Wednesday, November 12, 2008

அன்புள்ள பாலு…

ஒரே பொண்ணு கல்யாணத்தையும் முடிச்சாச்சுபையன், அவனும் நல்ல வேலைல கை நிறையா சம்பாதிக்கிறான்பல வருஷமா கஷ்டப்பட்டு தேடி, ஒரு நல்ல வரனா பாத்து, கல்யாணமும் பண்ணியாச்சுஅது ஆச்சு ஆறு மாசம்

 

ஒரு கட்டத்துக்கு மேல, நாம வாழ்றதே குழந்தைங்களுக்காகதாங்கற மாதிரி தோணுதில்ல? பையனும் வெளியூர்ல இருக்கான், பொண்ண கட்டி குடுத்தாச்சுரொம்ப வெறுமையா இருக்கு...யோசிச்சு பாத்தா, இவங்கெல்லாம் வாழ்கைல பாதிக்கு மேல வந்தவங்க தான? அதுக்கு முன்னாடி இருந்த என்னோட வாழ்கை, என்னோட வட்டம், என்னோட நண்பர்கள், என்னோட சந்தோஷம் இதெல்லாம் எங்க? இப்ப அதெல்லாம் இல்லைன்னு சொல்லமுடியாது, அதுக்காக முழுமையா இருக்குன்னும் சொல்லிற முடியாதே!!!

 

இதோஇன்னும் ஒரு வருஷத்துல பணி நிரந்தர ஓய்வும் வந்துடும்அதுக்கப்புறம் என்ன? அக்கடான்னு நியூஸ் பேப்பர் உண்டு, புத்தகங்கள் உண்டுன்னு உக்காற வேண்டியது தான்

 

புத்தகம்ன்னு சொன்ன உடனே ஞாபகம் வருதுஎன் நண்பன் பாலு, எப்பயும் எதாவது புத்தகத்த படிச்சிட்டு வந்து அதை பத்தி மணிக்கனக்கா பேசுவான்அதெல்லாம் அப்பங்கஅது ஒரு காலம், வேற ஊர்ல வேலை கிடச்சு, ன்னா தங்கி, சமைச்சு சாப்பிட்டு, ராத்திரி மொட்டை மாடில கதை பேசிகிட்டு...முப்பது வருஷம் இருக்குமா? ஆமா இருக்கும்...அதுக்கப்புறம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பாதைல...ஆனா, பாலு மட்டும் அப்டியே மாறாம தான் இருந்தான்.

 

பாலுவ பத்தி சொல்லனும்னா எத்தனையோ இருக்கு...

 

இந்தியன் வங்கில மேலாளரா இருந்தாலும், வங்கி ப்யூனுக்கு இருக்குற ஆடம்பரம் கூட இல்லாத அவன் எளிமையை சொல்றதா? இல்ல,

 

கடைல இருந்து பொட்டலம் மடிச்சு வர நூல கூட சேத்து கட்டி வச்சு, பெரிய நூல்கண்டு செஞ்சு வச்ச அவன் சிக்கனத்தை சொல்றதா? இல்ல,

 

அந்த நூல்கண்ட மறுபடியும் அந்த கடைக்காரருக்கே கொடுத்த அவன் தாராள மனச சொல்றதா? இல்ல,

 

மூணு வருத்துக்கு ஒரு தடவ, அவனே பணி இடமாற்றம் கேட்டு, ஊர் ஊரா போய், எல்லா ஊரையும், எல்லா மனிதர்களையும், தன் சொந்தமா நேசிச்ச  குணத்த சொல்றதா? இல்ல,

 

முப்பது வருஷமா, வருஷம் தவறாம, ஒவ்வொரு பொங்கலுக்கும், புது வருஷத்துக்கும், அவன் எண்ணத்திலும், வண்ணத்திலும் உருவாக்கி,  அன்பும், தனித்துவமும் நிரம்பி வழியும் வாழ்த்து அட்டைகள் அனுப்புவானே, அத பத்தி சொல்றதா?

 

பாலு எனக்கு எழுதின கடிதங்களயே ஒரு புஸ்தகமா போடலாம்அப்டி ஒரு ரசிகன்...அவன், பார்த்த, ரசிச்ச, அனுபவிச்ச ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்னு விடாம எழுதி அனுப்புவான்

அந்தந்த ஊர் காரங்க கூட, அவ்ளோ அழகா அந்த ஊற பத்தி வர்ணிப்பாங்கன்னு சொல்ல முடியாது...அவன எனக்கு வால்பாறை பாலுவா தெரியும்,  தென்காசி பாலுவா தெரியும், காரைக்குடி பாலுவா தெரியும், சென்னை பாலுவா தெரியும், ஏன்? டெல்லி பாலுவா கூட தெரியும்...இப்ப கொஞ்ச நாளா அவன் மதுரை பாலு...வயசு ஆயிடுச்சு, பொண்ணுங்க படிப்பு வேற, ஸ்கூல் மாதிரி காலேஜ் எல்லாம் மாத்த முடியாது...அதான், போதும்டா ஊர் சுத்தினதுன்னு மதுரைலையே இருந்துட்டான்.

 

'அன்புள்ள ரகு' ன்னு ஆரம்பிச்சு இந்த முப்பது வருஷமா அவன் எனக்கு எழுதின கடிதங்கள், அனுப்பின வாழ்த்து அட்டைகள் ஏராளம்...இன்னும் எல்லாமே பத்திரமா வச்சிருக்கேன்...

இந்த அவசர உலகத்துல யாரு கடுதாசி எல்லாம் போடுறா? நான், அவன் அனுப்பின பாதி லெட்டருக்கு தான் பதில் எழுதுவேன். மத்தபடி எப்பயாச்சும், ஃபோன்ல நலம் விசாரிக்கதோட சரி.

 

இப்படி பல வருஷமா விடாம தொடர்ந்த எங்க நட்பு மேல கொஞ்சம் பெருமை தாங்க எனக்குஅந்த ஒரே ஒரு சம்பவத்த தவிரஅதை நினச்சா எனக்கே என் மேல கோவம் கோவமா தான் வருதுசரி, நானும் மனுஷன் தானே?

அப்டி என்ன தான் நடந்துச்சுன்னு பாக்றீங்களா? இதோ…

 

"பாலு! எப்படி இருக்க?"

 

"சொல்லு ரகு...நான் நல்லா இருக்கேன்...வீட்ல எல்லாரும் சௌக்கியமா?

என்ன திடீர்ன்னு ஃபோன்?"

 

"என் பொண்ணு கல்யாணம் முடிவு ஆய்டுச்சு...மாப்ளை யு.எஸ். ல வேலையா இருக்கார்...இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்"

 

"ரொம்ப சந்தோஷம் பா, நீயும் ரொம்ப நாளா தேடினதுக்கு, இப்ப நல்ல வரனா அமைஞ்சிருக்கு...சந்தோஷம்"

 

"நான் அடுத்த மாசம் மதுரை பக்கம் வருவேன்...அப்ப நேர்ல வந்து பத்திரிக்கை வெக்கறேன்"

 

"ஹ்ம்ம்...கண்டிப்பா"

 

கல்யாண வேலை எல்லாம் ஆரம்பிச்சு கொஞ்ச நாளைக்குள்ள, பேரிடியா வந்துச்சு, திடீர்ன்னு சம்பந்திக்கு உடல்நிலை மோசமான செய்தி. ஆண்டவன் மேல பாரத்த போட்டுட்டு, கல்யாண வேலைய ஆரம்பிச்சேன். இருந்தாலும் கடைசி நேரத்து பரபரப்பு, பதட்டம் இப்படி பல காரணங்களால என்னால மதுரைக்கு போக முடியல...பாலுவுக்கு ஃபோன் பண்ணி நிலைமைய சொல்லவும், பாலுவே, 'என்ன ரகு, இதுக்கெல்லாம் கவலை பட்டுகிட்டு, நீ பத்திரிக்கைய தபால்ல அனுப்பி விடு...அது போதும். ன்னு சொல்லவும், சரி தான்னு தபால்லையே பத்திரிக்கைய அனுப்பி வச்சேன்...

 

நல்லா சிறப்பா கல்யாணமும் முடிஞ்சுது. ஒரு சில பேர் தவிர கல்யணத்துக்கு அழைப்பு குடுத்த அத்தன பேரும் வந்து கலந்துகிட்டு, வாழ்த்திட்டு போனாங்க.

ஆயிரம் பேத்துக்கு மேல கல்யாணதுக்கு வந்திருந்தாங்க. ஆனா பாலு மட்டும் வரவே இல்ல…அத பத்தி, எனக்கு கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஆதங்கம் தாங்க. வரேன்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல வரல! ஆயிரம் வேலை இருக்கட்டுமே, கல்யாணம் முடிஞ்சப்புறம் ஒரு ஃபோன் பண்ணி பேசக் கூடாது? இந்த ஒரு வருத்தம் தான் எனக்கு.

 

என் மனைவி என்னடான்னா, “நீங்க நேர்ல போய் கூப்பிடலைன்னு கோபம், அதான் அவர் வரலை” ங்கறா.

 

ச்சே, ச்சே…பாலு அப்படி பட்டவன் இல்ல. ஏதோ முக்கியமான வேலை இருந்திருக்கும்…இல்லன்னா வராமா இருந்திருக்க மாட்டான்…அட, என்ன தான் வேலை இருக்கட்டுமே, ஒரு ஃபோன் பண்ணி பேசி இருக்கலாமே…சரி, அவனா ஃபோன் பண்ணி பேசுற வரைக்கும்,  நானா அவனுக்கு பேசப் போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். நான் பண்ணது எவ்ளோ பெரிய தப்புன்னு பின்னாடி தான் புரிஞ்சுது.

 

கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துக்கு அப்புறம் பாலுகிட்ட  இருந்து ஒரு கடிதம்.

 

அன்புள்ள ரகு,

நலம், நலமறிய அவா. மகள் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். பெண்ணிற்க்கும், மாப்பிளைக்கும் என் வாழ்த்துக்களை சொல்லி விடு. தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக, என்னால் திருமணத்திற்கு வர முடியவில்லை. சரியாக, கல்யாணச் சமயத்தில், அம்மா தவறி விட்டார்கள். இவ்வளவு தாமதமாக சொல்வதற்க்கு மன்னிக்கவும். உடனே உன்னிடம் சொல்லி, உன் சந்தோஷத்தை குறைக்க விரும்பவில்லை. அதற்க்காகத் தான் இந்த இரண்டு மாத இடைவேளை. அம்மாவின் கடைசி நாட்களை பற்றி

 

 அதுக்கு மேல என்னால படிக்க முடியலைங்க.

 

ச்சே, பெரிய தப்பு பண்ணிட்டனே…பாலுவ பத்தி தெரிஞ்சிருந்தும் கூட இப்படி நினைச்சுட்டேனே…நானாவது ஒரு ஃபோன் பண்ணி இருக்க கூடாது? மனைவி எதோ சொன்னா, அத அப்படியே கேட்கனுமா? எனக்கு எங்க போச்சு புத்தி…இல்ல, மனைவி சொன்னதெல்லாம் ஒரு காரணம் இல்ல… எல்லாம் இந்த வேண்டாத வரட்டு கெளரவம் தான், நான் ஏன் இறங்கி வரனும்ங்கற பிடிவாதம் தான்… சரி, ஆனது ஆய்டுச்சு, இப்ப புலம்பி என்ன பண்றது? வயசானா புத்தி மழுங்கிடும்ன்னு சொல்லுவாங்களே, அப்படி ஆய்டுச்சோ?

 

சரிங்க, பேசிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியல, நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துருச்சு. நான் எங்க போய்ட்டு இருக்கேன்னா கேக்குறீங்க? பாலு பொண்ணு கல்யாணத்துக்கு தான்…பொண்ணு கல்யாணம் அவசரமா முடிவாயிடுச்சுன்னு சொல்லி, ரெண்டு வாரத்துகு முன்னாடி தான் பத்திரிக்கை அனுப்பினான்.  நிறைய முஹூர்த்தம் இருக்கறதால நேரடி ரயில்ல சீட்டு கிடைக்கல…அதான், காலைல நேரமே கிளம்பி, ரயில் பஸ்ஸுன்னு மாறி, மாறி, சுத்தியடுச்சுட்டு போய்ட்டு இருக்கேன். ’இந்த வயசான காலத்துல, எதுக்கு இப்படி கஷ்டப்படறீங்க?’ ன்னு என் மனைவி கூட கேட்டாங்க… பாலுவுக்காக இத கூட செய்ய மாட்டேனா என்ன? என்ன நான் சொல்றது? கரெக்ட்டு தான? சரி, அப்ப பாப்போமா?

 

P.S: எப்பவும் தொடர் கதையே எழுதிட்டு இருந்த நான், ஒரு கதை போட்டிக்காக எழுதிய முதல் சிறுகதை இது. கதை கரு கிடைக்காததால், என் அப்பாவின் கதையையே சுட்டு விட்டேன். என் அன்பு அப்பாவும், அவர் நண்பர் பாலு மாமாவும் தான் இந்த கதையில் வரும் அன்பர்கள்.

52 comments:

Divya said...

Wowwwww!!! touching touching story!!

Divya said...

aha.......me the first in DP's blog........after a longgggggggggggggg timeeeeeeeeee:)))


yeik koththu parotta parcel karo bhetty:-)

Divya said...

\\மனைவி எதோ சொன்னா, அத அப்படியே கேட்கனுமா? எனக்கு எங்க போச்சு புத்தி\\

ada........realistic expression DP;)

Divya said...

\\கதை கரு கிடைக்காததால், என் அப்பாவின் கதையையே சுட்டு விட்டேன். என் அன்பு அப்பாவும், அவர் நண்பர் பாலு மாமாவும் தான் இந்த கதையில் வரும் அன்பர்கள்.\\

:)))


romba nalla eluthirukireenga DivyaPriya,Kudos:)))

Raghav said...

ம்.. முதல்ல திவ்யாவின் பின்னூட்டமா.. கற்றோரை கற்றோரே அறிவர்னு சும்மாவா சொன்னாங்க..

Raghav said...

//கடைல இருந்து பொட்டலம் மடிச்சு வர நூல கூட சேத்து கட்டி வச்சு, பெரிய நூல்கண்டு செஞ்சு வச்ச அவன் சிக்கனத்தை சொல்றதா? இல்ல //

ஓஹோ இதுக்கு உங்க ஊர்ல சிக்கனம்னு சொல்வாங்களா!! எங்க ஊர்ல வேற பேரு.. :)

Raghav said...

//எனக்கு வால்பாறை பாலுவா தெரியும், தென்காசி பாலுவா தெரியும், காரைக்குடி பாலுவா தெரியும், சென்னை பாலுவா தெரியும், //

எனக்கு பட்டாசு பாலு மட்டும் தான் தெரியும்.. :)

Raghav said...

// போதும்டா ஊர் சுத்தினதுன்னு மதுரைலையே இருந்துட்டான் //

ஹய்யா.. எங்க ஊரு.. இதுக்கே நான் குறைஞ்சது 50 பின்னூட்டம் போடணும்..

Raghav said...

//ஒரு கதை போட்டிக்காக எழுதிய முதல் சிறுகதை இது //

பரிசு கிடைச்சுச்சான்னு சொல்லவே இல்லை..

Raghav said...

//Divya said...
aha.......me the first in DP's blog........//

இங்க பாருய்யா.. :) ரன்னிங் ரேஸ்ல முதல்ல வந்தா மாதிரி துள்ளுறத..

Raghav said...

ஓ.கே.. இன்றைய கும்மி இனிதே முடிந்தது.. மீண்டும் நாளை சந்திப்போம்..

சிம்பா said...

கடிதங்கள் மூலமா கிடைக்கிற சந்தோசம் வேற எதிலும் இல்ல... விஞ்ஞான முன்னேற்றம் வாழ்க்கைய சுருக்கி மனுசங்கள எந்திரமாக்கிருக்சு ...

சிம்பா said...
This comment has been removed by the author.
சிம்பா said...

இப்போ தான் அதை பற்றி ஒரு பதிவு போட்டுட்டு வந்தேன்.. நீங்க எனக்கு போட்டியாவா... இருக்கட்டும்.. உங்களைக்கூட வாரிருக்கேன்... நேரம் இருந்தா வந்து பாருங்க...

ஜியா said...

அருமையான கதை திவ்யப்ரியா... கதாபாத்திரத்தையே கதைசொல்லியா ஆக்கிட்டா, அந்த கதை டக்குன்னு நம்ம மனசுக்குள்ள போயிடுதுல்ல?? உண்மைச் சம்பவம்னு படிச்ச உடனே ஒரு வித நெகிழ்ச்சி... யதார்த்தமான அழகான கதை...

Vijay said...

சுட்டாலும் கதை ருசியாகவே இருக்கிறது. ரொம்ப நெகிழ்ச்சியான மனித உறவுகளை அசை போடுகிறது.

Again Characterization. Could you please take a crash course on how to create strong characters.

Beautiful, wonderful, Marvellous!!!

gayathri said...

nalla friendship kathai nalla iruku pa

Rathna Kumar said...

touching story DP.. nowadays we frnds dont keep in touch in spite of all these email chat n all... if it is a true story, am a big fan of ur dad.. :)

Unknown said...

வாவ் அக்கா சூப்பர் சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு அக்கா கதை.. உண்மை சம்பவம்தான்னாலும் நீங்க சொன்னவிதம் இன்னும் அருமையா மனசுக்குள்ள நிக்குது.. ஒரு கைத்தேர்ந்த கதாசிரியர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்.. :)))

Ramesh M said...

superb one.. and it looks u got great fans to ur blogs.. within a day ivlo comments vanthirukku.. i guess ppl r keep watching ur space for new blogs.. hmmm..
great.. keep up the work..

Anonymous said...

Natpe Natpe...
Thinam Natpil Thitthithom...
Natpe Natpe
Ini enge santhippom...

Good Story...
Keep Rocking...

Divyapriya said...



Divya

முதல்ல வந்ததுக்கு இவ்ளோ குதூகலமா? ரொம்ப நன்றிங்கோ ;)

---
Raghav said...
//ம்.. முதல்ல திவ்யாவின் பின்னூட்டமா.. கற்றோரை கற்றோரே அறிவர்னு சும்மாவா சொன்னாங்க..//

அட அட அட ;)

//பரிசு கிடைச்சுச்சான்னு சொல்லவே இல்லை..//

பரிசு கிடைக்கல, நல்லா பல்பு கிடச்சுது ;)

//ஓ.கே.. இன்றைய கும்மி இனிதே முடிந்தது.. மீண்டும் நாளை சந்திப்போம்..//

ஹீ ஹீ…

---
சிம்பா
உண்மை தான், ஆனா அதுக்கெல்லாம் அதீதமான பொறுமை வேணும் இந்த காலத்துல :)

---
ஜி
நன்றி ஜி…கதாபாத்திரத்தயே கதை சொல்ல வச்சிட்டா, ரொம்ப சுலபமா தான் இருக்கு, இப்படி கதை எழுதி பழகிட்டு, 3rd person view கதை எழுதவே பிடிக்கலை…

Divyapriya said...


விஜய்
ரொம்ப ரொம்ப நன்றி விஜய்…
இந்த கதைய பொறுத்த வரைக்கும், என்னோட characterizations எதுவும் இல்ல…பாலு அங்கிள் character e ஒரு அலாதியான, ரசிக்கும் படியான character தான் :)

---
gayathri

நன்றி gayathri

---
rathnaK
உண்மை கதை தான், இரண்டாவது வரிய தவிர, மத்த எல்லாமே உண்மை தான் ;)

---
ஸ்ரீமதி
கைத்தேர்ந்த கதாசிரியரா? ஹய்யோ! நன்றி ஸ்ரீ :)

---
Ramesh M
Thanks a lot …
// i guess ppl r keep watching ur space for new blogs.. hmmm.. //

Ramesu, there is something called reader where ppl can see once I update my blog ;)

---
Sriram

Thanks a lot Sriram

முகுந்தன் said...

//ஒரு கட்டத்துக்கு மேல, நாம வாழ்றதே குழந்தைங்களுக்காகதாங்கற மாதிரி தோணுதில்ல? பையனும் வெளியூர்ல இருக்கான், பொண்ண கட்டி குடுத்தாச்சு…ரொம்ப வெறுமையா இருக்கு...//

eppavume appadidhaan thonudhu :))


really touching !!!!

Anonymous said...

அது என்னங்க , குசேலன் ல தலைவர் நடிச்சாலும் நடிச்சார், old friends னாலே பாலு நு தான் வெப்பீங்கலா????

Anonymous said...

//Raghav said...
ஹய்யா.. எங்க ஊரு.. இதுக்கே நான் குறைஞ்சது 50 பின்னூட்டம் போடணும்..//

என்ன ராகவ், பரமகுடி நு சொல்லிட்டு இப்ப மதுரை யும் உங்க இடம் னு சொல்ரீங்க????

Anonymous said...

// Raghav said...
ம்.. முதல்ல திவ்யாவின் பின்னூட்டமா.. கற்றோரை கற்றோரே அறிவர்னு சும்மாவா சொன்னாங்க //

யெத வெச்சு அப்படி சொல்ரீங்க...என்ன தெரியுமா உங்கலுக்கு???

Raghav said...

//என்ன ராகவ், பரமகுடி நு சொல்லிட்டு இப்ப மதுரை யும் உங்க இடம் னு சொல்ரீங்க??? //

ஆஹா.. இவன் ஹிம்சை தாங்கலையே.. அய்யா பெரியவரே.. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”னு படிச்சுருக்கீங்களா..

//யெத வெச்சு அப்படி சொல்ரீங்க...என்ன தெரியுமா உங்கலுக்கு??? //

எனக்கு கற்றோரை மட்டுமே தெரியும்.. உம்மை தெரியாது.. :)

Anonymous said...

//ஆஹா.. இவன் ஹிம்சை தாங்கலையே.. அய்யா பெரியவரே.. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”னு படிச்சுருக்கீங்களா..//

ya ya i know.....andha padalai mistake illama eludhi ovvoru xam layum 6 mark vaangirukke.

Anonymous said...

//எனக்கு கற்றோரை மட்டுமே தெரியும்.. உம்மை தெரியாது.. :)//

sari sari..
inimel proverb a ippadi maatri vidalaam..

கற்றோரை கற்றோரே அறிவர்
Vidhi vilakku : raghav

Hariks said...

ரொம்ப‌ அருமையா எழுதியிருக்கீங்க‌! க‌ருவைவிட‌ நீங்க‌ சொன்ன‌ வித‌ம் ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு. :)

ஆயில்யன் said...

நல்லா இருக்கு பாஸ்!

பாலு தன் வர இயலாத சூழலினை சொல்லு கடிதமும் சரி பாலுவின் நண்பர் திருமணத்திற்கு புறப்பட்ட கதையினை வெளிப்படுத்தும்போதும் சரி மனதில் கொஞ்சம் கனமேற்றிவிட்டீர்கள்

அருமையான நட்பின் கதைக்கு நல் வாழ்த்துக்கள் :))

(அப்படியே உங்க அப்பா மாமாவுக்கும் கதையினை பிரதி எடுத்து கண்டிப்பாய் கொடுங்கள்! - உள்ளத்திலிருந்து வெளிப்படும் இது போன்ற விசயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்ளுங்கள்!)

காண்டீபன் said...

கதை மிக அருமை தோழி.

MSK / Saravana said...

படிக்கும் போதே இயல்பாக இருந்தபோதே தோன்றியது.. இது உண்மையான சம்பவமோ என்று..

MSK / Saravana said...

ரொம்ப அழகா இருக்கு.. ரொம்ப டச்சிங்கா இருக்கு.. [நீங்கள் எழுதிய விதமும்..]

புதியவன் said...

//மனைவி சொன்னதெல்லாம் ஒரு காரணம் இல்ல… எல்லாம் இந்த வேண்டாத வரட்டு கெளரவம் தான், நான் ஏன் இறங்கி வரனும்ங்கற பிடிவாதம் தான்//

கதை நல்லா இருக்குங்க. கதாபாத்திரமே கதைய சொல்கிற மாதிரி எழுதினது அருமை.

Divyapriya said...


முகுந்தன்
உங்களுக்கு இப்பவே அப்படி தோன ஆரம்பிச்சுடுச்சா ;)

---
Srinivas said...
//அது என்னங்க , குசேலன் ல தலைவர் நடிச்சாலும் நடிச்சார், old friends னாலே பாலு நு தான் வெப்பீங்கலா????//

இந்த கதை மட்டும் இல்ல, பேர்களும் நிஜம் தான்…

---
Murugs

நன்றி Murugs…

---
ஆயில்யன்

நன்றி ஆயில்யன்…

//(அப்படியே உங்க அப்பா மாமாவுக்கும் கதையினை பிரதி எடுத்து கண்டிப்பாய் கொடுங்கள்! - உள்ளத்திலிருந்து வெளிப்படும் இது போன்ற விசயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்ளுங்கள்!)//

அத ஏன் கேக்கறீங்க? கதைய படிச்சிட்டு, “இதெல்லாம் ஒரு கதையா?” இப்படி சொன்னது வேற யாரும் இல்ல, என் அப்பா தான் :( சின்ன சம்பவமா இருக்கறதால, பெருசா எடுத்தக்கலையோ என்னவோ…

---
காண்டீபன்

நன்றி காண்டீபன்…தொடர்ந்து படிங்க…
---
Saravana Kumar MSK

முன்னாடியே கண்டு பிடிச்சுட்டீங்களா? சூப்பர் :))

---
புதியவன்

நன்றி புதியவன் …தொடர்ந்து படிங்க…

MSK / Saravana said...

//அத ஏன் கேக்கறீங்க? கதைய படிச்சிட்டு, “இதெல்லாம் ஒரு கதையா?” இப்படி சொன்னது வேற யாரும் இல்ல, என் அப்பா தான் :( சின்ன சம்பவமா இருக்கறதால, பெருசா எடுத்தக்கலையோ என்னவோ…//

உங்களிடம் அப்படி சொல்லி இருக்கலாம்.. ஆனால் உங்கள் அம்மாவிடமோ அல்லது அவரின் நண்பர்களிடமோ சொல்லி சிலாகித்திருக்கலாம்.. அல்லது உங்கள் திறமைக்கு இது குறைவு என்றும் கருதி இருக்கலாம்.. அதனால நீங்க அதெல்லாம் கண்டுக்காம தொடர்ந்து எழுதுங்கோ.. :)

gils said...

!!! toucho touchuni toching story...aana semma real life..oru vela nejamavay real life incidentgarathala ivlo realistica iruko? :D anyawys..unga presentation super..aana ipdi govt norm mathiri oru parakum inoru parakum moonu varusha idaiveli kuraicheenganna kathai chinnatha theriyum :)) ilaati divyanu pera vachalay mega serial ezthuvangalonu makkal thinka koodum :D

தாரணி பிரியா said...

லேட் கம்மிங்கு சாரி திவ்யா
படிச்சுட்டு இன்னிக்கு பின்னுட்டம் போடலாம் நாளைக்கு போட்டுடலாம்ன்னு ஒரு வாரத்தை ஒட்டிட்டேன். சாரி

கதை சூப்பர் திவ்யா. பயங்கர டச்சிங்கா இருந்தது. இந்த கதை படிச்ச முடிச்சபிறகு என் பிரெண்ட் எனக்கு எழுதின லெட்டர்ஸ் எல்லாம் எடுத்து பார்த்தேன் (9ஆம் வகுப்பில ஆரம்பிச்சு 12வது போன‌வரை எழுதி இருக்கா அதையெல்லாம் இன்னும் பத்திரமா வெச்சு இருக்கேன் .அதுக்கப்புறம் இந்த போன் வந்துடுச்சு )

திரும்ப இன்னிக்கு அவளுக்கு ஒரு லெட்டர் எழுதி போஸ்ட் செஞ்சு இருக்கேன். பார்க்கலாம் அவ எப்படி சர்ப்ரைஸ் ஆகறான்னு?

Anonymous said...

ரெம்ப யதார்த்தமான நடையில் அழாக எழுதியிருக்கீங்க.
இதை படிக்கும் பொது என்னோட friends எல்லோரையும் நினைத்துகொண்டேன்.
வாழ்த்துக்கள்.

ரிஷி said...

நல்ல கதைங்க

நிறய எழுதுங்க

நன்றீ

தொடர்புக்கு...
yahoo pkrishnan143
gmail pkrishnan143
9894071174

Anonymous said...

Really superb nice real story.. Real Friendship never fails...!
Gowtham

Unknown said...

திவ்யப்ரியா,

கதை படித்தேன்.

இன்னும்கூட மனதில் பதிவது போல் எழுதலாம்.

சொல்ல வந்தது சரியாக அல்லது அழுத்தமாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

மற்றபடி உரையாடல்கள் நன்றாக இருக்கிறது. நல்ல கரு.

அதற்க்கு காரணம்:

// மத்தபடி எப்பயாச்சும், ஃபோன்ல நலம் விசாரிக்கறதோட சரி.//

இந்த வரி ரகுவை முன்னாலேயே ஒரு ”வறட்டு கெளரவமிஸ்டாக” காட்டிவிடுகிறது

//ஆனா, பாலு மட்டும் அப்டியே மாறாம தான் இருந்தான்.//

//தனித்துவமும் நிரம்பி வழியும் வாழ்த்து அட்டைகள் அனுப்புவானே//

கல்யாணத்திற்க்கு வர வில்லை .ஒகே.ஏன் அட்லீஸ்டு ஒரு வாழ்த்து
அட்டை கூட கல்யாணத்திற்கு அனுப்பவில்லை. Logic உதைக்கிறது.

நன்றி

Smriti said...

Ppl check this out...http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=51181408

Karthik said...

Arumaiyana kadai sagodari....

எனக்கு வால்பாறை பாலுவா தெரியும், தென்காசி பாலுவா தெரியும், காரைக்குடி பாலுவா தெரியும், சென்னை பாலுவா தெரியும்

enakku therinjadhu Gopal, jayapal thaan...

Karthik said...

Neenga inda kadaiyai eludiya vidam arumai!!!

நட்புடன் ஜமால் said...

ம்ம்ம் ... அழகாயிருக்கு.

சொன்ன விதம் அழகு.

என்னைக்கவர்ந்த விஷயம் (யாரும் சிரிக்காதிங்கோ) கடிதவரிகளை ஃபாண்ட் மாற்றி எழுதியது.

இது ரொம்ப பிடிச்சிறுக்கு.

Karthik Krishna said...

றொம்ப நல்லா இருக்கு....
மிக அருமை.....
நெஞ்சதை தொட்டுட்டீங்க...


வாழ்த்துக்கள்...

நிறய எழுதுங்க...

அன்புடன்..
- கார்த்திக் -

MSK / Saravana said...

50 :)

mannaisekar said...

இந்த கதையை படித்ததில் இருந்து ,
இத்தனை நாட்களாக உங்கள் படைப்புகளை படிக்காமல் இருந்ததற்காக வருந்துகிறேன்,

வாழ்த்துக்கள்...

நிறய எழுதுங்க...

அன்புடன்..
மண்ணை சேகர்

sankarasubramanian said...

nice story.. its really touching
and close to the heart..

kee pdoing the great work, divya..


sankara