Tuesday, February 17, 2009

சூர்யகாந்தி - 5

தோட்டத்துல சூர்யகாந்தி பூ குட்டி குட்டியா பூத்திருந்துச்சு!

 

சூர்யா, “மாமா! நம்ம பேர இந்த பூவில எழுதி வச்சு, பூ பெருசாகற வரைக்கும் இருக்குதான்னு பாப்போமா?”

 

“ஹா ஹா…அதெப்படி சூர்யா இருக்கும்?”

 

சூர்யா முகம் உடனே வாடிடுச்சு…பூ வாடினாலே அவனுக்கு பிடிக்காது, அப்படி இருக்கும் போது பூவ விட மென்மையானவன்னு நினைச்சுகிட்டு இருக்குற அவனோட சூர்யா வாடினா அவன் மனசு தாங்குமா?

 

“சரி சரி! எழுதலாம் வா…” ன்னு கதிர் சொல்லவும், மறுபடியும் சூர்யா முகம் பூவா மலர்ந்துடுச்சு. சொன்னதோட நிக்காம, உடனே சட்டையில இருந்து ஒரு பேனாவ எடுத்து எழுதவும் ஆரம்பிச்சுட்டான், “கதிர்வேல் சூர்யகாந்” ன்னு அவன் எழுதறதுக்குள்ள, “ஹய்யோ, காந்தி வேண்டாம்…ச்சே எழுதிட்டீங்களா? ச்சே!! வெரும் சூர்யான்னே எழுதி இருக்கலாம்” ன்னு ரொம்பத்தான் சலிச்சுகிட்டா சூர்யா.

 

“ஏன், அதுக்கென்ன இப்ப?”

 

“எனக்கு இந்த பேரே புடிக்கல…ஸ்கூல்ல எல்லாரும் காந்தி தாத்தா, காந்தி தாத்தான்னு கிண்டல் பண்றாங்க…”

 

“யாரு அப்டி சொல்றது? என்கிட்ட சொல்லு…”

 

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…” சூர்யா அதுக்கு மேல ஒன்னும் பேசாம அவன் எழுதின அவங்க பேரை ஆசையா தடவிப் பாத்துக்கிட்டு இருந்தா.

 

“யேய்…”

 

“ஹ்ம்ம்?”

 

“உனக்கு ஏன் அத்தை சூர்யகாந்தின்னு பேர் வச்சாங்க தெரியுமா?”

 

“ஏனாம்?” எத்தனையோ தடவை எத்தனையோ பேர் சொல்லிக் கேட்ட ஒரு விஷயம் தான். இருந்தாலும் அத சொல்ல வேண்டியங்க வாயால சொல்லிக் கேக்கனும்னு தான பொண்ணுக நெஞ்சுக்குள்ள ஆசைய தேக்கி வச்சுகிட்டு காத்திருக்காங்க? அதே மாதிரி தான் சூர்யாவும், எதுவுமே தெரியாத மாதிரி ’ஏனாம்’ ன்னு கேட்டா.

 

“ஏன்னா நீ பிறக்கும் போது சூர்யகாந்தி பூ மாதிரியே அழகா இருந்தியாம்…”

 

உடனே பொய் கோபம் காட்டி, “பிறக்கும் போதுன்னா? இப்ப மட்டும் என்னவாம்?” ன்னு உதட்ட சுழிச்சா.

 

“இப்ப இந்த பூவ விட நீ தான் அழகா இருக்க…”

 

சூர்யா கண்ணுல இருந்து பொலபொலன்னு தண்ணி கொட்டுச்சு… ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, ஒரு நாள், இதே இடத்துல உக்காந்துட்டு அவங்க பேசினதெல்லாம் நினைவு தானா இல்ல வெறும் கனவா?

 

மரக்கிளைல அழகா சாஞ்சிகிட்டு அவளோட மணிக்கணக்குல கதை பேசின கதிர், ஆலமரத்தில தொங்குற தூளிக்காக அவளோட சண்ட பிடிச்ச கதிர், அவ சைக்கள் பழகி கால உடைச்ச போது, தூசு விழுந்துடுச்சுன்னு கண்ண துடைச்சுகிட்ட கதிர், அவ வாசல கடந்து போகும் போது, திண்ணைல உக்காந்துட்டு அவ பாக்கலைங்கற நினைப்புல அவள குறுகுறுன்னு பாத்த கதிர், அவ திரும்பி பாத்தவுடனே, என்னடி வேணும்னு அவளையே திருப்பி அதட்டின கதிர், எல்லாரும் நிச்சலடிக்க போயிருக்க, தனிமைக்கும் தண்ணிக்கும் பயந்த அவளுக்கு துனையிருந்த கதிர், கதிர், கதிர்…

“ஏன் தேவையில்லாம கற்பனைய வளக்கறீங்க?” எவ்வளவு சுலபமா கேட்டுட்டான்? கற்பனைய வளத்தது அத்தை மட்டும் தானா? இந்த கிணறு, அந்த பூ, இந்த வயல், இந்த திண்ணை, இந்த மரம், அந்த தூளி, அந்த சைக்கிள், ஏன் நேத்து பலியான ஆடு வரைக்கும் அவனப் பத்தின ஏதோ ஒரு நினைவ, ஏதோ ஒரு பழைய கதைய, அவளுக்குள்ள கிளறி, புதுசு புதுசா கற்பனைய வளத்து விட்டுட்டு தான இருக்கு? இது எதுவுமே அவனுக்கு நினைவில்லையா?

 

ஆடிப் பாடி அகமகிழ்ந்து,

அன்பில் திளைத்தோம்,

நினைவில்லையா?

 

பூவில் இருவர் பெயரெழுதி,

பார்த்து ரசித்தோம்,

நினைவில்லையா?

 

சிரித்து சிரித்து கண்களிலே,

கண்ணீர் துளிர்த்தோம்,

நினைவில்லையா?

 

கண்னோடு கண் உறவாடி,

பல கதைகள் பகர்ந்தோம்,

நினைவில்லையா?

 

கைகள் கோர்த்து இருவருமே,

உலகம் மறந்தோம்,

நினைவில்லையா?

 

விரல் நுனியின் ஸ்பரிசத்திலே,

உடல் சிலிர்த்தோம்,

நினைவில்லையா?

 

இருவர் இதயம் பரிமாறி,

உயிரோடு உயிரானோம்,

நினைவில்லையா?

 

இங்க சூர்யா தான் இப்படி உக்காந்திருக்கான்னா, அங்க வீட்லையும் ஒரே ரணகளமாத் தான் இருந்துச்சு. பொறுத்துப் பொறுத்துப் பாத்துட்டு கதிர், “ஏய் தேன்மொழி! இப்ப எதுக்கு இப்படி தேம்பி தேம்பி அழுகற? ஏய் தேன்மொழி! உன்னை தான்டீ…”

 

“நீ பேசாதன்ணா என்கூட…பேசாத…முதல்ல போய் சூர்யாவ கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டு வந்து பேசு…போ!!!”

 

“என்ன விளையாடுறயா?”

 

“நீ தான் விளையாடுற…சூர்யா வாழ்க்கையோட விளையாடுற…”

 

“உளறாத!!! நீங்களா எதாவது நினைச்சுகிட்டா, அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது…இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி அம்மாவும் பொண்ணும் மூலைக்கு மூலைக்கு உக்காந்து அழுதுட்டு இருக்கீங்க?

 

“சூர்யா எப்படி அழுவா தெரியுமா?”

 

“சும்மா சூர்யா சூர்யாங்காத…ரெண்டு நாள் அழுவா, அப்புறம் எல்லாம் சரியா போய்டும்…எனக்கு பசிக்குது…அம்மா வேற கோவமா இருக்காங்க…நீயாவது வந்து சாப்பாடு போடு வா…”

 

“இப்ப உனக்கு சாப்பாடு தான் ரொம்ப முக்கியமா? சரியான கல்நெஞ்சக்காரன்டா நீ!!!”

 

“அம்மாவும் மகளும் என்னவோ பண்ணி தொலைங்க…என்னை ஆளை விடுங்க…” ன்னு சொல்லிட்டு கதிர் அவன் ரூமுக்குள்ள போகவும், தேன்மொழி, “நான் இங்க ஒருத்தி கத்திகிட்டு இருக்கேன்…நீ பாட்டுக்கு உள்ளார போனா என்ன அர்த்தம்?”

 

“சும்மா நை நைங்காத தேனு…எனக்கு வேலை இருக்கு…கொஞ்சம் வெளிய இரு…” சொன்னதோட இல்லாம கதிர் ஒரு நோட்ட எடுத்து மும்பரமா எழுதவும் ஆரம்பிச்சுட்டான்.

 

“இதெல்லாம் அப்புறம் எழுதிக்கலாம், இங்க பாருண்ணா, நான் சொல்றத கொஞ்சம் கேளு! சூர்யா உம்மேல உயிரையே வச்சுருக்கா…”

 

“என்னடி சும்மா சூர்யா சூர்யான்னுட்டு? முதல்ல போ வெளிய…”

 

“முடியாது, எனக்கு முதல்ல ஒரு பதில் சொல்லு, நீ ஏன் சூர்யாவ வேணாங்குறேன்னு சொல்லு…நான் பேசிக்கிட்டே இருக்கேன்…நீ என்ன அப்படி எழுதிட்டு இருக்க?” ன்னு சொல்லிட்டே தேன்மொழி அந்த நோட்ட பிடிங்கிட்டா.

 

“தேனு! அத குடு இப்படி! அது முக்கியமான கணக்கு வழக்கெல்லாம் இருக்கற நோட்டு!”

 

“ஓ…அப்படியா….அப்ப இரு இப்பயே இத கிழிக்கறேன்…”

 

“அறஞ்சன்னா பல்லு பகுடெல்லாம் எகிறிடும், குட்றீ அத…”

 

கதிர் அந்த நோட்ட லாவகமா தேன்மொழி கிட்ட இருந்து பிடிங்கி, பீரோவுக்குள்ள வைக்க போனான், தேன்மொழி அத எடுக்க கைய நீட்றதுக்குள்ள, மறுபடியும் பீரோவுக்குள்ள இருந்து வெளிய எடுத்துட்டான். ஆனா அதுக்குள்ள, கோவம் தலைக்கேறி என்ன பண்றோம்னே தெரியாம, தேன்மொழி திறந்திருந்த பீரோவுக்குள்ள இருந்து கதிரோட துணியெல்லாம் எடுத்து வெளிய வீச ஆரம்பிச்சுட்டா.

இத எதிர்பாக்காத கதிர், “அம்மா! அம்மா! இங்க வந்து பாருங்க…உங்க அருமை பொண்ணு பண்ற வேலைய….பைத்தியம் தான் பிடிச்சுருக்கு அவளுக்கு…”

 

“என்ன ரகளை அங்க?” ன்னு கேட்டுகிட்டே செல்லாத்தா அங்க வரவும், கதிர் துணிகளுக்கு அடியில புதைஞ்சு கிடந்த ரெண்டு ஃபோட்டோ பறந்து வந்து தரையில விழவும் சரியா இருந்துச்சு.

 

பள்ளிகூட யூனிஃபார்ம் பச்சை கலர் பாவட தாவணி போட்டுகிட்டு, அந்த ஃபோட்டோவில அழகா சிரிச்சிகிட்டு இருந்தா ஒரு பொண்ணு…

 

[அடுத்த பகுதியில் முடியும்]

 

36 comments:

Badri said...

me first ?:D

Nimal said...

me the second...! :)

Nimal said...

கதை இப்படி போகுதா... 3, 4, 5 இப்ப தான் வாசிச்சேன்...!

வட்டார வழக்கு மொழிநடை வித்தியாசமாக இருக்கிறது.

Nimal said...

கவிதைகள் மிக அருமை....

Badri said...

kavidhai arumai...aana Neechal ku nichal nu potruka..spelling mistake as usual :P

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவ வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Mohan R said...

"சரியான கல்நெஞ்சக்காரன்டா நீ!!! "

உங்க கதை ஹீரோ மட்டும் இல்ல நீங்களும் தான்
இன்னும் ஒரு வாரம் காத்து இருக்கணுமே :(

கதையும் கவிதையும் அருமையோ அருமை :)

சிம்பா said...

நாங்க எவளோ ஷார்ப்ஆ வந்து attendance போடுறோம்.. நல்ல பார்த்துக்கோங்க பொறவு வரலநு சொல்ல கூடாது...

வந்ததுக்கு நாய் மேட்டர் இன்னைக்கு தான் கண்ணுக்கு பட்டது...

லொல்... இல்ல வேணாம்... lol... இப்படியே இருக்கட்டும்...

எதுக்கும் எதுதாப்புல வர்ரவுஹ தலை கவசம் அணிந்து வரும் படி....


அப்போ சூரியகாந்தி...

ஆமால்ல... இல்ல இல்ல அறுவடை அன்னைக்கு கண்டிப்பா ஆஜர்.. எடை போடனும்ல..

mvalarpirai said...

பக்கா ! suspense தாங்க முடியல ! இந்த வார கவிதைகள் எளிய நடையில் அருமை !

நட்புடன் ஜமால் said...

பூவ விட மென்மை - அழகு

நட்புடன் ஜமால் said...

\\“ஏன்னா நீ பிறக்கும் போது சூர்யகாந்தி பூ மாதிரியே அழகா இருந்தியாம்…” உடனே பொய் கோபம் காட்டி, “பிறக்கும் போதுன்னா? இப்ப மட்டும் என்னவாம்?” ன்னு உதட்ட சுழிச்சா. “இப்ப இந்த பூவ விட நீ தான் அழகா இருக்க…” சூர்யா கண்ணுல இருந்து பொலபொலன்னு தண்ணி கொட்டுச்சு\\

அருமை

நட்புடன் ஜமால் said...

நல்லா போகுது கதை ...

Vijay said...

செம விறுவிறுப்பு சுறுசுறுப்பு :-)

Again excellent characterization. ஒரு கிராமத்து இளைஞன் எப்படி இருப்பான், அவனுடைய குணாதிசயங்கள் எப்படி இருக்கும், மன நிலை எப்படி இருக்கும், இதையெல்லாம் அப்படியே அச்சு பிசகாமல் செதுக்கியிருக்கீங்க.

சூர்யா, தேன்மொழி செல்லாத்தா பாத்திரங்களும் தான்.

புதியவன் said...

//“ஏன்னா நீ பிறக்கும் போது சூர்யகாந்தி பூ மாதிரியே அழகா இருந்தியாம்…”

உடனே பொய் கோபம் காட்டி, “பிறக்கும் போதுன்னா? இப்ப மட்டும் என்னவாம்?” ன்னு உதட்ட சுழிச்சா.//

மிகவும் ரசித்தேன்...

புதியவன் said...

//பள்ளிகூட யூனிஃபார்ம் பச்சை கலர் பாவட தாவணி போட்டுகிட்டு, அந்த ஃபோட்டோவில அழகா சிரிச்சிகிட்டு இருந்தா ஒரு பொண்ணு…//

சஸ்பென்சோட இந்த பகுதிய முடிச்சிருகீங்க...அதனால, அடுத்த பகுதிய சீக்கிரம் போட்டுடுங்க...

புதியவன் said...

கவிதை வரிகள் அழகு...

gayathri said...

பள்ளிகூட யூனிஃபார்ம் பச்சை கலர் பாவட தாவணி போட்டுகிட்டு, அந்த ஃபோட்டோவில அழகா சிரிச்சிகிட்டு இருந்தா ஒரு பொண்ணு….

kandipa kathir vera yaraium love panna mattanu nampika enku ierku pa.


கதையும் கவிதையும் அருமை.

sekaram next part podunga pa

தமிழ் said...

/ஆடிப் பாடி அகமகிழ்ந்து,

அன்பில் திளைத்தோம்,

நினைவில்லையா?பூவில் இருவர் பெயரெழுதி,

பார்த்து ரசித்தோம்,

நினைவில்லையா?சிரித்து சிரித்து கண்களிலே,

கண்ணீர் துளிர்த்தோம்,

நினைவில்லையா?கண்னோடு கண் உறவாடி,

பல கதைகள் பகர்ந்தோம்,

நினைவில்லையா?கைகள் கோர்த்து இருவருமே,

உலகம் மறந்தோம்,

நினைவில்லையா?விரல் நுனியின் ஸ்பரிசத்திலே,

உடல் சிலிர்த்தோம்,

நினைவில்லையா?இருவர் இதயம் பரிமாறி,

உயிரோடு உயிரானோம்,

நினைவில்லையா?

/

அருமை

Raghav said...

அடடடா... என்னா அருமையா கதை எழுதுறீக திவ்யா.. மலரும் நினைவுகளை மறவா நினைவுகளா சூர்யா சொல்ற விதம் அருமை..

Raghav said...

சூர்யா மற்ற அனைவரையும் தூக்கி சாப்புட்ட மாதிரி இருக்கு.. விட்டா உங்க கதையை விமர்சனம் செய்து ஒரு பதிவே போடலாம்.. அவ்வளாவு விஷயங்கள் இருக்கு,, அழகாகவும் இருக்கு..

Raghav said...

கவிதையே பாடலாக... அழகோ அழகு..

G3 said...

Oru vaaram suspense-oda wait pannanuma?? :(((((((((((((((((((((((((((((((((

gils said...

avvvvvvvvvvvvvvvvv..........adutha parta solpa fasta postungo..

மேவி... said...

எனங்க இது .....
மர்ம தேசம் அளவுக்கு சஸ்பென்ஸ் வைக்கிறிங்க.....

கவிதைல நினைவில்லையா நினைவில்லையா கேட்டே..... சூப்பர் ஆ வந்துருக்கு...
ஆனா கடைசிலே ....

"ஆனா அதுக்குள்ள, கோவம் தலைக்கேறி என்ன பண்றோம்னே தெரியாம, தேன்மொழி திறந்திருந்த பீரோவுக்குள்ள இருந்து கதிரோட துணியெல்லாம் எடுத்து வெளிய வீச ஆரம்பிச்சுட்டா."
கொஞ்சம் செயற்கை தனம் இருக்குங்க....

மேவி... said...

" விஜய் said
Again excellent characterization. ஒரு கிராமத்து இளைஞன் எப்படி இருப்பான், அவனுடைய குணாதிசயங்கள் எப்படி இருக்கும், மன நிலை எப்படி இருக்கும், இதையெல்லாம் அப்படியே அச்சு பிசகாமல் செதுக்கியிருக்கீங்க."
என்ன விஜய் சொந்த அனுபவமா?????

முகுந்தன் said...
This comment has been removed by the author.
முகுந்தன் said...

திவ்யப்ரியா,
இந்த கதை முழுக்க படிக்க முடியவில்லை .....
ஆனால் "நினைவில்லையா" வரிகளை படித்தேன் , ரொம்ப நல்லா இருக்கு

தாரணி பிரியா said...

கதிரை பாத்தா தானே சூரிய காந்தி பூ மலரும்

தாரணி பிரியா said...

நல்ல சஸ்பென்ஸ்ல கொண்டு வந்து நிறுத்திட வேண்டியது :(. எனக்கு மட்டும் மெயில் அனுப்புங்களேன். நான் ரகசியமா யாருக்கும் தெரியாம படிச்சுக்கிறேன். :)

ஜியா said...

romba kuttiya poche intha part ;)) waiting for next one

வெட்டிப்பயல் said...

kalakala poaguthu... aana romba chinna paguthiya poayiduchi...

*இயற்கை ராஜி* said...

//சரியான கல்நெஞ்சக்காரன்டா நீ!!! "

உங்க கதை ஹீரோ மட்டும் இல்ல நீங்களும் தான்
இன்னும் ஒரு வாரம் காத்து இருக்கணுமே :( //

Repeatuu:-)

*இயற்கை ராஜி* said...

//பள்ளிகூட யூனிஃபார்ம் பச்சை கலர் பாவட தாவணி போட்டுகிட்டு, அந்த ஃபோட்டோவில அழகா சிரிச்சிகிட்டு இருந்தா ஒரு பொண்ணு….//

அந்த‌ப்பொண்ணு சூர்யா தானே?:-)

Anonymous said...

கதை அருமை. ஏன் அடுத்த பகுதியோட முடிக்கிறீங்க. இன்னும் தொடருங்க. வாழ்த்துக்கள்

Anonymous said...

என்னிக்கோ படிச்சாச்சு... பரபரன்னு போகுது...அடுத்த பகுதியில் முடியும்.. இனிய சஸ்பென்ஸ்.

போட்டோவில் சூர்யான்னு சொல்லிடாதீங்க.. :)

Karthik said...

kadasi part padichi mothama commentum markum podren!! :)))))

//பள்ளிகூட யூனிஃபார்ம் பச்சை கலர் பாவட தாவணி போட்டுகிட்டு, அந்த ஃபோட்டோவில அழகா சிரிச்சிகிட்டு இருந்தா ஒரு பொண்ணு…//

Idhu SURYA thaan... Divya akka en kitha sollitaanga!!!