ தப்பா இருக்குமோ?”
“இல்ல கவி, அனு மார்க் தான்…” அன்று ஒரு மணி நேரத்திலேயே எக்ஸாம் ஹாலை விட்டு அரக்கப் பரக்க ஓடிய அனுவின் குழம்பிய முகம் இளமதி கண் முன்னால் ஒரு முறை தோன்றி மறைந்தது.
“வா கவி, போய் முதல்ல அனு எங்கன்னு பாப்போம்…”
அறை எண் 306, திறந்தே தான் கிடந்தது…ஆனால் அனுவை தான் காணவில்லை. அவளை அழைப்பதற்காக, கைபேசியை எடுத்த கவிதாவை நிறுத்தியது, அந்த ஜூனியர் பெண்ணின் குரல்.
“கவிதாக்கா…அனுக்காவையா தேடறீங்க? HOD வரச் சொன்னார்ன்னு நான் தான் இப்ப வந்து சொன்னேன், காலேஜுக்கு தான் போயிருப்பாங்க…”
----
பெரு மழையாய் பூமிக்கு வருகை தரும் முன், மை தீட்டி ஆயத்தமாகிக் கொண்டிருந்தது மேகம். போதாகுறைக்கு, துணைக்கு பலமான காற்றை வேறு அழைத்துக் கொண்டது. காற்றின் தூதுவனாய், எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு காய்ந்த சருகு, அனு மேல் பட்டு கீழே விழுந்தது.
தூக்கத்தில் நடப்பது போல், கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்த அனு, அந்த உலகத்திலே இல்லாதை போல் ஒரு இலக்கே இல்லாமல் நடந்து, இல்லை இல்லை மிதந்து சென்று கொண்டிருந்தாள்.
“No anu, I am not ready for any commitment now…”
“இப்ப கூட சொன்றேன்…நான் உன்ன லவ் பண்றேன்…அதுக்காக…உன்னை கல்யாணம் பண்ணிக்கனும் எந்த அவசியமும் இல்லயே…”
பாலா சொன்னதெல்லாம் மறுபடியும், மறுபடியும் அவள் காதுகளில் நாராசமாய் ஒலித்தது. அப்போது மட்டும் அல்ல, எவ்வளவு முறை மறக்க முயன்றும், கடந்த வாரம் முழுக்க, அவள் என்ன வேலை செய்தாலும், தூங்க முயற்சித்தாலும் கூட, அவனின் குரல் அவள் தலைக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே தான் இருந்தது.
அன்று காலையில் அவனை ஹாஸ்டல் ஜன்னல் வழியே பார்த்த போது கூட, அவளை பார்ப்பதற்காக தான் வந்திருக்கிறான் என்று பைத்தியம் போல எண்ணி எப்படி எல்லாம் பூரித்துப் போனாள்?
அவளை பார்த்த போது கூட, எதுவுமே நடக்காதது போல் அவன் பேசவும், அனு ஒரு நிமிடம் இந்த உலகத்தையே மறந்தாள். தான் தொலைத்து விட்டதாய் நினைத்திருந்த சந்தோஷம், புதையலாய் மீண்டும் கிடைத்ததை போல உணர்ந்தாள்.
“ஹேய் அனு! ஒரு வாரம் ஃபோன் எடுக்கல, கால் பண்ணல…நான் கூட அவ்ளோ தான்னு நினைச்சுட்டேன்…க்ரேட் யார்…நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?”
பல வித உணர்சிகள் பூக்கோலம் இட்டது அனுவின் முகத்தில், “எனக்கு தெரியும்…எனக்கு தெரியும் பாலா…இந்த ஒரு வாரத்துல நீ என்ன மிஸ் பண்ணுவேன்னு…” மேலே பேச முடியாமல் தினரிய அனுவை பார்த்ததும், மீண்டும் பழைய பல்லவியா என்றவாறு, “ஹே…வெய்ட்…வெய்ட்…நான் இப்பயும் அதே தான் சொல்றேன்…என்னோட ஸ்டான்ட விட்டு இப்போதைக்கு மாறதா இல்ல, …புரிஞ்சுக்கோ அனு…எவ்வளவோ இருக்கு வாழ்க்கைல என்ஜாய் பண்ண, அத விட்டுட்டு, இப்பயே கல்யாணம், அது இதுன்னு உயிர வாங்காத, ப்ளீஸ்…”
மழை தூர ஆரம்பித்ததை கூட கவினிக்காமல், நனைந்து கொண்டே எங்கோ சென்று கொண்டிருந்த அவளை தடுத்து நிறுத்தியது HOD சண்முகத்தில் குரல்.
“அனு! எங்க போய்ட்டு இருக்க? சரி சரி, வா என் ரூமுக்கு போய் பேசலாம்”
“அனு! ரிஸல்ட்ஸ் பாத்தியா?”
“---“
“உன்ன தாம்மா கேக்கறேன்…ரிஸல்ட்ஸ் பாத்தியா?”
குரலை உயர்த்தி அவர் கேட்கவும், அனு மெதுவாக, “என்ன ரிஸல்ட்ஸ் அங்கிள்?”
“என்ன ரிஸல்ட்ஸா? நீ இன்னும் பாக்கவே இல்லயா? செம் ரிஸல்ட்ஸ் தான் சொல்றேன்…ராமமூர்த்தி ஸார் வந்து சொல்லவும், ஒரு நிமிஷம் அப்படியே தூக்கி வாரி போட்டுடுச்சு…ஐஞ்சு செமஸ்டர்லையும், க்ளாஸ் ஃபர்ஸ்ட், இப்ப ஒரு சப்ஜட்ல பெயில் ஆகுற அளவுக்கு என்ன தான் நடந்துச்சு?”
அனு தலையை குனிந்து கொண்டு எதுவும் பேசப் பிடிக்காதது போல் நிற்கவும், “சொல்லு அனு…சொல்லு, எக்ஸாம் அன்னிக்கு ஒரு மணி நேரத்துல போய்ட்டியாம்…”
அனுவிடம் இருந்து அதற்கு மேல் பதிலை எதிர்பார்க்காதவர் போல சண்முகமே தொடர்ந்தார், “பாலான்னு ஒரு ஃபைனல் இயர் பைனனோடு வேற சுத்தறியாம்? இதெல்லாம் என்ன அனு? இது வரைக்கும் ஒரு HOD மாதிரி உன்கிட்ட பேசியிருக்கேனா? You are my best friend’s daughter!!! எனக்கும் பொண்ணு மாதிரி தாம்மா…first, understand that I am answerable to your dad!!! ரகு வந்து என்கிட்ட கேட்டா, நான் என்ன பதில் சொல்றது? என்ன ப்ரச்சனை உனக்கு? Give me one solid reason அனு!!!”
வெடித்திச் சிதறும் எரிமலை போல், “எனக்கு ஹாஸ்டல் பிடிக்கல…இந்த காலேஜ் பிடிக்கல…இந்த ஊரும் பிடிக்கல…எதுவுமே பிடிக்கல…என்னால இதுக்கு மேல முடியாது, என்ன விட்டுடுங்க…”
அதற்கு மேல் பேச முடியாமல், கடந்த ஒரு வாரமாய் நெஞ்சில் தேக்கி வைத்திருந்த பாரமெல்லாம் அழுகையாய் ஊற்றெடுத்தது. உடைந்த கண்ணாடித் துண்டு போல சில்லு சில்லாய் உடைந்திருந்தது அவளது தன்னம்பிக்கை.
[தொடரும்]
19 comments:
:))) நல்ல ஆரம்பம்.... ஒவ்வொரு கதையிலையும் வித்தியாசமான கதாபாத்திரத்த இறக்குறீங்க. பாலா பத்தி இன்னும் வரும் பகுதிகள்ல தெளிவா தெரியும்னு நெனக்கிறேன் :))
இன்னும் எத்தன பகுதி?? அடுத்த பகுதி எப்போ??
கவி இளமதி அவுட் ஆஃப் ஃபோக்கஸ் ஆட்களா?? அவுங்கள வச்சி ஸ்டார்ட் பண்ணி, அனுவ மையப் படுத்தி கதையை நகர்த்தியது அருமை.... :))
நல்ல ஆரம்பம் மேடம்... அட.. இதுவும் ஒரு காதல் கதை தானா...? காலேஜ்னாலே.. காதல்.. ஹ்ம்ம்...
தொடருங்க.. அனுவின் சோகத்தைக் கேட்போம்.
கண்ணு கலங்கிடிச்சு அக்கா அனுவ நினைச்சு... ரொம்ப நல்லா இருந்தது..!! :)) அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க..!! :))
காதல் எனப்படுவது யாதெனில்ல குடுத்த introல இருந்த எல்லோரும் வந்துட்டாங்க :))
ஆரம்பமே அசத்தல். எடுத்த உடனேயே டாப் கியர்ல போட்டு தூக்கறீங்களே. கலக்குங்க.
\\ பெரு மழையாய் பூமிக்கு வருகை தரும் முன், மை தீட்டி ஆயத்தமாகிக் கொண்டிருந்தது மேகம். போதாகுறைக்கு, துணைக்கு பலமான காற்றை வேறு அழைத்துக் கொண்டது. காற்றின் தூதுவனாய், எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு காய்ந்த சருகு,\\
மழைக்கு இப்படி ஒரு இன்ட்ரொ! Amazing.
இப்பல்லாம், செமஸ்டர் மார்கெல்லாம் இன்டர்நெட்டுல வந்துடுதா. யப்பா தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்துடுச்சு. நான் படிக்கும் போதெல்லாம் நோட்டீஸ் போர்டுல ஒட்டுவாங்க. போய்ப் பார்த்துக்க வேண்டியது தான்.
நல்ல தொடக்கம் திவ்யப்ரியா.. காட்சிஅமைப்புகளை விவரிக்கும் விதம் அருமை... கண்முன்னால் ஒரு திரைக்கதை விரிவடைகிறது...
Irrepressible divya is back with a bang :-)
\\ பெரு மழையாய் பூமிக்கு வருகை தரும் முன், மை தீட்டி ஆயத்தமாகிக் கொண்டிருந்தது மேகம். போதாகுறைக்கு, துணைக்கு பலமான காற்றை வேறு அழைத்துக் கொண்டது. காற்றின் தூதுவனாய், எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு காய்ந்த சருகு,\\
Azhagana karpanai...vazthukal
ஜி
நன்றி ஜி...
//இன்னும் எத்தன பகுதி?? அடுத்த பகுதி எப்போ??//
மொத்தம் ஏழு பகுதின்னு நினைக்குறேன்...சிக்கரமே போட்டுடறேன் :))
----
மதி
//நல்ல ஆரம்பம் மேடம்... அட.. இதுவும் ஒரு காதல் கதை தானா...? காலேஜ்னாலே.. காதல்.. ஹ்ம்ம்...//
இதுவும் காதல் கதை தனாவா? வெயிட் பண்ணி பாருங்க...
----
ஸ்ரீமதி
ரொம்ப அழுகாத தங்கச்சி...சீக்ரமே அடுத்த பகுதி :)
----
முகுந்தன்
//காதல் எனப்படுவது யாதெனில்ல குடுத்த introல இருந்த எல்லோரும் வந்துட்டாங்க :))
//
ஆமா முகுந்தன்...எல்லோரும் ஆஜர் :))
விஜய்
நன்றி விஜய்...
//இப்பல்லாம், செமஸ்டர் மார்கெல்லாம் இன்டர்நெட்டுல வந்துடுதா. யப்பா தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்துடுச்சு. நான் படிக்கும் போதெல்லாம் நோட்டீஸ் போர்டுல ஒட்டுவாங்க. போய்ப் பார்த்துக்க வேண்டியது தான்.//
இப்பெல்லாமா? எப்பயோ வந்துடுச்சே ;)
----
raghav
வாங்க ராகவ்...வாங்க...:))
----
badrinarayanan
//Irrepressible divya is back with a bang :-)//
bad's comment with a bang :)) thanks badri...
//raghav
வாங்க ராகவ்...வாங்க...:))//
என்ன வரவேற்பெல்லாம் பலம்மா இருக்கு..
Raghav said...
//
என்ன வரவேற்பெல்லாம் பலம்மா இருக்கு..//
கொஞ்ச நாளா ஆளக் கானமே, அதான் :))
//கொஞ்ச நாளா ஆளக் கானமே, அதான் :)//
இது நான் கேக்க வேண்டிய கேள்வி.. :)
//Irrepressible //
Naan itha Irresponsible nu vaaschitten :)))
அட.. ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க திவ்யப்ரியா..
செம் ரிசல்ட் டேஸ் ஞாபகம் வருது..
//ஜி said...
:))) நல்ல ஆரம்பம்.... ஒவ்வொரு கதையிலையும் வித்தியாசமான கதாபாத்திரத்த இறக்குறீங்க. பாலா பத்தி இன்னும் வரும் பகுதிகள்ல தெளிவா தெரியும்னு நெனக்கிறேன் :))//
ரிப்பீட்டு..
//ஸ்ரீமதி said...
கண்ணு கலங்கிடிச்சு அக்கா அனுவ நினைச்சு... ரொம்ப நல்லா இருந்தது..!! :)) அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க..!! :))//
அதுக்குள்ளே "அனு" உனக்கு அக்காவா Sri. இதெல்லாம் ரொம்ப ஓவர்.......
எப்படி தான் புதுசு புதுசா எழுதறீங்களோ! :)
கதை சூப்பரா இருக்கு. நிறைய பாகங்கள் எழுதுங்க!
superb story remembering college life....! When the next part release ceremony...... ;-)
Gowtham
Post a Comment