Saturday, November 14, 2009

விடாது [தொடரும்] - 2

அ.பொ.தி.பி அவர்களே! கதையை ஏற்கனவே முழுசா எழுதி வச்சிட்டு, வாரத்துக்கு ஒரு முறை தான் பதிவு போடறீங்க, இது உங்களுக்கு ஓவரா இல்ல?

என் சின்ன மூளையை கசக்கி, பிழிஞ்சு, காயப்போட்டு, கஷ்டப்பட்டு யோசிச்சு சஸ்பென்ஸ் வைக்கறேன்ல? அதுக்காக தான் :))

சரி இப்ப அடுத்து என்ன கதை வரப் போகுது?

அடுத்த கதை பேரு "ஓடிப்போலாமா" இதுல, மலரே மெளனமா கதையில வர பாப்பா @ வினோத் காரெக்டர் தான் ஹீரோ. ஹீரோயின் நித்யா. ஹீரோயின் பேர் என்ன வைக்கலாம்னு ரொம்ப யோசிச்சேன், ஒன்னும் கிடைக்கல, அதான் எங்கக்கா பேரையே வச்சுட்டேன் :P sorry நித்யா :))

ஹ்ம்ம்...கேக்கறனே தப்பா நினைச்சுக்காதீங்க....இதுவும் தொடர்கதை தானா?

ஆமாங்க ஆமாம்...

ஏன் எப்ப பாரும் தொடர்கதை எழுதி கொல்றீங்க? அழகா ஒரு சிறுகதை எழுதக் கூடாதா?

என்ன பண்றது? எனக்கு வர்றத தான நான் எழுத முடியும்? இந்த கதையையே சின்னதா மூணு (?!?!) பகுதியில எழுதலாம்னு ஆரம்பிச்சேன்...ஆனா கொஞ்சம் பெருசா ஐஞ்சு பகுதி ஆகிடுச்சு :(

என்னவோ, எங்களுக்கெல்லாம் தொடர்கதை படிக்க டைமில்லை...எதுக்காக இந்த கதையை படிக்கனும்? இதுல என்ன speciality?

ஒன்னும் இல்லை...வழக்கம் போல இதுவும் காதல் கதை தான். இது நான் எழுதியிருக்கறது தான் ஒரே speciality :P

சரி சரி, மொக்கையை போடாம நிஜமான speciality என்னன்னு சொல்லுங்க...

வழக்கம் போல இல்லாம, இந்த கதையை தினமும்/alternate days ல போடலாம்னு இருக்கேன். அது தான் நிஜமான speciality :) அதனால ஒட்டுமொத்தமா கூட நீங்க வாரயிறுதியில படிக்கலாம். அப்புறம் இன்னொரு speciality கூட இருக்கே...

என்னதது?

இது என்னோட பத்தாவது தொடர் கதை!!!

ஓஓஓஓ...சூப்பர்...வெற்றிகரமாக பத்து தொடர்கதை எழுதி முடித்து விட்டதால், இன்று முதல் நீ, ’பத்து தொடர் கதை கண்ட பத்து!!!’ என்று அன்போடு அழைக்கப்படுவாய்!

நன்றி, நன்றி!!!

அப்புறம் கதைக்கு எதாவது trailer?

அதுக்கு தான இந்த பதிவ போட்டதே! :P அது இல்லாமலா?

ஓடிப்போலாமா?

வினோத் இப்படி…

"உலகத்துலையே பேத்தலான விஷயம்ன்னா அது ஒரு பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்றது தான்... எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, நீ இல்லாம எனக்கு லைஃபே இல்லை. ஒவ்வொரு நிமிஷமும் உன்னை பாத்துகிட்ட இருக்கனும் போல இருக்கு...இந்த மாதிரி வசனமெல்லாம் சத்தியமா என்னால பேச முடியாது.”

ஆனா நித்யா? அவ எப்படி?

"அவள் வாழ்விலேயே அதிகமாக சிரித்த நாட்கள் அந்த ஆறு மாதங்கள் தான் என்று தோன்றியது. என்ன தான் வானம் விரும்பினாலும், வானவில் நிரந்தரமாக வானத்திலேயா தங்கிவிடப் போகிறது? சட்டென சொல்லாமல் கொள்ளாமல் மறைந்துவிடத் தானே செய்கிறது? அதே போல் தான், என்றேனும் நிச்சயமாய் அவனை பிரிய நேரிடும், இதை பற்றி எண்ணுவதில் பயனில்லை, மெல்ல மெல்ல அவனிடம் பேசாமல் விலகியிருப்பதே தனக்கு நல்லது என்று முடிவெடுத்தாள். ஆனால் அவள் எடுத்த முடிவு, சமீப காலமாய் அவன் குரலுக்கு அடிமையாகிப் போயிருந்த அவளது கைபேசிக்கு பிடிக்கவில்லை போலும், உடனே செல்லச் சிணுங்கலாய் சிணுங்கியது. அழைத்தது அவன் தான்! மனதில் அதுவரை அடித்துக் கொண்டிருந்த புயற்காற்று, சட்டென தென்றலாய் மாற, அவள் அந்த நொடியின் முற்பகுதியில் எடுத்த முடிவை, அந்த நொடியின் பிற்பகுதியிலேயே கைவிட்டு, கைபேசியை காதருகில் வைத்து, அவளறியாமலே முகத்தில் அரும்பிய புன்னகையுடன், “ஹ்ம்ம்…” என்று மட்டும் சொன்னாள்."

trailer போதும்னு நினைக்கறேன்...மீதி ப்ளாக்திரையில் காண்க...

சரி, trailer எல்லாம் நல்லா தான் இருக்கு...கதையை எப்ப போடபோறீங்க? அத சொல்லுங்க...

அவங்கெல்லாம் என்ன சொல்றாங்கன்னு நீங்களே பாத்துகோங்க...அவங்க ஓகே சொன்னப்புறம் தான் கதையை போட போறேன்....

யாரு அந்த ’அவங்க’?

அட நீங்க தாங்க...போய் மொத்தல்ல பின்னூட்டம் போடுங்க!

P.S: இது தடை செய்யப்பட்ட பின்னூட்டம்

உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முதல் நீ, "அலப்பறை செய்யும் அல்பை" என்று அன்போடு அழைக்கப்படுவாய்!

23 comments:

G3 said...

மீ தி பர்ஸ்ட்டே :))))

G3 said...

//இது என்னோட பத்தாவது தொடர் கதை!!! //

என்னமா கணக்கு பண்றாங்கய்யா :P

G3 said...

//’பத்து தொடர் கதை கண்ட பத்து!!!’//

அவ்வ்வ்வ்வ்வ்.. சுயகூவல் ரொம்ப பலமா இருக்கே.. இதெல்லாம நாங்க சொல்லனும் மேடம் ;))

G3 said...

//
உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முதல் நீ, "அலப்பறை செய்யும் அல்பை" என்று அன்போடு அழைக்கப்படுவாய்! //

ROTFL :))))))))))))))))))))))))

G3 said...

ட்ரெய்லர் சூப்பரேய் !!! சீக்கிரம் தொடரை ஆரம்பிங்கப்பா :)))))

மேவி... said...

அடுத்த ரமணிசந்திரன் நீங்க தானே..... இனிமேல் உங்களை ஜூனியர் ரமணிசந்திரன் என்று அழைக்கலாம் என்று இருக்கிறேன். அழகிய மங்கையர் நாவல் பதிபக அட்ரஸ் தரட்டுமா?????


எனது உங்களது பத்தாவது தொடர் கதையா???? வாழ்த்துக்கள்....

அடுத்த கொலை வெறி தகுதல் எப்போ ????

gils said...

ROTFL on ur titles :D :D DP chaancele...traileray pattaya kelaputhu :D

ஆயில்யன் said...

என்னது தொடர்கதை அஞ்சு பார்ட்தானா? - இப்படி யாரும் இதுவரை பின்னூட்டமிடாததால் நான் போட்டுக்கிடறேன் :))))))

மேவி... said...

பத்து தொடர் கதை கண்ட உங்களுக்கு "பத்து கண்ட பத்தி" என்ற பட்டதை தரலாம் என்று இருக்கிறேன்......(உபயம் : கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்)

ஆயில்யன் said...

//"உலகத்துலையே பேத்தலான விஷயம்ன்னா அது ஒரு பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்றது தான்... எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, நீ இல்லாம எனக்கு லைஃபே இல்லை. ஒவ்வொரு நிமிஷமும் உன்னை பாத்துகிட்ட இருக்கனும் போல இருக்கு...இந்த மாதிரி வசனமெல்லாம் சத்தியமா என்னால பேச முடியாது//

அட டிரெயிலரு கொக்கி போட்டு இழுக்குது பாஸ் !

Raghav said...

கதை எழுதுங்க எழுதுங்க.. எழுதிகிட்டே இருங்க !!

mvalarpirai said...

என்ன தி.பி நீங்களும் சன் பிக்சர்ஸ் மாதிரி tralier எல்லாம் ?
ஆனா நல்லாதான் இருக்கு ! வாழ்த்துகள் பத்து தொடர்கதைக்கு !
பதிவுலக தொடர்கதை 10டுல்கர் நீங்கதான் :)

Rajalakshmi Pakkirisamy said...

//
உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முதல் நீ, "அலப்பறை செய்யும் அல்பை" என்று அன்போடு அழைக்கப்படுவாய்! //

:) :) :)

Seekiram aarambinga mam

Prabhu said...

இதெல்லாம் ஓவரம்மா!

Nimal said...

தொடர்கதைக்கே டிரெய்லர் போட்டு அசத்துறீங்க...

"பத்து கண்ட பத்தி"க்கு வாழ்த்துகள்... (நன்றி: டம்பி மேவீ)

இந்த (உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முதல் நீ, "அலப்பறை செய்யும் அல்பை" என்று அன்போடு அழைக்கப்படுவாய்! ) தடை செய்யப்பட்ட பின்னூட்டத்தை போடமாட்டேன்... :)

கலக்குங்க...!

Anonymous said...

Awww, nice introduction :)

pari@parimalapriya said...

divya eagerly waiting for the story... its a g8 relief tat this story has oly 5 parts n ur gonna post it every alternative day... thank god..need not wait with fingers crossed 2 read each episode as i did for shoba aptmts..
gud luck

pari@parimalapriya said...

இன்னும் எதுக்கு வெய்ட் பண்ணறீங்க...
அதான் 18 பின்னூட்டங்கள் வந்தாச்சே!!
கதைய போட்டு தாக்குங்க!

Anonymous said...

wow 10 story mudichirukkengala...
all the best.

Vijay said...

கதைக்கு முன்னோட்டத்திலேயே இவ்வளவு பில்டப்பா??? ஆனந்தவிகடன்’ல ஒரு தொடர்கதை புதுசாத் தொடங்கறதுக்கு முன்னாடி சுவரொட்டியெல்லாம் ஒட்டி விளம்பரம் செய்வாங்க. அது மாதிரி நீங்க தொடர்கதை எழுதறதுக்கு முன்னாடி அதன் விளம்பரத்தை மற்ற இணையதளத்துல போட்டால் என்ன??

இன்னிக்கே டிவிட்டிடறேன் :)

அப்புறம் இன்னொண்ணு. இந்த பாழாப்போற டி20 வந்தாலும் வந்தது, இப்பல்லாம் ஒரு நாள் போட்டியெல்லாம் பிடிக்கறதே இல்லை. எல்லாத்திலயும் இன்ஸ்டண்ட் ரிசல்ட், உடனடி முடிவு தேவைப் படுது. உங்க கதைகளெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா அதுக்காக 10-15 பாகமெல்லாம் போட்டு நோகடிக்காதீங்க. நறுக்கு தெறிச்சா மாதிரி மூணே பாகத்துல முடிச்சுடுங்க :)

ஏதோ என் மனதுக்குத் தோணினதைச் சொல்லறேன் :)

அன்புடன்
விஜய்

சங்கர் said...

//உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முதல் நீ, "அலப்பறை செய்யும் அல்பை" என்று அன்போடு அழைக்கப்படுவாய்!//

self damage, super appu..

vaazhthukkal madam!!! Keep rocking!!

DHANS said...

super, continue :)

Unknown said...

/உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முதல் நீ, "அலப்பறை செய்யும் அல்பை" என்று அன்போடு அழைக்கப்படுவாய்!//

தடை செய்யப்பட்ட பின்னூட்டத்தை போட்ட மகிழ்ச்சியுடன் போய் கத படிக்கிறேன்.. ;))) Break the rules...