Wednesday, February 11, 2009

சூர்யகாந்தி - 4

பாகம் 1, பாகம் 2, பாகம் 3

வழக்கமான துள்ளலோட மாமா வீட்டுத்தெரு வரைக்கும் நடந்து வந்த சூர்யாவோட கால்கள், அவங்க வீடு கண்ணுல பட்டதும், வழக்கத்து மாறா அன்னிக்கு திடீர்ன்னு முரண்டு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு, என்னிக்கும் இல்லாத ஒரு தயக்கம்! ஏதோ ஒரு அழகான நினைப்பு வந்து அவளுக்குள்ளா ஒட்டிகிட்டது தான் அதுக்கு காரணம்…அந்த நினைப்புல ரோடுன்னு கூட பாக்காம தலைய குனிஞ்சு, நாக்க கடிச்சிட்டு, கண்ண சுருக்கி அவ சிரிக்க, “ஹே சூர்யாக்கா தனியா சிரிக்காராங்க டா…” ன்னு கோலி விளையாடிட்டு இருந்த பசங்க கேலி செய்ய, “ச்சீ…போங்கடா!!!” ன்னு அவங்கள அதட்டிட்டு ஒரே ஓட்டமா கதிர் வீட்டுத் தெருவுக்குள்ள நுழைஞ்சா சூர்யா!

***
கற்பனைச் சுமைகள் – 4

நீ என்னவன் என்று பறைசாற்ற
உன் கரம் பற்றி,
பெருமிதம் பொங்க,
இந்த தெருவில் நடப்பது போலவும்,

உன்னை வழியனுப்பிய பிறகும்
வீட்டினுள் செல்ல மனமின்றி,
இந்த தெருவில் பதிந்த உன் கால் தடங்களில்
என் பார்வை தேங்கி நிற்பது போலவும்,

மாலை, உன் வரவுகாக
வீட்டு வாயிலருகே காத்து நின்று,
இந்த தெருவில் ஏக்கப் பார்வைகள்
பதிப்பது போலவும்,

இந்த தெருவை அடைத்து
நான் போடும் கோலத்தை ரசிப்பதாய் சாக்கிட்டு,
காலைப் பனியோடு சேர்த்து,
என்னை நீ ரசிப்பது போலவும்,

இப்படி ஆயிரமாயிரம் கற்பனைகள்,
ஒவ்வொரு முறை
உன் வீட்டுத் தெருவை கடக்கும் போதும்
என்னுள் தோன்றி மறைகிறதே…

என் வீட்டுத் தெருவை
கடக்கும் போது,
ஒரே ஒரு முறையேனும்
என் நினைவாவது
உன்னுள் மலர்கிறதா?

***
ரொம்ப நேரமா சூர்யாவ காணாம செல்லாத்தா, “தேனு! தேனு! இந்த சூர்யா என்ன இன்னும் வரக் கானோம்…இந்த முருகன விட்டு அவள கூட்டிட்டு வரச் சொல்லியனப்ச்சனே?” செல்லாத்தா இப்படி கேக்கவும், தேன்மொழி, “ஏம்மா? என்ன விஷயம் அவள எதுக்கு தேடற…”

“இல்ல, அவள டவுனுக்கு கூட்டிட்டு போயி ஒரு பொடவ வாங்கலாம்னு தான்…”

“ஏம்மா? நேத்திக்கு அவ அப்படி சொல்லிட்டாளேன்னு மனசு சங்கடமா இருக்கா? எனக்கும் கூட அழுகையே வந்துடுச்சு…ஆனா…மாமா சும்மா இருப்பாரா?”

“இன்னும் எத்தன காலம் தாண்டி அவருக்காக பயப்படறது, அவரோட வரட்டு கெளவரத்தால இந்த புள்ளைக்கு ஒரு நல்லது கெட்டது பண்ண முடியுதா நம்பலால? எல்லாம் இன்னும் ஒன்னு, ரெண்டு வருஷம் தான்…அப்புறம் கல்யாணம் முடிச்சு இங்கயே கூட்டிட்டு வந்தற வேண்டியதுதான்…”

“நீ என்னவோ இவ்ளோ ஈஸியா சொல்லிட்ட…இந்த மாமா ஒத்துக்கனுமே, அப்படி என்ன தான் கோவமோ அவருக்கு…ச்சே….இந்த அப்பாவாவது கொஞ்சம் விட்டு குடுத்திருக்கலாம்…”

“என்ன தேனு இப்படி பேசுற? உங்கப்பா என்ன பண்ணுவாரு?”

“ஏன் நியாயம், அநியாயம் எல்லாம் பாக்காம, அவரு கேட்ட சொத்த எழுதி வச்சிருந்தா, அத்தை இன்னும் இருந்திருப்பாங்களோ என்னவோ?”

“அதுக்காக ஒரு குடிகாரன நம்பி பரம்பரை சொத்தையெல்லாம் குடுக்க சொல்றியா? உங்கப்பா என்ன சொன்னாரு? சூர்யா பெருசானதும் அவ பேர்லையே எல்லாம் மாத்தி தரேன்னு தான?”

“சொத்து போனா மறுபடியும் சம்பாதிச்சுடலாம்…ஆனா…சரி போ…நானே போய் சூர்யாவ கூட்டிட்டு வரேன்…”

தேன்மொழி போனதும் செல்லாத்தா அப்படியே மறுபடியும் பழைய நினைப்புக்கு போய்ட்டாங்க…

எந்த எடுபட்ட பயலோ ஏத்தி விட்டதுல, பூபதி சொத்து குடுக்காம ஏமாத்திட்டாங்கன்னு சொல்லிட்டு திரிய ஆரம்பிச்சிட்டான். நியாயப் படி பாத்தா, செவ்வந்திக்கு கொஞ்சம் அதிமாவே தான் செஞ்சிருந்தாரு ராமசாமி. ஆனா அதெல்லாம் அவனுக்கு விளங்கினாத் தான?
பூபதி என்னடான்னா ராமசாமி மேல கேஸ் போடப் போறேன்…உங்கண்ணன் சொத்து குடுக்காம ஏமாத்திட்டாருன்னு கையெழுத்து போடுன்னு செவ்வந்தி உயிர வாங்க ஆரம்பிச்சுட்டான். அவளும் முடியாதுன்னு எவ்வளவோ அழுது பாத்தா, ஆனா ஒன்னும் உதவல. ஆனா பூபதி ஒரு நாள், ’என் பேச்ச மதிக்காத பொன்டாட்டியோட எதுக்கு வாழனும்னு’ பூச்சி மருந்து குடுக்க போற மாதிரி நடிக்கவும் அத உண்மைன்னு நம்பி ரொம்பவும் சோந்து தான் போய்ட்டா.

பிறந்ததுல இருந்து அண்ணன் கிட்ட எதுவுமே கேட்டதில்லை, எல்லாமே அவ கேக்கறதுக்கு முன்னாடி டான் டான்னு நடக்கும். அப்படி இருக்கும் போது, கல்யாணம் ஆகி இத்தன வருஷம் கழிச்சு, மொதமொதலா அண்ணன் வீட்டுப் படியேறி, பேசாம அவரு கேக்கறத குடுத்திருங்க, கோர்ட்டு, கேஸுன்னு என்னை குத்தி கொல்லாதீங்கன்னு கதறினா. ஆனா ராமசாமி, ’சூர்யா பெருசானதும் என்னோட மொத்த சொத்தையும் வேணா தரேன், இப்ப கானி நிலம் கூட அவன நம்பி மறுபடியும் குடுக்க மாட்டேன், இருக்கறத வச்சுட்டு ஒழுங்கா முதல்ல பொழப்ப நடத்த சொல்லு’ ன்னு பிடிவாதமா மறுத்துட்டாரு.
அது மட்டுமில்லாம, தங்கிச்சிய கட்டின மச்சினனாச்சேன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம, வாய்ல வந்ததெல்லாம் சொல்லி அவன திட்ட வேற திட்டிட்டாரு. அத அவன் கேள்விபட்டு, அப்புறம் அடி தடி ரகளை வரைக்கும் போய், கடைசியில செவ்வந்தி அன்னிக்கு ராத்திரியே மாரடப்பு வந்து செத்ததும் தான் நின்னுச்சு!

அதுக்கப்புறம் மாமனும் மச்சானும் ’ஓ’ன்னு கட்டி பிடிச்சுட்டு அழுது என்ன பிரயோஜம்? போனவ போய்ட்டா…அதுவும் போற வயசுல பாதி கூடா தாண்டாமையே போய் சேந்துட்டா! ஆனா சும்மா சொல்லக்கூடாது, பழைய பூபதிய அதுக்கப்புறம் பாக்கவே முடியல. ஆளே ரொம்பவும் மாறி தான் போய்ட்டான். பொண்ணுக்காக எல்லாம் அவனே பாத்து பாத்து பண்ணிட்டு தான் இருக்கான் இந்த ஐஞ்சாறு வருஷமா, சூர்யா அவங்க வீட்டுக்கு வந்து போறத கூட தடுக்கல. ஆனா செவ்வந்தி செத்ததுக்கு ராமசாமியோட பிடிவாதம் தான் காரணங்கற எண்ணம் மட்டும் ஐஞ்சு வருஷம் ஆகியும் கூட அவன விட்டு போகவே இல்ல.அவங்களா பாத்து சூர்யாவுக்கோ, இல்ல அவனுக்கோ எதாவது வாங்கி குடுக்கறேன்னு சொன்னா கூட போதும், ’போதும் உங்க சங்காத்தமே இனி வேண்டாம்’ னு மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லிடுவான். எப்படியோ சூர்யா இந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு போறதால இன்னும் எதோ ஒரு சின்ன ஒட்டு உறவாவது இருக்கு. பூபதி என்ன தான் மாறினாலும், ஒரு விஷயத்துல மட்டும் அவன் இன்னும் திருந்தவே இல்லை. ஊர்ல வீணாப் போனவன் பேச்சையெல்லாம் கேட்டுகிட்டு அத உண்மைன்னு நம்பறது. எவனோ காலேஜுக்கெல்லாம் அனுப்பினா பொண்ணு கெட்டு போயிருன்னு சொல்லிட்டானேன்னு, அவ்ளோ மார்க் வாங்கியும் அவள பன்னென்டாவதோட நிப்பாட்டிடான்.

“இந்த ஐஞ்சாறு வருஷத்துல எல்லாமே எப்படி மாறி போச்சு…தேன்மொழி சொன்ன மாதிரி இவரும் தான் கொஞ்சம் விட்டுக் குடுத்திருந்தா இன்னேரம் அவ உயிரோட இருந்திருப்பாளோ…இனிமேவாவது எல்லாம் நல்ல படியா நடக்கனும், முருகா என் மனசுல இருக்கறத மட்டும் நிறைவேத்திட்டன்னா, நான் உனக்கு காவடி எடுக்கறேன்” ன்னு வேண்டிகிட்டு சிரமப்பட்டு, முட்டிய பிடிச்ச படி எழுந்து உள்ள போனாங்க செல்லாத்தா!

தேன்மொழி வாசப்படிய தாண்டறதுக்குள்ள சூர்யாவே அங்க வந்துட்டா. அவள பாத்தவுடனே சந்தோஷமா தேன்மொழி, “அம்மா சூர்யா வந்தாச்சு…நான் போய் முகம் கழுவிட்டு ரெடி ஆகறேன்…” ன்னு கத்திகிட்டே உள்ள ஒடவும், கதிர் அங்க வரவும் சரியா இருந்துச்சு.

ஆனா, அங்க கதிர் வந்ததயே கண்டுக்காத மாதிரி சூர்யா தலையே வேகமா திருப்பிகிட்டு சமயகட்டிக்குள்ள போக பாத்தா. ’வழக்கமா எதாவது அறுப்பாளே, இன்னிக்கு என்ன ஆச்சு?’ ன்னு நினைச்சுகிட்டே கதிர், “என்னதிது? குதிரை வாலு ரொம்ப வேகமா ஆடுது?”

“ஹூக்கூம்…உங்கிட்ட எனக்கென்ன பேச்சு…அத்தை!!!”

“ஓ! அந்த அளவுக்கு போயாச்சா? சரி சரி…ஆமா…வழக்கமா ரெட்டை ஜடை தான போடுவ? இன்னிக்கி என்ன புதுசா இருக்கு?”

சூர்யா முகத்த பாக்கனுமே, அப்படி ஒரு சந்தோஷம், “ஓ! நீங்க அதெல்லாம் கூட கவனச்சுட்டீங்களே மாமா…இன்னிக்கு மழை தான் வரும்…”

“அதில்ல சூர்யா…உனக்கு ரெட்டை ஜடை தான் ரொம்ப பொருத்தமா இருக்கும்…”
“நிஜமாவா மாமா?” ஆச்சர்யத்துல அவ வாய பிளக்கவும்,
கதிர், “ஆமா…அப்பத்தான் மாட்டுக்கு ரெண்டு கொம்பு வச்ச மாதிரி பொருத்தமா இருக்கும்”
“ச்சே…எல்லாம் என் நேரம்…”

பொய்யா கோவிச்சுகிட்டாலும், அவளுக்கு ஏதோ மாமா இன்னிக்கு நம்ம கிட்ட நின்னு பேசிட்டாரேனு ஒரே சந்தோஷம் தான். அவள கதிர் பாத்தாலே அன்னிக்கு முழுக்க சந்தோஷம் தான், அப்படி இருக்க, பேசினா கேக்க வேணுமா என்ன? அவளுக்குள்ள என்னென்னவோ கற்பனை ஊற்றெடுக்க ஆரம்பிச்சுடுச்சு! என்னவோ, அன்னிக்கு அவ கற்பனை குதிரை தரிகெட்டு தான் ஒடிட்டு இருந்துச்சு!
***
கற்பனைச் சுமைகள் – 5

நம் கண்கள் நான்கும்
உரசிக் கொண்ட
அந்த வசந்த வினாடி,
நீண்டு கொண்டே இருக்க வேண்டுமென்ற
என் நெஞ்சத்து தகிப்பெல்லாம்
வெட்கத் தவிப்பாய் உருமாறி,
என்னை ஆட்கொண்டு,
நான் தலை தாழ்த்திக் கொண்ட
அந்த வேளையில்…

மென்மையாய் என் முகம் நிமிர்த்தி
பொங்கி வழியும் என் வெட்கத்தை
உன் கண்களால் நீ பருக
வேண்டுமென்ற குறுகுறுப்பு,
எனக்கு மட்டும் தானா?
உனக்கில்லையா?

***

சந்தோஷத்துல வழக்கத்த விட அதிகமா துள்ளி குதுச்சு போய், “அத்தை…” னு செல்லாத்தாவ பிடிச்சிகிட்டா.

“என்ன கொஞ்சல் அதிகமா இருக்கு? எதுக்குடி இப்படி ஓடி வரவ? இன்னும் சின்ன புள்ளையாட்டம்…”

“நீங்க தானத்த உடனே கிளம்பி வா ன்னு சொன்னீங்க…என்னைய வரச் சொல்லிட்டு நீங்க எங்கயோ வெளிய போறதுக்கு கிளம்பி நிக்குறாப்புல தெரியுது…”

“நாம எல்லாரும் தான் போகப் போறோம்…உனக்கு சீலையெடுக்க…”

“எனக்கா….எனக்கெதுக்குங்த்த…?”

“ஏன், நாங்க உனக்கு எடுத்தாரக் கூடாதாக்கும்?”

“இல்ல…எங்கப்பா…எதாவது சொல்லுவாரேன்னு தான்…”

“உங்கப்பா கிடக்கறாரு, அதெல்லாம் நான் பாத்துக்கறேன்…சும்மா…பேசாம வா…ஆமா…”

அங்க வந்த தேன்மொழி, “யேய் சூர்யா…வாடி, அப்படியே உனக்கு எங்க காலேஜும் காட்றேன்…”

“ஹ்ம்ம் சரி போலாம்…” சூர்யா அரமனசா தலைய ஆட்டி வச்சா.

வாசல் பக்கத்துல அரவம் கேக்கவும், ஹாலுக்கு வந்த செல்லாத்தா, கதிர் செருப்பு மாட்டிட்டு இருக்கறத பாத்து, “கதிரு! எங்கப்பா கிளம்பி்ட்ட?”

“ஏம்மா?”

“இல்ல…எல்லாரும் டவுனுக்கு போய் துணியெடுக்கலாம்னு இருக்கோம்…நீயும் கூட வா…”

“அதான் போன வாரமே எல்லாம் வாங்கியாச்சே…”

“இல்லப்பா…இன்னிக்கு சூர்யாவுக்கு சீலையெடுக்கலான்னு…”

“சரிம்மா…ஆனா, சேலை எடுக்கறதுக்கெல்லாம் நானெதுக்கு? நீங்களே போய் வாங்குங்க…”

“இல்ல கண்ணு! ரெண்டு பொட்ட புள்ளைகள கூட்டிட்டு நானெப்படி தனியா போறது?”

“அதான் முருகம் ஜீப் ஓட்டிட்டு வருவானே…அப்புறம் என்ன தனியா? தேன்மொழி தினமும் அங்க பக்கத்தில இருக்கற காலேஜுக்கு தனியாத் தான போய்ட்டு வரா?”

“டேய்…கூட வாடான்னா இத்தன வியாக்கானம் பேசிக்கிட்டு இருக்க? எங்களோட வந்தா என்னடா கொறஞ்சு போய்டுவ?”

உடனே சூர்யா, “விடுங்கத்தை பரவால்ல…” ன்னு மெதுவா சொல்லவும், செல்லாத்தா, “நீ சும்மா இருடீ! நானும் பாத்துகிட்டே இருக்கேன், வர வர ஒரே விட்டேத்தியாவே பேசிட்டு இருக்கான்…தோட்டம் தொரவுன்னு பாத்துகிட்டா போதுமா? கொஞ்சமாவது கூட மாட வீட்டு வேலையெல்லாம் செய்ய வேண்டாம்?”

“ஏம்மா? இதெல்லாம் உங்களுக்கு ஒரு வீட்டு வேலையா?”

“வீட்டு வேலையில்லாம பின்ன என்னடா?”

“சரி, பேசி பேசி நேரம் தான் வீண்…என்னால இப்ப வர முடியாது…வேற யாரையாவது கூட்டிட்டு போங்க…”

“வேற யாராவது கூட்டிட்டு போறதா? ஏன்டா? கட்டிக் போறவளுக்கு துணியெடுக்கறதுக்கு நீ கூட வராம வேற யாருடா வருவா?”

“அம்மா! இப்ப எதுக்கு கட்டிக்க போறவ அது இதுன்னு தேவையில்லாம பேசறீங்க?”

“எது??? தேவையில்லாம பேசுறனா? என்னிக்கா இருந்தாலும் சூர்யா தான இந்த வீட்டு மருமக?”

“அப்டீன்னு நான் சொல்லனும்! மாமா சொல்லனும்! சும்மா நீங்களே இந்த மாதிரி எல்லாம் பேசி கற்பனைய வளக்காதீங்க….”

பதறிப் போய் செல்லாத்தா, “என்னடா சொல்ற?”

“என்ன சொல்றேன்னு உங்களுக்கு நிஜமாவே புரியலையா? நிச்சயமில்லாத ஒன்னப் பத்தி நீங்களே கற்பனை பண்ணிட்டு அப்புறம் என்னை குத்தம் சொல்லாதீங்க…நீங்க நினைக்கறது எதுவும் நடக்க போறதில்ல…அவ்ளோ தான் நான் சொல்லுவேன்…”

செல்லாத்தா கதிருக்கு ஏதோ பதில் சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ள, சூர்யா அழுதுகிட்டே வேகமா வெளிய ஓட ஆரம்பிச்சிட்டா.

“சூர்யா! சூர்யா! நில்லுடீ…நில்லு…” தேன்மொழியும் கத்திகிட்டே அவ பின்னாடியே ஓட ஆரமிப்ச்சிட்டா.
செல்லாத்தா, “பாருடா…பாரு! அவ எவ்ளோ மனசு கஷ்டப்பட்டு போறா பாரு! ஏன்டா இப்படி பேசுற? உனக்கு மனசாட்சியே இல்லையா?” ன்னு குமுறவும்,
“அதுக்கு காரணம் நானில்ல! நீங்க தான்…” ன்னு சொல்லிட்டு கதிர், அவன் கோவத்தையெல்லாம் அவன் கால்ல மாட்டியிருந்த செருப்பு மேல காட்டி, அத விசிறி அடிச்சிட்டு வெடுக்குன்னு அவன் ரூமுகுள்ள போய் கதவ சாத்திகிட்டான்.

அவ அம்மா போன நாள்ல இருந்து தேக்கி வச்ச சோகமெல்லாம் கண்ணீரோட கரைஞ்சு போற அளவுக்கு, கிணத்தடியில உக்காந்து அழுதுட்டு இருந்தா சூர்யா!

[தொடரும்]

35 comments:

மேவி... said...

me th 1st

Mohan R said...

கதை அருமை அதை விட கவிதைகள் அருமை :) :) :)
அடுத்த பாகத்துக்கான காத்திருப்பு மட்டுமே கொடுமை :(

Vijay said...

சொல்லுவதற்கு ஒண்ணும் இல்லை. கலக்கல். கவிதைகள் சூப்பர்.

Raghav said...

அருமை அருமை அருமை.

வேற என்ன சொல்றதுன்னே தெரியல, இந்தப் பகுதி ரொம்ப பிடிச்சுருக்கு...

கவிதைகள் அட்டகாசம்..

Raghav said...

//நம் கண்கள் நான்கும்
உரசிக் கொண்ட
அந்த வசந்த வினாடி,
நீண்டு கொண்டே இருக்க வேண்டுமென்ற
என் நெஞ்சத்து தகிப்பெல்லாம்
வெட்கத் தவிப்பாய் உருமாறி,
என்னை ஆட்கொண்டு,
நான் தலை தாழ்த்திக் கொண்ட
அந்த வேளையில்…
//

என் வசம் நானில்லை..

Raghav said...

//“டேய்…கூட வாடான்னா இத்தன வியாக்கானம் பேசிக்கிட்டு இருக்க? //

வியாக்கானம்னா என்ன ?

வ்யாக்யானம்னு ஸம்ஸ்கிருத வார்த்தை உண்டு...அதே தானா ?

G3 said...

:(((((((((((


unga mela kovathula irukken naan.. irundhirundhu innnikku dhaan friendship-a base panni oru story ezhudhalaam.. adha pathi yosikalamnu nenachittu veetukku vandhen...

neenga ennadanna ippadi urugi urugi love-a kotti vechirukkeenga kadha fulla.. ini naan en kadhaya pathi yosicha maadiri thaan :P

G3 said...

Jokes apart... aduthadutha parts padikka padikka kadhaila mothama moozhgiduven pola irukku.. adutha partskaaga aarvama waiting :)

Ovvoru partlayum unga ezhuthu merugerittae poramaadiri irukku.. asathareenga :)

தாரணி பிரியா said...

அய்யோ திவ்யா அடுத்த பாகம் அடுத்த புதன் அன்னிக்குதான் போடுவிங்களா? இது நியாயமா? இனி ஒரு வாரம் வெயிட் செய்யணுமா?

கதை அருமை , கவிதை எல்லாம் கலக்கல் :)

Divya said...

கவிதைகள் மிக மிக அருமை :))

கதை நல்லா போய்ட்டிருக்கு , வாழ்த்துக்கள் திவ்யப்ரியா:)

நட்புடன் ஜமால் said...

\\நீ என்னவன் என்று பறைசாற்ற
உன் கரம் பற்றி,
பெருமிதம் பொங்க,
இந்த தெருவில் நடப்பது போலவும்,\\

அழகான கவிதை துவக்கம்.

நட்புடன் ஜமால் said...

\\அவ அம்மா போன நாள்ல இருந்து தேக்கி வச்ச சோகமெல்லாம் கண்ணீரோட கரைஞ்சு போற அளவுக்கு, கிணத்தடியில உக்காந்து அழுதுட்டு இருந்தா சூர்யா!\\

நன்றாக போகுது கதை ...

புதியவன் said...

கதை சுவாரசியம போகுது...
பெண்ணின் ஏக்கங்களோடு கவிதைகள் வெகுஅழகு...
அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்...

//காலைப் பணியோடு சேர்த்து,//

“பனி”

வெட்டிப்பயல் said...

கதை அட்டகாசமா போயிட்டு இருக்குமா... அப்படியே கண்டினியூ பண்ணு :)

மேவி... said...

எப்படிங்க இப்பிடி sudden ட்விஸ்ட் எல்லாம் வைக்குறிங்க......
வழக்கம் போல் கவிதை சூப்பர் ஒ சூப்பர்......
கிராமத்தில் எப்படி சண்டை ஆரமிக்கும் என்று details எல்லாம் research பண்ணு இருபிங்க போல .....
பசங்களோட காதல் விஷயம் இந்த புடவை எடுக்கற போது தான் வெளியே வரும்; பெண்கள் வீடுல எப்படி நு தெரியாது.....
அதே மாதிரி நாம ஹீரோவுக்கு எதாவது லவ்வங்கி மேட்டர் இருக்கா.....
அடுத்த பதிவு எப்போ .....

mvalarpirai said...

நடுவுல அந்த அத்தை பிளாஷ் பேக்குல கிழக்கு சீமையிலே சாயலில் "தாய் மாமன்னா என்னானு தெரியுமானு" ஒரு பஞ்சாயத்து சீன் வரும்னு நினைச்சேன்..ஏமாத்திட்டீங்க....:) இந்த வாரம் வழக்கம் போல...கலக்கீட்டீங்க !

Karthik said...

Enunga... neenga oru vaara idhala idha thodara podalaame??? Enna maadhiri pala noondha ullangal ungala kumara kaathithu irukku??

Eana???


Ippadi suspsnse build pannithu poreengale!!!

Anonymous said...

Hi

உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Anonymous said...

kadhai arumai ya poitu iruku...epdi dan ipdi pinriyo therila...kadhapathiram la kan munnadi nikkaranga...credit to ur writing skills:-)

Princess said...

Cant wait for the next chapter...Seriously...
Intha weekend next chapter podalaamey..Pleaaase

gils said...

unga language postuku postuku supera aagitay varuthu..ithu erkanvay ezhuthi vachatha? illa flowla sikkinatha? post posta yosichu ezhuthara mathirye therila..romba nallaruku

Divyapriya said...


MayVee
//me th 1st//

ஆமா…:)

---
இவன் said...
//கதை அருமை அதை விட கவிதைகள் அருமை :) :) :)
அடுத்த பாகத்துக்கான காத்திருப்பு மட்டுமே கொடுமை :(//

அடடா!! கஷ்டப்பட்டு சஸ்பென்ஸ் எல்லாம் வைக்கறேனே..அதுக்காகவாது ஒரு வாரத்துக்கு அப்புறம் தான் போஸ்ட் பண்ணுவேன் ;)

---
விஜய்/ Raghav

நன்றி நன்றி நன்றி
எனக்கும் வேற என்ன சொல்றதுன்னே தெரியல :)

---
Raghav said...
//வியாக்கானம்னா என்ன ?

வ்யாக்யானம்னு ஸம்ஸ்கிருத வார்த்தை உண்டு...அதே தானா ?//

ஸம்ஸ்கிருத வார்த்தை எல்லாம் எனக்குத் தெரியாது…பொதுவா விதன்டாவாதம் பண்றத பேச்சு வழக்குல இப்படி சொல்லுவாங்க…

---
G3
Friendship கதையா? சீக்கரம் போடுங்க G3 :)))

//Ovvoru partlayum unga ezhuthu merugerittae poramaadiri irukku.. asathareenga :)//

Thanks a lot :)))

---
தாரணி பிரியா said...
//அய்யோ திவ்யா அடுத்த பாகம் அடுத்த புதன் அன்னிக்குதான் போடுவிங்களா? இது நியாயமா? இனி ஒரு வாரம் வெயிட் செய்யணுமா? //

தாரணி, கதை எல்லாம் எப்பவோ முடிச்சாச்சு :) ஆனா, நான் யோசிச்சு எதாவது சின்ன்தா ஒரு சஸ்பெண்ஸ் வைக்கறனே, அதுனால ஒரு வாரம் கழிச்சு தான் போடுவேன் ;)

Divyapriya said...


Divya/ நட்புடன் ஜமால்/ புதியவன்

எல்லோருக்கும் நன்றி…
----
வெட்டிப்பயல் said...
//கதை அட்டகாசமா போயிட்டு இருக்குமா... அப்படியே கண்டினியூ பண்ணு :)//

கண்டிப்பா அண்ணா…:)
----
MayVee said...
//எப்படிங்க இப்பிடி sudden ட்விஸ்ட் எல்லாம் வைக்குறிங்க......//

:))))

//கிராமத்தில் எப்படி சண்டை ஆரமிக்கும் என்று details எல்லாம் research பண்ணு இருபிங்க போல .....
பசங்களோட காதல் விஷயம் இந்த புடவை எடுக்கற போது தான் வெளியே வரும்;//

அப்படியா? அதெல்லாம் எனக்குத் தெரியாது…ஏதோ தோனுச்சு, எழுதிட்டேன் :)
---
Mvalarpirai/ Karthik

:)))))
---
Badri

Thanks a lot bad…
---
ஸாவரியா said...
//Cant wait for the next chapter...Seriously...
Intha weekend next chapter podalaamey..Pleaaase//

Thanks a lot ஸாவரியா…அடுத்த வாரம் புதன் கிழமை போட்டுடறேன்…

---
gils said...
//unga language postuku postuku supera aagitay varuthu..ithu erkanvay ezhuthi vachatha? illa flowla sikkinatha? post posta yosichu ezhuthara mathirye therila..romba nallaruku//

போஸ்ட்டு போஸ்ட்டா எல்லாம் எழுத மாட்டேன்…சினிமா எடுக்கற மாதிரி முதல்ல frame மட்டும் யோசிச்சு வச்சுட்டு, மூடுக்கு தகுந்த மாதிரி எப்ப வேணா எந்த பகுதி வேணாலும் எழுதுவேன் ;) பெரும்பாலும் முதல்ல climax தான் எழுதுவேன் (எங்க தலைவி ஜே.கே ரெளலிங் ஸ்டைல்ல…ஹீ ஹீ :)))
ஆனா, கதைய மொத்தமா எழுதி முடிச்சிட்டு தான் ப்ளாக்ல போடுவேன் :)

சிம்பா said...

இவளோ சிரமப்பட்டு கதை எழுதிறதுக்கு இன்னைக்கு ஒரு கவிதை போட்டிருந்தா வந்து கும்மி அடிக்க வசதியா இருக்குமே...

நல்லா எஸ்கேப்பு...

ஜியா said...

aiyayo!! aiyayo! enna aagumo theriyalaiye :((

Sooriya (Surya na aambala perulla... athaan spelling change) maathiri maama ponnu enakku illaama poche :((

ஜியா said...

This story has made you a big time story-teller... screenplay and narration awesome... kalakkunga...

Divyapriya said...


//ஜி said...
aiyayo!! aiyayo! enna aagumo theriyalaiye :((//

எனக்கு தெரியுமே ;)

//
Sooriya (Surya na aambala perulla... athaan spelling change) maathiri maama ponnu enakku illaama poche :((//

கதிருக்கு பதிலா நீங்க இருந்திருந்தா கதை வேற மாதிரி போயிருக்கும் போல ;))

//This story has made you a big time story-teller... screenplay and narration awesome... kalakkunga...//

அப்பா, promotion கிடைச்ச மாதிரி இருக்குது...தன்யவாத்ஜி :))

Anonymous said...

avvvv..ivlo yosichilam post poduveengala..full time writey aaga ella thaguthiyum iruku ungaluku

~gils

*இயற்கை ராஜி* said...

//நம் கண்கள் நான்கும்
உரசிக் கொண்ட
அந்த வசந்த வினாடி,
நீண்டு கொண்டே இருக்க வேண்டுமென்ற//
அருமையான‌ வ‌ரிக‌ள்.

*இயற்கை ராஜி* said...

க‌ல‌க்க‌லோ க‌ல‌க்க‌ல்

gayathri said...

kathai kavithai rendume nalla iruku

gayathri said...

1 to 4 parts onna padichen kathai rompa azaka iruku.sekaram next part podunga pa.

gayathri said...

பசங்களோட காதல் விஷயம் இந்த புடவை எடுக்கற போது தான் வெளியே வரும்

ithu eppadi konjam velakkam kodungalen mayvee

Anonymous said...

தொடர்கதை அருமை. இனி வாராவாரம் விசிட் அடிச்சிட வேண்டியது தான்.

தமிழிசை said...

Kavithaigalum super, kadhaiyum super.