Tuesday, July 15, 2008

கிருஷ்ணா கஃபே - 1

"யேய்ய்ய்ய்ய்ய்ய்!!! Can't you see a bike coming?" விக்னேஷ் அந்த இரண்டு பெண்களை பார்த்து கத்தினான்.

"You've come in the wrong side, and how dare you shout at us???" என்று சரண்யாவும் பதிலுக்கு கத்தினாள்.

"டேய்…நடு ரோட்ல என்னடா சண்ட? வாடா போலாம்.." இது விக்னேஷின் நன்பன் பாலாஜி.

"ச்சே…கண்னே தெரியாத குருடங்களா இருப்பாங்க போல…" சற்று இரைந்தே சொல்லி விட்டான் விக்னேஷ்.

"நாங்க ஒன்னும் குருடங்க இல்ல…நீ தான் சோடா புட்டி…" என்றவாரே ஸ்கூட்டியை வேகமாக கிளப்பிக் கொண்டு பறந்து விட்டாள் சரண்யா.

"யேய்ய்ய்ய்" என்று கைய்யை உயர்தித் கத்தியவனை, "டேய், விடு டா…நாம செஞ்சதும் தப்பு தான" என்று சாமாதானப் படுத்தினான் பாலாஜி.

"ஆனாலும் அந்த பொண்ணுக்கு ரொம்ப திமிர்டா…பாக்கறதுக்கு பாப்பா மாதிரி இருந்துட்டு என்ன பேச்சு பேசுறா பாரு…"

பாலாஜி ஒன்றும் சொல்லாமல் யோசித்துக் கொண்டே இருக்கவும், விக்னேஷ் "என்னடா ஒன்னும் சொல்ல மாட்டிங்குற?"

"அந்த பொண்ண எங்கயோ பாத்த மாதிரி இருக்குடா…எங்கன்னு தான் தெரியல…"

"ஆமா…அவ பெரிய ஐஷ்வர்யா ராய்…நியாபகம் வச்சுக்க…வாடா போலாம்…"

விக்னேஷ் சொன்னாலும், சொல்லாட்டியும் சரண்யா அழகு தான். ஒரு முறை பார்தாலே, மறு முறை பார்க்கத் தூண்டும் கொள்ளை அழகு. என்றாலும் தான் அழகு என்ற எண்ணமே துளி கூட அவள் கண்களில் தெரியாதது தான் அவளது ப்ளஸ் பாயின்ட்டே!
இப்படி துரு துரு வென்று, கண்களில் குறும்பு தெறிக்க, குழந்தைதனமான முகத்துடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்தும் கூட ரசிக்காமல் இருக்கும் அளவிற்க்கு, விக்னேஷ் ஒன்றும் தாடி, மீசை வைக்காத முனிவர் அல்ல.ஆனால் அன்று கோபம் அவன் கண்களை மறைத்திருந்தது. விக்னேஷ்...பார்ப்பதற்க்கு ரொம்ப வாட்ட சாட்டமாக இல்லாவிட்டாலும், அவனை பார்த்தவுடன், யாரையும் முதலில் ஈர்ப்பது, அவனுடைய கூர்மையான பார்வை தான். இவன் எதையும் சாதிக்க பிறந்தவன் என்று அவன் கண்களை பார்தாலே தெரிந்துவிடும். மனதில் பட்டதை யோசிக்காமல் பேசி விடுவதே அவனின் நல்ல குணம், ஏன் கெட்ட குணம் என்று கூட சொல்லலாம்.

விக்னேஷ், பாலாஜி இருவருமே பள்ளித் தோழர்கள். பள்ளியில் இருந்து, இப்போது சென்னை வேலை வரை, இருவரும் ஒன்றாகவே தான் இருக்கிறார்கள்.

விக்னேஷ் சரண்யாவை திட்டியது போலவே, சரண்யவும் வாய் மூடாமல் விக்னேஷை அர்ச்சித்துக் கொண்டே வந்தாள்.

சரண்யாவின் தோழி ரம்யா, "யேய்…போதும்…அவன பத்தியே எத்தன நேரம் பேசிட்டு இருப்ப?"

சரண்யா ஒன்றுமே சொல்லாமல் இருக்கவும், ரம்யா, "அதுவும்...நீ சோடா புட்டின்னு சொன்னதும், அவன் முகத்த பாக்கனுமே…" என்று சிரிக்க ஆரம்பித்தாள்.

உடனே சரண்யாவின் முகம் மாறியது, "ரொம்ப ஒவரா பேசிட்டனோ?"

"யேய் போதும், யாரோ ஒருத்தன், விடு அவன..."

"இல்ல ரம்மி…அவன எங்கயோ பாத்த மாதிரி இருக்கு, எங்கன்னு தான் தெரியல…"

"ஹ்ம்ம்ம்…போன வாரம் ஜோடி நம்பர் ஒன்ல வந்தானே…பாக்கல" என்று ரம்யா நக்கலடிக்கவும்,
"ஹேய்…போடி…" அதற்க்கு பிறகு, விக்னேஷை பற்றின பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் சரண்யா.

இந்த சண்டை நடந்து இரண்டே வாரங்கள் கழித்து மீண்டும் இரு நன்பர்களும் சரண்யாவை ரெயில்வே ஸ்டேஷனில் பார்த்தனர். முதலில் விக்னேஷ் தான் சேரன் எக்ஸ்பரஸ் கதவருகே சாய்ந்து நின்றிருந்த சரண்யாவை பார்த்தான்.

விக்னேஷ், "பாஜி…அங்க பாரேன்…அந்த ஸ்கூட்டி பெப் அங்க நிக்குது…" என்றான்.

அதற்க்கு பாலாஜி, "என்னது? பிளாட்ஃபார்ம்ல ஸ்கூட்டி பெப்பா? அதெல்லாம் கூட இங்க பார்க் பண்ண விடுவாங்களா?" என்று அப்பாவியாக கேட்க,
விக்னேஷ், "டேய்…மொக்கைய போடதடா…அன்னிக்கு அடையார் பக்கத்துல பாத்தோமே, அந்த ஸ்கூட்டி பெப் பொண்ணு, நம்ம கோச் தான் போல, ஒரு வழி பண்றேன் இன்னிக்கு அவள"

"ச்சும்மா இருடா…அப்பறம் இன்னிக்கும் வாங்கி கட்டிக்க போற…"

பாலாஜி இப்படி சொல்லவும், விக்னேஷிற்க்கு நன்றாக ஏத்தி விட்டது போல ஆகிவிட்டது. ஃபோன் மணி அடிக்கவும் பாலாஜி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

விக்னேஷ் சரண்யா நின்றிருந்த கதவருகே சென்று, "Excuse me…எனக்கு கண்ணு தெரியாது…கொஞ்சம் வழி விட்றீங்களா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

சத்தம் கேட்டு திரும்பிய சரண்யாவிற்க்கு நக்கல் சிரிப்புடன் நின்றிருந்த விக்னேஷை பார்த்ததும், ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை, பின்பு தான், அன்று அவள் ஹாஸ்டல் பக்கத்தில் நடந்த சம்பவம் நினைவுக்கு வர, சிரிப்பு வந்த்து. ஏனோ அவன் மேல் அன்று அவளுக்கு கோபம் வரவில்லை, ’ச்சே..ஆனாலும் அன்னிக்கு நாம சோட புட்டின்னு சொல்லி இருக்க கூடாது" என்று மனதிற்க்குள் நினைத்துக் கொண்டாள்.

சரண்யா ஒன்றுமே பேசாமல் அவள் கம்பார்ட்மெண்டில் வந்து உற்காந்தாள். விக்னேஷும் அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்தான். ஆனால், சரண்யா அவனை பார்காதது போல, ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து படிக்க ஆரம்பித்தாள். என்றாலும் மனம் புத்தகத்தில் ஒட்டவில்லை, இவன எங்கயோ பாத்திருக்கோமே என்று மறுபடியும் யோசித்துக் கொண்டிருந்தாள்.

பின்பு அவனை பார்த்து, "அன்னிக்கு கொஞ்சம் அஃபன்ஸிவா பேசிட்டேன்…ஐ ம் சாரி…" என்று ஒரு வழியாக சொல்லி முடித்தாள்.

சரண்யா அவனை தெரியாதது போல காட்டிக் கொண்டதால், ரொம்ப திமிர் பிடித்த பெண் போல என்று நினைத்துக் கொண்டவனுக்கு, அவளாகவே வந்து சாரி கேட்கவும், அதற்க்கு மேல் பொருக்கவில்லை."ச்சே..ச்சே…நீங்க எதுக்கு சாரி எல்லாம் கேட்டுகிட்டு, நான் தான் அன்னிக்கு ராங் சைட்ல வந்து உங்க வண்டி மேல மோதிட்டேன்…ஐ ம் சாரி…" என்றான்.

"தட்ஸ் ஓகே…ஆமா...நீங்க கோயம்புத்தூரா?"

"இல்ல, இல்ல, நான் பெருந்துரை போகனும்…ஈரோட்ல இறங்கி, அங்கிருந்து அப்புறம் பஸ்…"

"ஓ…நீங்களும் பெருந்துரையா???" பெருந்துரை என்றவுடன் தான், சரண்யாவிற்க்குள் பொரி தட்டியது.

"ஆமா…நீங்க Infant Jesus ஸ்கூல் தான?" என்று கேட்டாள்.

""ஹேய்…ஆமா...உங்களுக்கு எப்படி?"

"உங்க பேரு விக்னேஷ் தான?"

""ஹேய்…ஆமா!!!"

"நானும் அதே ஸ்கூல் தான், அன்னிக்கே உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினச்சிட்டு இருந்தேன்…இப்ப தான் நியாபகம் வந்த்து,,,நீங்க தான ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்கினீங்க?"

விக்னேஷ் சிரித்துக் கொண்டே, "அப்பா…பயங்கரமா நியாபகம் வச்சிருக்கீங்க? என் ஃபிரெண்டு பாலாஜி கூட, அன்னிக்கு உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்குன்னு சொல்லிட்டு இருந்தான்…"

"பாலாஜி…ஹான்…அவர் தங்கச்சி கூட என் கிலாஸ் மேட் தான், அகல்யா…இப்ப தான் நியாபகம் வர்ரது…"

"ஓஹ்…அகல்யா கிலாஸ் மேட்டா நீ?" வசதியாக ஒருமைக்கு மாறினான் விக்னேஷ்.

அதற்க்கு பிறகு இருவரும் சேர்ந்து ஸ்கூல் கதை, வேலை…என்று அரைட்டயை ஆரம்பித்தார்கள்.
ஃபோன் பேசி முடித்து விட்டு கம்பார்ட்மெண்டில் நுழைந்த பாலாஜிக்கு ஒன்றுமே புரியவில்லை, "இவள ஒரு வழி பண்ண போறேன்னு சொல்லிட்டு வந்தான், இங்க என்னடான்னா, முப்பத்து ரெண்டு பல்லையும் காட்டிட்டு இருக்கானே?"

பாலாஜியை பார்த்த்தும் விக்னேஷ், "டேய்…இது சரண்யா…நம்ம அகல்யாவோட கிளாஸ் மேட் டா…இங்க தான் சென்னைல வேல பண்ணிட்டு இருக்கா.." என்று அறிமுக படுத்தினான்.

பாலாஜி, "ஓஹ்ஹ்…சரண்யா…எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினச்சுட்டே இருந்தேன்…எப்டி இருக்கீங்க? ஷாந்தி மேம் எப்டி இருக்காங்க?"

அவன் ஸ்கூல் டீச்சரை பத்தி அவளிடன் ஏன் விசாரிக்கிறான் என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்த விக்னேஷிடம், பாலாஜி, "டேய்…நம்ம ஷாந்தி மேம் பொண்ணு டா…மறந்துட்டியா?"

விக்னேஷ் சரண்யாவிடம், "ஓஹ்!!!நீ சொல்லவே இல்லயே…மேம் எப்டி இருக்காங்க?"

"ஹ்ம்ம்…நல்லா இருக்காங்க…அகல்யா எப்டி இருக்கா?"

"ஹ்ம்ம்…நல்லா இருக்கா…"

சிறிது நேரம் பேசிவிட்டு, மூவரும் தூங்க சென்று விட்டனர், மருநாள் காலை நான்கு மணிக்கெல்லாம் ட்ரெய்ன் ஈரோடு சென்றடைந்தது. "ஓகே…பாக்கலாம்…பை.." என்று கிளம்பிய சரண்யாவிடம், விக்னேஷ் "ஏய்…இரு, எப்டி போக போற? தனியாவா போற?"

"இல்ல, எங்கப்பா வெய்ட் பண்றாரு…"

"சரி, ஓகே…அப்ப பாக்கலாம், பை, பை" என்றபடி விக்னேஷும், பாலாஜியும் சென்று விட்டனர்.

அவர்கள் போன பிறகு தான் சரண்யா, "ச்சே, இத்தன நேரம் ஊர் கதை, உலக கதை எல்லாம் பேசிட்டு ஒரு மெயில் ஐ.டி, ஃபோன் நம்பர் கூட வாங்க மறந்துட்டனே…" என்று நொந்து கொண்டாள்.

பல நாட்கள் சென்றது, அவர்கள் பார்த்துக் கொள்ளவே இல்லை…அப்போது தான், அவர்கள் பள்ளியில் பழைய மாணவர்களுக்கான get-together மின்னஞ்சல் வந்த்து. அதை பார்த்து விட்டு, சரண்யாவுன் தோழி ரம்யா. "சரண்…அந்த கெட் டுகெதர் மெய்ல பாத்தியா?"

"இல்லயே, ஏன்?"

"அடுத்த வீக்கெண்ட், நம்ம ஸ்கூல் கெட்டுகதெர் இருக்கு, நாமளும் போகலாம் சரண்…"

"போ ரம்மி…ஒரே போர்…அவ்ளோ தூரம் போய் மறுபடியும் உன் முகத்த தான் பாக்கனும், நான் வரல…"

"ஹேய்…இல்ல, இந்த தடவ பெரிய கெட்டுகதர் அரேஞ் பண்ணி இருக்காங்க…எப்பயும் மாதிரி இல்ல…"

"போ!பெரிய இந்த கெட்டுகெதர்...நான்லாம் வரலை, நான் ரொம்ப பிஸி…"

"ச்சே…வேஸ்ட்டு சரண் நீ…நான் கூட இந்த தடவ கெட்டுகதர்க்கு போய் சீனியர்ஸ், ஜூனியர்ஸ் எல்லாரையும் ரொம்ப நாளைக்கபுறம் பாக்கலாம்னு நினச்சேன்…"

"என்னது சீனியர்ஸ் எல்லாருமா? எப்டி டீ? நம்ம கிலாஸ் மட்டும் இல்லயா?"

"அதான் சொன்னேனே, இந்த தடவ பெருசா அரேஞ் பண்ணி இருக்காங்க…லாஸ்ட் டென் ஸெட்ல இருந்து எல்லாருக்கும் ஒரே சமயத்துல இன்வைட் அனிப்பி இருக்காங்க…"

"நிஜமாவா…ஹேய்…அப்ப நம்மலும் போகலாம் ரம்மி…ப்ளீஸ்"

"அடிப் பாவி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சீன போட்ட??? இப்ப இப்டி பல்டி அடிக்குற???ஹ்ம்ம்… Something fishy…"

ஸ்கூல் கெட்டுகதெர்…கழுத்து வலிக்க தேடியும் சரண்யாவால், விக்னேஷை பார்க்க முடியவில்லை. பின்பு, "ச்சே…நாம எதுக்காக அவன தேடனும்" என்று தன்னை தானே சாமாதானப் படுத்திக் கொண்டாள்.

கெட்டுகதெர் முடிந்து சென்னைக்கு திரும்பிய சரண்யாவிற்க்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

[தொடரும்]

Friday, July 11, 2008

A special day

Today is a special day made of special hours, special minutes and special seconds specially framed for my sweet heart, cutie Prasanna.

Prasanna! It’s been three years now since I know you
But little did I know your voice is magical
Only when I spoke to you after so long, I could figure it out:-)

A remembrance to her on her b’day

The ‘missing you’ verses I wrote when she was on a 5 day long vacation

November 2006

Never in my life, have I felt this way on a Saturday
Yes! I wished it could‘ve been a weekday
I wanted to kill the weekend, Kill my solitude
Like a whining child I kept crying when you will be back
And why I should wake up to face a world so void
And it was then I knew just what to do
I’d fall asleep again and then
I’d think of the wonderful times we have had together
Really miss you dear Prasannu

Tuesday, July 8, 2008

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் - Part 2

சீன் 1: அன்று - 1990
அப்பா: சொல்லு,பென்சில வச்சு எழுதிட்டு இருந்த...அப்புறம் பாக்ஸ்ல போட்ட...நடுல எப்டி கானம போச்சு?

நான்: ?!?!? (ஜோதிகா பாக்கற மாதிரி ஒரு கீழ இருந்து ஒரு பார்வை பாத்துட்டு, திறு திறு ன்னு முழிச்சிட்டு நிக்கறத தவிர வேற ஒன்னும் பண்ணல)

அப்பா: 2nd ஸ்டேண்டர்ட் வந்துட்ட, இன்னும் L.K.G கொழந்த மாதிரி பென்சில தொலச்சிட்டு இருக்க…

நான்: ?!?!?! (அதே திறு திறு தான்)

அப்பா: இது தான் கடசி தடவை, இனிமே பென்சில தொலைச்ச….பென்சில ஒரு நூல்ல கட்டி, உன் shirt button ல கட்டி தொங்க விட்டுருவேன்…ஆமா!!!

சீன் 2: அன்று
அப்பா: Lunch bag எங்க?????
நான்: ?!?!?!

சீன் 3: அன்று
அப்பா: geometry box எங்க?????
நான்: ?!?!?!

சீன் infinity: அன்று
அப்பா: Calculator எங்க?????
நான்: ?!?!?!

****************************************************

சீன் 1: இன்று
நான்: தம்பி ஏன் தாத்தா ஒரு மாதிரியா இருக்கான்?

தாத்தா: பாக்ஸ தொலச்சிட்டு, உங்க சித்தப்பா கிட்ட திட்டு வாங்கிட்டு உக்காந்திருக்கான்...

நான்: எங்கப்பா கூட இப்டி தான் தாத்தா, சின்ன வயசுல நான் பென்சில தொலச்சா, உன் shirt button ல கட்டி தொங்க விட்டுருவேன்னு பயமுருத்துவாரு…

தாத்தா: ஹா ஹா ஹா ஹா ஹா….(தாத்தா பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு)

நான்: என்ன தாத்தா ஆச்சு?

தாத்தா: நான் அதயே தான் உங்கப்பாவுக்கு செஞ்சேன்…9th ஸ்டேண்டர்ட் படிக்கும் போது, pen அ நூல்ல கட்டி, shirt button ல தொங்கவிட்டும் கூட அந்த pen அ தொலச்சுட்டு வந்துட்டாரு உங்க அப்பா…

நான்: ?!?!? [அடச்சே…இது இவ்ளோ லேட்டா தெரிய வருதே :-( ]

Tuesday, July 1, 2008

'ட்டு' கட்டி ஒரு கதை...

நட்டு சிட்டு இவங்க ரெண்டு பெரும் ஒரே செட்டு. சேட்டு கடைல வேல பாத்துட்டு இருந்தான் நட்டு, எட்டு ஊரையும் வெட்டியா சுத்தி வந்துட்டு இருந்தான் சிட்டு. ஒருநாள் இவங்க ரெண்டு பெரும் வெளையாடிட்டு இருந்தாங்க கிரிக்கட்டு. அப்பன்னு பாத்து அவங்க பால் ஓடிடுச்சு அவங்கள விட்டு. ஆனாலும் ரெண்டு பேரும் ஓடி ஓடி ரன் எடுத்துட்டு இருந்தாங்க பால விட்டு. அப்ப அந்த வழியா போன பொண்ணு பொட்டு பாத்தா அந்த பால தொட்டு. பொட்ட பாத்தவுடனே,ரெண்டு பேருமே அவள அடிச்சாங்க சைட்டு. அதனால நம்ம நட்டு, சிட்டு செட்டுக்கு வந்தது வேட்டு. வெட்டு, குத்து நடக்காத குறை தான்...ஆனா பொட்டுக்கு புடிச்சது என்னமோ நட்ட தான். அதனால நட்டும் சிட்டும் பிரிஞ்சு, நட்டும் பொட்டும் சேந்துட்டாங்க. "நட்டு! சட்டு புட்டுன்னு பொட்டு கழுத்துல தாலிய கட்டு...இல்லன்னா தட்டுவேன் தட்டு" ன்னு நட்டோட அப்பா கிட்டு சொன்னதால அவங்க கல்யாணம் ஆச்சு. இதனால மனசு கெட்டு போன சிட்டு, தற்கொல பண்ணிக்க போனான் பயத்த விட்டு. அப்ப அந்த வழியா போன சாமியார் பட்டு, "ஏன்டா சாகுற?" ன்னு சிட்டு தலைல லொட்டுன்னு வச்சாரு ஒரு கொட்டு. சிட்டு அவன் கதைய சொல்லவும், "ஏன்டா? அந்த நட்டுக்கு ஒரு பொட்டு கிடச்சா, உனக்கு ஒரு மொட்டு கிடக்காதாடா?" ன்னு சொன்னாரு. சாமியார் பட்டு சொன்னத கேட்டு, சிட்டு மனசுல ஒரு சொட்டு நம்பிக்க வந்துச்சு. சாமியார் பட்டு சொன்ன மாதிரியே ஒரு மொட்ட பாத்தான் சிட்டு, உடனே சிட்டும் மொட்டும் போனாங்க ஒரு டேட்டு. அப்பறம் சிட்டும் மொட்டும் கல்யாணம் கட்டி சந்தோஷமா வாழ்ந்தாங்க. சிட்டுக்கும் மொட்டுக்கும் பொறந்த கொழந்த பேரு லட்டு. அதே மாதிரி, நட்டுக்கும் பொட்டுக்கும் பொறந்த கொழந்த புட்டு. கடசில சிட்டு, மொட்டு, லட்டு...அப்பறம் நட்டு, பொட்டு, புட்டு எல்லாரும் சந்தோஷமா வாழ்தாங்க.

அப்புறம் கடசியா ஒன்னு. ..

இத படிச்சவங்க ஒரு மட்டு....இப்ப ஒடஞ்சுதா உங்க குட்டு? ஹய்யோ, என்ன வெட்டீராதீங்க வெட்டு...இது சும்மா ஒரு விட்டு...இதுக்கு நீங்க எல்லாரும் போடணும் ஒட்டு/கமெண்டு...