பகுதி 7
அது வரை அனு அந்த டைரியை பார்த்ததே இல்லை. அப்பா செல்லும் முன், வீட்டில் பல பொருட்களை இடம் மாற்றியது ஞாபகம் வந்தது. பாட்டியின் குண்டு குண்டு கையெழுத்தை பார்த்ததுமே கண்டி பிடித்து விட்டாள் அனு. பாட்டியோட டைரியா என்ற ஆவல் தலை தூக்க, கையில் எடுத்த கத்தியை டேபிள் மீது வைத்தாள்.
மிக சில பக்கங்களில் மட்டும் ஏதோ எழுதி இருந்தது. அப்படியே அதை புரட்டிப் பார்க்கும் போது, அனு குட்டி என்று ஏதோ ஒரு வரி கண்ணில் பட, முதல் வரியில் இருந்து படிக்க ஆரம்பித்தாள்.
“இவங்க தான்…என் அன்பு மனைவி…என் ஆருயிர் தோழி…” யாரா இருந்தாலும், அவங்ககிட்ட என்னை இப்படி அறிமுகப் படுத்தும் போது அவர் கண்கள்ள தெரிஞ்ச சிரிப்பும், உண்மையும், இன்னும் என் கண்ல அப்படியே நிக்குது.
“வீட்டுக்காரர் இறந்து இருபது நாள் தான் ஆச்சு,அதுக்குள்ள இந்தம்மா கிளப்பிடுச்சு பாரு…எல்லாம் முன்னாடியே ரெடி பண்ணியே வச்சுருக்கும் போல…” இளக்காரமாய் பக்கத்து வீட்டுப் பெண் சொன்னது கூட சிரிப்பு வரலை எனக்கு, “அம்மா…நிஜமா நீங்க என்னோடவே வந்தர்றீங்களா? Thanks மா…நான் கூட நீங்க எங்க அப்பா இருந்த வீட்ல தான் நானும் இருப்பேன்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன்” ன்னு என் மகனே சொன்னத நினச்சா தான் சிரிப்பு வருது.
அவர் போய்டாரு…முப்பத்திரெண்டு வருஷம் அழகா வாழ்ந்தோம். அதுக்காக? அந்த வீட்ல தான் அந்த நினைவுகள் எல்லாம் இருக்குன்னு அர்த்தமா? என் மனசுல எல்லாமே பத்திரமா இருக்கும், எந்த ஊர் போனாலும்…போனவங்கள நினச்சு உருகி, இருக்கறவங்கள கஷ்டப் படுத்தறது தான் இந்த ஊர்ல பாசமா?
அவர் இருந்த வரைக்கும் தான், ’நான் வீட்டை விட்டுட்டு வர மாட்டேன்…எங்க பரம்பரை வீட்ல தான் என் உயிர் போகும்’ ன்னு பிடிச்ச பிடிவாதாத்தால, மகன், மருமக, பேத்தி இவங்களை எல்லாம் விட்டுட்டு இருந்துடேன். இனி என்ன? எனக்காக இருக்கறவங்களுக்காக, ஏன் எனக்காகவும் கூட சந்தோஷமா வாழ்வேன்.
அவர மாதிரி பரம்பரை வீட்ல பக்கத்துல யாருமே இல்லாம சாகறத விட, ஏதோ ஒரு ஊர்ல, ஏதோ ஒரு வீட்ல, என் அனு குட்டி மடில சந்தோஷமா சாவேன். "
டைரியின் மேல் ஒரு துளி கண்ணீர் சொட்டியது. அதற்கு மேல் படிக்க முடியாமல் டைரியை மூடி வைத்து விட்டு, அப்படியே தரையில் அமர்ந்து சுவர் மேல் சாய்ந்தாள்.
கேவலம் நாலு மாசப் பழக்கம், அந்த பாலா…அவன் ஏதோ சொன்னான்னு சுக்கு நூறாய் உடைந்து போனோமே…பாட்டி எப்படி முப்பது வருஷம் பழகிய தாத்தாவை விட்டு இவ்வளவு சந்தோஷமா, அதுக்கப்புறம் இருபது வருஷம் வாழ்ந்துருக்காங்க? ’போனவங்கள நினச்சு உருகி, இருக்கறவங்கள கஷ்டப் படுத்தறது’ இத தான, நானும் இப்ப பண்ண இருந்தேன்…எனக்கே, எனக்காக இருக்குற அம்மா, அப்பாவ, கோவப் பட்டு கத்தி, குத்தி கிழுச்சு, இப்ப அவங்கள ஒரே அடியா விட்டுட்டு போற அளவுக்கு துணிஞ்சிட்டனே…
தன் கண்களை பார்த்த வண்ணம், தன் மடியிலேயே உயிரை விட்ட பாட்டியின் கண்கள் ஒரு கனம் அவள் மனக்கண் முன் தோன்றியது.
---
மறுநாள் விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரி தொடங்க இருந்ததால், அன்று மாலையே அடுத்த நாளுக்கு வேண்டியதை தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் இளமதி. கவிதாவோ, ஊரில் இருந்து கொண்டு வந்த பையை கூட பிரிக்காமல், ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஜன்னல் கம்பிகளின் ஊடே, மேற்கே விரிந்து கிடந்த செவ்வானப் படலம், அவள் கண்களிளும் பிரதிபளித்துக் கொண்டிருந்தது.
“கவி!” என்ற இளமதியின் அழைப்பு, கவிதாவின் விழி நீரை தாங்கி நிற்கும் அணை போல், கண்ணீரை அவள் கண்களுக்குள்ளேயே தடுத்து நிறுத்தியது.
தோழியின் கண்ணீர் திரையிட்ட கண்களை பார்த்ததும், மெல்ல அவளருகே சென்ற இளமதி, “என்ன ஆச்சு கவி?” என்றவாறே ஆதரவாய் அவள் கரம் பற்றிக் கொண்டாள்.
“போன வருஷம் முதல் நாள், நானும் அனுவும், கையை கோத்துகிட்டு, எப்படி சிரிச்சுகிட்டு க்ளாஸுக்கு ஓடி வந்தோம் தெரியுமா? நாளைக்கு…ஃபைனல் இயர் முதல் நாள்…” அதற்கு மேல் பேச முடியாமல் திணறிய கவிதாவையும், இவள் அழுதால் எப்படி தேற்றுவது, என்று தெரியாமல் தர்மசங்கடத்தில் தவித்த இளமதியையும், மீட்பதற்காகவே ஒலித்தது போல் இருந்தது, அவர்களுது விடுதி தோழி ஒருத்தியின் குரல்.
“இளமதி!! இளமதி! உன்ன HOD கூப்டறார். கீழ ஆஃபிஸ் ல வெய்ட் பண்ணிட்டு இருக்காரு”
திடீரென்று HOD அழைக்கவும், என்னவோ ஏதோ என்று கவிதாவுகம், இளமதியும் கீழே வேக வேகமாக இறங்கி சென்றனர்.
அவர்களை பார்த்ததும் ஆச்சர்யமும், கோபமும் ஒரு சேர ஆக்கரமித்தது அவர் முகத்தை, “என்னம்மா? ரெண்டு பேரும் இங்க தான் இருக்கீங்களா? அனு உங்கள யாராச்சும் கூட்டிட்டி போறேன்னு இல்ல சொன்னா? அவள எங்கன்னே தெரியலையேம்மா…”
இளமதி, “ஸார் …நாங்களும் அவள தேடினோம், அனு உங்களோட இருக்கான்னு நினச்சிகிட்டோம் …”
“என்ன இந்த பொண்ணு இப்படி பன்றா? ஏம்மா? நீங்க எதுவும் சொல்றதில்லையா? எனக்கும் என்ன நடக்குதுன்னே புரியல…அவ அப்பன் என்னடான்னா, டீ.ஸி யை வாங்கி பொண்ண அனுப்பி வைங்கறான்…”
அதுவரை அமைதியாக இருந்த கவிதா, “என்னது டீ.ஸி யா? என்ன ஸார் சொல்றீங்க?” கேட்கும் போதே அவள் குரல் உடைந்து, வார்த்தைகள் அழுகைக்குள் சிக்கிச் சிதறிப் போய் வெளிப்பட்டன.
“என்ன? உங்களுக்கு தெரியாதா? சரி, ஆனது ஆகட்டும், மொதல்ல அவ எங்கன்னு கண்டுபிடிக்கனும், நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருங்க, அவ வந்தான்னா, உடனே எனக்கு ஃபோன் பண்ணுங்க…நான் அவங்க ப்ளாட்டுக்கு போய் பாக்குறேன்…ஃபோன் நம்பர் நோட் பண்ணிக்கோங்க…”
அவர் அலைபேசி எண்ணை கொடுத்து விட்டு திரும்பி சிறுது தூரம் தான் சென்றிருப்பார். அதற்குள் அனுவே அவர் எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
“அனு!!! எங்க போய்ட்ட? ஃபோன ஏன் எடுக்கல?” மிரட்டும் தொனியில் சண்முகம் வினவ, அனு, “சாரி அங்கிள்…சைலன்ட்ல போட்டுடேன்…பாக்க மறந்துட்டேன்…”
“நல்ல பொண்ணு மா…இவங்க ரெண்டு பேரையும் வேற இங்க பாக்கவும், ஒரு நிமிஷம் அப்படியே பதறி போய்ட்டேன்…சரி, வா…கிளம்பு, ஆன்ட்டி காத்துக்கிட்டு இருப்பாங்க…”
“இல்ல அங்கிள், நான் வீகெண்ட் வரேனே…இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்ன்னு தோனுது…”
“சரி ஓகே…அப்ப நீ ரெஸ்ட் எடு…நாளைக்கு காலைல எந்திருச்சு தெளிவா யோசிக்கலாம்…I advise you not to take any major decision today”
“இல்ல அங்கிள்…நான் டிசைட் பண்ணிட்டேன்…படிச்சு முடுச்சிட்டு தான் இங்கிருந்து கிளம்ப போறேன்…”
ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் மலர்ந்தது அவர் முகம், “அனு!! நிஜமாவா? இப்ப தான் ரகு பொண்ணு மாதிரி பேசுற…I am so proud of you…so proud…சரி, சரி, நேரம் ஆச்சு, நீ போய் ரெஸ்ட் எடு…meet you fresh in a fresh year tomorrow”
HOD யுடன் பேசிக் கொண்டிருந்த அனுவுக்காக காத்து நின்று கொண்டிருந்த கவிதாவையும், இளமதியையும் திரும்பிப் கூட பார்க்காமல், விடு விடுவென நடந்து அவர்கள் மூவரும் தங்கி இருந்த அறை எண் 113 க்குள் நுழைந்தாள். அவளுக்குள் எத்தனையோ எண்ணங்கள் அலைமோதியது. கடைசியாக நடந்த சண்டை…கவிதாவை பார்த்து அவள் உமிழ்ந்த நெருப்பு வார்த்தைகள்…அவள் அந்த அறையை விட்டு கிளம்பிய போது, கவிதாவின் அழுது சிவந்திருந்த முகம்…அதன் பிறகு பேச முயற்சித்த இளமதியை, தான் நிராகரித்தது…இப்படி எல்லாமே, ஒரு நொடியில் அவள் கண் முன்னால் விரிந்தது. அவர்களிவர் முகத்தில் விழிப்பதற்கு பதில், அந்த பூமி பிளந்து தன்னை விழுங்கிக் கொண்டால் தேவலை என்றிருந்தது.
“அனு…” வெகு நாட்களுக்கு பிறகு கவிதாவின் அந்த அழைப்பு! ஆனால் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் உற்சாகம் இல்லாமல்…துக்கம், சந்தோஷம், நிம்மதி, ஏக்கம், ஒரு வித தவிப்பு…இப்படி பல வித உணர்வுகள் தோய்ந்திருந்தது.
“கவி!!!” என்று கதறியவாரே ஓடிப் போய் அவளை இறுக கட்டிக் கொண்டாள் அனு. என்றும் போல் அன்றும் அமைதியாய், கண்கள் பனிக்க, தன் தோழிகள் இருவரையும் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இளமதி.
கண்களில் நீர் பெருக்கெடுக்க அனு, “சாரி கவி…என்ன மன்னிச்சுடு…ப்ளீஸ்”
கவிதா, “எதுக்கு அனு சாரி எல்லாம்? அழாத அனு….ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு அவளும் அழ ஆரம்பித்தாள்.
இளமதி, “ஹய்யோ…ரெண்டு பேரும் மொதல்ல அழுகறத நிறுத்தறீங்களா? ஹேய் லூசு கவி! நீயும் அவளோட சேந்து அழுதுகிட்டு இருக்கியா?”
அனு, “இளம்ஸ்…நான் பண்ணது தப்புன்னு புரிஞ்சிகிட்டேன்…மறுபடியும் என்னை உங்களோட சேத்துக்கோங்கன்னு சொல்றதுக்கு கூட…”
இளமதி, “நாங்க எப்ப அனு உன்ன பிரிச்சு வச்சோம்? இப்ப சேத்துகறதுக்கு? ஹே அழுமூஞ்சி கவி…சொல்லேன்…”
கவிதா, “ஆமா அனு! We are there! We are there for you always…”
அனு, “இல்ல…நான் உங்க ரெண்டு பேத்தயும் எவ்ளோ ஹர்ட் பண்ணிட்டேன்…உங்கள மொத்தமா அவாய்ட் பண்ணி, ச்சே…நினச்சாலே, எனக்கே…”
இளமதி அனுவின் தோள்களை வளைத்துக் கொண்டு, “அனு! காம் டெளன்…இத பாரு…நீ எங்கள எதுவும் பண்ணல…சந்தோஷம்ன்னா சேந்து சிரிக்கறதுக்கு மட்டும் ஃபரெண்ட்ஸ் இல்ல…சோகம்ன்னா சாய்ஞ்சு அழுகறதுக்கும், தோல்வின்னா தட்டி குடுக்கறதுக்கும், கோவம்ன்னா திட்டி தீக்கறதுக்கும் தான் ஃபரெண்ட்ஸ் நாங்க இருக்கோம்…”
கண்ணீரை துடைத்துக் கொண்ட அனு, “ஆமா…அதே மாதிரி, தப்பு செஞ்சா தட்டி கேக்கறதுக்கும் தான் ஃபரெண்ட்ஸ்…அத நான் புரிஞ்சுக்கல…”
கவி மேலும் மேலும் தொடர்ந்து அழுதுட்டே இருக்கவும், இளமதி, “கவி! இப்ப அழுகறத நிறுத்தப் போறியா இல்லையா? அனுவ பாரு…அவளே சமாதானம் ஆய்ட்டா…”
கவிதா, “இதுக்கெல்ல்லாம் காரணம் அந்த பாலா தான்…அவன கொல்லனும் போல ஆத்திரம் வருது எனக்கு…”
அனு விரக்தியாக சிரித்துக் கொண்டே, “தப்பு அவன் மேல மட்டும் இல்ல கவி! என் மேலையும் தான்…”
கவிதா, “நீ என்ன அனு தப்பு பண்ண? ஒருத்தன உண்மையா லவ் பண்ணது தப்பா?”
அனு, “இல்ல கவி! நான் லவ் பண்ணது தப்பில்லை…அவன் சும்மா டைம் பாஸ்க்காக தான் லவ் பண்ணேன்னு சொன்னானதுனால அவன் மேல கோவப் பட்டேன்…யோசிச்சு பாத்தா நான் மட்டும் ஏன் லவ் பண்ணேன்? எங்க பாட்டி இருந்தப்போ, உங்களோட காலேஜ்ல சந்தோஷமா இருந்தப்போ, அப்பெல்லாம் நான் அவன திரும்பி கூட பாத்தேனா? இல்லயே…பாட்டி போய்டாங்க, யாரும் இல்ல, லோன்லி ஆய்ட்டேன்…டிப்ரெஸ்டா இருந்தேன், இப்படி பல காரணங்கள்னால அவனோட பழக ஆரம்பிச்சேன்…அதுக்கு அப்புறம் அந்த உறவை நான் எவ்ளோ தான் உண்மையா நேசிச்சாலும், ஆரம்பிச்ச காரணம்? அது தப்பு தான? இப்படி ரெண்டு பேரோட தப்புகளோட ஆரம்பிச்ச என்னோட காதல்ங்கற குழந்தை எப்படி கவி நல்ல படியா பிறக்க முடியும்? அதான், கருவிலேயே அழிஞ்சு போச்சு…”
அழாமல் தெளிவாக பேசிய அனுவை, கவிதாவும், இளமதி மிகவும் ஆச்சர்யத்துடனும், சோகத்துடனும் வெறித்தார்கள். சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சி வசப்படும் அனு, இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று அவர்கள் இருவரும் மிக பயந்துதான் போயிருந்தார்கள்.
அனு, “என்ன கேர்ள்ஸ்? எதுவுமே பேச மாட்டேங்கறீங்க? நம்ம ரீ ஜாயினிங்க்கு நாளைக்கு கான்டீன்ல ட்ரீட்?”
இளமதி அப்படியே அனு, கவிதா இருவரையும் அனைத்துக் கொண்டாள்.
சற்று நேரம் கழித்து, அனு அவள் அப்பாவை தொலை பேசியில் தொடர்பு கொண்டாள்.
“அப்பா!”
“அனும்மா…என்னடா?”
“அப்பா…வந்து…நான்…இங்கயே இருக்கேன்…ஃபைனல் இயர் முடிச்சுட்டே வரேன்…”
“என்ன? நிஜமாவா சொல்ற? அனு! ரொம்ப சந்தோஷம் …எதுக்கும் நான் இப்ப உடனே அங்க கிளம்பு வரேன்…”
“வேண்டாம்ப்பா…I’ll take care…நான் ஒழுங்கா படிச்சு, அரியர்ஸ் க்ளியர் பண்ணிட்டு, அப்புறம் வேக்கேஷன்ல அங்க வரேன்…”
“அனு! I am proud of you…I know…I know, you’ll be back to normalcy very soon…”
“ஹ்ம்ம்…தாங்ஸ் பா…அப்புறம்…வந்து…” என்று அனு இழுக்கவும்,
“என்னடா சொல்லு…”
“அந்த…ஃப்ளாட்ட…வேணும்ன்னா, ஹ்ம்ம்ம்…வித்துடுங்கப்பா…”
“என்ன??? ச்சே…ச்சே…அது இருக்கட்டும் அனு …நீ தான் அன்னிக்கு சொன்னியே, அந்த வீடு உனக்கு எவ்ளோ க்ளோஸ்ன்னு…”
“இல்லப்பா, அந்த வீட்ட விட பாட்டி தான் எனக்கு க்ளோஸ்…பாட்டியே போனப்புறம், நீங்களும், அம்மாவும் தான்…வீடெல்லாம் எனக்கு முக்கியம் இல்ல…சாரி ப்பா…”
“அனும்மா…என்னடா? என்னவோ மாதிரி பேசற?”
“இல்லப்பா…I am alright…எனக்கு தூக்கம் வருது…ஃபோன வச்சர்ட்டுமா?”
“இரு, இரு…உங்கம்மா பக்கத்துல நின்னுட்டு ஃபோன பிடிங்கிட்டு இருக்காங்கா…ஒரு நிமிஷம் அவங்களோட பேசிடு…”
“அனும்மா…” என்று அம்மாவின் குரல் கேட்கவும், "மம்மீ!!” என்று குரலில், கஷ்டப்பட்டு ஒட்ட வைத்த உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தாள் அனு. அந்த உற்சாகம், நிஜமாகவே அவளுள் இருந்து ஊற்றெடுத்து, பொங்கி பெருகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நீண்ட நாட்களுக்கு பின், அன்று, நிம்மதியாக உறங்கினாள் அனு.
அப்போது அவள் பாட்டி மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அனு எப்போது விழிப்பாள், என்று அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் அவளுடைய பாட்டி. சட்டென்று முழித்துப் பார்த்த போது தான், அது வெறும் கனவென்று உணர்ந்தாள். மீண்டும் அந்த கனவுக்குள்ளே போக மாட்டோமா என்ற ஏக்கத்தோடு தூங்கிப் போனாள் அனு.
“இருளின் கருமையையும் மீறிக் கொண்டு…
வெள்ளிக்கீற்றாய் தெரிந்த,
உன் இரு கண்கள் உணர்த்தியது…
அன்றும், இன்றும், என்றென்றும்,
நீ என்னுடன் இருக்கிறாய் என்று”
முற்றும்
Sunday, October 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
காதல் கதை மாதிரி கொண்டு போய் இறுதியில் பாசத்துல முடிச்சிட்டீங்க... தற்கொலைக்கு அனு எடுத்த முடிவு அபத்தம்.. ஆனால் அவள் மனம் மாறியது சந்தோஷம்..
எழுத்து மெருகேறியுள்ளது.. வாழ்த்துகள்.
//“இருளின் கருமையையும் மீறிக் கொண்டு…
வெள்ளிக்கீற்றாய் தெரிந்த,
உன் இரு கண்கள் உணர்த்தியது…
அன்றும், இன்றும், என்றென்றும்,
நீ என்னுடன் இருக்கிறாய் என்று”//
இந்த வரிகள் பட்டாசு...
இப்படிக்கு கடைசீ வரி படிப்போர் சங்கம்... ;)
//“இருளின் கருமையையும் மீறிக் கொண்டு…
வெள்ளிக்கீற்றாய் தெரிந்த,
உன் இரு கண்கள் உணர்த்தியது…
அன்றும், இன்றும், என்றென்றும்,
நீ என்னுடன் இருக்கிறாய் என்று”//
semma finish..kalakiruka..now that you have raised your bar you must come up with a even compelling story next time..I am sure you will do that..keep it up
மிக நேர்த்தியான எழுத்துநடையில்.....தொடர்கதையை அட்டகாசமாய் நகர்த்தி, அருமையாக முடித்திருக்கிறீர்கள், மனமார்ந்த பாராட்டுக்கள் திவ்யப்ரியா!!!
தொடர்ந்து பல படைப்புகள் படைக்க என் வாழ்த்துக்கள்!!
Good finish.
\\சந்தோஷம்ன்னா சேந்து சிரிக்கறதுக்கு மட்டும் ஃபரெண்ட்ஸ் இல்ல…சோகம்ன்னா சாய்ஞ்சு அழுகறதுக்கும், தோல்வின்னா தட்டி குடுக்கறதுக்கும், கோவம்ன்னா திட்டி தீக்கறதுக்கும் தான் ஃபரெண்ட்ஸ் நாங்க இருக்கோம்…\\
Amazing. நட்பின் இலக்கணத்தை, ரொம்ப நல்லா விளக்கிருக்கியிருக்கீங்க!! காதலில் ஆரம்பித்து, பாசத்தில் புரண்டு, கடைசியில் நட்பில் சங்கமித்து, நல்ல கதையோட்டம்.
Once Again, very good characterization. Be it, Anu paatti or her friends. All are portrayed excellently.
Romba nalla ezhudhareenga.
I enjoyed reading this story and ofourse the kavidhaigal too..
கதையரசி திவ்யா அவர்கள் வெகேஷனில் போய் விட்டதால், அவங்க இடத்தை திவ்யப்ரியா நிரப்பிட்டாங்க!!
:))) Good one.... இடையிடையே வர்ணனைகளும், காட்சி/எண்ண விளக்கமும் அருமை..... இன்னும் மென்மேலும் பல கதைகள் எழுதி கலக்க வாழ்த்துக்கள்..
//சந்தோஷம்ன்னா சேந்து சிரிக்கறதுக்கு மட்டும் ஃபரெண்ட்ஸ் இல்ல…சோகம்ன்னா சாய்ஞ்சு அழுகறதுக்கும், தோல்வின்னா தட்டி குடுக்கறதுக்கும், கோவம்ன்னா திட்டி தீக்கறதுக்கும் தான் ஃபரெண்ட்ஸ் நாங்க இருக்கோம்…”// - really friendship pathi sonathu arumai arumai.(en friends niyapakam vanthathu)....
//“இருளின் கருமையையும் மீறிக் கொண்டு…
வெள்ளிக்கீற்றாய் தெரிந்த,
உன் இரு கண்கள் உணர்த்தியது…
அன்றும், இன்றும், என்றென்றும்,
நீ என்னுடன் இருக்கிறாய் என்று”//
Good finishing kavithai....!
சூப்பரா முடிச்சிட்டீங்க திவ்யப்ரியா..
அழகான கதை, நல்ல எழுத்து நடை.. தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள்!
ஹை அக்கா சூப்பர் சூப்பர் சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்... நல்லா ஆரம்பிச்சு நல்லா முடிச்சிட்டீங்க..!! :))
//ஸ்ரீமதி said...
ஹை சூப்பர் சூப்பர் சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்... நல்லா ஆரம்பிச்சு நல்லா முடிச்சிட்டீங்க..!! :))
//
ரிப்பீட்டு.. :)
It was really fantastic.. realistic.. :)
GREAT.. :)
ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க திவ்யப்ரியா.. வெகு அருமையான நடை, எழுத்து.. :)
எங்கே இருந்து இந்த மாதிரியான கதை கருக்களை பிடிக்கிறீர்கள்.. ??
மதி
உண்மையான பின்னூட்டதுக்கு நன்றி மதி ;)
---
சிம்பா
என்னது கடசி வரி மட்டும் தான் படிச்சீங்களா?
---
Badrinarayanan
Sure bad…will come up with suryagandhi next :)
---
Divya
Busy schedule லயும் கதைய ஃபுல்லா படிச்சுட்டீங்களா திவ்யா? ரொம்ப நன்றி. சீக்கரம் ஒரு கதை போடுங்க, எல்லோரும் வைட்டிங் :)
---
விஜய் said...
//Amazing. நட்பின் இலக்கணத்தை, ரொம்ப நல்லா விளக்கிருக்கியிருக்கீங்க!! காதலில் ஆரம்பித்து, பாசத்தில் புரண்டு, கடைசியில் நட்பில் சங்கமித்து, நல்ல கதையோட்டம். //
ஆஹா, கமெண்ட்டு சூப்பரா இருக்கே ;) நன்றி விஜய்…
//Once Again, very good characterization. Be it, Anu paatti or her friends. All are portrayed excellently.//
அப்படியா? இந்த கதைல எனக்கு ரொம்ப பிடிச்ச character இளமதி தான்…
// கதையரசி திவ்யா அவர்கள் வெகேஷனில் போய் விட்டதால், அவங்க இடத்தை திவ்யப்ரியா நிரப்பிட்டாங்க!!//
அதெப்படி அவங்க இடத்தை நிரப்ப முடியும்? தலைவி திவ்யாவ சீக்கரமே ஒரு கதை போட சொல்லுங்க ;)
Usha
முதல் வருகைக்கும், உங்க பின்னூட்டதுக்கும் ரொம்ப நன்றி உஷா…
---
ஜி
நன்றி தல, இன்னும் நிறைய கதை லைன்ல நிக்குது…தொடர்ந்து படிங்க…
---
Gowtham
Hey gowtham, எனக்கு கதைல பிடிச்சது கூட இந்த வரிகள் தான்…thanks a lot…
---
நாடோடி
நன்றி நாடோடி…கண்டிப்பா இன்னும் நிறைய கதை இருக்கு ;)
---
ஸ்ரீமதி said...
//ஹை அக்கா சூப்பர் சூப்பர் சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்... நல்லா ஆரம்பிச்சு நல்லா முடிச்சிட்டீங்க..!! :))//
அப்ப நடுல எல்லாம் நல்லா இல்லையா? :-D
---
Saravana Kumar MSK
Thanks saravana…
// எங்கே இருந்து இந்த மாதிரியான கதை கருக்களை பிடிக்கிறீர்கள்.. ??//
நான் எங்க கதை கருக்களை பிடிக்கறேன்? கதை தான் என்னை பிடிச்சுக்குது ;)
//சோகம்ன்னா சாய்ஞ்சு அழுகறதுக்கும், தோல்வின்னா தட்டி குடுக்கறதுக்கும், கோவம்ன்னா திட்டி தீக்கறதுக்கும் தான் ஃபரெண்ட்ஸ்//
101% கரெக்டுங்கோ! :)
ரொம்ப அழகா கதையை முடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்!
அடுத்த கதை எப்போ? ;)
கலக்கிட்டீங்க.. கதை சுபமாக சுவையாக முடிந்துள்ளாது. இதுவரை தந்திருக்கிற கதை ஒவ்வொண்ணும் வித்யாசமா அமைஞ்சுருந்தது. திவ்யப்ரியா இந்த மாதிரிதான் கதை சொல்வாங்கன்னு ஒரு வட்டத்துல சிக்காம சொல்லிருக்கீங்க.. சூப்பர்...
கதை மாதிரி இல்லாம அனுங்கிற பொண்ணு வாழ்க்கைய படம் பிடிச்சு கட்டிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
ஒரு மாசமா வேலை ஜாஸ்தி.அதான் லேட்...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க... கதாபாத்திரங்கள் படைப்பு ரொம்ப ஜோர்.
still no updates??
//பகுதி 7//
முதல் 6 அத்தியாயங்களும் படிச்சிட்டு தான் இதைப் படிக்கனும்னு எதும் நிபந்தனை இருக்கா? :)
murugs
நன்றி murugs
அடுத்த கதை சீக்கரமே ;)
---
Raghav
ஏன் கமெண்ட்டi delete பண்ணிட்டீங்க?எப்படியோ எனக்கு mail வந்துடுச்சு :)) ரொம்ப நன்றி ராகவ்...
---
முகுந்தன்
வேலை பழுவிலையும் படிச்சு முடிச்சுடீங்களா? ரொம்ப நன்றி :)
---
ஜி
இந்த week end சினிமா தொடர் போட்டுட வேண்டியது தான் :)
---
பொடியன்-|-sanjai
படிச்சா தான் நல்லா இருக்கும் ;) சோ கண்டிப்பா படிங்க...
Chanceless..Superb
Good one.. Again...
I liked the character of Kavitha than ilamathi :)
ரொம்ப நல்ல கதை..நானும் 4 வருசம் hostel தங்கி படித்ததால், கதையும், வரும் சம்பவகங்களையும் ஆழ உள்வாங்க முடிந்தது..113 ,306 அறைகள் எங்க hoste-லும் இருக்குங்க! .உண்மையிலேஒரே நாளில் நான் ரசித்து படித்த நீண்ட தொடர் இதுதான்...
Hi Divya,
I've started reading your blog sometime before. I liked all your stories, and this is the best one. You have beautifully described girls life. I really loved this story. There was a similar incident when we had a fight among our friends in school. It really brought tears in my eyes. Keep it up!
Fathima.
Divya priya, story rumba nalla irundhuchu.. super..!!
very nice story.. i liked the part wen anu explains that there is mistake in her part too... romba matured thinking Divya. great...
Post a Comment