Monday, September 8, 2008

சிக்கன் பாக்ஸ் - 2

பகுதி 1

“ஷிவா…ஷிவா…நில்லு, நில்லு நானும் வரேன்…”

அன்னிக்கு தான் ஆபிஸ்ல முதல் நாள், ஷிவா ஷிவான்னு கத்திகிட்டே, ஒரு கருப்பு கலர் சுடிதார்ல தேவதை மாதிரி ஒடி வந்தா நிரு.

ப்ரவீன், “நிறுத்து…நிறுத்து…தேவதைகளோட யுனிஃபார்ம் வெள்ள ட்ரெஸ் தான? கருப்பு சுடிதார்ங்கற?”

“டேய்…டிஸ்டர்ப் பண்ணாம கதைய ஒழுங்கா கேளு டா…”

“சரி, சரி, நீ கண்டின்யு பண்ணு…”

“ஒரு அழகான பொண்ணு, நமக்கு யாருன்னே தெரியாத ஒரு பொண்ணு, நம்ம பேர கத்திகிட்டே இப்படி வேகமா ஓடி வருதே…யாரா இருக்கும்ன்னு நினைச்சுகிட்டே ஒரு நிமிஷம் நின்னு அவளயே பாத்தேன்…ஆனா, அவ என்ன தாண்டி இன்னொரு பொண்ணு கிட்ட போய் பேச ஆரம்பிச்சிட்டா…அப்புறம் ட்ரைய்னிங் க்ளாஸ்ல தான் தெரிஞ்சுது, அந்த இன்னொரு பொண்ணு பேரு ஷிவானி ன்னு”

“ஓ…ஷிவானி, உன் ஃப்ரெண்டு…அந்த நார்த் இன்டியன் பொண்ணு…”

“ஹ்ம்ம்…அவளே தான்…”

“நகரத்திலயே பிறந்த வளந்திருந்தாலும், எனக்கு சாதாரணமா பொண்ணுங்க கிட்ட அவ்வளவா பேசி பழக்கமில்லை…கூச்ச சுபாவம்ன்னு சொல்ல முடியாது, ஆனா, காலேஜ்ல பசங்களோட சேந்துகிட்டு, ஆண்டி கடலை ஃபோர்ஸ் அது இதுன்னும் சும்மா கெத்து காட்டிட்டு திரிஞ்சதுல, எந்த பொண்ணோட நட்புமே முழுசா கிடைக்கல… ஒரு அழகான பொண்ண பாத்த உடனே, அவ அழகா இருக்கா, அவள மாதிரி ஒரு கேர்ள் ஃப்ரெண்டு வேணும், இப்படி எல்லாம் பல தடவ தோனி இருக்கு…ஆனா, ட்ரைய்னிங் க்ளாஸ்ல நிருவ பாத்த அப்புறம், அவ பேச்சு, அவ குணம், அழகான அந்த சிரிப்பு, அமைதியான அந்த முகம், தெளிவான அவ சிந்தனை, இதெல்லாம் பாத்து, இவள மாதிரி ஒரு ஃப்ரெண்டு வேணும்ன்னு முதல் முறையா தோனுச்சு…”

“ஹ்ம்ம்…அப்புறம் எப்டி ஃப்ரெண்டு ஆன?”

“ட்ரெய்னிங் முடிஞ்சு நான், நிரு, ஷிவானி, மூணு பேரும் ஒரே ப்ராஜக்ட்…வழக்கமா நடக்குற மாதிரி, காஃபி, லஞ்சு, கான்டீன் ன்னு எங்க சந்திப்புகள் அதிகமாச்சு, இப்படியே ஒரு வருஷத்துல எங்க மூணு பேர் நட்பும் அதிகமாச்சு…அந்த ஒரு வருஷத்துல நான் என்னையே இன்னும் நல்லா புரிஞ்சுகிட்டேன், நிரு மூலமா…பொண்ணுங்க உலகம், அவங்க நட்பு, இதெல்லாம் ரொம்பவே புதுசா, வித்யாசமா இருந்துச்சு, இத்தனை நாள் இதெல்லாம் மிஸ் பண்ணிடோம்ன்னு கூட எனக்கு சில தடவ தோணும்… நிருவ விட ஷிவானி கிட்ட தான் அதிக நேரம் பேசி இருக்கேன்…ஆனா, ஷிவானி கிட்ட இல்லாத ஏதோ ஒரு ஈர்ப்பு எனக்கு நிரு மேல இருக்குன்னு எனக்கு ஆரம்பத்தில இருந்தே தெரியும்…அத நான் வெளிய அதிகமா காட்டிக்கவும் இல்ல, அதே சமயம், மறைக்கவும் முயற்சி பண்ணல…”

“அவங்க ரெண்டு பேருக்கும் அது தெரியுமா?”

“ஹ்ம்ம்…அவங்களுக்கும் தெரியும்…ஒரு நாள் நிரு என்கிட்ட, உனக்கு எந்த மாதிரி பொண்ண பிடிக்கும்ன்னு கேட்டா…நான் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, “என் ட்ரீம் கேர்ள் ஒரு ஐஞ்சு வயசு பொண்ணு மாதிரி குழந்தைதனமா இருக்கனும்… ஒரு ஐம்பது வயசு பாட்டி மாதிரி மெச்சூர்ட்டாவும் இருக்கனும்…ஆனா, எப்ப எந்தமாதிரி நடந்துக்கனும்ங்கறது அவளுக்கும் தெரிஞ்சிருக்கனும்” ன்னு சொன்னேன்.

“அதுக்கு அவ என்ன சொன்னா?”

“அவ எதுவும் சொல்லல, நான் தான் அதுக்கு மேலையும் என்னென்னவோ சொல்ல துடிச்சேன்…”
’நிரு, you are so much adorable when you are kiddish and so much admirable when you get practical’

“நாங்க எவ்வளவோ விஷயங்கள பத்தி மணிக்கனக்கா பேசி இருக்கோம்…அதுக்காக எங்க ரெண்டு பேர் சிந்தைனைகளும், எண்ணங்களும் ஒத்துப் போகும்ன்னு சொல்ல வரல…நிறைய தடவை, எங்க உரையாடல்கள் கருத்து வேறுபாடுல தான் முடிஞ்சிருக்கு…ஆனா எத்தனை கருத்து வேறுபாடுகள் வந்திருந்தாலும், ஒரு விதமான புரிதல் மட்டும் எங்களுக்குள்ள என்னைக்குமே அறுபட்டதில்லை….அவ இப்படி தான்னு எனக்கு தெரியும், அதே மாதிரி நான் இப்படி தான்னு அவளுக்கும் தெரியும்.”

“இந்த மாதிரி மனசுக்குள்ள பன்னீர் தெளிச்ச பல அழகான உணர்வுகளுக்கு, காதல்ங்குற பேர குடுக்காம, ’என் முதல் க்ரஷ்” என்ற ஒரு சமாதான உடன்படிக்கைய நானே ஏற்படுத்திகிட்டேன்…ஆனா, எனக்குள்ள பூத்த அந்த உணர்வுகளுக்கு எப்ப ஒரு பேர தேடினேனோ, அந்த நிமிஷமே எனக்குள்ள காதல் மலர்ந்திருச்சுன்னு எனக்கே பின்னாடி தான் தெரிஞ்சுது…”

“எப்போ?”

“ஒரு நாள் மதியம் லஞ்சு போது, நான் எனக்கே தெரியாம அவளயே உத்துப் பாத்துட்டு இருந்தேன்…திடீர்ன்னு அந்த விளையாட்ட, ஷிவானி தான் முதல்ல ஆரம்பிச்சா…அவங்களுக்குள்ள முதல்லயே பேசி வச்சுகிட்டாங்களோ என்னவோ, அது எனக்கு தெரியாது…அந்த சனி, ஞாயிறு, நிருவோட அப்பா, அம்மா வரப் போறாங்கன்னு ஏதோ சொல்ல ஆரம்பிச்சா…”

“ஹ்ம்ம்…”

“ஆனா, அதுக்கு முன்னாடி நிரு அத பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லயே, ஏன்ன்னு அவள கேட்டேன்…
நிரு எதுவுமே பேசாம அமைதியா உக்காந்திருந்தா…
ஷிவானி, ’நிருவுக்கு என்கேஜ்மெண்ட் ஆக போகுது, அது விஷயமா தான் அவ அப்பா, அம்மா வராங்க’ ன்னு சொன்னா…”

“எனக்குள்ள திடீன்னு எரிமலையா வெடிச்ச அந்த உணர்ச்சிய என்னால, என்னைக்குமே மறக்க முடியாது…அந்த ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம், வாழ்கையே அஸ்தமனம் ஆனது மாதிரி இருந்துச்சு…”

“இத்தனையும் நடக்கும் போது நிரு மட்டும், எதுவுமே பேசாம, என் கண்களையே பாத்துட்டு உக்காந்திருந்தா. கலங்கி போன என் கண்கள்ள இருந்த காதல, நான் சொல்லாமையே அவ உணர்ந்துட்டான்னு எனக்கு தெரிஞ்சுது. ஆனாலும், ரொம்ப அமைதியா தான் இருந்துச்சு என் மனசு, என்மேல அவ கோவபடுவாளேன்னு பயமோ, என்ன பதில் சொல்ல போறாங்கற பதட்டமோ எனக்கு கொஞ்சம் கூட வரல, ஏன்னா எனக்கு என் நிருவ பத்தி நல்லா தெரியும்…”

“அப்புறம் அவ என்ன சொன்னா?”

“அப்ப உடனே அவ எதுவும் சொல்லல, வழக்கம் போல சாப்ட்டுட்டு எல்லாரும் அவங்கவங்க க்யூப்புக்கு போனோம், ஆனா, வழக்கத்துக்கு மாறான அமைதியோட… ரொம்ப நாளா வெறும் ஈப்புங்கற வேலிய போட்டு அடக்கி வச்சிருந்த என்னோட மனசு, நான் சொன்ன படி கேட்காம, அவள நேசிக்க தொடங்கிட்டது, எனக்கே அப்ப தான் புரிஞ்சுது. அதுக்கு மேல என்னால தாங்க முடியல…நேரா ஒரு காலி கான்ஃபரன்ஸ் ரூமுக்குள்ள போனேன்”

“அப்பறம்”

“ரொம்ப நாளைக்கு அப்புறம், எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல முதல் முறையா, மனச விட்டு ’ஓ’ ன்னு அழுதேன்…”
“என்னது? அழுதியா? என்ன டா இது? சின்ன புள்ள மாதிரி?”

“சின்ன புள்ள மாதிரியா? இல்ல, I cried like a Man”

[தொடரும்]

36 comments:

MSK / Saravana said...

Me the first??

MSK / Saravana said...

பின்றீங்களே..

ஓகே.. நீங்க சூப்பராவே காதல் எனப்படுவது யாதெனில் எழுதிடிவீங்க..
:)

MSK / Saravana said...

//ப்ரவீன், “நிறுத்து…நிறுத்து…தேவதைகளோட யுனிஃபார்ம் வெள்ள ட்ரெஸ் தான? கருப்பு சுடிதார்ங்கற?”//

கலக்கல்..

"வாலி" பட EFFECT-ஆ??

MSK / Saravana said...

இந்த பகுதி ரொம்ப உணர்வுபூர்வமா இருந்துச்சு..

:))

MSK / Saravana said...

அடுத்த பகுதி எப்போ??

MSK / Saravana said...

//ஆனா, காலேஜ்ல பசங்களோட சேந்துகிட்டு, ஆண்டி கடலை ஃபோர்ஸ் அது இதுன்னும் சும்மா கெத்து காட்டிட்டு திரிஞ்சதுல, எந்த பொண்ணோட நட்புமே முழுசா கிடைக்கல… //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

கதை நாயகன், என் இனமா??

முகுந்தன் said...

//அன்னிக்கு தான் ஆபிஸ்ல முதல் நாள், ஷிவா ஷிவான்னு கத்திகிட்டே, ஒரு கருப்பு கலர் சுடிதார்ல தேவதை மாதிரி ஒடி வந்தா நிரு.
//

தேவதைங்க வெள்ளை உடைல தான் வரோணும்...
பாரதிராஜா கோச்சிப்பாறு :-)

முகுந்தன் said...

//ஓடி வருதே…யாரா இருக்கும்ன்னு நினைச்சுகிட்டே ஒரு நிமிஷம் நின்னு அவளயே பாத்தேன்…ஆனா, அவ என்ன தாண்டி இன்னொரு பொண்ணு கிட்ட போய் பேச ஆரம்பிச்சிட்டா…//

அங்கதான் நிக்கறீங்க அம்மணி...
sooper

முகுந்தன் said...

//நகரத்திலயே பிறந்த வளந்திருந்தாலும், எனக்கு சாதாரணமா பொண்ணுங்க கிட்ட அவ்வளவா பேசி பழக்கமில்லை…//

அட என்ன மாதிரியே நல்லவனா நீ?

முகுந்தன் said...

//“என் ட்ரீம் கேர்ள் ஒரு ஐஞ்சு வயசு பொண்ணு மாதிரி குழந்தைதனமா இருக்கனும்… ஒரு ஐம்பது வயசு பாட்டி மாதிரி மெச்சூர்ட்டாவும் இருக்கனும்…ஆனா, எப்ப எந்தமாதிரி நடந்துக்கனும்ங்கறது அவளுக்கும் தெரிஞ்சிருக்கனும்” ன்னு சொன்னேன்.

“அதுக்கு அவ என்ன சொன்னா?”
//


உன்ன மாதிர்யே ஒரு லூசு கிடைக்கும்னு சொல்லி இருப்பா...

முகுந்தன் said...

//….அவ இப்படி தான்னு எனக்கு தெரியும், அதே மாதிரி நான் இப்படி தான்னு அவளுக்கும் தெரியும்.”
//

Accepting people for what they are is a great quality!!

முகுந்தன் said...

// நான் எனக்கே தெரியாம அவளயே உத்துப் பாத்துட்டு இருந்தேன்…//

இந்த கத நல்லா இருக்கு

முகுந்தன் said...

//“சின்ன புள்ள மாதிரியா? இல்ல, I cried like a Man”
//

Superb....

முகுந்தன் said...

கலக்கிட்டீங்க திவ்யப்ரியா

ஜியா said...

//ஆனா, காலேஜ்ல பசங்களோட சேந்துகிட்டு, ஆண்டி கடலை ஃபோர்ஸ் அது இதுன்னும் சும்மா கெத்து காட்டிட்டு திரிஞ்சதுல, எந்த பொண்ணோட நட்புமே முழுசா கிடைக்கல… //

//பொண்ணுங்க உலகம், அவங்க நட்பு, இதெல்லாம் ரொம்பவே புதுசா, வித்யாசமா இருந்துச்சு, இத்தனை நாள் இதெல்லாம் மிஸ் பண்ணிடோம்ன்னு கூட எனக்கு சில தடவ தோணும்…//

hmmm... No comments for now :))) naan poi oru malarum ninaivugala 180MM la paathuttu varren :((

வெட்டிப்பயல் said...

//“என் ட்ரீம் கேர்ள் ஒரு ஐஞ்சு வயசு பொண்ணு மாதிரி குழந்தைதனமா இருக்கனும்… ஒரு ஐம்பது வயசு பாட்டி மாதிரி மெச்சூர்ட்டாவும் இருக்கனும்…ஆனா, எப்ப எந்தமாதிரி நடந்துக்கனும்ங்கறது அவளுக்கும் தெரிஞ்சிருக்கனும்” ன்னு சொன்னேன்.//

அட்டகாசம்...

ஒரு பொண்ணு எழுதற மாதிரியே இல்லை. அப்படியே ஒரு பையன் பேசற மாதிரி இருக்கு.. அருமை அருமை...

டயலாக்ஸ் எல்லாம் கதைல அருமையா இருக்கு.. பார்க்கலாம். கதை எப்படி போகுதுனு :)

Divya said...

உரையாடல்களிலேயே இந்த பகுதியை நகர்த்திருந்தாலும்......ரொம்ப இயல்பா, யதார்த்தமான ,உணர்வு பூர்வமான டயலாக்ஸ் படிக்க ரொம்ப நல்லாயிருந்தது திவ்யப்ரியா:))

Divya said...

\\ காலேஜ்ல பசங்களோட சேந்துகிட்டு, ஆண்டி கடலை ஃபோர்ஸ் அது இதுன்னும் சும்மா கெத்து காட்டிட்டு திரிஞ்சதுல, எந்த பொண்ணோட நட்புமே முழுசா கிடைக்கல… \\


இப்படி இருந்த பையன் தொபுக்கடீர்னு கவுந்துட்டானே:((

Divya said...

\\“என் ட்ரீம் கேர்ள் ஒரு ஐஞ்சு வயசு பொண்ணு மாதிரி குழந்தைதனமா இருக்கனும்… ஒரு ஐம்பது வயசு பாட்டி மாதிரி மெச்சூர்ட்டாவும் இருக்கனும்…ஆனா, எப்ப எந்தமாதிரி நடந்துக்கனும்ங்கறது அவளுக்கும் தெரிஞ்சிருக்கனும்”\\சூப்பர்ப்;))

Vijay said...

நான் இந்தப் பகுதியை இன்னும் 3-4 தடவை படிச்சுட்டுத்தான் கமண்டுவேன்.
காலங்கார்த்தால இப்படி மனசை பிழிஞ்சிட்டீங்களே??

Unknown said...

ஹை எனக்கும் ஷிவானின்னு ஒரு பிரென்ட் இருக்கா அவளும் நார்த் இந்தியன் தான்..!! :))

அப்பறம் ஷிவா பேசற டையலாக்ஸ் எல்லாம் சூப்பர்..!! :))

//“இந்த மாதிரி மனசுக்குள்ள பன்னீர் தெளிச்ச பல அழகான உணர்வுகளுக்கு, காதல்ங்குற பேர குடுக்காம, ’என் முதல் க்ரஷ்” என்ற ஒரு சமாதான உடன்படிக்கைய நானே ஏற்படுத்திகிட்டேன்…ஆனா, எனக்குள்ள பூத்த அந்த உணர்வுகளுக்கு எப்ப ஒரு பேர தேடினேனோ, அந்த நிமிஷமே எனக்குள்ள காதல் மலர்ந்திருச்சுன்னு எனக்கே பின்னாடி தான் தெரிஞ்சுது…”//

இப்பவாவது தெரிஞ்சதே..!! ;))

Hariks said...

//“என் ட்ரீம் கேர்ள் ஒரு ஐஞ்சு வயசு பொண்ணு மாதிரி குழந்தைதனமா இருக்கனும்… ஒரு ஐம்பது வயசு பாட்டி மாதிரி மெச்சூர்ட்டாவும் இருக்கனும்…ஆனா, எப்ப எந்தமாதிரி நடந்துக்கனும்ங்கறது அவளுக்கும் தெரிஞ்சிருக்கனும்”//

எல்லாருக்கும் இதே ஆசை தானா ;)

Hariks said...

//“நிறுத்து…நிறுத்து…தேவதைகளோட யுனிஃபார்ம் வெள்ள ட்ரெஸ் தான? கருப்பு சுடிதார்ங்கற?”//

ப்ரவீனுக்கு ஒரு கொட்டு. க‌த‌ய‌ கேக்காம‌ அது என்ன‌ சின்ன‌ புள்ள‌ த‌ன‌மா கேள்வி கேக்க‌ற‌து ;)

Hariks said...

//“சின்ன புள்ள மாதிரியா? இல்ல, I cried like a Man”//

ரொம்ப‌ ட‌ச்சிங் லைன். I like this :)

Raghav said...

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் திவ்யப்ரியா. மேகத்தை எட்டியுள்ள விரிந்த சிறகுகள், விண்வெளியை அடைய மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

Raghav said...
This comment has been removed by the author.
chandru / RVC said...

//“சின்ன புள்ள மாதிரியா? இல்ல, I cried like a Man” //

மிகவும் ரசித்த வரிகள். கல்லூரி காலத்தில் தன் நண்பன் அழுவதை எந்த ஒரு பெண்ணும் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டாள். என் பேட்ச்சில் ஒரு பெண் தன் நண்பனின் காதலை நிராகரித்த ஒருத்திக்கு விட்ட அறை என் காதுக்குள் இன்னும் ரீங்காரமிடுகிறது. பதிவுக்கும் இந்த நிகழ்வுக்கும் தொடர்பில்லையெனினும் மேற்குறிப்பிட்ட வரிகள் எனக்கு இந்த சம்பவத்தை நினைவுபடுத்தியதால் பகிர்ந்தேன்.
தொடருங்கள் :)

Divyapriya said...

Saravana Kumar MSK said...
// Me the first??//
Yes…:-)
// பின்றீங்களே..

ஓகே.. நீங்க சூப்பராவே காதல் எனப்படுவது யாதெனில் எழுதிடிவீங்க..
:)//

நம்பிக்கைக்கு நன்றி…ஏற்கனவே ரெடி ;-) இந்த கதை முடியட்டும்…போட்டுடறேன்…

//இந்த பகுதி ரொம்ப உணர்வுபூர்வமா இருந்துச்சு..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

கதை நாயகன், என் இனமா??//

பல பேத்துக்கு Flash back கிளரி விட்டுடுச்சு போல ;-)

------------------------------
முகுந்தன் said...

// தேவதைங்க வெள்ளை உடைல தான் வரோணும்...
பாரதிராஜா கோச்சிப்பாறு :-)//

அது சைட்ல வர தேவதைங்க முகுந்தன்…main தேவதை, எந்த கலர் போட்டுருந்தாலும் தேவதை தான் ;-)


// அங்கதான் நிக்கறீங்க அம்மணி...
Sooper//
டாங்ஸ் :-)


\\
//நகரத்திலயே பிறந்த வளந்திருந்தாலும், எனக்கு சாதாரணமா பொண்ணுங்க கிட்ட அவ்வளவா பேசி பழக்கமில்லை…//

அட என்ன மாதிரியே நல்லவனா நீ?\\

அட எல்லாருக்கும் இதே flash back…

// உன்ன மாதிர்யே ஒரு லூசு கிடைக்கும்னு சொல்லி இருப்பா...//

Feelings, feelings முகுந்தன்…பாவம் அவன்…

//இந்த கத நல்லா இருக்கு
Superb....
கலக்கிட்டீங்க திவ்யப்ரியா
//

நன்றி ஹை ;-)

Divyapriya said...

ஜி said...
// hmmm... No comments for now :))) naan poi oru malarum ninaivugala 180MM la paathuttu varren :((//
சரி, சரி சீக்கரம் வாங்க :-)
திரும்ப வரும் போது, அந்த flash back கதையோட வாங்க ;-)
----------------------------
வெட்டிப்பயல் said...

// அட்டகாசம்...

ஒரு பொண்ணு எழுதற மாதிரியே இல்லை. அப்படியே ஒரு பையன் பேசற மாதிரி இருக்கு.. அருமை அருமை...//

ஐயோ! நான் பொண்ணு தானுங்க்ண்ணா ;-)

// டயலாக்ஸ் எல்லாம் கதைல அருமையா இருக்கு.. பார்க்கலாம். கதை எப்படி போகுதுனு :)//

இனி/இது வரைக்கும் கூட ;-) கதைன்னு பெருசா எதுவும் இல்லை…இதே மாதிரி இன்னும் சில, பல சம்பவங்கள narrate பண்ணுவான்…அவ்ளோ தான்…படிச்சுட்டு சொல்லுங்க :-)
----------------------------

Divya said...
// உரையாடல்களிலேயே இந்த பகுதியை நகர்த்திருந்தாலும்......ரொம்ப இயல்பா, யதார்த்தமான ,உணர்வு பூர்வமான டயலாக்ஸ் படிக்க ரொம்ப நல்லாயிருந்தது திவ்யப்ரியா:))//

ரொம்ப நன்றி திவ்யா…முதல் பகுதில குடுத்த hype அ இதுல காப்பாத்திட்டேனா?

//இப்படி இருந்த பையன் தொபுக்கடீர்னு கவுந்துட்டானே:((//

திவ்யா…பல பசங்க இப்படி தான் இருந்திருக்காங்க போல ;-)

// \\“என் ட்ரீம் கேர்ள் ஒரு ஐஞ்சு வயசு பொண்ணு மாதிரி குழந்தைதனமா இருக்கனும்… ஒரு ஐம்பது வயசு பாட்டி மாதிரி மெச்சூர்ட்டாவும் இருக்கனும்…ஆனா, எப்ப எந்தமாதிரி நடந்துக்கனும்ங்கறது அவளுக்கும் தெரிஞ்சிருக்கனும்”\\

சூப்பர்ப்;))\\

Thanks divya…

Divyapriya said...

விஜய் said...

நான் இந்தப் பகுதியை இன்னும் 3-4 தடவை படிச்சுட்டுத்தான் கமண்டுவேன்.
காலங்கார்த்தால இப்படி மனசை பிழிஞ்சிட்டீங்களே??

3-4 தடவையா? புல்லரிக்க வச்சிட்டீங்க ;-)
படிச்சுட்டு, மறக்காம comment உம் அடிச்சிடுங்க…
----------------------------

Sri said...

// ஹை எனக்கும் ஷிவானின்னு ஒரு பிரென்ட் இருக்கா அவளும் நார்த் இந்தியன் தான்..!! :))//

ஷிவா மாதிரியே ஒரு பொண்ணு பேருன்ன உடனே தோனினது ஷிவானி தான்…ஷிவானின்னு பேரு வச்சனால அவள நார்த் இன்டியம் ஆக்கிடேன் :-)

// அப்பறம் ஷிவா பேசற டையலாக்ஸ் எல்லாம் சூப்பர்..!! :))//

நன்றி தங்கச்சி…

----------------------------

Murugs said...
\\
//“என் ட்ரீம் கேர்ள் ஒரு ஐஞ்சு வயசு பொண்ணு மாதிரி குழந்தைதனமா இருக்கனும்… ஒரு ஐம்பது வயசு பாட்டி மாதிரி மெச்சூர்ட்டாவும் இருக்கனும்…ஆனா, எப்ப எந்தமாதிரி நடந்துக்கனும்ங்கறது அவளுக்கும் தெரிஞ்சிருக்கனும்”//

எல்லாருக்கும் இதே ஆசை தானா ;)\\

உங்களுக்குமா? வாழ்த்துக்கள் ;-)

// ப்ரவீனுக்கு ஒரு கொட்டு. கதய கேக்காம அது என்ன சின்ன புள்ள தனமா கேள்வி கேக்கறது ;)//
அதானே ;-)

\\
//“சின்ன புள்ள மாதிரியா? இல்ல, I cried like a Man”//

ரொம்ப டச்சிங் லைன். I like this :)\\

நன்றி Murugs

Divyapriya said...

Raghav said...

// ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் திவ்யப்ரியா. மேகத்தை எட்டியுள்ள விரிந்த சிறகுகள், விண்வெளியை அடைய மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.//

ஹப்பா…கணக்கு ஒரு வழியா டாலி ஆய்டுச்சா…இருந்தாலும், எனக்கு நானே அநியாயத்துக்கு பல்பு குடுத்துடேனே :-(
உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி ராகவ்…தொடர்ந்து உங்க ஆதரவ குடுங்க, சீக்கரமே விண்வெளியை நோக்கி பறக்க ஆரம்பிக்கலாம்…

------------------------
RVC said...
\\
//“சின்ன புள்ள மாதிரியா? இல்ல, I cried like a Man” //

மிகவும் ரசித்த வரிகள். கல்லூரி காலத்தில் தன் நண்பன் அழுவதை எந்த ஒரு பெண்ணும் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டாள். என் பேட்ச்சில் ஒரு பெண் தன் நண்பனின் காதலை நிராகரித்த ஒருத்திக்கு விட்ட அறை என் காதுக்குள் இன்னும் ரீங்காரமிடுகிறது. பதிவுக்கும் இந்த நிகழ்வுக்கும் தொடர்பில்லையெனினும் மேற்குறிப்பிட்ட வரிகள் எனக்கு இந்த சம்பவத்தை நினைவுபடுத்தியதால் பகிர்ந்தேன்.
தொடருங்கள் :)//
இங்கயும் ஒரு Flash back ஆ?
முதல் வருகைக்கு ரொம்ப நன்றி RVC, தொடர்ந்து வாங்க….

Vijay said...

\\“என் ட்ரீம் கேர்ள் ஒரு ஐஞ்சு வயசு பொண்ணு மாதிரி குழந்தைதனமா இருக்கனும்… ஒரு ஐம்பது வயசு பாட்டி மாதிரி மெச்சூர்ட்டாவும் இருக்கனும்…ஆனா, எப்ப எந்தமாதிரி நடந்துக்கனும்ங்கறது அவளுக்கும் தெரிஞ்சிருக்கனும்” ன்னு சொன்னேன்.\\
Excellent!!

\\’நிரு, you are so much adorable when you are kiddish and so much admirable when you get practical’\\
திவ்யப்ரியா,
எங்கிலிபீஷுல கூட கவிதை படைப்பீங்களா? Wonderful.

\\ஆனா, காலேஜ்ல பசங்களோட சேந்துகிட்டு, ஆண்டி கடலை ஃபோர்ஸ் \\
என்னது அன்டி-கடலை ஃபோர்சா. இவங்களை தேடிப்போய் மிதிக்கணும்!

\\“இந்த மாதிரி மனசுக்குள்ள பன்னீர் தெளிச்ச பல அழகான உணர்வுகளுக்கு, காதல்ங்குற பேர குடுக்காம, ’என் முதல் க்ரஷ்” என்ற ஒரு சமாதான உடன்படிக்கைய நானே ஏற்படுத்திகிட்டேன்…ஆனா, எனக்குள்ள பூத்த அந்த உணர்வுகளுக்கு எப்ப ஒரு பேர தேடினேனோ, அந்த நிமிஷமே எனக்குள்ள காதல் மலர்ந்திருச்சுன்னு எனக்கே பின்னாடி தான் தெரிஞ்சுது…”\\
ஒரு ஆண் மனதில் ஏற்படும் அனுபங்களை இதற்கு மேல் அழகாக வர்ணிக்க முடியாது!

\\கலங்கி போன என் கண்கள்ள இருந்த காதல, நான் சொல்லாமையே அவ உணர்ந்துட்டான்னு எனக்கு தெரிஞ்சுது. \\

இந்த வரிகளை படிக்கும் போது என் கண்களும் கசிந்தன!

\\“சின்ன புள்ள மாதிரியா? இல்ல, I cried like a Man”\\
Wow!! என்ன சொல்லறதுன்னே தெரியலை!!

Divya said...

@Divyapriya

\\Divya said...
// உரையாடல்களிலேயே இந்த பகுதியை நகர்த்திருந்தாலும்......ரொம்ப இயல்பா, யதார்த்தமான ,உணர்வு பூர்வமான டயலாக்ஸ் படிக்க ரொம்ப நல்லாயிருந்தது திவ்யப்ரியா:))//

ரொம்ப நன்றி திவ்யா…முதல் பகுதில குடுத்த hype அ இதுல காப்பாத்திட்டேனா?\\


you hv maintained the hype in this part too , keep going Divyapriya:))

Anonymous said...

வசனங்களிலேயே கதையை அழகாக நகர்த்தி செல்கிறீர்கள்!
ப்ளாஷ்பேக் நல்லாவே இருக்கு.....? அதுலேயும் சில வசனங்கள் அட்டகாசம். வாழ்த்துகள்.

ரிஷி (கடைசி பக்கம்) said...

pinnitinga thalaivaaa

Divyapriya said...

@விஜய்
அடடா, இவ்ளோ தூரம் ரசிச்சுடீங்களா? ரொம்ப நன்றி விஜய்...

@Divya

Thanks a lot divya...

@மதி
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி, கதை முழுதும் flash back தான் ;-)

@கடைசி பக்கம்
முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் ரொம்ப நன்றி...தொடர்ந்து படிங்க...