Saturday, August 1, 2009

சூர்யகாந்தி கவிதைகள் - II

ஆடிப் பாடி அகமகிழ்ந்து,

அன்பில் திளைத்தோம்,

நினைவில்லையா?

பூவில் இருவர் பெயரெழுதி,

பார்த்து ரசித்தோம்,

நினைவில்லையா?

சிரித்து சிரித்து கண்களிலே,

கண்ணீர் துளிர்த்தோம்,

நினைவில்லையா?

கண்னோடு கண் உறவாடி,

பல கதைகள் பகர்ந்தோம்,

நினைவில்லையா?

கைகள் கோர்த்து இருவருமே,

உலகம் மறந்தோம்,

நினைவில்லையா?

விரல் நுனியின் ஸ்பரிசத்திலே,

உடல் சிலிர்த்தோம்,

நினைவில்லையா?

இருவர் இதயம் பரிமாறி,

உயிரோடு உயிரானோம்,

நினைவில்லையா?

ஒரு விரல் வந்து எனைத் தீண்ட,

என் வசம் நான் தோற்று…

மறுவிரல் வந்து தீண்டவும்,

என்னிடமிருந்து விடைபெற்று…

உன் விரல்கள் ஆடிய நர்த்தனத்தில்,

உன்னிடமே தஞ்சமடைந்தேன்!

நீ சூடி வந்த பூக்களின் வாசத்தைக் கூட மறக்க முடியவில்லை,

பின்பு எப்படியடி நீ அள்ளித் தெளித்த நேசத்தை மறப்பேன்?

நிறம் மாறினாலும் மனம் மாறவில்லையடி இந்த பூக்கள்

உன் சுவாசத்தை இன்னும் சுமந்து கொண்டு தான் இருக்கிறது!

என் அன்பை நீ மறுத்தாலும்,

என்னை அடியோடு வெறுத்தாலும்,

ஏதோ ஒரு உலகத்தில்…

ஏதோ ஒரு தருணத்தில்…

வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறேன்,

நம் கடந்த காலத்தை!


அன்பு ததும்பும் உன் வார்த்தை ஒன்றே போதும்…

தேனில் தோய்த்த கனியாய்,

கடைந்தெடுத்த அமுதாய்,

பாலைவனத்து நீராய்,

என் ஏக்கத்தின் தா(க்)கம் தீர்க்க…

15 comments:

mvalarpirai said...

அருமை ..

இந்த கவிதை ..

"உன்னோடும் நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறவாது கண்மணியே ! "

என்ற வைரமுத்துவின் வரிகளை நினைவுபடுத்துது !

- இது ஒரு மீள் பின்னோட்டம் :):)

உங்களுக்கு நான் அசல் பதிவில் அப்ப போட்ட அதே பின்னோட்டம் :)

நட்புடன் ஜமால் said...

என் அன்பை நீ மறுத்தாலும், என்னை அடியோடு வெறுத்தாலும், ஏதோ ஒரு உலகத்தில்… ஏதோ ஒரு தருணத்தில்… வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறேன்]]

எதார்த்தம்.

Annam said...

//என் அன்பை நீ மறுத்தாலும்,

என்னை அடியோடு வெறுத்தாலும்,

ஏதோ ஒரு உலகத்தில்…

ஏதோ ஒரு தருணத்தில்…

வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறேன்,

நம் கடந்த காலத்தை!//

Nalla iruku intha peelings

G3 said...

:)))))))))))))))))))

Raghav said...

//ஒரு விரல் வந்து எனைத் தீண்ட,

என் வசம் நான் தோற்று…

மறுவிரல் வந்து தீண்டவும்,

என்னிடமிருந்து விடைபெற்று…

உன் விரல்கள் ஆடிய நர்த்தனத்தில்,

உன்னிடமே தஞ்சமடைந்தேன்//

தஞ்சமா... சரணாகதியே அடையலாம்.

அருமையான கவிதைகள் திவ்யா.

Karthik said...

நான் சூரியகாந்தி கதையை படிக்கலாம். அந்த கதை பற்றிய கவிதைகளா இதெல்லாம்? எல்லாம் நல்லா இருக்கு. :)

முதல் கவிதை கௌதம் படப் பாட்டு மாதிரி செம ரொமான்டிக்! :)

Badri said...

Romba arumaya feelings kotreenga divya avargale...America poi romba feel panreenga nenaikaren :-)..Emanti vishayam

Mohan R said...

amma thaayi ethavadhu kadhai irundha blog podungama Nalla kadhai padichi romba naal achu :) :) :)

gils said...

ennagna unga kathiyoda lyrics matum varuthu katiaya kaanum...musical posts porum.konjam murder mysterukum vaanga

Ramesh M said...

பூவில் இருவர் பெயரெழுதி,
பார்த்து ரசித்தோம்,
நினைவில்லையா?

Entha poola yaaru per ezhutheeneenga???? Sollavae illa :)

Vijay said...

இதென்ன சூரியகாந்தி கதையில் போட மறந்த கவிதையெல்லாம் இப்போ தனியா போடறீங்களா?
கவிதைகள் எல்லாமே சூப்பர் :-)

முகுந்தன் said...

வாவ்.....

Anonymous said...

கவிதைகள் எல்லாமே சூப்பர்

G3 said...

Ungala tagla kothu vittachu :)))

Sanjai Gandhi said...

அச்சச்சோ நேக்கு எதுமே நினைவில்லையே.. :))