Saturday, September 6, 2008

திண்ணை

இந்த பதிவை போட என்னை விரும்பி அழைத்த தோழி ரம்யா விற்க்கு முதல் நன்றி.


எல்லோரும் சொல்லும் அதே வசனம் தான், “எங்க வீட்ல திண்ணை இல்லை, திண்ணைன்னு சொன்னா தாத்தா/பாட்டி வீட்டு திண்ணை தான் ஞாபகம் வருது.” இங்கயும் அதே கதை தான்.சாதாரணமா, திண்ணை வீட்டுக்கு வெளிய தான் இருக்கும், ஆனா எங்க பாட்டி வீட்ல திண்ணை வீட்டுக்கு உள்ள இருக்கும்! கேட்டை திறந்து உள்ளே போனால், ஹால் போன்றதொரு அமைப்பு, அதில் பாதி இடம் மேல் கூரை (ceiling) இல்லாமல் இருக்கும், பாதி அறை மேல் கூரையோட இருக்கும். பழைய காலத்துல திண்ணைய வீட்டுக்கு வெளிய வச்சு கட்டி இருப்பாங்க போல, பல மாற்றங்கள கண்ட அந்த வீட்ல, திண்ணை மட்டும் மாறாம இன்னும் அப்படியே இருக்கு.இரண்டு பேர் தாராளமாக படுத்து தூங்கும் அளவுக்கு பெரிய திண்ணை. அந்த திண்ணையின் மேல் ஒரு கட்டில், மேல் உத்தரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கயிறு…B.P யில் தலை சுற்றி கீழே விழுந்து விடாமல் இருக்க, அந்த கயிற்றை பிடித்துக் கொண்டு, காலை நீட்டி அமர்ந்திருக்கும் என் பாட்டி…பாட்டிய பற்றின எத்தனையோ எண்ணற்ற நினைவுகளில், முதலில் என் கண் முன் தோன்றும் காட்சி இது தான்.பாட்டி வீட்டுக்கு போகும் போதெல்லாம், நாங்கள் வீட்டுக்குள் நுழைவதற்க்கும் முன்னே, திண்னையில் இருந்து ஒலிக்கும், அங்கே கட்டிலில் அமர்ந்திருக்கும் பாட்டியின் பலத்த வரவேற்பு…கடைசியாக நான் பாட்டிய பார்க்க சென்ற போது, என்னை வெகு நாள் கழித்து பார்த்தற்கான, எந்த வித உற்சாகமும் காட்டாமல், வெகு சாதாரணமாக என்னோடு ஒரு 5 நிமிடம் உறையாடிய பாட்டியை, என்ன இது என்று ஆச்சர்யத்தோடும், ஏமாற்றத்தோடும் நான் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென்று பக்கத்தில் யாரையோ பார்த்து விட்டு, என்னை தொட்டுப் பார்த்து விட்டு, பாட்டி “தங்கமயிலு…நீயா? நான் ராதான்னு இல்ல நினைச்சுட்டேன், இப்ப தான் வந்தியா, சொன்னா தான எனக்கு தெரியும், கண்ணு தெரியுதா ஒன்னா…” (ராதா, பாட்டி வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கும் ஒரு உறவுகார பெண்) என்று அதே உற்சாகத்தோடு பாட்டி சொல்லவும் தான், சுருங்கி போவதற்க்கு தயாராக இருந்த என் முகம் மலர்ந்தது.பாட்டி எங்களை கொஞ்சுவதற்கு உபயோகப் படுத்தும் வார்த்தை, ’தங்கமயிலு’…அதை விட, மிகுந்த சினம் கொள்ளும் வேளையில், அவர் எங்களை திட்டுவதற்க்கு உபயோகிக்கும் வார்த்தை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்…”அறிவுகெட்ட மானே!!!” இது தான் அந்த வார்த்தை…திட்டும் போது கூட ’மானே’ என்று திட்டுவதற்க்கு, நம்மை பெற்ற அன்னை, தந்தையால் கூட முடியாது, அவர்களை பெற்றவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்!
ஒரு முறைகூட, அந்த திண்ணையில் பாட்டியுடன் அமர்ந்து பேசியாதாக நினைவே இல்லை…என்னேரமும், பாட்டி மடியில் படுத்துக் கொண்டோ, இல்லை பாட்டியின் தோள் மேல் சாய்ந்து கொண்டோ பேசியதாக தான் ஞாபகம்.கடைசியாக, அதே திண்ணையில் அமர்ந்து கொண்டு, பாட்டியை புகைப்படம் எடுக்க யத்தினத்த போது, “என்னை எதுக்கு படம் எடுக்குற? நாளைக்கே குழிக்குள்ள போக போறவளுக்கு போட்டோ எதுக்கு? வேண்டாம்…” என்று அவர் தடுத்த போது எடுத்த படம்.தொண்ணூறுகளின் தொடக்கத்திலோ , என்பதுகளின் முடிவிலோ இருந்த என் அழகான பாட்டி…
பாட்டி இறந்து, இரண்டு நாள் கழித்து வெறிச்சோடி இருந்த அந்த திண்ணையை எதேச்சையாக கடந்து சென்ற போது, ஒரு நொடி, ஒரே ஒரு நொடி மட்டும், ’ஐயோ! பாட்டியை எங்க காணோம்?’ என்று மனதிற்க்குள் தோன்றிய அந்த ஒரு பகீர் உணர்வை, என்றுமே மறக்க முடியாது.பாட்டி போன பிறகு ஒரே மாதத்தில், ஜே ஜே என்று, எப்போதும் சொந்தங்களும், தெரிந்தவர்களும் வருவதும், போவதுமாய் இருந்த அந்த வீட்டை, எதிர் பாராமல் நடந்த ஏதேதோ சம்பவங்களால், என் மாமாவும் அத்தையும் விட்டு செல்லும் நிலைமையும் வந்து சேர்ந்தது. ஆனால், மாமா வீடு மாற்றி செல்லும் விஷயம் கேள்விப் பட்ட போது, எனக்கே ஆச்சர்யமாக, எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாகவே இருந்தது. என் அம்மாவின் பிறந்த வீடு…அவருக்கு மிகவும் பிடித்த வீடு…இனி பெரும்பாலும் பூட்டியே கிடக்க போகுறது, என்பது எல்லாவற்றயும் தாண்டி, பாட்டி இல்லாத அந்த வீட்டுக்கு மறுபடியும் போக தேவையில்லை என்று கொடூரமாக குதூகலித்து தான் போனேன்.இன்றும் கூட, அந்த திண்ணையின் விளிம்பில்…அந்த கயிற்றின் நுனியில்…என் பாட்டியின் உயிர் ஒட்டிக் கொண்டிருப்பதாய் தான் தோன்றுகிறது. அந்த கயிற்றை பிடித்துக் கொண்டு, தலையை தாழ்த்தி, காலை நீட்டி பாட்டி அதே இடத்தில் இன்றும் அமர்ந்து கொண்டிருப்பதாய் தான் தோன்றுகிறது. பாட்டி இல்லாத அந்த வீட்டுக்குள் சென்று, அவற்றை எல்லாம் பொய்யாக்க எனக்கு விருப்பமில்லை.திண்ணை பற்றி எழுத சொன்னால், வேறு ஏதேதோ எழுதி விட்டேன். திண்ணை என்றவுடம் எனக்கு உடனே தோன்றியது, பாட்டி தன் கடைசி காலத்தை கழித்த அந்த திண்ணை தான்…சரி, இந்த விளையாட்டை தொடர யாரை அழைப்பது?வித விதமாய், மனதை கொள்ளை கொள்ளும் கவிதைகள் சொல்லும் சரவணக்குமார் ரயும்,


இன்னும் திண்ணை பதிவு போடாமல் டபாய்த்துக் கொண்டிருக்கும், வலைப்பூ உலகின் முடி சூடா ராணி…கதை சொல்லி நம் மனசுக்குள் மத்தாப்பு கொளுத்தும் திவ்யா வயும் விரும்பி அழைக்கிறேன்.

47 comments:

Hariks said...

ரொம்ப‌ சென்டியா எழுதி இருக்கீங்க‌ :)

MSK / Saravana said...

தங்கமயிலு..

என்ன மாட்டிவிட்டுட்டீங்களே???

Hariks said...

திவ்யாவ‌ நான் ஏற்க‌ன‌வே அழைச்சிட்டேனுங்க‌. அவ‌ங்க‌ தான் இன்னும் எழுதாம‌ இருக்காங்க‌

MSK / Saravana said...

//திண்ணை பற்றி எழுத சொன்னால், வேறு ஏதேதோ எழுதி விட்டேன். திண்ணை என்றவுடம் எனக்கு உடனே தோன்றியது, பாட்டி தன் கடைசி காலத்தை கழித்த அந்த திண்ணை தான்…//

இதுதான் திண்ணை ஞாபகம்.. இதற்காகத்தான் இந்த தொடர் விளையாட்டு ஆரம்பிருத்திருக்க கூடும்..

MSK / Saravana said...

//Murugs said...

ரொம்ப‌ சென்டியா எழுதி இருக்கீங்க‌ :)//

ரிப்பீட்டேய்..

MSK / Saravana said...

//வித விதமாய், மனதை கொள்ளை கொள்ளும் கவிதைகள் சொல்லும் சரவணக்குமார் ரயும், //

இவ்ளோ பில்டப்பா..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

Ramya Ramani said...

உணர்ச்சிகள் மிகுந்த ஒரு அருமையான திண்ணை பதிவை எழுதிய அருமை தோழியே நன்றி :)

ஸ்ஸ்ஸ் அப்பா ஒரு லைன் தமிழ்ல எழுதறதுகுள்ளே சாமி..!!!

Ramya Ramani said...

உங்க பாட்டி கொஞ்சறது நல்லா இருக்கு திவ்யப்ரியா..

ஐம்பதாவது போஸ்டுக்கு வாழ்த்துக்கள் :)

தொடர்ந்து கலக்குங்க:))

Divya said...

50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் திவ்யப்ரியா!!!

Divya said...

செண்டி & டச்சிங் 'திண்ணை' பதிவு எழுதி மனசை நெகிழ வைச்சுட்டீங்க!!

பாராட்டுக்கள்!!

Divya said...

\ரம்யா மாட்டி விட்டும் கூட, இன்னும் திண்ணை பதிவு போடாமல் டபாய்த்துக் கொண்டிருக்கும், வலைப்பூ உலகின் முடி சூடா ராணி…கதை சொல்லி நம் மனசுக்குள் மத்தாப்பு கொளுத்தும் திவ்யா வயும் விரும்பி அழைக்கிறேன்.\\

ஆஹா.....நான் டபாய்ச்சுட்டிருக்கிறேன்னு இப்படி பப்ளிக்கா சொல்லிபுட்டிங்களே :((

முருக்ஸும் இதே தலைப்பில் பதிவெழுத அழைச்சிருக்கார்,ஆனா.....எனக்கு தான் என்ன எழுதுறதுன்னே தெரியாம, முழிச்சுட்டிருக்கிறேன்:(((

Divya said...

\வலைப்பூ உலகின் முடி சூடா ராணி…கதை சொல்லி நம் மனசுக்குள் மத்தாப்பு கொளுத்தும் திவ்யா வயும் விரும்பி அழைக்கிறேன்.\\\\

கொடுத்த காசுக்கு மேலயே கூவிட்டீங்களே அம்மனி!!!!

மனசு குளிர்ந்து போச்சு:))

Divya said...

\ Murugs said...
திவ்யாவ‌ நான் ஏற்க‌ன‌வே அழைச்சிட்டேனுங்க‌. அவ‌ங்க‌ தான் இன்னும் எழுதாம‌ இருக்காங்க‌\\

நீங்களும் மறக்கமாட்டீங்க போலிருக்குதே:(
எழுத ட்ரை பண்றேன் முருக்ஸ்:-)

முகுந்தன் said...

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

முகுந்தன் said...

ரொம்ப உணர்வுபூர்வமாக எழுதி இருக்கிறீர்கள்.எனக்கு என் பாட்டி ஞாபகம் வந்துவிட்டது...

சேவியர் எழுதிய ஒரு கவிதை ... படித்து பாருங்கள்....

http://xavi.wordpress.com/2008/06/20/grandmother/

முகுந்தன் said...
This comment has been removed by the author.
ஆயில்யன் said...

//பாட்டி இறந்து, இரண்டு நாள் கழித்து வெறிச்சோடி இருந்த அந்த திண்ணையை எதேச்சையாக கடந்து சென்ற போது, ஒரு நொடி, ஒரே ஒரு நொடி மட்டும், ’ஐயோ! பாட்டியை எங்க காணோம்?’ என்று மனதிற்க்குள் தோன்றிய அந்த ஒரு பகீர் உணர்வை, என்றுமே மறக்க முடியாது.//

உணர்ந்திருக்கிறேன் :(

MSK / Saravana said...

உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி என் தளத்தில் காத்திருக்கிறது..
வந்து பாருங்கள்..

Vijay said...

திவ்யப்ரியா,
உங்க போஸ்டிங்கெல்லாம் படிக்கறப்ப சிரிச்சிக்கிட்டே தான் படிப்பேன். ஆனா, இந்த தடவை மனசு ஏனொ ரொம்பவே கனம்ம இருக்கு.
சிக்கன் பாக்ஸ் போட்டு இந்த கனத்தை நீக்குங்க.

Smriti said...

Idha naan veetla illaadha last weekend podhu adichiyoo??? anyway oru documentary feel varadhu padicha... But knowing the fact of hommach u love your grandma enakku idhula pudhusa jaasthi therile!

Unknown said...

:((

Unknown said...

:))

Raghav said...

ம்ம்.. இந்தியா வந்தவுடனே.. திண்ணையப் பத்தியும், பாட்டியப் பத்தியும் ஞாபகப்படுத்தீட்டீங்க..

Raghav said...

அப்புறம் இன்னொன்னு.. 50 வது பதிவுன்னா சொல்றீங்க.. நான் கூட்டிப் பாத்தேன் 49 தானே( 12 in 2007 and 37 in 2008 including this one) வருது..

Divyapriya said...

@Murugs
//ரொம்ப சென்டியா எழுதி இருக்கீங்க :)//

ஆமா Murugs...ரொம்ப சென்டியா ஃபீல் பண்ணிட்டேன்…
// திவ்யாவ நான் ஏற்கனவே அழைச்சிட்டேனுங்க. அவங்க தான் இன்னும் எழுதாம இருக்காங்க//

நான் தாங்க ரம்யா அழைச்சாங்கன்னு நினைச்சு confuse ஆய்டேன்…:-)

@Saravana Kumar MSK
//தங்கமயிலு..

என்ன மாட்டிவிட்டுட்டீங்களே???\
//

அதான் பழிக்குக் பழி வாங்கிட்டீங்களே…விடுங்க விடுங்க, ப்ளாக் உலகத்துல இதெல்லாம் சகஜம் :-)

//இவ்ளோ பில்டப்பா..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//

;-)

Divyapriya said...

@ramya
//உங்க பாட்டி கொஞ்சறது நல்லா இருக்கு திவ்யப்ரியா..

ஐம்பதாவது போஸ்டுக்கு வாழ்த்துக்கள் :)

தொடர்ந்து கலக்குங்க:))//
-------------
//Divya said...
50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் திவ்யப்ரியா!!!
//

தப்பு நடந்து போச்சு ரம்யா/திவ்யா, தப்பு நடந்து போச்சு…ராகவ் commenta பாருங்க…

-------------
//Divya said...
\வலைப்பூ உலகின் முடி சூடா ராணி…கதை சொல்லி நம் மனசுக்குள் மத்தாப்பு கொளுத்தும் திவ்யா வயும் விரும்பி அழைக்கிறேன்.\\\\

கொடுத்த காசுக்கு மேலயே கூவிட்டீங்களே அம்மனி!!!!

மனசு குளிர்ந்து போச்சு:))//

சு….இதெல்லாம் ரகசியம்…இப்படி போட்டு உடச்சுட்டீங்களே ;-)

Divyapriya said...

//முகுந்தன் said...
ரொம்ப உணர்வுபூர்வமாக எழுதி இருக்கிறீர்கள்.எனக்கு என் பாட்டி ஞாபகம் வந்துவிட்டது...

சேவியர் எழுதிய ஒரு கவிதை ... படித்து பாருங்கள்....

http://xavi.wordpress.com/2008/06/20/grandmother///

சேவியரின் கவிதையை பார்த்தேன்…மிக அழகான, அதே சமயம் இயல்பான கவிதை…அதில் உங்க பின்னூட்டத்தையும் பார்த்தேன்…

//இன்றும் என் அம்மா சொல்லுவாள், நீ நன்றாக இருப்பதை பார்க்க
அவளுக்கு கொடுத்து வைக்க வில்லை என்று,
நான் சொல்லுவேன் “எனக்கு கொடுத்து வைக்கவில்லை//

நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை முகுந்தன்...

Divyapriya said...

// ஆயில்யன் said...
//பாட்டி இறந்து, இரண்டு நாள் கழித்து வெறிச்சோடி இருந்த அந்த திண்ணையை எதேச்சையாக கடந்து சென்ற போது, ஒரு நொடி, ஒரே ஒரு நொடி மட்டும், ’ஐயோ! பாட்டியை எங்க காணோம்?’ என்று மனதிற்க்குள் தோன்றிய அந்த ஒரு பகீர் உணர்வை, என்றுமே மறக்க முடியாது.//

உணர்ந்திருக்கிறேன் :(//

அது நிஜமான வலி ஆயில்யன்…உங்கள் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் ரொம்ப நன்றி
-----------------------------------
//விஜய் said...
திவ்யப்ரியா,
உங்க போஸ்டிங்கெல்லாம் படிக்கறப்ப சிரிச்சிக்கிட்டே தான் படிப்பேன். ஆனா, இந்த தடவை மனசு ஏனொ ரொம்பவே கனம்ம இருக்கு.
சிக்கன் பாக்ஸ் போட்டு இந்த கனத்தை நீக்குங்க.//

நீங்க சொல்லிட்டீங்கள்ள…;-)

Divyapriya said...

// Smriti said...
Idha naan veetla illaadha last weekend podhu adichiyoo??? anyway oru documentary feel varadhu padicha... But knowing the fact of hommach u love your grandma enakku idhula pudhusa jaasthi therile!//

:((

-----------------------------------

@ Sri said...
Mixed reactions? Me too…

Divyapriya said...

@ Raghav said...
ம்ம்.. இந்தியா வந்தவுடனே.. திண்ணையப் பத்தியும், பாட்டியப் பத்தியும் ஞாபகப்படுத்தீட்டீங்க..

வருக. வருக…தங்கள் வரவு நல்வரவாகுக…:-)

//அப்புறம் இன்னொன்னு.. 50 வது பதிவுன்னா சொல்றீங்க.. நான் கூட்டிப் பாத்தேன் 49 தானே( 12 in 2007 and 37 in 2008 including this one) வருது..
//

இப்ப தான் பாத்தேன்…நான் drafts யவும் சேத்து எண்ணிட்டேன் போல இருக்கு….வேதனை…வெட்கம்…அவமானம்...

சரி, கூடிய சீக்கரத்துல ஐம்பதோட வரேன்…

முகுந்தன் said...

Raghav said...

//ம்ம்.. இந்தியா வந்தவுடனே..//

Welcome back to heaven!!!

Raghav said...

//“எங்க வீட்ல திண்ணை இல்லை, திண்ணைன்னு சொன்னா தாத்தா/பாட்டி வீட்டு திண்ணை தான் ஞாபகம் வருது.” //

பாட்டி சொத்து பேத்திக்கு தானே.. ஸோ கவலைய விடுங்க.. அது உங்க திண்ணை தான்..

Raghav said...

//என்பதுகளின் முடிவிலோ இருந்த என் அழகான பாட்டி…/

பாட்டி செம க்யூட்.. பாட்டி கதைகள் பத்தி தொடர் ஆரம்பிக்க வேண்டியது தானே..

Raghav said...

//வருக. வருக…தங்கள் வரவு நல்வரவாகுக…:-)///

டாங்கீஸ் தி.பி..

//இப்ப தான் பாத்தேன்…நான் drafts யவும் சேத்து எண்ணிட்டேன் போல இருக்கு….வேதனை…வெட்கம்…அவமானம்...//

உடுங்க.. இதெல்லாம் சகஜம் தான்... வேதனை சரி.. அவமானம் சரி.. இந்த வெட்கம் தான் இடிக்குது.. :) (டிஸ்கி: ஸ்மைலி போட்டுள்ளதை கவனிக்கவும்)

அப்புறம் மக்களே, நான் போன பதிவுல தி.பி, கணக்குலயும் வீக்கோன்னு கேட்டுருந்த கேள்விக்கும்,இப்போ ஐம்பதாவது பதிவ பத்தி சொன்னதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு தாழ்மையுடன் சொல்லிக்கிறேன். :)

Raghav said...

//Welcome back to heaven!!!//

நன்னி முதலாளி.. heavanஆ இல்ல microwave oven ஆ ன்னு இனிமே தான் தெரியும்... :)

Divyapriya said...

Raghav said...

// பாட்டி சொத்து பேத்திக்கு தானே.. ஸோ கவலைய விடுங்க.. அது உங்க திண்ணை தான்..//

ஐய்யோ, எங்க மாமா சண்டைக்கு வந்துட போறாறு ;-)


// பாட்டி செம க்யூட்.. பாட்டி கதைகள் பத்தி தொடர் ஆரம்பிக்க வேண்டியது தானே..//

ஆமா என்ன மாதிரியே ;-) பாட்டி எனக்கு சொன்ன கதைகள் எல்லாம் ராமாயணமும், மஹாபாரதமும் தான் :-)

// உடுங்க.. இதெல்லாம் சகஜம் தான்... வேதனை சரி.. அவமானம் சரி.. இந்த வெட்கம் தான் இடிக்குது.. :) (டிஸ்கி: ஸ்மைலி போட்டுள்ளதை கவனிக்கவும்)//

முத்து படத்துல நம்ம மீனா சொல்ற dialogue ;-)

// அப்புறம் மக்களே, நான் போன பதிவுல தி.பி, கணக்குலயும் வீக்கோன்னு கேட்டுருந்த கேள்விக்கும்,இப்போ ஐம்பதாவது பதிவ பத்தி சொன்னதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு தாழ்மையுடன் சொல்லிக்கிறேன். :)//

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…நான் 10th, +2 ரெண்டுலயும் maths ல 200/200 வாங்கி இருக்கேன்னு தாழ்மையுடன் சொல்லிக்கிறேன் ;-)

// நன்னி முதலாளி.. heavanஆ இல்ல microwave oven ஆ ன்னு இனிமே தான் தெரியும்... :)//

ஆமா, நீங்க சென்னைக்கு போய்டீங்களா?

Divyapriya said...
This comment has been removed by the author.
Anonymous said...

read both ur latest blogs...really touched by ur thinnai story..u had brought ur emotions extremely well through ur words ...absolutely loved it...:-)..I would rate this as ur best blog till date...pullarika vekkara appo appo indha maari :-)

Anonymous said...

i loved this Paragraph from thinnai :-)


இன்றும் கூட, அந்த திண்ணையின் விளிம்பில்…அந்த கயிற்றின் நுனியில்…என் பாட்டியின் உயிர் ஒட்டிக் கொண்டிருப்பதாய் தான் தோன்றுகிறது. அந்த கயிற்றை பிடித்துக் கொண்டு, தலையை தாழ்த்தி, காலை நீட்டி பாட்டி அதே இடத்தில் இன்றும் அமர்ந்து கொண்டிருப்பதாய் தான் தோன்றுகிறது. பாட்டி இல்லாத அந்த வீட்டுக்குள் சென்று, அவற்றை எல்லாம் பொய்யாக்க எனக்கு விருப்பமில்லை.

Divyapriya said...

@ Badri

Hmmm yeah...she ll be sitting like that, with so much of pain in her face, she s be holding that kayiru, sometimes it’ll look like, she s waiting for her last day to come...one thing, which is really bad in human life is, the days u r waiting for your own death :-(

Raghav said...

//ஆமா, நீங்க சென்னைக்கு போய்டீங்களா?//

நானா?? சென்னைக்கா?? நோ வே.. வேலைல வறுத்தெடுக்கப் போறாங்கன்னு சொன்னேன்..

@முகுந்தன், நான் microwave oven னு சொன்னவுடனே சென்னைன்னு சொல்றாங்க.. இதெல்லாம் கேக்க மாட்டீங்களா.. ஆட்டோ அனுப்பனும்னா சொல்லுங்க.. இங்க இருந்தே அனுப்பிருவோம்..

முகுந்தன் said...

//@முகுந்தன், நான் microwave oven னு சொன்னவுடனே சென்னைன்னு சொல்றாங்க.. இதெல்லாம் கேக்க மாட்டீங்களா.. //

அதானே ? நான் கொஞ்சம் அசால்டா இருந்துகினேன்... ஏன்னா மே?
சென்னைனா அவ்வளவு கேவலா பூடுச்சா? கத கந்தலாயிடும் :-)

இன்னா ராகவ் நைனா? சென்னை பாஷ கரெக்டா கீதா?

முகுந்தன் said...

////ஆமா, நீங்க சென்னைக்கு போய்டீங்களா?//


என்ன திவ்யப்ரியா, இப்படி சொல்லிட்டீங்க.. நான் மாட்ரிட்லிருந்து வந்ததும் நெஜமாவே சென்னை அதைவிட ஜில்லுனு இருந்தது...

Raghav said...

//சென்னை பாஷ கரெக்டா கீதா? //

கீதா யாருங்கண்ணா ?? உங்க பிரண்டா ??

Raghav said...

//நெஜமாவே சென்னை அதைவிட ஜில்லுனு இருந்தது...//

ஸ்ஸ்.. முடியல.. நீங்க சென்னை தமிழன் தான் ஒத்துக்குறோம்..அதுக்காக இப்புடியா...

முகுந்தன் said...

//கீதா யாருங்கண்ணா ?? உங்க பிரண்டா ??//

ஹலோ ? நக்கலு?

அது யாருன்னா என் கூட ஒன்னாங்கிளாஸ் படிச்சா கொய்ந்த...
சீ. என்ன இது கூவம் மாதிரி வருது பாஷை :-)

முகுந்தன் said...

//ஸ்ஸ்.. முடியல.. நீங்க சென்னை தமிழன் தான் ஒத்துக்குறோம்..அதுக்காக இப்புடியா...
//

No Raghav, when I reached chennai it was around 32 degrees whereas
Madrid was around 38...