Wednesday, October 22, 2008

3rd year - 6

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4, பாகம் 5

ரூம் நம்பர்: 113

இது தான் கவிதா, அனு, இளமதி, இவர்கள் மூவரின் அறை.

 

வீடு ஒரளவிற்க்கு அருகிலேயே இருப்பதாலும், சின்னதிலிருந்தே ஹாஸ்ட்டல் வாசத்தாலும், வாரம் தவறாமல், சனி ஞாயிறு ஊருக்கும் போகாவிட்டால் கவிதாவுக்கு பைத்தியமே பிடித்து விடும்.அனு வேறு புதிதாக ஹாஸ்டலில் சேர்ந்திருப்பதால், கவிதா அனுவையும் அவள் வீட்டிற்க்கு அழைத்துப் பார்த்தாள். ஆனால், அவள் வீட்டிற்க்கு சென்றால், தன் அப்பா, அம்மாவின் ஞாபகம் அதிகமாக வந்து விடுமென்ற பயம் அனுவிற்க்கு… விடாப்பிடியா அனு வர மறுக்கவும், அனுவுக்காக கவிதா ஒரு வாரம் ஊருக்கு போகாமால் இருந்தாள். அவளும் என்ன தான் செய்வாள் பாவம்? அடுத்த வாரமே, மறுபடியும், அனுவ அழைத்துப் பாத்த்து விட்டு, ஊருக்கு கிளம்பிட்டாள்.

 

கவிதா இப்படின்னா, இளமதி, அந்த செம்ல தான் CAT க்ளாஸ் போக ஆரம்பித்திருந்தாள். வார நாட்கள்ல எதுவும் தெரியாவிட்டாலும், வார இறுதியில், அனுவை தனிமை வாட்டி எடுத்தது.இளமதி மாதிரி என்னேரமும் எதோ ஒரு புத்தகம் படிப்பதில் அவளுக்கு ஈடுபாடும் இல்லை, கவிதா மாதிரி ஊருக்கு செல்வதற்கும் வழியில்லை.அப்படி, தனிமையில் தோய்ந்த ஒரு சனிகிழமை மதியம் தான் காலேஜ் லைப்ரரியில் பாலாவை சந்தித்தாள் அனு. ஏனோ, அன்று அவனை பார்த்ததும், அவள் உதட்டில் மெலிதாக ஒரு புன்னகை.

 

பாலா ஒரு நொடி தயங்கி விட்டு, பின்பு அனுவிடம் வந்து, “அனு…உன் பாட்டி போய்டாங்கன்னு….i m sorry அனு”

 

அனு அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல், விரக்தியான ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக அளித்தாள்.அவளிடம் இருந்து எந்த பதிலும் எதிர்பார்க்காதவன் போல, பாலாவே தொடர்ந்தான், “ரொம்ப நல்லவங்க அனு…உனக்கு தெரியுமா? நீ என்ன அன்னிக்கு அடிச்சப்ப உன் பாட்டி என்கிட்ட வந்து பேசினாங்க…”

 

அனு முகத்தில் ஆச்சர்ய ரேகைகள், “என்னது? உன்கிட்ட வந்து பேசினாங்களா?”

 

“ஆமா அனு…என் பேத்தி கோபத்துல அவசரப் பட்டுடா…அவ மேல உனக்கு ஏதாவது கோபம் இருந்தாலும், எனக்காக அதை எல்லாம் மறந்துடு…அப்படீன்னாங்க…”

 

“ஹ்ம்ம்….”

 

“நான் அதையெல்லாம் எப்பயோ மறந்துடேன் அனு, எதையும் நான் ப்ளான் பண்ணி செய்யல, அப்ப நடந்த விஷயம் எல்லாம், அப்படி இருந்துச்சு…அவ்ளோ தான்…”

 

அனு எதுவுமே சொல்லாமல் இருக்கவும், பாலா, “சரி…உனக்கு என்கிட்ட மறுபடியும் பேசறதுக்கு இஷ்டமில்லைன்னு நினைக்குறேன்…அப்ப நான் வரேன்…”

 

“ஹே…இல்ல பாலா, அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல…”

 

“ஹ்ம்ம்…குட்…நம்ம அபார்ட்மென்ட்ல independence day function நடந்துச்சே…ஞாபகம் இருக்கா? உன்கிட்ட இத சொல்ல தான் முக்கியமா இப்ப வந்து பேசினேன்…”

 

“ஹ்ம்ம்ம்…அதுக்கென்ன?”

 

“அதுல உன் பாட்டி, பாடினாங்களே…அந்த வீடியோ, என்கிட்ட இருக்கு…”

 

வாடி வதங்கி போயிருந்த பூ ஒன்று, திடீர் என்று புத்தம் புதிதாய் மலர்ந்தது போல ஆனது அனுவின் முகம், “ஹே….நிஜமாவா சொல்ற???”

 

“ஆமா…அனு…என்கிட்ட இருக்கு…”

 

“இப்பயே பாக்கலாமா?”

 

“எங்க வீட்ல இருக்கே…வீட்ல டி.வீ.டி player வேற repair…”

 

“அதனால என்ன? எங்க flat சாவி தான் என்கிட்ட இருக்கே…நான் கூட ரொம்ப நாளா அந்த வீட்டுக்கு போகனும், போகனும்ன்னு நினச்சுட்டு இருந்தேன்…நாம இப்பயே போலாமா? உனக்கு வேற எதாவது வேலை இருக்கா இப்போ?”

 

“இத விட, எனக்கு வேற என்ன பெரிய வேலை? இப்பயே போகலாம்…”

 

ஃப்ளாட்டில் இருந்து நேரம் கழித்து திரும்பிய அனுவை பார்வையாலே அளந்தவாறு இளமதி, “அனு! எங்க போய்ட்டு வர?” என்று கேட்க, சாதாரணமாக அவள் கேட்டது கூட, அனுவுக்குள் ஏதோ செய்தது.

’அன்னிக்கு வண்டில கூட்டிட்டு வந்ததுக்கே என்னென்னவோ சொன்னா…இப்ப என்ன சொல்லுவாளோ’ என்ற பயமா, இல்லை தான் செய்தது தவறு என்ற எண்ணமா, எதோ ஒன்று அவளை தடுத்தது.

“நான்…வந்து…லைப்ரரிக்கு தான் போய்ட்டு வரேன்…” முதன் முறையாக தோழியிடம் பொய் சொன்னாள் அனு. அந்த பொய்யே அவர்கள் பிரிவுக்கு அடித்தளமாக இருந்தது.

 

வார இறுதி கொடுத்த தனிமை, அனுவின் புலம்பல்களையும், அவளுடைய பழைய நினைவுகளையும் காது குடுத்து கேட்பதற்துக்கு ஒரு நல்ல நண்பனாய் ஆரம்பத்தில் அவளோடு பழக ஆரம்பித்த பாலா, ஒன்றிரெண்டு மாதத்திலேயே அவள் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறி, வெகு விரைவில் அவள் மனதில் காதல் துளிர்ப்பதற்கும் காரணமாக இருந்தான். பாலாவே ப்ரோப்ஸ் செய்வதற்காக காத்திருந்து, அதை அனுவும் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்ட நாளும் வந்தது.

 

இந்த விஷயம் கவிதா, இளமதிக்கு தெரிந்த போது தான் பிரச்சனையே ஆரம்பமானது. அவர்கள் பார்வையில் அனுவின் இந்த காரியம் தவறு என்றே பட்டது. ’நண்பர்கள் இழைப்பது பிழை என்று பட்டால், அதை சுட்டி காட்ட துணிவில்லை என்றால், அவர்கள் உண்மையான நண்பர்களே இல்லை’ கவிதாவும், இளமதியும் அனுவிடம் இது தவறு என்று நேரடியாகவே சொல்லி பார்த்தார்கள், ஆனால் அனு தான் அதையெல்லாம் ஏற்கும் மனநிலையில் இல்லை. ’பாலாவோட பழகாதேன்னு’ அவர்கள் இருவரும், கண்மூடித்தனமாய் எதிர்த்து, எவ்வளளோ எடுத்துச் சொல்லியும் அனு காது குடுத்து கேட்பதாய் இல்லை.

எப்படியோ ஒழிந்து போகட்டும் என்று நினைக்கவும் முடியவில்லை, அதே நேரத்தில் சொல்லி புரியவைக்கும் முடியாமல், செய்வதறியாது இருவருமே குழம்பி தவித்தனர்.

ஒரு நாள் ஹாஸ்டல் ரூமில் கவிதாயும், இளமதியும்…

 

கவிதா, “பேசாம அங்கிளுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுவோமா?”

 

இளமதி, “என்ன கவிதா பேசுற? அவ்ளோ தூரத்துல இருக்கறவங்கள இப்படி எல்லாம் சொல்லி பயமுறுத்த சொல்றியா?”

 

“அப்புறம் வேற என்ன தான் பண்றது?”

 

இளமதி, “இரு…கொஞ்ச நாள் பொறுத்து பாப்போம்…எப்படியும், இந்த வருஷத்தோட பாலாவுக்கு காலேஜ விட்டு போய்டுவான்…”

 

இளமதி அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்கவும், கவிதா ஆவேசமாகி, “ஆமா இளம்ஸ்…நீ சொல்றதும் சரி தான்…இன்னும் மூணு மாசம் தான்…அவன் காலேஜ விட்டு மட்டும் இல்ல, அனு வாழ்கைய விட்டும் போய்டுவான்…எப்படியோ, அந்த கழிசடை ஒழிஞ்சா சரி தான்…”

 

இவர்கள் இருவரும் மும்பரமாக பேசிக் கொண்டு இருந்ததில், ரூம் வாசலில் நின்று கொண்டிருந்த அனுவை பார்க்கவே இல்லை.

 

“கவிதாஆஅ!!! how dare u? அவன் என்ன விட்டுட்டு போகனும்ங்கறது தான் உன்னோட ஆசையா…” வெடித்து அழும் நிலைக்கு சற்று முந்தைய நிலை போல் இருந்தது அவள் முகம்….

 

அனுவை அங்கே கொஞ்சம் கூட எதிர் பார்க்காத இளமதியும், கவிதாவும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை.

 

கவிதா, “அனு…புரிஞ்சுக்கோ அனு…அவன் உன்ன ஏமாத்துறான்…”

 

“ஒரு வார்த்தை…இன்னும் ஒரு வார்த்தை பேசின…அப்புறம் நடக்கறதே வேற…”

 

கவிதா, “என்ன பண்ணுவ? சொல்லு…என்னடி பண்ணுவ? ஒன்னா சுய புத்தி வேணும், இல்ல சொல் புத்தியாவது வேணும்….ரெண்டுமே இல்ல உனக்கு, தருதலைன்னு தெரிஞ்சே அவனோட சேந்து சுத்திட்டு இருக்கியே…I m ashamed of you…”

 

அனு, “who are you? Who the hell are you? இது என் லைஃப், எனக்கு தெரியும், யாரும் எனக்காக மெனக்கெட தேவையில்லை…”

 

எதோ பேச வந்த கவிதாவ இடைமறிச்சு இளமதி, “போதும் கவி…வேண்டாம்…கோபத்துல விழற வார்த்தைகளுக்கு பதிலுக்கு பதில் பேசினா பிரச்சனை தான் வரும்…மூணு வருஷமா, அழகா செதுக்கி வச்சிருக்கற நம்ம நட்ப, நாமளே வார்த்தைகளால துண்டு துண்டா உடைக்க வேண்டாம்…”

 

அனு, “ஓ, இப்ப கூட தத்துவம் பேசறயோ? இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க...எப்ப என் காதல் உடைஞ்சு போகனும்ன்னு நீங்க நினைச்சீங்களோ, அப்பயே உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல….நம்ம so called நட்பு, உடைஞ்சு மட்டும் இல்ல, மண்ணோட மண்ணா போய்டுச்சு”

 

ரூம் நம்பர் 113 யில் இருந்து, ரூம் நம்பர் 306 என்ற தனி அறைக்கு ஒரே வாரத்தில் மாற்றிக் கொண்டு சென்றாள் அனு. இதில் அதிகம் பாதிக்கப் பட்டது அனு கூட இல்லை, கவிதா தான்! அது வரை அவளுக்கு கிடைத்த எத்தனையோ தோழிகளில், அனுவை மட்டும் அவள் அளவுக்கு அதிகாம நேசித்தது தான் அதற்கு காரணம்! அனு ஏற்படுத்திச் சென்ற ரணம், நீண்ட நாட்களுக்கு ஆறாமல் அவளுள் தீயாய் கொதித்துக் கொண்டிருந்தது. அனுவை பார்க்கும் போதும், அவளை பற்றி பேசும் போதும், ஏன் நினைக்கும் போது கூட, அவளே ஒரு தீப்பிழம்பாய் உருமாறி அனுவை பார்வையாலேயே சுட்டெரித்தாள்.

----

ஆறாவது செமஸ்டர் தேர்வும் நெருங்கி வந்தது. எப்போதும் போல் இல்லாவிட்டாலும் அனு ஒரளவிற்க்கு நன்றாகத் தான் தயார் செய்திருந்தாள்.கடைசி பரிட்சைக்கு முந்தய தினம் தான், பாலாவுக்கு வேலை கிடைத்தது. அவனுக்கு வேலை கிடைத்ததில், அவனை விட அனுவுக்கு தான் நிரம்ப சந்தோஷம்.

 

“ஹப்பா…பாலா! இப்ப தான் எனக்கு ஒரு தைரியமே வந்துச்சு…எப்படிடா, எங்கப்பா கிட்ட சொல்ல போறேன்னு நினைச்சுட்டு இருந்தேன்…நீ வேற ப்ளேஸ் ஆகலையா…ஆனா இனி பிரச்சனையே இல்ல….எக்ஸாம் முடிஞ்ச உடனே சொல்லிட போறேன்…”

 

“என்ன அனு சொல்ற? உங்கப்பா கிட்ட என்ன சொல்ல போற?”

 

“நம்ம விஷயத்த பத்தி தான் பாலா…”

 

“நம்ம விஷயம்ன்னா, என்ன அனு? தெளிவா சொல்லு…”

 

“நம்ம லவ் பண்றது, கல்யாணம் பண்ணிக்க ஆசைபடறது…இதப்பத்தி தான்…”

 

சொல்ல கூடாத வார்த்தைய அனு சொல்லிவிட்டது போல் ஒரு ரியேக்ஷனோடு பாலா, “என்னது??? கல்யாணமா? என்ன அனு சொல்ற? நான் எப்ப உன்ன கல்யாணம் பண்ணிகறேன்னு சொன்னேன்?”

 

“பாலா…விளையாடாத…”

 

“நீ தான் அனு விளையாடுற…let me make myself clear…I am not ready for any sort of commitment now…”

 

“அப்டீன்னா… அப்டீன்னா…நீ…நீ…என்ன லவ் பண்ணலையா?”

 

“இப்ப கூட சொல்றேன்….நான் உன்ன லவ் பண்றேன்…உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்….ஆனா, அதுக்காக உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு அவசியம் இல்லையே…”

 

“கல்யாணம் பண்ணிக்குற ஐடியா இல்லனா, இத்தன நாளா சும்மா என்கூட ஊர் சுத்தினியா? சொல்லு…பாலா! சொல்லு…”

 

அனு உடைந்து அழுகவும், “Just stop it அனு…don’t behave like a kid…பெரிய இவ மாதிரி பேசுற? யு.யெஸ்ல நீ போகாத டேட்டிங்கா? உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு நான் இது வரைக்கும் நினைச்சது இல்ல…but…hey…don’t worry…may be, I’ll consider you when I think of a serious relationship…but definitely not now…”

 

கடைசி பரிட்சை…

 

ஏற்கனவே குழம்பிப் போயிருந்த அனு, முதல் நாள் இரவு முழுதும், படிப்பதற்காக என்று முழித்திருந்து, ஆனால் படிக்காமல் பாலா சொன்னதெல்லாம் நினைத்து நினைத்து மனதிற்குள் மறுகிக் கொண்டிருந்தாள்.

 

கடைசி நேரத்தில் ஏதோ புரட்டி விட்டு, ஒன்பது மணி பரிட்சைக்கு ஒன்பது ஐந்துக்கு பரபரவென்று ஹாலில் நுழைந்த அனுவை பார்த்து, இளமதியால் ஒரு பெருமூச்சு மட்டும் தான் விட முடிந்தது.

 

வினாத்தாளில் தெரிந்த கேள்விகளுக்கெல்லாம் ஏதோ சுமாராக பதில் எழுதிக் கொண்டிருந்தவளின் காதில், டங், டங் என்ற ஒலி ஒலிக்க, அந்த அறையின் கடிகாரத்தை பார்த்தாள். மணி பத்து…”ஐயோ, பன்னென்டு மணிக்குள்ள வீட்டுக்கு போகனுமே…போனா பாட்டியை ஹாஸ்பிட்டல்ல சேத்தி காப்பாதிடலாம்’ என்ற விசித்திரமானதொரு எண்ணம் குழம்பிப் போயிருந்த அவள் மனதில் உதிக்க,

’அனு, எங்க போற? எக்ஸாம் எழுதி முடிச்சுட்டு போ’ என்ற ராமமூர்த்தி ஸாரின் கத்தல்கள் எதுவும் காதில் விழாமலே அந்த அறையை விட்டு வெளியே ஓடினாள் அனு!!!

 

அதன் பிறகு, ஒரு வாரம் அறையை விட்டு, எப்போதாவது சாப்பிடுவதற்கு மட்டும் வெளியே வந்த அனுவை பார்த்து, அவள் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச கோபம் கூட பறந்து விட்டது இளமதிக்கு. பரிட்சை முடிந்ததும் கவிதா ஊருக்கு போனது வேறு வசதியாய் இருக்கவே, மெல்ல மெல்ல அனுவிடம் பேசி அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்று கொண்டு தான் இருந்தாள் இளமதி.

 

பாலா பற்றின செய்தியும் அப்போது அவளுக்கு அப்போது தெரியாததால், ’சரி, கொஞ்சம் நாள் பொறுத்துத் தான் பார்ப்போம்…அவளுக்கு தனிமை பிடித்திருந்தால், சில நாள் அப்படியே இருக்கட்டும’ என்று இளமதி நினைத்தது எவ்வளவு தவறென்று அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. இளமதியை பொறுத்த வரை, ’என்ன தான் தோழியாக இருந்தாலும், ஒருவருகென்று இருக்கும் ’space’ ஐ மதிக்க வேண்டும், அவர்களாக சொல்ல வேண்டும் என்று நினைத்தால் சொல்வார்கள், அது வரை அவர்களை ’என்ன’, ’ஏது’ என்று கேட்டு தொன தொனகக் கூடாது’.

 

இதுவே கவிதா அங்கு இருந்திருந்தால், அனுவின் இந்த நிலையை பார்த்து, அவளை தோண்டி துருவி, ஏதாவது செய்து அவளை பழைய படி மாற்றி இருப்பாள்…முடிந்தவரை இவ்வளவு பெரிய முடிவு எடுக்கும் அளவிற்காவது செல்லாமல் பார்த்திருப்பாள் என்று பிற்பாடு தான் இளமதிக்கு தோன்றியது.

 

-----

“டங் டங் டங்”  கடிகாரம் மூன்று முறை ஒலி எழுப்பியது. இன்னும் இரண்டு மணி நேரம் தான் இருக்குறது, ‘இப்படி அழுது அழுதே நேரத்தை கடத்திட்டனே, ச்சே’ என்று அனு தனக்குத் தானே நொந்து கொண்டாள்.

 

“ஃபெயில் ஆய்டேன் சொல்லி அப்பா முகத்துல எப்படி முழிப்பேன்? பாலா இப்படி

பண்ணிடான்னு சொல்லி, கவிதா, இளமதி முகத்துல எப்படி முழிப்பேன்? இப்பயே காலேஜ்ல எல்லாரும் ஒரு மாதிரியா பாக்க ஆரம்பிச்சுடாங்க, இனி ஒரு வருஷம் எப்படி காலேஜுக்கு போவேன்? சொல்லு…பேசாம நான் உன்கிட்டயே வந்தர்றேன் பாட்டி” பாட்டியின் படத்திற்கு முன்னால் நின்று கொண்டு தனியாக பேசிக் கொண்டிருந்தாள் அனு.

 

இதற்கு முன் பிரச்சனை என்று எதையும் சந்திததில்லை. அவளுக்கு நினைவு தெரிந்தது முதல், அம்மா திட்டினார், அப்பா அடித்தார் என்று கூட ஞாபகம் இல்லை. எப்போதுமே, நல்ல நண்பர்கள், நல்ல படிப்பு, எல்லாவற்றிக்கும் மேலாக, எப்போதும் உடனிருந்த பாட்டி. இப்படி பொத்தி பொத்தி அவளை வளர்த்த விதமே, இன்று அவளுக்கு எமனாக வந்து நின்றது.

 

சிறு தோல்வி, பிரச்சனைக்கு கூட, மனம் வெதும்பி, உணர்ச்சி பிளம்பாய் மாறி, இன்னும் வாழ வேண்டிய எத்தனையோ காலங்களை மறந்து, காலனை வரவேற்க துணிந்து நின்றாள்.

 

எதையோ தேட ஆரம்பித்த அவள் கண்கள், பாட்டி படத்திற்கு கீழ் இருந்த அந்த கத்தியில் நிலைத்து நின்றது.

காலத்தின் சுவடுகளை தாங்கிக் கொண்டிருந்த ஒரு 1988 ஆம் ஆண்டு டைரி தான், அந்த கத்தியையும் தாங்கி கொண்டிருந்தது.

 

[அடுத்த பகுதியில் முடியும்]

16 comments:

Badri said...

excellent flow...narration is too good in this part...but why did kavitha and ilamthi come to a conclusion that Bala is a kazhisadai and he is cheating Anu nu...Did they know about him beforehand?

Badri said...

"காலத்தின் சுவடுகளை தாங்கிக் கொண்டிருந்த ஒரு 1988 ஆம் ஆண்டு டைரி தான், அந்த கத்தியையும் தாங்கி கொண்டிருந்தது."

Arumayana varigal :-)

ஜியா said...

This part is awesome... NOT cinematic though ;)))

kathai ezuthum nadai migavum kai thernthuvittathu :))) Keep up the gud writing...

Raghav said...

//Raghav Said

கலக்கல். //

திவ்யப்ரியா Said

நன்றி ராகவ்.

சிம்பா said...

:))))

MSK / Saravana said...

//காலத்தின் சுவடுகளை தாங்கிக் கொண்டிருந்த ஒரு 1988 ஆம் ஆண்டு டைரி தான், அந்த கத்தியையும் தாங்கி கொண்டிருந்தது.//


அய்யோ.. என்ன இதெல்லாம்..??

MSK / Saravana said...

// ஜி said...
kathai ezuthum nadai migavum kai thernthuvittathu :))) Keep up the gud writing...//

Rippeettu..

MSK / Saravana said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. முழு மூச்சில் படித்தேன் இந்த பதிவை...

Anonymous said...

இந்த பாகம் என்ன அழுகாச்சி காவியமாயிடுச்சு.. :)

இறுதிப்பகுதிக்காக வெயிட்டிங்...

Vijay said...

Great Going!!!! But to substantiate Ilamathi and Kavitha's allegation on Bala, you could have given more depiction about Bala.

Unknown said...

Akka suepr......!! :))))))

Hariks said...

க‌தை ரொம்ப‌ இய‌ல்பா போகுது. க‌ல‌க்குங்க‌ திவ்யா!

ஆயில்யன் said...

//’நண்பர்கள் இழைப்பது பிழை என்று பட்டால், அதை சுட்டி காட்ட துணிவில்லை என்றால், அவர்கள் உண்மையான நண்பர்களே இல்லை’ /

அருமை!

ஆயில்யன் said...

//[அடுத்த பகுதியில் முடியும்]//

சோகமெல்லாம் சுகமாகும் வாழ்க்கை இன்பவசமாகும் என்ற நம்பிக்கையோட்டு இறுதி பகுதிக்கு மீ த வெயிட்டீங்....!

Raghav said...

தீபாவளி வாழ்த்துக்கள் திவ்யப்ரியா.. அடுத்த வாரம் சந்திப்போம்..

வற்றாத செல்வம் பொங்க வாழ்த்துக்களுடன்
இராகவன்.

Anonymous said...

thool viru virunu pokuthu kadasi pakuthiyayum paduchuturean...!