Saturday, August 2, 2008

கிருஷ்ணா கஃபே - 4

விக்னேஷிற்கு அடிபட்டு ஒரு சில நொடிகளிலேயே சாலையில் கூட்டம் சேர்ந்து விட்டது. எல்லாருமாக சேர்ந்து விக்னேஷை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்தனர். 'காலில் சிறு எலும்பு முறிவு தான், மத்தபடி பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல' ன்னு டாக்டர் சொன்னப்புறம் தான் சரண்யாவுக்கு மூச்சே வந்தது.


இரவு மிகவும் தாமதமாகி விடவே, விக்னேஷை வார்டில் போய் பார்க்கும் முன்னரே கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டாள் சரண்யா.


அன்றிரவு சரண்யாவுக்கு தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தாள். விக்னேஷை சந்தித்தது, அவனோடு பேசியது, பழிகியது என்று எல்லாமே அவள் கண் முன்னாள் விரிந்தது.


பெங்களூருக்கு வந்த புதிதில் அவன் காட்டிய பாசம்... நண்பர்களோடு ஒளட்டிங் சென்ற போது தண்ணீருக்கும், தனிமைக்கும் பயந்த அவளுக்கு துணையிருந்து அவன் காட்டிய அக்கறை...சரியாக பார்க்காமல் அவள் ரோட்டை கடக்க முற்ப்பட்ட போது அவன் காட்டிய கோபம்...அப்போது அவள் கைய்யை பற்றி இழுத்து ரோட்டை கடக்க செய்து அவன் எடுத்துக் கொண்ட உரிமை...அம்மாவிடமே சென்று அவன் காதிலை சொன்ன துணிச்சல்...இப்படி பற்பல சம்பவங்கள் நினைவுக்கு வந்து அவளை வாட்டி எடுத்தது.


ஒரு முடிவுக்கு வந்தவளாய் அவள் அம்மாவிடம் சென்று நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் சொன்னாள்.


"அவன் சொன்னது இருக்கட்டும், நீ என்ன நினைக்குற?" என்று நேரடியாக கேட்டார் சரண்யாவின் அம்மா சாந்தி.


சரண்யாவுக்கு தொண்டையை அடைத்தது…அன்று முதன் முறையாக அம்மாவின் கண்களை பார்த்து பேச முடியவில்லை அவளால்.


"நான் ஒன்னும்…. அப்படி எல்லாம் நினக்க்கலாம்மா…. "என்று ஒரு வழியாக மென்று முழுங்கி சொன்னாள்.


"சரி, ஆனது ஆகட்டும்...என்ன தான் இருந்தாலும், நீ அவன ஹாஸ்பிட்டல்ல பாக்காமயே வந்தது தப்பு...நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் போய் ஒரு தடவ அவன பாத்துட்டு வந்துடுவோம்…"


மறுநாள் இருவரும் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போது...


"போய் பாத்துட்டு உடனே வந்துடலாம்...நீ வீணா மனச போட்டு குழப்பிகாத, ஒரு ஃபார்மாளிட்டிகாகவாது, நாம அவன போய் பாக்கணும்... " என்று ஒரு டீச்சருக்கே உரிய கண்டிப்புடன் சொன்னார் ஷாந்தி.


சரண்யாவையும், அவள் அம்மாவையும் பார்த்ததும், விக்னேஷிற்கும் அவன் அம்மாவிற்கும், சரண்யா அவள் அம்மாவிடம் அனைத்தையும் சொல்லி இருப்பாள் என்று தெளிவாக புரிந்தது.


விக்னேஷால் அவர்கள் முகம் பார்த்தே பேச முடியவில்லை. அதிலும் அவனுக்கு சாந்தியிடம் பேசவே தயக்கமாக இருந்தது, "ச்சே...கிளாஸ்ல நாம தான் மேமோட ஃபேவரைட் ஸ்டூடண்ட், இன்னிக்கு இப்டி பண்ணிட்டமே" என்று தன்னை தானே நொந்து கொண்டான்.


சரண்யாவிற்கும் விக்னேஷை பார்க்க பார்க்க என்னவோ செய்தது. வயிற்று வலி வந்தது போல தான் இருந்தது அவளுக்கு அப்போது...அவளுக்கு அந்த இடத்தை விட்டு எப்போது நகர்வோம் என்றிருந்தது.


நலம் விசாரிப்பு முடிந்தவுடன், "சரி...அப்ப நாங்க கிளம்பறோம்...பைய்யன நல்லா பாத்துக்கோங்க..." என்று கூறி விட்டு ஷாந்தி சரண்யாவுடன் கிளம்பி விட்டார்.


அவர்கள் இருவரும் லிஃப்ட்டுகாக காத்திருக்கும் போது, மாலதி அங்கு வேக வேகமாக வந்தார்.
"வந்து...விக்னேஷ் ஏதோ மனசில இருந்தத பட்டுன்னு சொல்லிட்டான்...நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுகாதீங்க...நான் தான் கொஞ்சம் அவசர பட்டுட்டேன்...அவனுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு…"


உடனே அவரை இடைமறித்து ஷாந்தி, "ச்சே...ச்சே...என்னங்க? நீங்க போய் மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு...? என்ன தான் இருந்தாலும் விக்னேஷ் என்னோட ஸ்டூடண்ட்...அவன பத்தி எனக்கு நல்லா தெரியும், நான் எதுவும் தப்பா எடுத்துக்கல...நீங்க இதையெல்லாம் மறந்துட்டு பைய்யன நல்லா பாத்துக்கோங்க...அப்ப...நாங்க வரோம்..."


ஒரு சில நாட்களுக்கு பிறகு…


பெங்களூர் கிருஷ்ணா கஃபே…


"ப்ளீஸ் சரண்…இப்பவாவது என்ன லவ் பண்றன்னு சொல்லுமா, ப்ளீஸ்…" சரண்யாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் விக்னேஷ்.


"எத்தன தடவ விக்னேஷ் சொல்றது? எங்க அப்பா, அம்மா சொன்னதால தான் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன். என்ன பொறுத்த வரைக்கும் இது ஃபுல் அன்ட் ஃபுல் அரேஞ்சுடு மேரேஜ் தான்…அப்புறம் எப்படி உடனே உங்கள லவ் பண்றேன்னு சொல்றது? அதுக்கெல்லாம் கொஞ்சம் நாள் ஆகும்… எனக்கா தோனனும்..."


விக்னேஷிற்க்கு சிறிது ஏமாற்றமே என்றாலும், எப்பொழுதும் போல அதை அவன் முகத்தில் காட்டிக்கொள்ளவே இல்லை.
கதையில் வருவது போல, இரண்டு பேர் வீட்டிலும் அவர்களாகவே முன் வந்து கல்யாணப் பேச்சை ஆரம்பித்து, கல்யாணத்தையும் நிச்சயம் செய்து விட, அவனுக்கு தலை கால் புரியவில்லை. ஆனால், ’சரண்யா இப்டி சொல்றாளே!’ என்று சொஞ்சம் வருத்தப்பட்டான். ’சரி கல்யாணத்துக்கு அப்புறம் சரி ஆய்டுவா...’ என்று தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.


அவன் யோசனையில் சென்று விட்டதை பார்த்த சரண்யா, "ஹலோ…எங்க இருக்கீங்க???"


"ஒன்னும் இல்ல…ச்சும்மா தான்...எதோ யோசிச்சிட்டு இருந்தேன்..."

"சரி…நீங்க ஏன் என்ன லவ் பண்ணீங்கன்னு இப்பவாவது உண்மைய சொல்லுங்க..."

"ஆரம்பிச்சிட்டியா…எத்தன தடவ கேட்டாலும், அதே தான்…"


"என்ன அதே தான், ஒழுங்கா இப்ப சொல்ல போறீங்களா இல்லயா?"


"வேற என்ன? நீ அழகா இருக்கனால தான்…"

"விளையாடாதீங்க விக்னேஷ்…"


"உண்மைய தான் சொல்றேன்…" முகத்தை ரொம்ப சீரியசாக வைத்துக் கொண்டு விக்னேஷ் சொல்லவும்,


"ச்சே…எத்தன தடவ கேட்டாலும் இதயே சொல்லுங்க…" கோபமாக அவனை பார்த்து முறைத்தாள் சரண்யா.


இப்படியாக அவர்கள் திருமண நாளும் வந்த்து…விடிந்தால் திருமணம். மண்டபத்தில் எல்லோரும் தூங்கிய பிறகு, விக்னேஷின் நன்பன் பாலாஜி அவனிடன் வந்து,


"டேய்! உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்…என்னோட கொஞ்சம் வாயேன்…"

"என்னடா விஷயம்? இங்கயே சொல்லு…"

"இல்ல டா…ரொம்ப முக்கியமான விஷயம்….சொந்தகாரங்க யாராவது கேட்டுட்டா…என்னோட வா, சொல்றேன்…"

காலியாய் இருந்த ஒரு ரூம் கதைவருகில் சென்று பாலாஜி ஒரு நிமிடம் தயங்கி நிற்கவும், விக்னேஷ் அந்த ரூம் கதைவை திறந்து கொண்டு நுழைந்தான்...

அப்போது, எதிர்பாரா விதமாக அந்த அறையின் கதவு படார் என்று சாத்திக் கொண்டது, இல்லை யாரோ கதவு பின்னால் இருந்து சாத்தியதை போல கூட இருந்த்து…

இன்னும் ஆறு மணி நேரத்தில் மணமகனாய் மணப்பந்தலில் அமர வேண்டிய விக்னேஷ்...கதவு, ஜன்னல் எல்லாம் அடைக்கப் பட்டு, சிறு துவாரம் கூட இல்லாமல் கும்மிருட்டாக இருந்த அந்த அறையில், ஒன்றுமே புரியாமல், அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

20 comments:

Ramya Ramani said...

\\பெங்களூருக்கு வந்த புதிதில் அவன் காட்டிய பாசம்... நண்பர்களோடு ஒளட்டிங் சென்ற போது தண்ணீருக்கும், தனிமைக்கும் பயந்த அவளுக்கு துணையிருந்து அவன் காட்டிய அக்கறை...சரியாக பார்க்காமல் அவள் ரோட்டை கடக்க முற்ப்பட்ட போது அவன் காட்டிய கோபம்...அப்போது அவள் கைய்யை பற்றி இழுத்து ரோட்டை கடக்க செய்து அவன் எடுத்துக் கொண்ட உரிமை...அம்மாவிடமே சென்று அவன் காதிலை சொன்ன துணிச்சல்...இப்படி பற்பல சம்பவங்கள் நினைவுக்கு வந்து அவளை வாட்டி எடுத்தது\\

அட இவ்வளவு அக்கறை காட்டி பொண்ணோட மனச புரிஞ்சுக்கும் பையன் , அவ கல்யாணுத்துக்கு இஷ்டம் இல்லாமலா ஒத்துப்பானு புரிஞ்சுக்கனும்ல...

Ramya Ramani said...

\\ஒரு சில நாட்களுக்கு பிறகு…
பெங்களூர் கிருஷ்ணா கஃபே…
"ப்ளீஸ் சரண்…இப்பவாவது என்ன லவ் பண்றன்னு சொல்லுமா, ப்ளீஸ்…" சரண்யாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் விக்னேஷ்.\\

இப்போவாவது பில் பே அவரு "By Mistake " பண்ணாரா :P

Ramya Ramani said...

ஆஹா சரண்யா இப்போ ப்ரபோஸ் பண்ண போறாளா?? என்ன ஒரு திருப்பம்..சூப்பரா வித்தியாசமா கொண்டு போறீங்க திவ்யபிரியா கலக்கல்ஸ்.. திவ்யாப்ரியா கதாசிரியையே !! வாழ்துக்கள்...

எப்படி இப்படி கதை எல்லாம் எழுதறீங்களோ பொறாமையா இருக்கு ;)

ஜியா said...

நண்பன் பாலாஜியின் துரோகம்...
திருமண ஆசையில் இருக்கும் விக்னேஷை கடத்தி அறையில் அடைப்பது...

ஆஹா... இந்த பகுதிலையும் ஆண்மகனுக்கு எதிரான தாக்குதல்கள்....

நடுநிலையாக இருந்த கதையின் ஆசிரியரும் திவ்யா, ரம்யாவின் கட்சியில் சேர்ந்திருப்பதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்....

ஜியா said...

இந்த தடவ ரம்யா முந்திக்கிட்டாங்களா??

//இப்போவாவது பில் பே அவரு "By Mistake " பண்ணாரா :P//

கல்யாண செலவே விக்னேஷ்தான் பண்றானாம்... தெரியுமா?? ;))

முகுந்தன் said...

//"வேற என்ன? நீ அழகா இருக்கனால தான்…"

"விளையாடாதீங்க விக்னேஷ்…"
//

அதானே , இப்படியா
பொய் சொல்லறது :-)

முகுந்தன் said...

//அப்புறம் எப்படி உடனே உங்கள லவ் பண்றேன்னு சொல்றது? அதுக்கெல்லாம் கொஞ்சம் நாள் ஆகும்… எனக்கா தோனனும்..."
//

அவளுக்கு தோனரதுக்குள்ள விடிஞ்சிடும் ...

//இன்னும் ஆறு மணி நேரத்தில் மணமகனாய் மணப்பந்தலில் அமர வேண்டிய விக்னேஷ்...கதவு, ஜன்னல் எல்லாம் அடைக்கப் பட்டு, சிறு துவாரம் கூட இல்லாமல் கும்மிருட்டாக இருந்த அந்த அறையில், ஒன்றுமே புரியாமல், அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
//

ஏன் அங்க மேக்கப் இல்லாமல் சரண்யா இருந்தாளா?


கதை நல்லா போகுது ,
அடுத்த பார்ட் எப்பபோ?

Vijay said...

\\க்னேஷை சந்தித்தது, அவனோடு பேசியது, பழிகியது ... இப்படி பற்பல சம்பவங்கள் நினைவுக்கு வந்து அவளை வாட்டி எடுத்தது.\\
இந்தப் பொண்ணூங்களே இப்படித்தான்பா. இவ்வளவு நினைத்துமா அவளுக்கு விக்னேஷ் மேல் ஒரு காதல் வரவில்லை? ரொம்ப அழுத்தமான பொண்ணு!!


\\ஒரு முடிவுக்கு வந்தவளாய் அவள் அம்மாவிடம் சென்று நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் சொன்னாள். \\
சமத்துப் பொண்ணு :)

\\"எத்தன தடவ விக்னேஷ் சொல்றது? எங்க அப்பா, அம்மா சொன்னதால தான் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன். \\
ஓ அப்போ கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்தா? என்ன திவ்யப்ரியா, இவங்க அம்மா அப்பா கல்யாணம் பேசறதையே ஒரு அத்தியாயமா எழுதலாமே? ரொம்ப ஸ்வாரஸ்யமா இருந்திருக்குமே!!

\\"விளையாடாதீங்க விக்னேஷ்…"\\
கல்யாணம் நிச்சயம் ஆனவுடனே மரியாதையா?

\\அந்த அறையில், ஒன்றுமே புரியாமல், அதிர்ச்சியில் உறைந்து நின்றான்\\
உறைந்தது விக்னேஷ் மட்டுமில்லை. நானும் தான்.

சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க

Raghav said...

என்னமோ இந்த பகுதி மனசில ஒட்டவே இல்ல தி.பி, சீக்கிரம் கதையை முடிக்க நினைக்கிறீங்களோன்னு தோனுது. எப்பவும் போல உங்க நடைய காணோம்.

இப்பதான் நயாகரா போயிட்டு வந்துருக்கேன். ஸோ, கொஞ்சம் ஆபீஸ் ஆணிகளை கவனிச்சு முடிச்சுட்டு, ரம்யா ஆரம்பிச்ச ஜல்லியில் விரைவில் களம் காண்கிறேன்.

Divyapriya said...

@Ramya

Thanks so much Ramya

Divyapriya said...

@ஜி
"/நண்பன் பாலாஜியின் துரோகம்...
திருமண ஆசையில் இருக்கும் விக்னேஷை கடத்தி அறையில் அடைப்பது…//


பாருங்க...இந்த பசங்க எவ்ளோ மோசமானவங்களா இருக்காங்க…அதுக்கு நான் என்ன பண்றது :))

//கல்யாண செலவே விக்னேஷ்தான் பண்றானாம்... தெரியுமா?? ;)) //

அப்டியா? எனக்கே இந்த விஷயம் இப்ப தான் தெரியுது :-D

Divyapriya said...

@முகுந்தன்
//அதானே , இப்படியா
பொய் சொல்லறது :-) //

அடப் பாவமே!!! :-)

//ஏன் அங்க மேக்கப் இல்லாமல் சரண்யா இருந்தாளா?//

LOL :-D

Divyapriya said...

@விஜய்

அழுத்தமான, சமத்து பொண்ணு சரண்யா…அட., இத intro ல குடுத்திருக்கலாமே!!! :))

Divyapriya said...

@Raghav
//என்னமோ இந்த பகுதி மனசில ஒட்டவே இல்ல தி.பி, சீக்கிரம் கதையை முடிக்க நினைக்கிறீங்களோன்னு தோனுது. எப்பவும் போல உங்க நடைய காணோம்.//

ஆமா ராகவ்…எனக்கே கூட இந்த பார்ட் கொஞ்சம் content கம்மியா இருக்க மாதிரி தோனுச்சு :-(
but, கதை frame படி, இந்த பார்ட்ல இவ்ளோ தான் இருக்கனும் :-)
என்ன frame ன்னா,

part 1 - hero and herione meeting
part 2 - hero falls in love
part 3 - hero proposes to herione
part 4 - engagement over
part 5 - வேற என்ன? டும், டும், டும் தான்…

So, இப்பயே சொல்லிடறேன்…5th partla no big கதை :-)

Divya said...

கதையை அழகா நகர்த்தியிருக்கிறீங்க திவ்யப்ரியா!

[ஸாரி ஃபார் மை லேட் அட்டெண்டன்ஸ்......கடைசி பெஞ்சல எல்லாம் ஏறி நிக்க வைக்க மாட்டீங்க இல்ல??]

Divya said...

\\part 1 - hero and herione meeting
part 2 - hero falls in love
part 3 - hero proposes to herione
part 4 - engagement over
part 5 - வேற என்ன? டும், டும், டும் தான்…

So, இப்பயே சொல்லிடறேன்…5th partla no big கதை :-)\

அட......இப்படி பாயிண்ட் வைச்சு ஒவ்வொரு பகுதியா எழுதிவீங்களா, சூப்பர்!!

வெட்டிப்பயல் said...

பார்ட் 5 எப்போ?

Divyapriya said...

//ஸாரி ஃபார் மை லேட் அட்டெண்டன்ஸ்......கடைசி பெஞ்சல எல்லாம் ஏறி நிக்க வைக்க மாட்டீங்க இல்ல??//

ஆமா திவ்யா, உங்க comments காக தான் waiting :-)
அத விட உங்க கதைக்காக ரொம்ப நாளா waiting madam…எப்போ அடுத்த பார்ட்? எப்போ?

Divyapriya said...

@வெட்டிப்பயல்
//பார்ட் 5 எப்போ?//

தலைவரே!!! நீங்களே கேட்டுடீங்க…இன்னிக்கே போட்டுடறேன்...
btw, சொல்ல மறந்துட்டனே, முதல் வருகைக்கு நன்றி :))

Wholesale Costume Jewelry said...

Wholesale Fashion Jewelry