Tuesday, April 7, 2009

மலரே மெளனமா? - 3

பாகம் – 3 (சென்னை -> பெங்களூர், பெங்களூர் -> கொடைக்காணல்)

பாகம் 1, பாகம் 2

பெங்களூர் கொடைக்காணல் செல்லும் சாலையில், நான் பயணித்த பேருந்து, சாலையில் வழுக்கிக் கொண்டு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்க, என் மனம் வலித்துக் கொண்டே பின்னோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

மலரிடம் காதலைச் சொன்ன அன்றைய தினம் இரவு, ’அவள் சோர்வாக, குதூகலமில்லாது இருந்த போது காதலை சொன்னது தவறோ? அவளிடம், இனி இதைப் பற்றி பேச மாட்டேன், எப்போதும் போல் நாம் நல்ல நண்பர்களாகவே இருப்போம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கலாமோ?’ இப்படி பலதும் நினைத்துக் கொண்டு கொட்டக் கொட்ட விழித்திருந்தேன்.

மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கிளம்ப ஆரம்பித்தோம், ஆறு மணி மூகூர்த்ததிற்கு, மண்டபத்திற்கே நேரடியாக வந்துவிடுகிறேன் என்று சொன்ன மலர் அன்று வரவில்லை. இரவு பேருந்து நிலையத்திலும் அவளிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பயணக்களைப்பு, முதல் நாளிரவு தூக்கமின்மை, மன உளைச்சல், இப்படி எல்லாமும் ஒரே சமயத்தில் என்னை ஆட்கொள்ள, திங்கட்கிழமை காலை வீட்றிக்கு வந்தவுடன் வெகு நேரம் என்னை அறியாமல் உறங்கிப் போனேன். அலுவலகம் சென்றடைந்த போது மணி 11.30.

முதல் மின்னஞ்சல், என் மேனஜரிடமிருந்து. அதைத் திறந்தால், என்னிடத்திலும் என் மேனஜரிடத்திலும் ஒரு அரை மணி நேர சந்திப்பு கோரி மலர் அனுப்பியிருந்த மடலுக்கு பன்னிரெண்டு மணிக்கு சந்திக்கலாம் என்று அவர் பதில் அனுப்பியிருந்தார். மீண்டும் மின்னஞ்சல் பெட்டியில் இரு மடல்களுக்கு முன்னதாக வந்திருந்த மலரின் மடலை திறந்தேன். முந்தைய மடலில் ஏற்கனவே பார்த்த செய்தியாயிருந்தாலும், மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். ’என்னவாக இருக்கும்?’ என் சிந்தனையை கலைத்தது நண்பனின் குரல். “சுரேன்…காஃபிக்கு போலாமா?”

“இல்ல அவினாஷ்…நான் இப்ப தான் வந்தேன்…நீங்கெல்லாம் போங்க…”

“என்ன இது? நீங்களும் வரலைங்கறீங்க…மலரும் வரலைன்னுட்டாங்க…சரி விடுங்க…நாங்க எல்லாம் போறோம்…”

சாட் பெட்டியை திறந்தேன். மலர் அவள் இருக்கையில் இருப்பதாகத் தான் காண்பித்தது.
“சாரி மலர், நான் எதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடுங்க…” இப்படி அனுப்பலாமா என்று ஒரு நொடி தலைதூக்கிய எண்ணத்தை கிடப்பில் போட்டேன். ’நான் என்ன தப்பு பண்ணேன், சாரி கேட்க?’ என்று என்னை நானே கடிந்து கொண்டேன். ’சரி, ஆனது ஆகட்டும்…இனிமே எப்பயும் போல இல்லாட்டியும், பேச்சளவிலாவது நல்ல நண்பர்களா இருப்போம், என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது’ ன்னு நேர்லையே சொல்லிடலாம் என்று என் இருக்கையை விட்டு எழுந்தேன்.

“சுரேன்! Shall we go in for the meeting now?” என் மேனேஜர் தான். கடிகாரத்தைப் பார்தேன். 11.45 தான் ஆகியிருந்தது.

“I’ve another meeting at 12…malar!!!” உடனே அவளையும் அழைத்து விட்டார். எதுக்காக அழைத்திருக்கிறாள் என்று யோசிக்க கூட இல்லை. இவர் வேற…ச்சே…ஒரு வேளை வேற ப்ராஜக்ட் கேக்கப் போறாளோ? யோசித்துக் கொண்டே அருகிலிருந்த கான்ஃபரண்ஸ் அறையினுள் நுழைந்தேன். என் பின்னோடு மேனஜரும், மலரும் நுழைந்தனர்.

அந்த அறையில் ஒட்டியிருந்த எங்கள் கம்பனி குறிக்கோள்கள் கொண்ட வாசகப் பலகையை அன்று தான் முதன்முறையாக பார்ப்பதைப் போல பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள். அப்படி இல்லாவிட்டால், அறையின் கதைவை பார்த்தபடி அமர்ந்திருந்த என்னை தவிர்த்திருக்க முடியாது. “ச்சே, இந்த பொண்ணுங்களே இப்படி தான்டா…” பல நண்பர்கள் சொல்லிக் கேட்ட இந்த வாசகத்தை வாழ்க்கையில் முதல் முறையாக எனக்கும் சொல்ல வேண்டுமெனத் தோன்றியது! “ச்சே…இந்த பொண்ணுங்களே இப்படி தான்!!!”

“Yeah malar! Go ahead…”

“Anoop…actually… I m planning to submit my resignation…today…”
அந்த நொடியிலிருந்தே அவள் சொன்னதை உள்வாங்கிக் கொள்ள முயற்சித்து, இன்று முதல் தோற்றுக் கொண்டு தான் இருக்கிறேன், ஒவ்வொரு முறையும்!

அதன்பிறகு அனூப் அவளை ஏதேதோ கேள்விகள் கேட்டதும், அதற்கு அவள் “இந்த பொண்ணுங்களே இப்படி தான்” என்கிற பதத்தை மீண்டும் மீண்டும் நிரூப்பிப்பதை போல பதில்கள் சொன்னதும், எதுவுமே என் காதில் விழவில்லை. ’என்னை கேடு கெட்டவன் என்று நினைத்து விட்டாளா? என்னை பார்ப்பதற்கே அவளுக்கு பிடிக்கவில்லையா? இல்லை, என்னை பார்த்து பயந்து ஓடிகிறாளா?’ சளைக்காமல் இப்படி ஆயிரம் கேள்விகள் கேட்ட மூளையிடம் பதில் சொல்ல முடியாமல் தோற்றுப் தான் போனேன்.

இங்கு ஒருத்தன் உயிருள்ள சவமாய் கிடப்பதை பார்த்தும், அதை கண்டுகொள்ளாமலே, அல்லது கண்டுகொண்டும் அலட்டிக் கொள்ளாமலே, தன் பன்னிரெண்டு மணி மீட்டிங்கிற்கு ஓடினார் என் மேனஜர். தரை விரிப்பை புதிதாய் பார்த்து ரசித்த படி மலரும் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்.

ஒரு வருடத்திற்கு முன்னால் இதே அறையில், அவளை எங்கள் ப்ராஜக்ட்டில் சேர்க்க நானும் அனூப்பும் அவளை சந்தித்தது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.

அதன் பிறகு தேனீர், உணவு இடைவேளை என்று எதற்கும் அவளோடு நான் செல்லவில்லை. அலுவலைத் தவிர்த்து அவளை பார்ப்பதை கூட தவிர்த்திருந்தேன். ’ஏன்’ என்று அவளும் கேட்கவில்லை. அவள் கேட்க வேண்டும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. கடைசி நாளன்று என்னை அவள் கேட்டதாக நண்பனொருவன் சொன்னது கூட என்னை பாதிக்கவில்லை. உலகத்தவர் அனேகரைப் போல, நானும் முட்டாள் தான் என்று அவள் சென்ற ஒரு வாரத்திலேயே கண்டுகொண்டேன். கண்னெதிரே அவள் இருந்த போது தெரியாத பிரிவின் பாரம், மெல்ல மெல்ல என்னை அழுத்தத் துவங்கியது. அதன் பிறகு தேனீர், உணவு இடைவேளை இப்படி எல்லாமே அவள் நினைவகளினூடே கழிந்தது.

உன்னோட கழித்த ஒவ்வொரு
இடமாய் செல்லும் போது,
நீ இல்லை என்று மனதிற்கு தெரிந்தாலும்,
கண்கள் தேடுவதென்னவோ
உன்னை தான்!
என்ன சொல்லி புரிய வைப்பது
என் கண்களுக்கு,
இனி உன்னை
பார்க்கப் போவதில்லை என்று?

அவளை முதன் முதலாய் பார்த்தது முதல், அவளது கடைசி அலுவல் நாளை, வீட்டிலிருந்தபடி பாட்டிலுடன் கழித்தது வரை, கடந்து போன ஒரு வருட கதை முழுவதும், ஈரேழு வயலின்களின் பின்னனி இசையுடன் கருப்பு வெள்ளைத் திரைப்படமாக என்னுள் ஓடியதில், முடிவே இல்லாத கவிதை போல நீண்டு கொண்டே சென்றது என் இரவு.

******
கொடைக்காணல் குளிருக்கு இதமாய் கம்பளியை சுற்றிக் கொண்டு, கையில் இருந்த தேனீர் கோப்பையில் இருந்து மேலெழுந்து காற்றோட கலந்த ஆவியை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

அவள் நினைவுகள் வீசும் தணல்களிலே,
என் மனமும் இங்கு கொதிநிலையில்…

அவள் அருகாமை என்னும் காற்றில் கலந்திடவே,
ஒவ்வொரு நொடியும் துடிக்கிறதே!

“சுரேன்! என்னடா பண்ணிட்டு இருக்க? இன்னும் டீயே குடிச்சு முடிக்கலையா? சீக்கரமா கெளம்புடா…ஏற்கனவே கேப் காரன் வந்துட்டான்…” எங்கோ தூரத்திலிருந்து ஒலிப்பதைப் போல ஒலித்தது, என்னருகிலேயே நின்று கத்திக் கொண்டிருந்த வினோத்தின் குரல்.

பார்வையை தேனீர் கோப்பையை விட்டு அகற்றாமலே, “பாப்பா! நீங்கெல்லாம் போங்களேன்…நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்…”
வினோத் தான் பாப்பா. பாவிப்பயலின் சுருக்கம். நான் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று சொன்னதும், பாப்பா, சைத்தானாக மாறி என்னை பார்த்து முறைத்தான்.

“என்னது ரெஸ்ட் எடுக்கறையா? அதுக்காடா எல்லாரும் பேங்களூர்ல இருந்தும், சென்னையில இருந்தும் வேலை மெனக்கெட்டு இங்க கெளம்பி வந்திருக்கோம்?”

’ச்சே…என்ன உலகமிது? விடுமுறையை கழிக்க கொடை, ஊட்டி என்று செல்ல வேண்டியது, அங்கேயும் காலில் ரெக்கையை கட்டிக் கொண்டு ஒரு டீ கடை விடாமல் எல்லா இடத்தையும் சுற்ற வேண்டியது. இதற்கு வீட்டிலேயே படுத்து தூங்கலாம்.’ இதை வாய்விட்டா சொல்ல முடியும்? மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்.

“என்னடா யோசனை? டீய இப்ப குடிக்கறியா? இல்ல அந்த நாய்க்கு எடுத்து ஊத்தட்டுமா?”

’சுத்தம்…இதுல இந்த பாவிப்பயல் கிட்ட இப்ப தோனின கவிதையை வேற சொல்லலாம்னு நினைச்சனே…’

அதிக அலைச்சலோடும் களைப்போடும் முடிந்தது எங்கள் உல்லாசப் பயணம்! நிறைய நண்பர்களுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு கும்மாளமடித்தது, மலரையும் அவள் நினைவுகளையும் மனதின் ஒரு கிடப்பில் தான் போட்டு விட்டது! கடைசி நாளன்று எல்லோரும் கிளம்பிக் கொண்டிருக்க, நானும் வினோத்தும் மட்டும் தெரிந்தவர் ஒருவரின் பைக்கை எடுத்துக் கொண்டு கொடை டவுனை வந்தடைந்தோம், பிரசித்தி பெற்ற கொடை மிட்டாய்களை வாங்குவதற்காக. பலவித பொருற்கள் விற்கும் அந்த கடைக்குள் நுழைந்ததுமே, காதல் தோல்வி அடைந்ததின் ஒரே பயனாய் என்னுள் வந்து ஒட்டிக் கொண்ட திடீர் கவிதை ஆர்வம், என்னை அந்த கடையில் அடுக்கி இருந்த புத்தகங்களின் புறம் இழுத்துச் சென்றது.

வினோத் எதேதோ மிட்டாய்களை கேட்டு வாங்கிக் கொண்டுருக்க, என் மனம் ஏதோ ஒரு தலைப்பில்லாத கவிதையில் லயித்திருக்க, என் நாசி மட்டும் என்னிடம் சொல்லாமல் கொல்லாமல் வேறு ஏதோ ஒரு இன்பத்தில் திளைத்திருந்தது. ’எனக்கே தெரியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று திடீரென்று விழித்த எஜமானைப் போல் மூளை நாசியை அதட்டவும், ’மிகவும் பரிச்சையமான, மிகவும் பிடித்த லேவண்டர் டியோடரண்ட் வாசனை’ என்று நாசி பதிலளிக்கும் முன்பே, கண்களுக்கும் கழுத்துக்கும் மூளையிடமிருந்து கட்டளை பறக்க, நான் திரும்பிப் பார்த்த அந்த நொடி, என் உடம்பில் என்றைக்கோ செத்து போயிருந்த செல்கள் கூட உயிர்தெழுந்தது! மலர்…ஒரு புத்தகத்தை கையில் ஏந்தியபடி நடந்து கொண்டிருந்தாள்!

மூன்று மாதங்களாய் என் மனதிற்குள்ளேயே இருந்த உருவம், இப்போது வெளிக்கிளம்பி என் எதிரே தோன்றுகிறதோ என்ற சந்தேகம் ஒரு நொடி தலை தூக்காமல் இல்லை. எனது கண் இமைகளின் அசைவுகளை கூட இதயம் கடனாய் வாங்கிக் கொண்டு அளவுக்கதிமாய் துடிக்க, செய்வதறியாது பார்த்தது பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். அவளது உள்ளுணர்வும் உணர்த்தியது போலும், என்னைக் கடக்கையில் தற்செயலாய் என் பக்கம் திரும்பி, என்னைப் பார்த்ததும் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.
இது போன்ற சமயங்களில், ஆண்களை விட பெண்களே முதலில் சுதாரிப்பார்கள் என்று மலரும் நிரூபித்தாள், ஒன்றுமே நடக்காதது போல என்னைப் பார்த்து புன்னைத்து, “சுரேன்!!! எப்படி இருக்கீங்க?”

’இது வரைக்கும் நல்லாத்தாண்டீ இருந்தேன்’ மனதின் கொதிநிலை வெடிநிலையை அடையும் முன்பு அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போல் தோன்றியது.

“மலர்…நீங்க எங்க இங்க? உங்கள எதிர்பாக்கவே இல்லை…”

“நான் இங்க தான் st.joseph ஸ்ன்னு ஒரு ஸ்கூல்ல வேலை பாக்குறேன்…” அந்த பதில் என்னுள் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை அறிந்திருந்தும், புன்னகைத்தபடி மிகச் சாதாரணமாய் பதிலளித்தாள்!

“ஸ்கூல்லையா?” ஆச்சர்யத்தில் அதற்கு மேல் வார்த்தைகள் சிக்கவில்லை.

அதன் பிறகு சம்பிரதாயதிற்காக ஏதோ பேசி விட்டு, கையிலிருந்த புத்தகத்தை கூட வாங்காமல் வேகமாக வெளியேறிவிட்டாள். பாதி படித்த முடித்த கவிதையுடன் எதுவுமே செய்யத் தோன்றாமல் நானும் நின்று கொண்டிருந்தேன்.

“மாப்ள…டேய்…உன்னைத் தான்டா…ஒரு ரெண்டு நிமிஷம் இங்கயே இரு…பக்கத்துல போய்ட்டு வந்தர்றேன்…” வினோதின் குரல் மீண்டும் என்னை இந்த உலகத்திற்குள் மீட்டு வந்தது.

“யேய்…எங்க போற? நில்லுடா…டேய்…” அதற்குள் போயேவிட்டான்.

அரை மணி நேரம் கழித்து பெரிய புன்னகையோடு வந்தவனைப் பார்த்து கோபம் பொங்கியது, “டேய்! ரெண்டு நிமிஷம்னு சொல்லிட்டு, எங்கடா போய்ட்டு வர? கால் பண்ணாலும் எடுக்கல?”

“நான் சொல்றத முதல்ல கேளு மச்சான்…அப்புறமா என்னைத் திட்டு…சரியா?”

“என்னடா சொல்ற?”

“நான் இப்ப மலர் பின்னாடி தான் போய்ட்டு வரேன்…” குறும்பு புன்னகையோடு சொல்லிவிட்டு வழக்கம் போல கண்களை சிமிட்டினான்.

“என்னது மலரா? என்னடா உளர்ற?”

“நான் ஒன்னும் உளர்ல…நீ அவள பாத்தது. பாஸ் அமுத்தின மாதிரி ரெண்டு பேரும் அப்படியே ஒரு நிமிஷம் நின்னது…அப்புறம் உன்னை சுத்தி தேவதை கூட்டமா ஓடினது…இது எல்லாத்தையும் நானும் பாத்துட்டு தான்டா இருந்தேன்…”

“டேய்!!! என்ன பாத்தா உனக்கு எப்படி இருக்கு?”

“ரொம்ப பாவமாத் தான்டா இருக்கு…சரியான அட்டுடா மச்சான்….”
“அய்யோ!!! என்ன இப்படி மொறைக்குற? மலர சொல்லல, உன்னை சுத்தி சுத்தி ஓடுச்சுகளே, தேவதைக…அதுகள சொன்னேன்…”

“மொக்கையை போடாம விஷயத்த சொல்லுடா…ப்ளீஸ்…”

“சரி, சரி, விஷயத்துக்கு வரேன்…நான் எல்லாத்தையும் பாத்துட்டே கவுண்டர் பக்கமா நின்னுட்டு இருந்தனா…மலர் கதவு பக்கத்துல போகும் போது பாக்குறேன்…அப்படியே அவங்க கண்னெல்லாம் கலங்கி போய் இருந்துச்சு…சரி, எனக்கு தான் அப்படி தெரியுதோ? இருந்தாலும் டெஸ்ட் பண்ணிறலாம்னு சொல்லி தான் உங்கிட்ட சொல்லிட்டு உடனே வெளிய ஓடினேன்…அவங்க ஒரு ஆட்டோகுள்ள ஏறவும், உடனே வண்டிய எடுத்துட்டு பின்னாடியே அந்த ஆட்டோவை ச்சேஸ் பண்ணேன்… சிக்னல்ல வண்டிய ஆட்டோ பக்கத்துல நிறுத்தி பாத்தா…”

“பாத்தா…? என்னடா?”

“அதை ஏன்டா கேக்குற…ஒரே அழுகை… தலையை சாச்சுகிட்டு வழியுற கண்ணீர கூட துடைக்காம, அப்படியே உக்காந்திருந்தாங்க…சரி நண்பனுக்கு உதவியா இருக்குமேன்னு நானும் மலர் இறங்குற இடம் வரைக்கும் போய் பாத்து வச்சிட்டு திரும்பி வந்துட்டேன்.”

எனக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. அவனே மேலும் தொடர்ந்தான்.
“நான் அடிச்சு சொல்றேன்…அவ உன்னை லவ் பண்றா…வெளிய சொல்லாம மறைக்குறா…”

அந்த சொற்களை கேட்டதும், ஒரு நொடி மனம் ஜிவ்வென்று வானத்தில் பறந்தாலும், என்னால் அவனுக்கு ஒரு பெருமூச்சை மட்டுமே பதிலாக தர முடிந்தது.

“போய் பேசிப் பாருடா…பேசுறதுல தப்பே இல்ல…இப்பயே போய் ரெண்டுல ஒன்னு கேட்டுடு, ஆமா…”

இம்முறை திட்டவட்டமாக ஒலித்தது என் குரல், “இல்லடா…மறுபடியும் நான் போய் பேச மாட்டேன்…வா போலாம்!”

[தொடரும்]

43 comments:

நட்புடன் ஜமால் said...

\\உன்னோட கழித்த ஒவ்வொரு
இடமாய் செல்லும் போது,
நீ இல்லை என்று மனதிற்கு தெரிந்தாலும்,
கண்கள் தேடுவதென்னவோ
உன்னை தான்!
என்ன சொல்லி புரிய வைப்பது
என் கண்களுக்கு,
இனி உன்னை
பார்க்கப் போவதில்லை என்று?\\

நல்ல கவிதை.

நட்புடன் ஜமால் said...

\\அவள் நினைவுகள் வீசும் தணல்களிலே,
என் மனமும் இங்கு கொதிநிலையில்…\\

இரசித்தேன்.


கதையின் ஓட்டம் அருமை.

நீளமாக இருந்தும் இரசனை குறையவில்லை.

ஆயில்யன் said...

ஆஹா....!

தேர்டு பார்ட்டு நிறைய யோசனைகளை கிளப்பிவிட்டுடுச்சே! :)


ம்ம்...! கன் டினியூ பண்ணுங்க கிளைமாக்ஸ்ல செக் பண்ணிக்கிறேன்! :))

தாரணி பிரியா said...

//உன்னோட கழித்த ஒவ்வொரு
இடமாய் செல்லும் போது,
நீ இல்லை என்று மனதிற்கு தெரிந்தாலும்,
கண்கள் தேடுவதென்னவோ
உன்னை தான்!
என்ன சொல்லி புரிய வைப்பது
என் கண்களுக்கு,
இனி உன்னை
பார்க்கப் போவதில்லை என்று?
//

nice Divya

Nimal said...

நல்ல கவிதைகள்.... கதையும் இனிமையாக இருக்கிறது..!

தாரணி பிரியா said...

முதல் இரண்டு பாகமும் இப்போதான் படிச்சேன். நல்லா இருக்கு திவ்யா :)

ஆயில்யன் said...

//சரி, சரி, விஷயத்துக்கு வரேன்…நான் எல்லாத்தையும் பாத்துட்டே கவுண்டர் பக்கமா நின்னுட்டு இருந்தனா…மலர் கதவு பக்கத்துல போகும் போது பாக்குறேன்…அப்படியே அவங்க கண்னெல்லாம் கலங்கி போய் இருந்துச்சு…சரி, எனக்கு தான் அப்படி தெரியுதோ? இருந்தாலும் டெஸ்ட் பண்ணிறலாம்னு சொல்லி தான் உங்கிட்ட சொல்லிட்டு உடனே வெளிய ஓடினேன்…அவங்க ஒரு ஆட்டோகுள்ள ஏறவும், உடனே வண்டிய எடுத்துட்டு பின்னாடியே அந்த ஆட்டோவை ச்சேஸ் பண்ணேன்… சிக்னல்ல வண்டிய ஆட்டோ பக்கத்துல நிறுத்தி பாத்தா…”

“பாத்தா…? என்னடா?”

“அதை ஏன்டா கேக்குற…ஒரே அழுகை… தலையை சாச்சுகிட்டு வழியுற கண்ணீர கூட துடைக்காம, அப்படியே உக்காந்திருந்தாங்க…சரி நண்பனுக்கு உதவியா இருக்குமேன்னு நானும் மலர் இறங்குற இடம் வரைக்கும் போய் பாத்து வச்சிட்டு திரும்பி வந்துட்டேன்.”
//

நல்ல நண்பன் !

உணர்வுகளோடு நெருங்கி பயணிப்பவர்களில் நட்புக்களுக்குத்தானே முதலிடம்!

Mohan R said...

:( Feelings ayuduchu So no comments as of now :( :'(

நாகை சிவா said...

//உன்னோட கழித்த ஒவ்வொரு
இடமாய் செல்லும் போது,
நீ இல்லை என்று மனதிற்கு தெரிந்தாலும்,
கண்கள் தேடுவதென்னவோ
உன்னை தான்!
என்ன சொல்லி புரிய வைப்பது
என் கண்களுக்கு,
இனி உன்னை
பார்க்கப் போவதில்லை என்று?//

அருமை! அனுபவிக்க முடிகிறது இந்த கவிதையில் உள்ள வார்த்தைகளை! :)

வெட்டிப்பயல் said...

enna solrathune theriyalai... avvalavu superaa iruku.

adutha paakathu one week wait pannanuma?

vaarathuku rendu postnu en poada koodathu?

Divya said...

\\\\உன்னோட கழித்த ஒவ்வொரு
இடமாய் செல்லும் போது,
நீ இல்லை என்று மனதிற்கு தெரிந்தாலும்,
கண்கள் தேடுவதென்னவோ
உன்னை தான்!
என்ன சொல்லி புரிய வைப்பது
என் கண்களுக்கு,
இனி உன்னை
பார்க்கப் போவதில்லை என்று?\\\


கவிதை மிக மிக அருமை:))


கதையின் இந்த பகுதியும் வழக்கம்போல் சூப்பரா இருக்கு திவ்யப்ரியா:))

அடுத்த பகுதி........அடுத்த வாரம்தானா???

புதியவன் said...

//உன்னோட கழித்த ஒவ்வொரு
இடமாய் செல்லும் போது,
நீ இல்லை என்று மனதிற்கு தெரிந்தாலும்,
கண்கள் தேடுவதென்னவோ
உன்னை தான்!
என்ன சொல்லி புரிய வைப்பது
என் கண்களுக்கு,
இனி உன்னை
பார்க்கப் போவதில்லை என்று?//

பிரிவின் வேதனை மொத்தமுமாய்
இந்த கவிதையில்...அருமை...

புதியவன் said...

//அவள் நினைவுகள் வீசும் தணல்களிலே,
என் மனமும் இங்கு கொதிநிலையில்…

அவள் அருகாமை என்னும் காற்றில் கலந்திடவே,
ஒவ்வொரு நொடியும் துடிக்கிறதே!//

துடிப்பை உணர முடிகிறது இந்த வரிகளில்...

புதியவன் said...

//ரொம்ப பாவமாத் தான்டா இருக்கு…சரியான அட்டுடா மச்சான்….”
“அய்யோ!!! என்ன இப்படி மொறைக்குற? மலர சொல்லல, உன்னை சுத்தி சுத்தி ஓடுச்சுகளே, தேவதைக…அதுகள சொன்னேன்…”//

ஹா...ஹா...ரசித்தேன்...

mvalarpirai said...

// உன்னோட கழித்த ஒவ்வொரு
இடமாய் செல்லும் போது,//

கவிதைகள் அருமை..இந்த கவிதை "உன்னோட நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மறவாது கண்மணியே " என்ற வைரமுத்துவின் இருவர் கவிதையை ஞாபகபடுத்துது !

// ’ச்சே…என்ன உலகமிது? விடுமுறையை கழிக்க கொடை, ஊட்டி என்று செல்ல வேண்டியது, அங்கேயும் காலில் ரெக்கையை கட்டிக் கொண்டு ஒரு டீ கடை விடாமல் எல்லா இடத்தையும் சுற்ற வேண்டியது. இதற்கு வீட்டிலேயே படுத்து தூங்கலாம்.’ இதை வாய்விட்டா சொல்ல முடியும்? மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டேன் ///

உண்மை உண்மை ! அளைச்சலி பாதி நேரம் போயிடும் :)

// "ஸ்கூல்லையா?” //

தவிர்த்திருக்கலாம்..அல்லது வேறு வாக்கியம் பயன்படுத்தி இருக்கலாம்

// “போய் பேசிப் பாருடா…பேசுறதுல தப்பே இல்ல…இப்பயே போய் ரெண்டுல ஒன்னு கேட்டுடு, ஆமா…” //
அடுத்தவனுக்கு அட்வைஸ் சொல்றம மட்டும் நமக்கு தைரியம், உதாரணங்கள், பழமொழிகள் தானா வரும்..:)

அருமை DP...கலக்குங்க !

புதியவன் said...

//இம்முறை திட்டவட்டமாக ஒலித்தது என் குரல், “இல்லடா…மறுபடியும் நான் போய் பேச மாட்டேன்…வா போலாம்!”//

இந்த பிடிவாதம் எவ்வளவு நாளைக்குன்னு
தெரியலையே...சீக்கிரம் அடுத்த பகுதிய
போட்டுடுங்க திவ்யப்பிரியா...

Vijay said...

மலர் சுரேனுக்குக் கொடுக்கும் வலியைவிட நீங்க இப்படி பிட்டு பிட்டா கதையைப் போட்டு எங்களுக்குக் கொடுக்கும் வலி ஜாஸ்தி. எல்லா பாகத்தையும் ஒரு பெரீஈஈஈய பாகமா எழுதினாத்தான் என்ன?

Smriti said...

Pinraya [:D] Kalakku po....
Kadhai ezhudha arambichu pasanga ponnunga nu maathi maathi psychology ya pottu thaakkara.... Hmmmm... Nothing more to say :P

*இயற்கை ராஜி* said...

ippothaikku present..appuram padikkaren

Anonymous said...

Superb story...
Eagerly waiting for next part...

Raghav said...

Good.

Raghav said...

//என்ன சொல்லி புரிய வைப்பது
என் கண்களுக்கு,
இனி உன்னை
பார்க்கப் போவதில்லை என்று?//

Very Good.

gils said...

//உன்னோட கழித்த ஒவ்வொரு
இடமாய் செல்லும் போது,
நீ இல்லை என்று மனதிற்கு தெரிந்தாலும்,
கண்கள் தேடுவதென்னவோ
உன்னை தான்!
என்ன சொல்லி புரிய வைப்பது
என் கண்களுக்கு,
இனி உன்னை
பார்க்கப் போவதில்லை என்று//


wwwooww..special lines..manasula takkunu otikichi :)

//ரொம்ப பாவமாத் தான்டா இருக்கு…சரியான அட்டுடா மச்சான்….”
“அய்யோ!!! என்ன இப்படி மொறைக்குற? மலர சொல்லல, உன்னை சுத்தி சுத்தி ஓடுச்சுகளே, தேவதைக…அதுகள சொன்னேன்//

LOL :)) kurumbu varigal

dp..chancela dp..kalkiteenga..enakenamo devibala novel padikara mathiri iruku..wonderfully written

gils said...

unga kathaigalla hero neria pesarar :)) romba differenta iruku

G3 said...

Adutha partkku waiting !!!

Mathi said...

Aniyaama ippadi kondu vanthu niruthiteenga....?

Malarukku enna thaa achu...???

ஜியா said...

varnanaigal kalakkal... aduththa partukaaga wait panna vaikira viruviruppu.. kalakkunga :))

//பயனித்த// - spelling mistakenu nenakiren

ஜியா said...

//நாகை சிவா said...

அருமை! அனுபவிக்க முடிகிறது இந்த கவிதையில் உள்ள வார்த்தைகளை! :)//

aaha!! kavithaiya kandaa naalu kilometer thoorathukku odura Puliyaiye rasikka vachitteengalaa?? :O

Ramya Ramani said...

adade kalakkareengale.. wow..story fast ah poi stop agiduche..OMG

Next part seekiram podunga DP.. Plzzzzzzz

FunScribbler said...

//கண்களுக்கும் கழுத்துக்கும் மூளையிடமிருந்து கட்டளை பறக்க, நான் திரும்பிப் பார்த்த அந்த நொடி, என் உடம்பில் என்றைக்கோ செத்து போயிருந்த செல்கள் கூட உயிர்தெழுந்தது!//

superrrrrbb lines!:)

FunScribbler said...

//ஆண்களை விட பெண்களே முதலில் சுதாரிப்பார்கள் என்று மலரும் நிரூபித்தாள்,//

பொண்ணுங்க மனசு படுற பாடு யாருக்கு தெரியும்:(

FunScribbler said...

//இது வரைக்கும் நல்லாத்தாண்டீ இருந்தேன்’//

ஹாஹா... இது அக்மார்க் பசங்க டயலாக்!

FunScribbler said...

//நான் அடிச்சு சொல்றேன்…அவ உன்னை லவ் பண்றா…வெளிய சொல்லாம மறைக்குறா…”//

தோழர்கள் கூட இருந்தாலே இப்படி தான்... ஏதாச்சு சொல்லிகிட்டே இருப்பாய்ங்க..:)

FunScribbler said...

//இல்லடா…மறுபடியும் நான் போய் பேச மாட்டேன்…வா போலாம்!”//

ஆஹா..இது குஷி படத்துல வந்த ஈகோவாச்சே!:)

FunScribbler said...

கதை ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்கு....அடுத்த பாகத்த போட்டுடுங்க சீக்கிரம்...ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Unknown said...

Waiting eagerly for the next part!

Anonymous said...

Divya, Nalla ezhudhara. I read all your stories overnight. Best wishes! - Kavitha

மேவி... said...

நல்ல இருக்கு அனா ...
டக்குன்னு ஆண் பார்வை ல இருக்கிற கதைன்னு forgetting.....
கதை அழகு...
கவிதை அதை விட அழகு .......

நான் இப்போ ஒரு ஹில் ஸ்டேஷன் ல இருக்கிறேன் உங்க கதை ஹீரோ மாதிரி

Divyapriya said...


நட்புடன் ஜமால்

நன்றி ஜமால்...

------
ஆயில்யன்
//தேர்டு பார்ட்டு நிறைய யோசனைகளை கிளப்பிவிட்டுடுச்சே! :)//

அப்படியா? என்னன்னு சொல்லவே இல்லையே :) விரிவான கருத்துக்கு நன்றி ஆயில்யன்...
------
தாரணி பிரியா

நன்றி தாரணி....
------
நிமல்-NiMaL

நன்றி நிமல்...
------
இவன் said...

// :( Feelings ayuduchu So no comments as of now :( :'(//

ஏன்? என்ன ஆச்சு? :))
------
நாகை சிவா
//
அருமை! அனுபவிக்க முடிகிறது இந்த கவிதையில் உள்ள வார்த்தைகளை! :)//

ரொம்ப நன்றி சிவா...ஆனா, ஒன்னு தெரியுமா? இது நிஜமாவே சில வருஷங்களுக்கு முன்னாடி அனுபவிச்சு எழுதின வரிகள் தான்...
------
வெட்டிப்பயல்

ரொம்ப நன்றிண்ணா...
//adutha paakathu one week wait pannanuma?

vaarathuku rendu postnu en poada koodathu?//

கண்டிப்பாண்ணா...இந்த தடவை இப்படி போட்டர்லாம்பனு தான் நினைச்சேன்...ஆனா, எல்லாரும் புதன் கிழமை தான் அடுத்த பகுதியான்னு கேட்டு கமெண்ட்டினதால, சரி அந்த trend யே இருந்துட்டு போகட்டும்னு விட்டுட்டேன் ;) நாளைக்கு அடுத்த பகுதி போட்டுட வேண்டியது தான்...

Divyapriya said...


Divya

நன்றி திவ்யா...அடுத்த பகுதி நாளைக்கு...
------
புதியவன் said...

//துடிப்பை உணர முடிகிறது இந்த வரிகளில்..//

மிக்க நன்றி புதியவன்...
------
mvalarpirai

நன்றி mvalarpirai
------
விஜய்

ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க விஜய்...அடுத்த பகுதி சீக்கரமே போட்டுடறேன் :)) நன்றி விஜய்...
------
Smriti

ஆமா smriti...செம சைக்காலஜி தான்...எல்லாம் அதுவா வருது :))
------
இய‌ற்கை

மெதுவா படிங்க...
------
alwaysdrmz

thanks alwaysdrmz
------
Raghav

என்ன ராகவ்? டீச்சர் மாதிரி கமெண்ட்ஸ் போட்ருக்கீங்க :)
------
gils
//wwwooww..special lines..manasula takkunu otikichi :)//

special comments :)) thanks gils...

Divyapriya said...


G3 said...

// Adutha partkku waiting !!!//

:))
------
Mathi

மூளைய கசக்கி suspense யோசிக்கறோம்ல? சும்மாவா? :))
------
ஜி

நன்றி ஜி...

//aaha!! kavithaiya kandaa naalu kilometer thoorathukku odura Puliyaiye rasikka vachitteengalaa?? :O//

:))
------
Ramya Ramani

ரம்யா சொன்னா அப்பீல் ஏது? இந்த முறை சீக்கரமே அடுத்த பகுதி :))
------
Thamizhmaangani

உங்க பின்னூட்டங்கள்ல mostly எனக்கு பிடிச்ச வரிகளையே tag பண்ணி நல்லா இருக்குன்னு சொல்றீங்க :) இது போல பின்னூட்டங்கள் சந்தோஷத்தையும், ஊக்கத்தையும் அளிக்குது...நன்றி Thamizhmaangani
------
ramya_shini

Thanks a lot ramya...keep reading n keep commenting too...
------
kavitha

thanks kavitha...
------
MayVee said...

//நல்ல இருக்கு அனா ...
டக்குன்னு ஆண் பார்வை ல இருக்கிற கதைன்னு forgetting.....//

நன்றி Mayvee...ஏன் forgetting? ஆண் பார்வையில இருக்கற கதை மாதிரி தெரியலையா? சரி, அடுத்த பகுதியிலயாவது அப்படி தெரியுதான்னு சொல்லுங்க :))

Karthik said...

ஆஹா, நான் ரொம்ம்ம்ம்ம்ம்ப லேட் போல. :-(

சூப்பரா இருக்குங்க. நெக்ஸ்ட் பார்ட் படிக்க போறேன்.

Unknown said...

palaya aal-a kodai-la oru teacher-a ..hmm..romantic..hehe..will read the next part