Thursday, June 19, 2008

மாமா உன் பொண்ண குடு...பார்ட் 5

பார்ட் 5
பெரிய மாமா இப்டி வந்து கேக்கவும், விவேக்கு என்ன பண்றதுன்னே புரியல.
"என்ன மாமா சொல்றீங்க?"
"ஆமாம் டா, எங்க எல்லார் விருப்பமும் அது தான், நீ தான் வித்யாவ கல்யாணம் பண்ணிக்கனும், இப்ப வேற வழியே இல்ல", இது விவேக்கோட அம்மா விஜயா.

கொஞ்ச நேரம் அமைதியா இருந்த விவேக், விஸ்வநாதன் கிட்ட போய், "ஏன் மாமா…எல்லாரும் குடும்ப மானம் போச்சு, குடும்ப கெளரவம் போச்சுன்னு பொலம்பறீங்களே? யாராவது, நம்ம வீட்டுப் பொண்ணுக்கு இஷ்ட்டமில்லாத ஒருத்தனோட நடக்க இருந்த கல்யாணம் நடக்கலைன்னு சந்தோஷப்பட்டீங்களா?" ன்னு கேட்டான்.

அதுக்கு விஸ்வநாதன் "அத பத்தி எனக்கும் சந்தோஷம் தான்டா…இன்னும் கொஞ்ச நேரத்துல சொந்தக்காரங்க எல்லாரும் வந்துடுவாங்கலே? அவங்க முகத்துல நான் எப்டி முழிப்பேன்? என் ஒரே பொண்ணுக்கா இப்டி எல்லாம் நடக்கனும்?"

"தப்பு மாமா, ரொம்ப தப்பு..."

அதுக்குள்ள விவேக்கோட அப்பா, "டேய், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, என்னனவோ பேசிக்கிட்டு…முதல்ல போய் டிரஸ மாத்திட்டு, மாலைய போட்டுட்டு வா" ன்னு அதட்டவும்,

விவேக், "இருங்கப்பா! அதுக்கு முன்னாடி என்ன கொஞ்சம் பேச விடுங்க…இத பாருங்க மாமா! மாப்ளைய நேர்லையே பாக்காம கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணது முதல் தப்பு, வித்யா வந்து ஏதோ சரியில்லைன்னு சொல்லியும் கூட, சின்ன பொண்ணு, அவளுக்கு என்ன தெரியும்ன்னு அலட்சியம் பண்ணது ரெண்டாவது தப்பு...அதெல்லாம் கூட இப்ப சரி ஆய்டுச்சு, ஆனா இப்ப மறுபடியும் பண்றீங்க பாருங்க, அது தான் மாமா ரொம்ப பெரிய தப்பு.."

"என்னடா சொல்ற?"

"ஆமா மாமா...பதட்டமா இருக்கற நேரத்துல இப்டி அவசர அவசரமா முடிவு எடுக்கறீங்களே, அத தான் மாமா சொல்றேன்"

"இப்ப கல்யாணம் நடக்கலைன்னா, நாளைக்கு என் பொண்ண யாரு கல்யாணம் பண்ணிக்குவா? அப்டியே ஒருத்தன் வந்தாலும், அதுக்கு எவ்ளோ காலம் ஆகுமோ?"

"கல்யாணம் நடக்காம இருக்க போற ஒரு சில வருஷங்கள பத்தி யோசிக்கறீங்களே? கல்யாணம் முடிஞ்சு வாழ போற 30,40 வருஷத்த பத்தி ஏன் யோசிக்க மாட்டேங்கறீங்க? இப்ப வித்யாவுக்கு தேவை கல்யாணம் இல்ல மாமா, டைம்…ஆமா, இதெல்லாத்தையும் மறந்துட்டு நார்மல் ஆகறதுக்கு, டைம் தான் வேணும் அவளுக்கு...கண்டிப்பா, அவள நிஜமாவே புடிச்ச ஒருத்தனா, அவள புரிஞ்சுக்கிட்டவனா, ஒருத்தன் வருவான்...ஏன்,அந்த ஒருத்தன் நானா கூட இருக்கலாம், ஆனா...அத முடிவு பண்ண வேண்டிய நேரம் இது இல்ல, அவளுக்கு டைம் குடுங்க, அதுக்கப்பறமும் அவளுக்கு உடனே கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு தோணுச்சுண்ணா, என்னையும் புடிச்சிருந்துச்சுண்ணா, அப்ப சொல்லுங்க, நான் முழு மனசோட இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கறேன்"

"நீ சொல்றதும் நியாயம் தான்டா…ஆனா, நாளைக்கு என் பொண்ணு கல்யாணம் நடக்கலைன்னா ஊர்ல எல்லாரும் என்ன பேசுவாங்க?"

"ஊர்ல இருக்கறவங்களுக்காக உங்க சொந்த பொண்ணு வாழ்க்கைய முடிவு பண்ணப் போறீங்களா மாமா? எப்டியாவது என் பொண்ணு கல்யாணத்த முடிக்கனும், முடிக்கனும்ன்னு சொல்றீங்களே? கல்யாணம்ங்கறது, முடிவு இல்ல மாமா…அது ஒரு புது வாழ்கையோட ஆரம்பம்…இதுக்கப்பறமும் இந்த கல்யாணத்த நடத்தியே ஆகனும்ன்னு நீங்க எல்லாரும் ஆசை பட்டீங்கன்னா, நான் ரெடி மாமா..."

கொஞ்ச நேரம் எல்லாரும் எதுவுமே பேசாம அமைதியா இருந்தாங்க. கடசியா, ஒரு முடிவுக்கு வந்தவரா, விஸ்வநாதன், "வித்யா மா! ரொம்ப டையர்டா இருப்ப...எல்லாத்தையும் மறந்துட்டு வீட்டுக்கு போய் தூங்கு, அப்பா மண்டபத்துல எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு சீக்ரம் வீட்டுக்கு வந்துடறேன்" ன்னு சொன்னாரு.

அப்ப தான் எல்லார் முகத்திலையும் ஒரு நிம்மதி தெரிஞ்சுது.

விஸ்வநாதன் விவேக் கைய்ய புடிச்சுட்டு, "உன்ன பத்தி நான் என்னவோன்னு நினச்சுட்டன்டா மாப்ள, எனக்கு ரொம்ப ஈசியா புரிய வச்சுட்ட, ரொம்ப தாங்ஸ் டா"

"என்ன மாமா? தாங்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு? வாங்க நாம ஆக வேண்டிய வேலைய மொதல்ல பாப்போம்"

அப்டி இப்டின்னு விவேக் கிளம்ப வேண்டிய நாளும் வந்துடுச்சு.

விவேக் அவங்க அம்மா கிட்ட, "என்ன மா? என் மேல கோவமா இருக்கீங்களா?" ன்னு கேட்டான்.

"நான் ஏன்டா உன் மேல கோவப் பட போறேன்?"

"அதில்ல, நான் வித்யாவ கல்யாணம் பண்ணிக்கலையேன்னு..."

"நீ வித்யாவ கல்யாணம் பண்ணி இருந்தா கூட நான் இவ்ளோ சந்தோஷ்ப்பட்டிருக்க மாட்டேன், என் பய்யன் இன்னும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கான்னு நினச்சுட்டு இருந்தேன்... எப்படா நீ இவ்ளோ பெரிய மனுஷன் ஆன? எனக்கு அப்டியே பூரிச்சு போய்டுச்சு தெரியுமா?"

விவேக் சிரிச்சுட்டே, "ஹய்யோ அம்மா! நான் இப்ப கூட தீராத விளையாட்டுப் பிள்ளை தான்" ன்னு சொல்லவும் விஜயாவும் அவனோட சேந்து சிரிச்சாங்க.

ஏர்போர்ட்டுக்கு விவேக், விக்ரம், அவன் அப்பா, அம்மா, அப்புறம் அவனோட சில பல, அத்தை, மாமா, எல்லாரும் போயிருந்தாங்க. வித்யாவும் போயிருந்தா.

வித்யா விவேக் கிட்ட வந்து, "விவேக்! உன்கிட்ட ஒன்னு சொல்லனும் நினச்சுட்டு இருந்தேன்..."

"சொல்லு வித்யா!"

"ரொம்ப தாங்ஸ் விவேக்...நீ மட்டும் அண்ணன அவங்க வீட்டுக்கு முண்ணாடியே அனுபலைன்னா என்ன ஆயிருக்கும்ன்னு என்னால நினச்சு கூட பாக்க முடியல..." இத சொல்லும் போது வித்யாவுக்கு கண்ணெல்லாம் அப்டியே கலங்கிடுச்சு.

"ச்சே, ச்சே...இதுக்கு போய் எதுக்குடீ தாங்ஸ் எல்லாம்? என்ன தான் இருந்தாலும் நீ எனக்கு identity crisis வராம காப்பாத்தி இருக்க...உனக்காக இதக் கூட பண்ணலைன்னா எப்டி?"

"என்னது? ஐடன்டி க்கரைசிஸ்ஸா ஆ?"

"ஆமா...என்னோட எல்லா செர்டிஃபிகேட்ஸ்லையும் இருக்கு, நீ குடுத்த ஐடன்டி, 'எ ஸ்கார் இன் த லெஃட் ஆர்ம்..."

"போடா!!! எப்ப பாத்தாலும்..." ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் நினச்சு நினச்சு சிரிச்சுட்டு இருந்தாங்க.

அப்புறம் வித்யா, "ஹே! அப்றம் இன்னொன்னு கேக்கனும் நினச்சேன்...உண்மைய சொல்லு, உனக்கு யு.யெஸ்ல கேர்ள் ஃபிரண்ட் இருக்கு தான? அதனால தான அன்னிக்கு எங்க அப்பா கிட்ட பயங்கரமா லெக்சர் அடிச்சு தப்பிச்ச?"

விவேக் ரொம்ப சீரியஸா முகத்த வச்சுக்கிட்டு, ஆனா கண்ல குறும்போட, "இல்ல, நீ நினைக்கற மாதிரி எல்லாம் இன்னும் எதுவும் இல்ல, அந்த இடம் இன்னும் காலியா தான் இருக்கு, நீ வேனா அப்ளை பண்றியா?"

"அடிங்ங்க..." ரெண்டு பேரும் மருபடியும் பலமா சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

செக்யூரிட்டி செக் தாண்டரதுக்குள்ள விவேக்கோட ஃபோன் அடிச்சுது. விவேக் ஃபிரண்ட் தினேஷ் தான்.

"என்னடா, கிளம்பிட்டயா? கல்யாணம் எல்லாம் எப்டி நடந்துது?"

"கல்யாணமா? நீ மெய்லே ச்செக் பண்ணலையாடா? ஆன்லைன்லையும் கானோம்?"

"ஆமா டா, ஒரே வேலை, ஏன் என்ன ஆச்சு?"

"கல்யாணம் நின்னுடுச்சுடா..நான் உனக்கு வந்து சொல்றேன்..."

"என்னது? நின்னுடுச்சா? ...அடப் பாவமே! சரி, வித்யா இப்ப எப்டி இருக்கா? இஸ் ஷீ ஆல் ரைட்?"

"ஹ்ம்ம், ஒகே...ஓரளவுக்கு ஷீ இஸ் பேக் டூ நார்மல் நவ்"

"ஒ...பரவால்ல, குட்...அப்ப வேக்கன்சி இருக்கு, ஒரு அப்ளிக்கேஷன் போடலாம்ன்னு சொல்லு..."

"டேய்ய்!!! அவ என் மாமா பொண்ணு டா"

"அடச்சே! உனக்கு தான்டா சொன்னேன்..."


"அது!!!"

எல்லாரையும் பாத்து ஒரு சல்யூட் அடிச்சுட்டு, ஸ்டைலா நடந்து லாஞ்ச்சுக்குள்ள போனான் விவேக்.

***************************முற்றும்********************************************

40 comments:

Anonymous said...

Nalla irundudu Story :-)

Anonymous said...

I don't know if anybody else has told you this, but your work was excellent.You have a wonderful ability to communicate

Anonymous said...

I don't know if anybody else has told you this, but your work was excellent.You have a wonderful ability to communicate

Anonymous said...

Kalakita Po! It shows your maturity level and understanding the values of relationship…

And it is good move that you showed Vivek as a real hero! Hero need not to be a romantic chocolate boy or a super hero to do abnormal stunts… You proved it! Kudos…

BTW, if you forward this to Vikraman, he will really make a good movie casting Bharath or any smart hero… with S.A Rajkumar’s music , and so on…

Anonymous said...

awesome divya..kalakitte po..enna dialogues...he he...i got totally involved in the story :-)

Smriti said...

So whats next ... Athai on payyana kudu ? [:D]

Shiva.G said...

gummmm..
sooperaa irunchu..crisp n clean show!!
very practical ..
Kalakkure Divya..
ini unna 'college ku water bottle eduthuttu vandhu, straw pottu kuduchava school kid dhaaana' nnu yaaaraachum sonnanu vechuko.. nee straightaa yen kitta sollu, naa gavanichukuren :D:D

way to GO!

Anonymous said...

Very Impressive Narration... Keeps the good work going... I am reading stories after an year....

Anonymous said...

சிறு சிறு உணர்வுகளையும் அழகே படம் பிடிக்குது கதை. எப்படியோ போகுமென்று எதிர்பார்க்க அதை அழகாக யதார்த்தமாக முடித்தவிதம் அருமை. எழுத்தில் நல்ல தேர்ச்சி. பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..

Divyapriya said...

thanks so much, good to know u ppl read the story...shocked to see 9 comments infact :-)

Ven Balki said...

good work divya.. i really liked it.

Vijay said...

Amazing!!! Your way of telling the story is absolutely breath taking.
And the climax is also too good. யாருமே எதிர்பார்க்காத climax.
தொடர்ந்து நிறைய எழுதவும்.

அன்புடன்,
விஜய்

Divyapriya said...

Thankyou so much vijay, for the comment n for adding u in ur blogs list...

Divya said...

stepped in to your blog from your page's link in Vijay's vetti vambu Blog,

Such an awesome flow of writing you have Divya!!

Glad to see our alike names:))


Keep writing !!

Divyapriya said...

Divya! i just can't believe its true, i m great fan of ur blogs...thanks so much, u really made my day...

Vijay said...

ஆஹா இரு பெரும் எழுத்தாளினி மேதைகள் சந்திக்க நான் பாலம் போட்டிருக்கேனா? நினைத்தாலே பெருமையா இருக்கு.

Smriti said...

ஆஹா! இப்போவே Blog ல உறவு கொண்டாடறீங்க... இன்னும் விட்டா குட்டுக்குடும்பமே நடக்கும் போல ! [:O]

Ramya Ramani said...

\\விஜய் said...
ஆஹா இரு பெரும் எழுத்தாளினி மேதைகள் சந்திக்க நான் பாலம் போட்டிருக்கேனா? நினைத்தாலே பெருமையா இருக்கு.
\\

விஜய் இது என்ன ராமர்(அவரோட நண்பர்கள்) கட்டிய பாலமா??? Just Kidding..

திவ்யா நல்ல கதை...முதிர்ந்த யோசனை இருக்கும் Protagonist உங்கள் கதையில்..

Divyapriya said...

//Ramya Ramani said...
திவ்யா நல்ல கதை...முதிர்ந்த யோசனை இருக்கும் Protagonist உங்கள் கதையில்..//

thanks ramya...actually, கதைய முடிச்சப்பறம், விவேக் charactera பாத்து எனக்கே புல்லரிச்சிருச்சு :-))

Unknown said...

really good.... contrary to the "love" blog... good one...

Divyapriya said...

// Out of World - Oxy said...

really good.... contrary to the "love" blog... good one...//

Thanks so much..keep coming...

ஜி said...

read all the parts of the story... simply awesome... :))) kalakirukeenga.. ponathe theriyala...

aana kadaisila avinga rendu perukkum kalyanam aacha illaiyaa??

Divyapriya said...

@ஜி
//read all the parts of the story... simply awesome... :))) kalakirukeenga.. ponathe theriyala...
aana kadaisila avinga rendu perukkum kalyanam aacha illaiyaa?? //


Thanks so much ஜி…
கடசில கல்யாணம் ஆகலாம்...ஆகமலையும் போகலாம்…அது படிக்கறவங்க இஷ்டம் :-))

நாடோடி said...

ஹாய் திவ்யா..
இப்போ தான் இந்த கதைய படிச்சு முடிச்சேன். ரொம்ப அழகா எழுதிருக்கீங்க.
மூன்றாம் பாகத்துல இருக்கிற நகைச்சுவை மத்ததுலயும் கொஞ்சம் இருந்திருக்கலாமோனு தோனுது..
மத்தபடி நல்ல flow, நல்ல concept.. சூப்பர். தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள்!

MSK / Saravana said...

வாவ்..கிரேட்..
:)
ரொம்ப நல்லா இருந்துது கதை..
:)

தொடர்ந்து எழுதுங்க.............

Divyapriya said...

@நாடோடி
// ஹாய் திவ்யா..
இப்போ தான் இந்த கதைய படிச்சு முடிச்சேன். ரொம்ப அழகா எழுதிருக்கீங்க.
மூன்றாம் பாகத்துல இருக்கிற நகைச்சுவை மத்ததுலயும் கொஞ்சம் இருந்திருக்கலாமோனு தோனுது..
மத்தபடி நல்ல flow, நல்ல concept.. சூப்பர். தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள்!//

வாங்க நாடோடி, முதல் வருகைக்கும் கமெண்ட்சுக்கும் நன்றி… மூன்றாம் பாகத்து நகைச்சுவையை உணர்ந்தீர்களா? அதை பத்தி யாருமே சொல்லலையேன்னு நினச்சேன்…நீங்க சொல்லிட்டீங்க…அதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி :))

Divyapriya said...

@M.Saravana Kumar
//வாவ்..கிரேட்..
:)
ரொம்ப நல்லா இருந்துது கதை..
:)
தொடர்ந்து எழுதுங்க.............//

நன்றி சரவணன். நீங்களும் தொடர்ந்து படிங்க…

MSK / Saravana said...

//நீங்களும் தொடர்ந்து படிங்க…//

சொல்லிட்டீங்கல்ல.
:)

Jags said...

Office-la payangara vettiya irukumbodhu, "enna panradhunnu theriyala"-nnu Google-la type pannen...Unga kadhai vandhu vilundhuchu...
Oru padam paartha tripthi irukku...
Vaalthukkal...:-))

Jags said...
This comment has been removed by the author.
Divyapriya said...

'enna panradhunnu theriyala' nnu pottu thedineengalaa? :))
naanum pottu paathen, namma kadhiayoda comments la irundhurukku pola :))

nalla swarasiyamaa thaan blog pakkam vadhirukkeenga...thodarndhu vaanga...

Jags said...
This comment has been removed by the author.
Jags said...

Ayyo..Ayyo...Konja naala "enna panradhunnu therinjadhaala..:-))" naan "enna panradhunnu theriyala-nnu" type pannama irundhen.. Inaikku marubadiyum adicha, naan kodutha comment webpage-la varudhu...
"Idhellam oru polapaada-nu" neenga ketkaradhu puriyudhu....Irundhallum enna panradhu, "Enna panradhunnu thriyadhappo..."..:-))))
Ps:
Innaikudhan unga padhilayum paarthen..thodarndhu varen..

FunScribbler said...

கதைய படிச்சு முடிஞ்சுட்டேன். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

//கல்யாணம் நடக்காம இருக்க போற ஒரு சில வருஷங்கள பத்தி யோசிக்கறீங்களே? கல்யாணம் முடிஞ்சு வாழ போற 30,40 வருஷத்த பத்தி ஏன் யோசிக்க மாட்டேங்கறீங்க?//

கைதட்டி விசில் எல்லாம் அடிச்சேனுங்க!

கதையின் ஓட்டம் அருமை. இயல்பான வசனங்கள். கடைசியில் தினஷ் சொன்னதும் அதுக்கு ஹீரோ பதில் சொன்னதும் டாப் காமெடி. நகைச்சுவை உணர்வு உங்களுக்கு அதிகம். நிறைய எழுதுங்கள். எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்...happy new yr!

Divyapriya said...

@ Thamizhmaangan

மிக மிக நன்றி...தொடர்ந்து மற்ற பதிவுகளையும் படிங்க...

வெட்டிப்பயல் said...

As usual... Kalakal. I liked the climax very much :)

Pranav said...

Again.....
Sema screenplay.... atha vida semmmmmmmmmmmaaaaaaaaaaaa climax.....
chance eh illa.......

Divyapriya said...

@Pranav

Thanks a lot...

mvalarpirai said...

ரொம்ப ரசித்து படித்தேன்....எங்கே ..இதைவச்சு ஒரு படமே எடுக்கலாம் போல....Cliamax பக்கா ! அது என்னங்கோ மாப்பிள்ளைனாலே அமெரிக்கா தானா !

pari@parimalapriya said...

superb story... Dhivya i am suprised 2 c tat a gal can express her ideas so well tat too in humorous tone. not alone this story but also other posts... reading ur blog gives me a feeling of reading shivashankari's,Ramani Chandran's and anuradha ramanan's novels...
best wishes 4 continuing the gr8 work...