Tuesday, July 1, 2008

'ட்டு' கட்டி ஒரு கதை...

நட்டு சிட்டு இவங்க ரெண்டு பெரும் ஒரே செட்டு. சேட்டு கடைல வேல பாத்துட்டு இருந்தான் நட்டு, எட்டு ஊரையும் வெட்டியா சுத்தி வந்துட்டு இருந்தான் சிட்டு. ஒருநாள் இவங்க ரெண்டு பெரும் வெளையாடிட்டு இருந்தாங்க கிரிக்கட்டு. அப்பன்னு பாத்து அவங்க பால் ஓடிடுச்சு அவங்கள விட்டு. ஆனாலும் ரெண்டு பேரும் ஓடி ஓடி ரன் எடுத்துட்டு இருந்தாங்க பால விட்டு. அப்ப அந்த வழியா போன பொண்ணு பொட்டு பாத்தா அந்த பால தொட்டு. பொட்ட பாத்தவுடனே,ரெண்டு பேருமே அவள அடிச்சாங்க சைட்டு. அதனால நம்ம நட்டு, சிட்டு செட்டுக்கு வந்தது வேட்டு. வெட்டு, குத்து நடக்காத குறை தான்...ஆனா பொட்டுக்கு புடிச்சது என்னமோ நட்ட தான். அதனால நட்டும் சிட்டும் பிரிஞ்சு, நட்டும் பொட்டும் சேந்துட்டாங்க. "நட்டு! சட்டு புட்டுன்னு பொட்டு கழுத்துல தாலிய கட்டு...இல்லன்னா தட்டுவேன் தட்டு" ன்னு நட்டோட அப்பா கிட்டு சொன்னதால அவங்க கல்யாணம் ஆச்சு. இதனால மனசு கெட்டு போன சிட்டு, தற்கொல பண்ணிக்க போனான் பயத்த விட்டு. அப்ப அந்த வழியா போன சாமியார் பட்டு, "ஏன்டா சாகுற?" ன்னு சிட்டு தலைல லொட்டுன்னு வச்சாரு ஒரு கொட்டு. சிட்டு அவன் கதைய சொல்லவும், "ஏன்டா? அந்த நட்டுக்கு ஒரு பொட்டு கிடச்சா, உனக்கு ஒரு மொட்டு கிடக்காதாடா?" ன்னு சொன்னாரு. சாமியார் பட்டு சொன்னத கேட்டு, சிட்டு மனசுல ஒரு சொட்டு நம்பிக்க வந்துச்சு. சாமியார் பட்டு சொன்ன மாதிரியே ஒரு மொட்ட பாத்தான் சிட்டு, உடனே சிட்டும் மொட்டும் போனாங்க ஒரு டேட்டு. அப்பறம் சிட்டும் மொட்டும் கல்யாணம் கட்டி சந்தோஷமா வாழ்ந்தாங்க. சிட்டுக்கும் மொட்டுக்கும் பொறந்த கொழந்த பேரு லட்டு. அதே மாதிரி, நட்டுக்கும் பொட்டுக்கும் பொறந்த கொழந்த புட்டு. கடசில சிட்டு, மொட்டு, லட்டு...அப்பறம் நட்டு, பொட்டு, புட்டு எல்லாரும் சந்தோஷமா வாழ்தாங்க.

அப்புறம் கடசியா ஒன்னு. ..

இத படிச்சவங்க ஒரு மட்டு....இப்ப ஒடஞ்சுதா உங்க குட்டு? ஹய்யோ, என்ன வெட்டீராதீங்க வெட்டு...இது சும்மா ஒரு விட்டு...இதுக்கு நீங்க எல்லாரும் போடணும் ஒட்டு/கமெண்டு...

25 comments:

Vijay said...

எங்க வீட்டுல இன்னிக்கு சீனிப்புட்டு
ஆஃபீஸில் கொண்டு வந்திருந்தான் திருப்பதி லட்டு
எனக்குக் கொஞ்சம் புத்தி மட்டு
என் மனைவி கேட்டாள் ஒரு புடவை அது பட்டு
வாங்கித் தராதலால் வாங்கினேன் அவளிடம் ஒரு குட்டு.

யப்பா, இதுக்கு மேல நம்மால எழுத முடியலை

Anonymous said...

நல்லாவே "ட்டு" கட்டு எழுதறீங்க.. கதையை. :)

Divyapriya said...

விஜய்...செம...இன்னும் கொஞ்ச நேரம் உக்காந்து யோசிங்க...வந்துரும்...நீயும் இப்டி தான் வேல வெட்டி இல்லாம உக்காந்து யோசிச்சியான்னு கேக்காதீங்க...எனக்கு இது கனவுல வந்துச்சு, நிஜமா :))

Divyapriya said...

//நல்லாவே "ட்டு" கட்டு எழுதறீங்க.. கதையை. :)//

thank you :)

Shiva.G said...

kashta kaaalam...
all i am wondering is .. jus the courage with which u ve blogged this!!!
i sincerely appreciate that ;)
as i said earlier.. only you can do this.. kudos :)

கருணாகார்த்திகேயன் said...

திவ்யா என்ன வேண்டுதலா..
இப்படி பயமுருத்துறிங்க...

திரும்ப வரதா இல்லயா...

என்ன கொடுமை சார் இது...

அன்புடன்
கார்த்திகேயன்

Vijay said...

Template is cool and pleasing now. இருந்தது கண்ணை ரொம்பவே உருத்தித்து.

Divyapriya said...

கார்திகேயன்...வருகைக்கு நன்றி.
//திரும்ப வரதா இல்லயா...//
கண்டிப்பா வாங்க...

Divyapriya said...

//Template is cool and pleasing now. //

Thank you, பழய template கொஞ்சம் இட பற்றாகுறையா வேற இருந்துச்சு...அதான் ஒரு change...

Divya said...

'ட்டு' கட்டி கதை ரொம்பவே நல்லா சொல்லுறீங்க திவ்யாப்ரியா:))


BTW என் ப்ளாக் லிங் எல்லாம் கொடுத்திருக்கிறீங்க......ரொம்ப ரொம்ப தாங்க்ஸுங்க அம்மனி:))

விஜய் சொன்னா மாதிரி....பழைய பிங்க் டெம்ப்லேட் விட இது ரொம்ப நல்லா அப்பீளிங்கா இருக்கு திவ்யா:))

Divyapriya said...

//BTW என் ப்ளாக் லிங் எல்லாம் கொடுத்திருக்கிறீங்க......ரொம்ப ரொம்ப தாங்க்ஸுங்க அம்மனி:))//
ரொம்ப நாளா உங்க ப்ளாக சைலெண்ட்டா படிச்சிட்டு தான் இருக்கேன் :-) யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வைகம்னு தான் :-))
அப்புறம், என் பேர விஜய் கொஞ்சம் மாத்தி எழுதிட்டாரு...திவ்யாப்ரியா இல்ல, திவ்யப்ரியா தான் :-)

Aanandh S Balasubramanian said...

enna tttu kathai.. vittu vittu nu solli vettu vettu veteriye !!

Sen22 said...

தெரியாம வந்துட்டேன்...
என்ன விட்றுங்க...

Prabakar said...

ட்டு" ட்டு" pottu vai valikkithunga , nala oru muyarichi valthukkal

Divyapriya said...

// Aanandh S Balasubramanian said...
enna tttu kathai.. vittu vittu nu solli vettu vettu veteriye !!//

:))

// Sen22 said...
தெரியாம வந்துட்டேன்...
என்ன விட்றுங்க...//

மீண்டும் வாங்க :-) இனிமே இவ்ளோ பயமுருத்தல் இருக்காது...

//Prabakar Samiyappan said...
ட்டு" ட்டு" pottu vai valikkithunga , nala oru muyarichi valthukkal//

thankyou...மீண்டும் வாங்க...

Ramya Ramani said...

ஹா ஹா ஹா... நல்ல கற்பனை....சூப்ப்ப்பர்!

Divya said...

\ரொம்ப நாளா உங்க ப்ளாக சைலெண்ட்டா படிச்சிட்டு தான் இருக்கேன் :-) யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வைகம்னு தான் :-))\


அட........நிஜம்மாவா??
ரொம்ப நன்றிங்க:))

Divya said...

\\என் பேர விஜய் கொஞ்சம் மாத்தி எழுதிட்டாரு...திவ்யாப்ரியா இல்ல, திவ்யப்ரியா தான் :-)\

ஒஹோ....உங்க பேரு திவ்யப்ரியா வா??

நான் திவ்யா-ப்ரியா ன்னு நினைச்சுட்டேன்ஸ்:)))

தமிழ் said...

நல்ல இருக்கிறது

Divyapriya said...

//Ramya Ramani said...

ஹா ஹா ஹா... நல்ல கற்பனை....சூப்ப்ப்பர்!//

ரொம்ப நாள் முன்னாடியே எழுதினது, யாராவது கல்லால அடிச்சிட்டாங்கன்னா என்ன பண்ணரதுன்னு தான் post பண்னல ;-) இப்ப தைரியம் வந்துடுச்சு (எல்லாம் blog நண்பர்கள் குடுத்த தைரியம் தான் :-) )


//Divya said...

\ரொம்ப நாளா உங்க ப்ளாக சைலெண்ட்டா படிச்சிட்டு தான் இருக்கேன் :-) யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வைகம்னு தான் :-))\


அட........நிஜம்மாவா??
ரொம்ப நன்றிங்க:))//

ஆமா, first பாத்த அன்னுக்கே, full blog உம் படிச்சிட்டு தான் வேர வேலை பாத்தேன் :-)


//திகழ்மிளிர் said...

நல்ல இருக்கிறது//

வருகைக்கு ரொம்ப நன்றி…எல்லா postum படிங்க…மீண்டும் வாங்க…

ஜி said...

avvv.... en imbuttu kolaveri??

Divyapriya said...

//ஜி said...
avvv.... en imbuttu kolaveri??//

இது கொலவெறி இல்லீங்ன்னா, கலை வெறி :-D

MSK / Saravana said...

எங்களயெல்லாம் பார்த்தா உங்களுக்கு பாவமா தெரியல..
:(
:(
:(

mvalarpirai said...

ஏங்க சமீபத்திலே T.R யை எங்கேயும் பார்த்தீங்களா..இல்லை அவரோட நிகழ்ச்சி எதோம் பார்த்தீங்களா !
T.R தோத்திடுவார் போல ! பக்கா !

எங்க ஏங்க கேட்றீங்க ஓட்டு
T.R இதை படித்தா கேட்பாரு காப்பி ரைட்டு
அடுத்த T.R படத்துக்கு நீங்க கொடுப்பீங்களா கால்ஃஸீட்டு ?

getmeatvnr said...

என்னங்க திடிர்னு டி ஆர் ரேஞ்சுக்கு ஆயிட்டிங்க