Friday, February 6, 2009

சூர்யகாந்தி - 3

பாகம் 1

பாகம் 2

முகத்த பாதி மறச்ச அந்த மீசையா, இல்ல எப்ப பாரும் கடுகடுன்னு இருக்கற அந்த முகமா, இல்ல ஊரே அதிர்ற மாதிரி கணீர்ன்னு ஒலிக்கற குரலா, இல்ல எல்லாமும் சேந்தா? ஆக மொத்ததுல பூபதிய பாத்தாலே கொஞ்சம் பயமாத் தான் இருக்கும். இவனுக்கா பூ போல ஒரு புள்ளன்னு யாரும் நம்ப கூட மாட்டாங்க!!!

“என்ன மச்சான்? விருந்தெல்லாம் தடபுடலா நடக்கறாப்புல இருக்கு? சாமிக்கு படப்பு எல்லாம் போட்டாச்சா? இல்ல அதுக்குள்ள பந்தி தொடங்கிட்டீங்களா?” ன்னு சொல்லிட்டு ஹா ஹா ஹா ன்னு சிரிச்சாரு. ஐயோ சாமி! இதுக்கு சிரிக்காமையே இருந்திருக்கலாம்னு தான் நினைக்கத் தோனும் அவரு சிரிக்கறத கேட்டா!

“வாங்க வாங்க மாப்ள…வெல்லனையே சாமிக்கெல்லாம் படைச்சாச்சு…நீங்க தான்…நேரங்கழிச்சு….”

“எங்க? போட்டது போட்ட படியா வர முடியும்? உங்கள மாதிரியா பாதி ஊர வச்சா பண்ணயம் பண்ணிட்டு இருக்கேன். அரக்காணியா இருந்தாலும், நம்மளுத நாம தான பாக்க வேண்டியிருக்கு!!! என்ன நான் சொல்றது?”

“ஆமாமா…” ன்னு ராமசாமி ஐயா இழுக்கறதுக்குள்ள பாதி சாப்பாட்ல இருந்த சூர்யா அவங்க அப்பாவ பாத்து, எந்திரிச்சு வந்துட்டா.

“வாங்கப்பா…இத்தன நேரமா வர்ரதுக்கு? உங்களுக்காக பாத்துட்டு இருந்துட்டு இப்ப தான் சாப்ட உக்காந்தோம், வந்து சாப்ட உக்காருங்க…”

உடனே பூபதி, “ஏதேது? நீ தான் இந்த வீட்டாளு மாதிரி உபசாரம் பண்ற? இந்த வீட்டு எசமானியம்மா ஒன்னும் பேசக் கானோம்…”

அப்ப தான் மொள்ளமா எந்திருச்சுட்டு இருந்த செல்லாத்தா, பூபதி பேசினத கேட்டு பதறி அடிச்சிட்டு, அவசர அவசரமா எழுந்து நின்னாங்க, “கோச்சுக்காதீங்க…வயசாச்சில்ல? அதான், சட்டுன்னு எந்திருக்க முடியல…வந்து உக்காருங்க…சூர்யா நீ போய் சாப்டும்மா…நான் பரிமாறிக்கறேன்….”

சூர்யா, “இல்ல இல்ல…எங்கப்பா நான் பரிமாறினாத் தான் நல்லா சாப்டுவாரு…நீங்க போங்க…நானே போடறேன்…”

ஒரு மரத்து மேல சாஞ்சிகிட்டு அங்க நடக்கறதை எல்லாம் பாத்துட்டு, ஏதோ யோசனைல இருந்த கதிர் பக்கத்துல வந்து நின்னா ஐஷ்வர்யா.

“கதிர்! அது பூபதி அங்கிள் தான?”

“ஹ்ம்ம்…ஆமா….”

“நான் ஒன்னு கேட்டா தப்பா நினச்சுக்க மாட்டியே…அவரு ஏன் ஒரு மாதிரியாவே பேசறாரு? உங்க வீட்லையும் அவருக்கும் ரொம்ப பயப்படற மாதிரி தான் நடந்துக்கறாங்க….”

“ஆமா…அவரு எப்பயுமே அப்டி தான்… அதனால தான் நான் அவரு கிட்ட அதிகமா வச்சுகிறது இல்ல…ஆனா எங்க வீட்ல எத்தன சொன்னாலும் திருந்த மாட்டாங்க, அவர தலைல தூக்கி வச்சிட்டு ஆடாத குறை தான்…”

“ஹ்ம்ம்…அத்தை கூட சொல்லியிருக்காங்க, நீயும், மாமாவும் சூர்யா வீட்டுக்கு போறதே இல்லையாமே?”

“ஆமா…செவ்வந்தி அத்தை போனதுக்கப்புறம் அங்க போறதில்லை…சூர்யா அப்பா மட்டும் என்னவாம்? பாரு, வீட்டுக்கு வராம நேரா கோவிலுக்கு தான் வந்துருக்காரு…பட்டும் படாம ஒரு ஒட்டு உறவுன்னா அது இது தான்…” சோகம் ததும்பற குரல்ல கதிர் சொல்லவும், அதுக்கு மேல ஐஷ்யர்வாவுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. “
கொஞ்ச நேரம் அமைதிக்கப்புறம் ஐஷ்யர்யா, “இந்த சூர்யாவ பாரேன்…பாதி சாப்பாட்ல எழுந்து அவருக்கு பரிமாறிட்டு இருக்கா…”

“ஹ்ம்ம்…ஆமா…”

“அவளால எப்டி இப்டி இருக்க முடியுது? இவ்ளோ நடந்தப்புறமும், அவ அப்பாகிட்டையும், உங்க அப்பாகிட்டையும் எந்த கோவமும் இல்லாம…எப்டி பாஸிபில்? நானா இருந்தா எப்டி ரியாட் பண்ணி இருப்பேன்னே தெரியாது…”

கதிர் ஒன்னுமே சொல்லாம அமைதியா இருக்கவும், ஐஷ்வர்யா, “என்ன கதிர்? அமைதியா இருக்க?”

“அவ அப்படி தான் ஐஷ்வர்யா! சூர்யா நேத்திக்காகவும் வாழல, நாளைக்காகவும் வாழல, அவ இன்னிக்காக தான் வாழற…that’s how its possible…”

“இருந்தாலும் கதிர், என்னால டைஜஸ்ட் பண்ணவே முடியல…”

“அவளுக்கு தெரிஞ்சவங்க எல்லாத்துகிட்டையும் கண் மூடித் தனமா பாசம் காட்டுவா…அதான் சூர்யா!”

“ஹ்ம்ம்…அது என்னவோ உண்மை தான்…ஆனா அவ உம்மேல மட்டும் கொஞ்சம் அதிகமாவே பாசம் காட்ற மாதிரி இருக்கு…ஹ்ம்ம், என்ன விஷயம்? ” ன்னு ஐஷ்வர்யா நக்கல் சிரிப்போட கேக்கவும்,
கதிர், “யே…ச்சே அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல…”

“அதெல்லாம் இல்ல, எவ்வளவோ இருக்கு…என்னவோ நடக்க போகுது…”

“அதெல்லாம் எதுவும் நடக்காது…வா போகலாம், இப்ப போய் எல்லாரையும் கிளப்பினாத் தான் சரியா இருக்கும்…”

தலைமுடிய கோதி விட்டவாறே, சிரிச்சபடி ஐஷ்யர்யா, “ஹ்ம்ம், சரி சரி, நல்லா மழுப்பற…என்ன நடக்கப் போகுதுன்னு நானும் பாக்கத் தான போறேன்…”

அவங்க அவள பத்தி தான் பேசிக்கறாங்கன்னு கூட தெரியாம, சூர்யா, ’தனியா ரெண்டு பேரும் அப்படி என்ன தான் பேசிக்கறாங்களோ? மாமா எல்லாத்தோடையும் நல்லாத் தான் பேசறாரு, பழகறாரு…என்னை தவிர...முன்ன மாதிரி இப்ப என்னிக்காவது ஒரு நாள் இதே மாதிரி என்கிட்டையும் தனியா உக்காந்து பேசுவாறா? பேசக் கூட வேண்டாம், பாத்தாலே போதும்…ஹ்ம்ம்’ வெரும் பெருமூச்சு தான் விட முடிஞசுது அவளால…


கற்பனைச் சுமைகள் – 3
***
ஆற்றங்கரையின் மணற்திட்டில்,
நாம் விட்டமர்ந்த மிகச்சிறு இடைவெளியே
நம் நெருக்கம் பேச…
நீ பார்க்காத போது, உன் முகம் பார்த்து நானும்,
நான் பார்க்காத போது, என் முகம் பார்த்து நீயும்,
ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்…
என் நெஞ்சில் கனத்துக் கொண்டிருக்கிறது
வெறும் கற்பனையாய்…
***


“கொஞ்ச தண்ணி மொண்டுட்டுவா தேனு! ஹப்பாடா சித்த நேரம் அப்படியே கண்ணசர வேண்டியது தான்…” வீடு வந்து சேந்தும் செல்லாத்தா ரொம்பவும் சலிப்போட இருந்தாங்க பாவம்.

சூர்யா, “ஏங்கத்த ரொம்ப டயர்டா இருக்கா?”

“இருக்காதா பின்ன? நேத்திக்கு நாள் முச்சூடு வேல பாத்தாச்சு, தூக்கமும் இல்ல…இனி என்ன வேலை இருக்கு? எங்கண்ணன் ஒரு நாளாவது இங்க தங்குவாருன்னு பாத்தா, கால்ல சுடுதண்ணி ஊத்திட்டு வந்த மாதிரி உடனே போகனும்னு ஒத்த கால்ல நின்னுட்டாரு…”

“இந்தாம்மா தண்ணி…ஏய் சூர்யா! இன்னிக்கு ஐஷ்வர்யா கட்டி இருந்தாளே, அந்த புடவைய பாத்தியா? அதே மாதிரி எனக்கு தீபாவளிக்கு எடுத்திருக்காக்கும்…”

“நிஜமாவா தேனு? புடவையா கட்ட போற இந்த தீபாவளிக்கு?” சூர்யா ரொம்ப ஆச்சர்யத்தோட கேக்கவும், செல்லாத்தா, “ஆமா தீபாளிக்கு என்ன வாங்கி குடுத்திருக்காரு உங்கப்பா?”

“எனக்கென்னங்த்த…எப்பயும் போல பாவட தாவணி தான்…”

“ஏன்டி! ஏழு கழுதை வயசாச்சு, இன்னும் என்ன பாவட தாவணி? உன்ன விட சின்ன பொன்னுக தேனும், ஐஷ்வர்யாவும், அவங்களே பொடவை கட்ட ஆரம்பிச்சுட்டாங்க…நீ எப்ப தான் பொடவ கட்டி பழகப் போற?”

“போங்கத்த…எங்கப்பா என்ன வாங்கித் தராரோ அதத் தான கட்டிக்க முடியும்? எனக்கென்ன அம்மாவா இருக்காங்க புடவை கட்டி அழகு பாக்க?”
சுருக்குன்னு முள்ளு குத்தின மாதிரி ஆயிடுச்சு செல்லாத்தாவுக்கு. நாம என்ன தான் தாங்கினாலும், இந்த புள்ள மனசுல இல்லன்னா இப்படி ஒரு வார்த்தை வருமா? இல்ல, இன்னேரம் செவ்வந்தி இருந்திருந்தா இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா?

செல்லாத்தா கல்யாணம் கட்டி இந்த வீட்டுக்கு வந்தப்ப செவ்வந்திக்கு பதினஞ்சு வயசு தான். செவ்வந்தின்னு பேரு வச்சதோட நிக்காம, அவள பூ மாதிரி தான் பாத்துகிட்டாரு அவ அண்ணன் ராமசாமி. செல்லாத்தாவும் மனசறிஞ்சு எந்த குறையும் வச்சதில்லை. அப்படி வச்ச அதிக பாசமே அவளுக்கு வினையா வந்து சேந்திடுச்சோ? பின்ன? செல்லாத்தாவோட அண்ணன், அப்பயே டவுன் மில்ல நல்ல வேலைல நல்ல சம்பளத்தோட இருந்தாரு. செவ்வந்திய கல்யாணத்துக்கு கேட்டப்ப, ராமசாமி ஒரே பிடியா பொண்ண அவ்வளவு தூரம் அனுப்ப மாட்டேன்னு நின்னுட்டாரு. இருந்து, இருந்து ஊரெல்லாம் தேடி ஒரே ஊருன்னு அந்த பூபதிய புடிச்சிட்டு வந்தாரு.

அவனும் கொஞ்ச நாளு ஒழுங்கா தான் இருந்தான். மனுசன் மனசும், செருப்பும் ஒன்னுங்கற மாதிரி, புதுசுல நல்லா பவுசா இருந்தவன், போக போக பிஞ்ச செருப்பு மாதிரி பல்லிளிக்க ஆரம்பிச்சுட்டான்.

ராமசாமி ஐயாவோட அங்க இங்க தகராறு வச்சுகிட்டாலும், செவ்வந்தியையும், சூர்யாவையும் நல்லாத் தான தாங்குறான்னு ராமசாமி பொறுத்துத் தான் போனாரு. இப்படியே சின்ன சின்ன சண்டை சச்சரவும், சண்ட கழிச்சு சேர்ரதுமா பதினஞ்சு பதினாறு வருஷம் ஓடிப் போச்சு. இதெல்லாம் போதாதுன்னு புதுசா குடிப்பழக்கமும் வேற. கடைசியில அது அவன் குடியவே கெடுத்தப்புறம் தான் அந்த சனியன விட்டுத் தொலைச்சான். ஆனா கண்ணு கெட்டப்புறம் சூரியன கும்மிட்டு என்ன பிரயோஜம்? கடைசில இந்த புள்ள சூர்யா தாயில்லாப் புள்ளையா கண்ண கசக்கிட்டு நின்னது தான் மிச்சம்.

காடு நிலமெல்லாம் அடகு வச்சு அவன் குடிச்சு குடிச்சு சீரழிஞ்சத ராமசாமி கவனிக்காம இல்ல. தங்கச்சிக்கு பிரச்சனை வராம எப்படி இவன கண்டிக்கறதுன்னு அவரு யோசன பண்றதுக்குள்ள, அடகு வச்ச சொத்தெல்லாம் கடங்காரங்க கைக்கு போகுற அளவுக்கு நிலைமை கை மீறி போய்டுச்சு. அதுல முக்காவாசி ராமசாமி பரம்பரையா வந்து செவ்வந்திக்கு சீரா குடுத்த சொத்து தான்.


இதுக்கு மேல பாத்துட்டு இருக்க முடியாதுன்னு ராமசாமி, அவரே பைசல் பண்ணி சொத்தையெல்லாம் மீட்டுட்டாரு. அதுக்கு போய், என்னவோ அவரு தன்ன ஏமாத்திட்டதா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம சொல்லிட்டு திரிய ஆரம்பிச்சுட்டான் பூபதி. கடைசியில அவங்க குடும்ப மானமே சந்தி சிரிக்கற அளவுக்கு கொண்டு விட்டுடுச்சு!

[தொடரும்]

32 comments:

Raghav said...

வந்தேன் வந்தேன் மீண்டும் முதல் ஆளாய் வந்தேன்...

Raghav said...

சே.. கதையை படிக்காம மீ த ஃபர்ஸ்ட் கமெண்ட் போடுற வியாதிய சரி பண்ணனும்பா :)

Smriti said...

he first after reading the story.... :) Good going Div....

Raghav said...

//Smriti said...
he first after reading the story.... :) //

ஏன் இந்தக் கொல வெறி :)

Raghav said...

//நீ பார்க்காத போது, உன் முகம் பார்த்து நானும்,
நான் பார்க்காத போது, என் முகம் பார்த்து நீயும்,
ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்…
என் நெஞ்சில் கனத்துக் கொண்டிருக்கிறது
வெறும் கற்பனையாய்…/

அருமையான கவிதை திவ்யா..

புதியவன் said...

75 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

கதையின் இந்தப் பகுதியும் அருமை...

//ஆற்றங்கரையின் மணற்திட்டில்,
நாம் விட்டமர்ந்த மிகச்சிறு இடைவெளியே
நம் நெருக்கம் பேச…
நீ பார்க்காத போது, உன் முகம் பார்த்து நானும்,
நான் பார்க்காத போது, என் முகம் பார்த்து நீயும்,
ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்…
என் நெஞ்சில் கனத்துக் கொண்டிருக்கிறது
வெறும் கற்பனையாய்…//

கவிதை வெகு அழகு...

Unknown said...

\\ஆற்றங்கரையின் மணற்திட்டில்,
நாம் விட்டமர்ந்த மிகச்சிறு இடைவெளியே
நம் நெருக்கம் பேச…
நீ பார்க்காத போது, உன் முகம் பார்த்து நானும்,
நான் பார்க்காத போது, என் முகம் பார்த்து நீயும்,
ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்…
என் நெஞ்சில் கனத்துக் கொண்டிருக்கிறது
வெறும் கற்பனையாய்…\\

அழகான வரிகள்

Unknown said...

75க்கு வாழ்த்துக்கள்

G3 said...

:)) Azhagaana ezhuthu nadai.. romba swaarasyama kondu poreenga kadhaya :)
Kadhai padikka padikka karpanaia andha scenes odaradhu unga ezhuththin vetri :)

75-aavadhu pathirvikku vaazhthukkal :)

*இயற்கை ராஜி* said...

//நீ பார்க்காத போது, உன் முகம் பார்த்து நானும்,
நான் பார்க்காத போது, என் முகம் பார்த்து நீயும்,
ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்…
என் நெஞ்சில் கனத்துக் கொண்டிருக்கிறது
வெறும் கற்பனையாய்…//

superoo super...yeppidinga ippadiyellam..thalaila iruntha kaal varai brain nga ungalukku:-))

மேவி... said...

“எங்க? போட்டது போட்ட படியா வர முடியும்? உங்கள மாதிரியா பாதி ஊர வச்சா பண்ணயம் பண்ணிட்டு இருக்கேன். அரக்காணியா இருந்தாலும், நம்மளுத நாம தான பாக்க வேண்டியிருக்கு!!! என்ன நான் சொல்றது?”
எப்படிங்க...... கதை எழுதறதுக்கு முன்னாடி நிறைய படிச்சிங்களோ?"’தனியா ரெண்டு பேரும் அப்படி என்ன தான் பேசிக்கறாங்களோ? மாமா எல்லாத்தோடையும் நல்லாத் தான் பேசறாரு, பழகறாரு…என்னை தவிர...முன்ன மாதிரி இப்ப என்னிக்காவது ஒரு நாள் இதே மாதிரி என்கிட்டையும் தனியா உக்காந்து பேசுவாறா? பேசக் கூட வேண்டாம், பாத்தாலே போதும்…ஹ்ம்ம்’ வெரும் பெருமூச்சு தான் விட முடிஞசுது அவளால…"
ஏன் இந்த டயலாக் எல்லா பெண்களும் பேசுறாங்க........

மேவி... said...

மீண்டும் மீண்டும் ...........
சொல்ல்கிறேன்.......
கதை நடை சூப்பர்.......

மேவி... said...

me th 13th

மேவி... said...

பத்து பாரதிராஜா படம் பார்த்த மாதிரி இருக்கு ..........


"ஆற்றங்கரையின் மணற்திட்டில்,
நாம் விட்டமர்ந்த மிகச்சிறு இடைவெளியே"
ஏன் இந்த கஞ்சத்தனம்...... அதான் நிறைய இடம் இருக்குல.


"நம் நெருக்கம் பேச…
நீ பார்க்காத போது, உன் முகம் பார்த்து நானும்,
நான் பார்க்காத போது, என் முகம் பார்த்து நீயும்,"
திருக்குறள் மாதிரி இருக்கே???

"ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்…
என் நெஞ்சில் கனத்துக் கொண்டிருக்கிறது
வெறும் கற்பனையாய்…"
கற்பனைக்கே இவ்வளவு பீலிங் அஹ ???

mvalarpirai said...

பக்கா ! அடுத்த பகுதி எப்பங்க அம்மணி

ஜியா said...

//:)) Azhagaana ezhuthu nadai.. romba swaarasyama kondu poreenga kadhaya :)
Kadhai padikka padikka karpanaia andha scenes odaradhu unga ezhuththin vetri :)
//

Repeatye....

Maama un ponna kodukku appuram bayangara livelyaana oru kathai... athuvum screenplay and dialogues.. chanceless... ungala nerula paakkumpothu intha kathathaan nyabagam varum... kalakkunga...

ஜியா said...

2007 la ezuthittu en ivlavu late?? "Poo" padam paatheengala recentaa?? "Poo" padathoda baathippe innum pogala.. neenga vera eppadi mudikka poreengalo :((

முகுந்தன் said...

உங்கள் 75 பதிவிற்கு வாழ்த்துக்கள்...

கதை,கவிதை super

வெட்டிப்பயல் said...

கதை ரொம்ப நல்லா போகுது... அடுத்த பகுதிக்கு ஆவலுடன்...

Vijay said...

நீங்க ஏன் இந்தக் கதைகளை ஆனந்த விகடன் மாதிரியான வெகுஜனப் பத்திரிகைகளுக்கு இன்னும் அனுப்பவில்லை? அடுத்த கதையை, விரிந்த சிரகுகளில் பிரசுரிக்காமல் ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பவும். உங்கள் வாசகனின் அன்பு வேண்டுகோள், கட்டளை, எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம்.

யான் பெற்ற இன்பம், கொஞ்சமேனும் பெறட்டுமே இவ்வையகமும் !!! :-)

gils said...

//நீ பார்க்காத போது, உன் முகம் பார்த்து நானும்,
நான் பார்க்காத போது, என் முகம் பார்த்து நீயும்,
ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்…
என் நெஞ்சில் கனத்துக் கொண்டிருக்கிறது
வெறும் கற்பனையாய்…///

ithu semma toppu..super flow..enaku vikatanla vara thodar padikarapola iruku

Anonymous said...

3rd part padichuten...sema po

here is my comment.

'Kadhai apdiye pakka tamil cinema maari viruvirupa pogudhu...cant wait for next part...waiting to see how suryas mom died...i pity surya though...nice characterization..typical village gal..naive,caring...

Divyapriya said...

Raghav
கடைசியில கதைய படிச்சீங்களா இல்லயா? ;)

---

Smriti

Thx smriti :))

---
புதியவன்

நன்றி புதியவன்...ஆனா இது 76 வது பதிவு :))

---
நட்புடன் ஜமால்

நன்றி ஜமால்

---
G3
//Kadhai padikka padikka karpanaia andha scenes odaradhu unga ezhuththin vetri :)//

அநியாயத்துக்கு புகழ்றீங்க :)) நன்றி...

---
இய‌ற்கை

நன்றி இயற்கை, தலைக்குள்ள இருக்குற மூளையயே தேட வேண்டியதா இருக்கு ;)

Divyapriya said...


MayVee

//எப்படிங்க...... கதை எழுதறதுக்கு முன்னாடி நிறைய படிச்சிங்களோ?//

எல்லாம் காதால கேட்ட விஷயம் தான்...

//ஏன் இந்த டயலாக் எல்லா பெண்களும் பேசுறாங்க........//

என்ன பண்றது? கதையில வர பசங்க எல்லாம் மாங்கா மடையனா இல்ல இருக்காங்க :))

//பத்து பாரதிராஜா படம் பார்த்த மாதிரி இருக்கு ..........//

ஆஹா :D

---
mvalarpirai said...

// பக்கா ! அடுத்த பகுதி எப்பங்க அம்மணி//

இந்த புதன் அடுத்த பகுதி...படிச்சிட்டு சொல்லுங்க...

---
ஜி said...
//Maama un ponna kodukku appuram bayangara livelyaana oru kathai... athuvum screenplay and dialogues.. chanceless... //

thnks ஜி...

//2007 la ezuthittu en ivlavu late?? "Poo" padam paatheengala recentaa?? //

பூ படம் பாத்தேன்..கொஞ்சம் கொஞ்சம் அந்த படம் மாதிரியே ஆய்டுச்சு :((
ஆனா நான் இத 2007 லயே எழுத ஆரம்பிச்சு,இன்னும் தட்டச்சி முடிக்கல...எனக்கே போர் அடிச்சு, பாதியா வெட்டி போட்டுட்டேன் :((

Divyapriya said...


முகுந்தன்

நன்றி முகுந்தன்

---
வெட்டிப்பயல் said...

// கதை ரொம்ப நல்லா போகுது... அடுத்த பகுதிக்கு ஆவலுடன்...//

நன்றி அண்ணா...அடுத்த பகுதி சீக்கரமே...

---
விஜய்

பாராட்டுக்கு ரொம்ப நன்றி விஜய்...அந்த அளவுக்கும் போக இன்னும் கூட நல்லா எழுதனும்னு தான் தோனுது எனக்கு :)


---
gils said...

//ithu semma toppu..super flow..enaku vikatanla vara thodar padikarapola iruku//

thanks gils...அப்ப வாரம் வாரம் ஒரு பாகம் போட்டுடறேன்...நிஜ தொடர்கதை effect கிடைக்கும் :))

---
Badri

thanks a lot bad...

தாரணி பிரியா said...

லேட்டா வந்ததுக்கு சாரி :)

இங்க எல்லோரும் சொன்ன எல்லா கமெண்டுக்கும் ஒரு பெரிய ரிபீட்டு :)

நல்ல ப்ளோல எழுதவருதுங்க உங்களுக்கு :)

Divyapriya said...

தாரணி பிரியா said...

//இங்க எல்லோரும் சொன்ன எல்லா கமெண்டுக்கும் ஒரு பெரிய ரிபீட்டு :)

நல்ல ப்ளோல எழுதவருதுங்க உங்களுக்கு :)//

அப்ப நானும் எல்லாருக்கும் அடுச்ச ரிப்ளையே ரிப்பீட்டு தாரணி :))

MSK / Saravana said...

உண்மையிலே ஆச்சர்யமா இருக்குங்க..
இப்போதான் நேரம் கிடைத்தது.. இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிகளை படித்து முடித்தேன்..

அடடா.. பின்றீங்க போங்க.. நல்ல நடை.. தெளிவாவும் இருக்கு.. பாத்திரங்களை குழப்பாமல்..

இடையினான கவிதை.. அசத்தல்.. அவ்ளோ அழகு..

எங்கயோ போறீங்க.. ரொம்ப நல்லா இருக்கு.. தொடருங்கள்..

Divyapriya said...

Saravana Kumar MSK said..

//எங்கயோ போறீங்க.. ரொம்ப நல்லா இருக்கு.. தொடருங்கள்..//

இங்கயே தான் சரவணா இருக்கேன் :))
அடுத்த பகுதி சீக்கரம் படிச்சிட்டு சொல்லுங்க

Princess said...

///***
ஆற்றங்கரையின் மணற்திட்டில்,
நாம் விட்டமர்ந்த மிகச்சிறு இடைவெளியே
நம் நெருக்கம் பேச…
நீ பார்க்காத போது, உன் முகம் பார்த்து நானும்,
நான் பார்க்காத போது, என் முகம் பார்த்து நீயும்,
ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்…
என் நெஞ்சில் கனத்துக் கொண்டிருக்கிறது
வெறும் கற்பனையாய்…
***
//

Kalakureenga...

This week end I watched Poo so i found the story even more interesting...

I love your style of writing. Kathainnu maranthu poi..nejam pola irukku..Marupadiyum solren. Kalakureenga :)))

Princess said...

me the munnala 30th...apra, ippa 31st :))

Scribbler said...

Wow! Came to your blog thru GILS.
"SuryaGhandhi" kathai excellent!
Kathir , SuryaGhandhi paer combination kalakkiteenga!
Loved your story!
Hats off! to you "Karpanai sumaigal"