Thursday, September 3, 2009

ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 1

“ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ்”

என்று பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட பெரியதொரு கம்பீரமான பெயர் பலகை, மதுரை புறநகர் பகுதியில் அமைந்திருந்த அந்த அழகான அடுக்கு மாடி குடியிருப்பிற்குள் நம்மை வரவேற்றது. நகரின் முக்கிய இடத்தில் அமைந்திருந்த அந்த குடியிருப்பு பகுதியில் அன்று சுதந்திர தின விழா.
கதவு எண் 1A, முதல் மாடியில் நுழைந்தவுடன் அமைந்திருந்த அந்த வீட்டு வாசலில் ஒரு அழகான மாக்கோலம்.
தாமரை வண்ண டஸர் புடவை சரசரக்க, படிய வாரிய தலையில், அழகான மல்லிச்சரத்துடன், அதைவிட அழகாக முகத்தில் என்றுமே மறையாத புன்னகையுடன் வந்த மருமகளைப் பார்த்து, “என் கண்ணே பட்டுரும் போல!!!” என்று தன்னக்குள்ளே பெருமையினூடே சலித்தும் கொண்டார் தனலட்சுமி.

“முகில்! அன்னிக்கு நம்மெல்லாம் போய் வாங்கின புடவை தான? அட்டகாசமா இருக்கு….”

“ஆமாங்கத்தை…” என்று மெலிதாக முறுவலித்தாள் முகில்.

அம்மா சொன்னதை கேட்டு ஒரு நொடி மனைவியை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் கையிலிருந்த செய்திதாளில் மூழ்கினான் ரஞ்சித்.
முகில் முகத்தில் எப்போதும் மறையாத சிரிப்பு இருப்பதை போல, ரஞ்சித் முகத்தில் என்றும் கடுகடுப்புக்கு பஞ்சமிருக்காது. ஆனால், உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாத அவன் குணம் கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

எதோ விசில் அடித்துக் கொண்டு செய்திதாளே கண்ணாய் இருந்த மகனை பார்த்து தனலட்சுமி, ’ச்சே…இந்த பசங்களே இப்படி தான்! சட்டுன்னு எதையும் பாராட்டறதுக்கு மனசு வராதே! இந்த கருப்பனுக்கு போய் இத்தனை அழகான பொண்ண கட்டி வச்சமே! கொஞ்சமாவது அருமை தெரியுதா பாரு’ என்று மனதிற்குள்ளே பெற்ற மகனை வசைப் பாடிக் கொண்டிருந்தார்.
ஆனால் ’தேவதையைக் கண்டேன், காதலில் விழுந்தேன்’ பாடலை விசில் அடித்துக் கொண்டே முகிலை ஓரக் கண்ணில் அவன் பார்த்ததையும், அதை உணர்ந்து அவள் வெட்கப் புன்னகை புரிந்ததையும் அவர் கவனிக்கவில்லை பாவம்!

“தனம்!! அங்க என்ன யோசனை? எல்லாரும் கிளம்பியாச்சுல்ல? நடங்க…. நடங்க….நேரம் ஆகுது…” ரஞ்சித்தின் அப்பா சுப்பிரமணியம் சொல்லவும், வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே நடந்தனர்.
லிஃப்ட் அருகே சென்ற ரஞ்சித்தை தடுத்து நிறுத்தயது அவன் அம்மாவின் குரல், “டேய்! ரெண்டாவது மாடில புஷ்பா வீட்டுக்கு போய்ட்டு, அவங்களோட சேந்து போலம்னு சொன்னேன்ல?”

“ஆமா…எத்தனை தடவை மா சொல்லுவீங்க? நல்லா ஞாபகம் இருக்கு…”

“அப்புறம் எதுக்குடா லிஃப்டு?”

“ஏன் ரெண்டாவது மாடின்னா லிஃப்ட்ல போகக் கூடாதா?”

உடனே சுப்பரமணியமும், தனலட்சுமியும் ஒரு சேர சலித்துக் கொண்டனர், “நாலு படி ஏறதுக்கு ஒரு லிஃப்ட்டா? இந்த காலத்து பசங்க…”

ஒரு வழியாக புஷ்பா வீட்டிளுள்ள அனைவரைவும் அழைத்துக் கொண்டு, எல்லோரும் விழா நடக்கும் கட்டிடத்தின் மேல் தளத்தை அடைந்த போது மணி ஆறு.
ஷோபா அபார்ட்மெண்ட்டில் மொத்தம் ஒன்பது தளங்கள். ஒவ்வொரு தளத்திலும் நான்கு வீடுகள் தான். மேலிருந்த பத்தாவது தளம், வீடுகள் எதுவும் இல்லாத ஒரு காலியிடம். விழாக்கள் நடத்த வசதியாக ஒரு மேற்கூரை போன்றதொரு அமைப்பை மட்டும் ஏற்படுத்தியிருந்தார்கள்.
லிஃப்ட்டை விட்டிறங்கியவுடன் ஒரு சிறிய அறை, அதை கடந்து கதவை திறந்து கொண்டு சென்றால், மொட்டை மாடி.

ரஞ்சித் அந்த கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய, தனலட்சுமி, “என்னடா இது இந்த அபார்ட்மெண்ட் கதவெல்லாம் இப்படி? ஒவ்வொரு தடவையும் இந்த நம்பர அமுத்திட்டு தான் திறக்கனுமா? சரியான தொல்லை…”

“என்னம்மா அப்படி சொல்லிட்டீங்க? இது தான் ரொம்ப சேஃப்ட்டி! சாவி, பூட்டு தேவையில்லை, எல்லாம் எலெக்ட்ரானிக் தான். பாரு, பக்கத்துலையே ஒட்டின மாதிரி எத்தனை கட்டிடம் இருக்கு? அதுல இருந்து குதிச்சாலும், யாரும் பூட்ட உடைச்சோ, இல்ல வேற எப்படியோ வரவே முடியாது. இந்த நம்பர கரெக்ட்டா அமுத்தினா தான் வர முடியும்…அது மட்டுமில்லை, மூனு தடவைக்கும் மேல தப்பா அமுத்தினா, அப்புறம் ஒரு மணி நேரத்துக்கு திறக்க முடியாது. செக்யூரிட்டி ரூம்லையும் உடனே அலாரம் அடிக்கும்…”

“ஆமா…இந்த ஐஞ்சு ஜீரோ அமுத்தறது ரொம்ப தான் கஷ்டம் பாரு…”

ரஞ்சித் சிரித்துக் கொண்டே, “இல்லம்மா…இது டிஃபால்ட் கோட், இப்போதைக்கு தற்காலிகமாத் தான் இப்படி வச்சிருக்காங்க…இப்ப தான புசுசா இத எல்லா கதவுலையும் ஃபிட் பண்ணியிருக்காங்க? எல்லாத்துக்கும் பழகினப்புறம், இந்த மாடி கதவுக்கும் ஒரு நம்பர செட் பண்ணி, எல்லாருக்கும் சொல்லுவாங்க…”

“என்னமோ போடா…ஒவ்வொரு தடவையும் இந்த நம்பர வேற ஞாபகம் வச்சுகிட்டு இருக்கனும்…ஆமா, நம்ம வீட்டுக்கும் இதே மாதிரி தான? என்ன நம்பர் அது?”

முகில், “எங்க கல்யாண தேதி தான் அத்தை…4-11-08” என்று சிரித்தபடி பதிலளித்தாள்.

உரை, கலைநிகழ்ச்சிகள் என்று இரண்டு மணி நேரத்திற்கு பின்னர், எட்டு, எட்டரைக்கெல்லாம் இரவு உணவும் ஆரம்பமானது.
ரஞ்சித், சுப்பிரமணியம், இரண்டாவது மாடி புஷ்பாவின் மகன் ராகேஷ் உட்பட இன்னும் சில நண்பர்கள் கூடி நின்று உணவருந்திக் கொண்டிருக்க, முகில், தனலட்சுமி, புஷ்பா என்று பெண்கள் கூட்டமெல்லாம் அவர்களுக்கு எதிர் திசையில் சற்று தள்ளி உணவருந்திக் கொண்டிருந்தனர்.

புஷ்பா தனலட்சுமியிடம், “ஏங்க…உங்க மருமகளுக்கு தங்கச்சி யாராவது இருக்காங்களா?”

“ஏன் கேக்கறீங்க?”

“இல்ல…எங்க ராக்கேஷுக்கு பாக்கலாமேன்னு தான்…” என்று சொல்லிச் சிரித்தார் புஷ்பா.

தனலட்சுமியும் சிரித்துக் கொண்டே, “எங்க முகில் மாதிரி வேற பொண்னெல்லாம் கிடைக்காது…”
“ஏம்மா முகில்! கேட்டியா? உன்னை மாதிரியே மருமக வேணுமாம் புஷ்பா ஆண்டிக்கு…”

முகில் பதிலேதும் பேசாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க, தனலட்சுமி, “முகில்!” என்று மீண்டும் ஒருமுறை அழைத்தார்.
கனவில் இருந்து விழித்தவளைப் போல, “என்னங்கத்தை? என்ன சொன்னீங்க?”

“என்னது? என்ன சொன்னேனா? எந்த உலகத்துல இருக்க நீ?”

முகில் பதிலேதும் சொல்லாமல் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு, “அங்க பாருங்களேன்!!! அவருக்கு இந்த டிரெஸ் எவ்ளோ நல்லா இருக்குன்னு…”

“யாருக்கு”

“அவருக்கத்தான் அத்தை …”

“ரஞ்சித்தா? என்ன ட்ரெஸ் போட்ருக்கான்? வெள்ள சட்டையா? இதுல என்னத்த சூப்பரா இருக்கு? எல்லாரும் போடறது தான?”

“போங்கத்தை….எவ்ளோ நல்லா இருக்கு? அவருக்கு எப்பயுமே வெள்ளை ஃபார்மல் சட்டை ரொம்ப பொருத்தமா இருக்கும்…”

“ஹ்ம்ம்ம்…”

“என்ன ஹ்ம்ம் ன்னு மட்டும் சொல்றீங்க? அங்க பாருங்க…அந்த பச்சை சுடிதார் பொண்ணு…ரொம்ப நேரமா அங்கயே தான் பாத்துட்டு இருக்கா…அவரை தான் சைட் அடிச்சிட்டு இருக்கா…” என்று முகில் பெருமையடித்துக் கொள்ள,

தனலட்சுமி, “என்னது?” என்றபடி அந்த பச்சை சுடிதார் அணிந்த பெண்ணைப் பார்த்தார், “அட ஆமா…அவங்க நிக்குற பக்கமே தான் பாத்துட்டு இருக்கா…யேய்…இரு…அவ ராக்கேஷத் தான் பாக்குறான்னு நினைக்குறேன்…அவன் தான் பேச்சுலர், இவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவன், இவனைப் போய் எதுக்கு பாக்கப் போறா?”
“இல்ல இல்ல…இவரை தான் பாத்துட்டு இருக்கா…ஒரு நிமிஷம் இருங்க…இப்ப நான் அவரை இங்க கூப்பிடறேன், நீங்க அந்த பொண்ணயே பாத்துகிட்டிருங்க…”

“ஏய்…என்னதிது விளையாட்டு? சும்மா இரு” என்று தனலட்சுமி தடுப்பதற்குள் முகில், “ஏங்க! ஒரு நிமிஷம் இங்க வாங்களேன்….” என்று அவனை அழைத்தே விட்டாள்.

பதறிப் போன தனலட்சுமி, “என்ன முகில் இது?”,
முகில், “பேசாம அந்த பொண்ணயே பாத்துட்டு இருங்கத்தை…”

“என்னம்மா…” என்றபடி அருகில் வந்த கணவனிடம், யாருக்கும் கேட்காத வண்ணம், அவனது காதருகே, “ரஞ்சி! இந்த ட்ரெஸ்ல நீங்க எவ்ளோ ஹான்சம்மா இருக்கீங்க தெரியுமா?” என்று கிசுகிசுத்தாள்.

கண்களில் நட்சத்திரங்கள் மின்ன, “ஹேய்…நிஜமாவா சொல்ற?” என்று கேட்கவும், நிஜம் தான் என்பது போல அவன் கைபேசி அழகாய் பாடியாது. ’ஒரு நிமிஷம்’ என்று மனைவிக்கு கண்களாலேயே சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் ரஞ்சித்.

உடனே அத்தையிடம் திரும்பிய முகில், “என்னத்தை…பாத்தீங்களா?” என்று நமட்டு சிரிப்புடம் கேட்டாள்.

“ஆமா…உனக்கெப்படி தெரிஞ்சுது?”

“முதல்ல நீங்க என்ன பாத்தீங்கன்னு சொல்லுங்க…அப்புறம் நான் சொல்றேன்…”

“அவன் அங்கிருந்து இங்க வர வரைக்கும் அந்த பொன்னோட பார்வையும் அப்படியே பின்னாடியே வந்துச்சு…ரஞ்சித் இங்க வந்ததும், நீ வேற அவன்கிட்ட என்னவோ சொல்லி சிரிச்சியா? அப்ப அந்த பொன்னு முகத்த பாக்கனுமே…”

“ஹா ஹா….நான் சொன்னேன்ல? நம்ம ப்ரோக்ராம்ஸ் பாத்துட்டு இருக்கும் போதே நான் பாத்தேன்…அந்த பொண்ணு அவரை அநியாயதுக்கு சைட் அடிச்சுட்டு இருந்துச்சு…” முகில் முகத்தில் ஏகத்துக்கும் பெருமை மின்ன, தனலட்சுமி,
“ஹ்ம்ம்…இதுல உனக்கு பெருமை வேற? ஆமா, உனக்கெப்படி தெரியும்?”

“எல்லாம் எனக்கு தெரியும்…” என்று சொல்லி, சத்தமிட்டு முகில் சிரிக்கவும், ரஞ்சித் தொலைபேசிவிட்டு அங்கு வரவும் சரியாக இருந்தது.
“என்ன எல்லாம் தெரியும்? என்ன ஜோக், எதுக்கு சிரிக்கற முகில்?”

“அதுவா…அங்க ஒரு பச்சை சுடிதார்…” முகிலை மேலே பேச விடாமல் செய்தது, தனலட்சுமியின் பெருத்த இருமல் ஒலி, “டேய்…கொஞ்சம் தண்ணி கொண்டாடா…” பொய்யாய் வரவழைத்த இருமலுடன் தனலட்சுமி இப்படி கேட்கவும், ரஞ்சித்தும் “தோ…” என்றபடி சிட்டாய் பறந்தான்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? இதையெல்லாமா போய் அவன்கிட்ட சொல்லுவ?”

“ஏன்? சொன்னா என்னங்கத்தை?”

“சொன்னா என்னவா? சரியான பேக்கு பொண்ணு தான் போ…பேசாம இரு, இதெல்லாம் ஒன்னும் சொல்ல வேண்டாம்…”

முகிலும் அத்தையை அதற்கு மேல் எதிர்த்து பேசாமல், ஒரு குறு புன்னகையுடன் அமைதி காத்தாள்.

“ஆமா, அந்த பொண்ணு காமாட்சி சொந்தக்காரப் பொண்ணு தான?”

“ஆமாங்கத்த”
“இதுக்கு முன்னாடியே எங்கையோ பாத்தாப்புல இருக்கு…எங்கன்னு தான் தெரியல…”
***
பத்து மணியளவில், விழா முடிந்ததும், அனைவரும் தத்தம் வீடுகளுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். எல்லோரும் மாடி கதவை நோக்கி நடக்கத் துவங்க, அத்தையின் பின்னோடு சென்று கொண்டிருந்த முகில், மாடி அறையின் கதவை கடக்கும் வேளையில் சற்றே தாமதித்து நின்று, பின்னால் வந்து கொண்டிருந்த ரஞ்சிதை பார்த்தாள்.

“ரஞ்சி! அங்க பாருங்களேன்…அந்த பச்சை சுடிதார் போட்ட பொண்ணு…”

“எங்க?”

“அங்க பாருங்க…அந்த வாட்டர் சின்டேக்ஸ் பக்கத்துல…”

“ஆமா…யாரது? புதுசா இருக்கு? நம்ம பில்டிங்கா?”

“இல்லல்ல…ரெண்டாவது மாடி, புஷ்பா ஆண்டி வீட்டுக்கு ஆப்போஸிட் வீட்ல இருக்காங்களே, அவங்க வீட்டுக்கு வந்திருக்க சொந்தகார பொண்ணு…”

“ஒஹ்ஹ்…”

“அந்த பொண்ணு, இங்க வந்ததுல இருந்து என்ன பண்ணிட்டு இருந்தா தெரியுமா?” என்றபடி விஷமப் புன்னகை புரிந்த மனைவியை பார்த்து, “போச்சுடா…ஏதோ என் பொன்டாட்டி கொஞ்ச நல்லவன்னு நினைச்சேன்…இப்ப அந்த ஆண்ட்டீஸோட சேந்து நீயும் காஸிப் பண்ண ஆரம்பிச்சிட்டியா?”

முகத்தில் செல்லக் கோபத்துடன், “ஹய்யோ…அதில்லைடா மடையா…அந்த பொண்ணு வந்ததில இருந்து உங்கள பயங்கரமா சைட் அடிச்சிட்டு இருந்துச்சு…அத சொல்லலாம்னு பாத்தா…”

“ஹே…என்ன சொல்ற? ஜோக்கா?”

“இல்லப்பா…நிஜம்ம்மா…நானே பாத்தேன்…”

முகம் மலர, அந்த பெண்ணை பார்த்தபடி, விசிலடித்துக் கொண்டு ரஞ்சித், “ஹ்ம்ம்…பொண்ணு பாக்கறதுக்கு நல்லா தான் இருக்கு…இந்த இனிப்பான செய்திய சொன்ன என் இனிய பொன்டாட்டி வாய்ல ஸ்வீட் தான் போடனும்” சொன்னதோடு நிற்காமல், அங்கே கதவருகே வரவேற்பதற்காக வைத்திருந்த தட்டிலிருந்த கல்கண்டை எடுத்து முகில் வாயில் போட்டான் ரஞ்சித்.

***
காலை மணி ஆறு, ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ்ஸில் காலை வாக்கிங்க் செல்லும் பெரியவர்கள், கீழ் தளத்தில் இருந்த ஜிம்மிற்கு போவதற்காக கிளம்பி வந்த இளவட்டங்கள், பால் வாங்குவதற்காக வந்த இல்லத்தரசிகள், இப்படி அந்த அதிகாலை வேளையில் வெளியே எட்டிப் பார்த்த அனைவருமே தத்தம் வேலைகளை மறந்து, முகத்தில் மறையாத கலவரத்துடன் ஸ்தம்பித்து போய் நின்று கொண்டிருக்க, சைரன் பொருத்திய வாகனங்கள் உள்ளே வருவதும், செல்வதுமாய், பல காக்கி சட்டைகள் கூட்டமாக அந்த வளாகத்தையே சுற்றி வலைத்திருக்க, ஷோபா அபார்ட்மெண்ட்ஸே அல்லகோல கல்லகோலப் பட்டுக் கொண்டிருந்தது.

அங்கு கூடியிந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே, சாக்பீஸ் கோடுகளுக்குள்ளே, ரத்தவெள்ளத்தில், குப்புற விழுந்த நிலையில், பச்சை சுடிதார் அணிந்த ஒரு பெண்…அங்கு நிகழ்வது எதுவும் தெரிந்து கொள்ளும் சக்தியற்ற பிணமாய்!

[தொடரும்]

24 comments:

நட்புடன் ஜமால் said...

ரொம்ப ரொமாண்ட்டிக்கா படிச்சிகிட்டே வந்தா

கடைசில என்னங்க இப்படி ...


அடுத்து பகுதி சீக்கிரம் போடுங்கோ ...

Raghav said...

அய்யோ சான்ஸே இல்ல.. செம ரொமாண்டிக்கா இருந்தது.. கடைசில இப்படி ஒரு திருப்பமா.. கலக்கலா எழுதிருக்கீங்க..

Raghav said...

//மதுரை புறநகர் பகுதியில் அமைந்திருந்த அந்த அழகான அடுக்கு மாடி குடியிருப்பிற்குள் நம்மை வரவேற்றது.//

அய்.. எங்க ஊரு.. ஆமா, மதுரையில எங்கங்க ஷோபா அபார்ட்மெண்ட் ??

Raghav said...

// முகிலை ஓரக் கண்ணில் அவன் பார்த்ததையும், அதை உணர்ந்து அவள் வெட்கப் புன்னகை புரிந்ததையும் அவர் கவனிக்கவில்லை பாவம்!//

இதுலெல்லாம் தான் நாங்க கில்லாடியாச்சே.. :)

Raghav said...
This comment has been removed by the author.
gils said...

vijaytvla pudu serial paakara epect varuthu :D kadisila enna ipdi suntv mathiri mudichiteenga :(( adutha postu oru maasam izhukama satuputunu podnga..silapala spelling mishtakes iruku...sari panikunga

உயிரோடை said...

அருமையான‌ க‌தை சொல்லும் திற‌ன் இருங்குங்க‌ உங்க‌ளுக்கு வாழ்த்துக‌ள்

FunScribbler said...

ரொம்ப நாளைக்கு அப்பரம் ஒரு கதை. அதுவும் சூப்பரா போகும் ஒரு கதை. அட்டகாசம் போங்க!:)

சங்கர் said...

நல்ல ஆரம்பம்!! ஆரம்பத்தின் முடிவில் ஒரு கலவரம்!! அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க!! எழுத்துப்பிழை.. கொஞ்சம் பாத்துக்கோங்க.

நாகை சிவா said...

அசத்தல் ஆரம்பம்!

Ramesh M said...

Hello.. Nee TV la Serial paarthu romba kettu poi irukka... story interesting ah pogum pothu thodarum nu podura...

sri said...

Romba nalla erukku :) Ranjith romantic husband a ellai kadukadups nnu therila :) adha konjam maathi ezudhi erkkalam, Mugil characterisation palich! ellam supera erukku bayangara romantica, pinnadiye oru twist :) kalakiteenga, seekram adutha part pls sssssssss :P

23-C said...

athu epdinga oru part mudinja, adutha part eponu kekra alavuku eluthureenga?..

engalukum solikodutha useful a irukum!

Nimal said...

ரொம்ப நாளைக்கு அப்புறம்... நல்ல ஆரம்பம்... இது திரில்லரா? ரொமான்டிக்கா? ரொமான்டிக் திரில்லரா?

எதுவா இருந்தாலும் சிறப்பாக தொடர வாழ்த்துகள்...!

மதி said...

நீண்ண்ண்ண்ட நாளைக்குப் பின் உங்க கதை. வழக்கமான கலாட்டாக்களுடன்... அடுத்த பாகத்தை பதியுங்கள். தொடர்ந்து வருகிறோம்.. :)

G3 said...

Avvvvvvvvvv.. Naan oorla illadha neram paathu kadhaya release panni irukkeengalae :((( avvvvvvvvvv...

Appo ini all wednesdays (PST :P) correcta inga aajar aagidanuma? rightae :)))

G3 said...

First partae top gearla irukku :))) Pottu thaakkunga :D

G3 said...

//.silapala spelling mishtakes iruku...sari panikunga//

Aaha.. Gilsa idhu !!! NAMBAMUDIYAVILLAI....

Karthik said...

ஸாரி, கொஞ்சம் லேட். க்ரைமா? கலக்குங்க. :))

ஜியா said...

//சொன்னதோடு நிற்காமல், அங்கே கதவருகே வரவேற்பதற்காக வைத்திருந்த தட்டிலிருந்த கல்கண்டை எடுத்து முகில் வாயில் போட்டான் ரஞ்சித்.//

இந்த எடத்துல... வாலிப் படத்துல சோனா சாங் மிட்ல ஒரு வசனம் வருமே.. அந்த ரேஞ்சுக்கு ஒரு சீன் இருந்திருந்தா இன்னும் ரொமாண்டிக்கா இருந்திருக்கும் :))

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் பார்ட்...

GK said...

அற்புதமான தொடக்கம் திவ்யா!
வெகுகாலம் கழித்து இப்படி ஒரு கதயை படிக்கிரென்.
அடுத்த பதிவை விரைவாக எழுதவும்.

GK said...
This comment has been removed by the author.
Anonymous said...

[B]NZBsRus.com[/B]
Skip Laggin Downloads Using NZB Files You Can Quickly Find High Quality Movies, Games, Music, Applications & Download Them at Maxed Out Speeds

[URL=http://www.nzbsrus.com][B]Newsgroup Search[/B][/URL]

VIJI said...

Started reading by today.....Interesting:-)