Wednesday, September 16, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 4

பாகம் 1 , பாகம் 2, பாகம் 3

தண்ணீருக்குள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த தங்க நிற மீண்களை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மது. ஆனால் அவள் மனம் மட்டும் அந்த மீண்களில் ஓட்டத்தை போல் எங்கெங்கோ ஓடிக் கொண்டிருந்தது.

முதன்முறை ரஞ்சித்திடன் தொலைபேசி முடித்து ஒரு சில நிமிடங்கள் தான் ஆகியிருந்தது. அவனுடன் பேசியதை அசைப்போட்டுக் கொண்டிருந்த அவள் உதடுகளில் அவளையும் அறியாத ஒரு மெல்லிய புன்னகை அரும்பியிருந்தது. முதல் முறை பேசும் போதே, மிக தெரிந்தர்வர்கள் போல சகஜமாக கிட்டதட்ட ஒரு மணி நேரம் உரையாடி இருந்தனர். எதேதோ எண்ணஓட்டங்களின் இடையே, ’மது…மது…’ என்று அருகிலேயே ஒலித்த அவளது அம்மாவின் குரல், அவள் காதுகளை அடைந்தாலும், மூலையை அடையவில்லை.

“என்னடி பண்ணிட்டு இருக்க?” அவள் தோலை பிடித்து அம்மா உலுக்கவும், நிகழ்காலத்துக்கு வந்தாள் மதுவந்த்தி.
“எப்பம்மா வந்த?”
“எப்பவா? நல்லாயிருக்கு போ…உன்னை நம்பி வீட்டை விட்டுட்டு போனா, திருடன் வந்தா கூட இப்படியே உக்காந்திருப்ப போல இருக்கு?”
“அம்மா…வந்து…அந்த பையன் ஃபோன் பண்ணான்”
“எந்த பையன்?”
“அதாம்மா….அந்த ரஞ்தித்…”
“ஓஹ்ஹ்…அடடா… சாய்ந்தரமா தான் பண்ணுவாங்கன்னு நினைச்சு நான் வேற இன்னேரம் பாத்து கோயிலுக்கு போய்ட்டனே?”
“ஹ்ம்ம்…ஏன்? இருந்திருந்தா நீ பேசியிருப்பியாக்கும்?”
“சரி…சரி…சொல்லு….என்ன சொன்னாரு?”
“ஹ்ம்ம்…என்ன சொன்னாருன்னா? என்னென்னவோ சொன்னாரு…” இதை சொல்லி விட்டு சம்பந்தமே இல்லாமல் சத்தமாக சிரித்தாள் மது.
“என்ன மது இது? விளையாடாம சொல்லு…”
“போம்மா…என்னவோ பேசினோம்…சரியா ஞாபகம் இல்ல….மறந்துடுச்சு…”
“என்னது மறந்திடுச்சா? சரி….நான் போய் சமையல பாக்கறேன்…குளிக்காம இன்னும் என்ன பண்ற? போய் சீக்கரமா குளி போ…”

’என்ன அதிசயம், அம்மா அதுக்குள்ள விட்டுடாங்களே…’ என்று நினைத்தபடி, அவளது அறைக்குள் நுழைந்தாள் மது. குளியறைக்குள் அவள் நுழைந்தது தான் தாமதம், உடனே மதுவின் அம்மா யாரையோ தொலைபேசியில் அழைத்தார்.

“ஹலோ!”
“என்ன கொரங்கு? திடீர்ன்னு ஃபோன்?” மறுமுனையில் உற்காத்துடன் ஒரு குரல் ஒலிக்க,
“ஹலோ…மது இல்லை…நான் ஆண்ட்டி பேசறேன்…”

“அச்சசோ…சாரி ஆண்ட்டி….நான் மதுன்னு…”

“போதும் போதும்…உன் நடிப்பெல்லாம் எனக்கு தெரியும்…சரி…சரி…ஒரு முக்கியமான விஷயம்…சீக்கரம் கேளு…உன் ஃப்ரெண்ட் ரெண்டு நிமிஷத்துல குளிச்சுட்டு வந்துடுவா…அதுக்குள்ள சொல்றேன்…கேட்டுக்கோ…”

“சொல்லுங்க ஆண்ட்டி…என்ன ஆச்சு?”

“மதுவுக்கு ஒரு மாப்ளை பாத்துருக்கேன்னு சொன்னேல திவ்யா?”

“ஆமா…ஃபோட்டோ கூட காமிச்சீங்களே?”

“ஆமா…அவரே தான்…ஜாதகம் எல்லாம் சேந்திருக்கு…இவ ஃபோட்டோவும் அவங்க வீட்டுக்கு அனுப்பி, அவங்களுக்கும் பிடிச்சு போச்சு…இன்னிக்கு மாப்ளை ஃபோன் பண்ணி பேசுவாருன்னு சொல்லிருந்தாங்க….நான் கோவிலுக்கு போன நேரமா பாத்து ஃபோன் பண்ணிட்டாரு திவ்யா…”

“அச்சச்சோ….இப்ப என்ன? அவ என்ன பேசினான்னு உங்ககிட்ட சொல்ல மாட்டேன்னு பிகு பண்றா…அத உங்களுக்கு கேட்டு சொல்லனும்…அவ்ளோ தான?”

“எப்படிமா? உன் ஃப்ரெண்ட பத்தி ரொம்ப நல்லா தான் தெரிஞ்சு வச்சிருக்க?”

“அவள பத்தி எனக்கு தெரியாதா ஆண்ட்டி? நீங்க மட்டும் ஒரு அரை மணி நேரம் கோவில்ல இருந்து லேட்டா வந்திருந்தீங்கன்னா, அவளே எனக்கு ஃபோன் பண்ணி சொல்லியிருப்பா…இப்ப மட்டும் என்ன? நீங்க அப்படியே கொஞ்சம் கண்டுக்காத மாதிரி இருங்க…நான் ஃபோன் பண்ணி, அவகிட்ட பேசிட்டு உங்ககிட்ட விஷயத்த கக்குறேன்…”

“ஹய்யோ…திவ்யான்னா, திவ்யா தான்…நீ சாய்ந்தரம் வீட்டுக்கு வா…பால் பாயசம் செஞ்சு வைக்கறேன்…”

“என்ன ஆண்ட்டி? உங்களுக்காண்டி இது கூட செய்ய மாட்டனா?”

சொன்னதோடு நில்லாமல் உடனே மதுவை அழைத்தும் விட்டாள் திவ்யா. திவ்யா ஹலோ சொன்னது தான் தாமதம், உடனே மது, “ஏதேது…ரொம்ப சரியான டைம்ல உனக்கு மூக்கு வேர்த்திருக்கு…உண்மையை சொல்லு…எங்கம்மா தான?”

“அடிப்பாவி! உனக்கெப்படி தெரியும்? ஆண்ட்டி உங்கிட்டையே சொல்லிட்டாங்களா? அம்மாவும் பொண்ணும் நல்லா தான் நாடகம் ஆடறீங்க…”

மது பலமாக சிரித்துக் கொண்டே, “இல்லை இல்லை…அம்மா எங்கிட்ட சொல்லலை…நானே தான் கெஸ் பண்ணேன்…எங்கம்மாவ பத்தி எனக்குத் தெரியாதா? என்னவோ தெரியல…அம்மா இந்த சம்பந்தத்துல ரொம்பவே ஆர்வமா இருக்குற மாதிரி தெரிஞ்சுது…அதான்…சும்மா…அம்மாவ கலாய்க்கலாம்னு நான் எதுவும் சொல்லலை…”

“பாவம் ஆண்ட்டி, உங்கிட்ட மாட்டிட்டு முழிக்கறாங்க….சரி….சரி…சொல்லு, என்ன சொன்னாரு உன் ஆளு? முதல்ல இதுக்கு பதில் சொல்லு பிடிச்சிருக்கா, இல்லையா?”“நீ வீட்டுக்கு வாயேன்…உன்கிட்ட நேர்லையே சொல்றேன்…”

“இந்த சுத்தி வளைக்கற வேலையெல்லாம் வேண்டாம்…வீட்டுக்கு எப்படியும் வரத் தான் போறேன்…அதுக்கு முன்னாடி ஒத்த பதிலா சொல்லு…யெஸ்ஸா? நோவா?”

“யெஸ் தான்…ஆனா….எனக்கு தெரியல…”

“என்ன லூஸ் உளர்ற?”

“எனக்கு ஒரே குழப்பமா இருக்கு…என்கிட்டையே எனக்கு கன்ஃபூஷன்…நீ வீட்டுக்கு வாயேன்….சொல்றேன்…”

**********************************************************
“முருகேசன்!!! முருகேசன்!!! எங்க போய்ட்டீங்க?”

“சார்! ஒரு நிமிஷம் சார்…இதோ வந்துட்டேன்…சொல்லுங்க சார்…”

“அந்த மெழுகுவர்த்தியை லேபுக்கு அனுப்ச்சீங்களே, ரிபோர்ட் வந்துடுச்சா?”

“அப்பவே வந்துடுச்சு சார்…உங்க டேபிள் மேல தான் வச்சிருக்கேன்…”

“ஹ்ம்ம்…”

அந்த லேப் ரிப்போர்ட்டை புரட்டியபடியே, “நான் நினைச்ச மாதிரியே தான் இருக்கு…ரெண்டு பேரோட கைரேகை இருக்குன்னு போட்ருக்கான்…”

“மெழுகுவர்த்தி தான? எத்தன பேர் ரேகை வேணா இருக்குமே சார்?”

“எல்லாம் ஒரு கெஸ் தான்…எனக்கென்னவோ அந்த கைரேகைல ஒன்னு, அந்த பொண்ணோடதும், இன்னொன்னு கொலைகாரனோடதுமா தான் இருக்கும்னு தோணுது… ஆனா, ஒன்னு மட்டும் தான் புரியல… அந்த மெழுகுவர்த்திய சைஸ பாத்தா ஒரு பதினஞ்சு இல்ல இருபது நிமிஷம் எறிஞ்சிருக்க மாதிரி இருக்கு…அந்த நேரத்தில கரண்டும் இருந்திருக்கு…மொட்டை மாடியில லைட் எல்லாம் வேலை செய்யுது…அப்புறம் எதுக்கு மெழுகுவர்த்தி எடுத்துட்டு வந்தாங்க?”

அடுத்த அறையில் இருந்து வந்த அந்த வயதான சப் இன்ஸ்பெக்டர், “என்ன சார், அதை அந்த நேரத்துல தான் அங்க கொண்டு வந்துருப்பாங்கன்னு என்ன நிச்சயம்? வேற எப்பவோ, யாரோ போட்ட மெழுகா கூட இருக்கலாம்ல?”

“இருக்கலாம் தான்…இருந்தாலும் ஏன் நான் சொல்ற மாதிரி இருக்க கூடாது? இது ஒரு மாதிரியான out of box thinking சார்…”

“சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க….என் சர்வீஸ்ல எத்தனையோ பாத்ததால சொல்றேன்…குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி இது கொலை தான்னு முடிவு பண்ணிட்டு, அந்த கோணத்துலையே யோசிச்சா, இப்படி தான் தேவையில்லாம தோணும்…”

“எல்லா கோணத்திலையும் விசாரிக்கனும் சார்…முருகேசன், லேப்புக்கு அந்த பொண்ணோட கைரேகை அனுப்பி வைங்க…அது மேட்ச் ஆகுதான்னு பாப்போம்…”

ஒரு ஆயாசப் பெருமூச்சை உதிர்த்தபடி, முகத்தில் எரிச்சலோட மீண்டும் அடூத்த அறைக்குள் சென்றுவிட்டார் சப் இன்ஸ்பெக்ட்டர்.
அவரையும், பரத்தையும் மாறி மாறி பார்த்தபடி முருகேசன் நின்றிருக்க, பரத், “என்ன முருகேசன்? பதிலையே காணோம்?”

“ஹாங்….சரி…சரி சார்…அனுப்சர்லாம் சார்…”

“ஆமா…அந்த ஃபங்ஷன் வீடியோவ கேட்டிருந்தனே, அத கிடைச்சுதா?”

“அது கிடைச்சுது சார்…போட்டு பாத்தோம்…ஒன்னும் பெருசா இருக்கற மாதிரி தோணல…”

“என்ன உங்களுக்கும் யெஸ்.ஐ வியாதி ஒட்டிகிச்சா? என்ன கிறுக்கன்னு சொல்றாறா அந்த ஆளு?”

“ச்சே…ச்சே…இல்லை சார்…”

“இருக்கட்டும், இருக்கட்டும், கொலைகாரன கையும் கலவுமா பிடிச்சப்புறம் என்ன சொல்றீங்கன்னு பாக்கத் தான போறேன்? வீடியோவ பாத்தன்னீங்களே? முழுசாவா பாத்தீங்க? “

“இல்லை சார்…அப்படியே ஓட்டி ஓட்டி தான் பாத்தோம்…சும்மா ஏதோ பாட்டு, டான்ஸ் அவ்ளோ தான் இருக்கு…அந்த பொண்ணு சாப்பிட்டுகிட்டு இருக்கற மாதிரி ஒரே ஒரு இடத்துல தான் வருது…வேற எதுவும் இல்லை…”

“எங்க போடுங்க பாக்கலாம்…”

உணவுப் பொட்டலத்தை பிரித்து வைத்துக் கொண்டு உன்னிப்பாக அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டே உண்ண ஆரம்பித்துவிட்டார் பரத். ஆனால் அங்கிருந்த இரு கான்ஸ்டபிள்கள் முகத்தில் அவருக்கு இருந்த அளவிற்கு ஆர்வம் இல்லை. அடுத்த அறையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த சப் இன்ஸ்பெக்டர், “யோவ் முருகேசு…இங்க வாய்யா…” என்றழைக்கவும், அங்கிருந்து நகர்ந்து அடுத்த அறைக்குள் நுழைந்தார் முருகேசன்.
“என்ன சார்?”

“அந்தாளு என்ன லூசா? அதான் நாம பாத்துட்டோம்னு சொல்றோம்ல, அப்புறம் என்ன? அதுவும் கொலை நடந்தது பன்னென்டு மணிக்கு, அந்த ஃபங்ஷன்ல எல்லா பயலும் தின்னுட்டு கூத்தடிச்சிட்டு பத்து மணிக்கே நடைய கட்டிட்டானுவ…அப்புறம் என்னத்தைய்யா இந்த வீடியோவுல இருக்க போகுது? சும்மா…நேரத்த கடத்திகிட்டு்…தற்கொலை தான்னு ஃபைல க்லோஸ் பண்ணிட்டு போய்ட்டே இருக்க வேண்டிய கேஸு இதெல்லாம்…நான் என் சர்வீஸ்ல எத்தனை பாத்திருக்கேன்…சின்ன பய…படிச்சி பரிட்ச்சை எழுதிட்டு நேரா வந்துடறானுங்க…அனுபவம் பத்தல… "

முருகேசன் அவர் சொன்னதை ஆமோதிக்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் சங்கடத்தில் நெளியவும், அதே சமயம், “மாட்னான்டா!!!” என்ற பரத்தின் உரத்த குரல் அந்த அறைக்குள்ளும் ஒலித்தது.

“எவன்ய்யா மாட்னான்? வா…போய் பாப்போம்…”

அலட்சியமாக முன் அறைக்குள் நுழைந்த சப் இன்ஸ்பெக்டரும், முகத்தில் கேள்விக் குறியோடு நுழைந்த முருகேசன் இருவருமே, திரையில் தெரிந்த காட்சியை பார்த்து ஒரு நொடி திகைத்து நின்று விட்டனர்.
திரையில் ஓடிக் கொண்டிருந்த படம் ஓரிடத்தில் பாஸ் செய்யப்பட்டு, ஜூம் செய்த நிலையில் நின்றிருக்க, அதில் தெளிவாக தெரிந்தது, ரஞ்சித் கையில் தொங்கிக் கொண்டிருந்த ப்ரேஸ்லட். மீண்டும் அந்த காட்சியை பரத் உயிர்பிக்க, திரையில் ரஞ்சித் சிரித்தபடி முகிலுடைய வாயில் தன் கையில் இருந்த கற்கண்டை போட்டபடி கதவின் அருகே சென்று கொண்டிருந்தான். முகில் செல்வதற்காக, கதவை திறந்து பிடித்துக் கொண்டிருந்தவனின் கையில் அப்போதும் மின்னிக் கொண்டிருந்தது அந்த ப்ரேஸ்லட்! திரையின் ஓரத்தில் மணி 10:02:55, 10:02:56 என்று அதிவேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

[தொடரும்]

22 comments:

Anonymous said...

:-)

சங்கர் said...

Semma flow la poitu irukku... seekkirama next part podunga madam..

Karthik said...

ரெண்டு contrast ஆன narrations கதையை செம இன்ட்ரெஸ்டிங்காக்குதுனு நினைக்கிறேன். அதுவும் மது இறந்துடறது தெரிஞ்சிட்டதால, மதுவோட சந்தோஷங்கள் எல்லாம்....

கலக்கல்ஸ்!

Karthik said...

இதுல வர திவ்யா நீங்களா? என்னை இப்படிதானே கேட்கிறா(றீ)ங்க! ;))

Raghav said...

சூப்பரு.. திரில்லர் நாவல்ல ரெண்டு பகுதி ஒரே நேரத்தில் மாறி மாறி வருமே அது மாதிரி சூப்பரா போகுது..

anbudan vaalu said...

:))..
whenz the next part??? eagerly waiting for it.....

Raghav said...
This comment has been removed by the author.
sri said...

adengappa sema thrillinga erukku :) ayyio next part eppo poduveengalo theriyalaye

sri said...

narration sema super, past and present nnu kalakareenga

Badri said...

Simply Fantastic Narration :-)

kettavan said...

சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க, எனக்கு பொறுமை கிடையாது. பொதுவா தொடர்கதை படிக்கிறது இல்ல, அதுக்கு முக்கிய காரணம் எனக்கு பொறுமை இல்லை என்பதுதான். இருந்தும் உங்க கதைய பொறுமையா படிச்சிட்டு இருக்கேனா....

பொறுமையா சோதிக்காம அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க.

gils said...

whoa....antha detection sectiolaam top class..rajeshkumar mathiri irunthichi....romba nalla vanthiruku...seekrama adutha part podunga

Mohan R said...

Nice thriller

Nimal said...

Nice...

Prabhu said...

அடுத்து சீக்கிரம் போடுங்க!

அப்புற அந்த திவ்யா இந்த திவ்யாவா?

இல்ல இந்த திவ்யாவோட alternate realityla இருக்குறவங்களா?

mvalarpirai said...

super ! moviea edukalam intha storeya..:)

Unknown said...

Trilling ah pogudhu!!! very nice

மதி said...

:)
அதே சஸ்பென்ஸோட... போகுது கதை.. அடுத்த பார்ட்ட சீக்கிரமா போட்டுடீங்கன்னா புண்ணியமா போகும்..

JACK and JILLU said...

ராஜேஷ்குமார் போன்ற எழுத்தாளர்களுக்கெல்லாம் ட்ஃப் காம்பெடிஷன் கொடுத்துடுவீங்க போல இருக்கு... நல்ல தேர்ந்த எழுத்து நடை... அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்க்....

இனியவன் said...

Hi,
It is very interesting, I'm waiting for next part..

Anonymous said...

தப்பா நினைக்காதிங்க. நான் இங்க வந்து அட்டென்டன்ஸ் போட்டுட்டேன்.
எல்லா பாகத்தையும் அப்பால வந்து படிச்சிடுறேன். இந்த பாகத்த கொஞ்சம் படிச்சேன் சுவாரசியமா போனதால முழுசா படிச்சிட்டேன். முந்தைய பாகங்கள அப்புறமா படிக்கிறேன்.
இப்போதைக்கு கிளம்புறேன்.

Anonymous said...

//மீன்கள்//
//மீண்கள்//
எழுத்துப்பிழை சுட்டிக்காட்ட தோன்றியது.
#
தொடரும்...
கண்டீப்பா தொடரனும்...