என்னை பத்தி 25 விஷயம் சொல்லனுமாம்…gils சொல்லியிருக்காரு…25 என்ன, 250 கூட சொல்லலாம், ஆனா படிக்கறவங்க நலனை கருதி, 25 யே போதும்னு விட்டுட்டேன்…
முதல்ல என்னை பத்தி…
1. எப்ப பாரும் தேவையில்லாம கெக்க பெக்கன்னு சிரிக்கறது, ஓயாம பேசுறது, நல்லா ரத்தம் வர அளவுக்கு மொக்கை போடுறது, பாரபட்சமில்லாம பல பல்புகள வாரி வழங்கறது/வாங்கிக்கறது – இப்படிபட்ட விஷயங்கள் நிறஞ்சது தான் என் அன்றாட வாழ்க்கை.
2. அப்துல் கலாம் சொல்றதுக்கு முன்னாடி இருந்தே, பல நேரம் (போர் அடிக்கறப்பெல்லாம்) கனவுகள்ல மிதக்கறது என் வழக்கம். இப்படி பகல் கனவுல தோணுறது தான் என்னோட பெரும்பாலான கதைகள். சூர்யகாந்தி கதை, ஸ்கூல் படிக்கும் போது தோணின கதை தான், அப்பெல்லாம் நான் இப்படி கதை எல்லாம் எழுதுவேன்னு நினைச்சது கூட கிடையாது.
3. கதை எழுதற மாதிரியே, எனக்கு கதை படிக்கவும் ரொம்ப பிடிக்கும்…ஒன்னாவது, ரெண்டாவதுல படிக்க ஆரம்பிச்சு, இன்னும் கதை மட்டும் (பெரும்பாலும்) தான் படிச்சிகிட்டு இருக்கேன், வளரவே இல்லை :)
4. எனக்கு இந்த childish pranks எல்லாம் கொஞ்சம் இல்லை, ரொம்பவே பிடிக்கும்…உதாரணத்துக்கு, வீட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம நுழைஞ்சி, உள்ள இருக்குறவங்க பயப்பட மாட்டாங்கன்னு தெரிஞ்சும், அவங்க பின்னாடி போய் நின்னு ’ப்பே’ ன்னு சத்தமா கத்துறது, சும்மா நடந்து போகும் போது, உக்காந்திருக்கவங்க காதுக்குள்ள, “கூ…க்க்கூ….” ன்னு காட்டு கத்தல் கத்துறது…இப்படி பல…
5. அப்புறம் நான் ஒரளவுக்கு ராக்கோழி, காலையில எந்திரிக்கறதுன்னா ரொம்ப கஷ்டம், ஆனா நைட்டு எத்தனை நேரம் வேணா முழிச்சிருப்பேன்.
6. கில்ஸ் சொல்லியிருந்தாரு, அவரால ரெண்டு நேர் கோடுகள வரைய முடியாதாம், அத படிச்சவுடனே எனக்கு இது தான் நினைவுக்கு வந்தது, என்னால சரியா ஒரு நேர் கோட்டுல நடக்க முடியாது :) பசங்க மாதிரி நடக்கறேன், ரெளடி மாதிரி நடக்கறேன், இப்படி பல பாராட்டுகள் கிடைக்கும் என் அன்ன சாரி வாத்து நடைக்கு…
7. பொதுவா எல்லா வேலையும் வேக வேகமா செய்வேன்…பதறிய காரியம் சிதறிப் போகும்னு சொல்லுவாங்களே, அதுக்கு நல்ல உதாரணமா என்னை சொல்லலாம். வேகமா நடந்து இல்லைன்னா ஓடி, வழுக்கி விழுகறது, எதுலையாவது இடிச்சுக்கறது, இப்படி பல…ஆனா, என்னவோ தெரியல, இப்ப கொஞ்ச நாளாவே, எல்லா விஷயத்திலையும் ஒரு நிதானம் (இல்ல மந்தமா?) ஏதோ ஒன்னு…வயசு ஆயிடுச்சுன்னு நினைக்கறேன் :)
நாமகரணங்கள் (Self damage!)
8. எனக்கு நானே வச்சிகிட்டா, இந்த பேரெல்லாம் வச்சுக்குவேன்
வாயாடி/ஓட்டை வாய்/ அவசர குடுக்கி/ fm radio
9. என் நண்பர்கள் மற்றும் குடும்பம் எனக்கு சூட்டிய செல்ல பெயர்கள்
Water bottle/ தினதந்தி/ ராவல்பிண்டி express/ பத்மனாபா/ மொக்கைராணி
10. திவ்யபிரியா aka பத்து
no. 10 மாதிரி படிச்சிடாதீங்க…bathu, இது தான் pronunciation – இது தான் என் வீட்டு பேர், திவ்யபிரியா காட்டு பேர் தான் ;)
நான் பிறக்கும் போது, எங்க அக்காவுக்கு ரெண்டு வயசு, அவ எங்கயோ கேட்டுட்டு வந்து, என்னை பத்துன்னு கூப்பிட இந்த பேரே நிலைச்சு போய்டுச்சு…நான் பாய் கட் அடிச்சிருந்த போது, அதை மாத்தி, நண்பர்கள் எல்லாம் எனக்கு பத்மனாபான்னு பேரு வச்சுட்டாங்க :(
பிசிராந்தையார் வகை நட்பு வட்டங்கள்
11. ப்ளாகர் நண்பர்கள்
தனிமையை கொல்றதுக்காக கதை எழுத ஆரம்பிச்சு, அப்புறம் ப்ளாக் தொடங்கி, கதை எல்லாம் அதுல போட ஆரம்பிச்சு, மெதுவா நிறைய முகம் தெரியாத நண்பர்கள இந்த ரெண்டு வருஷத்துல சம்பாதிச்சாச்சு. இப்பெல்லாம் ஆர்குட்லையும், ஜி-மெயில்லையும் ப்ளாக் நண்பர்களோட தான் பெரும்பாலான உரையாடல்கள் நடக்குது, அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம பின்னூட்ட கும்மிகள்…நினைச்சு பாத்தா ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. ஆனா இதுவும் ரொம்ப நல்லா தான் இருக்கு :)
12. ஹீரோ சார்
எனக்கு ஒரு friend, U.S ல இருக்கறதால, நாங்க அதிகமா ஃபோன்லையோ, நேர்லையோ பாத்து பேசுக்கறதில்லை, பெரும்பாலும் மெயில்லையும், எப்பவாவது chat லையும் தான்…ஆனா, எத்தன நாள் கழிச்சு, random ஆ எந்த விஷயத்தை பத்தி பேசினாலும் continuity மட்டும் miss ஆகவே ஆகாது…
என் சந்தோஷங்கள பகிர்ந்துக்குற நல்ல இதயம்,
என் புலம்பல்கள பொறுமையா கேக்குற பாவப்பட்ட காதுகள்,
நான் என்ன ஜோக் அடிச்சாலும், ‘மொக்கைய போடாதீங்க சார்’ ன்னு உடனே வர்ற நக்கல் கமெண்ட், என் நீண்டகால stress buster…
இதெல்லாம் தான் ஷிவா…
ஷிவா! என் புலம்பல்களுக்கெல்லாம், காரணமே சரியா தெரியாட்டி கூட, எனக்கு எத்தனையோ solutions குடுத்திருக்க! And u know wat? Most of ur solutions did workout for me da…thanks நண்பா!
அதென்ன ஹீரோ சார் ன்னு யாரும் யோசிக்கறீங்களா? நண்பனோட அருமை பெருமையெல்லாம் சொல்லிட்டு, இத சொல்லாட்டா எப்படி? இந்த கதையோட ஹிரோ இவர் தான்….shiva sir, I know u won’t mind…ஏன்னா, நீங்க ரொம்ப நல்லவர் சார் ;)
சரி, 12 ஆச்சு…இதுக்கு மேல முடியாது…நம்ம கதைலையே கவிதை போட்டு மொக்கை போடறோம், இது போடாட்டா எப்படி? எண்ணிப் பாத்துக்கோங்க…இதுல 13 வரி இருக்கு….
கனவுகளில் சஞ்சரிக்கப் பிடிக்கும்,
அன்றே கோபங்களை மறக்கப் பிடிக்கும்,
என்றும் சந்தோஷத்தில் திளைக்கப் பிடிக்கும்…
சிரிப்பொலிகள் நிரம்பிய பகல்களும்,
பேச்சொலிகள் நிரம்பிய இரவுகளும்,
நித்திரையில் சயனிக்கும் மதிய வேளைகளும்,
தனிமை தோய்ந்த மாலை பொழுதுகளும் பிடிக்கும்…
சின்ன சின்ன செல்ல சண்டைகளும்,
சிறுபிள்ளைத் தனமான குறும்புகளும்,
சினுங்கள்களும், சீண்டல்களும் பிடிக்கும்…
கவிதைகள் சூடிய கதைகள் பிடிக்கும்,
கதைகள் நிறைந்த கனவுகள் பிடிக்கும்,
கனவுகள் முளைக்கும் தூக்கம் பிடிக்கும்…
இதோட போதும், இதுக்கும் மேல போனா, படிக்கறவங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் :-)
சரி, யாரை மாட்டி விடறது? வேற யாரு, நம்ம வானிலை அறிக்கை வாசிப்பாளர் தான்…’தல’ ஜியா. (ஜி! உங்க பதிவுல பின்னூட்டத்துக்கு reply பண்ணலைன்னா, tag பண்ணிருவேன்னு தான் சொன்னேன், ஆனா reply பண்ணீங்கன்னா, tag பண்ண மாட்டேன்னு சொல்லவே இல்லையே ;))
Wednesday, May 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
89 comments:
Me the firstae :)))
மீ த ஜெகண்டேய்ய்ய்ய்ய்! :))
/ G3 said...
Me the firstae :)))///
பர்ஸ்ட்டு வந்தா மூணு ஸ்மைலி போடப்பிடாது அப்படி போட்டா நீங்க மூணாவதா வந்ததா கன்சிடர் பண்ணிடுவோம் சாக்கிரதை :)
//என்ன, 250 கூட சொல்லலாம், ஆனா படிக்கறவங்க நலனை கருதி, 25 யே போதும்னு விட்டுட்டேன்…//
உங்களுக்கு நொம்ப்ப நல்ல மனசு :)
g3, ஆயில்யன் ரெண்டு பேரும் படிச்சிட்டீங்களா? ;)
//ஆயில்யன் said...
/ G3 said...
Me the firstae :)))///
பர்ஸ்ட்டு வந்தா மூணு ஸ்மைலி போடப்பிடாது அப்படி போட்டா நீங்க மூணாவதா வந்ததா கன்சிடர் பண்ணிடுவோம் சாக்கிரதை :)
//
ஹா ஹா :D
//எண்ணிப் பாத்துக்கோங்க…இதுல 13 வரி இருக்கு….//
Adapaaveengala.. ippadi kooda bongu adikkalaama !!!
//எப்ப பாரும் தேவையில்லாம கெக்க பெக்கன்னு சிரிக்கறது, ஓயாம பேசுறது, நல்லா ரத்தம் வர அளவுக்கு மொக்கை போடுறது, பாரபட்சமில்லாம பல பல்புகள வாரி வழங்கறது/வாங்கிக்கறது – இப்படிபட்ட விஷயங்கள் நிறஞ்சது தான் என் அன்றாட வாழ்க்கை.///
நல்ல விசயங்கள் கொடுத்துவைச்சவங்க நீங்க ! (கொஞ்சம் பொறாமையுடன்...!)
// Divyapriya said...
g3, ஆயில்யன் ரெண்டு பேரும் படிச்சிட்டீங்களா? ;)///
படிச்சுக்கிட்டே பின்னூட்டீங - புது டிரெண்ட் :)
//ஜி! உங்க பதிவுல பின்னூட்டத்துக்கு reply பண்ணலைன்னா, tag பண்ணிருவேன்னு தான் சொன்னேன், ஆனா reply பண்ணீங்கன்னா, tag பண்ண மாட்டேன்னு சொல்லவே இல்லையே ;)) //
Unga kitta konjam ushaara dhaan irukkanum pola :)))
//. அப்துல் கலாம் சொல்றதுக்கு முன்னாடி இருந்தே, பல நேரம் (போர் அடிக்கறப்பெல்லாம்) கனவுகள்ல மிதக்கறது என் வழக்கம். இப்படி பகல் கனவுல தோணுறது தான் என்னோட பெரும்பாலான கதைகள். சூர்யகாந்தி கதை, ஸ்கூல் படிக்கும் போது தோணின கதை தான், அப்பெல்லாம் நான் இப்படி கதை எல்லாம் எழுதுவேன்னு நினைச்சது கூட கிடையாது.//
கனவுகள் இல்லை
கதைகளில் மிதக்கறதுன்னு சொல்லுங்க :)
//ஆயில்யன் said...
// Divyapriya said...
g3, ஆயில்யன் ரெண்டு பேரும் படிச்சிட்டீங்களா? ;)///
படிச்சுக்கிட்டே பின்னூட்டீங - புது டிரெண்ட் :)//
Repeatae :)))
//ஒன்னாவது, ரெண்டாவதுல படிக்க ஆரம்பிச்சு,//
அடேங்கப்ப்பாஆஆஆஆஆஆஆஆஅ!
(இந்த ஆச்சர்யம் அடங்க ரொம்ப நாள் புடிக்கும்!)
:)
Romba sweet personalitya iruppeenga pola :))
pathiva padikkumbodhu punnagaiyodavae padichittirundhen.. supera solli irukkeenga superaana person pathi ;-)))
//அவங்க பின்னாடி போய் நின்னு ’ப்பே’ ன்னு சத்தமா கத்துறது, சும்மா நடந்து போகும் போது, உக்காந்திருக்கவங்க காதுக்குள்ள, “கூ…க்க்கூ….” ன்னு காட்டு கத்தல் கத்துறது…இப்படி பல…//
வாட் ஏ கிரேசி கேர்ள் (டெம்ப்ளட் பின்னூட்டம்!)
:)))
//எனக்கு இந்த childish pranks எல்லாம் கொஞ்சம் இல்லை, ரொம்பவே பிடிக்கும்…//
Repeatae.. naanum aapisla sila neram pinnadi vandhu friend kanna moodittu yaarunnu guess panna solli ketpen.. paadhi samayam unna thavira vera yaarum ippadi panna maataaingannu solli bulb kuduthuduvaainga :((
//அப்புறம் நான் ஒரளவுக்கு ராக்கோழி, காலையில எந்திரிக்கறதுன்னா ரொம்ப கஷ்டம், ஆனா நைட்டு எத்தனை நேரம் வேணா முழிச்சிருப்பேன்.//
என்ன கொடுமை சார் இது!
இதுக்கு பதில் நீங்க ஆபிஸ்ல தூங்குவேன் வீட்ல பிசியாயிருப்பேன்கூட சொல்லலாம் (ச்சும்மா தமாஷுக்கு அடிக்கவரப்பிடாது!)
:)
//இதுக்கு பதில் நீங்க ஆபிஸ்ல தூங்குவேன் வீட்ல பிசியாயிருப்பேன்கூட சொல்லலாம் //
LOL :)) Annae.. sema formla irukkeenga pola :)
//ரெளடி மாதிரி நடக்கறேன், இப்படி பல பாராட்டுகள்//
செம டெரரான ஆளுதான் போல..?! :)
//வேகமா நடந்து இல்லைன்னா ஓடி, வழுக்கி விழுகறது, எதுலையாவது இடிச்சுக்கறது, இப்படி பல…ஆனா, என்னவோ தெரியல//
வாம்மா மின்னல் :)))
//வாயாடி/ஓட்டை வாய்/ அவசர குடுக்கி/ fm radio//
நல்லவேளை சண்டைக்காரின்னு சொல்லாத வரைக்கும் கும்மி அடிக்கலாம் :))
//Water bottle/ தினதந்தி/ ராவல்பிண்டி express/ பத்மனாபா/ மொக்கைராணி//
ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு பதிவு போட்டு வெளக்கம் அல்லது சிறுகுறிப்பு தருக...!
//நான் பாய் கட் அடிச்சிருந்த போது, அதை மாத்தி, நண்பர்கள் எல்லாம் எனக்கு பத்மனாபான்னு பேரு வச்சுட்டாங்க :(//
இதை நான் பாய் காட் செய்கிறேன் !
//மெதுவா நிறைய முகம் தெரியாத நண்பர்கள இந்த ரெண்டு வருஷத்துல சம்பாதிச்சாச்சு//
டிவிடெண்ட் குடுக்க வாய்ப்பு இருந்தா கொடுக்கலாம் :)
வாங்கிக்க நான் ரெடி :)))
//நினைச்சு பாத்தா ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. ஆனா இதுவும் ரொம்ப நல்லா தான் இருக்கு :)//
சந்தோசமா இருக்கு :)
//இதோட போதும், இதுக்கும் மேல போனா, படிக்கறவங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் :-)//
ச்சே!
ச்சே!!
இதுவரைக்குமே நார்மலாத்தான் இருக்கோம்:)
//தல’ ஜியா.//
வாங்க தல !
வாங்க...!
நீங்க இவ்வளோவு நல்லவரா...
சூப்பரு x 25 :)))
//25 என்ன, 250 கூட சொல்லலாம், ஆனா படிக்கறவங்க நலனை கருதி, 25 யே போதும்னு விட்டுட்டேன்//
திவ்யா நீங்க இத்தனை நல்லவங்களாஆஆஆஆஆஆஆஆஆ
//. எப்ப பாரும் தேவையில்லாம கெக்க பெக்கன்னு சிரிக்கறது, ஓயாம பேசுறது, நல்லா ரத்தம் வர அளவுக்கு மொக்கை போடுறது, பாரபட்சமில்லாம பல பல்புகள வாரி வழங்கறது/வாங்கிக்கறது – இப்படிபட்ட விஷயங்கள் நிறஞ்சது தான் என் அன்றாட வாழ்க்கை.
//
இதுதான் வானவில் வாழ்க்கை திவ்யா.இப்படித்தான் இருக்கணும்
//அப்புறம் நான் ஒரளவுக்கு ராக்கோழி, காலையில எந்திரிக்கறதுன்னா ரொம்ப கஷ்டம், ஆனா நைட்டு எத்தனை நேரம் வேணா முழிச்சிருப்பேன் //
சேம் பிளட். நாம் எல்லாம் சங்கம் வெச்சு ப்ளாக் வளத்தற ஆளுங்களாச்சே
ஹேமாகிட்ட கேட்டு உங்க பேரை கண்டு பிடிச்சேன். ஒரு நாள் திடீர்னு சொல்லி ஆச்சரியப்படுத்தலாமுன்னு நினைச்சேன். அதுக்குள்ள சொல்லிட்டிங்களே :(
//நித்திரையில் சயனிக்கும் மதிய வேளைகளும் //
ஆபிசில தூங்குவிங்களா
மொத்தத்தில் சுயபுராணம் சூப்பர் திவ்யா
கலக்கல்.. சிரித்து கொண்டு இருக்கிறேன்.. :)
ஆயில்யன் அண்ணாவின் கமெண்ட்டுகள் கலக்கல்.. :)
:-) கலக்கலா இருக்கு பத்து..சாரி..திவ்யா!
உங்க பாயிண்ட் 7 நல்லாவே ரசிச்சேன்..ஏன்னா சேம் பிளட்! :-))
நல்லா எழுதியிருக்கீங்க!
சூரியகந்தி கதை- ஸ்கூல்லயேவா! ஆகா..child prodigy!! :-) அதுக்கு படமும் கிளாஸ்லயே வரைஞ்சதா?!
நான் இந்த பக்கமே வரவேயில்லைன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிக்கிறேன் :(((
//இன்னும் கதை மட்டும் (பெரும்பாலும்) தான் படிச்சிகிட்டு இருக்கேன், வளரவே இல்லை :)//
ஆஹா இது கொஞ்சம்.. ஹாஹா.. சரி சரி விட்டுடுறேன்:)
//கனவுகள்ல மிதக்கறது என் வழக்கம்//
அட நம்ம ஆளு!
//எனக்கு இந்த childish pranks எல்லாம் கொஞ்சம் இல்லை, ரொம்பவே பிடிக்கும்//
யக்கா... என்னக்கா இது!!??:(
ரசித்து படித்து சிரிக்கும் படியான பதிவு...
இதை இப்படிக்கூட சொல்லலாம்
படித்து சிரித்து ரசிக்கும் படியான பதிவு
ம்...இப்படியும்
படித்து ரசித்து சிரிக்கும் படியான பதிவு...
நீங்க காலேஜ் டைம் ல back bench பார்ட்டி தானே
vera valiye illai
naanum intha topic la elutha poren
"பாரபட்சமில்லாம பல பல்புகள வாரி வழங்கறது/வாங்கிக்கறது"
ada
neenga same blood aa
பதிவு முழுவதுமே பிடிச்சிருந்தாலும் ரொம்ப பிடிச்சது..
//சரி, யாரை மாட்டி விடறது? வேற யாரு, நம்ம வானிலை அறிக்கை வாசிப்பாளர் தான்…’தல’ ஜியா. (ஜி! உங்க பதிவுல பின்னூட்டத்துக்கு reply பண்ணலைன்னா, tag பண்ணிருவேன்னு தான் சொன்னேன், ஆனா reply பண்ணீங்கன்னா, tag பண்ண மாட்டேன்னு சொல்லவே இல்லையே ;)) //
இது தான்... :))))))
பாவம் அண்ணா... :(((
அப்பறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.. உங்களுக்கும் எனக்கும் நிறைய விஷயம் ஒத்து போகுது.. :)) Same sweet.. :)))
உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்ர்க்கிறோம்.. :):)
thalaaaaaaaaaaaaa..
enna thala ippdi pullarikka vechupputeenga.. .. :):)
naa infact fullaaa padikaama, 1st 10 lines padichtu, kadaiseela enna eludheerukkaanu paapom nu padichen ;)
sirr.. neengalum sumaaraana alavukku nallavar sir :)
\\1. எப்ப பாரும் தேவையில்லாம கெக்க பெக்கன்னு சிரிக்கறது, ஓயாம பேசுறது, நல்லா ரத்தம் வர அளவுக்கு மொக்கை போடுறது, பாரபட்சமில்லாம பல பல்புகள வாரி வழங்கறது/வாங்கிக்கறது – இப்படிபட்ட விஷயங்கள் நிறஞ்சது தான் என் அன்றாட வாழ்க்கை.\\
நிறையப் பெண்கள் இப்படித்தானோ???
\\எனக்கு இந்த childish pranks எல்லாம் கொஞ்சம் இல்லை, ரொம்பவே பிடிக்கும்…உதாரணத்துக்கு, வீட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம நுழைஞ்சி, உள்ள இருக்குறவங்க பயப்பட மாட்டாங்கன்னு தெரிஞ்சும், அவங்க பின்னாடி போய் நின்னு ’ப்பே’ ன்னு சத்தமா கத்துறது, சும்மா நடந்து போகும் போது, உக்காந்திருக்கவங்க காதுக்குள்ள, “கூ…க்க்கூ….” ன்னு காட்டு கத்தல் கத்துறது…இப்படி பல…\\
அப்போ கொஞ்சம் ஜாக்கிறதையாத்தான் இருக்கணும் :-)
உங்க சுயபுராணம் ரொம்பவே ரசிக்கும் படியா இருக்கு. I think you are living life King ,oops Queen Size :-)
திவ்யப் பிரபந்தம் மாதிரி, திவ்ய புராணமா... உங்களைப் பத்தி ஏற்கெனவே தெரிஞ்ச விடயங்கள் தான் :)..
உங்களைப் பத்தி நீங்க சொல்லிட்டீங்க.. இப்போ நான் உங்களைப் பத்தி ஒரு 25 விஷயம் சொல்ல முயற்சிக்கிறேன்.. அதுவும் 25 பின்னூட்டம்.. :)
1. நல்ல கதை சொல்லுபவர் - ஒத்துக்காதவன் கனவுல நீங்களே வந்து மிரட்டுவீங்க
Dr. of Escapism - சூடான பின்னூட்டங்களை வளர்த்து விடாம எஸ்கேப் ஆகிறதுல வில்லி
3. பிறருக்கு அர்ப்பணித்தல் - தான் கண்ட நாய் துரத்தும் கனவு பலனை அக்காவுக்கு அர்ப்பணித்தது :)
4. விறுவிறுப்பான மொறுமொறுப்பான பதிவர் - மொறுமொறுப்பு எப்புடின்னு கேட்கப்புடாது.
இப்போ நீங்க சொல்ல மறந்து போன பட்டப்பெயர்கள்..
5. அ.பொ.தி.பி - ஹி ஹி.. எத்தனை பேர் ஒத்துகிட்டாங்கன்னு தெரியல..
6. சின்னக் கலைவாணி - பட்டம் தானே காசா பணமா.. எடுத்துக்கங்க
7. எந்நேரமும் Close up paste க்கு ஃப்ரீயா விளம்பரம் கொடுப்பவர் - சிரிச்சுகிட்டே இருக்குறத சொன்னேன்.
8. கவிதைக்குள் கதையும், கதைக்குள் கவிதையுமாக கலக்குபவர்..
9. நேர்கோட்டுல நடக்க முடியாட்டாலும் நேர்வழியில நடக்கக் கூடியவர்னு நினைக்கிறேன்..
10. ஆட்டோக்காரனையே அசிங்கப்படுத்திய அசகாய சூரி.
11. நாய் வாலை நிமிர்த்த முடியாதுன்னு தெரிஞ்சு நாய் வாயை நிமித்தின அஞ்சா நெஞ்சத்தாள் (கனவுல மட்டும்)
12. பூவுக்குள் பூகம்பம் அதுக்கு எதிர்ப்பதம் = திவ்யப்ரியாவின் மலரே மெளனமா பதிவு
13. Page intentionally left blonk :)
14. சிறந்த மருத்துவர் - காதல் ஒரு சிக்கன் ஃபாக்ஸ் என்ற அரிய கண்டுபிடிப்புக்காக..
15. இசையரசி - அப்புடின்னும் பட்டம் வாங்கியிருக்க வேண்டியது, ப்ச் என்ன பண்ணுறது.. சுருதிய ரொம்ப குறைச்சிட்டதால பாட்டு பாட்டியோட சாபம் தடுத்துருச்சு..
16. மெனமான மலராய் இருக்க விரும்பி முடியாமல் ஆயிரம் அட்வைஸ் வழங்க வேண்டிய அர்ச்சனாவானவர்..
17. கோடைமழைக்கு காரணமானவர்களில் ஒருவர் - எப்புடின்னு யோசிக்கிறீங்களா?? வள்ளுவர் என்ன சொல்லிருக்காரு “ நல்லார் ஒருவர் உளறேல்” .. :)
18. பிசிரில்லா பிசிராந்தையார் நட்பைக் கொண்டவர்.
20. திவ்யப்ரியா aka திருட்டுப்ரியா - கதைகளால் உள்ளம் திருடுபவர்.
21. பதிவோவியப் பெண்
23. எவ்வளவு பாராட்டினாலும்.. சிம்பிளா இருக்குறது
24. மார்கழித் திங்களில் ஆரம்பித்ததாலோ என்னவோ எப்போதும் சில்லென்று இருக்கும் உனது பதிவுகள்
25. இது என்னோட வாழ்த்து.
பதிவுலகம் வாழ
பதிவுலக நண்பர்கள் மகிழ
அன்னைச் செந்தமிழ் சிறக்க
நல்லதாய் கதையெழுத
இன்னுமொரு நூற்றாண்டு இரும்.
hey hero sir, top ten la illa vanthirukkanum...aenna avar avlo nallavar....
இதே topic ல நான் எழுதி இருக்கேன்...
மக்கள்ஸ் வந்து பாருங்க
////25 என்ன, 250 கூட சொல்லலாம், ஆனா படிக்கறவங்க நலனை கருதி, 25 யே போதும்னு விட்டுட்டேன்//
திவ்யா நீங்க இத்தனை நல்லவங்களாஆஆஆஆஆஆஆஆஆ
//
ரிபீட்டு
//Raghav said...
6. சின்னக் கலைவாணி - பட்டம் தானே காசா பணமா.. எடுத்துக்கங்க
//
Super
// எப்ப பாரும் தேவையில்லாம கெக்க பெக்கன்னு சிரிக்கறது, ஓயாம பேசுறது, நல்லா ரத்தம் வர அளவுக்கு மொக்கை போடுறது, பாரபட்சமில்லாம பல பல்புகள வாரி வழங்கறது/வாங்கிக்கறது – இப்படிபட்ட விஷயங்கள் நிறஞ்சது தான் என் அன்றாட வாழ்க்கை.
//
ரொம்ப நல்ல பழக்கம் :)
திவ்யபிரியா,
ரொம்ப நாட்களுக்கு பின் உங்கள் பதிவை படிக்கிறேன்.
விழுந்து விழுந்து(அடி எல்லாம் படவில்லை) சிரித்தேன்:-)
Anda kavidai eludi 13 points opethunadhunaala 26 point neenga sombal ullavanga sollaama solreengala?? :D
I liked the 4th point!!
ithai yellam padicha neega romba nallavanga pola theriyuthu
:-))))))
nambalama:-))))
ROFL.
சிரிச்சுக்கிட்டே இருக்கேன். :)))
firstu pointay pattaya kelapings :D6th point namba mudialye :D ungala naan vera mathiri imagin pani vachirunthen :D romba samathu kudam polanu..ithay mathiri "cat walk" pannra friend oruthi iruka enaku..semma ravusu party..ungalukum avalukum neria tally aguthu :D
//முகுந்தன் said...
திவ்யபிரியா,
ரொம்ப நாட்களுக்கு பின் உங்கள் பதிவை படிக்கிறேன்.
விழுந்து விழுந்து(அடி எல்லாம் படவில்லை) சிரித்தேன்:-)//
Repeatu
:-)) நிறைய இடத்துல வாய் விட்டு சிரிச்சேன்..பல்பு வாங்கறது/வழங்கறது..ஹிஹி!
//ஒன்னாவது, ரெண்டாவதுல படிக்க ஆரம்பிச்சு, இன்னும் //
அப்போவேவா!! சுவாரசியமான tag!
Hey friend ,
you are tagged :)
http://stavirs007.blogspot.com/2009/06/tagged-to-good-old-days.html
Post a Comment